பத்ரு ஸஹாபாக்களின் சிறப்புகள்

ஷுஹதாக்களின் மகத்துவம்:

وَلَا تحسبن الذين قتلوا فى سبيل الله اموانا بل احيآء عند ربهم يرزقون

‘அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில் உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம் கேட்;ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக கீழ்காணும் ஹதீதை குறிப்பிட்டார்கள்:

‘ஷுஹதாக்களுடைய உயிர்களானது சுவர்க்கத்தில் உள்ள பச்சை நிற பறவையின் வயிற்றில் வைக்கப்பட்டு, சுவர்க்கத்தில் நினைத்த இடங்களை சுற்றி வரும். பிறகு இறைவனின் சிம்மாசனத்தில் தொங்க விடப்பட்ட தங்கக் கூண்டில் தஞ்சமடையும் என்று கூறினார்கள். இத்தகைய மாபெரும் பாக்கியம் பத்ரு ஸஹாபாக்களுக்கும் கிடைத்தது.

நூல்: புகாரி, முஸ்லிம்.

மேலும் ஷுஹதாக்களைப் பற்றி நபிகளார், ‘ ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களை கொண்டு கண்ணியம் செய்திருக்கிறான். அதுபோன்ற சிறப்பை நான் உட்பட எந்த நபிமாரும் பெறவில்லை. அவையாவன:

1.எல்லா நபிமார்களின் உயிர்களையும் மௌத்தின் அதிபதி இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான் கைப்பற்றுவார்கள். ஆனால் ஷுஹதாக்களின் உயிர்களை அல்லாஹ்வே கைப்பற்றுவான்.

2.அனைத்து நபிமார்களும் மரணமானபின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும் குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள் குளிப்பாட்டப்பட மாட்டார்கள். வெட்டுண்ட காயங்களுடன் அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர் பக்கம் அவர்கள் தேவையாக மாட்டார்கள்.

3. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு கஃபனிடப்படுவார்கள். நானும் கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள். அவர்கள் போரில் அணிந்திருந்த உடைகளுடனே அடக்கம் செய்யப்படுவார்கள்.

4. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு அவர்களை மரணித்தவர்கள் என்று கூறப்படும். நானும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள் மரணித்து விட்டால் அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என்று ஒரு திருமறைவசனத்திலும், மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள் என்று மேற்கூறிய வசனத்திலும் இறைவனே கூறுகிறான்.

5. எல்லா நபிமார்களுக்கும் மறுமைநாளில் சிபாரிசு செய்யும் உரிமை வழங்கப்படும். ஆனால் ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும் சிபாரிசு செய்து கொண்டு இருக்கிறார்கள் என நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். –நூல்: தப்ஸீர் குர்துபி 1518ஃ3

சிறிது நேரம் இறைவன் பாதையில் சண்டை செய்வது 50 தடவை நபிலான ஹஜ்ஜு செய்வதை விட சிறந்தது. – அல்ஹதீது.

பத்ரு போர் நடக்க காரணங்கள்:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் இருந்த போது அவர்களுடன் முனாபிக்குகள் என்னும் நயவஞ்சகர்கள் (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள்) ஸஹாபாக்கள் போல் நடித்து கொண்டு இருந்தார்கள். இவர்கள் மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை நோக்கி படை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொய்யான செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் மக்கத்து குறைஷிகள் போருக்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதுசமயத்தில் குறைஷித் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யான் மக்காவாசிகளான முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக சிரியா சென்று பெரும் பொருட்களோடு மக்கா திரும்பிக் கொண்டிருந்தார். அவரது குழுவை வழிமறித்து முஸ்லிம்கள் கொள்ளை அடிக்கப் போவதாக வதந்தி நிலவியது. இதனையறிந்த அபூசுப்யான் மக்காவிற்கு தூதனுப்பி பாதுகாப்பு கேட்டிருந்தார். இவர்கள் மக்காவிற்கு மதீனாவின் வழியாக செல்லும் வழமையான வழியை விட்டு வழியை மாற்றி செங்கடல் வழியாக சென்று மக்காவை சென்றடைந்தனர்.

வர்த்தகக் குழுவிற்கு பாதுகாப்பு தேவை என்ற செய்தி குறைஷி காபிர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைய ஆயிரம் பேர் கொண்ட படையை திரட்டி வர்த்தக பாதுகாப்புக் குழு என்ற பெயரில் புறப்பட்டார்கள். எவ்வித இடையூறுமின்றி வழியை மாற்றி மக்கா சென்றடைந்த அபூசுப்யான் ‘மக்காவிற்கு திரும்பி விடுங்கள்’ என்று செய்தியனுப்பினார். அபூஜஹல் அதை நிராகரித்து பத்ரில் படையை இறக்கினான்.

குறைஷிகள் படை திரட்டி வருகிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் பெருமானார் அவர்களும் தற்பாதுகாப்புக்காக 313 ஸஹாபாக்களைக் கொண்டு படை ஏற்படுத்தி புறப்பட்டார்கள். படை பத்ரில் பாளையம் இறங்கியது. இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமலான் பிறை 17 அன்று நடைபெற்றது. இஸ்லாத்தில் நடைபெற்ற முதல் போர் இது.

முஸ்லிம்களின் படைப்பிரிவில் 3 குதிரைகளும், 9 உருக்குச் சட்டைகளும், 8 வாளாயுதங்களும், 70 ஒட்டகங்களும் இருந்தன.

எதிரிகள் படையில் 100 குதிரைகளும், 700 ஒட்டகங்களும் ஏராளமான யுத்த தளவாடங்களும் இருந்தன.

இரண்டு தரப்பினர்களின் பலங்களையும் சீர்தூக்கி பார்த்து விட்டு, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்றுக் கொண்டான். இப்போரில் சொந்த பந்தம் என்று பார்க்காமல் முஸ்லிம்கள், காபிர்கள் என்றே பார்க்கப்பட்டது.

நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். போhக்களத்தில் ஐவேளைத்தொழுகை,திக்ரு, பிக்ரு, தராவீஹ் தொழுகை மற்ற இபாதத்துக்கள் தவறாமல் நடைபெற்று வந்தன.

இப்போரில் அல்லாஹ் வெற்றியை முஸ்லிம்களுக்கு கொடுத்தான். முஸ்லிம்கள் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். அவர்களின் திருநாமங்கள்:

1. முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்கதிர் ரலியல்லாஹு அன்ஹு
2. ரபீஃஉ இப்னு முஅல்லா ரலியல்லாஹு அன்ஹு
3. ஸஃது இப்னு கய்சமா ரலியல்லாஹு அன்ஹு
4. யஜீது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
5. உபைதா இப்னு ஹாரிது ரலியல்லாஹு அன்ஹு
6. ஆகில் இப்னு புகைரு ரலியல்லாஹு அன்ஹு
7. உமைர் இப்னு ஹுமாம் ரலியல்லாஹு அன்ஹு
8. முஅவ்விது இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு
9. திஷ்ஷிமாலைன் இப்னு அம்து அம்ரு ரலியல்லாஹு அன்ஹு
10. மிஹ்ஜா இப்னு சாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு
11. உமைர் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு
12. ஹாரிஸா இப்னு சுராக்கா ரலியல்லாஹு அன்ஹு
13. சஃப்வான் இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு
14. அவ்ஃப் இப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு.

குறைஷிக் காபிர்களில் 70 பேர் மடிந்தார்கள். இந்த சடலங்களை பத்ரு என்ற கிணற்றில் போட்டு மறைக்கும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அதன்படி செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கிணற்றுக்கு சென்று செத்த மய்யித்துகளிடம் பேசினார்கள்.

அபூஜஹலே, உமையாவே, உத்பாவே எங்களுக்கு எங்கள் நாயன் சொன்ன வாக்குறுதியை உண்மையாகவே பெற்றுக் கொண்டோம். உங்களின் கடவுள்களின் வாக்குறுதியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா? நீங்கள் எங்களுக்கு செய்த பலவித இன்னல்கள் துன்பங்கள் இவைகளுக்குரிய தண்டனையை இப்பொழுது பெறுகிறீர்கள். இப்பொழுதாவது என்னைப் பற்;றியும் நான் சொன்ன ஆண்டவனைப் பற்றியும் விளங்கிக் கொண்டீர்களா? என்று கேட்ட போது,

அவர்கள் அருகில் நின்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகமே! மரணித்து விட்டவர்கள் எப்படி உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள்? என்று வினவ அதற்கு நாயகம் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல முடியும். அவர்களுக்கு பதிலுரைக்க முடியாது. இதுதான் உங்களிருவருக்கும் உள்ள வித்தியாசம் என்று சொன்னார்கள்.

பத்ரில் ஏற்பட்ட சம்பவங்கள்:

ஹழரத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு யுத்தம் நிகழ்வதற்கு முன் அந்தப் போரில் இறந்து போகக் கூடிய சிலரின் பெயர்களையும் அவர்கள் பத்ரு களத்தில் இன்ஷாஅல்லாஹ் இன்னின்ன இடங்களில் இறப்பார்கள் என்பதையும் தங்களின் கையிலுள்ள அசாவினால் கோடு போட்டுக் காட்டினார்கள்.

இதை ஹழரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முதல் நாள் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளில் யார் யார் எவ்விடங்களில் கொல்லப்படுவார்கள் என்பதைக் கோடு போட்டுக் காண்பித்தார்களோ அவரவர்கள் அவ்வவ்விடங்களில் கொல்லப்பட்டார்கள். இதை என் கண்ணால் பார்த்தேன் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு துரும்பளவாவது கூட கொல்லப்பட்ட இடங்கள் மாறவில்லை. இதுவும் பத்ரு யுத்தத்தில் நடந்த மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாகும். – முஸ்லிம்.

பத்ரு யுத்தத்தின் போது நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , ஒரு கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தமது தோழர்களை நோக்கி, ‘எழுந்திருப்பீராக! வானத்தையும், பூமியையும் விட விசாலமானதும் தக்வா கொண்டவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்டதுமான சுவர்க்கத்தின்பால் விரைவீராக!’ என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஹழ்ரத் உமைர் இப்னு ஹம்மாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஆஹா, ஆஹா’ என்றனர். அண்ணலார் அவர்கள் உமைரை நோக்கி, எதற்காக ஆஹா ஆஹா என்று கூறினீர் என்றார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அத்தகையவர்களில் நானும் ஒருவனாக இருக்க விருப்பப்படுகின்றேன்’ என்று பதில் கூறினார். உடனே அண்ணலார் அவர்கள் நீரும் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்’ என்றார்கள்.

ஹஜ்ரத் உமைர் ரலியல்லாஹு அன்ஹு ஒரு பையிலிருந்து சில பேரீத்தங்கனிகளைப் பசியின் கொடுமையைத் தணிக்கத் தின்றார்கள். ஓரிரண்டு கனிகளைத் தின்றதும் அவர்கள் கையிலிருக்கும் கனிகளைத் தின்று தீர்க்கும் வரை காத்திருப்பதென்பது இவ்வுலகில் நீண்ட காலம் ஜீவித்திருப்பதைப் போலிருக்கிறது. எனக்கு அதுவரை என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்’ என்று கூறியவாறு கையிலிருந்த கனிகளை தூர எறிந்து விட்டு கரத்திலே வாளேந்தி பத்ரு போரிலே உடலை விட்டு உயிர் பிரியும் வரை போராடி ஷஹீதாய் விட்டார்கள்.

பத்ரு போரில் முதன் முதலாக ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாகும். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில் நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள். 1. எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி 2. லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம். 3. பிலால் ரலியல்லாஹு அன்ஹு 4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான மிஹ்ஜஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் எனக் கூறினார்கள். – நூல்: தப்ஸீர் இப்னு கதீர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய மகனான ஸஃது இப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்’ என வேண்டினார்கள். அதற்கு ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே! இது சுகப் பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை. சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரே வந்தது. இவர்கள் பத்ருப் போருக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் புறப்பட்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை இறைவன் அவர்களுக்கு வழங்கினான். அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள்.

பத்ரீன்களின் திருநாமத்தின் பிரயோஜனங்கள்:

இமாம் புகாரி நாயகம் அவர்கள் தங்கள் புகாரி கிரந்தத்தில் பத்ரு போர் பற்றிய பாடத்தில் அந்தப் போரில் கலந்துகொண்டவர்கள் அனைவர்கள் பெயரையும் தொகுத்து வழங்கியுள்ளார்கள். அந்தப் பெயர்களை நாம் படிக்கும் பொழுது நம்முடைய நாட்டங்களும், கேட்கும் துஆக்களும் உடனே ஒப்புக் கொள்ளப்படும். இது அனுபவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

                                                                                      -நூல்: தாரீகுல் கமீஸ் 402/1

முஅவ்விது இப்னு அஃப்ராவு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ரு போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களில் ஒருவராகும். இவர்களின் மகள் ருபைய்யி உபின்த் முஅவ்விது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் ஒரு நாள் லுஹருக்கு முன்பு ‘கைலூலா’ தூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன். அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை தொந்தரவு செய்தது. என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு பேப்பர் துண்டு பறந்து வந்து என் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவத்தின் அருகில் விழுந்தது. அதை அந்த உருவம் படித்துப் பார்த்தது. அதில் பிஸ்மி எழுதப்பட்டு அதன்பின் ‘இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமையின் பக்கம் எழுதப்பட்டதாகும். ஸாலிஹான (பத்ரு ஸஹாபியின்) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு எந்த உரிமையுமில்லை’ என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்ததும் கோபத்தில் என் முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன் வேதனையை நான் மரணிக்கும் வரை அனுபவித்து வந்தேன் எனக் கூறுகிறார்கள்.

இந்த ஹதீதை பைஹகீ இமாம் தன்னுடைய நூலில் குறிப்பிட்’டு, பிறகு தான் எழுதிய அடிக்குறிப்பில் மேல் கூறிய நிகழ்ச்சியில் பத்ரு ஸஹாபியுடைய பரக்கத்தினால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது எனக் கூறுகிறார்கள்.                                                நூல்: பைஹகீ 115/7

பத்ரு ஸஹாபாக்களின் பெயர்கள் இருக்;கும் இடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்றும், அவர்களின் திருநாமங்களை அவ்ராதாக விடாமல் முறையாக ஓதி வருபவருக்கு விலாயத்தின் அந்தஸ்து கிடைக்கிறது என்றும் மகான்கள் கூறியிருக்கிறார்கள். ஏராளமான சம்பவங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் பத்ரு ஸஹாபாக்களின் பொருட்டால் அனைத்து நாட்டங்களையும் நிறைவேற்றித் தருவானாக! ஆமீன்.

முற்றும்.

ஜின்கள் பற்றி இஸ்லாம்

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.

இந்தவசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டுநடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும்ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்புஇருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும்இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில்சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜின்என்ற அரபு பதத்திற்கு – மறைவானது – என்று பொருள். ஜின் என்ற படைப்புகண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிற்கு அந்தப் பெயர் வந்தது.சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப்பெற்றதாகும்.

மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலக்குகள், மனிதர்கள் போன்றில்லாமல் தீய சுபாவம் மிகைத்தவர்களாக உள்ளனர். மனிதனின் பார்வையில் படாமல் மறைந்திருப்பதால் இவர்களை ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இக்கருத்தினை இப்னு அகீல் பின்வருமாறு கூறுகின்றார்.

“ஜின்கள் மனிதனின் கண்ணில் படாமலும் மறைந்து வாழ்வதாலுமே இவர்களை ஜின் என்று கூறப்படுகின்றது. தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு “ஜனீன்“ என்று கூறப்படுவதற்கு அக்குழந்தை பிறர் கண்ணில் படாமல் இருப்பதே காரணமாகும்.

ஆதாரம் : உகாமுல் மர்ஜான் பக்கம் – 07

ஜின்கள் படைக்கப்பட்ட விதம்

மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பேஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண்என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ. وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن قَبْلُ مِن نَّارِ السَّمُومِ

ஓசை தரக்கூடிய கருப்பான களிமண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். அல்குர்ஆன்(15 : 26,27)

وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ

‘நான்உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்ததுஎது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால்படைத்தாய்.அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)

அல்லாஹ் ஆதமைப் படைத்து அவனுக்கு சுஜூது செய்ய மலக்குகளை சொன்ன போது இப்லீஸ் மறுத்தான். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் வர்க்கத்தை சார்ந்தவனல்லவா? அவன் ஏன் மலக்குமார்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற சிந்தனைக்கு நமது இமாம்கள் தப்ஸீரில் விரிவாக விளக்கியுள்ளார்கள்.

இப்லீஸ் தன் வணக்கத்தின் பலத்தால் தரஜா உயர்த்தப்பட்டு மலக்குகளோடு சேர்ந்துவிட்டான். அதனால் அல்லாஹ் கட்டளையிட்டபோது அதை இப்லீஸும் கேட்டான். ஆனால் அவனது மூலம் நெருப்பாக இருந்தது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தான். காபிராகி விட்டான் என்று அருமையாக விளக்கமளித்துள்ளார்கள்.

ஜின்களின் உருவம்

நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்த போது  அபூ லுபாபா ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் என்னைக் கூப்பிட்டு, “அதைக் கொல்லாதீர்கள்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு  வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : புகாரி (3298)

இமாம் இப்னு அப்துல் பர்ரு என்பவர் பின்வருமாறு கூறுகி்ன்றார். ஜின்களில் பல தரத்தினர் இருப்பதாக மொழி் வல்லுனர்கள் கூறுகின்றனர். மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவைக்கு ஆமிர் என்றும், சிறு பிள்ளைகளுடன் சேட்டை செய்பவைகளை அர்வாஹ் ஆவிகள் என்றும் அவற்றில் கீழ்த்தரமான அசிங்கமானவைகளை “ஷைத்தான்“ என்றும், அதி ஆற்றல் கொண்டவைகளை “இப்ரீத்“ என்றும் கூறப்படும்.

ஆதாரம் : உகாமுல் மர்ஜான் பக்கம் 08

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ

(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)

ஜின்கள் மூன்று பிரிவினராக இருப்தாக றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

முதல் வகையினர் காற்றில் சஞ்சரிப்பவர்கள். இரண்டாவது வகையினர், பாம்பு, நாய் போன்றவற்றின் உருவில் இருப்பவர்கள். மூன்றாவது வகையினர் ஷரீஅத்தைப் பேணி நடப்பவர்கள்.

ஆதாரம் : தப்றானி, ஹாகீம்

மற்றொரு அறிவிப்பில்…

ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறியுள்ளார்கள்.

1) பாம்பு வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா ரலியல்லாஹு அன்ஹு, ஹாக்கிம்)

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்

நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலியல்லாஹு அன்ஹு) என்னைக் கூப்பிட்டு ‘அதைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.

வஹ்ஹாபிகளின் மூலத் தந்தையானஇப்னு தைமிய்யா கூறுகின்றார்,

ஜின்கள் மனித உருவிலும் மிருகங்களின் உருவிலும் தோன்றும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இதனால் அவை பாம்பு, தேள், ஒட்டகம், மாடு, ஆடு, கழுதை, குதிரை, குருவிகள் (பூனை, நாய்) உள்ளிட்ட உருவில் தோன்றுகின்றனர்.

ஆதாரம் :மஜ்முஉல் பதாவா பாகம் -19, பக்கம் – 44

ஜின்களும் ஷைத்தான்களும் விரும்பிய கோலம் எடுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். பத்று யுத்த களத்தி்ல் ஒரு ஷைத்தான் சுறாக்கா பின் மாலிக் அவர்களின் உருவில் முஷ்ரிகீன்களிடம் சென்று உதவி செய்வதாக வாக்களித்தது. ஹஜரத் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸதகாப் பொருளை காவல்செய்து கொண்டிருக்கும்போது ஷைத்தான் மனித உருவில் வந்து திருடியதும் அவனை அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு கைது செய்தபோது ஆயத்துல் குர்ஷியை ஓதினால் மட்டும் தன்னால் அந்த இடத்தை நெருங்க முடியாது என்று கூறிவிட்டுத் தப்பிச் சென்ற வரலாறு மிகப் பிரபலமானதாகும்.

