தூத்துக்குடி சம்பவம் பற்றிய நோட்டீஸ்

தூத்துக்குடி சம்பவம் பற்றிய நோட்டீஸ்

By Sufi Manzil 0 Comment September 20, 2012

Print Friendly, PDF & Email

 

தூத்துக்குடியில் ஷெய்குனா அவர்கள் செய்த தப்லீக் எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது அதை விபரித்து வெளியான நோட்டீஸ். காயல்பட்டணத்தில் அனைத்து ஜமாஅத்தினர்களிடமிருந்தும் சீல்கள் பெறப்பட்டு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவினர்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் ஜமாஅத்துல் உலமா சபை தம்முடைய வஹ்ஹாபிய பிடிவாதத்திலேயே இருந்தது.

முஸ்லிம் சகோதரர்களுக்கோர் முக்கிய அறிவிப்பு.

15-6-74 ம் தேதி தூத்துக்குடி ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற 'திருநெல்வேலி ஜில்லா ஜமாஅத்துல் உலமா' சபையின் தீர்மானங்கள் 'விஷமிகள் ஜாக்கிரதை' என்ற  தலைப்பில் வெளியானவற்றில் 4ம் தீர்மானம் கண்டு பொதுமக்களிடம் குழப்பநிலை ஏற்பட்டதினால் எதார்த்தமாக நடந்த சம்பவத்தை விளக்கி வைக்குமாறு கேட்டு, எங்களுக்கு பல ஊர்களிலிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் எழுவது சிரமமானதினால் இந்த பிரசுரத்தின் உண்மையை விளக்கி வைக்கிறோம். 

சில நாட்களுக்கு முன் சூபி ஹழ்ரத் அவர்கள் தங்கள் குழந்தையின் சுகக் குறைவுக்கு பரிகாரம் பார்ப்பதற்காக இங்குள்ள ஆஸ்பத்திரியில் குடும்பத்தோடு சில காலம் தங்கியிருந்தார்கள்.

அதுசமயம் பள்ளிவாசலுக்கு அடிக்கடி வருவார்கள். பள்ளிவாசலிலேயே தொழுவார்கள். ஜமாஅத் நடந்தால் இங்குள்ள பேஷ்இமாமுடன் பின் தொடர்ந்து தொழாமல் ஜமாஅத்து முடிந்ததும் தனியாகவே தொழுவார்கள். தனியாக ஜமாஅத் நடத்தியதில்லை.

பள்ளிவாசல் பேஷ் இமாமுடன் தொழுதால் தொழுகை கூடாதென்று எவரிடமும் சொல்லவுமில்லை. தப்லீக் தலைவர்களையோ, மற்றவர் எவரையுமோ மறைமுகமாகவும் கூட 'காபிர்கள்' என்று சொல்லியதுமில்லை.

அவர்களிடம் நெருங்கி பழகியவர்களில் ஒருவர்: 'நீங்கள் முன் தூத்துக்குடிக்கு வரும் போதெல்லாம் இந்த பேஷ்இமாமோடு தொழுதுதானே வந்தீர்கள். இப்போது ஏன் அவருக்குப் பின்னால் தொழுவதில்லை' என்று வினவியபோது,

'நான், இந்த தப்லீக் ஜமாஅத்தானது மக்களை வஹ்ஹாபிகளாக ஆக்குவதற்காகவே வஹ்ஹாபிகளாலேயே உண்டாக்கப்பட்டது என்று தக்க ஆதாரங்கள் காட்டி, மக்கள் இதில் சேரக்கூடாது என்று பல புத்தகங்களும் நோட்டீஸ்களும் எழுதி பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு இலவசமாக விநியோகித்து பல்லாண்டு காலமாகவே பிரச்சாரம் செய்து வருவது எல்லோர்களுக்கும் தெரிந்த விஷயம் என்பதை அறிவீர்கள். 

