Kayalpatnam Jumma Fatwa(Arabic/Tamil)

Kayalpatnam Jumma Fatwa(Arabic/Tamil)

By Sufi Manzil 0 Comment February 10, 2010

காயல்பட்டணம் ஜும்ஆ பத்வா

(மொழி பெயர்ப்பு)

பிரசுரித்தவர்கள்: S.A. முஹம்மது ஆதம்.
சாளை O.M. செய்கு அப்துல் காதிர்
T.M.S. அஹ்மது.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

'நன்மையின்பால் (மானிடரை) அழைத்து, நேரானதை(ச் செய்யும்படி) ஏவி, தப்பானதை(த் தவிரும்படி) விலக்கும் ஒரு கூட்டத்தினர் உங்களுக்குள் இருக்கக்கடவர். மேலும், இவர்களே ஜெய சீலராவர்'- (அல்குர்ஆன் 3:103)

அன்புடையீர்!,

    10-5-55 தேதியில் வெளிவந்த எங்களின் அறிவிப்புக்கிணங்க, நமதூர் காயல்பட்டணத்தில், ஷாபியீ முதுஹபின்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்துவதற்கு ஆகுமா? ஆகாதா? என்பதைப் பற்றி சத்தியவந்தர்களான சங்கைமிகுந்த உலமாக்களின் அரபி பத்வாவை, தமிழில் பெமாழி பெயர்த்து, தங்கள் சமூகம் சமர்ப்பிக்கிறோம். இதற்கு நல்லுதவி புரிந்த அல்லாஹ்வுக்கே சர்வ புகழும் புகழ்ச்சியும் உரித்தாகுக.

    நமதூரைப் பொறுத்தவரை, ஷாபியீ மதுஹபின்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்துவது கூடாது என்ற தீர்ப்பும், மற்றும் அது பற்றிய உண்மை விபரங்களும் தகுந்த அத்தாட்சிகளுடன் துலாம்பரமாக இதில் தரப்பட்டுள்ளன. அல்லாஹ் ரஸூலை பயந்து நிஷ்களங்கமான இருதயத்துடன் இதை நோக்கும் ஒவ்வொருவரும் இதை சரிகண்டு அங்கீகரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வுண்மையை உணர்ந்து ஹக்குத்தஆலாவை சரியான முறையில் வழிபட்டு, அஞ்சி பயந்து நடப்போமாக. அத்தன்மையிலேயே தக்வாவை கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போமாக. பாவத்திலும், அக்கிரமத்திலும் மூழ்கி, அதில் ஒருவருக்கொருவர் துணையாக இராமல் ஆண்டவன் காப்பர்றிக் கொள்வானாக. அல்லாஹ்வின் அருளக்கும் அன்பக்கும் பாததியமானவர்களாக நடப்போமாக.

      'புண்ணியத்திலும், தக்வாவிலும் ஒருவருக்கொருவர் உதவி புரிவீர்களாக! பாவத்திலும், அக்கிரமத்திலும் ஒருவருக்கொருவர் துணைபரியாதிருப்பீர்களாக! இன்னும் அல்லாஹ்வுக்கு அஞ்சுவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாகயிருக்கிறான்' (அல்குர்ஆன் 5 : 2)

     'யா அல்லாஹ்! உனது அருட்கொடை பாக்கியங்களைப் பெற்ற சான்றோர்களின் நல்வழியிலேயே எங்களை நடத்;தாட்டுவாயாக. உனது கோபத்திற்குள்ளானவர்களும், வழி கெட்டுப் போனவர்களுமுடைய வழியை விட்டு எங்களை காப்பாற்றிக் கொள்வாயாக' என்று பிரார்த்திப்போமாக.

