ஷெய்குனா வாழ்வில் நடைபெற்ற காஜா நாயகத்தின் கராமத்து!

ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற அற்புதசம்பவத்தை அன்னாரின் கலீபா மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் ஹிஜ்ரி 1438 ரஜப் பிறை 6 அன்று இந்தியா, காயல்பட்டினத்தில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் நடைபெற்ற காஜா நாயகத்தின் கந்தூரி வைபவத்தின்போது சொன்ன தகவல் :
ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் சகோதரர் மகளுக்குத் திருமணம் செய்விக்கும் பொறுப்பு அன்னாருக்கு வந்து சேர்ந்தது. அப்போது அவர்களின் குடும்பச் சொத்து ஒரிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து வந்தது. அதை விற்று கல்யாணம் முடிக்க ஷெய்குனா அவர்கள் திட்டமிட்டு கட்டாக் சென்றார்கள். அங்கு அவர்கள் அந்த சொத்தை விலை பேசினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதனால் மனம் சஞ்சலமுற்றிருந்தார்கள். உடனே அவர்கள் காஜா நாயகத்திற்கு ஒரு நேர்ச்சை வைத்தார்கள்.

இந்த சொத்து அவர்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்றால் காலில் செருப்பு அணியாமல் அஜ்மீர் சென்று காஜா நாயகத்தை ஜியாரத் செய்வதாக நேர்ச்சை செய்து கொண்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்த மறுநாளே ஒருவர் வந்து அந்த சொத்தை ஷெய்குனா அவர்கள் எதிர்பார்த்த விலைக்கே வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து அதன்பிறகு ரிஜிஸ்டரும் முடிந்தது.

ஷெய்குனா அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். உடனே அஜ்மீர் சென்று ஜியாரத் செய்ய புறப்பட்டார்கள். செல்லும் வழியிலேயே அவர்களின் செருப்பு அறுந்தது. அச்சமயம்தான் அவர்களுக்கு தாங்கள் செய்த நேர்ச்சை ஞாபகத்திற்கு வந்தது. நாம் செருப்பில்லாமல் அஜ்மீர் செல்வதாக அல்லவா நேர்ச்சை செய்துள்ளோம், அதனால்தான் காஜா நாயகம் நமக்கு இதை ஞாபகப்படுத்துகிறார்கள் என்று செருப்பில்லாமல் அஜ்மீர் சென்று ஜியாரத் செய்து வந்து தமது நேர்ச்சையை நிறைவேற்றினார்கள்.

குருத்துரோகமும் ரவூப் மௌலவியின் வஜ்தத்துல் (?) வுஜூதும்!

 சமீபகாலமாக இணையதளங்களில், முகநூல்களில், வாட்ஸ்அப் தளங்களில் இலங்கை காத்தான்குடியைச் சார்ந்த மௌலவி அப்துர் ரவூப் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எங்கள் இமெயில் முகவரிக்கும் அவரைப் பற்றின மெயில் வந்தது. இதை எழுதியவர்கள் அஸ்ஹாபுல் பத்ர் கல்முனை என்னும் ஊரைச் சார்ந்த இயக்கத்தினர். அனைத்துக்கும் பதிலளிக்கும் விதமாக தொகுக்கப்பட்டதுதான் இந்த பதிலுரை.:

முதலில் தரீகத் அதிலும் பைஅத் கிலாபத் – ஷெய்குக்கும், முரீதுக்கும் உள்ள தொடர்புகள், பேணவேண்டிய விதிமுறைகள், ஒழுக்கங்கள் பற்றி முழுமையாகப் புரியாமல் தலைகால் தெரியாமல் இவர்கள் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றனர்.

தரீகத்தைப் பின்பற்றுபவன் ஒரு ஷெய்கிடம் பைஅத் பெற்றுக் கொண்டு, அவரது கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, அவரிடம் முழு முஹப்பத் வைப்பது கொண்டே ஜெயம் பெற முடியும் என்பது தரீகத் காட்டும் வழிமுறைகளில் ஒன்றாகும். அனைத்து தரீகாக்களும் இதையே போதிக்கின்றன.

செய்குனா குத்புஜ்ஜமான் உமர் வலியுல் காஹிரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: ‘நான் இவ்வளவு பெரிய அந்தஸ்த்தை அடைவதற்கு எனது செய்கின் கட்டளைக்கு முற்றிலும் இணங்கி நடந்ததும் ஒன்று’ என்று.

அதிலும் எங்களது ஷெய்குனா அவர்கள் தங்களுடைய வஸியத்தில் ஒன்றாக இதை பிரகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறு ஷெய்குவிடம் நேசம் கொண்டால் மட்டுமே ஜெயம் பெற முடியும் என்பது அனைத்து தரீகத்து சகோதரர்களுக்கும் தெரியும்.

அதேபோல் ஷெய்கு தமது கொள்கைக் கோட்பாடுகளை காப்பாற்றுவார், தம் வழியில் முற்றிலும் நடப்பார் என்று நம்பி ஒருவரை தமது கலீபா – பிரதிநிதியாக நியமிப்பதும் தரீகின் நடைமுறை. அவர் கலீபாவை நியமிக்கலாம், நியமிக்காமலும் போகலாம். இது ஷெய்குவின் விருப்பத்தைப் பொறுத்தது. அவ்வாறு நியமிக்கப்படுபவர் ஷெய்குவின் கோட்பாடுகளை நிலைநிறுத்தி செய்குக்கு முற்றிலும் மாறுபடாமல் இருத்தல் வேண்டும். இது அவரது கடமையாகும். இதற்கு மாற்றமாக செயல்பட்டால் அவரது பைஅத்தே அறுந்து, செய்குவுடன் உள்ள தொடர்பு முற்றிலும் நீங்கி விடும். (ஆதார நூல்: இர்ஷரதே ஹபீப்)

ஷெய்கானவர் தம்முடைய ஷெய்குக்கும், அவர் அவருடைய ஷெய்குவுக்கும் பிரதிநிதியாக செயல்பட்டு இந்த சில்சிலா தொடர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்லக் கூடியதாக இருக்கும். இறுதியில் அல்லாஹ்வை சென்றடையும். ஆக ஷெய்குக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் மாறு செய்தவராகிறார். இதுதான் தரீகத்தின் கோட்பாடு. இதை  முதலில் விளங்கிக் கொண்டு இனி வருபவற்றைப் பார்ப்போம்.

எங்கள் இணையதளம் எக்காலமும் பொய்யையும், கற்பனையையும் எழுதியதில்லை. எவர் மீதும் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு எதையும் எழுதுவதில்லை. அதே சமயம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தரக்குறைவாக எழுதியவர்களையும், பேசியவர்களையும், இமாம்கள், இறைநேசர்கள், செய்குமார்கள், குறிப்பாக எமது செய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களையும் அவர்களின் ஸில்சிலா செய்குமார்களையும் குறை காண்பவர்களையும், மரியாதைக்குறைவாகப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட எவரையும் இத்தளம் விட்டு வைக்காது. அவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும். அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி.

அந்த அடிப்படையில்தான் காத்தான்குடியைச் சார்ந்த மௌலவி அப்துர் ரவூப் உடைய விசயங்களை இதில் தெரியப்படுத்தினோம். அதுவும் ஆதாரங்களுடன் தெரிவித்தோம். இதைப் பொறுக்க முடியாமல் அவரது அடிவருடிகள் தற்போது உளற ஆரம்பித்துள்ளனர்.

இதில் இவர்கள் சொல்லும் முக்கிய குற்றச்சாட்டு, நீங்கள் வெளியிட்டிருக்கும் கடிதங்கள் வாசிக்க முடியாதவாறு துலக்கமற்று உள்ளது. ஒரு சிலவற்றை மாத்திரம் எடுத்து டிரான்ஸ்லேட் பண்ணி மற்றதை ஏன் விட்டு விட்டீர்கள்? இது உங்கள் நேர்மையற்ற தன்மையைக் காட்டுகிறது என்பது.

நாங்கள் பதிவேற்றம் செய்த கட்டுரையில் அந்தக் கடிதத்தின் தேவை இல்லாமலிருந்தது. அதுவும் சில எழுத்துக்கள் மிக சந்தேகமாக இருந்தது. அதனால் அதை டிரான்ஸ்லேட் பண்ணவில்லை. தற்போது அதையே தாங்கள் தப்பிப்பதற்கு ஆதாரமாக சொல்வதால், அதை அப்படியே டிரான்ஸ்லேட் பண்ணியிருக்கிறோம். சந்தேகமுள்ள எழுத்துக்களை அப்படியே ஸ்கேன் பண்ணி பதிவேற்றம் செய்துள்ளோம்.  ரவூப் மௌலவி செய்குனாவிற்கு எழுதிய கடிதத்தின் நகலை பாருங்கள்.

ரவூப் மௌலவி செய்கனாவிற்கு எழுதிய கடிதத்தின் நகல்:

மௌலவி ஏ. றவூப்

காத்தான்குடி-5

பெருமதிப்புக்கும், கண்ணியத்துக்கும் உரிய ஞானபிதா ஷெய்கு நாயகம்(ரஹ்) அவர்களின் மேலான திருச்சமுகத்துக்கு அடியேன் அப்துல் றவூப் எழுதுவது- நானும், நமது தரீகாப் பிள்ளைகளும் நலமாக இருக்கிறோம். தங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும் தர இறைவனை இறைஞ்சுகிறோம்.

தகப்பனாருடைய வபாத்துக்கு பின்னர் ஒருதடவை மட்டும் தங்களின் திருமுகம் தரிசிக்க கிடைத்தது. அதன்பின் தங்களைக் காணும் பாக்கியம் கிடைக்கவோ அல்லது அதை நான் ஏற்படுத்திக் கொள்ளவோ இல்லை. அது எனது தவறுதான். ஆயினும் عند كرام الناس مقبول لوالعفو என்ற நம்பிக்கையில் காலம் கடந்து விட்டது.

தகப்பனாருடைய வபாத்துக்குப் பின் பதுரிய்யா தைக்காவை நான் பொறுப்பெடுக்கமுன் எனது உள்ளத்தில் பல உயர்ந்த எண்ணங்கள் இருந்தன. நமது தரீகாவில் உள்ள சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனியாமல் நடந்து கொள்வதனால் பல மனவேதனைகளும், பிரச்சனைகளையும் உருவாகி அவ்வெண்ணங்கள் தடைப்படுகின்றன.

மத்ரஸாவுடன் சேர்த்து ஒரு அறை அமைத்து, தாங்கள் காத்தான்குடியில் இருக்கும் காலத்தில் மத்ரசாவில் வெள்ளிக்கிழமைதோறும் முரீதுப்பிள்ளைகளை அழைத்து நமது (ராதிபு) நடத்துவதற்கும் முடிவு செய்திருந்தேன். மேற்கூறிய காரணத்தால் அவை தடைப்பட்டு விட்டன. இன்ஷாஅல்லாஹ் மிகவிரைவில் எனதெண்ணம் நிறைவேற தாங்கள் துஆ செய்து கொள்ளவும்,

நான் பல மத்ரஸாக்களில் கல்வி பயின்றேன். மவ்லவியான பின் எனக்கு ஞானாசிரியர் ஒருவர் தேவைப்பட்டது. நீண்டகால முயற்சியின் பின் எனக்கு ஷெய்காக தங்களை அல்லாஹ் தந்தான். பாலமுனையில் வைத்து பைஅத் பெற்று தங்களின் முரீதான பின் ஆரிபீன்களின் நூல்களைப் பார்த்து விளங்கும் ஆற்றலைப் பெற்றேன். அதற்குமுன் அவ்வாhற்றல் எனக்கு இருக்கவில்லை. அதன்மூலம் பல நூல்களையும்  

فصولص الحكم الفتوحات المكية تفسير روح البيان الانسان الكامل التحفة المرسلة جامع الصول تقريب الأصول

போன்றவற்றையும் பார்வையிட்டேன். தங்களுடன் இருந்து தங்கள் மூலம் எத்தனையோ அறிவுகளையும் பெற்றிருக்கிறேன். தாங்களின் மூலம் பெற்ற அறிவையும், மேற்கூறப்பட்ட கிதாபுகளில் நான் பெற்ற அறிவையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தேன். இரண்டும் சரியாகவே இருந்தது. காத்தான்குடிக்கு வரும் தைக்கா மௌலானாவிடம் நான் பைஅத் பெறவில்லை. இருந்தாலும் ஓரளவு நெருங்கிப் பழகினேன். அந்த வகையில் அவர்களிடம் இருந்து கிடைத்த அறிவும் சரியாக இருந்தது. நான் பொதுவாக பெற்ற அறிவு அனைத்தையும் இரண்டு உரைகல்லில் உரைத்துப் பார்த்தேன். அதைச் சரியெனக் கண்டேன். அவர்களில் தாங்கள் ஒன்று, தைக்கா மௌலானா ஒன்று. எனது ஞானவழிகாட்டி, எனது ஷெய்காகிய தாங்களும், தைக்கா மௌலானாவும்தான்.

இப்பொழது எழுந்துள்ள பிரச்சினை பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஆயினும் எனதுகுரு என்ற ரீதியில் தங்களுக்கு இதை எழுதுவது என் கடமை ஆதலால் இதை விவரமாக எழுதுகிறேன்.

காத்தான்குடியில் ஐ.தே.கட்சியினரால் நடத்தப்பட்ட மீலாது விழா ஒன்றில் நான் பேசினேன். அதில் எம்.பீ.பரீத் அவர்களும் கலந்து கொண்டார்கள். அதில் قل انما انا بشر مثلكم என்ற ஆயத்துக்கு விளக்கம் சொல்லும்போது சில ஞானக் கருத்துக்களையும் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவைகளாவனانا احمد بلا ميم >اناعرب بلا عينஇந்த ஹதீஸ்களுக்கு விளக்கம் சொல்லும்போது ஹக்குடைய தாத்துக்கு இரண்டு நிலை என்றும், அவை தன்ஸீஹ்-தஷ்பீஹ் என்பனவாகும் என்றும், அவ்விரண்டுக்கும் குர்ஆனில் இருந்து ان تقرضوا الله قرضا حسنا – ومارميت اذ رميت ولكن الله رمىபோன்ற ஆயத்துக்களையும், ஹதீஸில் இருந்து لا يزال العبد மற்றும் இவை போன்ற ஒரு சில ஹதீஸ்களையும் கூறி மக்களை ஹக்களவில் சேர்ப்பதற்காக அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களின் சூறத்தில் தோன்றினான் என்று கூறி அதற்காக தாங்கள் முதலில் கூறிக் காட்டிய நரிக்குறவன் உதாரணத்தையும் கூறினேன். அதைத் தொடர்ந்து பேசும்போது   rawoof ml1 001என்ற நூலில் நான் பாக்கியாத்தில் இருந்தநேரம் பார்த்த ஒரு சம்பவத்தையும் கூறினேன். அது ஸஹீஹானதா? அல்லது ளயீபானதா என்பது எனக்குத் தெரியாது. ஹிறாக் குகைக்கு ஜிப்ரீல் (அலை) வஹீ கொண்டு வந்தபோது அங்கு முகம்மதென்ற ஒருவரை காணவில்லை. யாரைப் பார்த்து விட்டு ஜிப்ரீல் வந்தாரோ அவரேதான் குகையில் இருப்பதைக் கண்டார்கள். இந்தச் சரித்திரத்தையும் கூறினேன்.