தப்லீக் ஜமாஅத்தின் கெட்ட நோக்கத்தை விளங்கிய பிறகும் அதில் பிடிவாதமாக இருக்கிறவர்களுக்குப் பின்னால் நான் தொழ மாட்டேன். இந்த பேஷ்இமாம் அவர்கள் விஷயத்தை விளங்கிக் கொள்ளாமல்தான் தப்லீகில் சேர்ந்திருக்கக் கூடுமென்று நல்லெண்ணம் வைத்துதான் முன்பெல்லாம் அவருடன் தொழுது வந்தேன். இப்போது அவரின் போக்கைப் பார்த்தபின் அவர் பேரில் நல்லெண்ணம் வைக்க முடியவில்லை. அதனாலேயே தான் தனியாக தொழுகிறேன்' என்று சொன்னார்களாம்.

சூபி ஹழரத் அவர்கள் இந்த ஊரை விட்டும்  போனபின் நெல்லை ஜமாஅத்துல் உலமாக்காரர்கள் இங்கு வந்து, அவர்களும் தப்லீக்காரர்களும் சேர்ந்து தான் இவ்விதமாக இட்'டுக்கட்டி விஷமப் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பத்திலாக்கியிருக்கிறார்கள்.

1. சூபி ஹஸ்ரத் அவர்களைப் போலவே மதராஸ் கவர்மெண்ட் காழி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹஸ்ரத் அவர்களும், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஷேக் ஆதம் ஹஸ்ரத் அவர்களும்,

2. காயல்பட்டணம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் முஹம்மது அபூபக்கர் கிப்லா ஹழ்ரத் அவர்களும்,

3. மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி ஹஸ்ரத் அவர்களின் பர்ரத் மின் கஸ்வரா என்ற மார்க்கத் தீர்ப்பு நூலிலும்,

4. 'பத்ஹுத் தைய்யான்' 'மஆனி' ஆகிய கிரந்தங்களின் ஆசிரியரான கீழக்கரையைச் சார்ந்த சங்கைக்குரிய பெரியார் அல்ஆலிமுல் அரூஸ் அல்லாமா செய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்ள் மஆனியில் 177, 178 பக்கங்களில் இஸ்மாயில் தெஹ்லவி (இல்யாஸின் குருவான் ரஷீத் அஹ்மது கங்கோஹியின் குரு) தான் விரும்பியவாறு குர்ஆனுக்கு தப்பான அர்த்தம் செய்பவன் என்றும் மடையன் என்றும், வஹ்ஹாபி என்றும் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றியவன் என்றும் எழுதியுள்ளார்கள்.

5. மதீனாவிலுள்ள சங்கைக்குரிய 34 உலமாக்கள் 'ஹுஸாமுல் ஹரமைன்' என்னும் மார்க்கத் தீர்ப்பில் குலாம் அஹ்மது காதியானி, ரஷுது அஹ்மது கங்கோஹி, கலீல் அஹ்மது அம்பேட்டி, அஷ்ரப் அலி தானவி ஆகியோர்கள் காபிர்கள் என்றும், இதை சொல்லத் தயங்கியவனும், சந்தேகித்தவனும் காபிர் என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள்.

6. இந்தியாவின் பல பாகங்களிலுள்ள மேன்மை தங்கிய 268 உலமாக்கள் 'அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா' என்னும் மார்க்கத் தீர்ப்பில் மேற் கூறப்பட்டவர்கள் காபிர் என்றும், முர்தத்துகள் என்றும் தீர்ப்பளித்துள்ளார்கள்.

7. இந்தியாவிலுள்ள சங்கைக்குரிய 45 உலமாக்கள் 'அல் அதாபுல் பஃஸ் அலா றஃஸி இல்யாஸ்' என்னும் மார்க்கத் தீர்ப்பில் இல்யாஸ் காபிர் என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

8. கேரள சமஸ்தான 'ஜமியத்துல் உலமா' சபையும் இன்னும் பல உலமாக்களும் தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி மறுப்பு பத்வாக்கள் எழுதியிருக்கிறார்கள்.

சூபி ஹஸ்ரத் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி முக்கியமான இரண்டு குற்றச் சாட்டுக்களை எடுத்துக் கூறி அதற்கு தக்க ஆதாரங்களையும் காட்டி மறுக்கிறார்கள்.