ஜின்களுக்கும் இறைத்தூதர்கள்

وَلَوْ تَرَىٰ إِذْ وُقِفُوا عَلَىٰ رَبِّهِمْ ۚ قَالَ أَلَيْسَ هَٰذَا بِالْحَقِّ ۚ قَالُوا بَلَىٰ وَرَبِّنَا ۚ قَالَ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

(மறுமைநாளில் இறைவன் ஜின் – மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் – மனித கூட்டத்தாரே!  உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள்வரவில்லையா…என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம்இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல்குர்ஆன் 6:30)

இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள்வந்தார்கள் என்பது முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வருகைக்கு முன்பு தான்.முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின்இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன்மனித – ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும்.

وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا ۖ فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ

(நபியே)இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம்திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள்என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம்சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)

قَالُوا يَا قَوْمَنَا إِنَّا سَمِعْنَا كِتَابًا أُنزِلَ مِن بَعْدِ مُوسَىٰ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِي إِلَى الْحَقِّ وَإِلَىٰ طَرِيقٍ مُّسْتَقِيمٍ

(ஜின்கள்)கூறினார்கள் ‘எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைசெவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்குமுன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் – நேரானமார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது. (அல்குர்ஆன் 46:30)

وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا

அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர் (என்று அந்த ஜின்கூறிற்று) (72-15)

يَا قَوْمَنَا أَجِيبُوا دَاعِيَ اللَّهِ وَآمِنُوا بِهِ يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُجِرْكُم مِّنْ عَذَابٍ أَلِيم

எங்களுடையகூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரைஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான்.நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும்கூறினார்கள் (அல் குர்ஆன் 46:31)

وَمَن لَّا يُجِبْ دَاعِيَ اللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِي الْأَرْضِ وَلَيْسَ لَهُ مِن دُونِهِ أَوْلِيَاءُ ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ

ஆனால்எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை. (அல் குர்ஆன் 46:32)

ஜின்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை சந்தித்த இரவில்அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்டசம்பவத்தையும் – ஜின்களின் காலடி சுவடுகள் – அவர்கள் சமைத்த பாத்திரங்கள் -அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)

ஜின்களின் உணவுகள்

ஜின்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், “அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில்  இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்” என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் (தம் தோழர்களிடம்), “எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : முஸ்லிம் (767)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள். என்னிடம் “நஸீபீன்’ என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், “அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.”என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : புகாரி (3860)

“உங்களில் ஒருவர் சாப்பிடும்போது சிந்துகின்ற உணவில் பட்டுள்ள மண் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்தபின் அதனை சாப்பிடுங்கள். அவற்றை ஷைத்தான்களுக்கு விட்டுவிடாதீர்கள்“

அறிவிப்பவர்:அனஸ்ரலியல்லாஹு அன்ஹு

நூல் :முஸ்லிம்,அபூதாவூத்,அஹ்மது.

உண்ணும்போதும், பருகும்போதும்வலது கையால் உண்ண வேண்டும், பருக வேண்டும். இடது கையால் உண்ணும் பருகும் நபருடன் ஷைத்தானும் சேர்ந்து உண்கின்றான், பருகுகின்றான். வீட்டுக்குள் நுழையும்போதும் உணவு அல்லது பாணம் உட்கொள்ளும்போதும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும். அவ்வாறு செய்தால் இன்று நமக்கு இருப்பிடமில்லை. ஆகாரமுமில்லை என்று ஜின், ஷைத்தான்கள் கூறும்.

இவ்வாறு அல்லாஹ்வி்ன் பெயர் கூறாது வீட்டில் நுழைந்தால் அல்லது உண்டு, பருகினால் ஆனந்தத்துடன் இன்று இருப்பிடமும், ஆகாரமும் கிடைத்து விட்டன என்று பேருவகை கொள்ளும். ஸுப்ஹு தொழாமல் தூங்கும் நபரைப் பற்றிறஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களிடம் கூறப்பட்டது. அப்போது நபியவர்கள் கூறினார்கள்,

“அந்த மனிதனின் இரு காதிலும் ஷைத்தான் சிறுநீர் கழித்திருக்கக் கூடும்“

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு

நூல் :புகாரி, திர்மிதி

ஜின்களின் இருப்பிடங்கள்:

மனிதர்களைப் போன்றே ஜின்களும் சாப்பிடுகின்றனர், குடிக்கி்ன்றனர், திருமணம் முடிக்கின்றனர், சந்ததிகளை உற்பத்தி செய்கின்றனர். மனிதர்களிடமிருக்கும் சமூக கட்டமைப்பைப் போன்ற ஒன்று அவர்களிடமும் உள்ளது. சமய, சமூக பிரிவினைகள் கூட மனிதர்களைப் போன்று அவர்களிடமும் உள்ளது. ஆனால் அவர்களின் உணவு இருப்பிடம் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.

தீய செயல்களைக் கண்டு அவை ஆரவாரம் செய்கின்றன. அதான் சப்தங்கள் திர்குர்ஆன் ஓதும் சப்தங்கள் திக்று முழக்கம் போன்றவற்றால் சகிக்காமல் வெருண்டோடுகின்றனர். அதான் சப்தத்தைக் கேட்டால் காற்றுப் பறக்கப் பறக்க விரண்டோடுகின்றன என்று பல ஹதீதுகளில் வந்துள்ளன.

மனிதர்களைப் போன்றே ஜின்களும் பூமியில்தான் வாழுகின்றனர். ஆனாலும் இவர்களி்ன் வாழ்க்கை முறை மாற்றமானதாகும். அனேகமாக ஜி்ன்கள் பின்வரும் இடங்களில் வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

இருட்டான இடங்கள், பாழடைந்த இடங்கள், கட்டிடங்கள், பராமரிப்பில்லாத மைதானங்கள், பாலை வனங்கள், அடர்ந்த காடுகள், மலைகள், ஓடைகள், மையவாடிகள், பாழடைந்த பள்ளிவாசல்கள், கிணறுகள், சமுத்திரங்கள், வயல் வெளிகள், சுரங்கங்கள், பொந்துகள், வீட்டின் முகடுகள், மரங்கள், குகைகள், ஒட்டகை போன்ற விலங்குகள் அடைக்கப்படும் இடங்கள், அசுத்தமான (நஜீஸ்) இடங்கள், குறிப்பாக குளியலறை, மலசல கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் இவை தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இவ்வாறு வஹ்ஹாபிகளின் குருவானஇப்னு தைமிய்யா கூறுகின்றார்.

ஆதாரம் :மஜ்முஉல் பதாவா பாகம் 19, பக்கம் 40 – 41

சூரியன் மறைந்த பின் இருள் பரவம் வேளை அதிகளவில் ஷைத்தான்கள் வெளியேறுகின்றன. அதனால் இப்படியான நேரங்களில் உங்கள் சிறு பிள்ளைகளை வெளியில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றுரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.

வெயிலும், நிழலும் சங்கமிக்கும் இடங்களில் இருப்பதை ஷைத்தான்கள் அதிகமாக விரும்புகின்றன. ஆதலால் அப்படியான இடத்தில் நீங்கள் உட்கார வேண்டாம் என்றுரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் எச்சரித்தார்கள்.

ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : புகாரி (142)

அதிகமாக சண்டை வாய்த் தர்க்கம் ஏற்படும் சந்தை, கடைத் தெருக்கள் போன்ற இடங்களை ஜின்களும் ஷைத்தான்களும் அதிகமாக விரும்புகின்றன. அதனால் ஹஜரத் ஸல்மானுல் பாரிஸ் ரழியல்லாஹு அன்ஹு தங்களின் நண்பர்களுக்கு

“சந்தைக்கு முதல் ஆளாகச் செல்ல வேண்டாம். இறுதி நபராக வெளியேறவும் வேண்டாம்.அந்த நேரம், அந்த இடங்கள் ஷைத்தானி்ன் களமாகும் என்று வஸிய்யத் செய்தார்கள்“

ஜின்களில் ஆண், பெண் இருபாலாரும் உள்ளனர். இவர்கள் திருமணம் முடித்து, சந்ததிகளை உருவாக்குகின்றனர். ஜின்கள் மனிதர்களை திருமணம் முடித்த வரலாறுகள் இருக்கின்றன. ஜின்கள் அழகான பெண்களைக் கடத்திச் சென்று வாழ்க்கை நடத்திய வரலாறுகள் ஆதி காலம் தொட்டு இருந்து வருவதாக ஹதீதுகளில் காணப்படுகின்றன. இது தொடர்பாக அதிகமான எடுத்துக் காட்டுகளை ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி லுக்துல்மர்ஜான் பக்கம் 53இல் குறிப்பிட்டுள்ளார்கள். ஜின்கள் மனிதர்களைத் திருமணம் செய்து இருவருக்கும் பிள்ளைகள் பிறந்த செய்திகள் பிரசித்தி பெற்றவை என்று இப்னு தைமிய்யா மஜ்முஉல் பதாவா பாகம் 19 பக்கம் 39இல் குறிப்பிடுகின்றார். ஹஜரத் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்பு மனைவி பல்கீஸ் அம்மையாரின் தந்தை ஒரு ஜின் என்று கௌதுல் அஃழம் முஹையத்தீன் ஆண்டகை ரழியல்லாஹு அன்ஹு தங்களது குன்யத்துத் தாலிபீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜின்களை வசப்படுத்தலாமா?

ஜின்களும், குறி சொல்பவர்களும்

நமது முன்னோர்களான நாதாக்கள் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றும் அதற்குரிய வழிவகைகள் இருப்பதாக கூறியுள்ளார்கள். இதேபோல் மற்ற மதங்களிலுள்ளவர்களும் ஜின்களை வசப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை தெரிந்து அதைக் கொண்டு பலன் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜின்களுக்கு இஸ்லாம் கொண்டு செல்லப்பட்டு அதில் முஸ்லிமான ஜின்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஜின்களும் இருக்கின்றன. செய்யிதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கரம் பற்றி எண்ணற்ற ஜின்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளன என்று அவர்களின் வரலாறு சான்று பகர்கிறது.

ஜின்கள் இறைநேசர்களுக்கு வழிய வந்து தொண்டு புரிந்து வந்தததை நாம் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகளில் படித்திருக்கிறோம்..

ஜின்களும் – சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும்.

مِنَ الشَّيَاطِينِ مَن يَغُوصُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ

ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 21:82)

وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ

சுலைமானுக்குஜின்கள் – மனிதர்கள் – பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவைதனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. (அல் குர்ஆன் 27:17)

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ

சுலைமானுக்குகாற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும்மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பைஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்குவசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 34:14)

முஸ்லிமான ஜின்கள் ஷரீஅத்திற்கு கட்டுப்பட்டு அல்லாஹ்விற்கு பயந்து தமது வாழ்க்கைகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் காபிரான ஜின்களோ, மனிதர்களுக்கு கெடுதி செய்வதையே குறிக்கோளாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஜின்களுக்கு சில சக்திகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதை மையமாக வைத்து,

குறி சொல்பவர்கள், சூனியம் செய்பவர்கள், சாமி சிலைகளை வணங்கி பூஜை செய்யும் பூசாரிகள் இந்தவகை ஜின்களை தம் வசப்படுத்தி தம் இஷ்டத்திற்கு தகுந்தவாறு அவற்றை ஆட்டிப் படைக்கின்றனர்.

சிலைகளை வணங்குபவர்கள் புதிதாக சிலையை நிறுவியவுடன் அல்லது நாட்சென்ற சிலைகளை குடமுழுக்கு என்ற விசேசத்தின் பேரில், காபிரான ஜின்களை தம் வசப்படுத்தி அதை தகட்டுக்குள் கட்டுப்படுத்தி சிலையின் பீடத்தின் கீழ் வைத்து விடுகின்றனர். அதன்பிறகு அந்த சிலைக்கு சக்தி ஏற்பட்டு அதைக் கொண்டு பூசாரிகள், குறி சொல்பவர்கள் குறி சொல்ல ஆரம்பிக்கின்றனர். சில சமயம் இந்த காபிரான ஜின்கள் இரத்தத்தையோ, ஆட்களையோ பரிகாரமாக கேட்கும். இதை சாமி சிலை கேட்பதாக இந்த பூசாரிகள் மக்கள் மத்தியில் சொல்லி அந்த சாமியை சக்தி வாய்ந்தது என்று சொல்லவாரம்பித்து அதை மக்களும் நம்பி அதை வழிபட ஆரம்பித்துவிடுகின்றனர்.

இந்த ஜின்களை வைத்துதான் சூனியம், வஞ்சனை, கெடுதிகளை இவர்கள் செய்கின்றனர். அதேபோல் இந்த ஜின்கள் மலக்குமார்கள் வானலோகத்தில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்கும் சக்தி படைத்தவை. அதை ஒட்டுக் கேட்டு இங்கு வந்து அதை தம்மை கட்டுப்படுத்தி வைத்திருப்பவரிடம் சொல்கிறது. அதை அவர் தம்மை நாடி வரும் பக்தர்களிடம் ஒப்படைக்கிறார். இதற்கு பெயர் குறி சொல்லுதல் என்று சொல்கிறார்கள்.

لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ

(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்து அவர்கள் மீது எறியப்படும். அவனைப் பிரகாசமான தீப்பந்தம் விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு.

அல்குர்ஆன் (37 : 8)

وَحَفِظْنَاهَا مِن كُلِّ شَيْطَانٍ رَّجِيمٍ

விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் ஒட்டுக் கேட்பவனைத் தவிர மற்றவர்கள் அதை நெருங்காதவாறு பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.

அல்குர்ஆன் (15 : 17)

ஆக, முதலில் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்.

சில நேரங்கல் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து)விடுவதுண்டு. இன்னும் சில நேரங்கல் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்துவிடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்கüடம்) பேசுகின்றான். அப்போது (இதைக் கேட்கும் மக்கüடையே) இன்னின்ன நாüல் இன்னின்னவாறு நடக்குமென அவர்(குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?” என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல் : புகாரி (4800)

வானத்தில் உள்ள அனைத்தையும் இந்த ஜின்கள் அறியும் சக்தியை அல்லாஹ் கொடுக்கவில்லை. சில விசயங்களை அறியும் சக்தியை மட்டும் கொடுத்திருக்கிறான். எனவே பற்பல சமயங்களில் இந்த குறி சொல்லுபவர்களின் சொல்கள் தவறாக அமைந்து விடுகிறது இதன் காரணமாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் காபிரான, கெடுதியான ஜின், ஷைத்தான்களை விட்டும் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் பாதுகாத்து அருள்புரிவானாக!. ஆமீன்.

லைலத்துல் கத்ர்

லைலத்துல் கத்ரு இன்ன இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஒரு இரவு என்றும், பராஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவென்றும், ரமலானுடைய 27ஆவது இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் ரமலானில் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவு என்பதுதான்.

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ      ۝ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ      ۝لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ       ۝ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ       ۝سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ      ۝

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.(அல்குர்ஆன் 97:1-5)

லைலதுல் கத்ரின் அறிகுறி

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப்  (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் “ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர்லைலத்துல்கத்ர்இரவை அடைந்துகொள்வார்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், “எவனைத் தவிர வேறுஇறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல்கத்ர்) ரமளானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் “அல்லாஹ்நாடினால்” என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின்மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்றுவணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக்கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(துலைலத்துல்கத்ர்என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன்வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1397, பாகம்6

உப்பாதா இப்னு ஸாமித்ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவிக்கின்றார்கள்,
இறைத்தூதர்  நவின்றார்கள், லைலதுல் கத்ரின் அடையாளம்ஒளிவீசும் நிலவுள்ள இரவைப் போன்று தெளிந்த பிரகாசமான அமைதியான இரவு. அதில்சூடோ குளிரோ இருக்காது. உதயக்காலைவரை எரிநட்சத்திரங்கள் எறியப்படுவதில்லை. மேலும், அதன்அறிகுறி அன்றைய காலைச் சூரியன் சந்திரனைப் போன்று ஜுவாலையின்றிக் நேராகக் கிளம்பும். அன்றைய தினச்சூரியனுடன் ஷைத்தானும் கிளம்ப அனுமதி இல்லை.
(இமாம் அஹ்மத், மஜ்மஃ அஸ்ஸவாயிது,பாகம் – 04, பக்கம் – 75)

லைலத்துல் கத்ரு இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீதுகளில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்துத விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும். அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. – மஙானி

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல்கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில்நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)நூல்: புகாரி 2017, 2020

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மக்களிடம்வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அதை நான்மறந்து விட்டேன். எனவே அதை 27, 29, 25 ஆகிய நாட்களில் தேடுங்கள் என்றுநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலியல்லாஹு அன்ஹா)நூல்: புகாரி 49, 2023, 6049

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் லைலதுல் கத்ருஇரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல்கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போதுஇன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாகஇருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்திஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ هِيَ فِي الْعَشْرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ ‏”‏‏.‏ يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ‏.‏ قَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ أَيُّوبَ‏.‏ وَعَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ الْتَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ‏.‏

என்று இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்”
“லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!”
என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

“இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!” என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்.- புகாரிபாகம் 2, அத்தியாயம் 32, எண் 2022

“ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.”அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: அஹ்மத் (15466)

அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (தமது கனவில் ரமளானின்) இருபத்தேழாவது இரவில்லைலத்துல்கத்ர்இரவு இருப்பதாகக் கண்டார். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “ரமளானின் இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்று என்பதில்) உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதைக்காண்கிறேன். எனவே, ரமளானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 2162, பாகம்6

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் எங்களுக்கு லைலதுல்கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான்இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படைஇரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லதுஇருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லிவிட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்றுவணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல்கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக்காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவு என்பதற்குரிய ஆதாரங்கள்:

லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: அபூதாவூத் (1178)

லைலத்துல் கத்ரு பற்றி கூறப்பட்டுள்ள ‘இன்னா அன்ஜல்னாஹ்சூராவில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடவை கூறப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு 27 எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று சிலர் கூறியுள்ளனர். இவ்வாறு சில காரியங்களில் இமாம்களில் சிலர் எழுத்துக்களின் எண்ணிக்கைக்குத் தோதாக விஷயங்களை கூறியிருப்பது அறிவுக்குப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது.–மஙானி

கஸ்ஸாலி இமாம் சொன்ன உபகராம்

இமாம் ஙஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள் சிலரும் ரமலானின் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தொன்பதாம் இரவு என்பதாகவும்> முதற்பிறை திங்கட்கிழமையாகயிருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தொன்றாம் இரவென்பதாகவும்> செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தேழாம் இரவென்றும்> வியாழக்கிழமையாக இருப்பின் இருபத்தைந்தாம் இரவென்றும்> சனிக்கிழமையாக இருப்பின் இருபத்தி மூன்றாம் இரவென்றும் கூறியுள்ளார்கள். இந்த கணக்குப்படி நான் பருவமடைந்தது முதல் எனக்கு லைலத்துல் கத்ரு தவறியதே கிடையாது என்று ஷைகு அபுல்ஹஸன் ஜுர்ஜானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். – மஙானி

லைலத்துல் கத்ரின் அமல்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: எவர்நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில்நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு),நூல்: புகாரி 35)

லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்று கேட்டேன்.அப்போத அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு), ‘நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப்இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள். உடனே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள்.ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  (அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பு அபூ ஸலமா ரலியல்லாஹு அன்ஹு புகாரி 813  

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுபுஹ் தொழுது விட்டுத் தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்: புகாரி 2041

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

அறிவிப்பவர்:ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) நூல்:புகாரி2026

முடிந்த வரை ஸலவாத்தும், இஸ்திக்பாரும், திக்ருகளும், ஓதுங்கள்.

5. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன்.
அதற்கு,
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’
)பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!(என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளி பற்றி வெளிவந்த மார்க்க பிரசுரம்

 

 

 

சிந்தித்துச் செயலாற்றுங்கள்

அவுலியாக்கள், அறிஞர்கள், புலவர் பெரமக்கள் ஆகியோர் தோன்றி மறைந்ததும், அகிலமெங்கும் புகழோங்கி நின்றதுமான காயல்பட்டணத்தில் வாழும் முஸ்லீம் பெருங்குடி மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆண்டவனின் படைப்புகளுக்கெல்லாம் மனிதனே மேலானவன் என்பதற்கு அவனால் அளிக்கப்பட்ட பகுத்தறிவு ஒன்றே காரணமாகும். அந்த அறிவை கொண்டுதான் நல்லது, கெட்டது, உண்மை, பொய் என்பவற்றை எல்லாம் மனிதனால் அறிய முடிகிறது.