இவைகளில் நான்கு விசயங்கள் அகீதாவுக்கும் ஈமானுக்கும் முற்றிலும் முரணானவை என்பது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவிலுள்ள அனேகமானவர்களின் கருத்து. நான் பேசியதைச் சரி காண்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் என்னிடம் வந்து சரிகண்டார்கள். ஆயினும் மேடைகளில் ஏறிப் பேசுமளவுக்கு தைரியமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

அவர்கள் பிழை என்று கூறும் நான்கு கருத்துக்களும் இவை.

 1. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு.
 2. முகம்மது (ஸல்) அவர்களின் தோற்றத்தில் இறைவன்தான் வந்தான்.
 3. மக்களை நல்வழிப்படுத்துவதற்கு முகம்மது (ஸல்) அவர்களின் வேஷம் போட வேண்டிய நிலை அல்லாஹ்வுக்கு ஏற்பட்டது.
 4. ஜிப்ரீல் வஹீ கொண்டு வந்த நேரம் ஹிறாக்குகையில் அல்லாஹ் கன்னத்தில் கைவைத்துப் படுத்திருந்தான்.

இவை சரியானவையா? பிழையானவையா என்று விவாதிப்பதற்கு( என்னைக் கலந்தாலோசியாமல்) கடந்த 31-03-79இல் கொழும்பில் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்து எல்லா ஏற்பாடும் முடிவானபின் எனக்கு ஒரு தபால் எழுதியிருந்தார்கள். அதில் 31 ம் திகதி கொழும்பில் நடைபெறும் விவாத மானாட்டுக்கு வரவும் என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு நான் ஒரு பதிலை எழுதியனுப்பினேன். அவர்கள் எனக்கு எழுதிய இரு கடிதமும், அதற்கு நான் அனுப்பிய இரண்டு பதிலும் நோட்டிஸாகப் பிரசுரித்து வெளியிடப்பட்டது. மத்ரசதுல் பலாஹ் அதிபர் அப்துல்லா ஹஸ்ரத் -காலி அஜ்வாத் ஆலிம், அப்துஸ் ஸமது ஆலிம் -றூஹுல் ஹக்- ரியால் ஆகியோர்தான் இவ்விசயத்தில் கடும்பாடுபட்டு அந்த மாநாட்டை ஒழுங்கு செய்தார்கள். அதில் என்னை ‘முர்தத்’ என்று தீர்ப்பு வழங்கி அந்தத் தீர்ப்பை காத்தான்குடியின் மூன்று ஜும்மாப் பள்ளிக்கும் அனுப்பி வைப்பதாக கூறி அதன்படி இன்று 3-4-79இல் எனக்கும் அறிவித்திருந்தார்கள். மூன்று பள்ளிகளில் மார்கட் பள்ளி (மீராபள்ளி) இவர்களின் பத்வாவை ஏற்றுக் கொள்ளாது. ஏற்றுக் கொண்டால் இங்கு பெரும் பிரச்சனையும், குளப்பங்களும் உருவாகும். இது மார்க்கப் பிரச்சினையாக இருந்தாலும் இன்று பாட்டி என்ற ரீதியில் M.P. அவர்களுக்கு சப்போர்ட் பண்ணிய ஐ.தே.க. அபிமானிகள் அனைவரும் எனது கருத்தை முழுக்க முழுக்க ஆதரிக்கின்றனர். மற்றப் பாட்டியில் நின்றவர்களில் அரைப் பகுதி ஆதரிக்கின்றது. பொதுவாக நூற்றுக்கு 75 வீதம் என்னை ஆதரிக்கிறார்கள். M.P. அவர்களும், மார்கட் பள்ளி றெஸ்டிபோட்டிலுள்ளவர்களும் என்னை முக்கியமாக ஆதரிப்பதால், இப்பிரச்சினை வலுவடையுமிடத்து ‘உலமாக்கள்’ (காத்தான்குடி உலமாக்களில் என்னை ஆதரிக்காதவர்கள்) பொதுமக்களால் பல இன்னல்களுக்குள்ளாக வேண்ய சூழ்நிலை ஏற்படும்.

நான் இதுவரை போதித்து வந்த அறிவு மேற்குறிப்பிட்ட நூல்களில் இருந்தும், தங்களுடைய திருவாய் மூலமும் இருந்து கேட்டவைகள்தான். அதோடு தைக்கா மௌலானாவிடம் இருந்தும் பெற்றவைகள்தான். ஆனால் மௌலானா என்னுடைய ஞானவழிகாட்டியான ஷெய்கு அல்ல. தாங்கள்தான் எனது ஷெய்கும் ஞானபிதாவுமாகும். ஆதலால்

rawoof2 001

நான் ஒரு பத்வா எழுதி குறிப்பாக காத்தான்குடியில் எனது கருத்தை الوجودஆதரிப்பவர்களான உலமாக்களிடமும், இலங்கையில் உள்ள وحد الوجود  சம்பந்தப்பட்ட உலமாக்களிடமும், இந்தியாவில் உள்ள உலமாக்களிடமும் ஒப்பம் எடுத்து அதை தமிழில் மொழி பெயர்த்து குறிப்பாக தங்களிடமும் தைக்காமௌலானாவிடமும் ஒப்பம் எடுத்து வெளியிட விரும்புகின்றேன். இது நல்லதா? அல்லது வேறு வழிகளைக் கையாள வேண்டுமா? அவசரமாக தங்களை சந்திக்க விரும்புகிறேன். அதேநேரம் ஆப்தீன் ஹாஜியாரையும் ஹனீபா மௌலவியையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தாங்கள் ஏறாவூர் வரவிருப்பதாக கூறினார்கள். நமது தரீகா பிள்ளைகள் முன்னையதை விடக் கூடுதலாக தங்களை எதிர்பார்க்கிறார்கள். நூறுத்தீன்-ஜஃபர் புறக்டர்களின் அழைப்பில் சாய்ந்தமருதுக்குப் போய் மீலாத் விழாக்களில் வஹாபிகளுக்கு எதிர்ப்பாக பேசிய வகையில் அங்கேயும் உலமாக்கள் என்னுடன் கோபம். யார் எனக்கு எப்படி பத்வாக் கொடுத்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. நான் அறிந்த அளவு وحدة الوجودஐப் பற்றித்தான் பேசியிருக்கிறேன்.

நான் கூறிய கருத்துக்கள் பிழையானதென்றும், ஈமானுக்கும், அகீதாவுக்கும் மாற்றமானதென்றும் இருந்தால் மேலே நான் எழுதிய கிதாபுகளை பின்பற்றவோ, தரீகாவழி நடக்கவோ மாட்டேன். கிதாபுகளை எரித்துச் சாம்பலாக்குவதுடன் தரீகாவிலிருந்தும் நீங்கிக் கொள்வேன். எதற்கும் எந்த அல்லாமா வந்து எனது கருத்தைப் பிழை என்றாலும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆனால் தாங்களும் தைக்கா மௌலானாவும் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வேன். கருத்துக்களும், தத்துவமும் சரிதான். பகிரங்க மேடையில் பலர் மத்தியில் பரவலாகப் பேசுவது கூடாது என்று சொன்னால் மட்டும் அதை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். தாங்கள் ஒருநாள் – ‘தஷ்பீஹ்’ பற்றிப் பேசும்போது (றப்பானி ஹாஜியார் வீட்டில்) அல்லாஹ்-அல்லாஹ் என்று மட்டும் திக்று செய்யும்போது அதை கபறாகவும், ‘அன’ என்பதை மறைந்த முப்ததாவாகவும் வைக்க வேண்டும் என்று சொன்ன விவரம் இப்பவும் எனது காதில் கேட்பது போன்றுதான் இருக்கிறது.

எதற்கும் தங்களின் வருகையை எதிர்பார்த்திருக்கிறேன். தாங்கள் வந்ததும் சந்திக்க வருவேன்.

rawoof 3 001 - Copy (2)

போன்ற பைத்துகளுக்கு விளக்கம் சொன்னதையும் இங்குள்ள ظاهرஉலமாக்கள் மறுப்பதுடன், அது குப்ரான வார்த்தை என்றும், அதைச் சொன்னவர்கள் காபிர் என்றும் கூறுகிறார்கள்.

rawoof 3 001 - Copy

அதிகம் எழுதிவிட்டேன். குறை இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

rawoof 3 001

இதில் அவர் நீங்கள் சொன்னவிவரம் இன்னஇன்ன கிதாபுகளில் காணக்கிடக்கிறது. அதையேத்தான் நானும் மீலாது விழாவில் பேசினேன் என்று சொல்லியிருக்கிறார். செய்குனா அவர்கள் எங்களுக்கு போதித்த ஞானம் அந்த கிதாபுகளில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ரவூப் மௌலவி பேசியதுபோல், செயல்பட்டதுபோல் இல்லை. அவர் தான் கொண்ட கொள்கையை அதில் எழுதியிருக்கவில்லை. மிகத் தந்திரத்தை அதில் கையாண்டிருந்தார்.

அந்த பிரசுரத்தில் செய்குனா அவர்கள், உண்மை ஸூபியாக்களின் ஞானத்தை தெளிவாக விளக்கியிருந்தார்கள். அல்லாஹ் குன்ஹு தாத்தின் புறத்தினால் சிருஷ்டியாக வெளியாவதில்லை என்றும், நாய் அல்லாஹ், பன்றி அல்லாஹ், மலம் அல்லாஹ் என்று சிருஷ்டிகளில் அல்லாஹ்வை கட்டுப்படுத்தி சொல்லக் கூடாது என்றல்லவா கண்டித்திருக்கிறார்கள். அவ்வாறு சொல்பவனின் நிலையைப் பற்றியும் தெரிவித்திருந்தார்கள். இதை நீங்கள் பார்க்கவில்லை போலும். என்ன அருமையான விளக்கமான பிரசுரம் அது. அதில் எங்கு செய்குனா அவர்கள் ரவூப் மௌலவியின் கருத்தை ஆதரித்திருக்கிறார்கள்?

சங்கராச்சாரியர் சொன்னதற்கு தாதாபீர் செய்குனா ஸூபி ஹழ்ரத் ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் அல்ஹக்கு என்ற நூலில் விவரித்ததுபோல், ரஊப் மௌலவி சொல்லிய சில வார்த்தைகள் வஹ்தத்துல் உஜூது கொள்கைக்கு நேர்பாடானதாக இருப்பதால் அதை மட்டும் சரிகண்டு சொன்னார்கள். அதனால் ரஊப் மௌலவியை சரிகண்டார்கள் என்று சொல்வது மடத்தனத்திலும் மடத்தனம்.
அவ்வாறு அவர்கள் சரிகண்டிருப்பார்களாயின் தமது முரீதீன்களை அவரோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கடிதம் எழுதியிருக்கமாட்டார்கள்.(இந்தக் கடிதம் நமது வெப்தளத்தில் முன்னரே பதிவேற்றம் செய்யப்ட்டுள்ளது)

ஆக அந்தப் பிரசுரம் உண்மை ஸூபியாக்களின் கொள்கையை விளக்கியதோடு ஸூபியாக்களின் நூல்களில் இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கும் மறுப்பும் தெரிவித்திருந்தது. அதில் இந்த ரவூப் மௌலவி தப்பித்துக் கொண்டார்.

இதைப் பார்த்தாவாது ரவூப் மௌலவி திருந்தினாரா? மேலும் ரவூப் மௌலவியை அழைத்து இனி இவ்வாறு பேசக் கூடாது என்று கண்டித்தார்கள். அப்போதாவது அவர் செய்குவின் சொல்லை மதித்தாரா?

அதன்பிறகுதான் ரவூப் தந்திரத்தை கையாண்டார். அதன்பிறகு அவர் செய்குனாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறப்படாததையும் மேடைகளில் பேசவாரம்பித்தார். செய்குநாயகம் அவர்கள் ஏறாவூரில் இருக்கும்போது அவரின் பேச்சின்  ஒலிப்பதிவை போட்டுக் கேட்டார்கள். அதில் அவர் அல்லாஹ் தாத்தின் புறத்தில் வெளியாகிறான் என்றும், நாயும் அல்லாஹ்தான், பன்றியும் அல்லாஹ்தான், மலமும் அல்லாஹ்தான் என்றும் பேசியதைக் கேட்ட செய்குனா அவர்கள் ரவூப் மௌலவியை அழைத்து இவ்வாறு பேசுவது தவறு. இனி இவ்வாறு பேசக்கூடாது என்று தடுத்து கண்டித்து கட்டளையிட்டார்கள்.

ஆயிரக்கணக்கான முரீதீன்களை பக்குவப்படுத்தி ஞானப் பயிற்சி கொடுத்தவர்கள் செய்குனா அவர்கள். அவர்களிடம் ஞானப் பயிற்சி பெற்ற முரீதீன்கள், கலீபாக்கள் எவரும் ரஊப் மௌலவி சொல்வது போல் சொல்லவில்லை. இவருக்கு மட்டும்தான் இந்த புதிய வஹ்தத்துல்(?) உஜூது என்ற ஞானம் தோன்றியிருக்கிறது. இவர் இதை எங்கிருந்து எடுத்தார் என்று பார்க்கும்போது இந்துக்களின் ஞானங்களிலிருந்து எடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது. இப்போது இவர்கள் கேட்கக் கூடும் அப்படியென்றால் இந்துக்களின் ஞானம் என்ன என்று சொல்லுங்கள் என்று. அதற்கு பதில் அவர் சொல்வதுதான் இந்துக்களின் ஞானம்.