முதலாவது குற்றச்சாட்டு: வஹ்ஹாபி கொள்கையின் ஸ்தாபகர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தௌஹீது' என்ற அரபி நூலுக்கு சரியான உருது மொழி பெயர்ப்பைப் போன்றதுஈ வஹ்ஹாபிக் கொள்கைகள் பூராவுமே எழுதப்பட்டதுமான இஸ்மாயில் தெஹ்லவியினால் எழுதப்பட்ட 'தக்வியத்துல் ஈமான்' என்ற நூலை, ரஷீத் அஹ்மது கங்கோஹி தனது பதாவா ரஷீதிய்யாவின் 42ம் பக்கத்தில் 'தக்வியத்துல் ஈமான்' என்னும் நூல் மிகவும் நல்ல நூல், ஷிர்க்கு, பித்அத்தை தவிப்பதற்கு நிகரில்லாதது. அதில் ஆதாரங்களெல்லாம் பூரணமாக அல்லாஹ்வின் வேதத்திலிருந்தும், ஹதீதுகளிலிருந்துமே காட்டப்பட்டிருகக்கிறது. அந்த நூலை வைத்திருப்பதும், அதைப் படிப்பதும் இன்னும் அதன்படி அமல் செய்வதும் (ஐனுல் இஸ்லாம்) இஸ்லாம் தானாகும். நன்மையும் கிடைக்கும்' என்று சொல்லி வஹ்ஹாபிக் கொள்கை அத்துணையையும் ஒப்புக் கொண்டு விட்டார்.

மேலும் அவரின் 'பதாவா ரஷீதிய்யா' என்னும் நூல் 235ம் பக்கத்தில் வஹ்ஹாபி கொள்கையின் ஸ்தாபகர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை நல்லவர், அவரின் கொள்கை நல்லது என்றும் சொல்வதோடு அவரைப் பின்பற்றியவர்களுக்கு வஹ்ஹாபிகள் என்று சொல்லப்படும் என்றும் சொல்லி அந்த கொள்கைகளை நல்லதென்று சரிகண்டதினால் தன்னையும், வஹ்ஹாபி என்று ஒப்புக் கொள்கிறார்.

 மேலும் அவரின்'தத்கிரத்துர் ரஷீது' இரண்டாம் பாகம் 17ம் பக்கத்தில், இந்த காலத்தில் நேர்வழியும் ஈடேற்றமும் என்னைப் பின்பற்றுவதிலேயே தரிபட்டிருக்கிறது' என்றும் சொல்கிறார்.

தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் ஜீவிய சரித்திரமான 'தீனி தாவது' என்னும் நூல் 41ம் பக்கத்தில் 'மௌலவி இல்யாஸ் அந்த (வஹ்ஹாபி) ரஷீது அஹ்மது கெங்கோஹி இடத்தின் தான் பத்து வருடகாலம் கல்வி கற்று அவரிடத்திலேயே பைஅத்தாகி-முரீதாக ஆனதோடு அவர்கள் என்னுடைய உடலிலும் உயிரிலும் குடிகொண்டு விட்டார்கள். அவர்களை காணாமல் எனக்கு நிம்மதியேயில்லை. தூக்கத்திலிருந்தும் விழித்து அவருடைய முகத்தைப் பார்க்க வேண்'டி அவரிடம் சென்று தரிசித்து, திரும்பவும் வந்து தூங்குவேன் என்று சொல்வார் என்றும்,

மவ்லவி இல்யாஸின் மல்பூளாத்து – வாய்மொழிகள் என்னும் நூல் 114ம் பக்கத்தில் 'ரஷீது அஹ்மது கங்கோஹி இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பாகவும், முஜத்திதாகவுமிருக்கிறார்' என்றும் சொல்கிறார்.

ஆகையினால் மவ்லவி இல்யாஸும் வஹ்ஹாபியேயாகும்.