அப்படிப்பட்ட நல்ல அறிவை நல்வழியில் பயன்படுத்துகிறவனே மனிதருள் சிறப்புடையவன். ஆகவே, ஆண்டவனின் திருவசனங்களாகிய திருகுர்ஆனில் கூறப்பட்டுள்ள சில சில கருத்துக்களையும், நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீதுகளிலிருந்து சிலவற்றையும், அறிவிற் சிறந்த அல்லா மக்களால் அளிக்கப்பட்ட மார்க்கத் தீர்ப்பையும் இதன் கீழ் எடுத்துக்கூறி உண்மை எது என்பதை தெரிந்து நடக்க உங்கள் மேலான சிந்தனைக்கு இந்தச் செய்தியை அளிக்கின்றோம்.

1. அல்லாஹ்வின்; கயிற்றை எல்லோரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டாம். ஆண்டவன் உங்களுக்கு இட்ட பாக்கியத்தைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்தீர்கள், ஆண்டவன் உங்கள் மனதில் அன்பை உண்டாக்கினான். அவன் கிருபையினால் நீங்கள் சகோதரர்களானீர்கள். (குர்ஆன்)

2. 'ஆண்டவன் உங்களுடைய வெளித்தோற்றங்களையும், பொருள்களையும் பார்க்க மாட்டான். ஆனால், உங்களுடைய செய்கைகளையும், உள்ளங்களையுமே கவனிக்கிறான்.' (ஹதீது)

3. முஃமீன்களில் இரு கூட்டத்தார் சண்டை இடுவதாய் இருந்தால், அவர்களுக்குள் சமாதானம் உண்டாகும்படிச் செய்யுங்கள். அவர்களில் எவர்கள் மற்றவர்களுக்கு அனியாயம் செய்தார்களோ, ஆண்டவனின் கட்டளைக்கு தலைசாய்க்கும்வரை அவர்களுடன் நீங்கள் சண்டை செய்யுங்கள். (குர்ஆன்)

4. 'ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலும் ஷைத்தான்கைள பகைவர்களாக ஆக்கி இருக்கின்றோம்.  அவர்களிற் சிலர், மற்றும் சிலரை மிரட்டுவதற்காக மேற்பூச்சான விஷயங்களை அறிவிக்கின்றார்கள். (தவறானதும், பொய்யானதுமான செய்திகளை ஒருவர் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொள்வார்கள்.' (குர்ஆன்)

5. 'பாபச் செயல்களை விட்டு விலகி சன்மார்க்கத்தில் ஒழுக வேண்டும் என்பதற்காகவே, தரித்திரம், நோய் முதலியவற்றாலும், வெற்றி, விருத்தி முதலியவற்றாலும் இறைவன் மனிதனைச் சோதிக்கின்றான். அவற்றின் மூலம் அவன் திருந்தாவிடில் திடீரென அவன் தண்டிக்கப்படுவான். (குர்ஆன்)

6. 'நயவஞ்சகர்களில் (முனாபிக்குகளில்) மரித்தவர்களுக்காக நபியே! நீர் தொழ வேண்டாம், இறைஞ்சவும் வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் மாற்றம் செய்யாதவர்கள். (குர்ஆன்)

7. முஸ்லிம்கள் அனைவரம் ஒரே மனிதனுக்குச் சாமானமாய் இருக்கிறார்கள். அம்மனிதனுடைய கண்ணில் நோவுண்டாயின், அவனுடைய சரீரம் முழுவதிலுமே நோவுண்டானது போலிருக்கும்.' (ஹதீது)

8. 'பாப காரியங்களைச் செய்கிறவனுக்கு அவன் விரும்புவதை ஆண்டவன் கொடுக்கிறானே என்ற நீங்கள் நினைக்க வேண்டாம். அவ்வடிமையைத் தண்டிப்பதற்காகவே இறைவன் அவ்வாறு செய்கிறான். (ஹதீது)

9. முஸ்லிம்களுக்கிடையே பிளவையுண்டாக்கக் கருதி நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்) மஸ்ஜித் ழிறார் என்ற ஒரு புதிய பள்ளியைக் கட்டினார்கள். நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தபூக் சண்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலே அந்த நயவஞ்சகர்கள் நாங்கள் கட்டிய பள்ளிக்குத் தொழ வரவேண்டுமென நபியவர்களை அழைத்தார்கள். சண்டைக்குச் சென்று திரும்பி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லி, நபியவர்கள் சென்று விட்டார்கள்.

சண்டை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலெ 'முஸ்லிம்களுள் பிளவையுண்டாக்க வேண்டும், அவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த மஸ்ஜித் ழிறார் என்ற பள்ளி, நயவஞ்சகர்களால் கட்டப்பட்டிருக்கிறது. நன்மையைக் கருதியே அப்பள்ளியை நாங்கள் கட்டினோம் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்.

நபியே! நீர் அங்கு செல்ல வேண்டாம். ஆரம்பத்திலே உள்ள பள்ளிதான் நீர் தொழவும், தொழவைக்கவும் தகுதியானது' என்று நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்தான். பிறகு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைப்படி மஸ்ஜிதுல் ழிறார் என்ற அந்தப் பள்ளி நெருப்புக்கிரையாக்கப்பட்டது. (இந்த சம்பவம் திருகுர்ஆன் ஸுஜ்வு 9 ஆயத்து 107, 108, 110 லும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சரித்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது)

பகுத்தறிவு பெற்ற உலமாக்களே!

அல்லாஹ்வையும், அவனின் திருத்தூதரையும் உண்மையாகவே ஒப்புக் கொண்ட நல்லடியார்களே! இம்மாதம் 26ஆம் தேதி (26-9-58) வெள்ளிக்கிழமையன்று மக்களுக்குள் நிரந்தரப் பிளவையுண்டாக்கும் ஒரு சின்னமாக ஜாமிஉல் அஸ்ஹர் என்ற பெயரால், ஒரு புதுப்பள்ளியை துவக்கப் போகிறார்கள்.

இவ்வூரிலே பிறந்து, இவ்வூரிலே வளர்ந்து, இவ்வூர் நிலைகளைத் தெரிந்து நன்கறிந்து ஆண்டவனுக்கும் அவனுடைய ரசூலுக்கும் வழிப்பட்டு அணுவளவும் பிசகின்றி வாழ்ந்து அல்லாஹ்வின் திருலிகாவை அடைந்தவரும், யாருடைய விருப்பையும், வெறுப்பையும், பொருட்படுத்தாமல் நேர்மையைக் கடைபிடிதது  மக்கள் உள்ளங்களிலே நல்லாரெனப் பள்ளிகொண்டவருமான ஆலிமுல் காமில் ஹாஜுல் ஹறமைனிஷ்ஷரீபைன், நஹ்வி முஹம்மது இஸ்மாயீல் முப்தி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களாலும், அல்ஆலிமுல் பாஸில் ஹாஜுல் ஹறமைன் ஹாபிஸுல் (குர்ஆன்) முஹ்யித்தீன் தம்பி முப்தி (முதர்ரிஸ், மஹ்ழறத்துல் காதிரிய்யா) அவர்களாலும், அல் ஆலிமுல் முப்தி ஹிஸ்புல்லாஹ் சபைத் தலைவர் அஷ்ஷெய்குல் காமில் சின்ன அ.க. செய்கப்துல் காதிறு சூபி (நூரீ) அவர்களாலும், மற்றும் இதனடியில் கண்ட மதிப்புக்குரிய உலமாக்களாலும் காயல்பட்டணத்தில் ஏக காலத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்துவது ஷாபிஇய்யீ மதுஹபின் படி முற்றிலும் மாற்றமானதும், விலக்கப்பட்டதுமாகும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆகவே, சகல காரியங்களிலும் கலந்துறவாடும் இவ்வூர் மக்களிற் சிலர் இறைவணக்கத்தில் மாத்திரம் பிரிந்து கொள்ள எவ்வித சூழ்நிலைகளும் இல்லாத நிலையில் இவ்வாறு பிரிந்து ஜும்ஆத் தொழுவது ஒருக்காலும் கூடாதென்ற உலமாக்களின் நல்ல தீர்ப்பை இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அசைக்க முடியாத உறுதிபாட்டுடன் ஒப்புக் கொண்டு ஒழுகிவருகின்றார்கள்.

நல்லடியார்களாகிய எல்லோரும் அந்தப்படியே ஒப்புக் கொண்டு ஒழுக வேண்டுமென்றும் புதிய பள்ளியில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகைக்கு செல்வது கூடாதென்றும் இதன் மூலம் அறிவவித்துக் கொள்கிறோம்.

ஆகாதென்று தீர்ப்பளித்த அல்லாமாக்களின் பெயர்கள்:-

1. அல்-ஆலிமுல் காமில் ஹாஜுல் ஹறமைனிஷஷரீபைன் நஹ்வி முஹம்மதிஸ்மாயில் முப்தி (ரஹிமஹுல்லாஹு ) அவர்கள்

2. அல் ஆலிமுல் பாஸில், ஹாஜுல் ஹறமைன், ஹாபிஸுன் குர்ஆன், முஹிய்யித்தீன் தம்பி முப்தி அவர்கள்.

3. அல் ஆலிமுல் முப்தி, ஹிஸ்புல்லாஹ் சபைத் தலைவர், அஷ்ஷெய்குல் காமில் சின்ன அ.க. செய்கப்துல் காதிறு சூபி (நூரீ)

4. அல் ஆலிமுல் பாஸில், பாளையம் ஹபீபு முகம்மது அவர்கள்

5. சென்னை கவர்ண்மென்ட் காஜி, மவுலவி, அல்ஹாஜ் முகம்மது ஹபீபுல்லா சாகிபு அவர்கள்

6. சென்னை மவுலவி அபுல் பரகாத்

7. சென்னை அல் ஆலிமுல் முப்தி சுல்தான் அஹ்மது சாகிபு அவர்கள்

8. அல் ஆலிமுல் பாஸில் ஹாஜி முஹம்மது முஸலியார் (மலபாரீ) அவர்கள்

9. சென்னை ஹாஜி, அல் ஆலிமுல் பாஹிம், செய்யிது ஷாஹ் முகம்மது விகாயதுல்லா சாகிப் காதிரிய்யி அவர்கள்

10. அல் ஆலிமுல் ஹாபிஸ், முஹம்மது மகுதூம் தம்பி அவர்கள்

11. அல் ஆலிமுல் ஹாபிஸ் முஹம்மது சதக்கத்துல்லா அவர்கள்

12. அல் ஆலிமுல் ஹாபிஸ் அல்ஹாஜ் முகம்மது லெப்பை உஸ்தாதுனா அவர்கள்

13. அல் ஆலிம் கோஜா முஹம்மது லெப்பை

14. அல் ஆலிமுல் ஹாபிஸ் நஹ்வி செய்யிது அஹ்மது அவர்கள் 

15. அல் ஆலிம் செய்யிது முகம்மது புகாரி

16. அல் ஆலிம் செய்யிது முகம்மது புகாரி (மஹ்ழரிய்யா காதிமுல் கௌம்) அவர்கள்

17. அல் ஆலிமுல் ஹாபிஸ் நஹ்வி முகம்மது இஸ்ஹாக் லெப்பை அவர்கள்

18. அல் ஆலிம், நூ.கு.  முகம்மது இஸ்மாயில் அவர்கள்

19. அல் ஆலிமுல் பாஸில், முகிய்யத்தீன் மாமுனா லெப்பை (பாகவி) அவர்கள்

20. அல் ஆலிமுல் ஹாபிஸ், காரீ  விளக்கு முகம்மது உமர் அவர்கள்

21. அல் ஆலிமுல் ஹாபிஸ் நஹ்வி செய்கப்துல் காதிர் அவர்கள்

22. அல் ஆலிமுல் ஹாபிஸ் ஹாமிது லெப்பை முப்தி (இப்னு மாதிஹுல் கௌது) அவர்கள்

23. அல்ஹாஜ் முகம்மது மக்கீ ஆலிம் அவர்கள்3

24. அல் ஆலிமுல் பாஸில் மவுலவி முகம்மது நூஹ் கண்ணு (பாகவி) அவர்கள்

25. அல் ஆலிமுல் பாளையம் முகம்மது அபூபக்கர் முகிய்யத்தீன் அப்துல்லா லெப்பை அவர்கள்

26. அல் ஆலிமுல் பாஹிம் செ.வா. சாகுல் ஹமீது அவர்கள்

27. அல் ஆலிமுல் பாஹிம் அப்துல்லாஹிப்னு அபூபக்கர் (முதர்ரிஸ் அல் மத்ரஸத்துல் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, (காலி இலங்கை) அவர்கள்)

28. அல் பாஸிலுல் பாகவி காலித் மவுலவி (முதர்ரிஸ்ஜாமிஆ மஸ்ஜித் பொன்னானி மலபார்) அவர்கள்

29. அல் ஆலிமுல் பாஸில் முகம்மது நெய்னா (முதர்ரிஸ் மத்ரஸதுர் ரற்மானிய்யா அதிராம்பட்டினம்) அவர்கள்

30. அல் ஆலிமுல் பாஸில் அப்துல் காதிறு முகிய்யத்தீன்னூரி (முதர்ரிஸ்மத்ரஸதுல் காதிரிய்யா நாகூர்) அவர்கள்

31. அல் ஆலிமுல் பாஸில் அபுல் ஹக் முகம்மது அப்துல் பாரீ (கேரள ஜமீயத்துல் உலமா சபை  தலைவர் வாளகுளம்)

32. அல் ஆலிமுல் பாஸில் அபூபக்கருல் பர்ஹி ( ஜமியதுல் உலமா கேரளா) அவர்கள்

33. அல் ஆலிமுல் பாஸில் அபுல் பஷீர் முகிய்யத்தீன் குட்டி முதர்ரிஸ் மத்ரஸா இஸ்லாஹுல் உலூம் தானூரி) அவர்கள்

34. அல் ஆலிமுல் பாஸில் அப்துல்காதிர் (ஜற்மதனீ மலபார்) அவர்கள்

35. அல் ஆலிமுல் பாஜில் ஜலீல், காதிமுத்துல்லாப் முகம்மது ஹுஸைன் மத்ஹரீ (கீரனூரி) அவர்கள்

 

பாவலர் S.S. அப்துல் காதிறு

தல் S.M. இபுறாகீம்

S.A. முகம்மது ஆதம்

M.R. உவைஸ்

V.M.S. அனசுத்தீன்

கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வரலாற்று சரித்திரச் சுருக்கம்

நமது நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை வழிப்பரம்பரையும், தாய் வழிப் பரம்பரையும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போய்ச் சேருகின்றன. அந்த வகையில் பார்க்கும் போது செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 13ம் தலைமுறைப் பேரராகின்றனர்.

1.    செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு

அன்னாருக்கு அபுல் ஹஸன், முர்தளா, அசதுல்லா போன்ற திருப்பெயர்களும் உள்ளது. அன்னாரின் தந்தையார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையாருடன் பிறந்த அபூதாலிப் என்பவராவார். அவருடைய தந்தையின் பெயர் அப்துல் முத்தலிபு.
செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு (யானை ஆண்டிற்கு முப்பது வருடத்திற்கு பின்)  ரஜப் மாதம் பிறை 18 வெள்ளிக்கிழமையன்று திருமக்காவில் கஃபா ஆலயத்தில் பிறந்தார்கள். இவர்களுக்கு அலி என்று பெயர் வைத்தவர்கள் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர்கள் தமது தாயாரான அசது என்னும் பாத்திமா வயிற்றில் கர்ப்பமாயிருக்கும் போது, அந்த அம்மையாருக்கு அற்புதமான நல்ல பல கனவுகள் தோன்றின. ஒரு தடவை கஃபா ஆலயத்திலுள்ள, 'ஹத்தீம்' என்னும் இடத்திலிருந்து மேகம் ஒன்று எழுந்து சென்று, அவர்கள் தலைக்கு மேல் குடையைப் போன்று நிழலிடக் கண்டார்.

ஒரு தடவை ஒளிமயமான சிலர், அவர் பெறப் போகும் மகவைப் பற்றி வாழ்த்துக் கூறிப் போனதாக கண்டார். மேலும்அவர் கூறியிருப்பதாவது:

என் புதல்வர் அலி என்வயிற்றிலிருக்கும் போது, மனதில் ஒருவித மகிழ்ச்சியுணர்வும், தெம்பும் காணப்படும். நான் கஃபா ஆலயத்திற்குச் சென்று, ஏதாவதொரு விக்கிரகத்தைத் தொழுவதற்கு நாடினால், உடனே எனக்கு ஒருவித மயக்கம் வந்து விடும். நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டால், அந்த நிலைமை அகன்று விடும். இந்தத் தன்மையால் நான் விக்கிரகத்தைத் தொழுவதையே விட்டுவிட்டேன்.

அவர் என் வயிற்றிலிருந்து பிறக்கும் நேரம்  நெருங்கியவுடன், எனது கண்ணுக்கு ஏதோ  ஒரு ஒளி தென்பட்டது. எங்கிருந்தோ, அல்லாஹ்வைத் துதிக்கும் சப்தம் முழங்குவதையும் என் செவிகள் கேட்டன. அவர் பிறந்து மூன்று தினங்கள் வரை, என்னிடம் அவர் பால் அருந்தவில்லை. அதனால், குடும்பத்தார் அனைவருக்கும் அவரைப் பற்றி ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், எனது இல்லம் வந்து அவரை வாங்கி தம்முடைய மடியில் வைத்துத் தமது பரிசுத்த நாவை அவர் வாயிலிட்டு சுவைக்கச் செய்தனர். அன்று முதல் அவர் பால் குடித்து வரலானார்.

நபிகள் நாயகத்திற்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட போது அலி நாயகம் வாலிபராக இருந்தார்கள். தமக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டதை அலி நாயகத்திடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன போது, எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்காமல் உடனே இஸ்லாத்தை ஏற்றார்கள். ஹழ்ரத் அலி நாயகத்திற்கு 25 வயதானபோது பெண்கள் தலைவியாம் பாத்திமா  நாயகி அவர்களை திருமணம் செய்து வைக்கப்பட்டது. நிகாஹ் மஸ்ஜிதே நபவியில் மிக எளிமையாக நடந்தது.

அலி நாயகத்தின் வாழ்க்கை எல்லாவிதத்திலும் தனிச்சிறப்புடையதாகவே இருந்தது. நற்குண ஒழுக்கங்கள் அவர்களிடம் பிறவியிலேயே அமைந்திருந்தன. வீட்டு வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்வார்கள்.

நபிகள் பிரான் மதீனமாக நகரில் பள்ளிவாசல் கட்ட ஆரம்பித்தபோது, செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சாதாரண கூலி ஆட்களைப் போல் வேலை செய்தார்கள்.

அகழ் யுத்தத்தின் போது நகரத்தைச் சுற்றிலும் அகழி தோண்டும்போது, அந்தப் பணியில் மும்முரமாகவும், முதன் முதலாகவும் ஈடுபட்டது அலி நாயகம் அவர்களே. அவர்களின் உணவு பழக்கமும் உணவு உண்பதிலும் எளிமையையே கடைபிடித்து வந்தனர். அன்னாரின் ஆகாரம் மட்டரக கோதுமையாகவே இருந்தது. துணைக்கறி இருப்பின் உபயோகித்துக் கொள்வார்கள். இல்லையேல் ரொட்டியை மட்டும் புசித்துவிட்டு எழுந்து விடுவார்கள். அன்னாரின் படுக்கை விரிப்பு – ஒரு கம்பளத்தை மெத்தையாக தைத்து அதனுள் பேரீத்த மட்டை நார்களை நிரப்பிப் படுக்கைக்கு உபயோகித்து வந்தனர்.

பணிவு, பயபக்தி, இரக்கம், ஈகை, நேர்மை போன்ற உன்னத குணங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒருங்கே அமைந்திருந்தன. அலி நாயகம் எவரையும் வெறுத்ததில்லை. ஏழை, எளிய மக்களிடம் இவர்கள் காட்டிவந்த இரக்கத்திற்கு ஈடு இணையே இல்லை.