      மிகச் சிறந்த முறையில் இந்த பத்வா- விடையை கோர்வை செய்தளித்த மேன்மைமிக்க கனம் அல்ஆலிமுல் முப்தி, பஹ்ருல் உலூம், மௌலவி, ஹாபிஸ், அல்ஹாஜ் மா.மு.க. முஹிய்யத்தீன் தம்பி ஆலிம் (ஸதர் முதர்ரிஸ், மஹ்ளரா) அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில், தங்களது சுகயீனத்தையும், சிரமத்தையும் சற்றும் பொருட்படுத்தாமல் அல்லாஹ், ரஸூலை நாடி அவர்கள் இவ்விஷயத்தில் பெருமுயற்சி மேற்கொண்டு உழைத்துள்ளார்கள். லில்லாஹ்வுக்காக என்று அவர்கள் எவ்வளவு தூரம் இவ்விஷயத்தில் கங்கணங்கட்டி உழைத்துள்ளார்கள் என்பது இதற்கடுத்து, பிரசுரிக்கப்பட்டுள்ள அவர்களது அறிக்கையிலிருந்து உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய சன்மார்க்கப் பற்றுமிக்க அலிம் முப்தி அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும். அவர்களுக்கு, கிருபையுள்ள ரஹ்மான் நீடித்த சுக ஆயுளையும், சரீர ஆரோக்கியத்தையும், ஈடிணையில்லா இத்தொண்டுக்குப் பகரமாக தனது சிறந்த நற்மூகூலிகளையும் கொடுத்தருள்வானாக. ஆமீன். மேலும் இந்த பத்வாவை சரிகண்டு, நற்சான்றுகளுடன் கையொப்பமிட்ட நமதூர், வெளியூர் உலமாக்களையும், முப்திகளையும், காஜிகளையும் நாம் மனமுவந்த நன்றியுடன் பாராட்டுகிறோம். பாரவான்களான அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் பாலித்து ஈருலகிலும் தனிப்பெரும் சிறப்புகளை கொடுத்துக் கடாட்சிப்பானாக.

உத்தம சகோதரர்களே!

   காயல்நகரின் கண்மணிகளான உலமாக்களெல்லாம் ஹக்கான விஷயத்தை தெளிவுபடுத்தி விட்டார்கள். ஆகவே, ஹக்கல்லாத பாத்திலை விட்டொதுங்கி, ஹக்கிலேயே நிலைத்து நிற்பீர்களாக. அருமை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கோரிப் பிரார்த்தித்த வந்த துஆவுடன் எமது முகவுரையை முடித்துக் கொள்கிறோம்.

       'அல்லாஹ்வே! ஹக்கை(மெய்யை) ஹக்காகவே எங்களுக்குக் கற்பித்துத் தந்து அதைப் பின்தொடர்ந்தொழுகச் செய்தருள்வாயாக! மேலம், பாத்திலை(அபத்தமானதை) பாத்திலாகவே எங்களுக்குக் காண்பித்துத் தந்து அதை விட்டொதுங்கி நடக்கச் செய்தருள்வாயாக.'
 
 காயல்பட்டணம்                            வஸ்ஸலாம்.                 

                                                                                                             இவ்வண்ணம்,
29-6-55                                                                                  

S.A.முஹம்மது ஆதம்

சாளை O.M. செய்கு அப்துல்காதிர்
T.M.S. அஹ்மது
(8-4-1955 ல் குத்பா சபையில் அமைக்கப்பட்ட செயலாளர்கள்)

கனம் அல்ஹாஜ் மௌலவி மா.மு.க. முஹிய்யித்தீன் தம்பி ஆலிமுல் முப்தி அவர்களின் அறிக்கை

முஸ்லிம் சகோதரர்களே!

      நமதூரில் ஏக காலத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்துவது ஷாபியீ மத்ஹபின்படி ஆகுமா? ஆகாதா? என்ற விசயத்தை விளக்கி வைக்கும்படி சில நண்பர்கள் என்னிடம் கேட்டதாயும் அதற்கு நான் இதுபோன்ற விசயங்களில் தலையிடவதில்லை என்று சொன்னதாயும் ஒரு வதந்தி மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கின்றமையால் அதன் எதார்த்தத்தை விளக்கி வைக்க வேண்டியது என்மீத கடமையாகிவிட்டபடியால் நானும் சில முக்கிய கனவான்களும் சம்பாஷித்துக் கொண்ட விஷயங்களை கீழே விவரித்துள்ளேன்.