ரவூப் மல்வியும் அவரின் கூட்டத்தைத் தவிர, ஏனைய முரீதீன்கள் அனைவர்களும் செய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் வழியைத்தான் பின்பற்றினார்கள், பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரவூப் மௌலவிதான் இந்து ஞானத்தை இஸ்லாமிய ஞானமாக சொல்லித் திரிகிறார். அவர் சொல்லும் கருத்து அது வஹ்தத்துல் வுஜூது அல்ல. அது முற்றிலும் இஸ்லாத்திற்கு ஏற்புடையது அல்ல. குப்ர் ஷிர்க்கை பேசித் திரிகிறார். இவரையும் பின்பற்றுகின்றனர் சில மடையர்கள். செய்குவிற்கு மாற்றம் செய்து தம்முடைய பைஅத்தை தானாக முறித்துக் கொண்டார்.

இவரின் இந்தப் பேச்சுக்களை அறிந்த செய்குநாயகம் அவர்கள் ரஊப் மௌலவி குபிர்-ஷிர்க் என்ற சகதியைத் தன் முகத்தில் தானே அள்ளிப் பூசிக் கொண்டு அதையிட்டுப் பெருமையடித்துக் கொள்கிறார். முரீதுகளாகிய நீங்கள் அவரோடு எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவரைச் சரி காண்பவரைக்கூடச் சரிகாணக் கூடாது என்று சொல்லப்பட்டு சமூகத்திலிருந்து விரட்டப்பட்டவர். இதற்கு செய்குனா எழுதிய கடிதமே சாட்சி. அதை முந்தைய பதிவில் வெளியிட்டிருக்கிறோம்.

ஒரு செய்குவால் தன் சமூகத்திலிருந்து விரட்டிஅடிக்கப்பட்டவர், வெறுத்து ஒதுக்கப்பட்டவர் வேறு எந்த செய்காலும் கரையேற்றி வைக்க முடியாது. (ஆதாரம்: இர்ஷாதே ஹபீப்)

இந்த நேரத்தில் தைக்கா மௌலானாவும் செய்குனாவும் என் கருத்தை ஆதரிக்கிறார்கள் என்று வேறு பொய்யும் புரட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால் தைக்கா மௌலானா ரஊப் மௌலவியின் கருத்தை ஆதரிக்கவில்லை என்பது ‘மௌலானா அவர்களுக்கும் எமது தூதுக்குழுவுக்குமிடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய முழு விபரம்’ என்ற பிரசுரத்தைப் பார்த்தாலே தெரியும். தன்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக தைக்கா மௌலானா தன் கருத்தை ஆதரிக்கிறார்கள் என்று பொய் சொல்லியிருக்கிறார்.

அந்த நோட்டீஸின் பிரதி இது:

rawoof 13 001rawoof 13 005rawoof 13 004 rawoof 13 003 rawoof 13 002 rawoof 13 006

ஜம்இய்யத்துல் உலமா

ரஊப் மௌலவி விவகாரம்

மௌலானா அவர்களுக்கும் எமது தூதுக்குழுவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய முழு விபரம்.

அன்புப் பொதுமக்களே,

அஸ்ஸலாமு அலைக்கும்.

றஊப் மௌலவி பகிரங்கக் கூட்டமொன்றில் பேசும்போது, தாம் பேசிய பிரச்சினைக்குரிய கருத்துக்களை, நமதூரிலுள்ள முஹ்யித்தீன் தைக்காவுக்கு வருகைதரும் மௌலானா அவர்கள் ஆதரித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டதையடுத்து மௌலானா அவர்களது உண்மைநிலையை அறிந்து கொள்ள வேண்டுமென்று நமதூர் மக்கள் ஆவலாயிருந்தமை தெரிந்ததே.

மௌலானா அவர்கள் காத்தான்குடிக்கு வந்ததும், அவர்களது நிலைமையை அறிந்து கொள்ள பல இயக்கங்களும் தனிப்பட்டவர்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அத்துடன் அவர்களது உண்மை நிலையை அறிந்து மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு பலர் எமது சபையையும் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிணங்க எமது சபை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு, கடந்த 26.11.79ல் மௌலானா அவர்களைச் சந்தித்தது. இச்சந்திப்பின் நோக்கம், மௌலானா அவர்கள், றஊப் மௌலவியின் மார்க்க விரோதக் கருத்துக்களை ஆதரிப்பதாகக் கூறப்படுவது உண்மையா? என்பதை மௌலானா அவர்களிடமிருந்து அறிவதேயாகும். மாறாக, உலமாக்களால் வழங்கப்பட்ட ‘பத்வா’ குறித்து மௌலானா அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்பதோ, பத்வாவை மறு பரிசீலனை செய்வதோஅல்ல.

26.11.79ல் மௌலானா அவர்களைச் சந்தித்த எமது குழுவினர் றஊப் மௌலவி பேசிய மார்க்கத்திற்கு முரணான கீழ்க்காணும் கருத்துக்களை அவர்களிடம் சுட்டிக் காட்டினர்.

 1. ஹிறாக்குகையில் அல்லாஹ், நெற்றியில் கையைக் குத்திக் கொண்டு படுத்திருந்தான்.
 2. அல்லாஹ் முஹம்மதின் உருவத்தில் உலகத்தில் தோன்றினான்.
 3. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு.
 4. மக்களை நல்வழிப்படுத்த வேஷம் போடவேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு ஏற்பட்டது.
 5. அல்லாஹ் ஆணும்தான் பெண்ணும்தான்.
 6. அல்லாஹ் கையிலும், காலிலும் காப்பும் தண்டையும் போட்டிருந்தான்.
 7. அல்லாஹ்வுக்கு ஏழு வயது.

மேலும், றஊப் மௌலவியின் கருத்துக்கள் போன்றவை, உள்ளர்த்தத்துக்குரியவை. அக்கருத்துக்கள் நமது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவைதான். அவற்றைப் பகிரங்கமாகப் பேசுவதுதான் தவறே தவிர, அக்கருத்துக்கள் தவறாகமாட்டா’ என்று தற்போது சிலர் கருதுவதாகத் தெரிகிறது. இக்கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அவ்வாறாயின், அவற்றை ஒருசிலர் மட்டுமே தெரிந்து கொண்டு சுவர்க்கம் செல்லவும், அவற்றைப் புரிநது கொள்ளாத பெரும்பாலோர் நரகம் செல்லவுமத் நமது மார்க்கம் வழிவகுக்கிறதா? இவ்வாறான ஓர் அறிவு உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதனை எல்லோரும் படித்துக் கொள்ள நாமெல்லாம் வழிவகுக்கலாமே. நமது நாட்டிலுள்ள மத்ரஸாக்களில் கடமையாற்றும் உஸ்தாதுமார்களெல்லாம் இத்தகைய அறிவைப் படித்துக் கொள்ள வழிசெய்து, எல்லா மத்ரஸாக்களினதும் பாடத்திட்டங்களில் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா?’ என்று எமது குழுவினர் கூறி, றஊப் மௌலவியின் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்பதைக் கூறும் ஆதார பூர்வமான பல அறபு கிதாபுகளிலுள்ள கருத்துக்களை மௌலானா அவர்களிடம் வாசித்து விளக்கினர்.

இவற்றை மிக அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த மௌலானா அவர்கள், ‘றஊப் மௌலவியின் கருத்துக்கள் பிழையானவை என்பதை நிரூபிப்பதற்கு அதிக ஆதாரங்கள் தேவையில்லை. ‘முகாலபதுஹு தஆலா லில்ஹவாதிதி – அல்லாஹுதஆலா சிருஷ்டிப் பொருட்களுக்கு மாற்றமானவன், எவ்வகையிலும், எப்பொருட்களுக்கும் ஒப்பில்லாதவன்'(இது அல்லாஹ்வுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று) என்றுதானே நாம் ஈமான் கொண்டிருக்கிறோம்’ என்று கூறி, எமது குழுவினர் காட்டிய ஆதாரங்களைச் சரிகண்டபின், ‘எதற்கும் றஊப் மௌலவியை அழைத்து இவ்வாறான கருத்துக்களை அவர் பேசியதுதானா? என்பதை அவரிடம் விசாரித்தபின் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்’ என்று எமது குழுவிடம் தெரிவித்தார்கள்.

பின்னர் 29.11.79ந் திகதி காலையில், மௌலானா அவர்களின் அழைப்பின் பேரில் எமது குழு, அவர்களைச் சந்தித்தது. அப்போது மௌலானா அவர்கள், ‘றஊப் மௌலவி, தான் பேசிய கருத்துக்கள் தவறானவை என்று என்னிடம் எழுதித் தந்துள்ளார். எனவே இவ்விடயத்தில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இணங்குவதாக நீங்கள் எழுதித் தரவேண்டும். அத்துடன் இனிமேல் அவரை ‘முர்தத்’ என்று அழைக்கக் கூடாது. அதன்பின்னர் உங்களுக்கும் அவருக்குமிடையே உடன்படிக்கை ஒன்று எழுத வேண்டும். பின்னர் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து, முதலில் உங்கள் சார்பில் ஒருவர் எழுந்து, நான் மேற்கொள்ளும் முயற்சிகளை ஏற்றுக் கொள்வதாக மக்கள் மத்தியில் கூறவேண்டும். றஊப் மௌலவியும் அவ்வாறு கூற வேண்டும். அதன்பின்னர் பொதுமக்களுக்கு எனது கருத்தை அறிவிப்பேன்’ என்று கூறி எமது குழுவின் முடிவைக் கேட்டார்கள்.

‘இதுபற்றி உடனடியாக எம்மால் ஒரு முடிவு கூற முடியாது. எமது சபையின் செயற்குழுவைக் கூட்டி, ஆலோசித்த பின்பே இதுபற்றி முடிவு கூற இயலும்’ என்று எமது குழுவினர் மௌலானாவிடம் தெரிவித்தனர். தாமதிக்காது முடிவைத் தெரிவிக்குமாறு மௌலானா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கிணங்க, 29.11.79ந் திகதி மாலையில் எமது செயற்குழுவைக் கூட்டி இதுபற்றி ஆலோசித்தோம். ‘றஊப் மௌலவி, தான் பேசிய கருத்துக்கள் தவறானவையென்று மௌலானா அவர்களிடம் எழுதிக் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். நாம் பலம் வாய்ந்த ஓர் இயக்கத்தினராயிருப்பதாலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும் றஊப் மௌலவி, தான் பேசியவை தவறானவையென்று நமது சபைக்கு எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும். எழுத்தில் தராதவரை, மௌலானா அவர்கள் மேற்கொள்ளும் எத்தகைய முயற்சிகளுக்கும் இணங்க முடியாது’ என்று எமது செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்தது. எனவே அந்த முடிவை 29.11.79ந் திகதியிடப்பட்ட கீழ்க்காணும் கடிதத்தின் மூலம் மௌலானா அவர்களுக்கு அறிவித்தோம்.

சங்கைக்குரிய P.P.S.S. கோயா தங்கள் மௌலானா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,

26.11.79ந் திகதியும், 29.11.79ந் திகதியும் தங்களுடன் எங்கள் குழு நேரில் பேசியதிலிருந்து, றஊப் மௌலவி, தான் பேசிய கருத்துக்கள் பிழையானவை என ஏற்றுக் கொள்ள தயாராயிருப்பதாக அறிகிறோம். அவர், தான் பேசியவை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானவை என்று எமக்கு எழுத்துமூலம் தந்தால், அதன்பின் இவ்விடயத்தில் தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இணங்குவோம் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்குரிய முடிவை 5.12.79க்கு முன் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: இது 29.11.79ல் நடைபெற்ற எமது செயற்குழுக்கூட்டத்தின் ஏகமனதான முடிவாகும்.

இக்கடிதத்துக்கு மௌலானா அவர்கள் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. எனினும் 15.12.79ந் திகதியிட்டு அவர்கள் வெளியிட்டிருந்த துண்டுப் பிரசுரத்தில், ‘றஊப் மௌலவி அவரது பேச்சுக்களின்போது, எனது பெயரையும் சம்பந்தப்படுத்தியுள்ளார். அவரது கருத்துக்களுக்கு நான் பொறுப்பாளியல்ல’ என்று தெரிவித்துள்ளார்கள்.

மௌலானா அவர்களுடன் இரண்டு தடவைகளில் நாம் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் போதும், காத்தான்குடி 4ம் குறிச்சி முஹ்யித்தீன் தைக்காவின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான ஜனாப்.ஆ.ஐ.ர்.நூறுமுகம்மது ஹாஜியார் அவர்களும், ஜனாப் ஆ.டீ. அப்துல் மஜீது ஹாஜியார் அவர்களும் பிரசன்னமாயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புப் பொதுமக்களே,

இப்பிரச்சனை ஒரு சாதாரண பிரச்சினையல்ல. ஈமான் சம்பந்தமான பிரச்சினை. பொதுமக்களின் ஈமானைப் பாதுகாப்பது உலமாக்களான எமது கடமையானதால், பல சிரமங்களுக்கும், அதிக பணச்செலவுகளுக்கும் மத்தியில் இவ்விடயத்தில் கூடிய முயற்சியெடுத்தோம். எவரையும் இழிவுபடுத்துவது எமது நோக்கமல்ல. இதுவரை போதிய விளக்கங்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

காத்தான்குடி உலமாக்கள் மட்டுமல்ல. அகில இலங்கை உலமாக்கள், தென்னிந்திய உலமாக்கள் ஆகியோர் அளித்த போதிய விளக்கங்களையும் நீங்கள் நன்றாகத் தெரிந்திருப்பீர்கள். எனவே உங்களது ஈமானைப் பாதுகாத்து, அல்லாஹ்வுக்கும், அவனது றஸூலுக்கும் பொருத்தமான முறையில் வாழுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு: ஊரின் நன்மை கருதி, இரு சாராரையும் ஒன்றிணைத்து தீர்க்கமான ஒரு முடிவு காண்பதற்காக மௌலானா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எமது சபை தடையாயிருக்கவில்லை என்பதைப் பொதுமக்களுக்குத் தெளிபடுத்தும் நோக்கத்தோடுதான் இப்பிரசுரத்தை வெளியிடுகிறோம்.

-ஜம்இய்யதுல் உலமா

காத்தான்குடி,

22.12.1979

ஆக எந்த செய்குவும், எந்த மௌலானாக்களும் இந்த ரவூப் மௌலவியை ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்ததாக சொல்வதெல்லாம் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட ரவூபின் அடாவடித்தனம்.

யாராவது இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களாயின் இவரின் கூட்டத்தினர் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். தங்கள் பகுதிக்கு வரவழைத்து விளக்கம் சொல்கிறேன் என்று சொல்லி அவரை படாதபாடு படுத்திவிடுவார்கள் இவரின் ஆதரவாளர்கள். .