அலி நாயகம் அவர்கள் எங்கள் அனைவரையும் விடப் பெரும் வீரம் படைத்தவர்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள். அன்னாரின் வீரதீரங்களைப் பற்றி  கூறுவதாயின் வரலாறு பெரியதாகி விடும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்தின் போது மதீனாவின் அன்சாரிகளுடன் மக்கா முஹாஜிர்களை இணையாதக்கி வைத்தபோது அலி நாயகத்தை மட்டும் எவருடனும் சேர்த்து விடவில்லை. அதுபற்றி பெருமானாரிடம் வினவியபோது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாசத்தோடும், பரிவோடும் அலி நாயகத்தை கட்டித் தழுவிய வண்ணம், அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு, அலியே! இம்மையிலும், மறுமையிலும் உம் சகோதரன் நானே! என்று கூறினார்கள்.

ஒருமுறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாசத்தோடும், பரிவோடும் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, 'அலியே! மூசா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, ஹாரூன் நபி அலைஹிஸ்ஸலாம் இருந்து வந்த இடத்தில் நீவிர் எனக்கு இருந்து வருகிறீர். ஆனால் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் நபியாக இருந்தார். எனக்குப் பின்னரோ, நபியில்லை. ஆதலால் நீர் நபியல்ல எனினும் நான் உம்மைச் சேர்ந்திருக்கிறேன். நீர் என்னைச் சேர்ந்தவராயிருக்கிறீர் என்று கூறினார்கள்.

கலீபாக்களில் நான்கானவராயிருப்பினும்  அலி நாயகத்தை அந்த மூன்று கலீபாக்களும் கேளாமல் எதையும்  செய்ததில்லை. செய்யிதினா அலி நாயகம் செய்யிதினா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் சஹாபாக்களின் ஏகோபித்த  முடிவின்படி கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பதவிக்கு வந்த பிறகு குழப்பங்கள் தலைதூக்கின. இருந்தபோதும் நீதிபரிபாலனத்தில்  அணுவளவும்  அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. அதற்காகவே தங்களது ஆட்சியின் தலைமை பீடத்தை கூபா நகருக்கு மாற்றிக் கொண்டனர். அங்கு சென்று நான்கு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களும் நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தியபின் தமது அறுபத்தி மூன்றாம் வயதில் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டு, ரமலான் மாதம் 21ம் நாள் காலைத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் சென்று கொண்டிருந்தபோது 'இப்னு முல்தஜிம்' என்னும் பெயருடைய கயவன் ஒருவனால் விஷம் தோய்த்த வாளால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள்.

2.    செய்யிதினா இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு

இந்தப் பெருமகனாரின் வாழ்க்கை பிரபல்யமானது. சரித்திரங்களில் மிகத்தெளிவாக இவர்களின் வாழ்க்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இமாம் அலி நாயகம் செய்யிதினா பாத்திமா ஜொஹ்ரா ரலியல்லாஹுஅன்ஹுமா ஆகியோருக்கு முதல் மகனாக இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 15ல் பிறந்தார்கள். இவர்களுக்கு  ஹஸன் என்ற பெயரைச் சூட்டியவர்கள் நானில வேந்தர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அரபு மொழி வரலாற்றிலே, ஹஸன் எனப் பெயரிட்டது அதுவே முதல் தடவை என்பது
குறிப்பிடத்தக்கது.

செய்யிதினா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறவிலேயே அழகும் முகக்களையும் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் சாயல் கிட்டத்தட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒத்திருந்தது என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் தந்தை செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் கலீபாப் பதவியேற்று, ஆறு மாதங்களே நீதியாட்சி நடத்தினர். அதன்பின் ஹிஜ்ரி நாற்பத்தொன்றாம் ஆண்டு, மூன்று நிபந்தனைகளின் பேரில் அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வசம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு, உலக விவகாரங்களிலிருந்தும் ஒதுங்கித் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினர்.

ஒரு முறை அவர்களுக்கு பணக் கஷ்டம் ஏற்பட்டபோது, அமீர் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதி உதவி தேட முற்பட்டனர். உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, மகனே! உமக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கிக் கொள்ள அல்லாஹுத்தஆலாவிடம் முறையிடுவதை விட்டுவிட்டு உம்போன்ற ஒரு மனிதனுக்கு ஓலை எழுதத் துணிந்து விட்டீரோ? என வியப்போடு வினவினார்கள். உடனே இமாம் அவர்கள் கடிதம் எழுத முயற்சித்ததை நிறுத்தி விட்டனர். பெருமானார் அவர்கள் அன்னாருக்கு ஒரு பிரார்த்தனை கற்றுக் கொடுத்தனர். அதனை இமாம் அவர்கள் ஓதிவந்தனர். அதன்பலனாக அமீர் முஆவியாவிடமிருந்து அவர்களுக்கு வேண்டியதற்கு மேலாக பணம் வந்து சேர்ந்தது.

இமாம் அவர்கள் பதவி விலகியபின் கூபா நகரை விட்டு விட்டு மதீனா நகர் சென்று அங்கேயே இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருமுறை தங்கள் சொத்து அனைத்தையும் தர்மம் செய்து விட்டார்கள். மூன்றாம் முறை தமது இல்லத்திலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் உள்பட பாதிப் பொருட்களையும் தருமம் செய்து விட்டார்கள்.

ஒருசமயம் தங்கள் வீட்டின் முன்வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பட்டிக்காட்டு அரபி தங்கள் முன் வந்து தங்களையும், தங்கள் அருமைத் தகப்பனார் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் அதிகமாகத் திட்டினார். அவருடைய இந்தக் கடுஞ்சொல்லை மிகப் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏசிப்பேசி முடித்தபின் சகோதரரே நீர் பசியுடன் இருக்கிறீரா? என்று கேட்டார்கள். அவர்களுடைய இந்த வார்த்தை;யைக் கேட்டவுடன் அந்த அரபி முன்னிலும் பல மடங்காகத் திட்டினார். அதையும் மிகப் பொறுமையுடன் கேட்டவுடன் முன்னிலும் பன்மடங்காக சப்தமிட்டுத் திட்டினார். அதையும் மிகப் பொறுமையுடன் கேட்டு முடிந்தபின் தன் அடிமையிடம் சையிக்கினை செய்தார்கள். அவர் வீட்டினுள் சென்று ஆயிரம் வெள்ளிக்காசு கொண்ட ஒரு பையை ஹழ்ரத் அவர்களிடம் வந்து கொடுக்க அதை அந்த ஏழையிடம் கொடுத்து சகோதரரே இப்பொழுது என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். ஹழ்ரத் அவர்களின் பெருந்தன்மையையும், பொறுமையையும்  கண்ட அந்த அரபி ரசூலுடைய மகனே என்னை மன்னித்து விடுங்கள், உங்களுடைய பொறுமையை சோதிப்பதற்காகவே இப்படி நடந்து கொண்டேன் என்றார்.

இமாம் அவர்களின் பகைவர்கள் இமாம் அவர்களைவ pஷம் வைத்து கொன்று விட எத்தனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் முடியவில்லை. இறுதியில் இமாம் அவர்களின் மனைவி ஜுவுதாவினால் நஞ்சு கொடுக்கப்பட்டார்கள். நான்கு தினங்கள் நஞ்சின் உபாதையால் கஷ்டப்பட்டார்கள். சையிதினா இமாம் ஹஸன் அவர்கள் ஹிஜ்ரி 3 ரமலான் மாதம் பிளை 15 திங்கட்கிழமை பிறந்து, ஹிஜ்ரி 35ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 49ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் பிறை 5ல் ஷஹீதானார்கள்.

3.    ஹழ்ரத் சையிது ஹஸனுல் முதன்னா ரலியல்லாஹு அன்ஹு

இவர்களைப் பார்த்தவர்கள் இவர்களை இமாம் ஹஸன் என்றே சொல்வார்கள். சொல்லிலும், செயலிலும் தம் தந்தையரைப் போலவே இருந்தார்கள். இதனால் ஜனங்கள் இவர்களை ஹஸனுல் முதன்னா(இரண்டாவது ஹஸன்) என்று அழைத்து வந்தார்கள். இவர்களுக்கு ஐந்து ஆண் குழந்தைகள் இருந்தார்கள். 1. ஹழ்ரத் செய்யிது அப்தில்லாஹில் மஹல் 2. ஹழ்ரத்  இப்றாகீம் 3. ஹழ்ரத் ஹஸனுஸ் ஸாலிஸ் 4. ஹழ்ரத் தாவூது 5. ஹழ்ரத் ஜஃபர்  முந்தைய மூன்று குழந்தைகளும் ஹழரத் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் செய்யிதா பாத்திமுத்து ஜெஹரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பிறந்தவர்கள். பிந்திய இருவரும் பீபி ஹபீபாவின் மக்கள்.

கர்பலா யுத்தத்தில் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு  அன்ஹு அவர்களுடன் இருந்து  போர் செய்தார்கள். இறுதியில் சிலர்களை கைது செய்து கூபாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இவர்களும்இருந்தார்கள்.

அவர்களை சில காரணங்களுக்காக இப்னு ஜியாத் விடுதலை செய்து மதீனாவிற்கு அனுப்பிவிட்டான். பின்னர் வலீதிப்னு அப்துல் மலிக் உடைய ஆட்சிகாலத்தில் மஸ்ஜிது நபவியை விரிவுபடுத்தும்போது அதற்காக தாங்கள் தங்கியிருந்த வீட்டை கொடுத்து அதிலிருந்து வெளியேறினார்கள். இவர்கள் ஹிஜ்ரி 29 ரமலான் மாதம் பிறை 12ல் பிறந்தார்கள். ஹிஜ்ரி 45ல் தம் தகப்பனார் இமாம் ஹஸன் ரலியல்லாஹு  அன்ஹு அவர்களிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 97ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 17ல் வபாத்தானார்கள். மதீனாமுனவ்வராவில் உள்ள ஜன்னத்துல் பகீ என்னும்  கப்ர்ஸ்தானத்தில் அடங்கப்பட்டுள்ளார்கள்.

4.    ஹழ்ரத் செய்யிது அப்துல்லாஹில் மஹல் ரலியல்லாஹுஅன்ஹு

இமாம் அவர்கள் செய்யிதுஷ் ஷுஹதா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகளார் பாத்திமா ஜொஹரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அருமை வயிற்றில் ஹிஜ்ரி எழுபதாம் வருடம் ரபீயுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை மதீனாவில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை ஹஸனுல் முதன்னா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

தந்தை, தாய் ஆகிய இருவர் வழியிலும் செய்யிது வமிசத்தை சேர்ந்தவர்களாயிருந்ததால் மக்கள் இவர்களை மிகவும் மதித்து  வந்தனர். எனவே இவர்களுக்கு மஹ்லு – சொக்கம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
இவர்களுக்கு முஹம்மது, இப்றாகிம், மூசா, யஹ்யா, சுலைமான், இத்ரீசு என ஆண்மக்கள் அறுவர் இருந்தனர். இவர்கள் ஹிஜ்ரி 92ம் ஆண்டு ஷஃபான் மாதம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். கலீபா மன்சூர் அப்பாசி காலத்தில் பகுதாது சிறைக்கூடத்தில் ஹிஜ்ரி 145ம் ஆண்டு ரமலான் மாதம் 18ம் நாள் மறைந்தார்கள்.

5.    ஹழ்ரத் செய்யிது அப்துல்லாஹ் தானி ரலியல்லாஹு அன்ஹு

இவர் செய்யிது அப்துல்லாஹ் மஹல் அவர்களின் புதல்வர். இரவு முழுவதும் கண் அயராது தவம் செய்யும் தன்னிகரில்லாத தவயோகி. பின்னிரவாம் 'தஹஜ்ஜத்' நேரத்தில் இரண்டு ரக்அத்துத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பார்கள். பகல் காலத்திலும் இறைதியானத்திலேயே ஈடுபட்டிருப்பார்கள். வெள்ளி, திங்கள் ஆகிய இரு கிழமைகளிலும் பொதுமக்களுக்கு நல்லுபதேசம்  புரிவார்கள்.

இவர்களுக்கு ஆண்மக்கள் ஐவர் இருந்தனர். துருக்கி, புகாரா ஆகிய பிரதேசங்களில் வாழும் செய்யிது வமிசத்தார் இவருடைய சந்ததியரே ஆவர். இவர் ஹிஜ்ரி 103ம் ஆண்டு ரஜப் மாதம் மதீனமா நகரில் பிறந்து ஹிஜ்ரி 133ம் வருடம் தம் தந்தையிடம் கிலாபத் பெற்று 156ம் ஆண்டு ஜமாஅத்தில் ஆகிர் மாதம் மறைந்து மதீனாவில் அடங்கப்பட்டார்கள்.

6.    ஹழ்ரத் செய்யிது மூஸா ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் அவர்களின் தாயார் இமாம் ஜெய்னுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளார் செய்யிதா ருகையா ரலியல்லாஹு அன்ஹா ஆவார்கள். ஹழ்ரத் அவர்களுக்கு இரண்டு சகோதரர்கள். செய்யிது முகம்மது, செய்யிதுஇப்றாஹிம் ரலியல்லாஹு  அன்ஹுமா ஆகியோர்.

இமாம் பாகிர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் மகள் ருகையாதானி அவர்களை இவர்களுக்கு நிக்காஹ் செய்து கொடுக்கப்பட்டது.  தவத்தில் மிகுந்த ஈடுபாடு காரணமாகவே இவர்களின் தேகம் மிகவும்  மெலிந்து விட்டது.

ஒருசமயம் இவர்கள் ஹாரூன் ரஷீத் பாதுஷாவின் தர்பாருக்கு செல்ல வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் கால் இடறி விழுந்தார்கள். இதைப்பார்த்த அரசவையிலுள்ளவர்களும், பாதுஷாவும் சிரித்தார்கள். உடனே இமாம் அவர்கள், 'நான் கால் இடறிதான் விழுந்தேன். குடித்துவிட்டு தடுமாறி விழவில்லை' என்று நறுக்கென்று பதிலுரைத்தார்கள். இதைக் கேட்ட தாம் சிரித்ததற்காக வெட்கப்பட்டார்.

ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 152ம் ஆண்டு ரமலான் மாதம் 14ல் மதீனா முனவ்வராவில் பிறந்து, ஹிஜ்ரி 198ம் வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 213ம் ஆண்டு ரபீயுல் ஆகிர் மாதம் புனித ஜும்ஆ தினத்தில் வபாத்தாகி மதீனாவில் அடங்கப்பட்டார்கள்.

7.    ஹழ்ரத் செய்யிது மூஸா தானி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிது மூஸா என்பது இவர்களது  மேலான  திருப்பெயராகும். இவர்களின் தந்தையின் பெயரும்  மூஸா என்றிருப்பதனால் இவர்களை மூஸா தானி -இரண்டாவது மூஸா என்று அழைக்கப்பட்டது. இவர்களுடைய சைக்கினை பெயர் அபூ உமராகும். இவர்கள் இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைத் திருப்பேரனாவார்கள். இவர்களின் தாயார் பெயர் செய்யிதா ஹாலா என்பதாகும்.

இவர்களின் தர்பாரில் பக்தர்களின் காணிக்கை குவிந்து கொண்டேயிருக்கும். மறுபகுதியில் ஏழை எளியோருக்கு அது வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஜும்ஆத் தொழுகை முடிந்தவுடன் மிம்பரில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் புரிவார்கள்.

அன்னாரின் பேச்சைக் கேட்டு நூற்றுக்கணக்கான பிற சமயத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இவர்களுக்கு  இறைவன் அறிவுப் பாக்கியத்தை அளவின்றி கொடுத்திருந்தான். இவர்கள் செய்யிதினா இப்றாஹீம் முர்த்தளாவின் புதல்வி ஜெய்னம்பு என்பாரை மணந்திருந்தார்.

இவர்களின் வழியிலிருந்து செய்யிதினா தாவூது என்பாருடன் ஆறு ஆண்மக்களும், மூன்று பெண்மகளும் இருந்தார்கள்.இரண்டாவது மனைவியின் பெயர் பீபி மைமூனா. இவர்களுக்கு மூன்று ஆணும், இரண்டு பெண்களும்  பிறந்தனர்.

ஹிஜ்ரி 193ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 6ல் மதீனாவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 238ல் ரபீயுல் ஆகிர் மாதம் தங்கள் தந்தையிடம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 288ம் வருடம் ஸபர் மாதம் வபாத்தாகி மதீனாவில் அடங்கப்பட்டிருக்கிறார்கள்.

8.    செய்யிதினா தாவூது ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு சிராஜுத்தீன் என்ற பெயரும் உண்டு.இவர்களின் சைக்கினைப் பெயர் அபூ முஹம்மது அபூபக்கர் ஹழ்ரத். ஒவ்வொரு கணமும் இறையச்சத்திலேயே வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான சமயத்தில் இறையச்சத்தினால் தன்னிலை மறந்து அழுது கொண்டிருப்பார்கள். எப்பொழுதும் ஓதிக் கொண்டேயிருப்பார்கள். தம் குடும்பத்தார்களுக்கும், பந்துக்களுக்கும்  உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள்.

அவனுடைய படைப்புகள் அனைத்தையும் தம்மை விட மேலானதாகவே கருதி வந்தார்கள். தாம் எந்த இடத்தில் அமர்கிறார்களோ அந்த இடத்திலேயே மற்றவர்களையும்  அமர வைப்பார்கள். தாங்கள் உடுத்தும் உடுப்பையே மற்றவர்களையும் உடுத்தச் செய்வார்கள்.

ஒருமுறை இவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது, ஜனங்கள் இவர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நின்றார்கள். அச்சமயம் அன்னார் பணிவுடன் அல்லாஹ்வின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்று உபதேசிக்கத் துவங்கிவிட்டு அழுதார்கள். இதைக் கண்ட ஜனங்களும் அழுதார்கள்.

அன்னாருக்கு நான்கு ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தது. ஆண் மக்கள்: 1. முஹம்மது அப்துல்லாஹ் 2. முஹம்மது  ஆபித்3. ஷஹாபுத்தீன் ஹழ்ரத்.

இவர்களுக்கு இரண்டு மனைவியர். ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 245ம் ஆண்டு துல்ஹஜ்ஜு மாதம்  பிறை 11ல் மதீனாவில் பிறந்து ஹிஜ்ரி 277ம்  ஆண்டு தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 321ம் ஆண்டு வபாத்தாகி மக்காவில் அடக்கப்பட்டார்கள்.

9.    ஹழ்ரத் செய்யிது முரீத் ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு ஆபிதீன் என்றும், ஷம்சுத்தீன் என்றும் இரு பெயர்கள் உண்டு. இயற்பெயர் முஹம்மது. சைக்கினைப் பெயர் அபுல்காசிம். இதுமட்டுமில்லாமல் முத்தகீ முதவாழிவு ஆபித், ஸாகித் என்றும் பட்டப்பெயர்கள் சொல்லப்பட்டு வந்தது.

ஹிஜ்ரி 229ம் வருடம் ரமலான் மாதம் 12ம் நாள் திருமதீனாவில் பிறந்தார்கள்.இவர்களுடைய மகனாரான யஹ்யா என்பவர்கள் தம் தந்தையைப் பற்றி கூறியுள்ள சம்பவம் பின்வருமாறு:

அதாவது என் தந்தை தஹஜ்ஜத்து தொழுவதற்காக வெகுசீக்கிரமாக எழுந்துவிடுவார்கள். ஏதாவது ஒருஇரவில் அசந்து தூங்கி விட்டால் 'அஸ்ஸலாமு அலைக்கும் மினன் நௌம் யாகாசிம்' என்று ஒரு சப்தம் கேட்கும். உடனே தந்தையார் அவர்கள் எழுந்து தொழுகைக்கு சென்று விடுவார்கள்.சப்தம் வந்தவுடன் அக்கம்பக்கம்  சுற்றிப் பார்ப்பேன். எவரும் தென்படமாட்டார்கள். இந்த சப்தத்தை பலதடவை கேட்டிருக்கிறேன். சப்தமிட்டவர்களை காணமுடியவில்லை. கடைசியில் என் தந்தையிடமே இதைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு தந்தையவர்கள் அது ஒரு ஜின்னாகும். இந்த ஜின்னை என்னுடைய பணிவிடைக்காக அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்றார்கள். எனது தந்தை மறைந்த சமயத்தில் அது மனிதஉருவில் வந்து அழுது துக்கப்பட்டது.