      நாளது ஹிஜிரி 1374 ரஜபு மாதம் பிறை 27 செவ்வாய் கிழமை பகல் புகாரிஷ் ஷரீபு மஜ்லிஸில் நான் ஹதீஸ் சொல்லி முடித்தபின் களைப்பாறுவதற்காக அங்கு வீற்றிருந்தேன். பல நண்பர்கள் என்னின் சுகச்செய்திகளை விசாரித்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். இறுதியில் நான்கு நபர்கள்-அதாவது கனம் எஸ்.ஓ. ஹபீபு அவர்கள், கனம் எஸ்.ஏ. ஹபீபு அவர்கள், கனம் எல்.கே. செய்கு முகம்மது அவர்கள், கனம் சா.அ.லெ. றுக்னுத்தீன் சாகிபு அவர்கள் இன்னவர்கள் சோபாவில் உலாவிக் கொண்டிருந்தனர். பின் இவர்களில் கனம் எல்.கே. செய்கு முகம்மது அவர்களும் கனம் றுக்னுதீன் சாஹிபு அவர்களும் புகரிஷ் ஷரீபு கேட்டு வாயல் பக்கம் சென்று நின்று கொண்டபின், கனம் எஸ்.ஓ. ஹபீபு அவர்களும், கனம் எஸ்.ஏ. ஹபீபு அவர்களும் எனக்கு சற்று சமிபமாய் வந்து உட்கார்ந்து கொண்டு என்னை அவர்கள் சமீபத்தில் வருமாறு சமிக்கை செய்தனர். அது சமயம் நான் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருந்ததை நிறுத்தி மேற்படி இருவர்களின் சமீபத்தில் நான் நெருங்கினேன். அப்போத கனம் எஸ்.ஓ. அவர்கள் என்னை நோக்கி ஊரில் நடைபெற்று வரும் கட்சி சம்பந்தமான விஷயங்கள் யாவும் நீங்கள் கேள்வியுற்றிருப்பீர்களே என வினவினார்கள். அதற்கு நான் அவர்களை நோக்கி ஊர் சம்பந்தமான கட்சி விஷயங்களைப் பற்றி நான் கவனிப்பதுமில்லை, என் காதுக்கு எட்ட வைத்துக் கொள்வதுமில்லை. நீங்களும் கட்சி சம்பந்தமான விஷயங்களைப் பற்றி என் காதுக்கு எட்ட வைக்க வேண்டாமென கூறினேன்.

    அப்பொழுதும் அவர்கள் என்னை விடவில்லை. நமதூரின் குடிதண்ணீர் வகைக்காக 51 ஆயிரம் ரூபாய் தாராளமாய்க் கொடுத்த மகான் கனம் அ.க. அவர்களை நோட்டீஸ் மூலமாயும் மேடைப் பிரசங்கத்திலும் கேவலமான முறையில் பேசியும் எழுதியும் வருகின்றார்கள் என்று எஸ்.ஓ. அவர்கள் சொன்னார்கள். அதற்கு நான் இச் செய்திகளை என் காதுக்கு ஏற்ற வேண்டாம், கட்சி சம்பந்தமான உலக விஷயங்களில் நான் ஈடுபடுவதில்லை. ஆனதால் இவ்விஷயங்களை மீண்டும் என் காதுக்கு ஏற்ற வேண்டாம் என்று பதிலுறுத்தேன். அப்பொழுதும் கனம் எஸ்.ஓ. அவர்கள் என்னை விட்டபாடில்லை. என்னை நோக்கி நீங்கள் சுகவீனமுற்றிருப்பதால் உங்கள் முஹல்லாக்காரர்கள் உங்களை கட்சியில் இழுக்காமலிருக்கலாம். இல்லையாயின் உங்களை இழுக்காமல் பிட்டிருக்கமாட்டார்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான் பதில் கூறவில்லை. நான் பதில் கூறாவிடினும் கனம் எஸ்.ஓ. அவர்கள் தங்கள் பேச்சை துடர்ந்து பேசினார்கள். அதாவது இந்த கட்சிக்காரர்கள் செய்துவரும் காரியங்களைக் கவனிக்குமிடத்து கொதுபாவைக்கூட பிரித்துவிடலாம் என்ற நோக்கம் எங்களுக்கேற்படுகிறது, ஆயினும் நாங்கள் அத சம்பந்தமாய் ஆர அமர அலோசனை செய்து முடிவுக்கு வரவேண்டமென்ற நோக்குடன் நிறுத்தி வைத்திருக்கின்றோம் என்று சொன்னார்கள். ஆனால் இது வினாவின் தோரணையாகவோ அல்லது என் அபிப்பிராயத்தை கேட்கும் முறையாகவோ இல்லாமையால் நான் எவ்வித பதிலும் கூறவில்லை. இத்துடன் புகாரிஷ் ஷரீபு தைக்காவில் எங்கள் சம்பாஷனை முடிவுற்றது.