தம்மை செய்குனா அவர்கள் விரட்டிவிட்டபின் அப்துல்லாஹ் பயில்வான் என்ற வழிகேடரிடம் தம் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டார். இந்த அப்துல்லாஹ் பயில்வான் ஈமானின் உண்மையை நீ அறிவாயா? என்ற நூலில் இமாம்களையும், இறைநேசர்களையும் மிகத் தரக்குறைவாக எழுதியுள்ளார். மேலும் ஞானவிளக்கங்களை தன் சுயவிருப்பப்படி எழுதியுள்ளார். ஆனால் ரவூப் மௌலவி அவரை வைத்தே ஒரு சபையை திறக்க வைத்தார். அவரைப் புகழ்ந்து ‘அல்லாஹ் எங்கே இருக்கிறான்?’ என்ற நூலில் என்ற நூலிலும், செய்குனாவிற்கு எழுதிய மரியாதைக் குறைவான கடிதத்திலும் அப்துல்லாஹ் பயில்வானை ஆதரித்து எழுதியுள்ளார்.

மேலும் இதில் தப்லீக் ஜமாஅத்தினர்கள் நமது ஈமானில் கைவைக்கவில்லை என்று என்று எழுதி தப்லீக் ஜமாஅத்திற்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

தப்லீக் ஜமாஅத்தின் பொன்னான போதனை என்ற நூலையும் வெளியிட்டார்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருக்கும் மறைவான ஞானம் பேயன், பைத்தியக்காரன், ஏன் மதளைக்கும் கூடத்தான் இருக்கிறது என்று ஹிப்ளுல் ஈமான் என்ற நூலில் எழுதியிருப்பதும்,

அல்லாஹ் பொய் சொல்ல சக்தியுடையவன் என்று ரஷீத் அஹ்மது கங்கோஹி பதாவா ரஷீதிய்யா என்ற நூலில் எழுதியிருப்பதும்,

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா கொண்டாடுவது கிருஷண ஜெயந்திக்கு ஒப்பானது என்றும்,

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது ஆடு, மாடு, கழுதை ஏன் ஜினா செய்யும் நினைப்பில் மூழ்குவதை விட கெட்டதாகும் என்றும்,

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் என்றும், இன்னும் பிற அருவருக்கத்தக்க கொள்கைகளை தமது நூல்களில் எழுதிய தப்லீக் தலைவர்கள், அவரைப் பின்பற்றும் மடையர்கள் முஸ்லிம்களின் ஈமானில் கைவைக்காமல் எதில் கைவைத்திருக்கிறார்கள்.? சொல்லுங்கள்.

செய்குனா அவர்களின் கொள்கையும் அவரின் கொள்கையும் ஒன்றுதானே! ஏன் அவரை எதிர்க்கிறீர்கள்? என்பது மற்றுமொரு குற்றச்சாட்டு.

செய்குனா வெளியிட்ட நூற்களையும், பிரசுரத்தையும் படித்துப் பார்த்தாலே ரவூப் மௌலவிக்கும், செய்குனாவிற்கும் உள்ள கொள்கை வேறுபாடு விளங்க வரும். ஜமாஅத்துல் உலமாவுக்கு எதிராக செய்குனா அவர்களால் வெளியிடச் செய்யப்பட்ட பிரசுரம் ஒன்றே போதும் ரவூபின் கொள்கையும், செய்கனாவின் கொள்கையும் வேறு என்று ஆதாரம் காட்ட. அடிப்படைக் கொள்கையிலேயே ரவூப் வேறுபடுகிறார்.

முதலில் ரவூப் மௌலவி தனஸ்ஸுலாத்தையும், தன்ஸீஹ், தஸ்பீஹையும் நன்கு விளங்கி நன்றாக விளங்கிக் கொண்டு பேசட்டும். அடிப்படை ஞானமே தெரியாமல் தான் சொல்வதுதான் சரி என்று சொல்லும் இவரையும் நம்பி….

செய்குனா அவர்கள் தகுதியுள்ளவரான ரஊப் மௌலவியை தேர்ந்தெடுத்துதான் கிலாபத் கொடுத்தார்கள் என்கிறார்கள். செய்குனா கிலாபத் கொடுத்தது நம்பிக்கையின் அடிப்படையில்தான். அவர் ஷரீஅத், தரீகத்படி மக்களை வழிநடத்திச் செல்வார் என்று நம்பித்தான் கிலாபத் கொடுத்தனர்.

என்ன செய்வது? அவர் செய்குவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். அதனால் செய்கை விட்டும் முற்றிலும் நீங்கி விட்டார்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஹீயை எழுதிக் கொண்டிருந்த சஹாபி ஒருவர் தமக்கும் வஹீ வருவதாக சொன்னதால் எவ்வாறு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமத் அவர்களின் தோழமையை விட்டும், ஏன் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டாரோ அப்படித்தான் ரவூப்மௌலவியும்.

ஆக ரஊப் மௌலவி ஒன்றைத் தவறாக சொல்லிவிட்டார். அதை செய்குனா அவர்கள் திருத்தினார்கள். ஆனால் அவர் திருந்தவில்லை. அவரை சரிகாணும் ஒரு கூட்டத்தை உருவாக்கி விட்டார். அவர் விலகினாலும் அவர்கள் விடுவதாயில்லை. அந்த கூட்டத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டார். அதிலிருந்து அவர் மீள முடியாமல் தவிக்கிறார். ஷிர்க், குப்ரை போதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். அவர் சொல்வது, வஹ்தத்துல் வுஜூது கொள்கைக்கு முரணானது. அவர் சொல்வது இந்து ஞானம்.

எதற்கெடுத்தாலும் அவர்கள் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கின்றனர். ரஊப் மௌலவியின் புகழை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவரை எதிர்க்கிறார்கள் என்பது இன்னுமொரு குற்றச்சாட்டு.

தாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். எவ்வித மறுப்புரையும், கேள்வியும் கேட்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் எதிர் கேள்வி கேட்பார்களானால் அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டு, எனது புகழைக் கெடுக்க சதி செய்கிறார்கள் என்று கூப்பாடு போடுவார். இதுதான் அவரின் நடைமுறை. தம் செய்கானாலும் சரி. அவர் பேச்சை இவர் கேட்க மாட்டார். இன்றுவரை அதுதான் நடந்து வருகிறது.

பாருங்கள்! செய்குநாயகம் அவர்களுக்கு வேண்டுதல் கடிதம் எழுதும்போது மட்டும் மரியாதையோடு எழுதிய இந்த மரியாதை தெரியாத, வடிகட்டிய புத்திபேதலித்த ரவூப் மௌலவி, செய்குநாயகம் அவர்கள், அப்துர் ரவூப் மௌலவியிடம் நீ சொல்வது தவறு என்றும் இன்னும் அவர் செய்யும் சில தவறான விசயங்களை சுட்டிக்காட்டியதும், அவர் தலைவராயிருக்கும் இஸ்லாமிய மெய்ஞான சபையின் லெட்டர் பேடில் செய்குனாவை மரியாதைக் குறைவாக விளித்து, அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தைக் கேட்கிறார் பாருங்கள்.

RAWOOF 001

செய்குனாவிற்கு ரவூப் மௌலவியின் மரியாதைக் குறைவான கடித நகல்:

அகில இலங்கை தலைவர்: மௌலவி அல்ஹாஜ்ஏ. அப்துர் ரவூப் (மிஸ்பாஹி-பஹ்ஜி),

தலைவர்: மௌலவி எம்.சி.எம். முஹம்மது (பஹ்ஜி),

செயலர்: மௌலவி என்.எம்.எம். இப்றாஹீம் (நத்வீ),

பொருளாளர்: மௌலவி எம்.எம்.முனாஸ் (கியாதி)

இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை

கனம் மௌலவி ஷேக் அப்துல் காதிர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

மருதமுனையைச் சேர்ந்த M.S. அப்துல்லாஹ்(பயில்வான்) அவர்கள் எழுதிய ஈமானின் உண்மையை நீ அறிவாயா? என்ற ஞானநூலில் பல இடங்களில் இஸ்லாத்திற்கு மாறான கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், அந்த நூலைப் பார்க்க வேண்டாம் என தாங்கள் கூறி தங்களின் முரீதீன்களை தடை செய்ததாக அவர்கள் மூலம் நாங்கள் அறிந்தோம்.

மேலும், காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளி வாயலில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகை நிறைவேறாததாகையால் அங்கு ஜும்ஆத் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தங்களின் முரீதீன்களைத் தடை செய்ததாகவும் அறிந்தோம்.

அத்துடன், ஏகத்துவ இறைஞானத்தை இலங்கையிலும், இந்தியாவிலும் பிரகாசிக்கச் செய்துவரும் எமது இஸ்லாமிய மெய்ஞ்ஞானப்பேரவையின் வெளியீடான ‘ஞானச்சுரங்கம்’ எனும் தத்துப் பெட்டகத்தை திறந்து பார்க்க வேண்டாம் என்றும் தங்களின் சிஷ்யர்களிடம் கூறியதாக அறிந்தோம்.

எனவே தயவுசெய்து மேற்கூறிய மூன்று விசயங்களுக்கும் தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் தருமாறும் செய்வது தவறாக இருந்தால் அதை விட்டு நடக்க வழி செய்யுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்,

சன்மார்க்க சேவையிலுள்ள,

……………..

 ஆக முஸ்லிம் கனவான்களே! வழிகேட்டிலிருக்கும் ரஊப் மௌலவியைப் பின்பற்றாதீர்கள். அவரின் கருத்து உங்களை குப்ர், ஷிர்க்கில் கொண்டுபோய் சேர்க்கும். அவரிடம் இருக்கும் சகோதரர்களே! தவ்பா செய்து மீண்டு வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிக் காட்ட வல்லவன். அவரிடம் பெற்ற பைஅத் செல்லாது. ஏனெனில் அவருக்கு செய்குவின் தொடர்பு சங்கிலி அறுந்து போனது. அவரைத் தொடர்பு கொண்டால் எங்கள் செய்குநாயகத்தின் பைளு கிடைக்காது. அதனால் அல்லாஹ் ரசூலின் தொடர்பும் உங்களுக்கு அற்றுப் போகும்.

ரஊப் மௌலவி,எங்கள் செய்குநாயகத்தின் பெயரையும்,  சில்சிலாவையும் அவர் பயன்படுத்தி மக்களை வழிகெடுப்பதை அவர் நிறுத்த வேண்டும்.

உண்மையான ஞானநாதாக்களான ஸூபியாக்கள் போதித்த கொள்கையையே எங்கள் செய்குனா அவர்கள் போதித்தார்கள். அதைத்தான் அவர்களின் உண்மையான கலீபாக்களும் போதிக்கிறார்கள். அந்தக் கொள்கையே, அந்த ஞானமே எங்களுக்குப் போதும். ரஊப் மௌலவியின் வழிகெட்ட ஞானமும், கொள்கையும் எங்களுக்குத் தேவையில்லை.

இந்தக் கேடுகெட்ட நயவஞ்சகர்களின் உளறல்களுக்கு முத்தாய்ப்பான இறுதி பதில் இதுவே. இனியாவது திருந்தட்டும்.

யாஅல்லாஹ்! எங்கள் ஞானத்தந்தை செய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ், மற்றும் அன்னாரின் உண்மையான கலீபாக்கள் பொருட்டால் இந்த வழிகேடன் காத்தான்குடி அப்துர் ரவூப் மௌலவியிடமிருந்து எங்களையும், முஃமின்களையும் காப்பாற்றுவாயாக! எங்களை ஜெயம் பெறச் செய்வாயாக! ஆமீன். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.!!!

தூத்துக்குடி சம்பவம் பற்றிய நோட்டீஸ்

 

தூத்துக்குடியில் ஷெய்குனா அவர்கள் செய்த தப்லீக் எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது அதை விபரித்து வெளியான நோட்டீஸ். காயல்பட்டணத்தில் அனைத்து ஜமாஅத்தினர்களிடமிருந்தும் சீல்கள் பெறப்பட்டு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவினர்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் ஜமாஅத்துல் உலமா சபை தம்முடைய வஹ்ஹாபிய பிடிவாதத்திலேயே இருந்தது.

முஸ்லிம் சகோதரர்களுக்கோர் முக்கிய அறிவிப்பு.

15-6-74 ம் தேதி தூத்துக்குடி ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற 'திருநெல்வேலி ஜில்லா ஜமாஅத்துல் உலமா' சபையின் தீர்மானங்கள் 'விஷமிகள் ஜாக்கிரதை' என்ற  தலைப்பில் வெளியானவற்றில் 4ம் தீர்மானம் கண்டு பொதுமக்களிடம் குழப்பநிலை ஏற்பட்டதினால் எதார்த்தமாக நடந்த சம்பவத்தை விளக்கி வைக்குமாறு கேட்டு, எங்களுக்கு பல ஊர்களிலிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் எழுவது சிரமமானதினால் இந்த பிரசுரத்தின் உண்மையை விளக்கி வைக்கிறோம். 

சில நாட்களுக்கு முன் சூபி ஹழ்ரத் அவர்கள் தங்கள் குழந்தையின் சுகக் குறைவுக்கு பரிகாரம் பார்ப்பதற்காக இங்குள்ள ஆஸ்பத்திரியில் குடும்பத்தோடு சில காலம் தங்கியிருந்தார்கள்.

அதுசமயம் பள்ளிவாசலுக்கு அடிக்கடி வருவார்கள். பள்ளிவாசலிலேயே தொழுவார்கள். ஜமாஅத் நடந்தால் இங்குள்ள பேஷ்இமாமுடன் பின் தொடர்ந்து தொழாமல் ஜமாஅத்து முடிந்ததும் தனியாகவே தொழுவார்கள். தனியாக ஜமாஅத் நடத்தியதில்லை.

பள்ளிவாசல் பேஷ் இமாமுடன் தொழுதால் தொழுகை கூடாதென்று எவரிடமும் சொல்லவுமில்லை. தப்லீக் தலைவர்களையோ, மற்றவர் எவரையுமோ மறைமுகமாகவும் கூட 'காபிர்கள்' என்று சொல்லியதுமில்லை.

அவர்களிடம் நெருங்கி பழகியவர்களில் ஒருவர்: 'நீங்கள் முன் தூத்துக்குடிக்கு வரும் போதெல்லாம் இந்த பேஷ்இமாமோடு தொழுதுதானே வந்தீர்கள். இப்போது ஏன் அவருக்குப் பின்னால் தொழுவதில்லை' என்று வினவியபோது,

'நான், இந்த தப்லீக் ஜமாஅத்தானது மக்களை வஹ்ஹாபிகளாக ஆக்குவதற்காகவே வஹ்ஹாபிகளாலேயே உண்டாக்கப்பட்டது என்று தக்க ஆதாரங்கள் காட்டி, மக்கள் இதில் சேரக்கூடாது என்று பல புத்தகங்களும் நோட்டீஸ்களும் எழுதி பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு இலவசமாக விநியோகித்து பல்லாண்டு காலமாகவே பிரச்சாரம் செய்து வருவது எல்லோர்களுக்கும் தெரிந்த விஷயம் என்பதை அறிவீர்கள். 

