சிக்கந்தர் துல்கர்ணைன்

சிக்கந்தர் துல்கர்ணைன் ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சித்தியின் மகன் என்றும்,அவர்களின் பெரிய அன்னை மகன் என்றும் இருவித கூற்றுகள் உள்ளன.

துல்கர்ணைன் என்பதற்கு இரு கொம்புகள் உள்ளவர் என்று பொருளாகும்.

அல்முன்திர் அல் அக்பர் பின் மாசுல்ஸமா என்பதே இவர்களின் பெயராகும். அவரின் நெற்றியில் இரண்டு முடிச் சுருள்கள் விழுந்ததன் காரணமாக அவருக்கு துல்கர்ணைன் என்னும் பெயர் ஏற்பட்டதென்றும் கூறப்படுகிறது.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள துல்கர்ணைன் தென் அரபு நாட்டின் பேரரசாயிருந்த துப்பவுல் அக்ரானையே குறிக்கும் என அரபுநாட்டின் தென்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

இவர்தான் கஃபாவுக்கு முதன்முதலில் போர்வை போர்த்தியவர் ஆவார்.

துல்கர்ணைன் எவர் என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இவர் ஒரு நபியா? என்பது பற்றியும் தெளிவான முடிவு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

அவர் யமன் நாட்டில் 2000 யூதரப்பி (யூதஅறிஞர்)களைச் சந்தித்தார். அப்பொழுது அவர்கள் இறுதிநபியின் வரவைப் பற்றி அவரிடம் முன்னறிவிப்பு செய்தனர்.

எனவே அவர் இறுதி நபி குடியேறும் இடத்தை அவர்களின் மூலம் அறிந்து அங்குச் சென்று 400 யூதரப்பிகளுடன் குடியேறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தார்.

பின்னர் அவர் அவர்களனைவரையும் அங்கு வருமாறு பணித்து இறுதி நபியிடம் தம் மடலைத் தருமாறு கூறிவிட்டு சென்றார். அம்மடல் இறுதியாக யூதரப்பிகளின் வழிவந்த அபூ ஐயூப் காலித் இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்தது. அம்மடல் அண்ணல் நபியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதில், நான் இறைவன் ஒருவன் என்று சான்று பகர்கிறேன். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபி என ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக இறுதித் தீர்ப்பு நாளன்று பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன் என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இம்மன்னரின் கூட்டத்தினரைப் பற்றியே அல்லாஹ் தன் திருமறையில் ‘துப்பவு மக்கள்’ என்று குறிப்பிடுகிறான்.

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ

இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? (44:37)
மேலும் அல்லாஹுத்தஆலா,

وَيَسْأَلُونَكَ عَن ذِي الْقَرْنَيْنِ ۖ قُلْ سَأَتْلُو عَلَيْكُم مِّنْهُ ذِكْرًا

(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக. என்று கூறுகின்றான். (18:83)

பெரும்பாலோரின் கருத்துப்படி துல்கர்ணைன் என்பவர் அலெக்சாண்டர் என்னும் மாமன்னரைக் குறிக்கும். அலெக்சாண்டர் என்ற பெயருடன் இரு பேரரசர்கள் இரு வேறு காலகட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மகா அலெக்சாண்டர் என்ற ரோமச் சக்கரவர்த்தி ஒருவர் இருந்தார். இவரின் அமைச்சரவையில் அரிஸ்டாட்டில் என்ற தத்துவஞானி அமைச்சராக இருந்தார். இவர் ஆசியா, பாரசீகம் முதலான நாடுகளை வென்று சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியதால் இவரை மகா அலெக்சாண்டர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முஸ்லிமல்ல. காஃபிர்.

அல்லாஹ் குறிப்பிடும் துல்கர்ணைன் இவரின் காலத்திற்கு வெகுகாலத்திற்கு முன்பே வாழ்ந்தவர்கள். அவர் கிரேக்கர். அவரின் தந்தையின் பெயர் பைலகூஸ். உலகை கட்டி ஆண்ட மன்னர்களில் இவரும் ஒருவர். அவர் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவரின் காலம் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலமாகும். அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள். அவர்களின் முன்னணிப் படையினருள் ஒருவராக ஹழ்ரத் கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்தார்கள். அத்துடன் அப்படையினரை வழிநடத்துபவராகவும் இருந்தார்கள்.

இவர் 500 ஆண்டுகாலம் உலகை சுற்றி வந்தார் என்றும் ஜூர் என்னுமிடத்தில் மரணமுற்ற இவர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இவர் கீழ்த்திசையிலிருந்து மேல் திசை வரை சென்றதால் இரு கிரணங்களையுடையவர் என்று பொருள்பட ‘துல்கர்ணைன்’ என்று அழைக்கப்படுகிறார்.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமக்காவில் இருந்தபோது அங்கு துல்கர்ணைன் வந்தார். அப்தஹி என்னுமிடத்தில் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்திக்க கால்நடையாகவே சென்று சந்தித்தார். அப்போது இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்களுக்கு சலாம் உரைத்து அவர்களை கட்டித்தழுவி முஆனகா செய்தனர். முஆனகா செய்த முதல் நபர் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே என்று அன்சானுல் உயூன், துரனுல் குரர் ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

ஆபெ ஹயாத் என்பதற்கு உயிர் தண்ணீர் என்பது பொருளாகும். இதனை மாவுல் ஹயாத் என்றும் கூறுவர். அந்நீரை அருந்துபவர் உலகமுடிவுநாள் வரை மரிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. அதைத் தேடி கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இவர்களும் சென்றார்கள்.

துல்கர்ணைன் மேற்கு கரையை நோக்கி சென்றார். மரக்கலம்சென்ற இடத்தை அதுவரை யாரும் சென்று அடையவில்லை. தம் படையணிகளுடன் சென்ற இவர்களின் தலைமைக் கொடியை ஹழ்ரத் ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூக்கிப் பிடித்து சென்றனர்.

இருண்ட குகை ஒன்றில் ஆபெஹயாத் என்னும் நீர் சுனையை கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள்கண்டறிந்து அதன் நீரை அருந்தினர். அதில் உளுச் செய்து இரண்டு ரக்அத் தொழுதனர். அதில் குளிக்கவும் செய்தனர். அந்நீரைப் பருகியதால் நீண்டநாட்கள் வாழும் பேற்றினைப் பெற்றனர்.

தமக்கு முன் சென்ற ஹழ்ரத் ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்நீரை குடித்து விட்டதால் நிராசையாகி சிக்கந்தர் துல்கர்ணைன் திரும்பிவிட்டார்.

மற்றொரு அறிவிப்பின்படி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கிள்று அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் சென்று அந்நீரைப் பருகினர் என்றும் கூறப்படுகிறது.

சிக்கந்தர் துல்கர்ணைன் ஒரு நபியல்லர் என்று ஹத்தாதீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகின்றனர். எனினும் அவர் உலக மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்து ஓரிறை வணக்கத்தில் ஈடுபடுத்துபவராக இருந்தார்.

அவர் மக்களை தீனின் பக்கம் அழைப்பதற்காக முதலில் மேற்குதிசை நோக்கி பயணம் செய்தார். பல்வேறு மக்களையும், பல்வேறு நாட்டினரையும் அவர் தீனின்பால் அழைத்தார். அவரின் அழைப்பை ஏற்று இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டோரை அவர் அங்கீகரித்துக் கொண்டார்.
அவரின் அழைப்பை ஏற்காதோரின் ஊர்களை இருள் கவ்விக் கொண்டது. அதாவது அம்மக்களின் பட்டினங்கள், கோட்டைகள், இல்லங்கள் ஆகியவற்றின் கதவுகள் மூடிக் கொண்டன.

இந்நிகழ்ச்சி பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் (18:86,87,88) என்ற திருவசனங்களில் குறிப்பிடுகிறான்.

இவ்வண்ணம் நாடுகளை வென்று மக்களை தீன் பக்கம் அழைத்தவண்ணம் சிக்கந்தர் துல்கர்ணைன் எட்டு இரவு, எட்டு பகல் கடந்து மலையொன்றினை அடைந்தார்கள்.

அது பூமியைச் சுற்றிலும் இருக்கும் மலையாகும். அதற்கு காப் மலை என்று சொல்லப்படுகிறது. வானவர் ஒருவர் அம்மலையை பிடித்தவண்ணம் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருந்தார். அங்குவந்த துல்கர்ணைன் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்து தமக்கு வலிமை(ஆற்றல்) வழங்குமாறு இறைஞ்சினார். அல்லாஹுத்தஆலா அவருக்கு வலிமையையும் ஆற்றலையும் வழங்கி அருள்புரிந்தான்.

எனவே அவரால் அந்த வானவரைக் காண முடிந்தது. அப்பொழுது அந்த வானவர் அவரை நோக்கி, ஆதமுடைய மக்களில் எவரும் இவ்விடத்திற்கு உமக்கு முன் இதுவரை வந்ததில்லை. அவ்வாறிருக்க உமக்கு மட்டும் எவ்வாறு இங்குவர வலிமை கிட்டியது? என்று வினவினார்.

அதற்கு துல்கர்ணைன், இம்மலையைத் தாங்கும் வலிமையைத் தந்த அல்லாஹு தஆலா தான் எனக்கும் வலிமையைத் தந்தான் என்று விடையளித்தார்.

காப் மலையை காட்டிலும் பிரமாண்டமான மலை வேறெதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. தமக்கு அறிவுரை வழங்குமாறு அவர் அந்த வானவரிடம் வேண்டவே,

1. நாளைய உணவுக்காக இன்றே நீர் கவலையுற வேண்டாம்.
2. இன்றைய வேலையை நாளைக்கெனத் தள்ளிப் போட வேண்டாம்.
3. உம்மிடமிருந்து தவறிவிட்டதற்காக நீர் வருந்த வேண்டாம்.
4. மக்களிடத்தில் கடுகடுப்பாக இல்லாமல் மென்மையாக நடந்து கொள்வீராக! என்று நான்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி கஸஸுல் அன்பியாவில் மிக்க விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தப்ஸீர்கள் அனைத்திலும் இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்திசை படையெடுப்பை முடித்தபின் கீழ்த்திசை நோக்கி படையெடுத்தார். அவர் நாடிச் சென்ற நாட்டை அடைய பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் ஆனால் அதை அவர் குறுகிய காலத்தில் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்நாட்டின் பெயர் ஜாபலக் என்பதாகும். அங்கு வெப்பம் கடுமையாகவும், அங்கு வாழும் மக்களின் தலையிலோ, உடலிலோ, புருவங்களிலோ உரோமங்கள் முளைப்பதில்லை என்றும் ஹழ்ரத் ஹத்தாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.

அதற்கு பதினாயிரம் தலைவாயில்கள் இருந்தனவென்றும், இரு தலைவாயில்களுக்கு இடைப்பட்ட தொலைவு ஒரு பர்ஸக் என்றும் கூறப்படுகிறது.

சூரிய உதயத்தில் குகைகளுக்குள் நுழைந்து கொள்வார்கள். கடலில் மீன்பிடித்து அதனை உண்டு அவர்கள் உயிர் வாழ்ந்து வந்தார்கள். இம்மனிதர்களை சன்மார்க்கத்தின் பால் துல்கர்ணைன் அவர்கள் அழைத்தார்கள். அங்கு ஒரு பள்ளிவாயிலை கட்டி அதில் மக்கள் தொழுதுவர வேண்டுமென கட்டளையிட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

இதன்பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் படையெடுத்தார். இப்பயணத்தின் போது இரு மலைகளுக்கிடையே சென்றார். அம்மலைகளுக்கப்பால் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் பேச்சு விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. அதேபோன்று இவர்கள் கூறுவதையும் அம்மக்களால் விளங்ககி; கொள்ள முடியவில்லை.

எனவே சமிக்ஞை மூலமே அவர்களுடன் பேச வேண்டியிருந்தது. அம்மனிதர்கள் துல்கர்ணனை நோக்கி,

قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلَىٰ أَن تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا

“துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது – குழப்பம் – செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள். (18:94)

யஃஜூஜ், மாஃஜூஜ் என்பவர்கள் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் யாபிதுடைய சந்ததியிலுள்ளவர்கள். இவர்கள் மனிதர்களேயாயினும், மனிதர்களிடம் காணப்படாத பழக்கவழக்கங்களையும், முரட்டுத்தனங்களையும், கொடூரத் தன்மைகளையும் உடையவர்கள் என்பதில் ஐயமில்லை.

இவர்களில் சிலர் மிக உயரமானவர்களாகவும், சிலர் மிகக் குட்டையானவர்களாகவும் இருப்பர். இவர்களின் காதுகளும் மிகப் பெரியதாக அகன்று காணப்படும். உயிர்பிராணிகள் அனைத்தையும் தின்னும் வழக்கமுடைய இவர்கள் தங்களில் இறந்தோரையும் தின்பர் என்று கூறப்படுகிறது.

இவர்களின் அக்கிரமங்களைப் பொறுக்க இயலாத அப்பகுதி மக்கள் இவர்களிடமிருந்து காத்துக் கொள்ள துல்கர்ணனை வேண்டி அதற்காக கூலி தருவதாகவும் சொன்னார்கள்.

அதற்கு துல்கர்ணைன் அவர்கள் எனக்கு கூலி வேண்டாம். இதற்கான மேலான கூலி அல்லாஹ்விடம் எனக்குண்டு என்று சொல்லிவிட்டார்கள்.

மேலும், அவர் அம்மக்களின் கோரிக்கைக்கு இணங்கி எனக்கு நீங்கள் அனைவரும் உதவியாக இருப்பின் உங்களுக்கும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினருக்கும் இடையே பெரியதொரு தடுப்பை ஏற்படுத்தித் தருகிறேன் என்று கூறினார்கள்.

பின்னர் அவர் அம்மக்களை நோக்கி, பெரும் பெரும் இரும்புக் கட்டிகளை என்னிடம் கொண்டு வாருங்கள். அவற்றை உருக்கி அவை சமமாகக் படிந்த பின்னர் நெருப்பை மூட்டி ஊதுங்கள். அந்த இரும்புக் கட்டிகள் பழுத்து, நெருப்பு போலாகும். அப்பொழுது செம்புப் பாளங்களைக் கொண்டு வந்தால் அவற்றை நான் உருக்கி அந்த இரும்பின் மீது ஊற்றுகிறேன் என்று கூறினார்.

அம்மக்களும் அவ்வாறு கொண்டு வரவே, துல்கர்ணைன் தாம் சொன்னவாறு செய்தார். சுவரை உருவாக்குமுன் நூறு முழம் ஆழத்திலும், ஐம்பது முழம் அகலத்திலும் அடித்தளம் போட்டார்கள். சுவரின் நீளம், மூன்று மைல்கள் எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரண்டு மலைகளுக்கிடையே பெரியதொரு சுவரைக் கட்டி முடித்த துல்கர்ணைன்: இது என்னுடைய இறைவனின் அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி (யுக முடிவு) வரும் வேளையில் இதனையும் தூள் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

மலைகளை இணைத்து மாபெரும் சுவர் உருவான பின்பு அவ்வழியே வழக்கம் போல் வந்த யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் தாங்கள் செல்லும் தடத்தில் இடையூறாக ஒரு சுவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அதன்மீது ஏற முயன்றும் அவர்களால் அது முடியவில்லை. அதனைத் துளையிட்டு நுழையவும் இயலவில்லை.

இதுபற்றிய செய்திகளை அல்லாஹு தஆலா 18:96-98 ல் குறிப்பிடுகிறான்.

آتُونِي زُبَرَ الْحَدِيدِ ۖ حَتَّىٰ إِذَا سَاوَىٰ بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انفُخُوا ۖ حَتَّىٰ إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا

18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

فَمَا اسْطَاعُوا أَن يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا

18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

قَالَ هَٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّي ۖ فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا

18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.

யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினர் நாள்தோறும் அச்சுவரைத் தோண்டுகின்றனர். சுவருக்கு அப்பால் வெளிச்சத்தை அவர்கள் கண்டு, எஞ்சியதை நாளை வந்து தோண்டலாம் என்று கூறிவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் அல்லாஹுத்தஆலா அந்த துவாரத்தை மூடிவிடுகிறான்.

மறுநாள் காலையில் அவர்கள் வந்து பார்க்கும்போது துவாரத்தைக் காணாமல் மீண்டும் தோண்டுவார்கள். இது உலக முடிவு நாள் வரை நிகழ்ந்தவண்ணம் இருக்கும்.

உலக முடிவு நாளின் போது யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தினரில் ஒருவரை அல்லாஹுதஆலா முஃமினாக்கி விடுவான்.

வழக்கம்போல துவாரமிட்டு வெளிச்சத்தைப் பார்த்தவுடன் அவர், இன்ஷாஅல்லாஹ் நாளை வரலாம் என்று கூறி மற்றவர்களையும் அழைத்துச் செல்வார்.

மறுநாள் அவர், தம் கூட்டத்தினருடன் வந்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று அவர்களைப் பணிப்பார்.

அவர்களும் அவ்வாறே கூறி துவாரமிட்டு நாட்டிற்குள் நுழைந்து விடுவார்கள். அங்கு அக்கிரமம் செய்து கண்டவர்களையெல்லாம் கொல்வார்கள்.

சிக்கந்தர் துல்கர்ணைன் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் சூரத்துல் கஹ்பு என்னும் அத்தியாயத்தில் 83-98 வசனங்களில் குறிப்பிட்டுக் கூறுகிறான்.

இறுதியில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆ பொருட்டினால் இந்த கூட்டத்தினர் அழிக்கப்படுவார்கள்.

ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி ரழியல்லாஹு அன்ஹு

அப்பாஸியக் கலீபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் மீது தாங்க இயலாத கொடுமைகளை செய்து வந்தனர். பக்தாத்தில் வாழ்ந்து வந்த அவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் இஸ்ஃபஹானில் வந்து குடியேறி வாழ்ந்து வரலாயினர்.

அந்நகரில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தைச் சார்ந்த காஜா செய்யிது அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார் செசெய்யிது கியாஸுத்தீன் அவர்கள் ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசாவழியில் தோன்றிய செய்யிது தாவூது என்ற பெரியாரின் அருமைத் திருமகள் உம்முல் வரா என்ற செய்யிதா மாஹினூரை மணமுடித்திருந்தனர். அவர்களுக்கு ஹிஜ்ரி 530 ஆம் ஆண்டு ரஜப் பிறை 14 (கி.பி.1116 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள்) வெள்ளிக்கிழமை ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயீனுத்தீன் (இஸ்லாத்தை வலுப் பெறச் செய்தவர்) என்று பெயரிட்டு அருமைபெருமையாக வளர்த்து வந்தனர்.

ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.

“மீர்ஆதுல் அஸ்றார்” என்ற நூலில் கூறப்பட்டபடி அவர்களின் வம்சவழி பின்வருமாறு’

ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாஜா கியாதுத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

ஹாஜா நஜ்முத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது அப்துல் அஸீஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இப்றாஹீம் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் மூஸல் காழிம் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஜஃபர் சாதிக் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் முஹம்மது பாகர் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஜெய்னு லாப்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)

செய்யிது இமாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு)

இச்சமயத்தில் தார்த்தாரியர் இஸ்ஃபஹான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி, அதனை நாசப்படுத்தி வந்தனர். எனவே செய்யிது கியாஸுத்தீன் ஹஸன் தம் குடும்பத்தினர்களுடன் அந்நகர் விட்டு நீங்கி குராஸானில் குடியேறினார். அவரின் அருமை மைந்தர் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அவர்கள் இளமையிலேயே மற்றச் சிறுவர்களை விட்டும்  மாறுபட்டவர்களாக விளங்கினர். சின்னஞ்சிறு வயதிலேயே அவர்கள் அன்பு, இரக்கம், தயவு ஆகிய அரும்பெரும் குணங்கள் வாய்க்கப் பெற்றவர்களாக திகழ்ந்தனர். இளமையில் மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடச் செல்வதில்லை. மாறாக பள்ளி சென்று கல்வி பயின்றனர். ஒன்பது வயதிற்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்ட அவர்கள், பின்னர் ஃபிக்ஹ் நூல்களையும், ஹதீது நூல்களையும் பயின்று தேர்ச்சியுற்றனர்.

அன்னனாரின் சிறுவயதிலேயே அவர்களின் அன்னை மறைந்து விட்டார்கள். அவர்கள் 15 வயதை எய்தியபோது அன்னாரின் தந்தையும் மறைந்து விட்டார்கள். அவர்களுக்கு தந்தை வழியாகத் தண்ணீர்  இறைக்கும் காற்றாடியுடன் கூடிய பழத்தோட்டம் ஒன்று வாரிசு பாத்தியமாக கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு; எளிய முறையில் இனிதே வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தார்கள்.

தமக்கு சொந்தமான தோட்டத்தை விற்றுவிட்டு கல்வி தேடி சமர்கந்த், புகாரா நோக்கி பயணமாகி அங்கு மௌலானா ஹிஸ்ஸாமுத்தீனிடமும், ஷைகுல் இஸ்லாம் மௌலானா ஷர்ஃபுத்தீனிடமும் மார்க்கக் கல்விகளை கற்றனர். பின்னர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காக பகுதாது சென்றார்கள். கௌதுல் அஃலம் அவர்கள் முயீனுத்தீன் சிஷ்தி நாயகத்திற்கு தாய்வழியில் ஒன்றுவிட்ட மாமாவாக இருந்தார்கள்.