     அதன்பின் நாளது ஹிஜ்ரி 1374 ஷஃபான் பிறை 1 (26-3-55) சனிக்கிழமை மாலை புதிய ஜும்ஆ நடத்தும் விஷயமாய் புதுப்பள்ளியில் கூட்டம் கூடியதாயும் மேற்படி ஷஃபான் பிறை 7 (1-4-55) வெள்ளிக்கழமை முதல் புதுப்பள்ளியில்ள புதிய ஜும்ஆ ஆரம்பிப்பதென முடிவு செய்யப்பட்டிருப்பதாயும் நான் கேள்வியுற்றதும் உடனடியாக மூன்று நபர்களிடம் பேசவேண்டுமென்ற எண்ணம் எனக்கேற்பட்டது. ஆனால் தூத்துக்குடி சிலாபத்தை முன்னிட்டு அன்னவர்கள் தூத்துக்குடி சென்றுவிட்டமையால் நான் உடனடியாகப் பேச சந்தர்ப்பமில்லாமலாயிற்று. ஆனால் மேற்படி ஷஃபான் பிறை 5 (30-3-55) புதன்கிழமை மாலை அன்னவர்கள் ஊர் வந்துவிட்டதாய் நான் அறிந்ததும் ஷஃபான் பிறை 6 (31-3-55) வியாழக்கிழமை காலை 10 மணி சுமாருக்கு அம்மூவர்களையும் சந்திக்கும் நோக்கமாய் என் வீட்டை விட்டுப் புறப்பட்டு கனம் எஸ்.ஓ. ஹபீபு, எஸ்.ஏ. ஹபீபு, பி.எஸ். அப்துல்காதர் நெய்னா இவர்கள் கூடியிருக்கும் ஸ்தலத்திற்குச் சென்றேன். அம்மூவர்களும் என்னை வரவேற்றார்கள். நான் அவர்களை நோக்கி நாளை நடைபெறப் போகிறதாய்க் கேள்வியுற்ற ஜும்ஆ சம்பந்தமாய் உங்கள் மூவர்களிடமும் சம்பாஷிக்கும் நோக்குடனேயே நான் வந்திருக்கின்றேன். ஆனால் யாருடைய தூண்டுதலோ அல்லது யாருடைய சிபார்சைக் கொண்டுமோ நான் வரவில்லை. என் சொந்த சுயேட்சையின் மீதே நான் வந்திருக்கிறேன் என்று கூறி என் சம்பாசணையை ஆரம்பித்தேன். அதாவது உங்கள் முஹல்லாவில் நாளை நீங்கள் ஜும்ஆ நடத்தவிருப்பது உண்மைதானா? என வினவினேன். ஆம். என்று பதிலுரைத்தனர். அப்படியாயின் உலமாக்கள் அனுமதி தந்தார்களா? என வினவினேன். ஆம். கனம்.சா. சாகுல் ஹமீது ஆலிம் அவர்களும், இன்னும் சில உலமாக்களும் அனுமதி தந்திருக்கின்றார்கள் என பதிலுரைத்தனர். சில உலமாக்கள் என்பவர்கள் யார் என்று என வினவினேன். நமதூர் வாசிகள்தான் என பதிலுரைத்தனர். அப்படியாயின் பத்வா தந்தார்களா? என வினவினேன். தரவில்லை என்று பதில் சொன்னதுடன், இது சம்பந்தமாக உங்கள் அபிப்ராயம் என்னவென்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான் நீங்கள் புதிதாக ஜும்ஆ நடத்தவிருப்பதின் நோக்கம் என்னவென்று வினவினேன். அதற்கு கனம் எஸ்.ஓ. ஹபீபு அவர்கள் சொன்ன பதிலாவது:

       'நாங்கள் யார் மீதும் குறோதம் கொண்டோ அல்லது பகைமையையொட்டியோ எங்கள் முஹல்லாவில் ஜும்ஆநடத்த உத்தேசிக்கவில்லை. ஆனால் எங்கள் தெருவாசிகள் ஜும்ஆவுக்குச் செல்வதில் ரொம்ப பொடுபோக்காக இருப்பதினால் எங்கள் முஹல்லாவிலுள்ள அநேகர்களுக்கு ஜும்ஆ கிடைக்காமலிருப்பதை யொட்டியும், இன்னும் சிலகாலம் சென்றால் மகுதூம் தெருவார்கள் அறவே ஜும்ஆவை விட்டு விடுவார்கள் என்பதை உத்தேசித்தும், எங்கள் முஹல்லாவாசிகள் அனைவர்களுக்கும் ஜும்அஆ கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தோடும்தான் இந்த புதிய ஜும்ஆ ஆரம்பிக்கின்றோமே தவிர வேறு எவ்வித நோக்கமுமில்லை என்றார்கள். அப்படியாயின் நீங்கள் புதிய ஜும்ஆ நடத்துவது கூடாதென்றும், (ஹறாம்) என்றும் ஆண்டவனின் கஹ்ர் உண்டாகுமென்றும்  கூறினேன். மேலும், நான் உலமாக்கள் சபையைக் கூட்டி ஒரு தீர்மானம் செய்யும் வரை நீங்கள் புதிய ஜும்ஆவை நிறுத்தி வையுங்கள். உலமாக்கள் கூடி முடிவு செய்தபின் அந்த முடிவின்படி நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறினேன். அதற்கவர்கள், ஏற்கனவே உலமாக்களிடம் அனுமதி பெற்றிருப்பதாயும், தாங்களும் நடத்த முடிவு செய்துவிட்டதாயும், அதை நிறுத்துவதற்கில்லை என்றும் சொல்லி விட்டார்கள். நான் உடனே அவர்களை நோக்கி அல்லாஹ்வின் கஹ்ர் என்மீது தாவாமலிருப்பதற்காக நான் விஷயத்தை உங்களுக்கு அறிவித்துவிட்டேன். எனக்கு தவுலத்தும், ஸல்தனத்தும் இருக்குமேயாயின் நான் இந்த ரூபத்தில் வராமல் உங்களை அடக்கி வைக்கின்ற முறையில் வந்திருப்பேன். ஆனால் அத்தன்மை இல்லாமையால் நான் ஒரு ஆலிம் என்ற முறையில் உங்களிடம் வந்து ஹுக்மை அறிவித்துவிட்டேன். இப்பொழுது நமக்குள் என்ன சம்பாஷனைகள் நடைபெற்றதோ அதை மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளவாறு என் சொந்த செலவில் நோட்டீஸ் அடித்து வெளியிடுவேன் என்று கூறினேன். அதற்கவர்கள் உங்களுக்கு எதிர்ப்பு நோட்டீஸ் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கனம் பி.எஸ். அப்துல்காதர் நெய்னா அவர்கள் என்னிடம் வினவினார். அதற்கு நான் குதர்க்கவாதமாக இருந்தால் பதில் கொடுக்கமாட்டேன். நியாயமான முறையில் விளக்கம் கேட்டிருந்தால் பதில் கொடுப்பேன் என்று பதிலுரைத்ததுடன், என்னைப் பற்றி ஏதும் இழிவான பிரசுரங்கள் வெளிவந்தாலும் நான் அவைகளைப் பெருள்படுத்தப் போவதில்லை. ஏனெனில் காதியானி பிரச்சனை காலத்தில் என்னைப் பற்றி பல கேவலமான நோட்டீஸ்கள் வெளிவந்தும் என் உள்ளத்தை துளும்ப வைத்திடவில்லை. இதுபோன்ற விஷயங்களில் என் உள்ளம் துளும்பப் போவதுமில்லை என்றும் கூறியதும் எங்கள் சம்பாஷனை முடிவற்றது.

இப்படிக்கு,
மா.மு.க.முஹிய்யதீன் தம்பி.
 
குறிப்பு: புதுப்பள்ளி ஜும்ஆ துவக்கப்பட்ட சமயம் அதிகமான முஸ்லிம்களுக்கு ஜும்ஆ பிரார்த்தனை கிடைக்கச் செய்வதே இப்புதிய ஜும்ஆவின் முக்கிய நோக்கமென்று ஜனாப். P.S. அப்துல் காதிர் கூறினார் என்ற (ஏப்ரல் 5உ) அறிக்கை 'சுதேசமித்திரன்' தினசரி பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

காயல்பட்டணம்  ஜும்ஆ பத்வா

மொழி பெயர்ப்பு

வினா:-

     சங்கைக்குரிய ஷாபீயீ மதுஹபுடைய உலமாக்களே! உங்கள் மகிமை நித்தியமும் நிலைக்குமாக! இதனடியில் குறிப்பிட்டுள்ளபடி ஊரமைப்பும், நிலைமையும் கொண்டுள்ள காயல்பட்டணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்துவது பற்றி உங்களுடைய மேலான தீர்ப்பு என்ன?