தப்லீக் ஜமாஅத்தின் கெட்ட நோக்கத்தை விளங்கிய பிறகும் அதில் பிடிவாதமாக இருக்கிறவர்களுக்குப் பின்னால் நான் தொழ மாட்டேன். இந்த பேஷ்இமாம் அவர்கள் விஷயத்தை விளங்கிக் கொள்ளாமல்தான் தப்லீகில் சேர்ந்திருக்கக் கூடுமென்று நல்லெண்ணம் வைத்துதான் முன்பெல்லாம் அவருடன் தொழுது வந்தேன். இப்போது அவரின் போக்கைப் பார்த்தபின் அவர் பேரில் நல்லெண்ணம் வைக்க முடியவில்லை. அதனாலேயே தான் தனியாக தொழுகிறேன்' என்று சொன்னார்களாம்.

சூபி ஹழரத் அவர்கள் இந்த ஊரை விட்டும்  போனபின் நெல்லை ஜமாஅத்துல் உலமாக்காரர்கள் இங்கு வந்து, அவர்களும் தப்லீக்காரர்களும் சேர்ந்து தான் இவ்விதமாக இட்'டுக்கட்டி விஷமப் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பத்திலாக்கியிருக்கிறார்கள்.

1. சூபி ஹஸ்ரத் அவர்களைப் போலவே மதராஸ் கவர்மெண்ட் காழி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹஸ்ரத் அவர்களும், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஷேக் ஆதம் ஹஸ்ரத் அவர்களும்,

2. காயல்பட்டணம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் முஹம்மது அபூபக்கர் கிப்லா ஹழ்ரத் அவர்களும்,

3. மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி ஹஸ்ரத் அவர்களின் பர்ரத் மின் கஸ்வரா என்ற மார்க்கத் தீர்ப்பு நூலிலும்,

4. 'பத்ஹுத் தைய்யான்' 'மஆனி' ஆகிய கிரந்தங்களின் ஆசிரியரான கீழக்கரையைச் சார்ந்த சங்கைக்குரிய பெரியார் அல்ஆலிமுல் அரூஸ் அல்லாமா செய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்ள் மஆனியில் 177, 178 பக்கங்களில் இஸ்மாயில் தெஹ்லவி (இல்யாஸின் குருவான் ரஷீத் அஹ்மது கங்கோஹியின் குரு) தான் விரும்பியவாறு குர்ஆனுக்கு தப்பான அர்த்தம் செய்பவன் என்றும் மடையன் என்றும், வஹ்ஹாபி என்றும் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றியவன் என்றும் எழுதியுள்ளார்கள்.

5. மதீனாவிலுள்ள சங்கைக்குரிய 34 உலமாக்கள் 'ஹுஸாமுல் ஹரமைன்' என்னும் மார்க்கத் தீர்ப்பில் குலாம் அஹ்மது காதியானி, ரஷுது அஹ்மது கங்கோஹி, கலீல் அஹ்மது அம்பேட்டி, அஷ்ரப் அலி தானவி ஆகியோர்கள் காபிர்கள் என்றும், இதை சொல்லத் தயங்கியவனும், சந்தேகித்தவனும் காபிர் என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள்.

6. இந்தியாவின் பல பாகங்களிலுள்ள மேன்மை தங்கிய 268 உலமாக்கள் 'அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா' என்னும் மார்க்கத் தீர்ப்பில் மேற் கூறப்பட்டவர்கள் காபிர் என்றும், முர்தத்துகள் என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள்.

7. இந்தியாவிலுள்ள சங்கைக்குரிய 45 உலமாக்கள் 'அல் அதாபுல் பஃஸ் அலா றஃஸி இல்யாஸ்' என்னும் மார்க்கத் தீர்ப்பில் இல்யாஸ் காபிர் என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

8. கேரள சமஸ்தான 'ஜமியத்துல் உலமா' சபையும் இன்னும் பல உலமாக்களும் தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி மறுப்பு பத்வாக்கள் எழுதியிருக்கிறார்கள்.

சூபி ஹஸ்ரத் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி முக்கியமான இரண்டு குற்றச் சாட்டுக்களை எடுத்துக் கூறி அதற்கு தக்க ஆதாரங்களையும் காட்டி மறுக்கிறார்கள்.

முதலாவது குற்றச்சாட்டு: வஹ்ஹாபி கொள்கையின் ஸ்தாபகர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தௌஹீது' என்ற அரபி நூலுக்கு சரியான உருது மொழி பெயர்ப்பைப் போன்றதுஈ வஹ்ஹாபிக் கொள்கைகள் பூராவுமே எழுதப்பட்டதுமான இஸ்மாயில் தெஹ்லவியினால் எழுதப்பட்ட 'தக்வியத்துல் ஈமான்' என்ற நூலை, ரஷீத் அஹ்மது கங்கோஹி தனது பதாவா ரஷீதிய்யாவின் 42ம் பக்கத்தில் 'தக்வியத்துல் ஈமான்' என்னும் நூல் மிகவும் நல்ல நூல், ஷிர்க்கு, பித்அத்தை தவிப்பதற்கு நிகரில்லாதது. அதில் ஆதாரங்களெல்லாம் பூரணமாக அல்லாஹ்வின் வேதத்திலிருந்தும், ஹதீதுகளிலிருந்துமே காட்டப்பட்டிருகக்கிறது. அந்த நூலை வைத்திருப்பதும், அதைப் படிப்பதும் இன்னும் அதன்படி அமல் செய்வதும் (ஐனுல் இஸ்லாம்) இஸ்லாம் தானாகும். நன்மையும் கிடைக்கும்' என்று சொல்லி வஹ்ஹாபிக் கொள்கை அத்துணையையும் ஒப்புக் கொண்டு விட்டார்.

மேலும் அவரின் 'பதாவா ரஷீதிய்யா' என்னும் நூல் 235ம் பக்கத்தில் வஹ்ஹாபி கொள்கையின் ஸ்தாபகர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை நல்லவர், அவரின் கொள்கை நல்லது என்றும் சொல்வதோடு அவரைப் பின்பற்றியவர்களுக்கு வஹ்ஹாபிகள் என்று சொல்லப்படும் என்றும் சொல்லி அந்த கொள்கைகளை நல்லதென்று சரிகண்டதினால் தன்னையும், வஹ்ஹாபி என்று ஒப்புக் கொள்கிறார்.

 மேலும் அவரின்'தத்கிரத்துர் ரஷீது' இரண்டாம் பாகம் 17ம் பக்கத்தில், இந்த காலத்தில் நேர்வழியும் ஈடேற்றமும் என்னைப் பின்பற்றுவதிலேயே தரிபட்டிருக்கிறது' என்றும் சொல்கிறார்.

தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் ஜீவிய சரித்திரமான 'தீனி தாவது' என்னும் நூல் 41ம் பக்கத்தில் 'மௌலவி இல்யாஸ் அந்த (வஹ்ஹாபி) ரஷீது அஹ்மது கெங்கோஹி இடத்தின் தான் பத்து வருடகாலம் கல்வி கற்று அவரிடத்திலேயே பைஅத்தாகி-முரீதாக ஆனதோடு அவர்கள் என்னுடைய உடலிலும் உயிரிலும் குடிகொண்டு விட்டார்கள். அவர்களை காணாமல் எனக்கு நிம்மதியேயில்லை. தூக்கத்திலிருந்தும் விழித்து அவருடைய முகத்தைப் பார்க்க வேண்'டி அவரிடம் சென்று தரிசித்து, திரும்பவும் வந்து தூங்குவேன் என்று சொல்வார் என்றும்,

மவ்லவி இல்யாஸின் மல்பூளாத்து – வாய்மொழிகள் என்னும் நூல் 114ம் பக்கத்தில் 'ரஷீது அஹ்மது கங்கோஹி இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பாகவும், முஜத்திதாகவுமிருக்கிறார்' என்றும் சொல்கிறார்.

ஆகையினால் மவ்லவி இல்யாஸும் வஹ்ஹாபியேயாகும்.

இரண்டாவது குற்றச்சாட்டு: தப்லீகின் ஸ்தாபகர் மவ்லவி இல்யாஸினாலேயே எழுதப்பட்ட 'மகாதீபு மவ்லவி இல்யாஸின் லிகிதங்கள்' என்னும் நூலின் 122ம் பக்கத்தில் அவர் தப்லீகின் காரிய குழுவைப் பற்றி எழுதிய கடிதத்தில் 'இரண்டு கருமங்கள் இருக்கின்றன. ஒன்று நடவாமலிருப்பது அவசியமானது. அதை (இவர்கள்) செய்கிறார்கள். மற்றொன்று நடப்பது அவசியமானது. அதை (இவர்கள்) செய்கிறாரில்லை. முந்திய கருமம் கலிமா தொழுகையைச் சரியாகச் சொல்லவும், செய்யவும் வைப்பது. (இதை இவர்கள் செய்கிறதென்றாலும் கூட (இது) இந்த இயக்கத்தின் அசல் நோக்கத்தை போன்றது என்ற தோரணையில் செய்கிறார்கள். எதார்த்தமோ இஐ (இந்த இயக்கத்தின்) நோக்கமில்லை' என்றும், இன்னும் அதே நூல் அதே பக்கத்தில் கலிமாவையும், தொழுகையையும் சரியாகச் சொல்லவும், செய்யவும் வைப்பது இந்த இயக்கத்தின் கருத்தல்ல' என்றும், இன்னும் தீனிதஃவது எனும் நூல் 205ம் பக்கத்தில் 'ஒரு சமயம் தனது அன்பர் மவுலவி ளஹீருல் ஹஸன்  சாகிபு எம்.ஏ. அலிகார் (இவர் ஒரு விசால ஆராய்ச்சியாளரான அறிஞர்) இவரிடம் இல்யாஸ் சொல்கிறார்: ளஹீருல் ஹஸன்! என்னுடைய கருத்தை ஒருவரும் விளங்கிக் கொள்கிறாரில்லை. ஜனங்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இது தொழுகையைப் பற்றி (ஏவக் கூடிய) இயக்கமென்று. நான் சத்தியமாகச் சொல்கிறேன். இது ஒரு போதும் தொழுகையைப் பற்றி ஏவக் கூடிய இயக்கமில்லை' என்றும் சொல்லிவிட்டு அதே நூல் அதே பக்கத்தில் 'ஒரு நாள் பெருங்கை சேதத்தோடும், கவலையோடும் (இல்யாஸ்) சொன்னார்: ளஹீருல் ஹஸன்! (எனது நோக்கம்) ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவதாகும்' என்று சொல்கிறார்.

எனவே தப்லீக் இயக்கத்தின் நோக்கம் நம் சுன்னத் வல் ஜமாஅத்து மக்களை புதிய சமுதாயமாக – அதாவது தனது கூட்டமாகிய வஹ்ஹாபிக் கூட்டமாக ஆக்குவது தான் என்று தப்லீகின் ஸ்தாபகர் அவர் தனது வாயினாலேயே சொல்கிறார்.

ஜமாஅத்துல் உலமா சபையினர்களே!

சூபி ஹஸ்ரத் அவர்கள் மக்களை வழிகேட்டை விட்டும் காப்பாற்றுவதற்காக, தப்லீகின் கெடுதல்களைப் பற்றி தக்க ஆதாரங்களை காட்டி மக்களிடம் பிரச்சாரம் செய்வது விஷமப் பிரச்சாரமா? அல்லது சூபி ஹஸ்ரத்தைப் பற்றியும், அவர்கள் செய்யும் வேலையைப் பற்றியும் நேரில் கண்டு தெளிந்துக் கொள்ளாமல், அவர்களபை; பற்றி எவரோ ஒருவர் குறை கூறி எழுத்து மூலமாக அறிவித்ததாக வைத்துக் கொண்டு உலமா சபை அவர்களை கண்டிப்பதாக தீர்மானம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்வது விஷமப் பிரச்சாரமா? 

ஒருவரைப் பற்றி அவர் குற்றம் செய்தாரா? என்று அவரை நேரில் விசாரித்து அறியாமல், அவர் குற்றம் செய்ததாக எவரோ ஒருவர் எழுத்து மூலம் கொடுத்ததை வைத்துக் கொண்டு அவர் பேரில் குற்றம் சாட்டுவதும், அவரை கண்டிப்பதும்உ லமாக்களின்- அறிஞர்களின் பிரச்சாரமா? அல்லது அறிவிலிகளின் விஷமப் பிரச்சாரமா? 'தப்லீக் ஜமாஅத்தின் நோக்கம் மக்களை புதிதான கூட்டமான வஹ்ஹாபிக் கூட்டமாக ஆக்குவதுதான்' என்று தப்லீக்' ஜமாஅத்தின் ஸ்தபாகரே அவரின் வாயினால் சொல்லியிருக்கும் போது, தப்லீக் ஜமாஅத் புனிதமானது அது நல்ல சேவை செய்கிறது, அதைப் பற்றி எதிர் பிரச்சாரம் செய்வது கூடாது என்று தீர்மானித்திருக்கின்ற இந்த உலமா சபை சுன்னத் வல் ஜமாஅத்து உலமா சபையா? அல்லது வஹ்ஹாபி உலமா சபையா?

தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி மார்க்க அடிப்படையின் படி ஆதாரங்கள் காட்டி அது கெட்டது என்று சொல்லும் போது, அந்த ஆதாரங்களில் ஒன்றையுமே மறுக்காமல், அது நல்லது என்பதற்கு ஆதாரங்கள் காட்டாமலும் தப்லீக் புனிதமானது என்று உலமாக்களெல்லாம் ஏகோபித்து தீர்மானித்திருப்பதாக சொல்வது, மார்க்கத்தின் பேரில் துணிச்சலாக போர் புரிவதாகுமல்லவா?

குர்ஆன், ஹதீது, இஜ்மாவு, கியாஸு ஆகிய மார்க்க அடிப்படையின் படி கெட்டதென்று ஆனதை தென்னக உலமா சபை என்ன? அகில உலமா சபையாருமென்ன? அகில உலமாக்களும் கூட அதை புனிதமானது என்று சொல்ல முடியுமா? ஒரு கருமத்தை நல்லது என்றோ, கெட்டது என்றோ நிர்ணயிப்பது மார்க்கமே தான். மார்க்கம் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டதுவேதான. ஜனங்களால் ஏகோபித்து முடிவு செய்யப்பட்டதல்ல.