தம்மைக் காணவந்த அவர்களை தம் சீடர்களிடம் புகழ்ந்துரைத்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் மாபெரும் மகானாக வருவார்கள் என்று வாழ்த்துரைத்தார்கள். அதன்பின் ஹாரூன் என்ற ஊரை அடைந்து அங்கிருந்த ஷைகு உதுமான் ஹாரூனி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து தமக்கு தீட்சை தருமாறு வேண்டினர். அவர்களும் அவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து சிஷ்தியா தரீகாவில் தீட்சை வழங்கினர். தம் குருவுடன் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்தபின், தம் குரு ஆணையின்படி பகுதாது வந்து கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை இரண்டாவது முறையும்> ஷைகு அபூநஜீப் சுஹ்ரவர்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றனர்.

இதன்பின் இந்தியாவிற்கு ஹிஜ்ரி 561 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் (கி.பி. 11-11-1165) அவாக்ள் இந்தியாவிலுள்ள மூல்த்தானுக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தார்கள்.  அதன்பின் லாகூர் சென்று பின் தம் குருநாதர் உதுமான் ஹாரூனி அவர்களை ரேயில் வைத்து சந்தித்து சிலமாதங்கள் கழிந்தபின் ஹிஜ்ரி 562 ஆம் ஆண்டில் ஹஜ்ஜுசெய்வதற்காக மக்கா புறப்பட்டனர். அங்கிருந்து மதீனா சென்று அண்ணலாரின் திருக்கபுர் சரீபை தரிசித்தனர். பின்னர் அவர்கள் இருபது ஆண்டுகள் பற்பல நாடு நகரங்களிலும் சுற்றித் திரிந்து பகுதாது மீண்டனர். அங்கு வைத்து, காஜா அவர்களுக்கு கிலாஃபத் வழங்கிய உதுமான் ஹாரூனி அவர்கள் ‘முயீனுத்தீனே! நான் உம்மை இறைவனளவில் ஒப்படைத்து விட்டேன்’ என்று கூறி அவர்களின் நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட்டனர்.

தமது 52 ஆம் வயதில் சிஷ்திய்யா தரீகாவில் கிலாஃபத் பதவியைப் பெற்ற காஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள்> சில நாட்கள் பகுதாதில் தங்கியிருந்து பின்பு ஊஷ் என்ற ஊருக்கு சென்று குத்புத்தீன் பக்தியார் என்பவர்களுக்கு தீட்சை நல்கினர். இருவரும் மக்கா சென்று ஹஜ்ஜு செய்து விட்டு மதீனா நகர் சென்று பெருமானாரின் தரிசனத்தை பெற்றுக் கொண்டனர். பல்வேறு காடு, மலைகளை சுற்றித் திரிந்து பல்வேறு இறைநேசர்களை பல்வேறு நிலைகளில் கண்டு அவர்களின் துஆப் பேற்றினைப் பெற்றுக் கொண்டார்கள்.

ஆப்கானிஸ்தானிலுள்ள ஸப்ஸவார் என்ற ஊருக்கு வந்து சேர்ந்த அவர்கள் அங்கு சுன்னத் ஜமாஅத்தினர்களை கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த ஷியா மதத்தைப் பின்பற்றும் முஹம்மது யாத்கார் என்பவரை திருத்தி சுன்னத் வல் ஜமாஅத்தைப் பின்பற்றச் செய்தார்கள். அவரும் நாயகம் அவர்களின் சீடரானார். பின் அவர்களுடன் புறப்பட தயாரானார். ஷத்மான் கோட்டையை அடைந்ததும் புது மனிதராக காட்சியளித்த முஹம்மது யாத்கார் அவர்களை அங்கு ஆட்சி செய்யுமாறு பணித்து விட்டு இந்தியா புறப்பட்டுச் சென்றார்கள். பின்பு பல்க் சென்று அங்கிருந்து புறப்பட்டு து கஜ்னீ வந்து சேர்ந்து லாகூரை அடைந்து தாதா கன்ஞ் பக்ஷ் ஹுஜ்வீரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தில் பல நாட்கள் கல்வத் இருந்தார்கள். அங்கிருந்து மூல்தான் வந்து அங்கு தங்கி சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டார்கள்.

பின்னர் டில்லி வந்து, அங்கிருந்த மக்களுக்கு இஸ்லாமிய அருள் நெறியைப் போதித்துவிட்டு 700 பேர்களை இஸ்லாத்தில் இணைத்து விட்டு கர்னூல் மாவட்டத்திலுள்ள சூனிபத் என்ற ஊருக்கு வந்து அங்கு அடங்கப்பட்டிருக்கும் ஷைகு நாஸிருத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தில் சில நாட்கள் தங்கி கல்வத்தில் இருந்தார்கள். அவர்கள் கல்வத் இருந்த இடம் இப்போதும் சில்லயே முபாரக் ஹழ்ரத் ஹாஜா கரீப் நவாஸ் என்ற பெயருடன், மரியாதையுடன் அழைக்கப்படுகிறது.

அடுத்து அவர்கள் பாட்டியாலாவிலுள்ள நாரனோஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். பின்பு அவர்கள் ஸமானா வழியாக அஜ்மீரை நோக்கிப் பயணமாயினர். ஹிஸ்ரி 588 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் (கி.பி.1192) அவர்களின் புனிதப் பாதங்கள்> அஜ்மீர் மண்ணிலே மிதித்தன. அப்பொழுது காஜா நாயகம் அவர்களுக்கு வயது 57.

இந்நகரமும், அதன் சூழலுமத் பிருதிவிராஜ் என்ற ராஜபுத்திர அரசனின் ஆட்சியில் இருந்தது. அவனுடைய அரண்மனை> அதன் அருகிலுள்ள தாராகட் என்ற குன்றின் மீது இருந்தது. அதன் அடிவாரத்திலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர். அங்கேயே அவனுடைய குதிரை> ஒட்டகை ஆகியவற்றின் தொழுவங்கள் இருந்தன.

அங்கு வந்த காஜா நாயகம் தம் சீடர்களுடன் வெட்ட வெளியில் இளைப்பாற அமர்ந்தனர். அரசரின் ஆட்கள் வந்து நீங்கள் இங்கு தங்க கூடாது. இது அரசரின் ஒட்டகை அடைக்கும் இடம் என்று சொன்னார்கள். அதுகேட்ட காஜா நாயகம் அவர்கள் அரசரின் ஒட்டகை இங்கேயே அடைபட்டுக் கிடக்கட்டும் என்று சொல்லி விட்டு தம் சீடர்களுடன் அருகிலுள்ள அன்னாசாகர் என்ற ஏரிக் கரையில் போய் தங்கினர்.

காலையில் ஒட்டகம் மேய்ப்பவர்கள் வந்து ஒட்டகையை எழுப்ப முற்பட்ட போது அவைகளால் எழும்ப முடியவில்லை. உடனே அவர்களுக்கு நேற்று நடந்த சம்பவம் நினைவுக்கு வரவே காஜா நாயகத்திடம் வந்து மன்னிப்புக் கேட்டனர்.

அவர்களும் மன்னித்து, இது எந்த எசமானுடைய ஆணைக்காக அமர்ந்திருந்ததோ அந்த எசமானுடைய ஆணை மீது அவை எழுந்து நடக்கும் என்று கூறினர். அவ்விதமே ஆயிற்று. அதுகண்டு ஒட்டகம் மேய்ப்பவர்கள் வியந்து அரசனிம் இச்சம்பவம் பற்றி சொன்னார்கள்.

இதைக் கேட்ட அரசன் அதிர்ந்தான். ஏனெனில் மன்னனின் அன்னை வாசவதத்தா சோதிடத்தில் மிகவும் புலமை பெற்று விளங்கினாள். அவள் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே இன்ன இன்ன அடையாளமுள்ள ஒருவர் இங்கு வவருவார். அவரின் வரவால் உன் ஆட்சி வீழும் என்று தன் மகனிடம் முன்னறிவிப்பு செய்திருந்தாள். அதைக் கேட்ட மன்னன் அப்போது அவர்களின் படத்தை தம்அன்னையிடமே வரைந்து கேட்டு அதன்படிப் பல பிரதிகள் எடுத்து இத்தகு உருவமுடையவர் எவரேனும் தம் நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவரைப் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும் என்று ஆணையிட்டிருந்தான்.

எனவே இச்செய்தியைக் கேட்டவுடன் அந்த நபர் இவர்களாகத்தான் இருக்குமோ என்று எண்ணி அவர்களை அங்கிருந்து விரட்ட ஆட்களை அனுப்பினான். அரசரின் ஆணையை சிரமேற்றோங்கிச் செயலாற்ற அவனின் பணியாளர்கள் முயன்ற போது நாயகம் அவர்கள் ஒருபிடி மண்ணை அள்ளி, அதில் ஆயத்துல் குர்ஸீயை ஓதி ஊதி, அவர்கள் மீது வீசி எறிந்தார்கள். அவர்கள் அதனைத் தாங்க இயலாது, பெரும் கூச்சலிட்டுக் கொண்டு வெருண்டோடினர்.

இதனை அறிந்த அரசன் காஜா அவர்களைப் பெரிய மந்திரவாதி என்று எண்ணிக் கொண்டு, மந்திரத்தை மந்திரத்தால் தான் வெற்றி கொள்ள வேண்டுமென்று எண்ணி, சாதுராம் என்ற மாபெரும் மந்திரவாதியைக் காஜா அவர்களிடம் அனுப்பி வைத்தான். அவர் காஜா நாயகத்தைப் பார்த்ததும் திடுக்கம் ஏற்பட்டு அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அன்னாரின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவி அவர்களின் ஊழியத்தில் இருந்து கொண்டார். அவருக்கு ஷாதிதேவ்(மகிழ்ச்சியாளர்) என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இதன்பின் காஜா அவர்களை எதிர்த்து, மந்திர ஆற்றலினால் போராடி, அவர்களை அங்கிருந்து விரட்டிவிட> ஜெய்ப்பால் என்ற மற்றொரு மந்திரவாதியை அனுப்பி வைத்தான் அரசன். அவர் தம்முடைய 1500 சீடர்களுடன் தம்மை எதிர்க்க வருகிறார் என்பதை அறிந்த காஜா நாயகம் அவர்கள் தம்முடைய கைக்கோலை கொடுத்து, நம்முடைய ஜமாஅத்தினரைச் சுற்றி பூமியில் ஒரு கோடு கிழியும். அதற்குள் நாம் இருக்கும் வரையில், அவர்களால் நமக்கு யாதொரு தீங்கும் செய்ய இயலாது என்று கூறினார்கள். அவ்விதமே அவரும் செய்தார்.

சற்று நேரத்தில் ஜெய்ப்பாலும்,அவரின் சீடர்களும் அங்கு வந்து, அக்கோட்டிற்குள் தம் கால்களை வைத்ததும், அவர்கள் மயங்கிக் கீழே விழுந்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த அவர்கள், தள்ளாடித் தள்ளாடி அன்னாசாகர் ஏரிக்கரையின் ஒரு புறத்தில் சென்றமர்ந்து, அன்னாசாகரின் தண்ணீரைக் காஜா அவர்கள் இருக்கும் பக்கம் செல்லவிடாது தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாயினர்.

இதனைக் கண்ட காஜா நாயகம் அவர்கள் ஷாதிதேவை அழைத்து, அவரின் கரத்தில் ஒரு பாத்திரத்தை கொடுத்து ‘நீர் அன்னாசாகரின் நீரை இந்தப் பாத்திரத்தில் எடுத்;து வாரும்’ என்று கூறினர். அவர் சென்று அவ்வாறே நீர் எடுத்து வந்ததும், அந்த ஏரியிலுள்ள அனைத்துத் தண்ணீரும் அப்பாத்திரத்துக்குள் வந்து அந்த ஏரி மட்டுமில்லாது, அதனைச் சூழ இருந்த எல்லாக் கிணறுகளும் வற்றி வரண்டு விட்டன. மக்களும், மாக்களும் நீரின்றி செத்து மடிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு விட்டது.

ஜெய்ப்பால் திடுக்கிற்று காஜா நாயகம் அவர்களிடம் இரங்கி வேண்ட, பாத்திரத்தில் எடுத்த நீரை ஏரியிலேயே கொட்டும்படி பணித்தனர். அவ்வாறே செய்ய ஏரி தண்ணீரால் நிரம்பி தளும்பியது. இதன்பின்னரும் அறிவு பெறாது, ஜெய்ப்பாலும், அவருடைய சீடர்களும் மந்திங்களை ஜெபிக்கலாயினர். உடனே ஆயிரக்கணக்கான பாம்புகள் காடுகளிலிருந்து படையெடுத்து வந்து நாயகம் இருக்கும் கோட்டு வளையத்திற்குள் தலையை விட்டதும் வெருண்டு பின்வாங்கி ஓடத் துவங்கின. அப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவேயில்லை.

ஜெய்ப்பால் முன் வந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரிக்க, உடனே வானிலிருந்து நெருப்பு மழை பெய்து, சுற்றிலும் இருந்த மரங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்கியது. எனினும், ஒரு நெருப்புப் பொறிகூட நாயகம் அவர்களும், அவர்களின் சீடர்களும் இருந்து கோட்டு வளையத்திற்குள் வந்து விழவில்லை.

இதுகண்டு பெரிதும் விரக்தியுற்ற ஜெய்ப்பால் மான் தோல் ஒன்றை எடுத்து, அதனை விண்ணை நோக்கி எறிந்து, அதில் பாய்ந்தேறி விண்ணிலே பறந்து, மக்களின் கண்களுக்கு தெரியாமல் மறைந்து விட்டான்.

அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் சீடர்கள் தியானத்திலிருந்த காஜா நாயகம் அவர்களை அணுகி, ஜெய்ப்பாலின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி கூறவும், நாயகம் அவர்கள் தங்கள் காலணியை எடுத்து விண்ணை நோக்கி எறிந்தனர்.

அது விண்ணிலே பறந்து சென்று ஜெய்ப்பாலைக் கண்டுபிடித்து அவரின் தலையில் ஓங்கி, ஓங்கி அடித்தவண்ணம், அவரை பூமிக்கு இறக்கி வந்து, காஜா நாயகம் அவர்களின் திருமுன் கொண்டு வந்து விட்டது. அவர் அழுது சலித்து நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டி அரவணைத்தார்கள் காஜா நாயகம் அவர்கள்.

இதனால் யாது செய்வதென்று அறியாது திகைத்துக் கொண்டிருந்தான். இனியும் பொது இடத்தில் தங்க வேண்டாம் என்று காஜா நாயகம் அவர்களை ஷாதிதேவும், அப்துல்லாஹ்வும் கூறி ஷாதி தேவ்விற்கு சொந்தமான இந்திரகோட்டின் அருகில் உள்ள நிலத்தில் போய் தங்கினர். அவ்விடத்திலேயே அவர்களின் தர்கா இப்பொழுது உள்ளது.

அங்கு காஜா நாயகம் சென்று அமர்ந்ததும், அங்கு தாங்களும், தங்களின் சீடர்களும் தங்குவதற்கான வீட்டு வசதிகளைச் செய்து கொண்டனர். அங்கு ஒரு சமையல் விடுதியும் நிர்மாணிக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தவமடத்தில் அமர்ந்து காஜா நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை தொடங்கினர். அவர்களின் மாண்பினைக் கேள்வியுற்ற  மக்கள், நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து, அவர்களின் கரம்பிடித்து இஸ்லாத்தைத் தழுவினர். நாயகம் அவர்களும் பல்வேறு பகுதிகளில் வாழும் பிரமுகர்களுக்கும், அரசனுக்கும் இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்தனர்.

பிருதிவிராஜன் பல்வேறு முயற்சிகள் செய்தும் காஜா நாயகம் அவர்களை அடிபணிய வைக்க முடியவில்லை. அஜ்மீரை விட்டு 3 நாளில் விலகுமாறு அரசன் பிருதிவிராஜன் காஜா நாயகத்திற்கு கடிதம் ஒன்று கொடுத்திருந்தான்.

அச்சமயத்தில் ஷிஹாபுத்தீன் கோரியின் கனவில் காஜா நாயகம் அவர்கள் இந்தியாவுக்கு படைஎடுக்குமாறு சொன்னார்கள். அவரும் இரண்டாவது தடவையாக தாரவாடியில் பாளையம் இறங்கி பிருத்விராஜனுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் யுத்தத்திற்கு தயார் என்று அரசன் பிருத்விராஜன் சொன்னதால் தாரவாடியில் போர் மூண்டது. பிருத்விராஜனுக்கு துணையாக வந்த சிற்றரசர்கள், மன்னர்களும் போரில் உயிர் நீத்தனர். பிருத்விராஜன் ஓடிப்போனார். அவனை ஸர்ஸுரி என்ற இடத்தில் கைது செய்தார் ஷிஹாபுத்தீன் கோரி.

வெற்றி பெற்ற பின் கோரி அஜ்மீர் சென்று நாயகத்தை சென்று சந்தித்து காணிக்கைகள் வழங்கினார்.

தம்மைக் காண வந்த பிருத்விராஜனின் தாய், மனைவி மற்றும் மகன்களை அன்போடு வரவேற்ற கோரி அன்னையாரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்சிப் பொறுப்பை பிருத்விராஜனின் மகன் கோலாவிடம் கொடுத்து விட்டு டில்லியில் குத்புதீன் ஐபக் என்பவரிடம் ஆட்சியை ஒப்படைத்து அஜ்மீர் நகரை நிர்வாகிக்க ஸையித் ஹஸன் மஷ்ஹரீ என்பவரை நியமித்து விட்டு கஜ்னி நகர் நோக்கி வெற்றி வீரராக சென்றார்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒரு சிற்றரசரின் மகளை இஸ்லாத்திலாக்கி அவருக்கு பீபி அமதுல்லாஹ் என்று பெயரும் சூட்டி திருமணம் முடித்துக் கொண்ட நாயகம் அவர்கள் அதன்மூலம் பக்ருத்தீன், ஹிஸாமுத்தீன் என்ற இரண்டு ஆண்மக்களையும், பீபி ஹாபிஸ் ஜமால் என்ற பெண்மகளையும் பெற்றெடுத்தனர்.

டில்லியில் வசித்து வந்த ஆன்மீக சீடர் குத்புத்தீன் பக்தியாரி அவர்களை  சந்திப்பதற்காக டில்லி அய்னுத்தீன் பள்ளிவாசலுக்கு வருகை தந்தபோது அதைக் கேள்விபட்ட மக்கள் அப்பள்ளிவாசலுக்கு அலைஅலையாய் ஓடிவந்து அவர்களை சந்தித்தனர்.

இதன்பின் மற்றொரு நிகழ்ச்சி டில்லியில் ஏற்பட்டது. ஹிஜ்ரி 611 ஆம் ஆண்டு துல்ஹஜ் பிறை (கி.பி.1215 ஏப்ரல் 2 அன்று) காஜா நாயகம் அவர்களின் ஆன்மீக ஆசான் உதுமான் ஹாரூனி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மாணவரைக் காண்பதற்காக அங்கு வருகை தந்தனர். ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் தம் ஆசானின் ஆசானின் ஆசானையும் காண்பதற்கு தங்களுக்கு இறைவன் தந்த இரு கண்கள் பற்றாது மூன்றாவது கண்ணும் வேண்டுமென்று டில்லி மாநகர மக்கள் பேசிக் கொண்டார்கள்.

சுல்தான் அல்தமிஷும், தம் அமைச்சர் பெருமக்களுடன் உதுமான் ஹாரூனி அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் நாயகம் அவர்களை நோக்கி ஆன்மீகப் பாதையில் வழிகாட்டும் ஒரு நூலை ஆக்கிக் கொடுக்குமாறு ஆணையிட்டனர்.

அவ்விதமே அவர்கள் ‘கன்ஸுல் அஸ்ரார்’ என்ற பெயருடன் 25 பகுதிகளடங்கிய ஒரு நூலை எழுதி, சுல்தானுக்கு அன்பளிப்புச் செய்தனர்.

ஹிஜ்ரி 615 ல் உதுமான் ஹாரூனி அவர்கள் டில்லியை விட்டு மக்கா நகர் நோக்கி சென்றனர். அதன்பின் சிலகாலம் நாயகம் அவர்கள் டில்லியில் தங்கியிருந்து மன்னருக்கும், மற்றவர்களுக்கும் ஆன்மீக பயிற்சி அளித்துவிட்டு அஜ்மீர் திரும்பி அதையே தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டனர்.

சிறிது காலத்தில் நாயகம் அவர்களின் அன்பு மனைவி பீபி அமதுல்லாஹ் மறுமை வாழ்வை எய்தப் பெற்றனர்.

தமது 90ஆவது வயதில் ஷியாப் பிரிவைச் சார்ந்த பீபி இஸ்மத்துல்லாஹ்வை இரண்டாவதாக மணமுடித்துக் கொண்டனர். இதன் காரணமாக ஏராளமான ஷீயாக்கள் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு வந்தனர். இந்த திருமணத்தின் மூலம் காஜா நாயகம் அவர்களுக்கு ஜியாவுத்தீன் அபூஸயீத் என்ற மகன் பிறந்தார்.