இந்த ஜின் பல சமயங்களில் என்னிடம் வரும்.நான் அந்த ஜின்னைப் பார்த்து என் தந்தைக்கு பணியாளராக இருந்தது  போல் என்னிடமும் ஏன் இருக்கக் கூடாது என்று கேட்டேன். அதற்கு அது மெதுவாக பணிவாக, 'சையிது முஹம்மது அவர்களே உங்கள் தந்தை பெற்றுக் கொண்ட பதவியை நீங்கள் இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே உங்கள் தந்தையிடம் சென்று இதற்கு ஒரு வழி காணங்கள் என்று உபதேசித்தது.

அது இந்தவிசயத்தை சொன்னவுடன் ஒரு வெள்ளிக்கிழமை தந்தையின் கப்ருக்குச் சென்று முறையிட்டேன். அந்த இரவில் என் தந்தை என் கனவில் தோன்றி, 'லாஇலாஹ இல்லா அன்த ஸுப்ஹான இன்னீ குன்து மினல்லாலிமீன்' என்ற விருதை  21 நாள்வரை ஓதி வரும்படி சொன்னார்கள். நானும்  அதேபிரகாரம் ஓதிவந்தேன். மேற்படி ஜின் என்னிடம் வந்து பணிவிடை செய்தது.

ஒரு சமயம் யூதர்கள் அன்னாரிடம் வந்து , உஸைர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி கேள்விகள்  கேட்டனர்.அன்னார் இறைவனின் குமாரர் அல்ல என்று விளக்கமாக, உருக்கமாக பதிலுரைத்தனர் இமாம் அவர்கள். அதைக்  கேட்டு அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினர்.

அன்னாருக்கு ஆறு ஆண் மக்களும், மூன்று பெண்மக்களும் இருந்தார்கள்.

1.அப்துல் வாகிது 2. அப்துல் வஹ்ஹாபு 3. அப்துர்ரஜ்ஜாக் 4. யெஹ்யா ஷாஹித் 5. அப்துல்காதிர் 6. அஹ்மது என்ற ஆண்மக்களும், 1. ஆமினா 2. ஜைனபு 3. ஆயிஷா ஆகிய பெண்மக்களும் இருந்தனர்.

செய்யிது யஹ்யா தவிர அனைத்து ஆண்மக்களும் சிறுபிராயத்திலேயே மறைந்து விட்டனர்.

ஹிஜ்ரி 299ம் ஆண்டு ரமலான் மாதம் 12ல் மதீனாமுனவ்வராவில் பிறந்து ஹிஜ்ரி 349ம் வருடம் தம் தந்தையிடம் பைஅத்து செய்து கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 415ம் வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் 17ல் வபாத்தாகி ஜன்னத்துல் பகீவு மதீனா கப்ரஸ்தானில் அடக்கப்பட்டார்கள்.

10.    செய்யிதினா யஹ்யா ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு குன்யத்துப் பெயர் அபூஸாஹிது என்ற பெயரும் உண்டு. குழந்தை பருவத்திலேயே இவர்களிடம் அற்புதக் காரணங்கள் வெளியாயின. ஆறு வயதில் கல்வி கற்க பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிரியர் போதிக்கும் பாடங்களைக் கடந்து முன்னேறிவிடுவது இவரது வழக்கம். இதைக் கண்டு ஆசிரியர் வியப்படைந்தபோது, ஆசிரியரை நோக்கி, நான் தங்கள் மாணவன். இப்னு ஜரீர் என்னும் மேதை தாயின் வயிற்றிலிருக்கும் போதே பேச ஆரம்பித்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. எனக்கோ வயது ஆறு. இப்பிராயத்தில் நான் இவ்வாறு பாடங்களை படித்துக் கொண்டு போவதில் என்ன வியப்பிருக்கிறது? எனக் கேட்டனர். இது அல்லாஹ்வின் நன்கொடை. அதை அவன் விரும்பியவர்களுக்கு அளிப்பான் என்று கூறலானார். ஆசிரியர், அவரை அன்று முதல் ஆரிபுபில்லாஹ் -மெய்ஞ்ஞானி என அழைத்து வரலானார்.

இவர் பதினைந்து வயது முதல் தமது இறுதிக்காலம்  வரை ஜமாஅத்துத் தொழுகையை தவறவிட்டதில்லை. சுன்னத்து, நபில் தொழுகைகளை வீட்டில் தொழுவதும், பர்ளான தொழுகைக்கு மட்டும் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இவர்களுக்கு மூஸா, அபூஅப்துல்லா என்ற இரு ஆண் மக்களும், பெண் மகள் இருவரும் இருந்தனர். பெண்மக்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர்.

ஹிஜ்ரி 340ம் ஆண்டு ஷஃபான் மாதம் 17ல் மதாயினில் பிறந்து, ஹிஜ்ரி 370ம் ஆண்டு தம் தந்தையிடம் பைஅத்துச் செய்து கிலாபத்து பெற்றார்கள்.  ஹிஜ்ரி 430ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 24ல் வபாத்தாகி பழைய பாக்தாத் ஷரீபில் அடக்கப்பட்டார்கள்.

11.    ஹழ்ரத் செய்யிது அபூஅப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

இவர் பிறவித்துறவி. ஞானத்திற்கும், நற்பண்புகளுக்கும் உறைவிடம்.இவர்கள் இறைத் தியானத்திலேயே மூழ்கியிருப்பார்கள். அன்த்தல் ஹாதீ, அன்தல் ஹக்கு, லைசல் ஹாதீ இல்லாஹு (அல்லாஹுத்தஆலாவே நீயே வழிகாட்டி, நீயே மெய்யன். ஹக்குத்தஆலாவைத் தவிர வேறொரு வழிகாட்டி இல்லை) என்பதையே அவர்  வாய் சொல்லிக் கொண்டிருக்கும்.

ஜாதி, மத பேதமில்லாமல்  ஹழ்ரத்  அவர்களின் உபதேசத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடி  வருவார்கள். இந்த மாபெரும் கூட்டத்தில் ஆரிபீன்கள், ஒளலியாக்கள், ஸாலிஹீன்கள் இருப்பார்கள்.

ஒருநாள் வெண்குட்ட நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் தூரத்தில் நின்றுகொண்டு, அபூஅப்துல்லாஹ் அவர்களே! என்போன்ற நிர்க்கதியாளன் மீதும் ஒரு பார்வை இருக்கட்டும் என்றான். உடனே அவர்கள் எழுந்து, அவனருகே சென்று அவனுக்காக ஹக்குத்தஆலாவிடம்  இறைஞ்சலானார்கள். அக்கணமே அவன் பிணி நீங்கி குணமடைந்தான்.

இவர்கள் ஹனபீ மத்ஹபை பின்பற்றியிருந்தார்கள். இவர்களுக்கு இரு மனைவியர். ஒரு மனைவியின் பெயர் பாத்திமா. செய்யிதினா மூஸா ஜங்கிதோஸ்து என்பவரும், மற்றும் நான்கு ஆண் மக்களும், ஆயிஷா என்றொரு பெண் மகளும் இந்த அம்மையார் வயிற்றில் பிறந்தவர்கள்.

இரண்டாம் மனைவியின் பெயர் ரஹ்மத். இவர் வயிற்றில் ஆண் ஒன்றும்,பெண் ஒன்றும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்து ஐந்து தினங்களில் இறந்து விட்டனர்.

ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 365ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 13ல் ஜீலானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 387ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 14ல் தம் தந்தையிடம் கிலாபத் பெற்றார்கள். ஹிஜ்ரி 473ம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் வபாத்தாகி ஜீலானில் அடங்;கப்பட்டார்கள்.

12. ஹழ்ரத் அபூஸாலிஹ் மூஸா ஜங்கிதோஸ்து ரலியல்லாஹு அன்ஹு

இவர்களுக்கு ஜங்கிதோஸ்து –போர்ப்பிரியர் என்ற காரணப் பெயரும் உண்டு. இவர் சதா தமது நப்ஸு என்னும் துர்ஆத்மாவுடன் போராடி, அதனை அடக்கிக் கொண்டே இருந்ததால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று என்று ரயாலுல் ஹக் என்ற கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த மகானுடைய திருவதனம் எப்போதும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும். மிகத் திறமையுடைய பேச்சாளராக இருந்து வந்தார்கள். இவர்கள் பேசஆரம்பித்துவிட்டால் அது முடியும்வரை சபையோர்கள் மெய்மறந்து விடுவர்.

நான் அல்லாஹுத்தஆலாவுடைய அடிமை. என்னுடைய நாயனுக்கு என்றும் அடிபணிவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். அல்லாஹுத்தஆலாவை எப்போதும் அஞ்சியே இருக்கிறேன். ஜனங்களே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருநாமத்தை கேட்கும் சமயமெல்லாம் அந்த நபியின் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். இறைவனை எப்போதும் மறந்து விடாதீர்கள். எப்போதும் அவன் உங்கள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறான். உங்கள் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணுங்கள் என்று உபதேசிப்பார்கள்.

ஹழ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 400ம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 27ல் ஜீலானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 460ம்ஆண்டு தம் தந்தையிடம் கிலாபத்து பெற்றார்கள். ஹிஜ்ரி 489ம் ஆண்டு துல்கஃதா மாதம் 11ல் வபாத்தானார்கள். அடக்கவிடம் ஜீலானில் இருக்கிறது.

13.    ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு

ஹிஜ்ரி 407ம் ஆண்டு ரமலான் மாதம் முதல் பிறையன்று அபூசாலிஹ் பின் மூஸா – பாத்திமா தம்பதியருக்கு ஹழ்ரத் கௌதுல் அஃலம் மகனாகப் பிறந்தார்கள். இவர்கள் பிறக்கும்போது இவர்களின் தாயாருக்கு வயது அறுபது.

இந்த மகான் பிறந்தபோது பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தேறின. இவர் பிறந்த தினத்தன்று அவர் தந்தையின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அபூசாலிஹே! உமக்கு அல்லாஹுத் தஆலா அருந்தவப்புதல்வரை அளித்திருக்கிறான். அவர் எனக்கும் அல்லாஹ்வுக்கும்  மிகப் பிரியமானவர். வலிகள், குதுபுகள்  ஆகியோரிடையே அந்தஸ்து மிக்கவர்' என அறிவித்தார்கள்.

இவர்கள் கருவிலிருக்கும் போது இவரது அன்னையின் கனவில் ஹழ்ரத் கிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி 'உமது  கர்ப்ப அறையில் இருப்பவர் எல்லா வலிமார்களுக்கும் தலைவரான முஹ்யித்தீன் என்பவராவார் என்று நன்மாராயம் கூறிச் சென்றனர். இவர்கள் பிறந்த இரவில் ஜீலான் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண் குழந்தைகள் பிறந்தன. பெண்குழந்தைகள் ஒன்றுகூட இல்லை. இக்குழந்தைகள் யாவும் பிற்காலத்தில் பரிபூரணமான வலிகளாகவே திகழ்ந்தார்கள்.

ஒருமுறை ரமலான் பிறை ஒன்று அன்று இவர்கள் பால் அருந்தாதினால் அன்றுதான் ரமலான் பிறை ஒன்று என்று கணித்தார்கள். பின்னர் மார்க்கச் சட்டப்படி ரமலான் பிறை ஒன்று அன்றுதான் என்பதற்குரிய  ஆதாரங்கள் கிடைத்தன.

இவர்களின் இயற் பெயர் அப்துல் காதிர். சிறப்புப் பெயர் முஹ்யித்தீன். காரணப் பெயர் அபூ முஹம்மது. மக்கள் அழைப்பது கௌதுல் அஃலம் எனும் பெயர். இவர்கள் பிறந்த ஊர் ஜீலான் என்பதாக பொதுவாகச் சொல்லப்படுகிறது. இவர் பிறந்த இடம் 'நீப்' என்றும் வேறு பலர் 'புஷ்தீர்' என்றும்  கூறுகின்றனர். இந்த இரண்டும் ஒரே பெயராக இருக்கக் கூடும். என்றாலும், இவ்வூர்கள் ஜீலான் நகரைச் சார்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. குத்பு நாயகம் அவர்களின் தாய், தந்தை ஆகிய இருவழிகளிலும் செய்யிதினா இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் வம்சத்தைச் சார்ந்தவர்கள். கௌதுநாயகம் அவர்களுக்கு விபரம் தெரியும் முன்பே அன்னாரின் தந்தையார் மறைந்து விட்டார்கள். தந்தையை இழந்த நமது நாயகத்தை அவரது தாய்வழிப் பாட்டனாராகிய அப்துல்லாஹ் ஸெமஈ அவர்களே வளர்த்து வந்தார்கள்.

ஆரம்பத்தில் கல்வியை தம் சொந்த ஊரான ஜீலான் நகரிலேயே கற்றார்கள். பதினெட்டு வயதை அடைந்த பொழுது உயர்கல்வி கற்பதற்காக பகுதாது நகர் செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். அவரின் இந்த முடிவைக் கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள் அன்னாரின் தாயார் அவர்கள். தந்தையார் அபூசாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை நாயகம் அவர்களின் சட்டைப் பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.

அச்சமயம் தம் மைந்தரை நோக்கி, எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று உபதேசித்து அனுப்பி வைத்தார்கள். பகுதாதிற்காக பயணமாகிச் செல்லும் வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் நாயகமவர்கள். இவ்வியாபாரிகள் ஹமதான் எனும் நகரைக் கடந்து செல்லும் போது வழிப்பறித் திருடர்கள் அறுபது பேர் இவர்களை வளைத்துக் கொண்டார்கள். நாயகமவர்களை கொள்ளையர்கள் சோதித்து கேட்டபோது, தம்மிடம் நாற்பது பொற்காசுகள் இருப்பதாக உண்மையை சொன்னார்கள். ஆனால் திருடர்கள் நம்பவில்லை. இறுதியாக திருடர்கள் தலைவரிடம் கொண்டு சென்றனர். அங்கும்  அவர்கள் உண்மையே பேசினார்கள். நாயகமவர்களை சோதித்துப் பார்த்த போது, அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியவந்தது. வியப்புற்ற கள்வர்கள், காரணம் கேட்டபோது, தாயாரிடம் கொடுத்த வாக்குறுதி படி நான் உண்மையையே பேசினேன் என்றுரைத்தார்கள். இதைக்  கேட்டு கள்வர்கள் திருந்தி, இனிமேல் பாவச் செயல்களில் ஈடுபட போவதில்லை என்று நாயகமவர்களிடம் சத்தியம் செய்து கொடுத்தனர். இறைவனிடமும் பாவமன்னிப்புத் தேடினர். பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் வலிமார்களாக திகழ்ந்தனர் என சரித்திரம் கூறுகிறது.

மிகவும் கஷ்டப்பட்டு புறக்கல்வியை கற்று முடித்தார்கள்.ஹழ்ரத் ஹம்மாது நாயகம்  ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சில காலம் மார்க்கக் கல்வி கற்றார்கள். பகுதாது நகரில் ஹலாலான உணவுக்காக தேடி அலைந்தார்கள். அது கிடைக்கும்வரை பசியாக இருந்தார்கள். மாணவராக இருந்த காலகட்டத்தில் பாடம் படித்து விட்டு, காட்டிற்கு சென்று விடுவார்கள். கீரை, தழை முதலியவற்றை புசித்தே பசியை தீர்த்துக் கொண்டார்கள் என்று காயிதுல் ஜவாஹித் நூல் பக்கம் 7,8ல் காணப்படுகிறது.

புறக்கல்வியைக் கற்றுத் தேர்ந்தபின் தரீகத் என்னும் அகக் கல்வியில் புகுந்தார்கள்.  ஆத்மீகக் கல்வியை அதன் ஒழுக்க முறைகளை காஜி அபூஸயீதுல் முபாரக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்று முறையாக அனுமதியும் பெற்றார்கள். ஆகவே மக்களை விட்டுப் பிரிந்து காடு, மலைவனப்பகுதி ஆகியவைகளிலேயே காலங்கழிக்கவும் இறையை வணங்கவும் தியானம் செய்யவும் தொடங்கினார்கள். இதில் ஹழ்ரத் கிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்கள். மாபெரும் தவத்தை அங்கு மேற்கொண்டார்கள். 

ஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன்? என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள். நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.

இதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததுமாக இருந்தது. அன்னாரின் பேச்சை கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் இருந்து எழுதிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் பகுதாது நகருக்கு வெளியில் உலாவச் சென்று திரும்பி வரும்போது வியாதியால் பீடிக்கப்பட்டு மெலிந்த ஒருவன் மிகவும் சீர்கேடான நிலையில் என்முன் தள்ளாடித் தள்ளாடி வந்து பலஹீனத்தால் கீழே விழுந்து, என் தலைவரே! எனக்கு கைகொடுத்து உதவுங்கள். தங்களின் அற்புத சக்தியின் பலத்தால் என் மீது ஊதுங்கள். என்னுடைய நிலைமை தங்களால் மேன்மையுறும்' என பணிவுடன் கூறினார். வலிகள் கோமான் அவரை ஆசிர்வதித்து ஓதி ஊதவே அதி அற்புதமான சக்தி பெற்று பூவைப்போல் அழகானான். அதன் பின் அவர் கூறியதாவது: அப்துல்காதிரே! நான் யார் என்பதை அறியவில்லையா? நான்தான் உன் தாய் வழிப்பாட்டனாராகிய ஹழ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மார்க்கம் ஆவேன். இக்காலத்தில் நலிவுற்றேன். உம்முடைய முயற்சியால் நான் நலம் பெற்றேன். என்னை உயிர்ப்பித்ததால் நீர் முஹ்யித்தீன் ஆவீர் எனக் கூறி மறைந்தார். பின்னர் பகுதாது நகருக்கு வந்து மஸ்ஜிதுக்கு சென்றபோது, மக்கள் நாயகமவர்களை சூழ்ந்து கொண்டு முஹ்யித்தீன், முஹ்யித்தீன் என்று அழைத்தனர்.

ஒரு சமயம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் தம்முடைய சொற்பொழிவின் இடையே, 'என்னுடைய பாதம் எல்லா வலிமார்களின் பிடரியின் மீதும் இருக்கிறது' எனக் கூறினார்கள். நமது நாயகம் அவர்களின் இவ்வார்த்தையைக் கேட்டவுடன் அச்சபையில் இருந்தோரும், ஞானதிருஷ்டியால் உணர்ந்தவர்களும் தங்கள் தலையை தாழ்த்தி நாயகமவர்களின் பாதங்களை தலை மீதும், கண் மீதும் வைத்துக் கொண்டார்கள்.

குத்பு நாயகம் அவர்கள் எண்ணற்ற அற்புதங்கள் (கராமத்துகள்) நிகழ்த்தியுள்ளார்கள். உலகின் போக்கையே மாற்றினார்கள். ஹிஜ்ரி 562ம் வருடம் ரபீயுல் ஆஹிர் பிறை 11 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அன்னாரின் புனித ரவ்லா ஷரீப் பகுதாது நகரில் அமைந்திருக்கிறது.

நாயகம் அவர்கள் நீண்டநாள் வரை திருமணம்  செய்யாமல் இருந்தார்கள். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆன்மீகத் துறையில் பிரவேசிப்பதற்குத் தடையாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம். ஒரு நாள் நபிகள் நாயகம் கனவில் தோன்றி, மணவாழ்க்கையில் ஈடுபட்டு சுன்னத்தை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டதற்குப் பின் அக்கட்டளைக்குப் பணிந்து நான்கு மனைவியரை மணந்தார்கள். இந்நால்வரிலிருந்து இறைவன் நாற்பத்தொன்பது பிள்ளைகளை இவ்வுலகில் தோற்றுவித்தான்.