காயல்பட்டணத்தின் அமைப்பும், நிலைமையும்

இவ்வூரின் நீளம் (கிழ, மேற்கு) சுமார் ஆயிரத்தெட்டு நூறு முளம், இங்கிலீஷ் மைல் கணக்கில் அரை மைல் இருக்கிறது. இவ்வூரின் மத்தியிலோ அல்லது எல்லையிலோ ஆறு நதி போன்ற தங்குதடை எதுவும் கிடையாது. ஊரின் நடுமத்தியில் பூர்வீகமான இரு ஜும்ஆ பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுக்கு பெரிய பள்ளி எனவும், மற்றதற்கு சிறு பள்ளி எனவும் பெயர். இவ்வூர் வாசிகள் அத்தனைபேர்களும் ஷாபியாக்களே. இந்நிலைமையில் அவர்களனைவரும் ஒரு வாரம் பெரிய பள்ளியிலும், மற்றொரு வாரம் சிறு பள்ளியிலும் ஒருங்கே கூடி, இட நெருக்கடியோ, ஜனக்கசக்கமோ அல்லது கொலைபாதகமோ, வம்புத்தனமோ ஏதுமின்றி ஜும்ஆவை அனுஷ்டித்து வருகிறார்கள். இத்தன்மையாக ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகளாக எவ்வித எதிர்ப்போ, அமைதிப் பங்கமோ இன்றி நடைபெற்று வருகிறது. தற்போது இவ்வூர் எல்லையோரத்திலிருக்கும் ஒரு சிலர்- ஊர் ஜனங்களோடு அன்னியோன்னியமாக அண்டிப் பழகியம், நிர்ப்பயமாக கலந்துறவாடியும், சுப துக்க வைபவங்களில் பங்கு பெற்று கல்யாண வீடுகளிலும், துக்க வீடுகளிலும் ஒன்று கூடி அருந்தியும் சர்வசாதாரணமாக பரஸ்பரம் பழகி வரக்கூடிய அவர்கள்-தங்களுடைய மஹல்லாவில் ஒரு ஜும்ஆவை உண்டுபடுத்த வேண்டும் என்பதற்காக பிரிந்து- தங்களுடைய மஹல்லாவில் ஜும்ஆ நடைபெற்றால் தங்களுக்கு மிகச் சுலபமாயிருக்கும் எனவும், ஊர் மத்தியிலுள்ள ஜும்ஆப் பள்ளிக்குப் போவதென்றால் தங்களுக்கு பொடுபோக்கின் காரணத்தால் சுலபமாகப் போவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை எனவும் காரணம் சொல்லிக் கொண்டு, தங்களுடைய மஹல்லாவில் புதிதாக ஓர் ஜும்ஆவை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்.

மேலே கண்டபடியுள்ள நிலைமையில், இவ்வூரில் (காயல்பட்டணத்தில்) ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்துவது ஆகுமா? ஆகாதா?

இவ்வூர் எல்லையோரத்திலிருக்கும் அச் சிலர் தாங்கள் சொல்லிக் கொள்கிற(மேலே குறிப்பிட்ட) அக் காரணத்தை முன்னிட்டு, பூர்வீகமான அசல் ஜும்ஆவை விடுத்து, அவர்களுடைய மஹல்லாவில் மற்றொரு ஜும்ஆ நடத்த ஆகுமா? ஆகாதா?

ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆக்களை நடத்துவதற்கு ஆகும் என்று அனுமதிக்கக் கூடிய காரணங்கள் எவை?

ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆவின் நிலைவரம் எப்படி?

ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்தும் விஷயம் இமாம் (ஸுல்தான்) அல்லது அவருடைய பிரதிநிதியுடைய உத்தரவைப் பொறுத்து நிற்கிறதா? அல்லவா?

இவை பற்றி(மார்க்கத் தீர்ப்பு) விடைகளை அளிப்பீர்களாக. அல்லாஹுத்தஆலா உங்களுக்கு சிறந்த நற்கூலியைத் தருவானாக.

வினா விடுத்தவர்கள்:- காயல்பட்டணம் ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்காக விஜயந் தந்திருந்த அனைவருமாவார்.