இரண்டாவது குற்றச்சாட்டு: தப்லீகின் ஸ்தாபகர் மவ்லவி இல்யாஸினாலேயே எழுதப்பட்ட 'மகாதீபு மவ்லவி இல்யாஸின் லிகிதங்கள்' என்னும் நூலின் 122ம் பக்கத்தில் அவர் தப்லீகின் காரிய குழுவைப் பற்றி எழுதிய கடிதத்தில் 'இரண்டு கருமங்கள் இருக்கின்றன. ஒன்று நடவாமலிருப்பது அவசியமானது. அதை (இவர்கள்) செய்கிறார்கள். மற்றொன்று நடப்பது அவசியமானது. அதை (இவர்கள்) செய்கிறாரில்லை. முந்திய கருமம் கலிமா தொழுகையைச் சரியாகச் சொல்லவும், செய்யவும் வைப்பது. (இதை இவர்கள் செய்கிறதென்றாலும் கூட (இது) இந்த இயக்கத்தின் அசல் நோக்கத்தை போன்றது என்ற தோரணையில் செய்கிறார்கள். எதார்த்தமோ இஐ (இந்த இயக்கத்தின்) நோக்கமில்லை' என்றும், இன்னும் அதே நூல் அதே பக்கத்தில் கலிமாவையும், தொழுகையையும் சரியாகச் சொல்லவும், செய்யவும் வைப்பது இந்த இயக்கத்தின் கருத்தல்ல' என்றும், இன்னும் தீனிதஃவது எனும் நூல் 205ம் பக்கத்தில் 'ஒரு சமயம் தனது அன்பர் மவுலவி ளஹீருல் ஹஸன்  சாகிபு எம்.ஏ. அலிகார் (இவர் ஒரு விசால ஆராய்ச்சியாளரான அறிஞர்) இவரிடம் இல்யாஸ் சொல்கிறார்: ளஹீருல் ஹஸன்! என்னுடைய கருத்தை ஒருவரும் விளங்கிக் கொள்கிறாரில்லை. ஜனங்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இது தொழுகையைப் பற்றி (ஏவக் கூடிய) இயக்கமென்று. நான் சத்தியமாகச் சொல்கிறேன். இது ஒரு போதும் தொழுகையைப் பற்றி ஏவக் கூடிய இயக்கமில்லை' என்றும் சொல்லிவிட்டு அதே நூல் அதே பக்கத்தில் 'ஒரு நாள் பெருங்கை சேதத்தோடும், கவலையோடும் (இல்யாஸ்) சொன்னார்: ளஹீருல் ஹஸன்! (எனது நோக்கம்) ஒரு புதிய கூட்டத்தை உண்டாக்குவதாகும்' என்று சொல்கிறார்.

எனவே தப்லீக் இயக்கத்தின் நோக்கம் நம் சுன்னத் வல் ஜமாஅத்து மக்களை புதிய சமுதாயமாக – அதாவது தனது கூட்டமாகிய வஹ்ஹாபிக் கூட்டமாக ஆக்குவது தான் என்று தப்லீகின் ஸ்தாபகர் அவர் தனது வாயினாலேயே சொல்கிறார்.

ஜமாஅத்துல் உலமா சபையினர்களே!

சூபி ஹஸ்ரத் அவர்கள் மக்களை வழிகேட்டை விட்டும் காப்பாற்றுவதற்காக, தப்லீகின் கெடுதல்களைப் பற்றி தக்க ஆதாரங்களை காட்டி மக்களிடம் பிரச்சாரம் செய்வது விஷமப் பிரச்சாரமா? அல்லது சூபி ஹஸ்ரத்தைப் பற்றியும், அவர்கள் செய்யும் வேலையைப் பற்றியும் நேரில் கண்டு தெளிந்துக் கொள்ளாமல், அவர்களபை; பற்றி எவரோ ஒருவர் குறை கூறி எழுத்து மூலமாக அறிவித்ததாக வைத்துக் கொண்டு உலமா சபை அவர்களை கண்டிப்பதாக தீர்மானம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்வது விஷமப் பிரச்சாரமா? 