உலமா பெருமக்களே!

தப்லீக் ஜமாஅத் கெட்டது என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை எல்லாம் மறுத்து அது புனிதமானது என்பதற்கு ஆதாரம் காட்டுங்க்ள. ஆதாரங்கள் காட்டாமலும் வெறுமனே உலமா சபையினர்கள் எல்லோர்களும் அது புனிதமானது என்று தீர்மானித்ததாக விஷமப் பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்கள் உதவாக்கரை தீர்மானத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்.

மக்களுக்கு உங்கள் பெயரில் வெறுப்புத்தான் நிச்சயம் உண்டாகும்.

வஸ்ஸலாமு அலா மனித்தப அல்ஹுதா.

இவண்,

25-7-74                                                                                                                                                          மஜ்லிஸு முஹிப்பிர் ரஸூல்,

தூத்துக்குடி.

குறிப்பு: (தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் இல்யாஸின் குருவான ரஷீது அஹ்மது கங்கோஹியின் குரு) இஸ்மாயில் தெஹ்லவியை வழி கெட்டவன், வழிகெடுப்பவன் என்றும் அவன் எழுதிய 'தக்வியத்துல் ஈமான்' எனும் நூலுக்கு மறுப்பாக 'அஸ்ஸுயூபுல் பாரிகா அலாருஊசில் பாஸிகா' என்ற தலைப்பில் மௌலானா அல்லாமா அப்துல்லாஹில் குராஸானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியிட்ட பத்வாவை சரிகண்டு, நான்கு மத்ஹபுக்குரிய மக்கா முப்தியுமான ஸஹீஹுல் புஹாரி ஷரீபின் 'அபூர்வ துஆ' கோர்வையாளருமான அல்லாமா அஹ்மது இப்னு ஜெய்னி தஹ்லானி தரீகத்துஸ் ஷாதுலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சரிகண்டு மதிப்புரை வழங்கியுள்ளார்கள்.

மறுபதிப்பு செய்து வெளியிடுவோர்: மஜ்லிஸு முஹிப்பிர் ரஸூல், குத்துக்கல் தெரு, காயல்பட்டணம். 1-8-74.

ஷெய்குனா அவர்கள் ஜும்ஆ பள்ளில் குத்பாவிற்கு முன் பயான் பண்ணுவது பற்றி தங்கள் கைப்பட எழுதிய விரிவான அறிக்கை:

ஜும்ஆ பள்ளியில் குத்பா பள்ளியில் குத்பா ஓதுவதற்கு முன்னால் ஜவாலுக்கு முந்தியோ பிந்தியோ பிரசங்கம் செய்வது கூடாது என்றும், கூடும் என்றும் வாக்குவாதம் ஏற்பட்டபின் இருசாரார்களும் தங்கள் தங்கள் வாத்திற்கு ஆதாரமாக மார்க்க அடிப்படையில் பத்வாக்கள் சேகரித்து குத்பா பெரிய பள்ளி மானேஜர் குளம் லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்லப்பட்டபடி இருசாரார்களும் பத்வாக்களை சேகரித்து அனுப்பிக் கொடுத்தார்கள். பின்னர் இருதரப்பினருடைய பத்வாக்களையும் பாதிசீலனை செய்வதற்காக இரு தரப்பு உலமாக்கள் பரீசலனை செய்வதை பார்வையிடுவதற்காக வேண்டி பொதுமக்களுக்கும் அழைப்புக் கொடுத்திருந்தார்கள். எல்லோர்களும் குழுமி இருந்த சபையில் எல்லாப் பத்வாக்களையும் வாசித்துக் காட்டப்பட்டது.

பிரசங்கம் செய்வது ஆகுமென்று சொல்கிறவர்களின் பத்வாவில்:-பிரசங்கம் செய்வதனால் தொழுகிறவர்கள் சிலருக்கு இடைஞ்சல் ஏற்பட்ட போதிலும் பிரசங்கத்தை கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருப்பதனால் பிரசங்கம் செய்வது ஆகும் என்றும், அதற்கு ஆதாரமாக இமாம் நவவி அவர்கள் தங்கள் பத்வாவில் 'பள்ளிவாசலில் ஒரு கூட்டத்தார்கள் சப்தமிட்டு குர்ஆனை ஓதுகிறார்கள். அவர்கள் ஓதலைக் கேட்டு பல ஜனங்கள் பயனடைகிறார்கள். (ஓதலைக் கேட்பதனால் அவர்களுக்கு தவாபு கிடைக்கிறது) வேறு சில தொழுகிறவர்களுக்கு இடைஞ்சலாகி வருத்தப்படுகிறார்கள். இந்த நிலைமையில் சப்தமிட்டு ஓதுவதை கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருந்தால் சப்பதமிட்டு குர்ஆன் ஓதுவது ஆகும். மாற்றமாக இருந்தால் ஆகாது. அதாவது தொழுகிறவர்கள் மிகுந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் சப்தமிட்டு ஓதுவது மக்ரூஹு' என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகையினால் பிரசங்கம் செய்வதை கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருப்பதினால் பிரசங்கம் செய்வது ஆகும் என்று சொல்கிறார்கள். குத்பாவுக்கு முன் பிரசங்கம் ஆகும் என்று சொல்கிறார்கள்.

குத்பாவுக்கு முன் பிரசங்கம் செய்வது ஆகாது என்று சொல்கிறவர்களின் பத்வாவில்: குத்பாவுக்கு முன் பிரசங்கம் செய்வது ரசூலுல்லாஹ்வின் காலத்திலும், சஹாபாக்கள் தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் இமாம்களுடைய காலங்களிலும் எங்குமே நடக்காத 'பித்அத்தாகும்.'(நூதனமாகும்) மேலும் ஜும்ஆ நாளில் பள்ளியில் இமாம் குத்பா ஓதுகிறவரையிலும் மக்கள் செய்ய வேண்டிய தொழுகை, குர்ஆன், சலவாத்து ஓதுதல், திக்று பிக்று, தஸ்பீஹ் தஹ்லீல்களாகிய சுன்னத்தான அமல்களை செய்ய விடாமல் இந்த பிரசங்கம் தடுக்கக் கூடியதுமாகும். ஆகவே இந்த பிரசங்கம் பித்அத்துஸ் ஸய்யிஆ –கெட்ட பித்அத்தாகும். நவவி இமாம் அவர்களின் பத்வாவில் வெள்ளிக்கிழமையில் இமாம் குத்பா ஓதும் வரையிலும் தொழுவதும், குர்ஆன் ஓதுவதும் ஸுன்னத்தான அமல்களாகும். இதில் ஒன்றை செய்வதினால் மற்றொன்றை செய்கிறவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுமானால், இடைஞ்சல் ஏற்படுகிறவர்கள் சுருக்கமானவர்களாவும், பயனடைகிறவர்கள் அதிகமானவர்களாகவுமிருந்தால் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவது ஆகும் என்றும் இடைஞ்சல் படுகிறவர்கள் அதிகமானவர்களாகவும் பயனடைகிறவர்கள் குறைவாகவும் இருந்தால் சப்தமிட்டு குர்ஆன் ஓதுவது மக்ரூஹு என்று நவவி இமாம் அவர்கள் சொன்னதை இந்த கெட்ட பித்அத்தான விலக்கப்பட்ட கருமமான பிரசங்கத்திலும் கியாஸ் செய்து பிரசங்கத்தையும் கேட்டு பயனடைகிறவர்கள் அதிகமாக இருப்பதால் ஆகுமென்று சொன்னது சரியில்லை. தவறான கியாஸாகும். இந்த வேலையே ஆகாத விலக்கப்பட்டதாக இருக்கிறதே என்றும் சொல்கிறார்கள்.

இரு தரப்பார்களுடைய பத்வாக்களையும் வாசித்துக் காட்டப்பட்டதும் பொதுமக்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். மத்தியமாக இருந்த குத்பா பள்ளி மானேஜர் குளம் லெப்பை தம்பி ஆலம் அவர்கள் மார்க்க அடிப்படையிலான இந்த பத்வாக்களை பரிசீலனை செய்து பார்த்ததில் இந்த பிரசங்கம் விலக்கப்பட்ட கெட்ட பித்அத்தாகும். இனிமேல் இதை செய்ய மாட்டோம் என்று சொல்ல வேண்டும். நீதிக்கு மாற்றமாக பொது ஜனங்கள் மிகுந்தவர்கள் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று விரும்புவதினால் பிரசங்கம் செய்ய போகிறோம் என்று தீர்ப்பு சொல்லி விட்டார். சபை குழப்பத்தோடு கலைந்தது. பின்னர் முகிய்யத்தீன் பள்ளி ஜமாஅத்தார், சிறுநெய்னார் பள்ளி ஜமாஅத்தார், காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா ஜமாஅத்தார்களும் பல பேர்கள் கையொப்பத்தோடு லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களுடைய இந்த தீர்ப்பைப் பற்றி பல கண்டன மனுக்கள் கொடுத்தார்கள். அவைகளையும் பொருட்படுத்தாமல் தாங்கள் சொன்ன தீர்ப்புப் படி பொதுஜனங்களுடைய அபிப்பிராயப்படி பிரசங்கம் செய்யத்தான் செய்வோமென்று அறிவித்து விட்டு பிரசங்கத்தை நடத்தியே வருகிறார்கள். அல்லாஹ் போதுமானவன்.

காத்தான்குடி அப்துர் ரஊப் மௌலவி ஷெய்குனா அவர்களுக்கு செய்த மாறுபாடுகள்:

இலங்கை நாட்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மார்க்கக் கோட்படுகளைப் பின்பற்றி இறைஞான மகான்களாகத் திகழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. மேலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து ஞானங்களை மக்களுக்குப் போதித்து இஸ்லாமிய தர்பியத்தை நடைமுறைப்படுத்தியவர்கள் ஷெய்குமார்கள், தங்கள்மார்கள் என்றால் அது மிகையாகாது.

இலங்கையில் தோன்றிய ஞான மகான்களில் 'அஸ்ராருல் ஆலம்' எழுதிய சித்தி லெவ்வை, அட்டாளச் சேனை வெள்ளி மீரான் ஸூபி ஹஜ்ரத் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வாறே இந்தியாவிலிருந்து வருகை தந்து காதிரிய்யா தரீகை இலங்கைக்குப் பரவச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தென்னிந்தியா காயல்பட்டணம் நகரைச் சார்ந்த அஷ்ஷெய்குல் காமில ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆவார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் கொழும்பு குப்பியாவத்தையில் அமைந்துள்ளது. வருடந்தோறும் சிறப்பாக கந்தூரி ரமலான் பிறை 24 அன்று அன்னார் மறைந்த தினத்தில் நடைபெற்று வருகிறது.

அன்னார் இலங்கை வந்து தரீகை பரப்பியதோடு மட்டுமில்லாமல் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலைநாட்டவும் அயராது பாடு;பட்டனர். அவர்களிடம் பைஅத் பெற்று ஜெயம் பெற்றோர் ஏராளம். ஏராளம். அவர்களிடம் பைஅத்தையும் வாங்கிவிட்டு அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மறுப்பாகவும், எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் இலங்கை காத்தான்குடியைச் சார்;ந்த மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி மற்றும் அவரது மச்சான் மௌலவி பாறூக் பலாஹி ஆகியோர்.

இந்த இருவரும் ஷெய்குக்கு எவ்விதம் மாற்றம் செய்து கேடு கெட்டனர் என்பதையும், குருத்துரோகம் செய்து இஸ்லாமியக் கொள்கைக்கு மாறுபட்டனர் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

மௌலவி அப்துர் ரஊப் எழுதிய 'ஹமவோஸ்த்' என்ற நூலை 1-6-1987 அன்று வெளியிட்டார். அதில் என்னுரை என்பதில் ஞானம் என்பது தனக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களுக்கு கூட தெரியவில்லை, தனக்கு மட்டும்தான் தெரியும் என்று 'நான்' என்ற மமதை கொண்டு எழுதியிருக்கிறார். இந்த 'நான்' என்ற மமதைதான் அவரை நாசப்படுத்தியது, ஞானத்தை தவறாகப் புரிந்து போதிக்கத் தூண்டியது.

இந்த நூலில் இவரின் தவறான கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்று ஒரு பட்டியலை பக்கம் 96 ல் வெளியிட்டுள்ளார். அதில் முதலாவதாக தனது மச்சான் மௌலவி பாறூக் ஆலிம் அவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஷெய்குனா மறைவிற்குப் பின்னும் பாறூக்கும் இவரின் குப்ரு வலையில் வீழ்ந்துதான் கிடந்தார் என்பது இதன்மூலம் ஆதாரப்பூர்வமாக தெரியவருகிறது.

மௌலவி அப்துர் ரஊப் போதித்த கொள்கைதான், ஞானம்தான் என்ன?

கடந்த 1979 பிப்ரவரி 11 அன்று காத்தான்குடியில் மார்க்கட் சதுக்கத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் ரஊப் மௌலவி உரையாற்றும்போது,

1.    அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்றும், இல்லையென்றும் நம்ப வேண்டும்
2.    மனிதர்களை நல்வழிப் படுத்துவதற்காக அல்லாஹ்தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உருதுவத்தில் (உடையில்) வந்தான்.
3.    வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 'வஹீ' எனப்படும் இறைத்தூது கொண்டு வந்த சமயம் ஹிறா மலைக்குகையில் நெற்றியில் கை வைத்துப் படுத்தவர்களாக சாய்ந்து கொண்டிருந்த நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனைக் கண்டார்கள்.

இப்பேச்சைக் கண்ட, கேட்ட இலங்கை ஜம்இய்யத்து உலமாசபை இக்கருத்தைக் கூறிய அப்துர்ரஊப் மௌலவியும் அவரை சரிகாண்பவர்களும் முர்தத்-மதம் மாறியவர்கள் என்று பத்வா வழங்கினார்கள்.
 

