மையவாடியில் கட்டிடம் கட்டுவது பற்றி ஷெய்குனா அவர்களின் கூற்று:

காயல்பட்டணத்தில் குத்பா பெரியபள்ளியில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தர்காவை சுற்றி முஸ்லிம்களை அடக்கம் செய்யும் கபர்ஸ்தான் இருக்கிறது. அந்த கபர்ஸ்தானில் தர்ஹாவிற்கென்று ஒரு கொடிமரம் வைப்பதற்கு தர்ஹா நிர்வாகத்தினர் முயற்சித்த போது அதை கடுமையாக nஷய்குனா அவர்கள் எதிர்த்தார்கள். பொது மையவாடியில் எவ்வித கட்டிடமும் கட்டுவது ஆகாது ஹறாமானது என்றும், இப்போது கொடிமரம் என்று வைத்துவிட்டு பின்னால் அதன் மீது கட்டிடம் கட்டுவீர்கள் என்று அதை கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அந்த நிர்வாகம் எவ்வித ஆட்சேபணைக்கும் செவிசாய்க்காமல் கொடிமரத்தை நட்டுவித்தனர். சில வருடங்களில் அவர்கள் திட்டமிட்டபடி அந்தக் கொடிமரம் அகற்றப்பட்டு அங்கு மத்ரஸா என்ற பெயரில் கட்டப்பட்ட கட்டிடம் ஷெய்குனா அவர்கள் சொன்ன கூற்றை மெய்ப்பிப்பதாக உள்ளது.

Recommend to friends
  • gplus
  • pinterest

About the Author