இரவெல்லாம் கடும் வணக்கம் புரிந்து வந்தனர். சுமார் 70 ஆண்டுகள் தலையணையில் தலைவைத்து படுத்ததில்லை. ஒவ்வோர் இரவும் அவர்கள் மக்கா சென்று வணக்கம் நிகழ்த்தி விட்டு, வைகறைத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அஜ்மீர் திரும்பி விடுவர் என்றும், இந்தியாவிலிருந்து சென்ற யாத்ரிகர்கள் அவர்களைப் பலதடவை கஃபாவை இடம் சுற்றி வரக்கண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

திருக்குர்ஆனை ஓதிவருவதில் மிகவும் இன்புற்றிருப்பார்கள். நான் அவர்களின் ஊழியத்தில் இருபதாண்டுகள் இருந்துள்ளேன். அதில் அவர்கள் ஒருநாள் கூட தமக்கு உடல் நலத்தை வழங்குமாறு கேட்கவில்லை என்று குத்புத்தீன் பக்தியாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தனர். அன்னாரின் அருளுரைகளைக் கூறும் போதெல்லாம் உளம் உருகிக் கண்ணீர் சொரிவார்கள். ஒரு தடவை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரைகளைக் கூறிய அவர்கள்> ‘நியாயத் தீர்ப்பு நாளின்போது, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களின்திருவதனத்தைப் பார்க்க நாணமுறுபவனைப் போன்ற கொடிய பாவி எவனுமில்லை. அப்பொழுது நாணமுறுபவன், வேறு எங்கு போய்த்தான் ஒளிந்து கொள்வான்? அவனுக்குப் புகலிடம் தான் ஏது?’ என்று கூறித் தேம்பித் தேம்பி அழுதார்கள்.

இறையச்சம் அவர்கள் உள்ளத்தை எப்பொழுதும் ஆட்கொண்டிருந்தது. சிலபொழுது இறையச்சத்தால் நடுங்கவும், தேம்பித் தேம்பி அழவும் செய்வர்.

தம்மைக் கொல்ல வந்தவனை தன் உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட அவர்கள் அதை அவனிடம் சொல்லியதும் அதிர்ந்த அவர் நாயகம் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு இஸ்லாத்தை தழுவினார். 14 தடவை மக்காவிற்கு நடந்து சென்று ஹஜ்ஜு செய்து அங்கேயே இறப்பெய்தி ஜன்னத்துல் முஅல்லாவில் அடங்கப் பெற்றார்.

தாழ்மையின் உருவாக விளங்கிய அவர்கள் எவருக்கும் அவர்களே முதலில் ஸலாம் கூறுவர். வயோதிகர் எவரும் தம்மைக் காணவரின் அவரைக் கண்டதும் எழுந்து நின்று அவருக்கு முதலில் ஸலாம் உரைத்து> வரவேற்று அமரச் செய்வார்கள். தேவையுடையோரின் தேவைகளை ஒவ்வொரு நாளும் காலையில் சென்று விசாரித்து அவற்றை நிறைவேற்றி வைப்பார்கள்.

அவர்களின் உணவும், உடையும் மிக எளிமையாக இருந்தன.நோன்பு நோற்க விலக்கப்பட்ட நாட்களைத் தவிர்த்து மீதி நாட்களில் நோன்பு நோற்றார்கள். எப்பொழுதும் பகீர்களின் உடையை அணிந்து வந்த அவர்கள், அது கிழிந்துவிடின் அதில் ஒட்டுப் போட்டு தைத்து அணிந்து கொள்வார்கள்.

நாயகம் அவர்கள் பேரின்ப இசை நிகழ்ச்சிகளிலும் அதிக ஈடுபாடுடையவர்களாக இருந்தனர். அதில் கலந்து கொண்டு அவர்கள் சொக்கி மகிழ்ந்து தம்மையே மறந்த நிலையிலாகிவிடுவார்கள்.  அவர்களுடன் ஷைகு ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்தீ, ஷைகு முஹம்மது கிர்மானீ> ஷைகு முஹம்மது இஸ்பஹானீ போன்ற இறைநேசச் செல்வர்களெல்லாம் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று அவர்களின் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி காக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஆன்மீக செங்கோல் செலுத்தி சுமார் 90 இலட்சம் பேர்களை இஸ்லாத்தில் இணைத்த நாயகம்அவர்கள் 97 வயதானபோது தமக்கு இறப்பு அண்மி விட்டதை அறிந்து தம் மாணவர் குத்புத்தீன் பக்தியாரி அவர்களை அஜ்மீர் வருமாறு அழைத்து ‘இன்னும் சின்னாட்களில் நான் மறைவேன்’ என்று சொல்லி தமது பிரதிநியை நியமிக்கும் கிலாஃபத் நாமாவை ஷைகு அலீ சஞ்சரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எழுத்ச் செய்து அவர்களிடம் ஒப்படைத்து, அவர்களை டில்லிக்கு அனுப்பி வைத்து விட்டுத் தாங்கள்  உலகிற்கு வந்த பணி நிறைவுற்றதென மனநிறைவுற்றார்கள்.

இதன்பின் சில நாட்கள் உருண்டோடிசர்ன. ஹிஜ்ரி 627 ஆம் ஆண்டு ரஜப் மாதம், ஆறாம் நாள் (கி.பி. 1226 மே 21) திங்கட்கிழமை இரவு இஷா தொழுதபின் ததம் அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தனர். வைகறையில் கதவு தட்டப்பட்டபோது அது திறக்கப்படவில்லை. பிறகு ஒருவாறு கதவை திறந்து சென்று பார்த்தபோது, அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்திருந்தார்கள். அவர்களின் நெற்றியில் ‘ஹாதா ஹபீபுல்லாஹ் – மாத்த பி ஹுப்பில்லாஹ் (இவர் அல்லாஹ்வின் நேசர், அல்லாஹ்வின் நட்பிலேயே உயிர் நீத்தார்) என்று பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டதும், அவர்களின் வியப்புப் பன்மடங்கு அதிகமாகியது.

விடிந்ததும் அவர்களின் மூத்த மகன் காஜா பக்ருத்தீன் தந்தையின் ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்த பின்னர் அவர்களின் பொன்னுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாயகம் அவர்கள் மறைந்த செய்தி டில்லியிலிருந்த அவர்களின் கலீபா குத்புத்தீன் பக்தியாரி காக்கி அவர்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

நாயகம் அவர்களின் அடக்கவிடத்தை ஷைகு ஹமீதுத்தீன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியில் தோன்றிய ஷெய்கு ஹுஸைன் நாகூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பராமரித்து வந்தார்கள். அப்பொழுது காஜா நாயகம் அவர்களின் அடக்கவிடத்தின் மீது யாதொரு கட்டிடமும் எழுப்பப்படவில்லை.

அரசர் மஹ்மூது கில்ஜி அன்னாரின் மகிமையை உணர்ந்து அவர்களை பல்முறை டில்லிக்கு வருமாறு அழைத்தும் அவர்கள் செல்லவில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியைக் காண வருமாறு அழைத்ததுமே அதைக் காண அங்கு சென்றார்கள். சுல்தான் ஷெய்கு ஹுஸைன் நாகூரிக்கு பணமுடிப்பு அளித்தும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தம் மகனாரின் வேண்டுகோளை ஏற்று காஜா நாயகத்தின் அடக்கவிடத்தின் மீது கட்டிடம் கட்டும் எண்ணத்தோடு அப்பணத்தைப் பெற்று அதைக் கொண்டு அவர்களின் கட்டிடம் நிர்ணமானிக்கப்பட்டது.

பின்னர் சுல்தான் மஹ்மூது கில்ஜி தர்காவின் அண்மையில் இறைவனைத் தொழுவதற்காக ஒரு பள்ளிவாயிலை நிர்மாணித்தார். அதுவே இப்பொழுது ‘ஸந்தல் மஸ்ஜித்’ என்ற பெயருடன் திகழ்கிறது. அவரே ‘புலந்து தர்வாஸா'(உயரமான வாசல்) என்ற பெயருடன் விளங்கம் வாயிலையும் நிர்மாணித்தார்.

மால்டாவின் மன்னர், மால்தேவை வென்றபின் டில்லி மன்னர் ஷெர்ஷா சூரியும் அஜ்மீர் வந்து காஜா நாயகத்தை தரிசித்து அங்கு நிலவிய தண்ணீர்ப் பஞ்சத்தை அறிந்து அங்கு தம் பெயரால் ஓர் ஏரியை வெட்ட ஏற்பாடு செய்தார்.

பின்னர் டில்லியை ஆண்ட பேரரசர் அக்பரும் பலதடவை நாயகத்தின் தர்பாருக்கு வருகை தந்துள்ளார். சித்தூரில் வெற்றி கிடைத்தால் கால்நடையாகவே அஜ்மீர் வருவதாக நிய்யத்து செய்து வெற்றி கிடைத்ததும் அதன்படியே செய்து தமது நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டார். அவருக்கு மகன்கள் பிறந்த பின்னரும் பலமுறை அஜ்மீர் வருகை தந்துள்ளார். சிவப்பு நிறக்கற்களால் ஒரு பள்ளிவாயிலும், காஜா அவர்கள் வாழ்ந்து மறைந்த குளிப்பாட்டப்பட்ட இடத்தில்> தர்வேஷ்கள் தங்குவதற்கு ஒரு தங்குமிடமும் ‘ஸஹன் சிராஹ்’ என்ற விளக்கு மண்டபமும் நிர்மாணித்ததோடு, 125 மணங்கு (தபர்ருக்) சோறு சமைக்கக் கூடிய பெரிய செம்பு சட்டி  ஒன்றையும் செய்து கொடுத்தார். மேலும் அஜ்மீரைச் சுற்றி பாதுகாப்புச் சுவரும் எழுப்பினார்.

அக்பரின் மகன் சலீம் என்ற ஜஹாங்கீர் பலமுறை அஜ்மீர் தர்காவிற்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள சிறிய செம்பு சட்டி அவர் காணிக்கையாக நல்கியதேயாகும். அதில் ஒரு வேளைக்கு 60 மணங்கு சோறு சமைக்கலாம். இதை காணிக்கையாக வழங்கிய அன்று இதில் சோறு சமைத்து 5000 ஏழைகளுக்கு வழங்கினார் அவர்.

அவரின் மகன் ஷாஜஹானும் இங்கு 5 தடவை வந்து அடக்கவிடத்தை தரிசித்தார். இங்கு வெள்ளை சலவைக் கற்களாலான ஒரு பள்ளிவாயிலையும், நகார்கானாவையும் நிர்மாணித்தார்.

ஷாஜஹான் மகள் ஜஹானரா ஹிஜ்ரி 1503 ஷஃபான் மாதம் 18 ஆம் தேதி காஜா நாயகத்தை தரிசிக்க சென்று ரமலான் மாதம் 7 ஆம் நாள் அஜ்மீர் சென்று அன்னாரின் அடக்கவிடத்தை தரிசித்ததை மிகவும் பாக்கியமாக கருதி தம்முடைய ‘முனிஸுல் அர்வாஹ்’ என்ற நூலில் வரைந்துள்ளார். மேலும் தமக்கு ஊழியம் செய்ய வந்த ஊழியர்கள் அனைவரையும் அங்கேயே விட்டு விட்டு> டில்லி மீண்டார். அந்த ஊழியர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அங்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.

ஷாஜஹானுக்குப் பின் அரியணை ஏறிய அவ்ரங்கசீபும் காஜா நாயகம் அவர்களின் தர்பாருக்கு பலமுறை வந்துள்ளார். அஜ்மீருக்கு வரும் ஒவ்வொரு தடவையும் தம் தங்குமித்திலேயே ஆயுதங்களை வதை;துவிட்டு> கால்நடையாகவே காஜா அவர்களின் அடக்கவிடத்திற்கு வந்து தரிசித்து வந்தார். அப்பொழு ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் காணிக்கை செலுத்தி வந்தார்.

பிற்காலத்தில் காஜா அவர்களின் அடக்கவிடத்திற்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி மேரி ராணி அம்மையார்> ஆப்கான் அமீர் ஹபீபுல்லாஹ் கான்> ராம்பூர் நவாப் ஹாமித் அலீகான்> ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீகான்> தீதா சமஸ்தான மன்னர் மகாராஜா கோபதிசிங்> தோல்பூர் மகாராஜா ராஜா உதயபான் சிங்> மகாத்மா காந்தி> ஜவஹர்லால் நேரு> மௌலானா முஹம்மது அலீ ஜவ்ஹர் ஆகியோரும் வந்து தரிசித்து சென்றுள்ளனர்.

மலேசிய தேர்தலில் வெற்றி பெற்ற துங்கு அப்துர் ரஹ்மான் அமைச்சராக பொறுப்பேற்றதும் அஜ்மீர் வந்து காணிக்கை செலுத்தி சென்றார்.

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரும் இந்த இடத்தை வந்து தரிசித்து சென்றுள்ளனர். பராக் ஒபாமா நாயகம் அவர்களின் அடக்கவிடத்திற்கு அழகிய போர்வையை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

ஜாதி> மத பேதமின்றி அனைவரையும் மாட்சிமையுடன் ஆட்சி செய்யும் அஜ்மீர் நாயகம் அவர்களின் மாண்பினைக் கண்டேன் என்று கி.பி. 1902 ஆம் ஆண்டில் அங்கு வருகை தந்த இந்திய வைஸ்ராய் கர்ஸன் பிரபு தர்காவின் நிகழ்ச்சிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஏர்வாடி செய்யிது இப்றாஹிம் வலியுல்லாஹ்

சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்கள். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார்கள். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்கள்.

12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்.

கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார்கள். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார்கள். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர்கள். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினார்கள்.

‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.

முதல் கட்டமாக கி.பி.1165-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்கள்.

பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.

அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான். ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.

நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் குலசேகர பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..

அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.

இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.

போரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்.

மீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்.

இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார்கள்.. அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார்கள். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!

தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். முகவை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி என்ற இடத்தில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப்பட்டது.

இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.

அவர் ‘ஷஹீதான’ பிறகு அவரது தம்பி மகன் சையது இஸ்ஹாக், பாண்டிய மன்னரிடம் பெற்ற மானிய கிராமங்களை வைத்து பராமரித்து வந்தார்கள்.

முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது ஒலி ரலியல்லாஹு அன்ஹு

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா மேன்மை தங்கிய மஹான் ஹக்கீமுல் ஹூக்கமா செய்யிதினா ஷெய்குல் அஃலம் குத்பேரப்பானி ஆரிபு பில்லாஹி வஷ்ஷெய்கு சமதானி அஷ்ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டவர்கள் அடக்கமாகி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகத்துவமிக்க ஒரு மாபெரும் புனித ஸ்தலமாகும். மஹான் அவர்களை கருணை வள்ளல், காரணக்கடல், மருத்துவ வேந்தர் என்ற சிறப்பு சொற்களால் மக்கள் போற்றி வருகிறார்கள். தர்ஹா ஜாம்புவானோடை கிராமத்தில் அமைந்திருந்தாலும் உலக மக்களால் முத்துப்பேட்டை தர்ஹா என போற்றி வரப்படுகிறது

மஹான் அவர்களின் அருள் வேண்டி உலகின் பல பகுதிகளிளிலிருந்தும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சவுதிஅரேபியா, இலங்கை, அமெரிக்கா, குவைத், துபாய் முதலிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து அருள் பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றார்கள். தீராத நோய்களும், ஓடாத பேய்களும் மருந்துகளுக்கும் மந்திரங்களுக்கும் கட்டுப்படாத மனக்குழப்பங்களும் மனிதர்களை நிலைத் தடுமாறச் செய்திடும் வஞ்சினை, செய்வினை, ஏவல்,பில்லி, சூனியங்களும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் மஹான் அவர்களின் பேரருளால் தீர்க்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இது ஏதாவது ஒரு நாள் மட்டும் நிகழ்வு அல்ல அன்றாடம் நடக்கும் அற்புத நிகழ்வுகள் ஆகும்.

மேன்மை தங்கிய மஹான் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் அவர்கள் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கவ்மில் இஸ்ராயில் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஜாம்புவானோடை கிராமம் அடர்ந்த புதர்களால், மண்டிய மரம், செடி, கொடிகயாலும் நிறைந்த காடு ஆகம். இப்பகுதி மக்களால் இன்றும் கூட அக்கரைக்காடு என்று இதை அழைப்பது உண்டு. காடுகளை அழித்து விவசாயம் செய்ய முனைந்த கருப்பையாக் கோனார் எருது பூட்டி உழுதழட இரத்தம் பீரிட்டு அடித்து, கண்பார்வையற்று மயங்கி மூர்ச்சையாகிவிடுகிறார்.

உடனே பாவா அவர்களுடைய தரிசனமும் அசிரீரி வாக்கும் அவருக்கு கிடைக்கிறது. நான் ஒரு இஸ்லாமிய இறை நேசர். எனது பெயர் ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ். நீர் ஏர் உழுத இடத்தில் தான் நான் அடக்கமாகி இருக்கிறேன், கவலைப்படவேண்டாம். மயக்கம் நீங்கி பார்வை தெரியும். உடனடியாக நாச்சிக்குளம் சென்று அங்கு எனக்கு பணிவிடைகள் செய்வதற்காக காத்திருப்பவர்களை அழைத்து வாரும் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் கோனாரின் மனைவி உணவு எடுத்து  வந்து சேருகிறார். ஏர் அப்படியே இருக்கிறது. கணவர் கீழே விழுந்து கிடக்கிறார். முகத்தில் இரத்தம் வழிகிறது. அதிர்ச்சியோடு கணவரை உசுப்புகிறார். நினைவு திரும்பிய கோனார் உழுந்து நடந்த விபரங்களை சொல்கிறார்.

அங்கே இரு இஸ்லாமிய சகோதரர்கள் இவர்களை எதிர்பார்த்து தயாராக இருக்கிறார்கள். நடந்த விபரத்தை அவர்களிடம் சொல்லும் முன்பே இந்த விபரங்களை பாவா அவர்கள் தங்களிடம் அறிவித்து விட்டதாக சொல்லி கோனாரோடு ஜாம்புவானோடை வந்து சேர்ந்த போது நிலத்தில் ஏர் உழுத அடையாளம் எல்லாம் மறைந்து கபுர்(சமாதி) கூட்டப்பட்டு கால்மாடு தலமாடு அடையாளத்திற்கு இரண்டு எலுமிச்சம் பழங்களும் வைக்கப்பட்டு இருக்கிறது. நாச்சிக்குளத்திலிருந்து வந்த கான் சகோதரர்கள் பத்தி கொளுத்தி, சாமிபிராணி போட்டு, விளக்கு ஏற்றி கபுருக்கு போர்வை போர்த்தி பாத்திஹா யாசின் ஓதி துஆ செய்து கபுருக்கு மேல் கீற்றுக்கொட்டகை போட்டு பகல் நேரங்களில் மட்டும் வந்திருந்துவிட்டு இரவில் விளக்கு ஏற்றிவைத்து விட்டு சென்று கொண்டு இருந்துள்ளார்கள்.

சில வருடங்கள் கழித்து இவ்வழியாக தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் தனது பரிவாரங்களுடன் வந்த போது ஆற்றங்கரையில் மன்னரின் பட்டத்து யானை கீழே விழுந்து படுத்துக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் எழும்பாமல் போகவே மஹான் பாவா அவர்களுடைய ஜியாரத்தில் இருந்து புனித சந்தனம் தப்ருக் (பிரசாதம்) எடுத்துச் சென்று யானையின் நெற்றியில் வைக்க, உடனே எழுந்து விடுகிறது. மஹான் அவர்களுடைய மகிமையையம், அற்புதத்தையும் அறிந்து வியந்த அரசர் தனது பரிவாரங்களுடன் நடந்தே வந்து பாவா அவர்களை வணங்கி மரியாதை செய்து பிரர்த்தித்து உடனடியாக தற்போது தர்ஹா அமைந்துள்ள இடம் உட்பட 5 1/2 வேலி நிலத்தையும். ஷேக் தாவூது ஆண்டவர் தர்ஹா என்ற பெயரில் பட்டயம் போட்டுக் கொடுத்து சென்றுள்ளார்கள்.

இன்று அரசரின் யானை விழுந்த இடத்தை ‘யானை வழுந்தான் கிடங்கு’ என்று மக்களால் சொல்லப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக தர்ஹா கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜ்ரி வருடத்தில் ஜமாத்துல் அவ்வல் பிறை 1-ல் கொடியேற்றமும், பிறை 10ல் சந்தனக்கூடும், பிறை 14ல் கொடி இறக்கமும் பெரிய ஹந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உரூஸ் என்னும் பெரிய ஹந்தூரி விழாவில் பல்லாயிரக்கணக்கான இந்து, முஸ்லீம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேன்மை தங்கிய பாவா அவர்களை நாகூர் ஆண்டவர் ஹஜரத் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களும், ஞானக்கடல் சதக்கத்துல்லா அப்பா அவர்களும். பல்லாக்கு தம்பி ஒலியுல்லாஹ் அவர்களும், பொதக்குடி நூர் முகம்மது ஷா வலியுல்லாஹ் அவர்களும் இன்னும் பல வலிமார்களும் தங்களின் ஹயாத்தோடு வந்து தரிசித்து இருக்கிறார்கள்.

மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்களின் சன்னிதானத்தில் நோய்வாய்ப்பட்டவர்களும், பேய், பிசாசு பிடித்தவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் வஞ்சினை, செய்வினை, ஜின், சைத்தான், பில்லி, சூனியங்களால் பாதிக்கப்பட்டவர்களம் 11 நாட்கள், 41 நாட்கள் என நேர்த்தி கடனுக்கு தங்கி இருந்து நல்ல சுகம் பெற்று செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கழமை இiவு கிழமை இரவாக கருதப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து, முஸ்லீம் பக்தர்கள் வந்து இரவு தங்கி இருந்து காலையில் செல்கிறார்கள்.