   
இவ்வாறு இலங்கை ஜம்இய்யத்து உலமா சபையினரால் முர்தத் பத்வா கொடுக்கப்பட்ட ரஊப் மௌலவி செய்வதறியாது திகைத்தார். அதிலிருந்து தப்பிக்க வழி தேடினார். எனவே தனது ஆன்மீகக் குருவான ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்களுக்கு கடிதம் எழுதி தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடினார். அவர் எழுதிய கடிதத்தின் நகல் இதோ:

 

தம்முடைய பிள்ளைகளை வழிகேட்டிலிருந்தும், சறுகல்களிலிருந்தும் காப்பாற்றுவது காமிலான ஷெய்குமார்களின் கடமையாக அல்லவா இருக்கிறது?! தமது முரீதின் தவறான பேச்சுக்கு அவர் கொடுத்த விளக்கத்தைப் பார்த்து நம்பி, ஜம்இய்யத்துல் உலமா சபை கொடுத்த பத்வா ஆதாரமற்றது, வீண்பழி; சுமத்துவது, காழ்ப்புணர்ச்சி கொண்டது என்று ஆணித்தரமான ஆதாரங்களை வைத்து ஷெய்குனா அவர்கள் வெளியிட்ட மறுப்பு அறிக்கை நோட்டீஸாக வந்தது. அதன் பிரதி இதோ:

 
இதன்பின் உலமாசபையினா வாயடைத்துப் போயினர். தமது தவறான பத்வாவைக் கண்டு செய்வதறியாது திகைத்தனர். இத்துடன் இப்பிரச்சனை சரியாக்கப்பட்டது. ஷெய்குனா அவர்கள் தமது  முரீது ரஊப் மௌலவியை சறுகுதலகளிலிருந்து காப்பாற்றி விட்டார்கள். அதன்பிறகு இதுபற்றிய விஷயங்களை பேசக்கூடாது என்று ரஊப் மௌலவிக்கு உத்திரவும் இட்டனர். அதை சரி என்று ஏற்றுக் கொண்ட ரஊப் மௌலவி அந்த வாக்குப்படி நடந்திருக்க வேண்டும்;. அதுதான் உண்மையான முரீதிற்கு அடையாளமாக இருக்கவும் முடியும். ஆனால் இந்த மௌலவி செய்தது என்ன? திரும்பவும் இதுபற்றிய விசயங்களைப் பேசி ஷெய்குனாவின் உத்திரவிற்கு மாற்றமாக நடக்க ஆரம்பித்து வழிகேட்டில் விழ ஆரம்பித்தார் ரஊப் மௌலவி. இதனால் மனம் சஞ்சலமடைந்த ஷெய்குனா அவர்கள் ரஊப் மௌலவியைக் கண்டித்தார்கள். ஆனால் அவர் அதைக் கேட்டபாடில்லை.

அதன்பிறகு தமது முரீதுகளிடம் குப்ரு, ஷிர்க்கைப் பேசித்திரியும் ரஊப் மௌலவியிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள். அவரின் குருத்துரோகத்தால், ஷெய்குக்கு மாற்றமான செயலால் அவர் வாங்கிய பைஅத்தும் முறிந்து போவது இயற்கையே! ஷெய்குனா அவர்கள் ரஊப் மௌலவியிடம் தொடர்பு கொள்ள கூடாது என்று எழுதிய கடிதத்தின் நகல்கள் இதோ:
     

                                           15-6-1982
பேரன்பிற்குரிய ஜெயினுல் ஆப்தீன் ஹாஜியார் அவர்களுக்கு

அல்லாஹ் அருள் புரிவானாக!;

'………………………… உங்களுடைய 12-6-82 தபால் பார்த்து, எனக்குப் பெரும் கவலையானது. பாறூக் மவ்லவி உங்களிடம் வந்து ரஊப் மௌலவி நோன்புக்கு இந்தியா போகிறதாம். நோன்பு ஒரு மாதமும் அவருடைய பத்ரிய்யா ஜும்ஆ பள்ளியில் ஹதீது  சொல்லும்படி சொன்னதாகவும், 2-3 ஆயிரம் தருகிறதாகவும் சொன்னார்' என்றும், 'அது தனக்கு விருப்பம் போலவும் பலமுறையும் கதைத்தார். நமது தகப்பனார் செய்கு வாப்பாவிடம் கேட்டு, உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். அவர் சொல்வது போல் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது, உருவம் இல்லை என்றும், இன்னும் அவருடைய கொள்கைகளையும், அப்துல்லாஹ் பயில்வானுடைய கொள்கைகளையும் பேசக் கூடாது. தரீகத்துப் பற்றியும், தொழுகைநோன்பு பற்றியும்தான் சொல்ல வேண்டும் என்றும் சொன்னேன். அப்படி என்றால், எனக்கும் விருப்பம்தான் என்று சொன்னேன். அப்படி நான் சொல்லக் கூடிய சூழ்நிலை, அவருடைய விருப்பத்தில் நின்றும் எனக்கு விள ங்கினது. அதற்காக வேண்டி வாப்பாவிடமும் கேட்டு செய்யுங்கள் என்று சொன்னேன். கூடிய மறுப்புத் தெரிவிக்க, அவர்முன் எனக்கு சூழ்நிலை இல்லை. அப்படி அவர் பதுரிய்யாவில் ஹதீது சொன்னால் நமக்கு நல்லது இல்லை. நமது பிள்ளைகளுக்கும் மன வெறுப்புத்தான். தாங்கள் சொல்லி நிற்பாட்டிவிட்டால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பாறூக் மௌலவியை கண்டிப்பாக நான் தடுக்க மாட்டேன், அவருடைய வி;ருப்பம் இருக்கிறபடியால் தாங்கள் சொல்வது போல் நான் நடக்க, எனக்கு நல்ல விருப்பம். நான் அதை தடுக்க மாட்டேன் 'என்றும் எழுதியிருக்கிறீர்கள்.

றஊப் மவுலவியுடன் நமக்கென்ன வருத்தம்? அவருடைய வேண்டுதலின் பேரில், அவரைக் காப்பாற்றினோம். அந்த உபகாரத்திற்கு நன்றி செய்வதற்காகவோ என்னவோதான், அவர் குப்று, ஷிர்க் சகதியை எல்லோருக்கும் தெரியும்படி தன் முகத்தில் பூசிக் கொண்டு இருக்கிறார். அல்லாஹுக்கு உருவம் இருக்கிறது என்று துணிந்து சொல்கிறார். அல்லாஹுக்கு உருவம் இருக்கிறது என்றும் நம்ப வேண்டும் உருவம் இல்லை என்றும் நம்ப வேண்டும் என்று ஓயாமல் பிரசாரமும் செய்கிறார். தான் பாவித்து வந்த போதையை மேலும் மேலும் துணிச்சலோடு அதிகமாகப் பாவித்துக் கொண்டே போகிறார்.

எல்லா மக்களுடைய ஜும்ஆ தொழுகையையும் பழுதாக்குகிறதற்காக வேண்டி, வேறொரு ஜும்ஆவையும் நடத்துகிறார்.

தான் செய்கிற தவறான போக்கை, தவறென்று உணராமல் தான் செய்வதுதான் சரி என்று, துணிச்சலாக மார்க்கத்தில் விளையாடுகிறார்.

இதனால்தான் நாம் அவரை வெறுக்கிறோம். வேறெந்தக் காரணத்திற்காகவுமில்லை! இது எங்களுடைய கடமை! அவருடன் ஒத்துழைத்தால் மார்க்கத்தை தகர்த்துப் போட உதவி செய்ததாகும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

றஊப் பவுலவிக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்க மாட்டேன் அவருடைய கூட்டங்களிலும் பேச மாட்டேன் என்று, பாறூக் மவுலவி என்னிடம் வாக்குறுதி கொடுத்த பிறகுதான், பாறூக் மவுலவியை தரீகில் சேர்த்தேன். அவர் மார்க்கத்திற்குச் சேவை செய்வார், கெட்ட கொள்கைகளுக்கு மறுப்புக் கொடுத்து, நம் ஸுன்னத் ஜமாஅத்து கொள்கைகளைப் படித்துக் கொடுத்து மக்களை நேரான வழிக்குக் கொண்டு வருவார் என்றுதான் சூபிமன்ஜிலில் மத்றஸா ஆரம்பித்து, அவரை ஓதிக் கொடுக்க வைத்தோம். 2, 3 ஆயிரம் கொடுக்கிறதாக சொன்னதற்காக இவர் விரும்புகிறதானால், இவருக்கு மார்க்கப் பற்றும் பக்தியும் என்ன இருக்கும்? இவரை நம்பி, எப்படி மத்ரஸாவை நடத்துகிறது?

பாறூக் மவுலவி, உங்களிடம் சொன்ன இந்த விசயத்தைப் பார்த்ததும் என் மனம் சோர்வடைந்து விட்டது. நம் பிள்ளைகள் எல்லோருடைய மனமும், சோர்வடைந்து விடும். அவர் பேரிலிருந்த பற்றுதல் அறுந்து விட்டது. 2, 3 ஆயிரத்திற்காக மார்க்கத்திற்கு முரணாக உதவப் போகிறாரே? கொஞ்சம் ரோஷமாவது இருந்தால், தனக்கு இம்சை கொடுத்து, அவமரியாதைப் படுத்தி விரட்டிவிட்டவருடன் மனம் ஒப்பி பேசத்தானும் செய்யலாமா? பாறூக் அப்படிப் போனால், அவருக்கு தீனுக்கும், துன்யாவுக்கம் கஷ்டமாகத்தான் முடியும்.

ஹாஜியார், நீங்கள் ஏ ன் அப்படியானால் எனக்கும் பிரியம்தான் என்று சொல்ல வேண்டும்? எப்படிச் சேர்ந்தாலும் அவருக்கு ஒத்துழைப்புத்தானே! மார்;க்கத்திற்கு முரணான பிரசாரத்திற்கு ஒத்துழைப்பது சரியா? 'என்னுடைய அபிப்பிராயம் அவருடன் எவ்விதத்திலும் ஒத்துழைக்கக் கூடாது. உங்கள் விருப்பம்போல் நீங்கள் எப்படியும் செய்யுங்கள் என்று ஒரே வார்த்தையாகச் சொல்ல வேண்டியதுதானே!

'சேர்ந்து இன்னின்னபடி செய்து கொள்' என்று சொல்லாமல் 'என்னுடைய அபிப்பிராயம் நீ சேரக் கூடாது. உமக்கு சேரவேண்டும் என்று அபிப்பிராயம் இருந்தால் சேர்ந்து கொள்ளும்' என்று துணிந்து சொல்லிவிட்டால் நமக்கென்ன கஷ்டம் வந்துவிடும்?

'அப்படி அவர் பதுரிய்யாவில் ஹதீது சொன்னால் நமக்கு நல்லதில்லை. நம்பிள்ளைகளுக்கும் மன வெறுப்புத்தான். தாங்கள் சொல்லி நிறுத்திவிட்டால், எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்' என்று எழுதியிருந்தீர்கள்.

அவர், உங்களிடம் வந்து சொன்னதுபோல், என்னிடம் வந்து சொல்லவில்லையே? தபால் எழுதியாவது கேட்கவுமில்லையே! அவர் சிறுபிள்ளையா? இதுவும் தெரியாதா? தன்னை மரியாதையில்லாமல் வெளியே துரத்திவிட்டவரிடத்திலேயா போவது என்று. ரோசத்தையும் பொருட்படுத்தாமல் 2,3 ஆயிரம் பணத்திற்காக வேண்டி, தனக்காக வேண்டி ஒரு மத்ரஸாவை உண்டாக்கி, தனக்குப் புகலிடம் அமைத்துக் கொடுத்த மக்களுக்கு வருத்தம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று றஊப்புடன் சேரப்போகிறவரை நான் போகாதே என்று தடுத்து தபால்….


தபால் எண் 2.

30-6-1982

அன்பிற்குரிய ஜெயினுல் ஆபிதீன் ஹாஜியார் அவர்களுக்கு,
அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

பாறூக் மௌலவியை றஊப் மவுலவி அவருடைய மதரஸாவை விட்டும் துரத்திவிட்டபின், பாறூக்குக்கு எங்குமே ஓதிக் கொடுக்க இடம் கிடைக்காமலும், ரஊபுக்கு விரோதமானவர்கள் 'பாறூக் கெட்ட கொள்கைக் காரர்' என்று லிபிய அரசாங்கத்திற்கு பெற்றிசன் போட்டதனால், லிபிய அரசாங்கத்திலும் வேலைவாய்ப்பு இல்லாமலும், பாறூக் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில்,-

அவருக்காகவே, அவரே ஓதிக் கொடுக்க வேண்டுமென்று அவருடைய சம்மதத்தின் பேரில்தான் நம் மத்ரஸாவை ஆரம்பித்தோம்.

மத்றஸா நன்றாக நடந்து கொண்டிருக்கும்போது, மத்றஸா நடக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணமோ, அல்லது பாறூக்கை வேலையில்லாமல் கஷ்டப்பட வைக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலோ றஊப் பாறூக்குக்கு முன் நடந்தவற்றை எல்லாம் மறந்து விட வேண்டும். என் மத்ரஸாவுக்கு வா. கூடுதலான சம்பளம் தருகிறேன் என்று பலமுறை தபால் எழுதியும், நேரில் கண்டும் ஆசை வார்த்தை சொன்னார்.

கடைசியாக 'றமலானில் ஹதீது சொல் 4000 தருகிறோம்' என்று ஆசையூட்டினார். பாறூக்கும் அதில் மருண்ட மாதிரி உங்களிடமும் சொன்னதாக நீங்கள் தபால் எழுதியிருந்தீர்கள். பாறூக் எனக்கும் தபால எழுதினார்.

நீங்கள் எனக்கு எழுதிய தபாலுக்கு நான் பதில் எழுதி, அதை பாறு{க்கிடம் காட்டும்படி எழுதியிருந்தேன். நீங்கள் 17-6-82 இல் எழுதிய தபாலில், 'நீங்கள் எழுதிய தபாலை பாறூக் மௌலவியிடம் காட்டியதும், றஊப் மவுலவிக்கு நான் உங்களுடைய பள்ளியில் ஹதீது சொல்ல மாட்டேன் என்று கடிதம் கொடுத்து விட்டதாகவும் என்குக் கடிதம் எழுதினதாக சொன்னார் என்றும் எழுதியிருந்தீர்கள்.

பாறூக் மன்னிப்புத் தேடி எனக்கு எழுதின தபாலில் 'வாப்பா அவர்களே, றஊபின் மீது கொண்ட அன்பினாலும் நான் ஹதீது சொல்ல முனையவில்லை. பணத்திற்காகவும் நான் விரும்பவில்லை. எனக்குத் தங்களைவிட பணம் பெரிதல்ல. எனது உயிரினும் மேலாக உங்களை மதிக்கிறேன். என்மீது தங்களுக்கிருந்த பாசம் போய்விட்டதாக எழுதியிருந்ததைப் பார்த்தபோது எனக்கு உணவு இறங்கவில்லை. றஊபை தீனுக்காகவே நாம் வெறுக்கிறோம். மடத்தனமாக இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டதால், நான் மிகவும் மனவருத்தம் அடைகிறேன்.