மனைவியர்:
1.    மீர் முஹம்மது ரஹிமஹுல்லாஹ் அவர்களது புதல்வியான ஹழ்ரத் மதீனா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்
2.    ஸெய்யிது முஹம்மது ஷப்பி ரஹிமஹுல்லாஹ் அவர்களது புதல்வியான பீபீ ஸாதிக்கா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்
3.    பீபீ ஹழ்ரத் மூமீனா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்
4.    பீபீ ஹழ்ரத் மஹ்பூபா ஸாஹிபா ரஹிமஹுல்லாஹ்
புதல்வர்கள்:
1.    ஸெய்யிது ஸைபுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
2.    ஸெய்யிது ஷர்புத்தீன் ரஹிமஹுல்லாஹ்
3.    ஸெய்யிது ஈஸா ரஹிமஹுல்லாஹ்
4.    ஸெய்யிது அப்துர் ரஜ்ஜாக் ரஹிமஹுல்லாஹ்
5.    ஸெய்யிது அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ்
6.    ஸெய்யிது அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
7.    ஸெய்யிது ஸிராஜுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
8.    ஸெய்யிது அப்துல் ஜப்பார் ரஹிமஹுல்லாஹ்
9.    ஸெய்யிது ஷம்சுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
10.    ஸெய்யிது தாஜுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
11.    ஸெய்யிது அப்துல் முஇஸ்ஸி ரஹிமஹுல்லாஹ்
12.    ஸெய்யிது இப்றாஹீம் ரஹிமஹுல்லாஹ்
13.    ஸெய்யிது அபுல் பஜ்ல் ரஹிமஹுல்லாஹ்
14.    ஸெய்யிது முஹம்மது ஜாஹித் ரஹிமஹுல்லாஹ்
15.    ஸெய்யிது அபூபக்கர் ஜக்கரிய்யா ரஹிமஹுல்லாஹ்
16.    ஸெய்யிது அப்துர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ்
17.    ஸெய்யிது முஹம்மது ரஹிமஹுல்லாஹ்
18.    ஸெய்யிது அபுன் நஸ்ரு மூஸா ரஹிமஹுல்லாஹ்
19.    ஸெய்யிது ஜியாவுத்தீன் ரஹிமஹுல்லாஹ்
20.    ஸெய்யிது யூசுப் ரஹிமஹுல்லாஹ்
21.    ஸெய்யிது அப்துல் காலிக் ரஹிமஹுல்லாஹ்
22.    ஸெய்யிது ஸைபுர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ்
23.    ஸெய்யிது முஹம்மது சாலிஹ் ரஹிமஹுல்லாஹ்
24.    ஸெய்யிது ஹபீபுல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்
25.    ஸெய்யிது மன்சூர் ரஹிமஹுல்லாஹ்
26.    ஸெய்யிது அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ்
27.    ஸெய்யிது யஹ்யா ரஹிமஹுல்லாஹ்
புதல்வியர்கள்:
1.    ஆஃபியா பீ
2.    யாசீன்பீ
3.    ஹலிமா பீ
4.    தாஜ்பீ
5.    ஸாஹிதாபீ
6.    தாஹிராபீ
7.    உம்முல் பஸல்
8.    ஷரீபாபீ
9.    ஆபிதாபீ
10.    கதீஜாபீ
11.    ரஜிபீ
12.    உம்முல்பத்ஹு
13.    ஸஹராபீ
14.    ஜமால்பீ
15.    கைருன்னிசா
16.    ஷாஹ்நாஸ்பீ
17.    ஷாஹ்பீ
18.    பாக்கிராபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் அஜ்மஈன்

இருபத்திரண்டு பேரில் நான்கு பேர்களின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை.

நூல்: கலாயிதுல் ஜவாஹிர். தாரிக் பக்தாத்.

கௌதுல் அஃலம் இயற்றிய நூல்கள்

1.    குன்யத்துத் தாலிபீன் 2. புத்தூஹுல் கைப் 3. பத்ஹுர் ரப்பானீ 4. கஸீதா கௌதிய்யா 5. பஷாயிருல் கைராத் 6. அல்பவாயிது வல் ஹிந்து 7.அழ்ழயூலாதுர் ரப்பானிய்யா 8. அல் மவாஹிபு ரஹ்மானிய்யா.

வஹ்ஹாபிகளே! தேவ்பந்தி தப்லீக் வாதிகளே! கிறிஸ்துவ மதத்திற்கு வந்து விடுங்கள்! இல்லையேல்…, காபிராகவே இருப்பீர்கள்… பாதிரியார் வில்லியம் மஸீஹ்யின் அறைகூவல்!

சியால் கோட் (பாகிஸ்தான்) என்னும் ஊரில் இருந்து பாதிரியார் வில்லியம் மஸீஹ் என்பவர், வழிகெட்ட இயக்கங்களான வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத் தேவ்பந்திகள், காதியானிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, நஜாத் போன்ற இயக்கங்களை அழைத்து 'எனது கேள்விகளுக்கு பதில் அளியுங்கள். இல்லையென்றால் கிறித்துவ மதத்திற்கு வந்து விடுங்கள். காஃபிராக இருப்பதை விட எங்கள் கிறித்துவ மதம் மேலானது' என்று பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதுநாள் வரையிலும் வஹ்ஹாபிய வழிகெட்ட இயக்கங்களால் பதில் கூற இயலவில்லை. எக்காலமும் அவர்களால் பதில் கூற இயலாது என்பதே உண்மை.

தமிழகத்தில் வாய்சவடால் விடும் வஹ்ஹாபிகளே! தொழுகையின் பெயரால் பாமர மக்களை வழிகெடுக்கும் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினரே! உங்களால் கிறித்துவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? பாதிரியார் வில்லியம் மஸீஹின் கேள்விகளைப் படியுங்கள்.

கேள்வி 1: இஸ்மாயில் தெஹ்லவீ, அஷ்ரப் அலி தானவி போன்றோர் தமது நூற்களில் 'முஹம்மது நபி மரணித்து மண்ணோடு மண்ணாகி விட்டார்' என்று எழுதி உள்ளார்கள். ஆதாரம்: தக்வியத்துல் ஈமான்.

மண்ணோடு மண்ணாகிப் போன ஒரு தூதுவரை ஏற்று இஸ்லாத்தைப் பின்பற்றுவதை விட, நான்காம் வானத்தில் உயிரோடு உயர்த்தப்பட்ட இன்னும் ஜீவிதமாக உள்ள, எதிர்காலத்தில் இப்பூவுலகில் மறுபடியும்  வருகை தரவள்ள, எங்கள் ஈஸா நபியை பின்பற்றுங்கள். உயிருடன் உள்ள எங்கள் ஈஸா உயர்ந்தவரா…? மரணித்து மண்ணாகிப் போன உங்கள் நபி உயர்ந்தவரா…?

கேள்வி 2: அஷ்ரப் அலி தானவி தனது 'ஹிப்ளுல் ஈமான்' எனும் நூல் பக்கம் 8ல் எழுதுகிறார்… 'முஹம்மது நபி அவர்களின் மறைவான விஷயங்களைப் பற்றிய ஞானம் சாதாரண மனிதர்கள், குழந்தைகள், பைத்தியக்காரன் இனு;னும் எல்லா வகை விலங்கினங்களுக்கும் உள்ளதைப் போல்தான்.'

ஆனால் எங்கள் ஈஸாவின் ஞானம் பற்றி உங்கள் குர்ஆனிலேயே வந்துள்ளது. அவர் பிறந்தவுடன் பேசினார். மறைவானதை அறிவிக்கக் கூடியவராக இருந்தார்.
விஷயம் இவ்வாறிருக்க மறைஞானத்தை அறியக் கூடிய எங்கள் ஈஸா சிறந்தவரா? ஒன்றுமே தெரியாத என்று உங்களால் கூறப்படும் முஹம்மது நபி சிறந்தவரா? பதில் கூறுங்கள்…

கேள்வி 3: முஹம்மது நபியின் நாட்டத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை'. (ஆதாரம்: தக்வியத்துல் ஈமான்) உங்கள் நபியால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் அவர் உங்களைப் போன்ற சாதாரண மனிதர் என்றே நீங்கள் நம்புகிறீர்கள்.

ஆனால், எங்களின் ஈஸா குருடர்களைப் பார்வையுடையவர்களாய் ஆக்கினார். குஷ்ட நோய் போன்ற கடும் நோய் பிடித்தவர்களை தமது கரத்தைக் கொண்டே சமாளித்தார். மரணித்தவர்களை உயிர்ப்பித்தார் என்று உங்கள் குர்ஆனே சாட்சியம் பகர்கிறது.

ஒன்றும் செய்ய முடியாத ஒரு சாதாரண மனிதரை நபியாக ஏற்று வழிநடப்பதை விட அற்புதமான மனிதரான எங்கள் ஈஸாவை நபியாக ஏற்றுக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்.

உங்கள் நபி 40 வயதிலிருந்து தான் நபி என்று கூறுகிறீர்கள். அதற்கு முன்னால் அவர் ஒரு சாதாரண மனிதர்தான். ஆனால் எங்கள் ஈஸா பிறக்கும்போதே 'தான் நபி' என்று அறிவித்தார்.

உங்கள் நபியின் பெற்றோர் குஃப்ரில் இருப்பதாக கூறி நபியின் பிறப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளீர்கள். ஆனால், எங்கள் ஈஸாவின் தாயார் மரியம் பரிசுத்தமானவர். புனித தேவ தூதரின் மூலம் ஈஸாவை பெற்றெடுத்தார். ஆக எல்லா வகையிலும் எங்கள் ஈஸாவே உயர்வானவராக இருக்கிறார்.

ஆனால் நீங்கள் முஹம்மது நபியை பின்பற்றுவதாக கூறி அவரையே குறை சொல்லுகிறீர்கள். இப்படி குறை கூறுவதால் இஸ்லாமிய அறிஞர்கள் உங்களை காஃபிர் என்று தீர்ப்பளித்துள்ளார்கள். நீங்கள் காஃபிராக இருப்பதை விட எங்கள் ஈஸாவை ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவ மதத்திற்கு வந்து விடுங்கள்.

-ஆதாரம்: ரஜாயே முஸ்தஃபா மாத இதழ் (குஜ்ரன் வாலா, பாகிஸ்தான்) ஹிஜ்ரி 1405 ரஜப் மாதம்.

முஸ்லிம்களே…! இந்த கேடுகெட்ட வஹ்ஹாபிய கொள்கையின் விளைவுகளைப் பார்த்தீர்களா? யூதர்களும், கிறித்துவர்களும் நம்மை கேலி செய்கின்ற அளவிற்கு துணிந்து விட்டார்கள். மேலை நாடுகளில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறாக எத்தனையோ நூல்களில் எழுதப்பட்டுள்ளது. கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட மோசமாக சித்தரித்து திரைப்படமும் எடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் வழிகாட்டியவர்கள் இந்த வஹ்ஹாபிகள்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

பாதிரியார் வில்லியம் மஸீஹின் கேள்விகளுக்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிய தலைவர்கள் தமது நூல்களில் நமது உயிரினும் மேலான நபிகளாரை மிகவும் தரம் தாழ்த்தி எழுதியுள்ளார்கள். இன்றளவும் அதை அச்சடித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். தொழுகைக்கு அழைக்கிறோம் என்ற போர்வையில் மக்களுக்கு அதை மறைமுகமாக போதிக்கிறார்கள். அந்த நூல்கள் மற்றும் அதை எழுதியோர்களின் விபரங்களையும் பாருங்கள்.

1.    கிதாபுத் தௌஹீத் – ஆசிரியர்: முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி (வஹ்ஹாபிய மதத்தின் முன்னோடி இவர்தான். இவர் பெயராலேயே வஹ்ஹாபி என்று அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் இவர்கள் தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத், நஸாத்து என்ற பற்பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.

2.    தக்வியத்துல் ஈமான் – ஆசிரியர்: இஸ்மாயில் தெஹ்லவி (கிதாபுத்  தவ்ஹீது என்ற வழிகெட்ட நூலின் உருது மொழியாக்கம் தான் இந்தநூல். இந்த வழி கெட்ட நூலை எழுதி போதித்த காரணத்தினால் வட இந்திய சுன்னத் வல் ஜமாஅத் பட்டான் முஸ்லிம்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு காக்கைக்கு இரையாக்கப்பட்டார். இதை மறைத்து தப்லீக் வஹ்ஹாபிகள் இவரை ஷஹீது என்று அழைக்கின்றனர்.)

3.    தஹ்தீருன் நாஸ் – ஆசிரியர்: காஸிம் நானோத்தவி (தாருல் உலூம் காஸிமிய்யா என்னும் வஹ்ஹாபிய தப்லீக் தேவ்பந்து மத்ரஸாவின் ஸ்தாபகர். ரஸூலுல்லாஹ்விற்குப் பின் ஒரு நபி வர சாத்தியம் உள்ளது என்று கூறியதன் மூலம் காதியானி கூட்டத்திற்கு அடிகோலியவர்)

4.    ஹிப்ளுல் ஈமான் – ஆசிரியர்: அஷ்ரப் அலீ தானவி (தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத்தின் மூலவர்களில் ஒருவர்) தரீகா வஹ்ஹாபி அமைப்பான நூரிஷா தரீகா இவரின் தவறான கொள்கைகளையே பின்பற்றுகிறது.

5.    பதாவா ரஷீதிய்யா – ஆசிரியர்: ரஷீத் அஹ்மது கங்கோஹி (தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத்தின் தரீகா அமைப்பான ரஷீதிய்யா என்ற தவறான தரீகாவின் தலைவர்)

6.    பராஹீனே காத்திஆ – ஆசிரியர்: கலீல் அஹ்மது அம்பேட்டி (வழிகெட்ட தேவ்பந்திய தப்லீக் தலைவர்களில் ஒருவர்)
 

மேற்கண்ட நூல்களில் தேவ்பந்திய வஹ்ஹாபிகள் நபிகளாரைப் பற்றி கூறியுள்ள வாசகங்களைப் படித்தால் திரைப்படம் எடுத்த யூத, கிறித்துவ விஷமிகளை விட இந்த கேடு கெட்ட வஹ்ஹாபிய தப்லீக் தலைவர்களையே முதலில் கண்டித்து ஒதுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுப்பீர்கள்.

நம்மை ஏமாற்ற  வேஷம் போடும்  தமிழக வஹ்ஹாபிகளின், பீ.ஜே.க்களின், நஜாத்வாதிகளின், தேவப்ந்து தப்லீக் ஜமாஅத்தினரின் கபட வேடத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

தேவ்பந்தின் பத்திரிகையான 'தஜல்லி 1959 பிப்ரவரி – மார்ச்' மாத இதழில் அதன் ஆசிரியர் ஆமிர் உஸ்மானி தேவ்பந்தி கூட 'தப்லீக் தலைவர்கள் தமது தவறான கொள்கைகளை விட்டு விட வேண்டும்' என்று வேண்டு கோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. மேலும் கூறுகிறார் (மேற்கண்ட) நமது தவறான வஹ்ஹாபியக் கொள்கைகளைத் தாங்கிய நூல்களை நடுரோட்டில் வைத்து எரித்து விடுங்கள்' என்றும் கூறியிருப்பதையும் கருத்தில் கொண்டு தமிழக தப்லீக்வாலாக்கள் தவ்பாசெய்து தப்லீக் ஜமாஅத்தை விட்டு ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.

இந்த பாதிரியார்  வில்லியம் மஸீஹின் கேள்விகளுக்கு  சுன்னத்வல் ஜமாஅத்தார்களைத் தவிர வேறு எந்த வழிகெட்ட இயக்கங்களாலும் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சுன்னத் வல் ஜமாஅத்தார் தான் நபிகளாரை நித்திய ஜீவிதம் உள்ளவர்கள் என்று ஈமான் கொண்டுள்ளார்கள். நபிகளாருக்கு மறைவான ஞானம் வழங்கப்பட்டுள்ளதாக ஈமான் கொண்டுள்ளார்கள். நபிகளார் அவர்கள்  எந்த படைப்பிற்கும் நிகரில்லாத மிக உன்னதமான படைப்பு என ஈமான் கொண்டுள்ளார்கள். எனவே வஹ்ஹாபிகள், தேவ்பந்திகளே, பாதிரியார் வில்லியம் மஸீஹ் கூறுவதைக் கொண்டாவது உங்களது கொள்கைகளை திருத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

-முஹிப்பிர் ரஸூல் சபை, சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.
கைபேசி: 9171890163, 9025752312.
 

ஜும்ஆ நாளின் சிறப்புகள்

சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு,
நூல்: திர்மிதி

'இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்: 'வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்'

ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்'(ஆதாரம்: அஹ்மத்)
மற்றொரு அறிவிப்பில் ஜும்ஆ அரஃபா நாளைவிடவும், இரு பெருநாட்களை விடவும் சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ 

ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

 

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.

ஜும்ஆ என்ற சொல்லுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். தொழுகைக்காக மக்கள் ஒன்று கூடுவதினால் இத் தொழுகைக்கு ஜும்ஆ தொழுகை என்றும், இதே நாளில் ஆதி நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்கள் துணைவியார் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அரஃபா பெருவெளியில் ஒன்று சேர்ந்ததினால் இந்நாளுக்கு ஜும்ஆ நாள் என்றும் பெயர் வழங்கலாயிற்று. இந்நாளில் அதிகமாக ரஹ்மத்தின் வாயில்கள் திறந்து விடப்படுவதாலும், இந்நாளில் அல்லாஹ்வின் மட்டில்லா அருட்கடாட்சங்கள் வழிந்தோடுவதாலும் இந்நாளை யவ்முல் மஜீது (அதிகம் நற்கூலி பெறும் நாள்) என வானவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டுமே உரிய வணக்கமாகும்.

மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட இத் தொழுகை பெருமானாரின் ஹிஜ்ரத்திற்கு முன்பாக மதீனாவின் அருகிலுள்ள நகீவுல் கல்மாத் என்னும் சிற்றூரில் அஸ்அத் இப்னு ஜியாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாமாக நின்று ஜும்ஆ நடத்தினார்கள். ஜும்ஆ என்று முதன் முதலில் பெயர் சொல்லியது கஅபு இப்னு லுஅய் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜும்ஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூத்

'உங்களில் எவரும் ஜும்ஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) நூல்: புகாரீ

எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குளித்து, பல் துலக்கி, தன்னிடம் இருக்கின்ற வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு, தன்னிடம் இருக்கின்றவற்றில் நல்ல ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு சென்று, பள்ளியில் இருக்கின்ற மனிதர்களை கடந்து செல்லாமல் தன்னால் முடியுமான அளவு தொழுதுவிட்டு மௌனமாக இருந்து இமாம் சொல்வதை சிறந்த முறையில் செவிமெடுத்துவிட்டு தொழுகை முடியும் வரை இருக்கின்றாரோ அவருடைய முந்தைய வெள்ளிக்கிழமைக்கும் இந்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்' (ஆதாரம்: அஹ்மத்)

கிழக்கு வெளுத்ததிலிருந்து ஜும்ஆவுக்குப் போகுமவரை எந்த நேரத்திலாவது குளிக்கலாம். அது சுன்னத்து முஅக்கதாவாகும். ஆனால் ஜும்ஆவுக்கு நெருக்கமான நேரத்தில் குளிப்பது ஏற்றமாகும். ஜும்ஆவுடைய குளிப்பு தவறிவிட்டால் அந்த நிய்யத்தைக் கொண்டு மறுபடி களா செய்வது சுன்னத்தாகும். தண்ணீரை உபயோகிக்க முடியாவிட்டால் மண்ணைக்கொண்டு தயம்மும் செய்வது சுன்னத்து.

ஹன்பலீ மத்ஹபில் ஜும்ஆவின் குளிப்பு வாஜிபாகும். அதில் தேய்த்துக் குளிப்பதை விட்டாலும் அதனைக் களாச் செய்வது அந்த மத்ஹபில் அவசியமாகும்.

'ஜும்ஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ

'ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு' என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை' என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

ஹாஷியா இக்னாஃ என்ற நூலில் எழுதப் பட்டுள்ள மிகப் பொருத்தமான நேரமாகிறது, கதீப் மிம்பரில் ஏறிய நேரத்திலிருந்து தொழு முடிக்கும் நேரம் வரையிலாகும். ஆகையால் கதீப் குத்பாவில் ஓதுகின்ற துஆவுக்கு உள்ளச்சத்துடன் மெதுவாக கைகளை உயர்த்தாமல் ஆமீன் கூறிக் கொள்ள வேண்டும்.

'ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்ததிலிருந்து மதியம் வரையிலுள்ள நேரத்தை ஆறு பகுதிகளாக பிரித்து அதன் முதல் பகுதியிலிருந்து இறுதி பகுதிவரைக்கும் ஜும்ஆவிற்கு வரும் நபர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

'ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.

இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

'மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.

இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.

மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.

ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்,

مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ۖ وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَىٰ إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ

 

'நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்' என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு,நூல்: அபூதாவூத்

ஜும்ஆவிற்கு செல்கிறவன் அழகிய உடையணிந்தும், நோன்பில்லாதவன் கண்ணுக்கு தோற்றாத மணம் பூசுவதும், தாடியை ஒதுக்கி முகவேலை செய்து மூக்கு, அக்குள் ஆகியவற்றின் முடிகளைக் களைந்து, நகம் வெட்டிக் கொள்வதும் சுன்னத்தாகும்.

தாடியை சரிபடுத்தி சீப்பைக் கொண்டு சீவுவதும், ஒற்றைப்படையாகக் கண்களுக்கு சுருமாக்ககோலால் சுருமா இடுவதும், தனக்குத் தகுதியான தலைப்பாகைக' கட்டுவதும், அதைப் பின் பக்கத்தில் தொங்கவிடுவதும் சுன்னத்தாகும்.

கதீபுக்கு அருகிலிருப்பதும், அவரைப் பார்ப்பதும் சுன்னத்து. ஒருவர் தான் உட்கார்ந்த இடத்தில் வேறொருவரை மாற்றி வைத்துவிட்டு அவர் வேறு இடத்திற்கு மாறிச் செல்வது மக்ரூஹ். மனிதர்களை மிதித்துக் கொண்டு செல்வது ஹராம். தான் உட்காருவதற்காக மற்றொருவரை அவ்விடத்திலிருந்து எழுப்புவது ஹராம்.

ஜும்ஆவிற்கு போகும்போது தூரம் கூடுதலான வழியில் கண்ணியமான முறையில் காலால் நடந்து போய், பிறகு தூரம் குறைவான வழியில் திரும்பி வருவது சுன்னத்தாகும். ஆனால் நேரம் நெருக்கடியாக இருப்பின் சுன்னத்தல்ல.

ஜும்ஆவின் பலனை இழக்கும் செயல்கள்:

'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

'ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

'அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

கதீபு மிம்பரில் உட்கார்ந்த பிறகு எந்தத் தொழுகையைத் தொழுவதும் மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும். ஆனால் ஒருவர் தொழ ஆரம்பித்த பின் குத்பா துவக்கப்பட்டு விட்டால் விரைவாக  தொழுது முடிப்பது வாஜிபாகும்.

ஷாபிஈ மத்ஹபில் குத்பா ஓதும் போது ஒருவர் வந்தால் தஹிய்யத்துல் மஸ்ஜித் மட்டும் தொழுவது சுன்னத். அதை விரைவாக முடிப்பது வாஜிப்.

ஜும்ஆ நாளில் ஓத வேண்டியவைகள்:

ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ரலியல்லாஹு அன்ஹு), நூல் : ஹாகிம்

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, 'நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்

ஜும்ஆ தொழுகை முடிந்து காலை மடக்கும் முன்பாக அல்லது யாரிடமும் பேசும் முன்பாக ஸூரத்துல் பாத்திஹா, இக்லாஸ், பலக், நாஸ் ஸூராக்கள் ஆகியவற்றை ஏழு முறை ஓதுவதும் அத்துடன் ஸலவாத்தை ஓதுவதும் சுன்னத்.

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 

அத்துடன் ஆயத்துல் குர்ஸி, குர்ஆனிலுள்ள அத்தியாயம் 3 வசனம் 18 யை ஓதுவது சுன்னத்தாகும்.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

 

அத்துடன் ஸூரத்துல் பகராவின் கடைசி ஆயத்துக்களை (2:285) கடைசி வரையிலும், ஸூரத்துல் காபிரூன் ஸூராவையும் ஓதுவது ஸுன்னத்.

ஈமான் பாதுகாப்பிற்காக ஜும்ஆ தொழுதபின் பின்வரும் இரண்டு பாடல்களையும் ஐந்து தடவை மனநெகிழ்வுடன் படிப்பது நல்லதென்று அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக பாஜூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

اِلٰهِيْ لَسْتُ لِلْفِرْدَوْسِ اَهْلًا ،

وَلَآ اَقْوٰى عَلٰى نَارِ الْجَحِيْمِ ،

فَهَبْلِيْ تَوْبَةً وَّاغْفِرْ ذُنُوْبِيْ ،

فَاِنَّكَ غَافِرْ الذَّنْبِ الْعَظِيْمِ

பொருள்: என்னுடைய இரட்சகனே! நான் பிர்'தவ்ஸ் என்னும் சொர்க்கத்திற்குத் தகுதியானவன் அல்லன், நரக நெருப்பின் மீது நான் சக்தி பெறவும் மாட்டேன்.

எனவே எனக்கு தவ்பா செய்யும் தன்மையை வழங்கி என்னுடைய பாவங்களை மன்னித்திடுவாயாக! நிச்சயமாக நீ மிகப்பெரும் பாவத்தையும் மன்னிக்கிறவனாய் இருக்கிறாய்.

குத்பாவுடைய பாங்குக்குப் பின் ஜும்ஆ தொழுமுடியும் வரை வியாபாரம், தொழில் ஆகியவை செய்வது ஹராமாகும். அன்று ஜவால் ஆனபின் குத்பாவுடைய பாங்குக்கு முன் வியாபாரம் தொழில் செய்வது மக்ரூஹ்.

வெள்ளிக்கிழமை கிழக்கு வெளுத்தபின் ஆகுமான பிரயாணம் செய்வது ஹராம். ஆனால் இடைவழியில் ஜும்ஆ கிடைக்கும் என்ற நம்பிக்கையிருப்பின் அல்லது வழித்தோழர்கள் அவனை விட்டுச் சென்று அதனால் சிரமம் ஏற்பட்டுவிடுமென்றிருந்தால் செல்வது ஹராமல்ல. வெள்ளிக்கிழமை இரவில் பிரயாணம் செய்வது மக்ரூஹ்.

திருக்குர்ஆன் ஸூராக்களின் சிறப்புகள்- Significance of Al Quran

 முஹம்மதிப்னு முஹம்மதிப்னு முஹம்மதிப்னு அல் ஜஸ்ரீ ஷாஃபி;யீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  கோர்வை செய்த அல்ஹிஸ்னுல் ஹஸீன் என்னும் துஆக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து….

1. குர்ஆனை ஓதி வாருங்கள். அது கியாமத்து நாளில் அதனை ஓதியவருக்குப் பரிந்துரை செய்யும் நிலையில் வரும். -நபிமொழி.

2. என்னை திக்ரு செய்வதை விட்டும், என்னிடம், கேட்பதை விட்டும் குர்ஆன் ஓதுவதிலேயே ஒரு வர் ஈடுபட்டிருந்தால், கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விடச் சிறந்ததை அவருக்கு நான் கொடுப்பேன்’.-ஹதீது குத்ஸி.

3. அல்லாஹ்வுடைய திருவேதத்தின் சிறப்பாகிறது, அல்லாஹுதஆலா தன் படைப்பினங்களை விட எவ்வாறு சிறப்புள்ளவனாக இருக்கிறானோ அது போன்றதாகும் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

4. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனைக் கற்று, அதனை ஓதி, அதன்படி அமல் செய்பவருக்கு உதாரணமாகிறது, அதனுடைய வாடை எல்லா இடங்களிலும் வீசிக்கொண்டிருக்கிற, ஒரு தோல்பையைப் போன்றதாகும். குர்ஆனைக் கற்று, அதன்படி அமல் செய்யாமல் தூங்கி விடுகிறவருக்கு உதாரணம், வாய் கட்டப்பட்ட கஸ்தூரி நிரப்பப்பட்ட வாயைப் போன்றதாகும்’ என்று ஹதீதில் வந்துள்ளது.

5. திருக்குர்ஆனில் நன்கு தேர்ச்சியடைந்தவர்கள், கண்ணியவான்களும், நல்லோர்களுமாகிய எழுதுகின்ற மலக்குகளுடன் இருப்பார்கள். எவர் குர்ஆனை திக்கித் திக்கிச் சிரமமப்பட்டு ஓதுகிறாரோ அவருக்கு இரண்டு மடங்கு நற்கூலிகள் இருக்கின்றன’ என்று ஹதீதில் வந்துள்ளது.

6. அல்லாஹ்வுடைய திருவேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுகிறவாகு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அது போன்று  பத்து மடங்கு நன்மை உடையதாகும். அலிப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று நான் சொல்லவில்லை. அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

7. (கியாமத்து நாளில்) குர்ஆன் உடையவரை (குர்ஆன் ஓதி அதன்படி அமல் செய்தவரை) நோக்கி, குர்ஆனை ஓதிக் கொண்டே செல்வாயாக! அதன் மூலம் (சுவனத்தில்) படித்தரங்களில் முன்னேறிச் செல்வாயாக! இன்னும் உலகில் நீ குர்ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதியது போல் இங்கும் நீ நிறுத்தி நிறுத்தி ஓதி முன்னேறுவாயாக! நீ ஓதுகின்ற கடைசி ஆயத்தின் எல்லையில்தான் உன்னுடைய தங்குமிடம் இருக்கிறது என்று சொல்லப்படும் என்று ஒரு ஹதீதில் வந்திருக்கிறது.

8. இரண்டு மனிதர்களுடைய விஷயத்தில் தவிர பொறாமை வைத்தல் கூடாது. ஒருவர்: அல்லாஹுத்தஆலா அவருக்கு குர்ஆனுடைய அறிவைக் கொடுத்தான். அவர் அதனைக் கொண்டு இரவுக் காலங்களிலும், பகல் காலங்களிலும் அமல் செய்கிறாரே அவராகும். இரண்டாமவர்: அல்லாஹுத்தஆலா அவருக்கு செல்வத்தைக் கொடுத்தான். அதனை அவர் இரவு காலங்களிலும், பகல் காலங்களிலும் (அல்லாஹ்வின் கட்டளைப் படி) செலவு செய்கிறாரே அவராகும் என்று ஒரு ஹதீதில் அருளப்பட்டுள்ளது.

ஸூரத்துல் பாத்திஹாவின் சிறப்பு:

1. ‘குர்ஆன் உடைய ஸூராக்களிலேயே மிக்க மகத்துவம் வாய்ந்ததாகும். திரும்ப ஓதப்படக் கூடிய ஏழு ஆயத்துகளைக் கொண்டதும் மகத்தான குர்ஆனுமாகும்’ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ‘சூரத்துல் பாத்திஹாவாகிறது அர்ஷுகு;கு கீழுள்ள (பிரத்தியேக) இடத்திலிருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது’ என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்.

3. ‘ஒரு தடவை ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வருகை தந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது மேலிருந்து (வானத்திலிருந்து) ஒரு பெரும் சப்தத்தைக் கேட்டார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் தலையை உயர்த்திப் பார்த்து, ‘இது வானத்திலுள்ள கதவொன்று திறக்கப்படுகின்ற சப்தம். அதன் வழியாக ஒரு மகலக்கானவன் பூமிக்கு இறங்கி வருகிறார். அவர்கள் இதுவரை பூமிக்கு வந்ததே கிடையாது என்று கூறினார்கள். அதற்குள் அந்த மலக்கானவர் அங்கு வந்து ஸலாம் கூறி விட்டு, ‘இரண்டு ஒளிகளைக்கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். அவ்விரண்டு ஒளிகளும் உங்களுக்கு முன்னுள்ள எந்த நபிக்கும் கொடுக்கப்படவில்லை. அவை ஸூரத்துல் பாத்திஹாவும், ஸூரத்துல் பகராவுடைய கடைசி இரண்டு ஆயத்துமாகும். அவ்விரண்டிலிருந்து ஓர் எழுத்தை நீங்கள் ஓதினாலும் அதற்குரிய நன்மை கொடுக்கப்படும்’ என்று கூறினார்.

ஸூரத்துல் பகராவின் சிறப்புகள்

1. ‘ஸூரத்துல் பகராவை ஓதுகின்ற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான’; என்று ஒரு ஹதீதிலும்,

2. ‘ஸூரத்துல் பகராவை ஓதிக் கொள்ளுங்கள். ஏனெனில் அதனை ஓதிவருவது பரக்கத்தாகும். அதை விடுவது நஷ்டமாகும். வீணானவர்கள் தாம் அதனை ஓதச் சக்தி பெற மாட்டார்கள்’ என்று மற்றொரு ஹதீதிலும்,

3. ‘ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் உயர்ந்த நிலை இருக்கிறது. குர்ஆனின் உயர்ந்த நிலை ஸூரத்துல் பகராவாகும்’ என்று வேnhறாரு ஹதீதிலும்,

4. ‘எவரொருவர் சூரத்துல் பகராவை இரவில் ஓதினால், அன்றிலிருந்து மூன்று இரவுகள் ஷைத்தான் அவ்வீட்டில் நுழைய மாட்டான்’;என்று இன்னொரு ஹதீதிலும்,

5. ‘எனக்கு சூரத்துல் பகரா முதல் தரமான திக்ரிலிருந்து லவ்ஹுல் மஹ்பூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பிறிதொரு ஹதீதிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகரா, ஆலு இம்ரான் இரு ஸூராக்களின் சிறப்புகள்:

பிரகாசிக்கின்ற இரண்டு ஸூராக்களாகிய பகரா, ஆலு இம்ரான் இரண்டையும் ஓதிக் கொள்ளுங்கள். ஏனெனில், அவ்விரண்டும் கியாமத்து நாளில் இரண்டு மேகக் கூட்டங்களாக அல்லது அணிவகுத்து வரும் இரண்டு பறவைக் கூட்டங்களாக வந்து, அவ்விரண்டையும் ஓதியவருக்காக(அல்லாஹுதஆலாவிடம்) வாதிடும்’ என்று ஒரு ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயத்துல் குர்ஸியின் சிறப்பு:

1. ஆயத்துல் குர்ஸியாகிறது அல்லாஹ்வுடைய வேதத்தில் மகத்தான ஆயத்தாகும் என்று ஒரு ஹதீதிலும்,

2. குர்ஆனுடைய ஆயத்துகளில் தலைமையானதாகும் என்று மற்றொரு ஹதீதிலும்,

3. ஆயத்துல் குர்ஸி ஓதி ஊதப்படும் அல்லது எழுதிப் போடப்படும் எந்தப் பொருளின் மீதும், குழந்தைகளின் மீதும் ஷைத்தான் நெருங்குவதில்லை என்று வேறொரு ஹதீதிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகராவின் கடைசி இரு ஆயத்துக்களின் சிறப்புகள்:

‘ஆமனர் ரஸூலு..’ என்பதிலிருந்து கடைசிவரையிலுள்ள (ஸூரா பகராவின் கடைசி) இரண்டு ஆயத்துக்கள் ஒரு வீட்டில் ஓதப்பட்டால் மூன்று நாட்களுக்கு ஷைத்தான் அவ்வீட்டை  நெருங்குவதில்லை’ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அல்லாஹுத் தஆலா ஸூரத்துல் பகராவை இரண்டு ஆயத்துக்களைக் கொண்டு முடித்துள்ளான். அவ்விரண்டையும் அல்லாஹுத்தஆலா தன்னுடைய அர்ஷுக்குக் கீழுள்ள புதையலிலிருந்து எனக்கு வழங்கியுள்ளான். எனவே அவ்விரண்டையும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய பெண்களுக்கும், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள். ஏனெனில், நிசச்யமாக அவை தொழுகையின் சாரமாகவும், குர்ஆனின் கருத்தாகவும், மகத்தான துஆவாகவும் இருக்கின்றன’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

ஸூரா அன்ஆமின் சிறப்பு:

சூரத்துல் அன்ஆம் இறங்கிய போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று கூறிவிட்டு, இந்த ஸூராவிற்காக அடிவானத்தை அடைத்து கொள்ளுமளவிற்கு மலக்குகள் வருகை தந்தார்கள்’ என்று கூறினார்கள்.

ஸூரா கஹ்பின் சிறப்புகள்:

1. எவரொருவர் சூரத்துல் கஹ்பை ஜும்ஆவுடைய பகலில் ஓதுகிறாரோ அவருக்கு அடுத்த ஜும்ஆ வரை உள்ள தினங்கள் ஒளியினால் இலங்குகின்றன’ என்றும்,

2. எவர் சூரத்துல் கஹ்பை ஜும்ஆவுடைய இரவில் ஓதுகிறாரோ அவருக்கும் கஃபாவுக்கும் இடையே ஓர் ஒளி இலங்கிக் கொண்டிருக்கும் என்றும்,

3. எவர் ஸூரத்துல் கஹ்பை அது இறங்கியது போலவே, (சரியான முறையில்) ஓதுகிறாரோ அவருக்கு அவருடைய இல்லத்திலிருந்து கஃபாவை ஒரு ஒளி இருக்கும் என்றும்,

4. எவரொருவர் சூரத்துல் கஹ்புடைய கடைசி பத்து ஆயத்துக்களை ஓதி வருகிறாரோ, அவர் காலத்தில் தஜ்ஜால் வெளியானால் அவன் அவர் மீது சாட்டப்படமாட்டான் என்றும்,

5. எவரேனும் ஒருவர் சூரத்துல் கஹ்பை ஓதினால் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை (உள்ள தொலைவு) கியாமத்து நாளில் அது ஒளியாக அவருக்கு ஆகிவிடும் என்றும்,

6. எவரொருவர் சூரத்துல் கஹ்புடைய கடைசி பத்து ஆயத்துக்களை ஓதி வந்தால், (அக்காலத்தில்) தஜ்ஜால் தோன்றினால், அவன் அவருக்கு எந்த இடையூறும் செய்ய முடியாது என்றும்,

7. எவர் ஸூரத்துல் கஹ்புடைய ஆரம்பத்திலுள்ள பத்து ஆயத்துக்களை மனனம் செய்து கொள்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,

8. சூரத்துல் கஹ்புடைய ஏதேனும் பத்து ஆயத்துக்களை மனனம் செய்தால் அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,

9. எவரொருவர் சூரத்துல் கஹ்புடைய கடைசி பத்து ஆயத்துக்களை மனனம் செய்து ஓதி வருகிறவர் தஜ்ஜாலுடைய குழப்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,

10. ஸூரத்துல் கஹ்புடைய முதல் மூன்று ஆயத்துக்களை ஓதி வருபவர் தஜ்ஜாலுடைய குழப்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்றும்,

11. எவரொருவர் தஜ்ஜாலைப் பெற்றுக் கொண்டால், (தஜ்ஜால் அவர் முன் வந்தால்) அவன் மீது ஸூரத்துல் கஹ்புடைய ஆரம்பத்திலுள்ள சில ஆயத்துக்களை ஓதவும். ஏனெனில், அது அவனுடைய குழப்பத்தை விட்டும் அவருக்குப் பாதுகாப்பதாகும்’ என்றும் ஹதீதுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாஹா, தாஸீன், ஹாமீம் சூராக்களின் சிறப்புகள்:

‘தாஹா என்று ஆரம்பிக்கபட்பட்டுள்ள ஸூராவும், தாஸீன் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள  சூராக்களும், ஹாமீம் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள ச10ராக்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வேதப்பலகையிலிருந்து எனக்குக் கொடுக்கப்பட்டவையாகும்’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் அருளினார்கள்.

ஸூரா யாஸீனின் சிறப்பு:

ஸூரா யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும். அல்லாஹுத்தஆலாவையும், மறுமையையும் நாடியவராக ஒருவர் இதனை ஓதினால், அவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படும். எனவே, உங்களில் இறந்து விட்டவருக்காக இதனை ஓதுங்கள்’ என்று ஒரு ஹதீதில் வந்துள்ளது.

ஸூரத்துல் பத்ஹ் உடைய சிறப்பு:

‘சூரியன் ஒளிப்படும் (உலகப்) பொருட்கள் அனைத்தை விடவும் சூரத்துல் பத்;ஹ் எனக்கு மிக விருப்பமானது என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் அருளினார்கள்.