மேன்மை தங்கிய பாவா அவர்களின் சன்னிதானத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கும் தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கனவிலும், நினைவிலும் சுகம் அருளப்படுகிறது. அவர்களுடைய வியாதிகளுக்கு தகுந்தவாறு ஆப்ரேஷன் மூலமாகவும்வாய்வழியாகவும். கிளாஸ,; ஓடு, முடி, எலுமிச்சம்பழம் உருவங்கள் போன்றவைகள் எடுக்கப்படுவதை கண்கூடாக காணப்படுகிறது. தீராத நோய்களுக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு ஆப்ரேஷனும் மஹான் அவர்களால் நடத்தப்படுகிறது. அதனால்தான் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் புரியும் ஒரு அற்புத மருத்துவசாலையாகவும், அருள்மனம் கமழும் சோலையாகவும் அண்ணலின் பீடம் திகழ்கிறது. மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்கள் இங்கு அடக்கமாகிய நாள் தொட்டு இன்று வரை எண்ணலடங்கா அற்புதங்கள் பல நிகழ்ந்து வருகிறது.

மேன்மை தங்கி பாவா அவர்களை நாடி வரக்கூடியவர்களக்கு பாவா அவர்களின் ஜியாரத்து கப்ரிலே பூசி இருக்கும் சந்தனமும், மேலே போடப்பட்டுள்ள பூவும், திருவிளக்கில் எரித்த எண்ணையும், புனித ஷிஃபா குளத்து தண்ணீரும் நோய்தீர்க்கும் அருமருந்துகளாக பயனபட்டு வருகிறது.

பாவா அவர்களின் ஜியாரத் 60 அடியாகும் ஜயாரத் கதவு தினமும் காலை சுபுஹூக்கு பாங்கு கொத்தவுடன் திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூடப்படுகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமை இரவும் மஹ்ரிபு தொழுகைக்குப் பின்னால் தாவூதியா மஜ்லிஸில் மௌலூது ஷரீப் ஓதப்படுகிறது..

நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு

நாகூர் ஷாஹுல் ஹமீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர்.

முஹம்மது நபியின் வழித்தோன்றல் சையிது ஹஸன் குத்தூஸ் என்பவருக்கும்,  நபியின் மருமகன் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோன்றலான சையித் ஹமீதுத்தீன் மகளுமான அன்னை பாத்திமாவுக்கும் மகனாக சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவின் மாணிக்கப்பூர் நகரில் பிறந்தவர் தான் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ்.

இறைத்தூதர் ஹிலுரு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷாஹுல் ஹமீதின் பிறப்பு குறித்து அன்னை பாத்திமாவுக்கு அறிவித்தார்கள். மூன்று மாத கருவாக இருந்தபோதே தனது அற்புதத்தை நிகழ்த்திவிட்டார்கள்.  ஷாஹுல் ஹமீது நாயகம். உடல்நலக் குறைவாக இருந்த தனது தந்தை நலம் பெறுவார் என்று தாயின் கருவறையில் குரல் எழுப்ப அவ்வாறே தந்தை குணமடைந்தார். ஆறுமாதக் கருவாக இருந்தபொழுது தனது தாயார் தொழுகைக்காக ஒழுச் செய்ய கிணற்றுள் விழுந்த பாத்திரத்தை தண்ணீரோடு தாயின் காலடியில் இருக்க வைத்தார். கருவறையில் இருந்தபடியே மேலும் இரண்டு அதிசயங்களை நிகழ்த்திய ஹாஹுல் ஹமீது , ஹிஜ்ரி 910ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வியாழன் மாலை வெள்ளிக்கிழமை இரவில் இப்புவியில் ஜனனம் செய்தார்.

நாயகம் பிறந்ததும் ஹிலுரு அலைஹிஸ்ஸலாம்மற்றும் இல்யாஸ் நபிகள் அந்த அறையில் தோன்றினார். ஹிலுரு அலைஹிஸ்ஸலாம்குழந்தையை கையில் எடுத்து பாங்கு சொன்னார்கள். இல்யாஸ் நபி ‘சையது அப்துல் காதிர்’ எனப் பெயர் சூட்டிவிட்டு தாய்க்கருகில் கிடத்திவிட்டு மறைந்தார்கள்.

நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த ஷாஹுல் ஹமீது நாயகம் சிறுவயதிலேயே நோன்பு நோற்பது, கேட்பவர் மெய் மறக்கும் நிலையில் திருமறையை இசையுடன் ஒதுவது, மார்க்க கடமைகளை முறையாக கடைப்பிடிப்பது என்று பக்தியில் திளைத்து வந்தார்கள்.

குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹு ஆகிய மார்க்கக் கல்விகளையும் சரித்திரம், பூகோளம், கணிதம், தத்துவம், தர்க்கம், வானசாஸ்திரம் ஆகிய லௌகீகக் கல்விகளையும் பதினெட்டு வயது  நிரம்புவதற்குள் கற்று முடித்தார்கள். இடையிடையே ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சிறுவன் முன் தோன்றி வேதத்தை தெளிவாக்கி வைத்தாகள்.

வாலிப பருவம் அடைந்தது ஷாஹுல் ஹமீது அவர்கள் தங்களுக்கான ஞானகுருவைத் தேடி ஹிஜ்ரி 928ம் ஆண்டு ஜமாதுல் ஆகிர் மாதம் ஒரு திங்கட்கிழமை வழித்துணையின்றி, கைச்செலவுக்குப் பொருள் இன்றி, துறவுக்கோலத்துடன் குவாலியர் பட்டணத்துக்கு விரைந்தார்.

நடை பயணமாக காடுகளை கடந்து வந்து கொண்டிருந்த நாயகத்தை திருடர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நெருங்கினார்கள். அவரிடம் பொருள் இல்லாததால் நாயகத்தை கொலை செய்யக் கருதி ஆயுதங்களால் வெட்டியவர்கள் தங்கள் உடல்களே துண்டாகி விழுந்தனர்.  கொள்ளையர்களின் உறவினர்கள் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவர்களின் உடலை ஒட்டி, உயிர் கொடுத்து அற்புதம் நிகழ்த்தினார்.

குவாலியர் நகரை நெருங்குகையில் அங்கிருந்த சிற்றூரில் ஒரு சிறிய மசூதியில் நாயகம் தங்கி தனது ஞானகுருவை இறைவனே காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்போது தோன்ரிய அசரீரி ‘ஷாஹ் அல் ஹமீது’ என்ற கருணைப் பெயரை உமக்கு சூட்டியுள்ளோம். உமது ஞானகுரு முஹம்மது கௌது. அவரிடம் செல்’ என்றது.

அதன்படி முஹம்மது கௌதுவிடம் சென்று அவரது மெய்ஞ்ஞான பயிற்சிக் கூடத்தில் பயின்று மெய்ஞ்ஞானத் தீட்சை பெற்றுக் கொண்டார். பத்து ஆண்டுகள் மெய்ஞ்ஞானக் கல்வி பயின்றவர் பின்னர் அங்கிருந்து கிளம்பினார்கள். அவருடன் நானூற்று நாற்பது சீடர்கள் உடன் சென்றனர்.

அப்போது மலைவழியாக வரும்போது ஆதிபிதா ஆதம் (அலைஹிஸ்ஸலாம்), ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் நாயகத்துக்கு ரிக்வத் எனப்படும் திருவோடு போன்றதொரு பாத்திரத்தை வழங்கினார்கள். தேவைபடும் போது தேவைப்பட்ட உணவை இதனின்று பெற்றுக் கொள்ளலாம்.

ஊர்தோறும் மக்களுக்கு உபதேசித்தும், உண்மையைப் பேணச் செய்து இஸ்லாத்தை நிலை நாட்டிக் கொண்டே நாயகம் அவர்கள் மாணிக்கப்பூர் வந்தடைந்தனர். அங்கு கொஞ்ச காலம் இருந்தவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்வதை தடை செய்தவர்களாக சீடர்களுடன் லாகூர் சென்றார். அங்கு இறைவனின் ஆணைப்படி காழி நூருத்தீன் முஃப்தி என்பவரின் மனைவி ஜஹாரா பீபிக்கு தான் மென்ற வெற்றிலை தாம்பூலத்தை கொடுத்து அவரை கருவுறச் செய்தார்.

அவர் பெறப்போகும் முதல் குழந்தைக்கு ‘முஹம்மது யூசுஃப்’ என பெயரிட நூருத்தினிடம் தெரிவித்ததோடு குழந்தையின் தன்மை குறித்தும் தெரிவித்த நாயகம் தன் சீடர்களுடம் பயணத்தை தொடர்ந்தார்.

மேற்கு, தென்மேற்கு ஆசிய நாடு நகரங்களைச் சுற்றிக்கொண்டு துர்க்கி தேசத்தினுள் புகுந்த நாயகம், கர்ஸான என்ற பட்டணத்தை அடுத்துள்ள மலையில் நாற்பது நாட்கள் தனித்து சில்லா இருந்தார்கள். அன்று ஹிஜ்ரி 952 ம் ஆண்டு ரஜப் மாதம் 12&ம் நாள் லாகூரில் ஜஹாரா பீபிக்கு மகன் பிறந்தான். மனக்கண்ணால் தன் மகனை கண்டு உரையாடி முத்தமிட்டு மகிழ்ந்தார்கள்.

ஒருநாள் இரவு தொழுகையின் போது தனது தந்தை மரணிப்பதை அறிந்து தன் சீடர்களுடன் ஒரே இரவில் ஆசியா மைனரிலிருந்து இந்தியாவின் மாணிக்கப்பூரை நடந்தே அடைந்து அதிசயம் நிகழ்த்திய நாயகம் தந்தை மறைந்து 40 தினங்களுக்குப் பின் அரேபியாவுக்கு கிளம்பினார்கள்.

அங்கு மக்கா, மதீனாவில் ஹஜ்ஜு செய்தபடி இருந்தார் நாயகம். அப்போது நாயகம் நிகழ்த்திய அதிசயத்துக்கு பரிசாக இபுனு ரவூஃப் தனது கப்பலை நாயகத்துக்கு சொந்தமாக்கி பத்திரம் கொடுக்க, அதை தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு கொடுத்துவிட்டு கஃபாவை நோக்கி நடந்தார்கள்.

நாயகம் அவர்கள் தங்களின் 37 ம் வயதில் ஜித்தா துறைமுகத்திலிருந்து கப்பல் ஏறி கேரளாவின் பொன்னாணி எனும் ஊரில் கரையிறங்கினார்கள். அப்போது நாயகத்துடன் அவரது மகன் யூசுஃப் ஆண்டகையும் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து லட்சத்தீவுகள், சிலோன் முதலிய வெளிநாடுகளுக்கும் காயல்பட்டணம், நத்தம், மேலப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் சென்று இறைப்பிரசங்கம் செய்தவர் தஞ்சாவூரை அடைந்தார். அதை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கன் உடல்நலம் குன்றியிருந்தார். நாயகத்தின் சிறப்புகள் தெரிந்து அவரைக் கண்டு நோய் நீங்கப்பட்ட மன்னன், அதற்கு வெகுமதியாக நிலங்களைக் கொடுத்தான். அந்த இடத்தின் பகுதியில் தான் தர்காவும், அதைச் சேர்ந்த குளம் முதலிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.

ஷாஹுல் ஹமீது நாயகம் அவர்கள் நாஹுரில் இருபத்தெட்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அற்புதங்கள் பல நிகழ்த்திய நாகூர் நாதர் ஹிஜ்ரி 978ம் வருஷம் ஜமாதுல் ஆகிர் மாதம் பத்தாம் நாள் வெள்ளிக்கிழமை இரவு புகழுடம்பு எய்தினார்கள்.

தர்கா வரலாறு:

ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர். நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.

நாகூர் நாயகம் மறைந்ததும் அவரது புதல்வர் தனது மனைவி, மக்களுடன் அங்கு குடித்தனம் நடத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு நாயகத்தின் கஃப்ரை சுற்றி பலகையால் பள்ளி போல் அடைத்தார்கள். அந்தப்பள்ளியே இன்று அழகிய ஐந்து மினாராக்களை( கோபுரம்) உடையதாய் விளங்குகிறது.

மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர்.

முதல் மினாராவை இப்ராஹீம் கான் என்பவர் ஹிஜ்ரி ஆயிரத்து ஐம்பத்தைந்தாம் வருடம் கட்டினார். இதற்கு சாகிபு மினாராவென்று பெயர். இரண்டாம் மினாராவை செய்யது மரைக்காயர் கட்டிக் கொடுத்தார். இம்மினாரா நாயகத்தின் தலைப் பக்கம் இருப்பதால் தலைமாட்டு மினாரா எனப்படுகிறது. இந்த மினாராவில் இந்து அன்பர் ஒருவர் சின்ன தங்கக் கலசத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.

மூன்றாம் மினாரா( முதுபக்கு மினாரா) மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவராலும், நான்காம் மினாரா (ஓட்டு மினாரா) பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக்கான் என்பவராலும், ஐந்தாம் மினாரா(பெரிய மினாரா) தஞ்சையை ஆண்டுவந்த பிரதாபசிங்கு மன்னனாலும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பெரிய மினாரா 131 அடி உயரம் கொண்டதாகும்.

நாகூர் தர்கா ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சக்கரவர்த்தி சுல்தான் துல்கர்னைன் கட்டிய முதுபக்கு(1). இந்த ஸ்தலத்தில் தான் நாயகம் மரணித்தார்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள அற்புதக்கேணியின் தண்ணீரை புண்ணிய தீர்த்தம் என்று கருதி பக்தர்கள் எடுத்து செல்லுகின்றனர்.

நாயகத்தின் இறந்த உடலை குளிப்பாட்டி யாஹுசைன் பள்ளி. இது முதுபக்குக்கு வெளியில் தென்புறத்தில் இருக்கின்றது. நாயகத்தின் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் தேங்கி நின்ற சிறிய குட்டை தான் தர்கா குளம். குட்டை போலிருந்ததை அச்சை சுல்தான் பெருங்குளமாக வெட்டி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தான்

தர்காவில் இருக்கும் பீர்மண்டபம். திருவிழாக்காலங்களில் பீர் சாயபு என அழைக்கப்படும் தபோதனர்கள் 3 நாள் உபவாசம் இருந்து நோன்பு திறந்துவிட்டு பீர்மண்டபத்தில் வந்து அமர்வர்.

நாயகம் திருமுடியிறக்கிய கடற்கறை ஓரம் தான் சில்லடி என்ற ஆலயம் இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவும் நடந்து வருகிறது.

நாயகம் அவர்கள் 40 நாள் இறைதியானம் இருந்த புன்னிய ஸ்தலம் வாஞ்சூர் பள்ளிவாசல். இது நாகூரிலிருந்து 21/2 மைல் தொலைவில் உள்ளது.

ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா ஆண்டவர்களின் சன்னதி 7 வாயில்கள் கொண்டது. இவை அனைத்தும் வெள்ளித் தகட்டால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசலிலும் நூற்றுக்கணக்கான

குத்துவிளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்நிதிக்குள் எந்த மதத்தினரும் செல்லலாம்.

இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி கடைசி மூன்று வாசல்களை கடக்க மட்டும் பெண்களுக்கு அனுமதியில்லை. நாகூர் ஆண்டவர், அவரது மகன் முகம்மது யூசுஃப், மருமகள் செய்யிதா சுல்தான் பீவி அம்மாள் ஆகியோரின் சமாதிகள் உள்ளே அமைந்துள்ளது. நாகூர் ஆண்டவர் இடுப்பில் கட்டியிருந்த இரும்புச்சங்கிலி,  குமிழ்கள் இல்லாத காலணி, அதிசயம் நிகழ்த்திய கொம்புத் தேங்காய ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அரபி மாதம் ஜமாத்துலாகிறு பிறை 1 ல் தர்காவில் கொடியேற்றத் திருவிழா நடக்கும் பிறை 10ம் நாள் இரவு நாகையிலிருந்து அதி விமரிசையாக சந்தனக்கூடு புறப்பட்டு வந்து ஆண்டவர்கள் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பிறை 11 ல் பீர் ஏகுதல் நடைபெற்று 14&ம் இரவு இறுதிக்கட்டம் அடையும். இந்த திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்கின்றனர். நாகூர் சமாதியில் போர்த்தப்படும் சால்வை, மலர்ப் போர்வை பழனியைச் சேர்ந்த ஒரு இந்துக்குடும்பத்தாரால் இன்றளவும் கொண்டுவரப்படுகிறது. நாகூர் தர்காவை நாயகத்தின் வாரிசுகளான சுமார் 640 குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர்.

நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது.

அனைத்து மதத்தினருக்கும் அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் நாகூர் ஆண்டவர்.

நாகூர் நாயகத்தின் நல்லுபதேசங்கள்

 1. தேவையான பொருளொன்றை வாங்க கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்குள் நுழைகிறோம். வேண்டிய பொருள் அங்கே இருக்கிறது. அது குறித்து நாம் யாரிடம் பேசுவோம்? கடைக்காரரிடம்தான் பேசுவோம். அந்தப் பொருளிடம் பேசமாட்டோம். அப்படியிருக்க, எல்லாவற்றையும் படைத்துப் பாதுகாத்து வருகின்ற அல்லாஹ்வை நெருங்க முடியாமல் அவனது அற்பப் படைப்புகளிடமே உதவி கோருவதும் ஆதரவு வைப்பதும், புகல் கேட்பதும் எப்படிச் சரியாகும்?
 2. நம்மை மிகவும் நெருங்கியிருக்கிற அல்லாஹ்வை முட்டாள்தனமான செயலாலும் எண்ணத்தாலும் நாம்தான் தூரமாக்கிக் கொள்கிறோம். ஞானத்தாலும் அன்பாலும் அவனை நெருங்கிச் செல்கிற புத்திசாலிகளை அணைத்துக்கொள்ள அவன் காத்திருக்கிறான்.
 3. பிரபஞ்சத்தின் அதிபதியே நம்மை ஆலிங்கனம் செய்து கொண்டுவிட்டபின், அவனது படைப்புகள் நமக்கு ஏன் தலைவணங்கி நிற்காது?
 4. இஸ்லாத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று அகம், மற்றது புறம். அகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்டு புறத்தை அழுக்கடையச் செய்தீர்களானால், நீங்கள் இஸ்லாத்தைப் பேணியவர்களாகமாட்டீர்கள். புறத்தை கவனித்துக்கொண்டு அகத்தை மறந்தாலும் அப்படியே.
 5. இரண்டு பக்கங்களைக் கொண்ட இஸ்லாம் என்ற உடலுக்கு தொழுகையே உயிர். எக்காரணம் கொண்டும் தொழுகையை அலட்சியம் செய்ய வேண்டாம்.
 6. அதிகமாக உறங்க வேண்டாம். மந்த நிலையை ஏற்படுமாறு அதிகமாக உண்ண வேண்டாம். தொடர்ந்து நோன்பு நோற்று வருவது தீய எண்ணங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
 7. அறிஞர்களையும் பெரியவர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 8. முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபடுகிறவனுக்கு மற்ற வஸ்துக்கள் வழிபட விரும்பும்.
 9. நஃப்ஸ் (கீழான இச்சைகள் / மனது ) கட்டுப்பட்டுவிட்டால் மற்ற யாவும் எளிதாகிவிடும்.
 10. நான் உங்கள் ஆன்மாவில் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை என்றும் கூறுகிறான். உங்கள் அகத்தை தன் இருப்பிடமாக இறைவன் வைத்திருக்கிறான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும் இது சத்தியமானதாகும். எனவேதான் யார் தன்னை அறிந்து கொண்டாரோ, அவர் தன் நாயனை அறிந்து கொண்டார் என்று நபிகள் நாயகமும் கூறினார்கள்.
 11. ஒரு மனிதன் தன் கண்களை மூடிக்கொண்டு, காதுகளை அடைத்துக் கொண்டு, ஆட்டம் அசைவின்றி படுத்திருந்தாலும்கூட தானிருப்பதை உணர்கிறான். இவ்வாறு எது உணரப்படுகிறதோ அதுவே மனிதனுடைய அகமாக இருக்கிறது. அகத்தில்தான் ‘ரூஹ்’ எனப்படும் ஆன்மா இருக்கிறது.
 12. ஒவ்வொரு விஷயத்திலும் சிலருக்கு இறைவன் நிபுணத்துவத்தைக் கொடுத்திருக்கின்றான். இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைய வேண்டுமானால் அவனுடைய பாதையில் ஏற்கனவே சென்றுள்ள மெய்யடியார்களைத் தேடியடைவதுதான் உங்களுக்குச் சரியான பாதையாகும்.
 13. பாதுஷாக்களும், மன்னர்களும் மதத்தின் பெயரால் மனித இரத்தத்தைச் சிந்தாதீர்கள். உங்களுடைய அதிகார ஆசைகளுக்கு ஆண்டவனின் பெயரைச் சூட்டாதீர்கள்.
 14. சமூகத்திலும் மார்க்கத்திலும் குழப்பத்தை உண்டாக்கும் கூட்டத்தினரோடு சேரவேண்டாம். மார்க்க சட்டதிட்டங்களும், ஆன்மிகப் பாதையும் ஒன்றோடொன்று முரண்பட்டதோ, வேறு வேறானதோ அல்ல.
 15. நல்லடியார்களின் சமாதிகளை தரிசனம் செய்வதால் உங்களின் சகல காரியங்களும் நேர் பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
 16. மனிதனுக்குள்ளே இருக்கும் ரகசியம்தான் இறைவன்.
 17. உங்களுடைய குருநாதரின் தோற்றத்தில்தான் உங்களுக்கு சத்தியம் வெளியாகும்.
 18. ஞானமானது உங்கள் நீண்ட அங்கியிலோ, ஜபமாலையிலோ இல்லை.
 19. மனிதன் தனக்கு நன்றி செலுத்துவதை இறைவன் எதிர்பார்க்கிறான். ஆனால் மனிதனால் இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்த முடியும்? தொடக்கத்தில் இறைவனின் ரகசியமாக மனிதன் இருந்தான். இன்றோ இறைவன் மனிதனின் ரகசியமாக உள்ளான். நம்மில் அவனை பகிரங்கப் படுத்துவதே நாம் அவனுக்குச் செய்யும் நன்றியாகும்.
 20. உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கும் பொருட்டு இறைவன் என்னை இந்தியாவில் தோன்றச் செய்துள்ளான்.