விடை:-

'அல்லாஹ்வே நேர்மைக்கு வழி காட்டி'

வினாவில் குறிப்பிடப்பட்டுள ஊரில் (காயல்பட்டணத்தில்) ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்துவது ஆகாது. ஏனெனில், ஷாபீயீ மதுஹபுடைய இமாம்கள் ஆகும் என்று அனுமதியளிக்கத் தகுந்த காரணங்கள் எதுவும் அதில் கிடையாது. 'தங்களுடைய மஹல்லாவில் ஜும்ஆ நடைபெற்றால் தங்களுக்கு மிகச் சுலபமாயிருக்குமெனவும், ஊர் மத்திபத்திலுள்ள ஜும்ஆப் பள்ளிக்கு போவதென்றால், பொடுபோக்கின் காரணத்தால் சுலபமாகப் போவதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் காரணம் கூறிக் கொள்வதைப் போன்ற ஒரு காரணத்தை ஷாபீயீ மதுஹபுடைய இமாம்கள் யாரும் சொன்னதாக இல்லை. ஒரே தலத்தில் எல்லோரும் ஏகமாய் சேகரமாக முடியாமல் பரம சங்கடமாக இருந்தால்(ராஜ்ய அதிபர்) இமாமுடைய அல்லது அவரின் பிரதிநிதியுடைய அனுமதியின் மீது மறு ஜும்ஆ நடத்தலாம் என அவர்கள் அனுமதித்திருப்பதாக கிதாபுகளில் வரையப்பட்டுள்ளன.

ஆகவே, காயல்பட்டணத்தில் (அல்லாஹ், பொல்லாங்குகளை விட்டு அவ்வூரை பாதுகாப்பானாக) இரு ஜும்ஆக்கள் ஒன்று முந்தியும், மற்றது பிந்தியும் நடைபெறுமானால் முந்தியதே (ஸஹீஹ்) சரியான ஜும்ஆ, பிந்தியது (பாத்தில்) அபத்தம் என்றாகும். இரு ஜும்ஆக்கள் ஏக காலத்தில் நடைபெற்றாலும்- ஏக காலத்தில் நடைபெற்றதோ அல்லது முன்பின்னாக நடைபெற்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டாலும் (வக்த) சந்தர்ப்பம் இருந்தால் ஜும்ஆவை திரும்ப ஆரம்பிக்க வேண்டும். இரண்டிலொரு ஜும்ஆ முந்தி நடைபெற்றதாகத் தெரிகிறது, ஆனால், அது எந்த ஜும்ஆ என்று தெளிவாகாமலிருந்தாலும்-அல்லது முந்திய ஜும்ஆ இன்னது எனத் தெளிவாகியே இருந்தது, பின்பு, அதுபற்றி மறதியாகிவிட்டாலும் லுஹரையே தொழ வேண்டும்.

'முஹத்தபு' கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளவை.

'ஏராளமான பள்ளிவாசல்கள் இருக்கக் கூடிய எவ்வளவு பெரிய ஊராயிருப்பினுங் கூட ஒரேயொரு மஸ்ஜிதிலேயே அன்றி ஜும்ஆ நடத்தப்படமாட்டாது' என்று இமாம் ஷாபீயீ ரலியல்லாஹு அன்ஹு கூறி இருக்கிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோ, அவர்களுக்குப் பின்புள்ள கலீபாக்களோ ஓரில் ஒரு இடத்திற்கதிகமாக ஜும்ஆ நடத்தவில்லை என்பதே இத்தீர்ப்புக்கு மூல அத்தாட்சியாகும். ஆனால், நமது (மதுஹபு) தோழர்கள் பக்தாதின் விஷயத்தில் அபிப்பிராய வேற்றுமை பூண்டுள்ளனர்.

'அது (பக்தாது) மிகப் பெரிய பட்டணம். அங்குள்ளவர்கள் அத்தனை பேரும் ஒரே இடத்தில் சேகரமாவதென்றால் பரம சங்கடமாக இருக்கும். ஆகையால், அங்கு பல இடங்களில் ஆகும்' என்று அபுல் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு உரைத்துள்ளர்கள்.

'அது (பக்தாது) இரண்டு பெரிய பட்டணத்தைப் போல காட்சியளிக்கிறது. அதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜும்ஆ நடத்துவதற்கு ஆகும். அதற்குமேல் கூடாது.' என்று அபுத்தீபு இப்னு ஸலமா ரலியல்லாஹு அன்ஹு உரைத்துள்ளார்கள்.

'அது (பக்தாது) முன்னர் துண்டு துண்டாகப் பிரிந்துபோன கிராமங்களாக இருந்தது. அதன் ஒவ்வொரு பகுதியிலும்(முன்பு) ஜும்ஆ நடைபெற்று வந்திருக்கிறது. பின்பு, குடியேற்றம் உண்டாகி(பிரிந்திருந்த) அவை ஒட்டிச் சேர்ந்து விட்டன. ஆகவே, பூர்வீகத் தன்மையை அனுசரித்து அதன் தீர்ப்பு (ஹுக்மு) தரிபட்டுள்ளது' என்று இமாம்களில் சிலர் கூறி இருக்கிறார்கள்.  (முஹத்தபு முடிவு)

இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஷாஹுல் முஹத்தபில்.