ஸூரத்துல் முல்க் உடைய சிறப்பு:

1. முப்பது ஆயத்துக்களை கொண்ட சூறத்துல் முல்க் அதனை ஓதிவரும் மனிதருக்கு மன்னிப்பளிக்கப்படும் வரை அது அவருக்கு (அல்லாஹ்விடம்) சிபாரிசு செய்யும் என்று ஒரு ஹதீதிலும்,

2. அதனை ஓதிவருபருக்கு அல்லாஹ் மன்னிக்கிறவரை அது மன்னிப்புத் தேடுகிறது என்று மற்றொரு ஹதீதிலும்,

3. ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் சூறத்துல் முல்க் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் அருளியுள்ளதாக ஒரு ஹதீதிலும்,

4. ஒரு மனிதருடைய கப்ரில் (வேதனை செய்யும் மலக்குகள்) அவருடைய கால்களின் பக்கமாக வருவார். (அப்போது அவர் ஓதி வந்த ஸூரத்துல் முல்க்காகிறது) ‘இவர் என்னை (தொழுகையில் நின்று) ஓதி வந்தார். எனவே, இவரிடத்தில் வர உங்களுக்கு எவ்வித வழியுமில்லை’ என்று கூறும். அந்த மலக்குகள் அவருடைய நெஞ்சின் பக்கமாக, அல்லது வயிற்றின் பக்கமாக வருவார்கள். அப்பொழுதும் அது அவ்வாறே கூறும். பிறகு அவர்கள் தலைப்பபக்கமாக வருவார்கள். அது அவ்வாறே கூறும். இறுதியாக அது கப்புருடைய வேதனையை விட்டும் அவரைப் பாதுகாக்கும் என்று மற்றொரு ஹதீதிலும்,

ஸூரத்துல் முல்க் உடைய சிறப்பு பற்றி தவ்ராத் வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. எவர் இதனை இரவு நேரங்களில் ஓதிவருகிறாரோ அவர் அதிகமான, இனிமையான அமலைச் செய்து விட்டார் என்று வேறொரு ஹதீதிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூறா ஜில்ஜாலுடைய சிறப்பு:

‘இதா ஜுல்ஜிலத் சூறா குர்ஆனில் நாலிலொரு பகுதிக்கு சமமாகும்’ என்பதாகவும், ‘குர்ஆனில் பாதிக்கு சமமானதாகும் ‘என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘யாரஸூலல்லாஹ், எல்லாக் கருத்துக்களையும் பொதிந்து கொண்ட ஒரு ஸூராவை எனக்கு சொல்லித் தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அப்பொழுது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் இதாஜுல்ஜிலத் ஸூராவை அவருக்கு ஓதிக் காட்டினார்கள். நபியவர்கள் ஓதி முடித்தவுடன், ‘தங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக நான் எப்பொழுதும் இதைவிட அதிகமாக்க மாட்டேன்’ என்று அம்மனிதர் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அப்பொழுது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸலல்ம் அவர்கள் , இந்த மனிதர் வெற்றி அடைந்து விட்டார்’ என்று இரண்டு தடவை கூறினார்கள்.

சூறா காபிரூன் உடைய சிறப்பு:

குல் யாஅய்யுஹல் ஸூரா குர்ஆனுpல் கால் பகுதியாகும் என்றும் அல்லது (நன்மையால்) கால் பகுதிக்குச் சமமாகும் என்றும் ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜ்ருடைய பர்ளுக்கு முன் (சுன்னத்துத் தொழுகையில்) ஓத வேண்டிய இரண்டு ஸூராக்கள் மிக நல்லதாகி விட்டன. அவை குல் யாஅய்யுஹல் காபிரூன், குல்ஹுவல்லாஹு அஹது ஆகிய இரண்டுமாகும் என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூறா இதாஜாஅ உடைய சிறப்பு:

‘இதா ஜாஅ நஸ்ருல்லாஹிஜ என்ற சூறா குர்ஆனில் கால் பகுதியாகும் ‘ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூறா இக்லாஸ் உடைய சிறப்பு:

1.குல்ஹுவல்லாஹு சூறா குர்ஆனில் மூன்றிலொரு பகுதியாகும் என்றும் அல்லது மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும் என்றும் ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஸஹாபி ஒருவர் இமாமாக இருந்தார். அவர் ஒவ்வொரு தொழுகையிலும் குல்ஹுவல்லாஹு சூராவை ஓதுபவராக இருந்தார். இதனை மற்ற ஸஹாபாக்கள் நபியவர்களிடம் தெரிவித்த போது அம்மனிதரைப் பற்றி விசாரித்தார்கள். நான் அதனை விரும்புகிறேன் என்று அவர் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வும் அவரை விரும்புகிறான் என்று அவரிடம் தெரிவித்து விடுங்கள் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.

3. இவ்வாறே ஒரு ஸஹாபி தொழுகையில் மற்ற ஸூராக்களுடன் சூரத்துல் இக்லாஸை அதிகமாக ஓதி வருபவராக இருந்தார். அவரிடத்தில் நபி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் அதை விரும்புவது உம்மை அது சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும் என்று அருளினார்கள்.

4. ஒரு மனிதர் குல்ஹுவல்லாஹு சூராவை ஓதிக் கொண்டிருக்கச் செவியுற்ற ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவருக்கு சுவர்க்கம் வாஜிபாகிவிட்டது என்று அருளினார்கள்.

5. என் உயிர் யார் வசம் இருக்கிறதோ அந்த ஒருவனின் மீது ஆணையாக சூரத்துல் இக்லாஸ் குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும்’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

6. தூங்கச் செல்லுகின்ற ஒருவர் படுக்கையில் தன் வலது விலாப்புறத்தின் மீது படுத்துக் கொண்டு பிறகு நூறு தடவை குல்ஹுவல்லாஹு சூறாவை  ஓதித் தூங்கினால், கியாமத்து நாளில் அல்லாஹுத்தஆலா, ‘என்னுடைய அடியானே! உன் வலப்புறமாக சுவர்க்கத்தில் நீ பிரவேசிப்பாயாக!’ என்று கூறுவான் என ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸூரத்துல் பலக், ஸூரத்துன்நாஸ் ஸூராக்களின் சிறப்புகள்:

ஓதப்படுகின்ற இரண்டு சிறந்த ஸூராக்களை நான் கற்றுத்தர வேண்டாமா? என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உக்பத்துப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவிய பின், குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் இரண்டையும் கூறினார்கள்.

‘இவ்விரண்டு சூறாக்களையும் ஓதிக் கொள்வீராக! அவ்விரண்டையும் போல் வேறு எதனையும் நீர் ஓத முடியாது என்று மற்றோர் அறிவிப்பில் கூறியுள்ளார்கள்.

‘குல் அஊது ரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய இரண்டு சூறாக்கள் இறங்கும் வரை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின்கள், மனிதர்களின் கண்ணேறுக்கு ஆகியவற்றிற்கு பல துஆக்களைக் கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரண்டு சூறாக்களும் இறங்கிய பின் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விட்டார்கள்’ என்று ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

‘அல்லாஹ்விடம் எதையேனும் கேட்க கூடியவரோ, அல்லது எதை விட்டேனும் பாதுகாப்புத் தேடக் கூடியவரோல இந்த இரண்டு ஸூராக்களைக் கொண்டு கேட்பது, பாதுகாப்புத் தேடுவது போன்று வேறு எதைக் கொண்டும் பாதுகாப்புத் தேடமுடியாது’ என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இவ்விரண்டு சூறாக்களையும் படுக்கும்போதெல்லாம், விழித்து எழும்போதெல்லாம் ஓதிக் கொள்வீராக!’ என்று மற்றொரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குல் அஊது பிரப்பில் பலக் சூறாவை ஓதிக் கொள்வீராக! ஏனெனில், அதைவிட அல்லாஹு தஆலாவிற்கு மிக விருப்பமானதும அவனிடத்தில் சேரும்படியானதுமாகிய வேறு எந்த ஸூராவையும் நீர் ஓதிட முடியாது. ஆகையால், அது உனக்குத் தவறிவிடாமல் இருக்குமளவுக்கு நீர் சக்தி பெற்றால் அவ்வாறே செய்து கொள்ளவும். (அதாவது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதிக் கொள்ளவும்) என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

அல்லாஹுத்தஆலாவிடம் சென்றடையும் விஷயங்ளில் குல்அஊது பிரப்பில் பலக்கைத் தவிர வேறு எதனையும் நீ ஓதிட முடியாது என்று ஒரு ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு இறங்கிய குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய இந்த ஆயத்துகளை நீ பார்க்கவில்லையா? இவற்றைப் போன்று வேறு எதனையும் நீ காணவே முடியாது’ என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும்.

அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:


شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ

'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)

 'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

மேலும் ரமலான் முதலாவது இரவில் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஹூபுகள் இறக்கப்பட்டன. அதன்பின் 700 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் ஆறாவது நாளில் தௌராத் வேதம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் பிறகு 500 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் 12ல் ஜபூர் வேதம் நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அதன் பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ரமலான் 18ல் இன்ஜீல் வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதன்பின் அறுநூற்று இருபது ஆண்டுகளுக்கு பின் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமும் அருளப்பட்டது.

வான்மறைகள் வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம் தான் இது.

மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும், ரமலான் எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்தியை அடைந்து கொள்வான் என்றும் கூறியுள்ளார்கள்.

ரமலான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல்களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமலான்!

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ ! அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்

நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)

இன்னுமொரு அறிவிப்பில் வருகிறது: ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், 'ஷஃபான் மாதத்தின் இறுதியிலே அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள்,' உங்கள் மீது பரக்கத் செய்யப்பட்ட ஒரு மாதம் நிழலிட்டு இருக்கிறது. இம் மாதத்திலே ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது. இம்மாதத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதைக் கட்டாயக் கடமையாக விதித்துள்ளான். அம் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதை சுன்னத்தாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒருவர் ஒ ருபர்ளை நிறைவேற்றினால் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போலவும், மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவரைப் போன்றும் ஆவார். மேலம் முஃமீன்களின் இரணத்தை விஸ்தீரணமாக்கப்படுகின்ற மாதமாகும். எவனொருவன் நோன்பாளிக்கு நோன்பு திறக்க  கொடுக்கின்றானோ அவன் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை பெற்றுக் கொள்கிறான். இது பொறுமையுடைய மாதம் என்று பெருமானார் அவர்கள் கூறிய நேரத்திலே ஸஹாபாக்கள் எல்லாம் 'யாரஸூலல்லாஹ் எங்களில் எவரும் நோன்பு திறக்க கொடுத்த சக்தி பெற்றவராக இல்லையே என்று கேட்க, 'அல்லாஹ் இந்த தவாபை பழத்தாலோ ஒரு முடர் பாலினாலோ அல்லது ஒரு முடர் தண்ணீராலோ நோன்பு திறக்கச் செய்தவர்களுக்கு கொடுக்கின்றான்' என்று கூறினார்கள்.

இன்னுமொரு அறிவிப்பில், எவன் ஒருவன் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறானோ அவனுக்காக மலக்குமார்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் இறைவனிடம் மன்னிப்பு தேடிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மன்னிப்பு தேடுகின்றனர். (ஒரு அறிவிப்பின் படி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லைலத்துல் கத்ர் இரவில் முஸாபஹா செய்கின்றார்கள் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நூல்: முஸ்லிம் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. மற்றொரு நபிமொழி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ரமலான் மாதம் வருகிறது. வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன. எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது. ஷைத்தான்கள் விளங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். நூல்:புகாரி, அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.

ரமலானைக் குறித்து 'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு), திர்மிதி-619
'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

ஹதீது குத்ஸியில் வந்திருக்கிறது, ஆதமின் மக்கள் செய்யும் நோன்பைத் தவிர மற்றெல்லா அமல்களும் அவன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரமாகும். நோன்பு மடட்டும் எனக்குரியது. நான்தான் அதற்கு கூலி கொடுப்பேன் என்றும், (பிறிதொரு இடத்தில்) ஏனெனில் ஆதமின் மகன் எனக்காக அவன் ஊண் குடிப்பு மனோ ,ச்சை ஆகியவைகளை விட்டு விடுகின்றான் என்றும், அல்லாஹ் தனித்து பிரித்து கூறியதற்கு கருத்தாவது நோன்புக்கு  நன்மை அதிகமாக இருக்கிறது. மற்ற அமல்களெல்லாம் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகுவதுடன் அதற்கும் மேலாக நன்மைகள் கிடக்கும் என்பதாகும். ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

'ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408

'சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

லைலத்துல் கத்ரு இரவின் மகிமைகள்.

லைலத்துல் கத்ரு இன்ன இரவு என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது ஆண்டில் ஓர் இரவு என்றும், பாரஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவு என்றும் ரமலானுடைய இருத்தி ஏழாம் இரவு என்றும் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான  சொல் ரமலானில் இருபதுக்குமேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும் கூறப்பட்டிருப்பதால் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களும் பள்ளியில் இஃதிகாப் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதாவது அந்த ஓரிரவு முப்பதினாயிரம் நாட்களைவிட மேலானதாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,

'லைலத்துல் கத்ரு எனும் ஓர் இரவானது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்' என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 97 :3)

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது: ரமலானில் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்பதாம் இரவென்பதாகவும், முதல் பிறை திங்கட்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்றாம் இரவென்பதாகவும், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஏழாம் இரவென்பதாகவும், சனிக்கிழமையாக இருந்தால் இருபத்தி மூன்றாம் இரவு என்பதாகவும், கூறியுள்ளார்கள். 'இந்தக் கணக்குப் படி நான் பருவமடைந்தது முதல் எனக்கு லைலத்துல் கத்ரு தப்பியதே கிடையாது' என்று ஷைகு அபுல்ஹஸன் ஜுர்ஜானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

லைலத்துல் கத்ரு இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவது சுன்னத்:


اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

'யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன், நீ மன்னிப்பை விரும்புகிறாய். ஆகையால், என்னை மன்னித்தருள்வாயாக!'

லைலத்துல் கத்ரு என்று கூறப்பட்டுள்ள 'இன்னா அன்ஜல்னாஹு' என்ற சூராவில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடைவ கூறப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்தியேழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே, இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு இரவு என்று சிலர் கூறியுள்ளனர்.

லைலத்துல் கத்ரு இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்( ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி

லைலத்துல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி,முஸ்லிம்

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்)அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ரு)இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி

'எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!'

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்கள்:புகாரி,முஸ்லிம்

'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்:புகாரி

ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்கள்: புகாரி,முஸ்லிம்

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம் காட்டாத அளவு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா); நூல்:முஸ்லிம்

'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.'

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி,முஸ்லிம்

லைலத்துல் கத்து இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்து விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும்.அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போன்று இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விரவில் தராவீஹ்க்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்த அளவு திக்ரு, கிராஅத், தஸ்பீஹ் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

'ரஸூல் ஸலல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவு லைலத்துல் கத்ரு இரவை விட மிகச் சிறந்ததாகும்' என 'மவாஹிபுல்லதுன்னிய்யா' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வது-Kidan of Ladies Details

பெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வது

பெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத் என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும்.இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை.

முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.'எவர் இஸ்லாத்தை தழுவுகிறாரோ அவர் கத்னா செய்து கொள்ளவும். அவர் பெரியவராக இருந்தாலும் சரியே என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும், உடம்புக்கு பாதிப்பில்லாத முறையில் கவனமாக இலகுவான முறையில் கத்னா செய்யுங்கள். ஏனெனில் கத்னா செய்வது முகத்தை மிகவும் செழிப்படையச் செய்யக் கூடியதாகவும், திருமணத்தின் போது மிகவும் இன்பமளிப்பதாகவும் இருக்கும்' என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஜல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும் அறிவிக்கும் ஹதீஸில் ,' ஆண் குறியில் கத்னா செய்யப்பட்ட (மொட்டுப் பகுதி) பெண் குறியில் கத்னா செய்யப்பட்ட பகுதியோடு இணைந்து விட்டால் குளிப்பு கடமையாகிவிடும் என்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் 'கிதான்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

பித்ரத்- இயற்கை விசயமாகும் என்பதும் இதனை ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. கத்னா என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு கடமையாகும்.

'ஐந்து விசயங்கள் பித்ரத் இயற்கையைச் சேர்ந்தது. அவைகளாவன: கத்னா செய்வது, மாமஸ்தான முடியை நீக்குவது, மேல் மீசையை கத்தரிப்பது, நகம் வெட்டுவது, கக்கத்து முடியைப் பிடுங்குவது ஆகிய ஐந்துமாகும்.'

பெண்களுக்கு கத்னா செய்வதின் அவசியம்:

'கத்னா செய்வது நிச்சயமாக முகத்தை செழிப்புறச் செய்யும். திருமணத்தின் போது இன்பமாக இருக்கும்'

'நிச்சயமாக கத்னா செய்வது பெண்களுக்கு சங்கையானதாகும்' என்று ஹதீதுகளில் வந்திருக்கிறது.

ஆணுக்குரிய கத்னாவை பகிரங்கமாகவும், பெண்களுக்குரிய கத்னாவை பகிரங்கப்படுத்தாமல் மறைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பது ஹதீதில் கூறப்பட்டிருக்கும் விசயமாகும்.

அத்துடன் ஆண் பிள்ளைக்கு பால் அருந்தக்கூடிய காலத்தில், பிள்ளை பிறந்து முதல் வாரத்தில் அல்லது அதற்கு பின்னால் செய்ய முடியும். பெண் பிள்ளைகளுக்கு பருவ வயதை அடைவதற்கு முன்பாக கத்னா செய்ய வேண்டும் என்பதாக ஹதீதுகள் தெளிவாக அறிவிக்கின்றன.

1994 அக்டோபர் மாதத்தில் எகிப்திலிருந்து வெளிவரும் 'அல் அஸ்ஹர்' என்ற பத்திரிகையில் அல் கிதான்' என்ற தலைப்பில் ஓர் ஆராய்ச்சி கட்டுரை அஷ்ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் அவர்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கத்னா செய்வது இஸ்லாமிய இயற்கை விசயத்தில் உள்ளதாகும் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.

எகிப்து தாருல் இப்தாவின் தலைவரான முஹம்மத் ஸெய்யித் தன்தாவி அவர்கள் கத்னா பற்றிய தெளிவான ஷரீஅத் சட்டங்களை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள்.

இதில் மத்ஹப்களின் புகஹாக்களான சட்ட மேதைகளின் கூற்றுக்கள் ஒன்று பட்டதாகவே காணப்படுகின்றன.

கத்னா செய்வது வாஜிபா-கட்டாய கடமையா? அல்லது ஸுன்னத்தா என்பதில்தான் கருத்து வேறுபாடு இமாம்கள் மத்தியில் நிலவுகிறது. இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் ஆண், பெண் இருபாலரும் கத்னா செய்வது சுன்னத்தாகும். பர்ளு –கட்டாய கடமையைப் போன்று அது கடமையாகாது என்றாலும் அதை விடுவதனால் அவன் பாவியாகிவிடுகிறான் என்கிறார்கள்.

இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கத்னா செய்வது ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறார்கள்.'ஆண்கள் விசயத்தில் கத்னா வாஜிபாகும் என்பதாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் கத்னா விசயமாக இமாம் ஹன்பல் அவர்களிடமிருந்து இரு அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான கூற்று பெண்களுக்கும் கத்னா 'வாஜிப்' கடமை என்பதாகும்.

கத்னா செய்வதால் கிடைக்கும் சுகாதார பயன்கள்:

1. பெண்களுகு;கு கத்னா செய்வது அலங்காரப்படுத்தும் ஒரு செயலாகும். இயற்கையான அளவை விட மேலதிகமாக காணப்படும் பகுதிகளை மாத்திரமே கத்னாவின் மூலம் நீக்கப்படுகிறது.

2. இந்த கத்னா மேற்கொள்ளும் வேலை எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. எனினும் விசேச வைத்தியர்களின் அறிவுரையின் பேரில் ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப கத்னா செய்ய வேண்டும்.

3. கத்னா செய்யப்படாமல் மேலதிகமாக இருக்கும் பகுதியினால் சில பெண்களிடம் சுகாதாரத்திற்குப் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கும் உடல் நலத்திற்கு கேட்டை உண்டாக்கும் நோய்கள் உண்டாகுவதற்கும் இடமுண்டு.

4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் கத்னாவின் போது மென்மையாக நடந்து கொள்வீராக என்று சொன்னதன் மூலம் அறிவுப்பூர்வமான கத்னா முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

நன்றி: நற்செய்தி அக்டோபர் 2008