ஆஷிகே ரசூல் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ்

பிறப்பு :

மேலப்பாளையம் நகருக்கு வருகை தந்த ஏழு குடும்பங்களில் ஒன்றான தக்கரி என்ற தக்கடி என்னும் குடும்பத்தில்  தகப்பனார் உதுமான் லெப்பை அவர்களுக்கும் தாயார் ஹவ்வா உம்மாள் என்பவருக்கும் வெகு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 1141  முஹர்ரம் பிறை 6 ல் பிறந்தார்கள். இவர்களுக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் முஹம்மது முஹ்யித்தீன் என்பதாக வைத்தார்கள்.

குழந்தை பருவம்

குழந்தை முஹம்மது முஹ்யித்தீனுக்கு ஒரு வயதாக இருக்கும் போதே அம்மை நோய் ஏற்பட்டு இரு கண்களும் பார்வையை இழந்தன.  இதை பெற்றோர்களால் நெடு நாட்களாக சகித்துக் கொள்ளமுடியவில்லை அவர்கள் குடும்பத்தின் சற்குருவான கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களிடம் அழைத்து சென்று சொல்லி துஆ செய்யுமாறு வேண்டினார்கள்

குரு, வளர்ப்பு மகனாக ஏற்றல்

குழந்தையின் வருங்கால  சிறப்பை அறிந்த மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் அப்பெற்றோரிடம் இந்த பிள்ளையை என்னிடமே விட்டு செல்லுங்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் என் பிள்ளையாக பார்த்து கொள்கிறேன் சென்றார்கள் அவர்களும் மஹான் உடைய வளர்ர்ப்பில் சிறப்பாக இருக்கும் என உணர்ந்து விட்டு சென்றார்கள்

கல்வி பருவம்

பாலகர் முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் வீட்டிலேயே வளர்ந்தார்கள் குழந்தைக்கு கல்வி கற்று கொடுக்க விரும்பிய மஹான் அவர்கள் அவர் முதுகையே கரும்பலகையாக பயன்படுத்தி திருக்குரான் எழுத்துக்களை அவர் முதுகில் எழுதிக்காட்டி மனத்தால் அவர் உணரும் அளவுக்கு எழுதி சொல்லி கொடுத்தார் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் அவர்கள் இவ்வாறு குர்ஆன் வசனங்களையும், நபிகள் நாயகம் (ஸல்லல்லஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளான ஹதீஸ் மற்றும் சட்ட திட்டங்களையும் கற்று கொண்டார்கள்

கிலுறு (அலைஹிஸ்ஸலாம்)அவர்களின் சந்திப்பு

மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் மாணவர் முஹம்மது முஹ்யித்தீனுடன் யாரோ பேசிக்கொண்டிருப்பதுபோல் சத்தம்  கேட்டு உள்ளே வந்து பார்க்க யாருமில்லை மாணவர் மட்டுமே இருந்தார்

மாணவரிடம் யாரோடு பேசிக் கொண்டிருந்தீர்கள் என கேட்டார். அதற்கு மஹான் அவர்கள் யார் என்று தெரியவில்லை குரல் உங்கள் குரல் போன்று இருந்தது அவர் எனது வாயை திறக்க சொன்னார் உடனே நான் வை திறந்தேன் அவர் எனது வாயினுள் அவரது உமிழ் நீரை உமிழ்ந்தார் நான் அதை அப்படியே விழுங்கி விட்டேன் அந்த உமிழ் நீர் நல்ல மதுரமானதொரு நீர் போன்று சுவை மிகுந்திருந்தது என்று மஹான் அவர்கள் கூறினார்கள்  கோஜ் அப்பா அவர்களாலும் தெரிய முடியவில்லை

உடனே அவர் காலத்தில் வாழ்ந்த மஹான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் சென்று நடந்த விபரத்தை கூறி கேட்டார்கள் அவர்கள் உடனே சொன்னார்கள் கிலுறு (அலைஹிஸ்ஸலாம்)அவர்கள் என்று கூறினார்கள் இதன் மூலம் வரும் காலத்தில் சிறந்த இறையருள் பெற்றவராக வருவார் என்பதயும் மஹான்  கோஜ் அப்பா அவர்கள் புரிந்து கொண்டார்கள்

இந்நிகழ்ச்சிக்கு பின் மஹான் அவர்கள் வாழ்க்கையில் பல மாறுதல்கள் உண்டாகின. அவர்கள் எப்போதும் தனித்திருக்க பிரியபட்டார்கள் பிறரிடம் அதிகமாக பேசுவதில்லை குறைவாகவே உண்டார்கள் அல்லாஹ்வை பற்றிய சிந்தனையே அவரிடம் இருந்து வந்தது

பைஅத் பெறுதல்

ஒரு நாள் சுஃபுஹூ தொழுகை முடிந்த பின் மஹான் அவர்கள் கோஜ் அப்பா அவர்களிடம் எனக்கு பைஅத் பெற எண்ணமாக உள்ளது பைஅத் தாருங்கள் என்றார்கள் அதற்கு கோஜ் அப்பா அவர்கள் சிறப்பு மிகு தகுதி பெற்றிருக்கும் உனக்கு நான் பைஅத் தருவது சரி அல்ல என் குரு தான்  உனக்கு குருநாதராக இருக்க முடியும் என்று கூறினார்கள் இதை கேட்ட பிள்ளை முஹம்மது முஹ்யித்தீன் (பஷீர் அப்பா) அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் எல்லாமே நடக்கும் என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார்கள். நாட்கள் செல்ல செல்ல மஹான் பஷீர் அப்பா அவர்களுக்கு இறை காதல் அதிகமாவதை கண்ட மஹான் கோஜ் அப்பா அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் என்ற ஊரில் தனது குருநாதர் சிஸ்தியா தரீக்காவில் புகழ் பெற்ற மஹான் ஷெய்கு உதுமான் வலியுல்லாஹ் அவர்களிடம் தன்னுடைய வளர்ப்பு பிள்ளையை அறிமுகம் செய்து வைத்தார்கள் கண் தெரியாத இந்த பிள்ளையின் ஆன்மீக உயர்வை விளங்கிய மஹான் ஷெய்கு உதுமான் வலியுல்லாஹ் அவர்கள் பை அத் கொடுத்து பஷீர் என்று அழைக்குமாறு கூறி தரீக்காவில் கலீபா பதவியும் கொடுத்தார்கள்

திருமண பருவம்

கோஜ் அப்பா அவர்கள் பிள்ளை பஷீருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஒருவர் தனது மகள் கமருன்னிசாவை பெண் கொடுக்க சம்மதித்து திருமணமும் இனிதாக நடை பெற்று முடிந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்க்கு கோஜ் அப்பா அவர்கள் பெயரே வைக்கப்பட்டது

மக்களுக்கு நல்லுரைகள்  (மக்களை நன்மையின் பக்கம் அழைத்தல் மஹான் பஷீர் அப்பா அவர்களின் நல்லுரைகளை கேட்க்க மக்கள் கூட்டம் மேலப்பாளையம் ஊரில் அலைமோதியது ஒரு சமயம் இவர்கள் பேச்சை கேட்க்க வந்த பாளையங்கோட்டை ஆற்காடு நவாப் அவர்களின் சகோதரர் நவாப் மஹபூப் கான் அவர்கள் மஹான் அவர்களின்  பேச்சின் சிறப்பையும், உயர்வையும் அறிந்த அவர்கள் நன்கொடைகள் பல வழங்கியதுடன், அப்பா அவர்களிடம் பைஅத்தும் பெற்றார்கள் மேலும் மஹான் அவர்களின் உண்மை நிலையையும், தூர இடங்களில் உள்ளவைகளையும், நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் கஷ்ப் என்னும் தூரதரிசனம் பெற்றிருக்கும் ஆற்றலை அறிந்த மக்கள் மஹான் அவர்களை “ஷாயீர்,” “ஆஷிக் ரசூல்,”  “தென்னாட்டு ஷெய்குல் அக்பர்,”  “மாமேதை,”  “பஷீர் அக்பர்” என பல சிறப்பு பெயர்களால் புகழ்ந்தார்கள் அவரிடம் பைஅத் பெறுபவர்கள் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே இருந்தது.

மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் தமிழ் புலவராகவும் விளங்கினார்கள்

மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் அற்புதங்கள்

திருநெல்வேலி மாவட்டம் ஐயூப்கான்புரத்தில் இருந்து ஹஸனா லெப்பை, கலந்தர் லெப்பை என்ற இருவர் மஹான் அவர்களை சந்திக்க வந்தார்கள். வரும் வழியிலே தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு இருவரும் பஷீர் அப்பா அவர்களால் ஹதீஸை எல்லாம் படிக்க முடியாதே எப்படி நல்ல கருத்துக்களை சொல்ல முடியும் என பேசிக்கொண்டே வருகிறார்கள் இதை தன அகப்பார்வையால் அறிந்த மஹான் அவர்கள் வீட்டில் தன துணைவியாரிடம் விருந்தாளிகள் இரண்டு பேர் வருகிறார்கள் அவர்களுக்கு நெய் சோறு சமைக்கும் படி கூறினார்கள்

அவ்விருவரும் வீடு வந்ததும் வரவேற்று நீங்கள் மார்க்கம் சம்பந்தமான வினாக்களை கேட்க்க வந்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி அதக்கு முன்னால் நீங்கள் வரும் வழியில் தாமிரபரணி ஆற்றில் குளித்தீர்கள் குளிக்கும் முன் உங்களது பணப்பையை ஆற்றங்கரையிலுள்ள ஒரு கற்றாழை செடி அருகில் வைத்தீர்கள் அதை எடுக்காமல் வந்துவிட்டீர்கள் என்றதும் இருவரும் சென்று எடுத்து விட்டுவந்தார்கள்

பிறகு அப்பா அவர்களிடம் மர்ர்க்க அறிவு பெற்று குருவாக ஏற்று கலிபா உடைய அந்தஸ்தும் பெற்றார்கள் இவ்விரு கலிபாக்களும் ஐயூப் கான் புறத்திலுள்ள ஒரு தர்காவில் அடங்கப்பட்டுள்ளர்கள்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொட்டல் புதூர் என்ற ஊரிலுள்ள முஹையதீன் ஆண்டகை அவர்களின் தர்காவில் சந்தன கூடு ஊர்வலம் நடக்கும் நிகழ்ச்சியை காண விரும்பி மஹான் அவர்களின் துணைவியார் பக்கத்து வீடு குடும்பத்தினருடன் சென்று வரலாம் என நினைத்து அப்ப்வுடைய வருகையை காத்திருந்தார்கள் நெடு நேரமாகியும் வராததால் பக்கத்து வீட்டு குடும்பத்தார் சென்று விட்டார்கள் மஹான் அவர்கள் வந்ததும் அவர் துணைவியார் கூறவே அப்பா அவர்கள் முஹையதீன் ஆண்டகை அவர்களின் சந்தன கூடு தானே பார்க்க வேண்டும் என்று சொல்லி தனது ஆள்காட்டி விரலால் பக்கத்திலுள் சுவரில் கோடு போட்டு பார்க்குமாறு கூறினார்கள் அதில் சந்தனகூடு ஊர்வலம் தெரிந்தது மட்டும் அல்லாமல் பக்கத்து வீட்டு குடும்பத்தினர் கை குழந்தையுடன் ஒரு கடையில் மிட்டாய் வாங்கியதையும் பார்த்தார்கள் அதே கடையின் மிட்டாயை மஹான் அவர்கள் தூனைவியருக்கு கொடுத்தார்கள் மறுநாள் அக்குடும்பத்தினர் வந்ததும் இந்நிகழ்ச்சியை கூறி விசாரித்து மிட்டயுடைய சுவை பற்றியும் சொன்னார்கள் பிறகு இந்நிகழ்ச்சி முற்றிலும் உண்மைதான் என அந்த குடும்பத்தினரும் கூறினர்

அப்பா அவர்களிடத்தில் பேரன்பு கொண்ட ஒரு துணி வியாபாரி இருந்தார் அவர் தலையில் சுமந்து கொண்டு துணிகளை விற்று வந்தார் அவருக்கு நாகூர் செல்ல வேண்டும் அப்பா அவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பி பணம் சேர்த்து அப்பாவிடம் தன எண்ணத்தை சொன்னார் அதற்க்கு அப்பா அவர்கள் எனக்கு பார்வை இல்லை ஆகையால் நெடுதூர பயணம் செல்ல முடியாது என்று கூறிவிட்டு நக்கோர் போகும் சமையம் வந்துவிட்டு செல்லும் படியும் சொல்லிவிட்டார்கள் அதே போல் புறப்படும் சமயம் அப்பாவிடம் சொல்லவே அப்பா அவர்கள் ஒரு வெறும் தாளில் தன் ஆட்காட்டி விரலால் ஏதோ எழுதி ஒரு தலூரையில் போட்டு துணி வியாபாரிடம் கொடுத்து நாகூர் கந்தூரி முடிந்து மறுநாள் கடற்கரையில் பீரோட்டம் பார்க்க செலும் போது வழியில் ஒரு மரத்தடியில் பச்சை சால்வை போர்த்தி கில் ஆஸாவை வைத்துக்கொண்டு பக்கீர் போல் ஒருவர் இருப்பார் அவரிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிட்டு பதில் கடிதம் தருவார் வாங்கி வாருங்கள்  என்றார்கள் அதேபோல் அவர் சென்று கந்தூரி முடித்த மறுநாள் கடற்கரை சென்று பார்த்தார்கள் பக்கீர் அவர்கள் புன் முறுவலுடன் பார்த்து படித்துவிட்டு அவரும் தன் ஆட்காட்டி விரலால் ஏதோ எழுதி ஒரு தலூரையில் போட்டு கொடுத்தார்கள் பிறகு துணி வியாபாரி அப்பாவும்  மையோ, எழுத்துகோலோ இல்லாமல் எழுதுகிறார் இவரும் மையோ, எழுத்துகோலோ இல்லாமல் எழுதுகிறாரே என யோசித்துக்கொண்டு ஊர் வந்து கொடுத்து அந்த பக்கீர் பற்றி சொல்லி யார் என கேட்டார்கள் அப்பா அவர்கள் நீர் சந்திதீரே அவர்தான் நாகூர் ஆண்டகை என்றார்கள் கேட்டதும் துணி வியாபாரி கைசேதம் அடைந்தார்கள் உடனே அப்பா அவர்கள் வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கு ஆன்மீக பக்குவம் அவ்வளவு தான் என்றார்கள்

கல்வத் ஆண்டகை அவர்களும் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களும்

கல்வத் ஆண்டகை அவர்களின் இயற் பெயர் செய்யது அப்துல் காதர் இவர் கல்வத் என்னும் தனித்து இருந்து வணக்கம் புரிந்ததால் கல்வத் ஆண்டகை என்ற பெயர் உண்டாகியது

கல்வத் ஆண்டகை அவர்கள் பல நாட்கள் தனித்திருந்து வணங்கி வந்தார்கள் அப்போது ஒருநாள் ஓர் இரவில் அவகளின் வலது பக்கம் 500 புலிகளும் இடது பக்கம் 500 பாம்புகளும் நின்று பயமுறுத்துவதை போன்று உணர்ந்தார்கள் பூமிலிருந்து ஆகாயம் வரை நெருப்பு ஜுவாலைகள் பற்றி எரிந்ததாகவும் பார்த்தார்கள் இவற்றை கண்டு கல்வத் ஆண்டகை அவர்கள் மிகவும் அச்சமுற்றார்கள் அந்நேரத்தில் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் தோன்றி எனது மகனே நீர் ஒன்றும் பயப்பட வேண்டாம் னான் அனுபவித்த துயரங்களுக்கு இது எம்மாத்திரம் ? கொஞ்சமும் அஞ்சாமல் இரும் இத்தொல்லைகள் எல்லாம் விரைவில் தொலைந்துவிடும் என்று கூறி மறைந்தார்கள்

இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் புலவர் காளை ஹஸன் அவர்கள் ‘கல்வத்மாலை’ என்னும் நூலில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்

மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் இயற்றிய பாடல்கள்

1 . மெய்ஞான சதகம்

2 . மெய்ஞான ஆனந்த களிப்பு

3 . நாகூரார் பிள்ளை தமிழ்

4 . வண்ணப்பாக்கள்

5 . கப்பல் பாட்டு

6 . ஞான இசைப் பாடல்கள்

இனிய தமிழில் பாடி உள்ளார்கள்

மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள்

1 .மேலப்பாளையம் தைக்கா புலவர் ஷாகுல் ஹமீது புலவர்  ‘முனாஜாத்து ‘ என்னும் பாடலையும்,

2 . மேலப்பாளையம் பள்ளி உதுமான் லெப்பை ‘மவ்லீத்’ என்னும் பாடலையும்

3 . அப்துல் ஹமீது லெப்பை ஆலிம் அவர்கள் ‘பாமாலை’ என்னும் பாடலையும்

4 . மேலப்பாளையம் கல்வத் கலீபா யூசுப் நாயகம் அவர்களின் அரபி பைத்தையும்,

5 . மேலப்பாளையம் ஜமால் செய்யது முஹம்மது ஆலிம் அவர்கள் ‘பஷீர் அப்பா மாலை’ என்னும் பாடலையும் பாடி உள்ளார்கள் .

மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் மறைவு

ஞானப்புலவர் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் 75  ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்

ஹிஜ்ரி 1216 ரஜப் பிறை 19  ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். இவர் அடக்கஸ்தலம் மேலப்பாளையம் கடைய ஜும்மா பள்ளியின் தென் புறத்தில் உள்ளது.

செய்யிது அஹ்மது கபீர் ரிஃபாயி ரலியல்லாஹு அன்ஹு

பகுதாது நகருக்கு வெளியே, தஜ்லா நதிக் கரைக்கு அப்பால் பதாயிகு என்ற சிறு நகரில் வாழ்ந்து கொண்டிருந்த மகான்களில் ஒருவரான ஜாஹிது அஹ்மது அவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஹஜ்ஜத் தொழுகைக்குப் பிறகு மக்கள் நலம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தவண்ணம் அவர் கண்மூடி உட்கார்ந்திருந்தார். அப்போது ரூயா என்ற கனவு போன்ற ஒரு மெய்க்காட்சி உண்டாயிற்று.

விசாலமான ஒரு கடைவீதி. அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் அல்லாஹ்வின் ரஹ்மத் என்னும் பேரருட் பொருட்களே. அதை வாங்குவதற்காக அங்கே கூடியிருந்தவர்கள் அனைவர்களும் இறைநேசர்களே. அதில் ஜாஹிதும் இருந்தார்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது: ‘குற்றமற்ற எனது வலிமார்களே> இப்போது நீங்கள் என்னுடன் பேசலாம். உங்கள் தேவைகளை கேட்கலாம்.’

ஆயினும் எவரும் வாய் திறக்கவில்லை. ஜாஹித் அஹ்மத் அவர்கள் மற்றும் வாய் திறந்தார்கள். ‘எனது ரப்பே! இப்போது என் மனத்துள்ள ஓர் ஆசை துடிக்கிறது. இங்கே கூடியுள்ள பெரியோர்களில் உன்னிடம் உயர்வு பெற்றவர்கள் யார்? என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அவர் அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அக்காலத்தில் மஹ்பூபுல் அஃலம் அலீ இபுனு ஹைத்தி, தாஜுல் ஆரிபீன் அபுல்வபா ரலியல்லாஹு அன்ஹுமா என்ற இரு பெரியார்களும் மிக மேலானவர்களாய்க் கருதப்பட்டு வந்தார்கள். எனவே அவ்விருவரில் பதவியில் உயர்ந்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள அவர் நாடினார்.

அசரீரி ஒலித்தது: எனது ஹபீபும், ஆஷிகுமான ஓர்ஆடவர் இக்கடை வீதி வழியே வரவிருக்கிறார். அவர் எனக்கு ஹபீபு. நான் அவருக்கு ஹபீபு. அவர் வரவுக்கு வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்கள். அவரை கண்ணியப்புடுத்துங்கள்.’

வானப்பாதை திறந்து கொண்டது. கும்பல் கும்பலாய் வானவாக்ள் இறங்கினார்கள். ‘வழிவிட்டு நில்லுங்கள். அல்லாஹ்வின் மஹ்பூபைக் கண்ணியப்படுத்துங்கள்’ எனக் கூறிக் கொண்டே பாதையை ஒழுங்குப் படுத்தினார்கள்.

ஒளிப்பல்லக்கு ஒன்று ஆகாயத்தினின்றும் இறங்கியது. அதனுள் பிரகாசவதனம் கொண்ட ஒரு வாலிபர். வானவர்கள் பல்லக்கைச் சட்டென சூழ்ந்து கொள்கிறார்கள். உள்ளே அமைதியாக அமர்ந்திருந்த இளைஞரை நோக்கி பெரியார்கள் அஸ்ஸலாமு அலைக்கும் மஹ்பூபுல்லாஹ்! என்றனர்.

வஅலைக்கு முஸ்ஸலாம் யா அவ்லியா அல்லாஹ்! என்று பதில் சொல்லிவிட்டு அவ்விளைஞர் சட்டென்று தலைகுனிந்து கொள்கிறார். பல்லக்கு விரைந்து வெகுதூரம் சென்று விட்டது.

ஜாஹிது அஹ்மது கேட்டார்: ‘சகல வல்லமையும் உள்ள எங்கள் நாயகனே! உனது மஹ்பூபும் மஃஷூக்கும் ஆன அந்த வாலிபரின் திருநாமம் என்ன?’

‘அவரது நாமம் அஹ்மது கபீர் என்பதாகும்.’

எனது ரஹ்மானே! அவர் எங்கே இருக்கிறார்? அவர் இருப்பிடத்தை எனக்குத் தெரிவிப்பாயா? அவரை தரிசிக்க நாடுகிறேன்’

‘இப்போது அவர் இருக்கும் ஸ்தானம் அவரது தந்தையின் முதுகுத் தண்டு ஆகும்.’

அவர் தந்தையின் பெயர், அடையாளம், இருப்பிடம் என்ன?’

அவர் பெயர் அபுல் ஹஸன் அலீ. வலீமார்களில் ஒருவர் மக்காவில் அரபாத் மலையில் என்னை வணங்கியவராக இப்போது இருந்து கொண்டிருக்கிறார்.

ரூயா காட்சியினின்று மீண்ட ஜாஹிது அஹ்மது அக்கணமே மக்காவை நோக்கி பயணப்படத் துவங்கினார்.

இது அஹ்மது கபீர் ஆண்டகை உலகில் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவிப்பாகும்.

ஹழ்ரத் செய்யிதினா முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரம்பரியத்தில் 19ஆவது தலைமுறையாக ஹழ்ரத் அபுல்ஹஸன் அலீ அவர்கள் வருகிறார்கள். அன்னாரின் வமிசவழி வருமாறு:

1. செய்யிதினா இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு 2. இமாம் ஹுஸைன் 3. இமாம் ஜெய்னுல் ஆபிதீன் 4. இமாம் முஹம்மது பாக்கர் 5. இமாம் ஜஃபர் சாதிக் 6. இமாம் மூஸல் காழிம் 7. இப்றாஹிம் முர்தளா 8. மூஸா தானீ 9. செய்யிது ஹுஸைன் 10. செய்யிது ஹஸன் 11. செய்யிது முஹம்மது அபுல் காசீம் 12. செய்யிது மஹ்தீ 13. செய்யிதினா அபுல் முகர்ரமில் ஹஸனில் மஃரூபி 14. செய்யிதினா அலீ 15. செய்யிதினா அஹ்மது 16. செய்யிதினா ஹாஜிம் 17. செய்யிதினா தாபித் 18. செய்யிதினா எஹ்யா 19. செய்யிதினா அபுல் ஹஸன் அலி 20. செய்யிதினா செய்யிது அஹ்மது கபீர் ரிபாஃயி

செய்யிதினா அபுல் ஹஸன் அலீ அவர்களின் முன்னோர்கள் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மக்காவில் வாழ்ந்திருந்ததாகவும் பின்னர் நடந்த ஒரு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுட அவர்கள் பல நாடுகளுக்கும் சிதறிப் போனார்கள் என்றும், எஹ்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரை மக்காவில் வாழ்ந்ததாகவும் பின்பு பதாயிகு நகரில் குடியேறியதாகவும் இரு கருத்துக்கள் உள்ளன.

அபுல் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதாயிகு நகரத்தில் அபூபக்கர் ரிஃபாயி அவர்கள் புதல்வி ஆயிஷாவை திருமணம் முடித்ததாக பல்வேறு கிரந்தங்களில் காணப்படுகிறது.

கருவிலேயே பேசிய காருண்யர்

நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த ஆயிஷா அம்மையார் அவர்க்ள தொழுகை முடிந்து கொழுகை பாயில் அமர்ந்திருக்கிறார்கள். தம்முடைய வயிற்றைப் பார்த்துக் கொண்டே அஸ்ஸலாமு அலைக்கும் என் மகனே. என்று விளிக்கிறார்கள். அதற்கு கருவிலிருந்து, வஅலைக்குமுஸ்ஸலாம் என்று பதிலும் வந்து உபதேசங்களும் செய்யப்பட்டது.

இதை அம்மையாரின் சகோதரர் கவனித்தார். இந்த சம்பவத்திற்கு நாற்பதாவது நாள் ஹிஜ்ரி 512ஆம் வருடம் ரஜப் மாதம் வியாழக்கிழமை பதாயிகு நகரில் ஹஸன் என்ற இடத்தில் செய்யிது அஹ்மது கபீர் நாயகம் ஜனனம் ஆனார்கள்.

காலங்கள் உருண்டோடின. நாயகத்திற்கு நாலரை வயது. செய்கு அலீ என்ற பெரியாரிடம் கல்வி கற்பதற்காக ஒப்படைக்கப்பட்டார். பத்து வயது அடையும் முன்போ அனைத்து விதக் கல்வியிலும் தேர்ந்து விட்டார்.

தமது 28ஆவது வயதிற்குள் ஆண்டகை அவர்கள் மிகப் பிரபலமாகி விட்டார்கள். வெகு காலம் வரை தனித்தே இருந்த ஆண்டகை அவாக்ள் மெய்ஞ்ஞானப் பெருவள்ளலாய் விளங்கிய ஷெய்கு அலியுல் வாஸ்தி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ‘இர்ஷாத்’ பெற்றுக் கொண்டதும் மக்களுக்கு உபதேசிக்கவும் அவர்களைக் கடைந்தேற்றவுமான காரிய்தில் ஈடுபடத் துவங்கினார்கள்.

தம்மிடம் முரீது வாங்க வருபவர்களிடம் பெயர், குலம், கோத்திரம், கல்வி, முகவரி பற்றி விசாரிப்பதில்லை. முதலில் ஒளு செய்துவிட்டு வரச் சொல்வார்கள். தம் எதிரே உட்காரச் செய்வார்கள். பின்னர் அவரைப் பார்த்து அல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்களையும் வரிசையார் ஒவ்வொன்றாய் நிறுத்தி நிறுத்தி சொல்வார்கள்.

அவ்விதம் சொல்கையில் ஏதாவது ஒருநாமம் வந்தவரை உணர்ச்சி கொள்ளச் செய்யும். அவரது அமைதியா நிலையிலும் மூச்சிலும் மாறுதல் உண்டாகும். உடனே அந்த மனிதனின் ஆண்ம குணத்தின் அடிப்படையை ஆண்டவர்கள் புரிந்து கொள்வார்கள். அதன்பின் அவரிடம் பைஅத் வாங்கிக் கொண்டு தகுந்த திக்ர் களை உபதேசித்து அதை பயிற்சி செய்யும்படி அனுப்புவார்கள்.

கஃபத்துல்லாஹ்வை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவர்கள் மனதில் உண்டானவுடன் திடீரென ஒருநாள் எவ்விதமான பிரயாண முன்னேற்பாடுகளும் இன்றி மாற்றுடை கூட இல்லாமல் திடீரென ஒருநாள் காலையில் புறப்பட்டு விட்டார்கள்.

ஊர் எல்லையை தாண்டி சில கஜ தூரமே சென்றிருப்பார்கள். சற்றுத் தொலைவில் கஃபாவின் ஹரம் பளீரென்று தோன்றியதும் திடுக்கிட்டு நின்றனர்.

அவர்களுடன் கூட சென்ற யாகூப் என்பவர் என்ன பிரமை பார்த்தீர்களா? என்றார்.

பிரமை அல்ல நிஜம் என்று ஆண்டகையின் முகம் விசனத்தால் சோபை இழந்தது. கண்களில் நீர் மணிகள் மின்னின. அந்த கஃபா தரிசனத்தை ‘சித்திக்காரன் வரைந்த கஃபா படத்தை வீட்டில் இருந்தவாறு பார்க்கிறதை கஃபா தரிசனம் என்று எனக்குள் கொள்ள முடியாது’ என்று உரத்த குரலிpல் சொன்ன ஆண்டகை அவர்கள் சட்டென்று ஊரை நோக்கி திரும்பினார்கள்.

இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசவழியில் வந்துதித்த மன்சூர் அலி ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரியார் ரிபாஃயாக் கிளையாரில் தோன்றிய மாபெரும் மகான். தம் இளம் வயதிலேயே ஆயிரக்கணக்கான மரீதீன்களை பெற்றிருந்தார்கள். இறைநேசராகவும், மிகப் பெரிய ஞானியாகவும் கருதப்பட்ட அவர்கள் பிற உயிர்களிடம் பேசக் கூடிய ரகசிய ஞானம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். துஷ்ட மிருகங்களை கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

தன் மாமனார் மன்சூர் அலி நாயகத்திடம் பைஅத் பெற்றுக் கொண்டு, அன்னாரிடம் கிலாபத்தும் பெற்றுக் கொண்டார்கள். ரிஃபாயிய்யா தரீகாவில் ஆண்டவர்கள் முரீதானதும் அந்த தரீகா விரைவில் பிரபலமாயிற்று.

அதன்பின் மரணத்திற்குப் பின் மரணித்தல் என்ற நிலையை பெற்றுக் கொண்டார்கள்.

ஷரீஅத்தை மீறுவது என்பது ரிபாயி ஆண்டகை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று. அந்தளவிற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது காதல் கொண்டிருந்தார்கள்.

ஹிஜ்ரி 555ல் தமது 48வது வயதில் கருத்த கம்பளி ஒன்றைப் போர்த்திக் கொண்டு தன்னந்தனியாக திருமதினா மாநகர் நோக்கிப் புறப்பட்டார்கள்.

மதீனா நகரின் தலைவாயிலை மிதித்ததுமே யாரஸூலல்லாஹ், யாரஸூலல்லாஹ் என்று பிதற்றிக் கொண்டே ரவ்லா ஷரீபுக்குள் நுழைந்தார்கள். தலை குனிந்தவாறு வெகுநேரம் மௌனமாய் நின்றிருந்தார்கள். அங்கே எதிர்பாராமல் ஒரு பெரிய கும்பல் கூடி இருந்தது.

ஏராளமான வலிமார்கள் அங்கே குழுமியிருந்தார்கள். கௌதுல் அஃலம் முஹ்யித்தீன், ஷெய்கு இத்தீ இப்னு மூசாஃபிக், ஷெய்கு அப்துர் ரஜ்ஜாக் ஹுசைனி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் உட்பட அங்கே 9900வலிமார்கள் இருந்தனர் என நூருல் அஹ்மதிய்யா என்ற நூலில் திட்டமாகக் கூறியிருப்பதாக ருமூஜுல் ஃபுகாரா என்ற உர்து நூலில் காணப்படுகிறது.

காதலனின் ஒருமித்த மனத்துடன் புறச் செயலை மனம் அறியாத பித்தனின் ஆசை வெறியுடன் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லாவையே பார்த்தவாறு நின்றிருந்த ஆண்டகை உரத்தக் குரலில்,

‘அஸ்ஸலாமு அலைக்கும் யாஜத்தீ –எனது பாட்டனாரே!’ என்றதும் ‘வ அலைக்குமுஸ்ஸலாம் யா வலதீ- எனது பேரனாரே’ எனப் பெருமானாரின் ரவ்லாஷரீஃபின் உள்ளிருந்து பதில் வந்ததை அனைவரும் கேட்டனர்.

அதன்பின் உணர்ச்சி வசப்பட்ட ஆண்டகையின் தூய கோரிக்கைகள் கவிதைத் துளிகளாய் வடிய ஆரம்பித்தன.

‘நான் தூரத்தே இருக்கும்போது

தங்கள் கபுரை முத்தமிடுவதற்காக

எனது உயிரை அனுப்பிக் கொண்டிருந்தேன்

அந்த உயிர் உடலோடு இப்போது

தங்கள் சமூகம் வந்திருக்கிறது.

தங்கள் வலது கரத்தை நீட்டுங்கள்,

என் உதடுகள் அதனை முத்தமிட்டுக் கொள்ளட்டும்’

இந்தக் கவிதை அமுதின் கடைசிச் சொல் அவர்களது நாவினின்று கழன்று விழுந்ததும் மின்னல் ஒன்று பளீரிட்டு நிலைத்தாற் போன்ற உணர்ச்சி> பெருமானாரின் கபுர் ஷரீ|ஃபினின்று அவர்களது புனிதக் கரம் வெளிப்பட்டதைக் கண்ட ஆண்டகை> ;யாரஸூலல்லாஹ்! எனக் கத்திக் கொண்டே ஓடினார்கள். வானமும் வையமும் அடைந்திராத அந்தப் பாக்கியத்தை நினைத்துப் பூரித்துக் கொண்டே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்தை ஆசைதீர முத்தமிட்டுக் கண்ணீர் சொரிந்தார்கள்.

மன்சூர் நாயகத்திடம் பைஅத் பெற்றவுடன் ஆண்டகை அவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டது.நீ> நான்> அது> இது என்ற புறத் தோற்றங்கள் அவர்களுக்குப் புலப்படாமல் நழுவிப் போயின. பெயர்களையும்> குறிப்புகளையும் நினைவுப்படுத்திக் கொள்வது அவர்களுக்கு சிரமமாயிருந்தது. ஊண், உடை, உறக்கம் யாவும் சுருங்கின. சதா இறைத் தியானம். இறைத்தியானம்.

அல்லாஹ் அவர்களுக்கு கனவில் தோற்றமானான்.

இறைவனை நான் கனவில் கண்டேன் பூரணச் சந்திரனைப் போல’ என்பது நாயக வாக்கியம்.

இறைவனைப் பலதரம் தாம் கனவில் கண்டதாக ஆரிபு நாயகமும் சொல்லியிருக்கிறார்கள்.

அடர்ந்த காட்டினுள் தவத்திற்காக நுழைந்தார்கள். கௌதுல் அஃலம் தங்கியிருந்த அதே பாழடைந்த கட்டடத்திலும் தங்கியிருக்கிறார்கள்.

சுமார் 29ஆண்டுகள் காட்டிலே கடும் வணக்கத்திலே கழித்த அவர்கள் ஒரு சம்பூரண மனிதராய் – வலிமார்களே புரிந்து கொள்ள முடியாத ஒரு ரகசியமாய் கன்ஜுல் ஆரிஃபீன் ஆனார்கள்.

தமது லட்சியத் தவக் காலம் முடிந்ததும் காட்டினின்றும் புறப்பட்டார்கள். சொந்த ஊர் திரும்பாமல் நேராய் ஹிஜாஸ் நோக்கி நடந்தார்கள்.

மக்காவைச் சமீபத்திருந்த அரஃபாத் மலை எனப்படுகிற ஜபலுர் ரஹ்மத்தை நெருங்கி அதன் முடியை நோக்கி ஏறினார்கள். மலைச் சிகரத்தைஅடைந்ததும் அவர்கள் உணர்ச்சிக் கொழுந்தானார்கள். வலக் காலைத் தூக்கிப் பாதத்தை மடங்கி, இடக் காலை கீழே உறுதியாய் ஊன்றி தௌஹீது நிலையில் அப்படியே நிலைத்துப் போனார்கள். சிறிது நேரத்தில் ஒரு ஜோதி ஸ்தம்பம் ஆனார்கள். பல நாட்கள் அங்கேயே இருந்தார்கள்.

தனது ஜலால் – ஜமால் என்ற ஒளிக்கதிர் ரதம் ஏறி சிரித்த குரலுடன் வல்ல நாயன் அவர்களுக்கு வெளிப்பட்டான். ‘சுல்தானுல் ஆரிஃபீன் சையிது அஹ்மது கபீரே!’ என அவர்கள் இயற்பெயரோடு சிறப்புப் பெயரைச் சேர்த்து விளித்தான்.

ஆண்டகை தம் இரட்சகனை தம் கண்குளிரக் கண்டார்கள். அதைக் கண்டு மெய்சிலிர்தது நிற்கையில், நாயகம் ஸல்லல்லாஹு அஅலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை நோக்கி வரக் கண்டார்கள். அவர்கள் வாழ்த்திய பிறகு ரிஜாலுல் கைப் என்ற மறைவான வாசிகளான பெரியார்கள் இருவர்> மூவராக ஆண்டகையை நோக்கி அணி அணியாக வந்தார்கள். அவர்களும் வாழ்த்திச் சென்றார்கள்.

மலையினின்று கீழே வந்த ஆண்டகை அவர்கள் விறுவிறு வென்று நடக்கத் துவங்கினார்கள். எங்கும் நில்லாமல் நடந்து பதாயிகு நகரத்தினுள் நுழைந்தார்கள். வழிநெடுகிலும் மலைகளும்> மரங்களும்> நதிகளும்> புற்களும்> விலங்குகளும் யா சுல்தானுல் ஆரிபீன் – யா சுல்தானுல் ஆரிஃபீன் என விளித்துச் சிலிர்த்தன.

ஒரு வெள்ளிக்கிழமை இரவு பிந்திய நேரம் தவமடத்தில் தனித்திருந்தவர்களாக யோகநித்திரையில் இருக்கும் போது வானவர் ஸம்ஸயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் வானப் பயணம் மேற்கொண்டார்கள்.

காய்ந்த ரொட்டியிலும், கம்பளி ஆடையிலும் வாழப் பழகிக் கொண்ட அவர்கள் தனக்கு வரும் அன்பளிப்புப் பொருட்களை அப்படி அப்படியே அன்றைக்கே ஏழைகளுக்கு தானம் செய்து விடுவார்கள்.

ஆண்டகை அவர்கள் இரண்டு தரம் மணம் புரிந்துள்ளார்கள். முதல் மனைவி பெயர் செய்யிதா கதீஜா. அபூபக்கர் அன்சாரியுல் புகாரியின் மகளான கதீஜா மூலம் ஆண்டகைக்கு ஃபாத்திமா, ஜெய்னம்பு என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

கதீஜா காலமானபின் அவரது தங்கை சையிதா ராபியாவை மணந்து கொண்டார்கள். அவர் மூலம் பிறந்த சையிது குத்புதீன் சாலிஹ் என்ற ஒரே மகன் பதினேழாவது வயதில் ஆண்டகை அவர்களை ஆறாத் துயரில் ஆழ்ந்திவிட்டு இறையடி சேர்ந்து விட்டார்.

ஆரிபு நாயகம் அவர்கள் மிஃராஜ் சென்று கௌது ஆக நியமனம் பெற்ற பின் அவர்களது சபையில் அக்தாபுகளும்> அப்தால்களும்> அவ்வாதுகளும், உப்பாதுகளும்> ஜுஹ்ஹாதுகளும்> நுகபாகளும் சதா வீற்றிருப்பார்கள்.

அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரியான இவர்களது சக்கரவர்த்தியான ஆரிஃபு நாயகத்தை காண நபி ஹிலுறு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி வருவதுண்டு.

இடையறாத மக்கள் தொடர்பினின்று சிறிது காலத்திற்கு விலகியிருக்க நாடிய ஆண்டவர்கள் மீண்டும் வனவாசம் சென்றார்கள். இந்தத் தடவை 12ஆண்டுகளை காட்டிலேயே கழித்தார்கள். ஆக மொத்தம் 31வருடங்கள் காட்டிலேயே செலவழித்திருக்கிறார்கள்.

மிஃராஜில் 99திருநாமங்களை சூட்டப்பெற்ற ஆண்டகை அவர்கள் மேலும் 24திருநாமங்களால் இறைவனால் சூட்டப்பட்டார்கள்.

தம்முடைய வேலைகளான துணி துவைப்பது போன்ற வேலைகளைத் தாங்கே செய்து கொள்வார்கள். அடுத்தவர்கள் அதை செய்ய விடமாட்டார்கள்.

‘எனது மிஃராஜ் அனுபவத்தின் ரகசியத்தை, அதே அனுபவம் பெற்ற இன்னொருவரால் மட்டுமே உணர முடியும்’ என்ற ஆரிஃபு நாயகம் வேறொரு சமயம் இப்பச் சொன்னார்கள், ‘எனது சொந்த உடம்புடனும் உயிருடனும் விழிப்புடனும் அல்லாஹ் எனக்கு மிஃராஜ் அனுபவத்தை அருளினான்.’ என்றார்கள்.

அதேபோல் உடலும், உயிரும் வௌ;வேறு திசையில், தன்மையில் இருப்பவை அல்ல என்பதை ஆரிஃபு நாயகம் மிக நளினமாய் விளக்கியுள்ளார்கள். ‘கனவிலே அல்லாஹ்வை நான் முகக் கண்ணால் கண்டேன். விழித்திருக்கும்போது அவனை அகக் கண்ணால் பார்த்தேன்’ என்றார்கள்.

பகுதாது நகரில் காலை நேரம் முரீதின்களும், தரிசிக்க வந்தவர்களும் சூழ அமர்ந்திருந்த, தம் இல்லத்து வெளிப்பகுதியில் அமைதி தவழும் அழகு முகத்துடன் கௌது நாயகம் வீற்றிருக்கிறார்கள்.

பெரியார் ஷெய்கு ஹம்மாது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே வருகிறார்கள்.கௌதுனாவிற்கு சலாம் சொல்லி விட்டுஅமர்கிறார்கள். ‘யாசெய்யிதீ பதாயிகு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற அஹ்மது கபீரைப் பற்றி வெகுவாய்ப் பேசப்படுகிறதே, தங்கள் கருத்து என்னவோ?’

சிறிதுநேர மவுனத்திற்குப் பின் கௌதனா சொல்கிறார்கள்: ‘உண்மை. அல்லாஹ்விடம் அவர் மிகக் கீர்த்திப் பெற்றவர் என்பது நிஜமே.’