'தங்களின் கடிதம் பார்த்தவுடன் உடனடியாக பத்ரிய்யா கமிற்றியாருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன். றமழானில் ஹதீது சொல்வதற்கு நான் விரும்பவில்லை. எனக்கும் பத்றிய்யாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அறிவித்துவிட்டேன்.

தேவரீர் வாப்பா அவர்களே இந்த விடயத்தால் எனது குடும்பத்தினர்களை பகைத்து விட்டேன். பரவாயில்லை. எனக்கு உங்கள் பொருத்தமே பெரிது. எனக்காக உங்கள் மனம் நொந்து விட்டது. இந்தப் பாவியை மன்னியுங்கள். கண்ணீர் சிந்தியவனாக இந்தக் கடிதம் வரைகிறேன். உங்கள் இரு பாதங்களையும் தலையில் வைத்து கேட்கிறேன். என்மீது ஏற்பட்ட மனக்கசப்பை நீக்கி விடுங்கள். இனிமேலும் இப்படியான தவறு நடைபெறாமலிருக்க துஆ செய்யுங்கள்' என்று எழுதியிருந்தார்.

அவர் எழுதியதுபோல் பத்திய்யாகாரர்களுக்கு கடிதம் எழுதியிருபார். பின்னர் மத்றஸா வசூலுக்காக நம்பிள்ளைகளுடன் இங்கு வந்தார்கள். 10 ஆயிரம் மட்டில் வசூல் என்'றும் சொல்லிவிட்டு நோன்புக்கு முன் ஊர் போய்விட்டார்கள்.

பின்னர், நோன்பு 2 மட்டில் பாறூக் வந்தார். 'பதுரிய்யாவில் ஹதீது சொல்லுங்கள். அவர்களைப் பகைக்கக் கூடாது என்று வாப்பா, உம்மா என்னை நிர்ப்பந்திக்கிறார்கள். இரவெல்லாம் இப்படியே நிர்பந்தப்படுத்திச் சொன்னார்கள். நான் வாப்பா அவர்களிடம் கேட்டு விட்டு வருகிறேன் என்று வந்து விட்டேன்' என்று கலவையாகவும், மனம் தத்தளித்தவராகவும் சொன்னார். அவருக்கு நல்லபடி தேறுதல் சொல்லி, பத்றியாகாரருடைய வலையில் சிக்கிவிடாதீர்கள். அங்கு போகாதீர்கள். வீட்டில் தொந்தரவு செய்கிறதாயிருந்தால், கொழும்புக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, இங்கு வாருங்கள். நோன்பில் இங்கு நின்றுவிட்டு, நோன்பு கழித்து ஊர் போகலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அவருடைய நிலை என்ன? தெரியவில்லை. அவர் பத்ரிய்யாவில் சேர்ந்து விட்டாரா, இல்லையா? விபரம் எழுதுங்கள். துஆ சலாம்.
                                                                         ……………………….

இச்சமயத்தில் மௌலவி பாறூக் அவர்கள் ஷெய்குனா அவர்களிடம் பைஅத்து பெற்றுக் கொண்டார். ஷெய்குனா அவர்கள் பைஅத்து கொடுக்கும்போதே ரஊப் மௌலவியிடம் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று வாக்குறுதியடன் கூடிய பைஅத்து கொடுத்தனர். இந்நிலையில் ஷெய்குனா அவர்களுக்கு பாறூக் மௌலவி கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தின் நகல்கள் இதோ:

பாறூக் மவுலவி ஷெய்குனா அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள்:
கடித எண்: 1

……………………………………………………………….
……………………………………………………………….
நேற்று 15ம் திகதி செவ்வாய் கிழமைத மத்ரசாவுக்கு லீவு வழங்கினோம். பத்ரிய்யா கமிட்டியினரும் அதைச் சார்ந்த எனது குடும்பத்தினர்களில் சிலரும் என்னிடம் வந்து எதிர்வரும் றமழானில் பகலில் பத்ரியாவில் ஹதீது சொல்ல வேண்டுமென்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். றவூபு மௌலவி இந்தியா செல்வதாகவும் சொன்னார்கள். புஹாரி மஜ்லிஸும் ஜும்ஆவும் பிரச்சனை சம்பந்தமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாக இருப்பதால் அதில் நீங்கள் கலந்து கொள்ளாததை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆயினும் றமழானில் ஹதீது சொல்லும் நிகழ்ச்சி 35 வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட விஷயம். அதற்கும் பிரடச்சினைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே நீங்கள் கல்வி படித்த பத்ரிய்யா தைக்காவை புறக்கணிக்காமல் கட்டாயம் ஹதீது சொல்ல வேண்டுமென்று என்னை பிடிக்கிறார்கள். றவூபுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அவர் இந்தியா சென்று விடுவார். நாங்கள் 4000 ரூபாய் தருவோம் என்றும் வாக்களிக்கிறார்கள். எனது சூழலைப் பொறுத்தவரையில் எனக்கு பெரும் தர்ம சங்கடமாக இருக்கிறது. நமது பிள்ளைகளில் சிலர் இதை விரும்புவதாக தெரியவில்லை. மறுத்தால் எனது வீட்டுச் சூழலில் உள்ளவர்கள் என்னை வெறுக்கும் நிலையும் இருக்கிறது. எனவே தேவரீர் வாப்பா அவர்கள் கடிதம் கிடைத்ததும் தயவு செய்து உடனடியாக இதற்குரிய முடிவு எப்படி சொல்வது என்பதை எனக்கு எனது வீட்டு விலாசத்திற்கு அறிவிக்கவும். வெள்ளி மாலை கடிதம் கிடைக்கும் வகையில் அனுப்பினால் மிக நல்லது. அன்ஸா அல்லாஹ் சனி காலை இங்கிருந்து மத்ரசா வசூலுக்காக புறப்பட்டு பதுளை சென்று திங்கட்கிழமை கொழும்புக்கு வருவதாக முடிவு செய்துள்ளார்கள். திங்கள் காலை நானும் ளு.மு. ஹாஜியார் அவர்களும் ஹபீபா ஹாஜியாருடைய மகனும் கொழும்பு வருவோம். வாப்பா அவர்களின் பதிலை எதிர்பார்த்து முடிக்கிறேன்.
……………….

கடித எண்: 2
                                      17-6-1982
…………….
தேவரீர் வாப்பா அவர்களே! நான் உங்களின் சொல்படியே நடந்து கொண்டிருப்பவன். நீங்கள் தடுப்பவைகளை விலக்கி நடப்பவன். உங்களின் திருப்பொருத்தம் கிடைக்கவே ஹித்மத் செய்யும் உங்களின் அடிமை. இன்று ஹபீபா ஹாஜியார் அவர்களுக்கு தாங்கள் அனுப்பியிருந்த கடிதத்தைப் பார்வையிட்டபோது எனது உடம்பு பயத்தால் நடிங்கிவிட்டது. உங்களின் மனதுக்கு கவலையை பாவியாகிய நான் ஏற்படுத்திவிட்டேனே என நான் மிகவும் கவலையடைகிறேன். என்னை முதலாவது மன்னிக்கும்படி தங்களிடம் வேண்டுகிறேன். பத்ரிய்யா கமிட்டியினர் என்னிடம் றமழானில் ஹதீது சொல்வதர்க்கு அழைத்தபோது தாங்களிடம் கேட்டு தங்களின் விருப்பப்படியே நடப்பதாக அவர்களுக்கு கூறினேன். தங்களிடம் வசூலுக்காக கொழும்பு வரும்போது கேட்கலாம் என நான் நினைத்து இருந்தேன். (16) ம் தேதி புதன் வசூலுக்குப் பிறப்படுவதாக முடிவு செய்திருந்தார்கள். இதனால்தான் கடிதமூலம் தங்களிடம் உத்தரவு கேட்காமல் நேரடியாகவே கேட்கலாம் என எண்ணியிருந்தேன். இதற்கிடையில் ஹபீபா ஹாஜியாரை சந்தித்து செய்தியை கூறினேன். அவரும் நமது கொள்கையை பேசலாம், வாப்பா அவர்களிடம் கேட்டு செய்யுங்கள் என்றார். நான் வாப்பா அவர்களிடம் கேட்காமல் முடிவு சொல்ல மாட்டேன். வாப்பா அவர்களிடம் கேட்டுத்தான் முடிவு சொல்வேன் என்று கூறினேன். நான் புதன் கொழும்பு வந்து கேட்கலாம் என்றிருந்தேன். (16) நேற்று சனிக்கிழமை (19)ல் வசூலலுக்குப் போவதாக முடிவு செய்தார்கள். உடனே வாப்பா அவர்களுக்கு நேற்று ஒரு கடிதம் போட்டேன். வாப்பா அவர்களே! றவூபு அவனின் மீது கொண்ட அன்பினால் ஹதீது சொல்ல நான் முனையவில்லை. நமது கொள்கையை பேசலாம் என்ற எண்ணத்திலேயேதான் ஹதீது சொல்ல மனம் விரும்பினேன். முடிவு செய்யவில்லை. பணத்திற்காகவும் நான் விரும்பவில்லை. எனக்கு தங்களைவிட பணம் பெரிதல்ல. எனது உயிரிலும் மேலாக உங்களை மதிக்கிறேன். என்மீது தாங்களுக்கு இருந்த பாசம் போய்விட்டதாக எழுதியிருந்ததைப் பார்த்த போது எனக்கு உணவு கூட இன்று இறங்கவில்லை. றவூபை நாம் வெறுக்கிறோம். மடத்தனமாக இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டதால் நான் மிகவும் மனவருத்தம் அடைந்தேன். எனது சூழலில் வாழ்பவர்களின் கரச்சலை பொறுத்தே நான் விரும்பினேன். தங்களின் கடிதம் பார்த்தவுடன் உடனடியாக நான் பத்ரிய்யா கமிட்டியினருக்கு கடிதம் அனுப்பி விட்டேன். றமழானில் ஹதீது சொல்வதற்கு நான் விரும்பவில்லை எனவும், எனக்கும் பத்ரிய்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அறிவித்து விட்டேன். எனவே தேவரீர் வாப்பா அவர்களே! இந்த விடயத்தால் எனது குடும்பத்தினர்களை பகைத்துவிட்டேன். பறவாயில்லை. எனக்கு உங்கள் பொருத்தமே பெரிது. எனக்காக உங்கள் மனம் நொந்து விட்டது. இந்தப் பாவியை மன்னியுங்கள். நான் நேரில் சந்திப்பதை முன்வைத்தே கடிமூலம் ஏற்கனே கேட்கவில்லை. இதையும் மன்னிக்கவும். எனது ஹக்கில் துஆ செய்யுங்கள். கண்ணீர் சிந்தியவனாக இக்கடிதம் வரைகிறேன். உங்கள் இரு பாதங்களையும் தலையில் வைத்து கேட்கிறேன். என்மீது ஏற்பட்ட மனக்கசப்பை நீக்கி விடுங்கள். இனிமேலும் இப்படியான தவறு ஏற்படாமலிருக்க துஆ செய்யுங்கள். உங்களை இன்ஷாஅல்லாஹ் திங்கட்கிழமை சந்தித்து காலில் விழுந்த பிறகுதான் நான் நிம்மதி அடைவேன். இன்ஷாஅல்லாஹ் தங்களை திங்கட்கிழமை சந்திக்கிறேன்.

……………………………
…………………………….
……………………………
என்று வேண்டி முடிக்கிறேன்.
…………………….
முகம்மது பாறுக்
கா-குடி.

இதற்கு ஷெய்குனா அவர்கள் ஏற்கனவே ஜெய்னுல் ஆபிதீன் ஹாஜியார் அவர்கள் மூலமாக பதில் சொல்லிவிட்டார்கள்.  தன் ஷெய்கை மதித்து அவர்களின் வாக்குறுiதியக் காப்பாறுபவர் என்றால்  உண்மையில் அவர் இதை எழுதிக் கேட்டிருக்கவே கூடாது. ஏனெனில் ஷெய்கு அவர்கள்தான் ரஊபிடம் தொடர்பு வைக்க கூடாது என்று வாக்குறுதி வாங்கியுள்ளார்களே! அதன்பிறகு இவர் ஏன் இதைப் பற்றி எழுதிக் கேட்க வேண்டும்.

ஷெய்குனா அவர்களின் வபாத்திற்கு பின்பும் அவர் ஷெய்குவின் கட்டளைக்கு மாற்றமாக நடந்து கொண்டு ரஊப் மௌலவியிடம் தொடர்பு கொண்டிருந்தார். அவரின் கூட்டத்தாராகவே பாறூக் மௌலவி ஆகிவிட்டார். இதைப் பற்றி ரஊபும் தன்னுடைய ஹமவோஸ்த் என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நாம் முன்னால் எடுத்துக் காட்டினோம். ஷெய்குனா சொன்ன வாக்கு பிரகாரம் ரஊப் மௌலவிக்கும் பாறூக்கு மௌலவிக்கும் இறுதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இறுதியில் பாறூக்கு மௌலவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். ஷெய்குனாவின் வாக்குப்படி அவரின் இறுதிமுடிவு மோசமாகி போய்விட்டது. அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும். ஷெய்குக்கு கட்டுப்பட்டு நடக்க கூடிய தவ்ஃபீக்கை அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாக!

ஷெய்குனா அவர்கள் ரஊப் மௌலவியின் நடவடிக்கையை கண்டித்து தமது முரீதீன்களுக்கு சொல்வதைக் கேள்விபட்ட ரஊப் மௌலவி தாம் தலைவராக இருக்கும் அமைப்பான இஸ்லாமிய மெஞ்ஞான பேரவை மூலம் கொஞ்சம் கூட மரியாதையும், நாகரீகமும் இல்லாமல் தமககு ஞானம் போதித்து தந்த ஞானப் பிதாவுக்கு தரும் மரியாதையை (?)அவர் எழுதிய கடிதத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 
ஷெய்குனா அவர்களின் வழியை முழுமையாக பின்பற்றிய ஷெய்குனா அவர்களின் கலீபா நாயகம் அல் ஆரிபு பில்லாஹ் ஸெய்யிது ஸாதாத் மௌலவி ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி காதிரி ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் தங்கள் முரீதீன்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் ரஊப் மௌலவி, பாறூக் மௌலவியைப் பற்றி எச்சரித்து வெளியிட்ட நோட்டீஸ் பிரதி: