இலங்கை ஏறாவூரில் முஸ்தபி பட்டமளிப்பு விழா!

இலங்கை ஏறாவூரில், ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றுமுதல் தொன்றுதொட்டு இன்றுவரை மக்களுக்கு மார்க்ககப் கல்வியை சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் போதித்து எண்ணற்ற ஆலிம்களை உருவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்ஷாஅல்லாஹ் வருகிற ஹிஜ்ரி 1437 ஷஃபான் பிறை 8, (15-05-2016) அன்று இலங்கை கலாசாலை மண்டபம், காட்டுப்பள்ளி வீதி , ஏறாவூரில்  ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களுடைய கலீபா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி மத்தலில்லாஹில் ஆலி அவர்கள் தலைமையின் வழிகாட்டலில் 13 ஆவது  பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

ஷெய்குநாயகம் அவர்களின் கலீபா அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் மகனாரும், ஷெய்கு ஸைபுத்தீன் ஆலிம் மத்தலில்லாஹில் ஆலி அவர்களின் கலீபாவுமாகிய மௌலவி பி.ஏ. ஸைபுத்தீன் ஆலிம் ஸகாபி காதிரி ஸூபி அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் மூன்று ஆலிம்கள் முஸ்தபி ஸனது பெறவுள்ளனர். மேலும் இருவர் இன்ஷாஅல்லாஹ் வருங்கால முஸ்தபிகளாக தலைப்பாகை சூட்டிக் கொள்ளவுள்ளனர்.

மேலும் இவ்விழாவில் மத்ரஸாவின் அதிபரும், ஷெய்குனா ஸைபுத்தீன் ஸூபி காதிரி அவர்களின் கலீபாவுமாகிய மௌலவி ஏ. நாகூர் மீரான் ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களும், மற்றும் மத்ரஸா ஆசிரியர்களும் பங்கு பெறுகின்றனர்.

மத்ரஸா சிறப்பாக நடைபெற உங்களின் தாராள உதவிகளை அள்ளி வழங்கி ஷெய்குமார்களின் பரகத்தையும், அல்லாஹ்வின் அருளையும் பெற்றேக அன்புடன் வேண்டுகிறோம். பணம் அனுப்ப வேண்டிய வங்கி விபரம்:

Eravur Peopel’s Bank Account No : 123-1001-10000-396