மீண்டும் மௌனம். திடீரென்று உரத்தக் குரலில் கூவுகிறார்கள்: ‘அல்லாஹ் மீது ஆணையாக அவர் மிக உயர்ந்தவர். எனக்குப் பின்னர் என் ஆட்சிப் பீடத்தில் அமரக் கூடியவர். கௌதுல் அஃலம், குத்புஸ்ஸமான் என்ற என் பட்டங்களைச் சுமக்கப் போகிறவரும் அவரே.’

இது சுல்தான் கபீர் ஆண்டவர்கள் மிஃராஜ் செல்வதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் எனக் கருதப்படுகிறது.

கௌதனாவிற்குப் பிறகு அவர்களது இடத்தை, பதினாறு ஆண்டு காலம் நிரப்பியவர்கள் சுல்தான் அஹ்மது கபீர் ஆண்டவர்களே என்பதில் பெரியோர்களிடையே எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லை.

ஒருசமயம் சுல்தான் கபீர் நாயகம் இரண்டாவது தடவை வனவாசம் சென்ற சமயம்.

கௌதனா அவாக்ளின் திருஞானச்சபை. ஆரிஃபு நாயகத்தைப் பற்றி சீடர்கள் சர்ச்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மௌனமாய் உட்கார்ந்திருந்த கௌதுனா தம் பணியாளர் ஒருவரை அழைக்கிறார்கள். பிரஸ்தாபக் காட்டைக் குறிப்பிட்டு, ‘ஒரு மரத்தடியில் சுல்தான் அஹ்மது கபீர் நாயகம் அமர்ந்திருக்கிறார்கள். அவரிடம் போய் அல்லாஹ்வின் இஷ்க் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு வா’ என அனுப்புகிறார்கள்.

அவர் காட்டுக்கு வருகிறார். ஆரிபு நாயகத்தைக் கண்டு, அல்லாஹ்வின் இஷ்க் என்றால் என்ன? எனக்கு தெரிவிக்க வேண்டும்?’ என்கிறார்.

ஆண்டகையின் அமைதிப் பேரானந்த நிலையில் சலனம் உண்டாகிறது. கண்கள் சிவக்கின்றன.

‘இஷ்க், இஷ்க் அல்லாஹ்வின் இஷ்க்’ எனப் பெருங்குரலில் அவர்கள் கத்த, சூழநின்ற மரங்களும் இதரப் புற்பூண்டுகளும் குபீரென்று தீப்பிடித்:து எரிகின்றன.

பணியாளர் பதறிக் கொண்டு வெகுதூரம் போய் நின்று கொண்டு கவனிக்கிறார்.

காட்டுத்தீ நடுவில் நின்றிருந்த ஆண்டவர்களது உருவம் மெல்ல மெல்ல கரைந்து மறைகிறது.

தீ அணைந்தபின் பணியாளர் ஓடி வருகிறார். நீறுபூத்த நெருப்புகளைக் குச்சியால் கிளறி விட்டுக் கவனிகக்pறார்.

ஆண்டகை இருந்த இருடத்திலல் ஒரு ரசமணி மட்டுமே இருக்கிறது. எஜமானனைக் காணவில்லை.

அலறிப் புடைத்துக் கொண்டு கௌதுனாவிடம் ஓடி வருகிறார். நடப்பை விவரிக்கிறார். ‘சுல்தான் அஹ்மது கபீர் ஆண்டவர்கள் தீயில் கருகிச் சாம்பலாகிவிட்டார்கள்’ என அரற்றுகிறார்.

கௌதனா சிரிக்கிறார்கள். ‘மரணம் தொடாதவர்கள் மரணிப்பதில்லை’ என்ற அவாக்ள் கொஞ்சம் அத்தரும் பன்னீரும் தருகிறார்கள். ‘இதைக் கொண்டுபோய் அந்த ரசமணிமேல் தெளி’ என்கிறார்கள்.

அவர் அதுபடி செய்கிறார். ரிபாயி நாயகம் தோன்றுகிறார்கள். ‘அல்லாஹ்வின் இஷ்கைப் பார்த்தாயா? அது இப்படித்தான் அல்லாஹ் அல்லாதவற்றை எரித்து சாம்பலாக்கி விடும். போ. போய் எங்கள் எஜமான் கௌதுனா அவர்களுக்கு என் சலாத்தை தெரிவி’ என்றார்கள்.

அதேபோல் கௌதனாவிடம் பெருமதிப்புக் கொண்டவர்கள் ஆரிஃபு நாயகம் அவர்கள்.

‘எங்கள் ஸையிதுனா ஜீலானி நாயகத்தின் சிறப்பை அறிந்தவர் யார்?’ எனப் பலதரம் கேட்டிருக்கிறார்கள்.

‘நட்சத்திரங்கள் பல உண்டு. ஆனால் சூரியன் ஒன்றே இருக்க முடியும்’ எனக் கௌதுனாவைச் சிலேடையாகச் சிறப்பித்துப் பலதடவை பேசியிருக்கிறார்கள்.

ரிபாயி நாயகம் அவர்கள் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதன்மூலம் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஏராளம்.

ஒருநாள் ஆற்றங்கரையில் அமர்ந்து தம் முரீதுகளுக்கு உபதேசித்துக் கொண்டிருக்கையில் ஒருவர்; கேட்டார்: ‘எஜமானே! இறையண்மையில் நிலைத்திருக்கிறவர் – என்றால் என்ன?’

நாயகம் நவின்றார்கள் ‘படைப்புகள் மீது ஆட்சி செலுத்துகிற தத்துவம் உள்ளவரே முத்தகீன்’

அவரின் அடையாளம் என்ன?’

உண்டு முடித்த பொருட்களுக்கு அவரால் மீண்டும் உயிர் கொடுக்க முடியும்’

இந்தச் சமயத்தில் தண்ணீரில் திரிந்து கொண்டிருந்த மீன்கள் துள்ளி துள்ளிக் கரையில் விழுந்தன.

ஆண்டகை சொன்னார்கள்: ‘இவற்றை நாம் சாப்பிட வேண்டுமென்று இந்த மீன்கள் இறைவனிடம் மன்றாடியிருக்கின்றன. எனவே இவற்றைச் சமைக்க ஏற்பாடு செய்யுங்கள்’

சிறிது நேரத்தில் மீன்கள் சமைக்கப்பட்டன. எல்லோரும் அவற்றை சாப்பிட்டு முடித்தார்கள். எஞ்சிய நடு முள்களும், வால்பகுதியையும் ஆற்றோரத்தில் வைக்கும்படி ஆண்டகை அவர்கள் பணித்தார்கள்.

அவற்றபை; பார்த்து, ‘உயிரை இழந்து விட்ட ஜடங்களே, அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு கட்டளையிடுகிறேன். உயிர் பெற்று விரைந்தோடுங்கள்’ என்று சொல்ல அக்கணமே அந்தக் கழிவுகள் மீன்களாய்த் துள்ளித் தண்ணீரில் பாய்ந்தன.

கேள்விக் கேட்டவரைப் பார்த்து ஆண்டவர்கள் புன்னகைத்தார்கள். ‘முத்தகின்களின் பண்பு என்னவென்று இப்போது தெரிந்து கொண்டீரா?’

இதைக் கவனித் கொண்டிருந்த அப்துல் மாலிக் ஸர்ரோஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘உண்மைதான். சாகாத மனிதரின் கட்டளைகள் சாகப் போவதில்லைதான்’ என்றார்.

அடுத்து, இத்ரீஸ் என்பவர் ஆரிஃபு நாயகத்தின் முரீதுகளில் ஒருவர். தினம் தினம் காலை வேளைகளில் ஆண்டகைக்குப் பால் கொண்டுவந்து கொடுப்பது அவர் வழக்கம்.

சில நாட்களாக அவரது ஒரே மகன் அஹ்மதுக்கு உடல் நலமில்லை. அதுபற்றிய யோசனையுடன் ஆண்டகையின் சபைக்கு அன்று வெறுங்கையுடன் வந்து விட்டார். ஆண்டகை அவர்கள் பால் கொண்டு வரவில்லையா? என்று வினவ, தம் தவறை உணர்ந்து வருந்திய இத்ரீஸ் உடனே வீடு நோக்கி வேகமாய்ச் சென்றார்.

அவர் வீட்டில் அவரது ஒரேமகன் அஹமது இறந்து விட்டிருந்தான். அவனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். ஆனாலும் ஆண்டகைக்கு பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஆண்டகை அவர்களின் சமூகத்திற்கு வந்தார்.

ஆனால் அவரின்முகத்தின் கவலையை பார்த்து ஆண்டகை அவர்கள் அதுபற்றி கேட்டார்கள். தம் மகன் இறந்துவிட்டது பற்றி அவர் சொன்னார்.

ஆண்டகை அவர்கள் தம் இறைவனிடம் இறைஞ்சினார்கள். அதை ஏற்றுக் கொண்ட அல்லாஹ், அதற்காக மலக்குல் மவ்த்தை அனுப்பி வைத்தான். அவர் வந்து ஆண்டகை அவர்களிடம் ‘இத்ரீஸ் மகன் அஹ்மது விசயமாக தீர்மானிக்கிற பொறுப்பை ஆண்டவன் உங்களிடம் தந்துவிட்டிருக்கிறான் என்றார்கள்.

பின் ஆண்டவர்கள் ‘அஹமதே எழுந்திரு’ எனப் பெருங்குரலில் கட்டளையிட்டார்கள். சிறிது நேரத்தில் க.ஃபன் இடப்பட்ட உடம்போடு இறந்து போன அஹ்மது ஆண்டகையின் சமூகத்தில் வந்து நிற்பதைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

இசையும் ஆரிஃபும்

தமது அந்திம காலத்தில் ஆண்டகைக்கு இசைமீது அதிக நாட்டம் இருந்து வந்திருக்கிறது.

ஒரு சமயம் தமது முரீதுகளுடன் அமர்ந்து ஆண்டவர்கள் இசை கேட்டுக் கொண்டிருக்கையில்> அஸர் தொழுகை வேளை தப்பி மஃரிபு வேளை நெருங்கிவிட்டது. பிரக்ஞையற்றிருந்த ஆண்டகையை ஒருவர் உசுப்பி நிலைமையை தெரிவிக்க, சாளரத்தின் வழியே ஆண்டவர்கள் மேற்கு வானத்தை உறுத்து விழித்தார்கள்.

அஸ்தமனமாகவிருந்த சூரியன் சட்டென்று மேலே ஏறி நடுவானத்திற்கு வந்து விட்டது.

முல்லாக்கள் கும்பலாய் திரண்டு வந்து ஆண்டகையிடம் ‘இசை கேட்பது தடுக்கப்பட்ட ஒன்றல்லவா? என்று கேட்டார்கள்.

ஆண்டவர்கள் பேசினார்கள்: ‘ சகோதரர்களே! உடலுக்கு பலம் தரக்கூடிய சுவையான பேரீத்தங்கனிகள் காமாலை நோயுள்ளவனுக்கு ஆகாது என்று வைத்தியர்கள் எச்சரிக்க நான் கேட்டிருக்கிறேன்.

மேனியை சுத்தம் செய்யக்கூடிய குளிர்ந்த நீர் காய்ச்சல் காரனுக்குக் கூடாது எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால்,

உலகிலுள்ள அனைவரும் காமாலைக்காரர்களாக இல்லாதவரை ‘கூடாது’ என்பது பொதுவிதியாக இருக்க முடியாது.

எனவே எனக்கும் முஜ்தஹிது ஆன பெரியார்களுக்கும் இசை கேட்பது ஆகும்.

இசை எங்கிருந்து, எதனிடமிருந்து, யாரிடமிருந்து வந்தாலும் அதனைப் பருகுவது எங்களுக்குக் கூடும்.

புலன் இயக்கத்தை ஓய்த்ததும் பெருகி வருகிற ‘அந்த’ ஓசை இன்பத்தில் கரைந்து போகிற எவருக்கும் சங்கீதம் கேட்பது ஆகும்.

மனக் கரையைப்போக்குகிறவற்றுள் இசையும் ஒன்று.

இசை அலைகளில் மிதந்து அது பிறந்த இடத்திற்குச் செல்வது ஒரு வணக்கமே.

எங்களது இலட்சிய சமூகத்தினின்று பெருகி வருகிற சங்கீதம் எங்களுக்கு ஒரு சுருக்கு வழியே.

இசை கேட்பதன் ரகசியத்தை ஆரிஃபீன்களும்> முஹிப்பீன்களும் அன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.

ஆனால் இசை இன்பவம் எவருக்கு அல்லாஹ்வை உணர்த்தவில்லையோ அவருக்கு இசை கேட்பது ஹராம்.

எனினும் ஒரு ஹபீபுக்கும் மஹ்பூபுக்கும் இடையிலுள்ள ரகசியங்களுள் இசை கேட்பதும் ஒன்று என்பதை யாரும் மறுக்க வேண்டாம்’ என்றார்கள்.

ஆரிஃபீன்களின் கணிப்பிலேஆரிஃபு நாயகம்

அபூபக்கர் ஹம்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: ‘நபிமார்களின் நிலைமைப் பற்றிப் பேச விரும்பியவர்கள் பேசுங்கள். ஆனால் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி வாய் திறக்காதீர்.

வலிமாரின் அந்தஸ்து பற்றிப் பேச நினைகக்pறவர்கள் பேசுங்கள். ஆனால் சுல்தானுல் ஆரிஃபீன் சையிது அஹ்மது கபீரின் அந்தஸ்து பற்றி மூச்சு விடாதீர்.’

‘செய்யிது அஹ்மது கபீரை இன்ன வஸ்து என்றே எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. வல்லமையுள்ள இறைவன் மீது சத்தியமாக அவரைப் போன்ற ஒரு வலி உண்டாகவில்லையென்றே நான் கருதுகிறேன்’ என்பது ஷஹாபுத்தீன் சுஹ்ரவர்த்தியின் அபிப்பிராயம்.

அபூஹைருல் ஜன்ஜானி சொன்னார்கள்: ‘சுல்தான் அஹ்மது கபீர் அல்லாஹ்வின் ரகசியத்திலும் ரகசியமாயிருக்கிறார்.’

‘மஹ்பூபியத்திலே, மஉஷுக்கியத்திலே அஹ்மது கபீருக்கு நிகராவனர் யாருமில்லை’ என்பது ஹாரூனுல் ஹபஷு அவர்களின் கணிப்பு.

வலிமார்களுள் ஒவ்வொருவரும் ஒரு நபியின் இதயத்தைப் பெற்றிருக்கிறார்கள். நானோ எனது பாட்டனார் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தை இருப்பிடமாய்க் கொண்டிருக்கிறேன் என்றார்கள்.

முரீதுகளும்> கலீஃபாக்களும்

‘நான் சந்தித்த சுல்தான் அஹ்மது கபீரின் ஒவ்வொரு முரீதும் ஒரு வலியாகவே இருந்தார்’ என்கிறார்கள் சுலைமான் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

ஷாமிலிருந்து ரோம் வரை அஹ்மது கபீரின் முரீதுகளைக் காண முடிந்தது. உண்மையில் அவர்களுக்கு ஒரு தெளிவான அடையாளம் இருக்கத்தான் செய்தது என்கிறார் ஸூபி அத்தார்.

ஆரிஃபு நாயகத்தின் முரீதுகள் இவ்வளவு பேர்தான் என்ற கணக்கு இல்லை என்பது ஒரு கணக்கு.

அவர்கள் முரீதின்களில் உலக வாழ்வைத் துறந்த ஜாஹிதீன்கள் மட்டும் இருபதாயிரம் பேர் அவர்களது காலத்திலேயே இருந்தார்களாம்.

ஆண்டகை நடத்தி வந்த அஹ்மதிய்யா, ரிஃபாயிய்யா தரீக்காக்களில் கிலாஃபத் பெற்ற கலீஃபாக்களின் எண்ணிக்கை 12000. இவர்களில் அப்தால்களும்> அவ்தாதுகளும்> நுகபா> நுஜபாக்களும் உண்டு.

ஆண்டகையின் பிரதான கலீபாக்கள் நால்வருள் சுல்தான் முஹம்மது> இஸ்மாயீல்> ஹாரூன் ரஷீது ஆகிய மூவரும் முறையே ரோம்> திமஷ்க்> பகுதாதுப் பகுதி அமீர்களாவர். இந்த தரீகாகக்கள் பரவ இவர்கள் மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள்.

நூல்கள்

ஆரிஃபு நாயகம் அவர்கள் தமது இரண்டாவது வனவாசத்திற்குப் பிறகு சுமார் 662என ருமூஜுல் ஃபுகரா என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. அவை அனைத்தும் ஆத்மீகம் சம்பந்தப்பட்டவை. அவற்றுள் சில.

மஆனி பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

தப்ஸீர் சூரத்துல் கத்ர்.

இல்முத் தப்ஸீரேன்.

ஹதீஸ்.

அத்தரீகு இலாஹி.

வ ஹாலத்து அஹ்லல் ஹகீகதி.

மஃஅல்லா.

ஹிகம்.

அஹ்ராபுடபர்ஹானுல் மு அய்யிது.

ஆண்டகையின் மறைவுக்குப் பின்னர் அவர்களது கலீஃபாக்களும் வேறு சில மஷாயிகுமார்களும் அவர்களைப் பற்றி ஏராளக் கிரந்தங்கள் இயற்றியிருக்கிறார்கள். அவற்றுள் சில:

ரஃபிஉல் ஆஷிகீன்>திரியாகுல் முஹிப்பீன்> ரவ்லதுல் னாளிரீன்> துஹ்பத்து மக்கிய்யா.

ரிஃபாயிய்யா தரீகாவின்படி ஆண்டகையின் சில்சிலா::

ஹழ்ரத் செய்யிதினா அலாவுத்தீன் காதிரி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபுல் பள்லு முஹம்மது இப்னு காமிஹ் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபூ அல்லாம் துர்கானி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா மம்லீ இபுனு சர்ஹன்கா அஜ்மயீன் ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபூபக்கர் இப்னு தல்ஹஸ்பலீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா ஜுனைது முஹம்மது பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா அபீ அப்துல்லாசிர்ரீ சித்கீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா சுலைமான் தாவூத் தாயீ ரலியல்லாஹு அன்ஹு.

ஹழரத் செய்யிதினா முஹம்மது ஹபீபுல் அஜமி ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா இமாம் ஹஸன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு

ஹழ்ரத் செய்யிதினா ஷாஹ் மர்தான் செய்யிதினா அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு

ஹழ்ரத் செய்யிதினா ஹபீபுர் ரசூல் செய்யிதினா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

ஆரம்ப நாட்களில் ஆரிஃபு நாயகம் ஷாஃபி மத்ஹபில் இருந்தார்கள்.

மறைவு.

78வயதுகளை கடந்துவிட்ட ஆண்டகை அவர்கள் நோய்ப்படுக்கையில் கிடக்கிறார்கள். தொடர் வயிற்றுப் போக்கால் அவர்களது கண்கள் பஞ்சடைத்து போய்விட்டன. மருந்தும், உணவும் சாப்பிட மறுத்துவிட்ட அவர்களது உணவு மேலும் மேலும் பலவீனமடைகிறது.

குறிப்பிட்ட நேரம் வந்ததும் ஆண்டவர்கள் சட்டென்று கண் மலர்த்துகிறார்கள். உடனே எழுந்து உளுச் செய்கிறார்கள்.இரண்டு ரக்அத் நபில் தொழுகிறார்கள். தம் மருகர் இப்றாஹிம் அக்ரபுவைப் பார்த்து ‘இன்று என்ன நாள்?’ என்கிறார்கள். ‘வியாழக்கிழமை’ எனப் பதில் வந்ததும் சட்டென்று முகம் மலர்கிறார்கள். எல்லோரையும் ஒரு தரம் திரும்பிப் பார்க்கிறார்கள். நான் உங்களுக்கு உபதேசித்தவற்றை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருங்கள். இனி என்னிடமிருந்து நீங்கள் உபதேசம் பெற முடியாது’ என்று சொல்லிவிட்டுச் சிறிது மௌனத்திற்குப் பின் அமைதியாகச் சொல்கிறார்கள்: ‘நேரம் நெருங்கி விட்டது. விடை தாருங்கள். என்னை என் ரப்பு அழைக்கிறான்’ என்றார்கள்.

ஹிஜ்ரி 508> ஜமாஅத்துல் அவ்வல் 28பிற்பகல் நேரம் ஆண்டவர்கள் கிப்லா பக்கம் திரும்பியவர்களாக இறுதியாகக் கண் மூடுகிறார்கள்.

திமிஷ்கிலிருந்து ஆண்டகையிடம் முரீது பெறும் நோக்கத்துடன் புறப்பட்டிருந்த சாலிஹீன்களான 120பேர்களும் ஆண்டகை புகழுடம்பு எய்தி இரண்டாவதுநாள்தான் பதாயிகு வந்தார்கள். செய்தி அறிந்ததும் அவர்களுக்குப் பேரதிர்ச்சியாயிருந்தது.

அழுது அரற்றி ஆண்டகை அவர்களின் கப்ர்ஷரீபுக்கு ஓடினார்கள். அச்சமயம் கப்ரு ஷரீபிலிருந்து, வருந்தாதீர்கள். இங்கே அருகே வாருங்கள் என்ற சப்தம் வெளிப்பட்டது.