ஒருவரைப் பற்றி அவர் குற்றம் செய்தாரா? என்று அவரை நேரில் விசாரித்து அறியாமல், அவர் குற்றம் செய்ததாக எவரோ ஒருவர் எழுத்து மூலம் கொடுத்ததை வைத்துக் கொண்டு அவர் பேரில் குற்றம் சாட்டுவதும், அவரை கண்டிப்பதும்உ லமாக்களின்- அறிஞர்களின் பிரச்சாரமா? அல்லது அறிவிலிகளின் விஷமப் பிரச்சாரமா? 'தப்லீக் ஜமாஅத்தின் நோக்கம் மக்களை புதிதான கூட்டமான வஹ்ஹாபிக் கூட்டமாக ஆக்குவதுதான்' என்று தப்லீக்' ஜமாஅத்தின் ஸ்தபாகரே அவரின் வாயினால் சொல்லியிருக்கும் போது, தப்லீக் ஜமாஅத் புனிதமானது அது நல்ல சேவை செய்கிறது, அதைப் பற்றி எதிர் பிரச்சாரம் செய்வது கூடாது என்று தீர்மானித்திருக்கின்ற இந்த உலமா சபை சுன்னத் வல் ஜமாஅத்து உலமா சபையா? அல்லது வஹ்ஹாபி உலமா சபையா?

தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி மார்க்க அடிப்படையின் படி ஆதாரங்கள் காட்டி அது கெட்டது என்று சொல்லும் போது, அந்த ஆதாரங்களில் ஒன்றையுமே மறுக்காமல், அது நல்லது என்பதற்கு ஆதாரங்கள் காட்டாமலும் தப்லீக் புனிதமானது என்று உலமாக்களெல்லாம் ஏகோபித்து தீர்மானித்திருப்பதாக சொல்வது, மார்க்கத்தின் பேரில் துணிச்சலாக போர் புரிவதாகுமல்லவா?

குர்ஆன், ஹதீது, இஜ்மாவு, கியாஸு ஆகிய மார்க்க அடிப்படையின் படி கெட்டதென்று ஆனதை தென்னக உலமா சபை என்ன? அகில உலமா சபையாருமென்ன? அகில உலமாக்களும் கூட அதை புனிதமானது என்று சொல்ல முடியுமா? ஒரு கருமத்தை நல்லது என்றோ, கெட்டது என்றோ நிர்ணயிப்பது மார்க்கமே தான். மார்க்கம் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டதுவேதான. ஜனங்களால் ஏகோபித்து முடிவு செய்யப்பட்டதல்ல.

உலமா பெருமக்களே!

தப்லீக் ஜமாஅத் கெட்டது என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை எல்லாம் மறுத்து அது புனிதமானது என்பதற்கு ஆதாரம் காட்டுங்க்ள. ஆதாரங்கள் காட்டாமலும் வெறுமனே உலமா சபையினர்கள் எல்லோர்களும் அது புனிதமானது என்று தீர்மானித்ததாக விஷமப் பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்கள் உதவாக்கரை தீர்மானத்தைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்.

மக்களுக்கு உங்கள் பெயரில் வெறுப்புத்தான் நிச்சயம் உண்டாகும்.

வஸ்ஸலாமு அலா மனித்தப அல்ஹுதா.

இவண்,

25-7-74                                                                                                                                                          மஜ்லிஸு முஹிப்பிர் ரஸூல்,

தூத்துக்குடி.

குறிப்பு: (தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் இல்யாஸின் குருவான ரஷீது அஹ்மது கங்கோஹியின் குரு) இஸ்மாயில் தெஹ்லவியை வழி கெட்டவன், வழிகெடுப்பவன் என்றும் அவன் எழுதிய 'தக்வியத்துல் ஈமான்' எனும் நூலுக்கு மறுப்பாக 'அஸ்ஸுயூபுல் பாரிகா அலாருஊசில் பாஸிகா' என்ற தலைப்பில் மௌலானா அல்லாமா அப்துல்லாஹில் குராஸானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியிட்ட பத்வாவை சரிகண்டு, நான்கு மத்ஹபுக்குரிய மக்கா முப்தியுமான ஸஹீஹுல் புஹாரி ஷரீபின் 'அபூர்வ துஆ' கோர்வையாளருமான அல்லாமா அஹ்மது இப்னு ஜெய்னி தஹ்லானி தரீகத்துஸ் ஷாதுலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சரிகண்டு மதிப்புரை வழங்கியுள்ளார்கள்.

மறுபதிப்பு செய்து வெளியிடுவோர்: மஜ்லிஸு முஹிப்பிர் ரஸூல், குத்துக்கல் தெரு, காயல்பட்டணம். 1-8-74.