திகைப்புடன் அவர்கள் விரைந்து சென்றார்கள்: ‘நிச்சயமான அல்லாஹ்வின் பாதையில் மடிந்தவர்களை இறந்தவர்களாய்க் கருதாதீர். அவர்கள் ஜீவனுடனே இருக்கிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உணவளிக்கப்படுகிறது என்ற இறை வசனத்துடன் ஒளிக்கரம் ஒன்று கப்ரிலிருந்து வெளிப்பட்டது. ஆவலுடன் அதனைப் பற்றி அவர்கள் பைஅத் செய்தார்கள்.

இச்செய்தி கேள்விப்பட்டதும் பலபாகங்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் வரத் துவங்கியது. முரீது கேட்டு மன்றாடியது.

அவர்களுக்கு கப்ரிலிருந்து எனது கலீ;ஃபாக்களிடம் முரீது பெற்றுக் கொள்ளுங்கள் என்ற சப்தம் மட்டும் வரும். இவ்விதம் ஏழு வருடக் காலம் நிகழ்ந்திருக்கிறது.

இறைவா! அன்னாரின் பொருட்டால் எங்களின் நாட்டதேட்டங்களையும் நிறைவேற்றி அருள்வாயாக! ஆமீன்.

அப்துல் கரீம் அல் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு

கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெண் மக்கள் வழி வந்தவரான மாபெரும் ஞானமேதையாகிய இவர்கள் பக்தாது மாவட்டம் ஜீல் என்ற ஊரில் ஹிஜ்ரி 767(கி.பி.1365-66) ல் பிறந்தனர்.

தாபித் நகரில் வாழ்ந்த ஷைகு ஷரபுத்தீன் இஸ்மாயீல் பின் இப்றாஹீம் ஜபர்தீயிடம் இவர்கள் ஆத்மஞானக் கல்வி பயின்றனர். இவர்களை பெரிதும் உருவாக்கியது முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞானநூற்கள் எனலாம்.

இப்னு அரபியின் ‘ஃபுத்துஹாத்து’க்கு விரிவுரை எழுதியுள்ளார்கள். இன்ஸானுல் காமில் ஃபீ அமஅரிபத்தில் அவாகிர்வல் அவாயில்'(முதலாவதும் இறுதியானதுமான விஷயங்களில் பரிபூரணமான அறிவைப் பெற்றுள்ள மனிதன்) என்பது> இவர்கள் ஆத்மஞானக் கடலில் மூழ்கி எடுத்த நன்முத்தாக விளங்குகிறது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தம் குரு என்று இன்ஸானுல் காமில் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இதுதவிர மேலும் 30நூல்கள் வரை எழுதியுள்ளனர். அதில் ஒன்று மராதிபுல் உஜூது என்பதாகும். இதில் மனிதனின் 40படித்தரங்களை குறிப்பிடுகின்றார்கள்.

ஹிஜ்ரி 790 (கி.பி.1337ல் இவர்கள் இந்தியாவுக்கும் வந்துள்ளனர்.

இவர்கள் பல ஆன்மீன அனுபவங்களை பெற்றுள்ளனர். வானவர்களுடன் உரையாடியுள்ளனர். நபிமார்களையும்> வலிமார்களையும் ஆன்மீக முறையில் சந்தித்துள்ளனர். இவர்கள் ஹிஜ்ரி 832 (கி.பி. 1428ல் மறைந்தார்கள்.)

அபுல் ஹஸன் அல் அஷ்அரீ

இவர்கள் பஸராவில் ஹிஜ்ரி 260 (கி.பி.873) ஆம் ஆண்டு பிறந்தார்கள். இவர்களின் தந்தையார் பெயர் இஸ்மாயீல் என்பதாகும். இவர்களின் மூதாதையர்களில் ஒருவர் ரோமத்துடன் பிறந்ததால் அல் அஷ்அர் (ரோமமுடையவர்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி என்ற ஸஹாபியின் வம்சவழி வந்தவர்கள்.

இவர்களின் தந்தை இறந்ததும் இவர்களின் அன்னை முஃதஸிலா இயக்கத்தின் தலைவரான அபூஅலீ அல்ஜுப்பாயை மணந்து கொண்டார். எனவே இவர்கள் அல்ஜுப்பாயிடமே கல்வி கற்று அவர்களின் மாணவராயினர்.

பக்தாதில் அல்மன்சூர் பள்ளிவாயிலி;ல் ஷாபியி மத்ஹப் அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்மர்வஸியின் பேச்சுக்களை ஒவ்வொரு வெள்ளியும் கேட்டு வந்ததோடு அவர்களின் மாணவராகவும் ஆயினர்.

இவர்கள் வாக்குவாதம் செய்வதில் மிகவும் திறமையாக இருந்தார்கள். அல்ஜுப்பாயிடம் வாக்குவாதம் செய்ய வருவோரை அவர் இவர்களிடம் வாக்குவாதம் செய்யவிடுவார். 40வயது வரை முஃதஸிலாக்களின் தலைவரான அல்ஜுப்பாயிடம் மாணவராக இவர் இருந்தார்.

நாளடைவில் முஃதஸிலா மீது இருந்த மோகம் இவர்களுக்கு குறைந்தது. நபித்தோழர்கள் சென்றவழியே நேர்வழி என்று கண்டார். இதன்பின் 15நாட்கள் மனப்போராட்டத்திற்கிடையே வீட்டிலேயே முடங்கி கிடந்தார்கள். 15நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமை வெளியே வந்து நேரே பள்ளி சென்றார்கள். அங்கு இவர்கள் அல்ஜுப்பாயை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்தார். அவரின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் அல்ஜுப்பாயி திணறினார்.

உடனே தான் சொற்பொழிவாற்ற போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு, ‘நான் இதுவரையிலும் குர்ஆன் படைக்கப்பட்டதென்றும், மனிதர் தங்களின் கண்களால் இறைவனைக் காண இயலாது என்றும், நம்முடைய தீ|ய செயல்களுக்கு நாமே காரணம் என்று கருதிக் கொண்டிருந்தேன். இப்போது அக்கொள்கைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அக்கொள்கையுடையவர்களின் இழித்தன்மையை எடுத்துரைக்க ஆயத்தமாகிவிட்டேன்’ என்று உரத்துக் கூறினார்கள்.

இதன்பிறகு முஃதஸிலாக் கொள்கைக்காரர்களிடம் சென்று அவர்களின் தவறான போக்கை எடுத்துரைத்தார்கள். இவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விளக்கி 300நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். இவர்கள் எழுதிய 99நூற்களை இப்னுஅஸாகிர் குறிப்பிடுகிறார். இவர்கள் தாம் இறப்பதற்கு 4நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ‘அல்அமத்’ என்ற நூலை எழுதி அதில் தான் எழுதிய 68நூற்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருக்குர்ஆனுக்கு மட்டும் 30பாகங்களில் விரிவுரை எழுதியிக்கிறார்கள். இவர்கள் எழுதிய ‘கிதாபுல் ஃபுஸூல்’ 12பாகங்களைக் கொண்டதாகும். இவர்கள் எழுதிய நூல்களில் சிறப்பு வாய்ந்தது ‘மகாலாத்துல் இஸ்லாமிய்யீன்’ என்பதாகும்.

ஷாபி மத்ஹபைப் பின்பற்றிய இவர்களின் கருத்துகக்ளை ஷாபிய்யாக்கள் ஏற்றுக் கொண்டனர்.இவர்களுடைய கருத்துக்கள் கொள்கைகளை பரப்புவதற்காகவே நிஜாமுல் முல்கினால் நிஜாமிய்யா கல்லூரி நிறுவப்பட்டது. இவர்களை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முழுக்க முழுக்க பின்பற்றி இவர்களின் கொள்கைகளை சுன்னத் வல் ஜமாஅத்தின் நிலையான கொள்கையாக ஆக்கினர்.

இவர்கள் இரவு இஷா தொழுகைக்கு செய்யும் ஒளுவோடு சுப்ஹுத் தொழுகையையும் பல்லாண்டுகளாக நிறைவேற்றி வந்தார்கள் என அபுல் ஹுஸைன் அல் ஹர்வி அவர்கள் கூறுகிறார்கள்.

இவர்களின் பாட்டனார் பிலால் இப்னு அபீ புர்தாவின் வழியாக வந்த ஒரு சிறு நிலத்திலிருந்து நாளொன்றுக்கு 17திர்ஹம் வருமானம் வந்து கொண்டிருந்தது. அதைக் கொண்டே இவர்கள் எளிய வாழ்வு வந்தனரென்று இவர்களின் ஊழியர் பிந்தார் இப்னு அல்ஹுஸைன் கூறுகின்றார்.

இவர்களின் சிறப்பியல்புகளைப் பற்றி ஹாபிஸ் அபுல் காசிம் இப்னு அஸாகீர் ஒரு நூல் எழுதியுள்ளார்.

இவர்களைப் பற்றிஅ பூபக்கர் அஸ்ஸீரஃபீ கூறும்போது, ‘இறைவன் அல்அஷ்அரீயை இவ்வுலகிற்கு அனுப்பும் வரை முஃதஸிலாக்கள் தலைநிமிர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அல்லாஹ் அபுல்ஹஸன் அஷ்அரீயை அனுப்பி அவர்களின் ஆதிக்கத்தை அழித்தொழித்தான்’ என்று கூறினார்.

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை இவர்களிடமிருந்துதான் வலுவடையத் துவங்கியது. இவர்கள் ஹிஜ்ரி 324ல் பக்தாதில் மறைந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

அப்துர் ரஹீம் அல் புர்யீ ரலியல்லாஹு அன்ஹு

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அளவற்ற காதல் கொண்டு தம்மையே தாம் உருக்கி நீராக ஆக்கிச் சுவனம் புகுத்த இப்பெரியாருக்கு ‘ரயீஸுல் உஷ்ஷாக்'(பேரின்பக் காதலர்களின் தலைவர்) என்ற சிறப்புப் பெயர் உண்டு.

இவர்கள் லுத்புல் இலாஹி என்ற அரபுக் கவிதையொன்று இறைவனைப் பற்றி எழுதினர்.

அண்ணலாரின் அடக்கவிடத்தை தரிசிப்பதற்காக அடங்காக் காதலுடன் ஸலவாத் முழங்கிய வண்ணம் இவர்கள் மதீனாவை நோக்கி வரும் போது மதீனாவின் ஆளுனரின் கனவில் பெருமானார் தோன்றி அன்னாரின் அடையாளங்களை சொல்லி அவரை மதீனா நுழையவிடாமல் தடுத்திடுமாறு கூறினர். அவரும் அவர்களை அடையாளம் கண்டு அவ்வாறே தடுத்து நிறுத்தினார். அதனால் அவர்களுக்கு அண்ணலார் மீது இருந்த காதல் பெருந்தீ போன்றாகி நீர் போன்று உருகி அவ்விடத்திலேயே மறைந்தனர். உடனே மதீனாவின் ஆளுநரும் ஏனையோரும் இவர்களின் எலும்புகளை ஒன்று சேர்த்து அவ்விடத்திலேயே நல்லடக்கம் செய்து விட்டு மதீனா திரும்பினர்.

இவர்களின் அடக்கவிடம் பத்ரிலிருந்து மதீனா செல்லும் வழியில் சற்று விலகி மலையடிவாரத்தில் உள்ளது.

இவர்களை ஏன் அண்ணலார் தடுக்க வேண்டும் என்ற சந்தேகத்தோடு ஆளுநர் அவர்கள் படுத்துறங்கினார். அன்னாருக்கு அண்ணலார் கனவில் தோன்றி அவர் என்மீது எத்தகு காதல் கொண்டாரோ அத்தகு காதலை நானும் அவர் மீது கொண்டுள்ளேன். எனவே அவர் என்னை அண்மியதும் என்னையறியாமல் நான் எழுந்து அவரை வரவேற்பின் அது ஷரீஅத்திற்கு மாற்றமாகி விடுமே என்று கருதி அவர் என்னை அடையுமுன் தடுத்து நிறுத்த சொன்னேன் என்று சொல்லி மறைந்து சென்றார்கள்.

முஹம்மத் அப்துல் அலீம் சித்தீகி (மீரட் மௌலானா) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.

 

பெயர்: முஹம்மது அப்துல் அலீம் சித்தீகி

குலமும் கோத்திரமும்: முதலாம் கலீஃபா ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்  வழித் தோன்றலாக தந்தையார் மூலமாக 36 வது தலைமுறையிலும், தாயார் மூலமாக 32வது தலைமுறையிலும் வந்துதித்தார்கள்.

தந்தையின் பெயர்: ஹழ்ரத் மௌலானா முஃப்தி அப்துல் ஹக்கீம் ஜோஷ் சித்தீகி காதிரி.

பிறந்த தேதி:  ஹிஜ்ரி 1310 ரமலான் பிறை 15 திங்கள் கிழமை. (03-04-1893)

வளர்ப்பும் கல்வியும்: அரபி, உருது, ஃபார்ஸி வீட்டிலேயே தம் தந்தையாரிடம் கற்றார்கள். தமது ஏழாம் வயதிலேயே முழுகுர்ஆனையும் சிறப்பாக மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றனர். அதற்குப் பின் மத்ரஸா அரபியா இஸ்லாமிய்யாவில் சேர்ந்து படித்தார்கள். தந்தையார் மறைவிற்குப்பின் தாயாரும், பின்பு அன்னாரின் மூத்த சகோதரர் மௌலானா முக்தார் அஹ்மத் சித்தீகியின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

பட்ட மேற்படிப்பு: மத்ரஸா அரபியாவில் மௌலவி ஆலிம் என்ற பட்டத்தை ஹிஜ்ரி 1326ல் பெற்றார்கள். பின் ஆங்கிலக் கல்லூhயிpல் சேர்ந்து பி.ஏ. பட்டமும், அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் எல்.ஹெச்.பி. என்ற வழக்கறிஞர் பட்டமும் பெற்றார்கள். பின் ஹக்கீம் இஹ்திஷாமுத்தீன் அவர்களிடம் யூனானி வைத்திய முறையைக் கற்றுத் தேர்ந்தார்கள்.

ஆசிரியர்கள்: முஃப்தி அப்துல் ஹக்கீம் ஜோஷ் சித்தீகி, மௌலானா முக்தார் சித்தீகி, ஹழ்ரத் மௌலானா அஹ்மத் ரிழா கான் பாழில் பரேல்வி.

ஹதீது கலையில் இஜாஸத் எனும் அனுமதி: ஹிஜ்ரி 1332 துல்ஹஜ் பிறை 19 ல் சிஹாஹ் சித்தா என்ற சஹீஹான 6 கிரந்தங்களின் ரிவாயத்துகளுக்கு இஜாஸத் என்ற அனுமதியை ஆலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் அவர்களிடம் பெற்றார்கள்.

பைஅத்:

தமது மூத்த சகோதரர் முக்தார் சித்தீகியிடம் பைஅத்தும், கிலாபத்தும், அஹ்லு பைத்தைச் சார்ந்த ஷெய்குல் மஷாயிக் ஹழ்ரத் செய்யிது ஷாஹ் முஹம்மது அலீ ஹுஸைன் அஷ்ரஃபி ஜீலானி கசோச்சவி அஷ்ரஃபி மியான் அவர்களிடம் கிலாபத்தும் பெற்றார்கள். மேலும் பரேல்வி அஃலா ஹழ்ரத் அவர்களின் பிரதான கலீபாவாகவும் திகழ்ந்தார்கள்.

கற்ற மொழிகள்:

உலகின் முக்கிய 16 மொழிகளில் பாண்டித்துவம் பெற்றிருந்தார்கள். அவைகள்: உருது, அரபி, பார்ஸி, இந்தோநேஷி, ஆங்கிலம், ஜப்பானி, ஜெர்மன், சீன மொழி, டச்சு, ஸவாஹிலி(ஆப்பிரிக்க பாஷை), பிராசிலா, மலாய், ஹிந்தி, சிங்களம் போன்றவைகள். அவற்றில் சில பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் (ழுசநைவெயட டுயபெரயபநள) பன்மொழி பன்னாட்டு மொழிகளில் முனைவர் -டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

கலீஃபாக்கள்: 

பல்லாயிரக்கணக்கான முரீதுகளை பெற்றிருந்தார்கள். குறிப்பாக மொரிஷியஸ் தீவில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹழ்ரத் அவர்களின் முரீதுகளும் மாணவர்களுமாக இருந்தார்கள். பல கலீபாக்கள் இருந்தாலும் மௌலானா ஷாஹ் அஹ்மது நூரானி சித்தீகி (ஹழ்ரத் அவர்களின் மகனார்), டாக்டர் பழ்லுர் ரஹ்மான் அன்சார், மௌலானா முப்தி பழ்ளுர் ரஹ்மான் ரஹ்மானி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இஸ்லாமிய தஃவத்து பணி:

சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள், கிறித்துவர்கள், நாத்திகர்கள் போன்றோரை தம் நன்னடத்தையால் ஹக்கான மார்க்கத்தை எடுத்து வைத்து இஸ்லாத்தைத் தழுவச் செய்தார்கள். 

பற்பல நாடுகளில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தும், நூலகங்களை அமைத்தும், அனாதை இல்லங்கள், மருத்துவ மனைகள் ஆங்காங்கே மக்களுக்காக தேவைப்படும் மன்றங்கள், அமைப்புகள் நிர்மாணித்து அவற்றிற்கான கட்டிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். அந்த அமைப்புகள் இன்றுவரை செயலாற்றி ஹழ்ரத் அவர்களின் நினைவைப் போற்றுகின்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடவுள் மறுப்பு கொள்கை மக்களை வெகுவாக பாதித்த போது 1949 ல் சிங்கப்பூரில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தன்ஜீமெ பைனுல் மஸாஹிம் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள். அது இன்றுவரை உலகளாவிய அளவில் செயல்படுவது குறிப்பிடத்ததக்கது.

நூல்கள்:

1. லதாயிஃபுல் மஆரிஃப் – வலிமார்கள் பற்றி இறைமெய்ஞ்ஞான ரகசியங்கள் பற்றிய நூல்.

2. திக்ரே ஹபீப் – பெருமானாரின் பெருமையைப் போற்றும் இரண்டு பாகங்கள் அடங்கிய நூல்.

3.அஹ்காமே ரம்ஜானுல் முபாரக் – நோன்பின் மாண்பும் அதற்குரிய சட்டங்களும்.

4.பஹாரே ஷபாப் – இளைஞர்களுக்கு அறைகூவல்.

5. தேவ்பந்தி மௌலவி கா ஈமான் – தேவ்பந்த் உலமாக்கள் தமது ஈமானை வஹ்ஹாபிகளுக்கு விற்றுவிட்டதாக சாடும் ஆதாரப்பூர்வ நூல்.

6. ஃபர்ரத் மின் கஸ்வரா- அஷ்ரப் அலி தானவி மேல் கொடுக்கப்பட்ட குப்ரு பத்வா.

7. அல்மர்ரதுல் காதிய்யானிய்யா – காதியாணிகள் ஏன் காபிராகிப் போனார்கள் என்பதை விளக்கும் நூல்.

ஆங்கில நூற்கள்:

 

1. The claron

2. The Elementary Teaching of Islam

3. How to Preach Islam

4. The Mirar

ஹழ்ரத் அவர்கள் 1931ல் சிங்கப்பூரிலிருந்து ரியல் இஸ்லாம் என்ற பத்திரிகையும், 1936ல் தி ஜெனியூன் இஸ்லாம் என்ற பத்திரிகையையும் நடத்தினார்கள்.

பேச்சாற்றல்:

ஹழ்ரத் அவர்கள் இனிமையான குரலில் மேற்கோள்களாக ஆயத்துக்களும், ஹதீதுகளும், சம்பவங்களும் கூறி உரையாற்றும் போது மக்கள் மதிமயங்கி கேட்பார்கள். 

டோக்கியோவில் பேசிக் கொண்டிருக்கும்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தின் முனைவர் பேராசிரியர் என்.ஹெச். பராஸ் அவர்கள் இது போன்ற இனிமையான குரலில் கருத்துமிக்க ஒரு சொற்பொழிவை கேட்டதில்லை என்று சிலாகித்துக் கூறினார்.

ஹழ்ரத் அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி எல்லா மதங்களின் குருமார்களும் சேர்ந்து ர்ளை நுஒயடவநன நுஅinஅநnஉந என்ற பட்டத்தை வழங்கினர்.

ஹஜ் பயணம்:

தமது வாழ்நாளில் 36 முறை ஹஜ்ஜுக்குச் சென்று வந்துள்ள ஹழ்ரத் அவர்கள் 1919 ல் முதல் முறையாக ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். ஹாஜிகளிடம் வரி விதித்த அக்காலத்திய வஹ்ஹாபிய சவூதி மன்னர் சுல்தான் அப்துல் அஜீஸ் பின் சவூதிடம் வாதாடி போராடி முழுமையாக வரிவிதிப்பை நீக்கினார். அன்றுமுதல் இன்றுவரை எந்த ஹாஜிகள் மீதும் வரிவிதிப்பு இல்லை.

மறைவு:

தமது உயிருக்கும் மேலாக நேசித்த ரஸூலுல்லாஹ்வை விட ஒரு நொடி கூட அதிக வயது வாழக் கூடாது என்று துஆ கேட்டு வந்தார்கள். அதேபோல் தம் மௌத் மதீனாவில்தான் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களாக 1953ம் ஆண்டு தமது 62வது வயதில் மதீனா முனவ்வரா சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். மக்கள் இதுபற்றி வினவியபோது தமது வயதில் இன்னும் ஒருவருடமே பாக்கியுள்ளதாக தெரிவித்தார்கள்.

அவர்களின் எண்ணப்படியே துல்ஹஜ் பிறை 22, ஹிஜ்ரி 1373 (22-08-1954) அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அன்னாரின் விருப்பப்படியே மதீனா ஷரீபில் அவர்களின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.