'ஒரு ஊரில் இரண்டு அல்லது பல ஜும்ஆக்கள் நடத்துவது பற்றி மதுஹபுடைய உலமாக்கின் அபிப்ராயங்கள்' என்ற பகுதியில் காணப்படுவது:-

ஒரு ஊரில், அங்குள்ள ஜனங்கள் ஒருங்கே சேகரமாவதற்கு (இட நெருக்கடி, ஜன நெருக்கம் போன்ற) சங்கடம் இல்லாதிருக்கின்ற நிலைமையில், இரு ஜும்ஆக்களை நடத்துவதற்கு ஆகாது என்பதே முன் கூறிய பிரகாரம் நமது (ஷாபீயீ) மதுஹபுடைய தீர்ப்பாகும். இபுனு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், இமாம் அபுஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இத்தன்மையில் சொல்லியிருப்பதாக இப்னு முன்திர் ரலியல்லாஹு அன்ஹு எடுத்தியம்பியுள்ளார்கள்.

'அவ்வாறு (இரு ஜும்ஆ) நடத்துவது பக்தாதில் மாத்திரமே ஆகும், மற்ற இடத்தில் ஆகாது' என்று அபூ யூஸுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்துள்ளார்கள். 'ஒரு ஊர் இரு பகுதிகளாக இருக்குமேயானால் ஒவ்வொரு பகுதியிலும் ஜும்ஆ நடத்துவதற்கு ஆகும். அவ்வாறு இல்லாவிடில் ஆகாது' என்று அபூயூஸுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி இருப்பதாக பிரசித்தமாகியுள்ளது.

'இரு பகுதி இருப்பினும் சரி-இல்லாவிட்டாலும் சரி, இரு ஜும்ஆ நடத்த ஆகும்' என்று முஹம்மது இபுனுல் ஹஜன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

'ஒரு நகரத்தில் பல ஜும்ஆக்கள் நடத்துவது ஆகும்' என்று அதாஃவும், தாவூதும் (ரலியல்லாஹு அன்ஹு) உரைத்துள்ளார்கள்.

'பக்தாது, பஸரா போன்ற மிகப் பெரிய பட்டணஹ்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ தேவை என்ற அவசியம் ஏற்படுமாயின் இரண்டோ அல்லது அதற்கதிகமானதோ நடத்துவதற்கு ஆகும். அத்தகைய அவசியம் இல்லாவிடில் ஒரேயொரு ஜும்ஆவுக்கு மேல் நடத்துவது ஆகாது' என்று இமாம் அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு சொல்லியுள்ளார்கள்.

'இப் பிரச்சனை பற்றி இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு சொன்ன எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை' என்று அப்தரீ ரலியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள்.

'இபுனு ஜுரைர் ரலியல்லாஹு அன்ஹு முதலியவர்களைப் போன்ற, அபிப்பிராய பேத வகை(கிலாபு மஸ்அலாக்)களை எடுத்துரைப்பவர்கள் அனைவரும் இவ்விஷயத்தில் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு உடைய அபிப்பிராயம், நமது(ஷாபீயீ மதுஹபுடைய) அபிப்பிராயம் போன்றுள்ளது என்றும், இமாம் ஸாஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (அபூஹனீபா உடைய அபிப்பிராயம்) முஹம்மது(இபுனுல் ஹஸன்) ரலியல்லாஹு அன்ஹு உடைய அபிப்பிராயம் போன்றுள்ளது என்றும் கூறியிருப்பதாக ஷைகு அபூஹமிது ரலியல்லாஹு அன்ஹு எடுத்துரைத்துள்ளார்கள்.

நாம் ஊன்றுதல் பிடிக்க வேண்டிய அத்தாட்சியாதெனில், இக் கிரந்த (முஹத்தப்) ஆசிரியரும், அவருடைய அருமைத் தோழர்களும் எடுத்துரைத்துள்ள விஷயமேயாகும். அஃது யாதெனில், நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களும் அவர்களுpடைய பிரதிநிதிகளான குலபாயே ராஷிதீன்களும், அவர்களுக்குப் பின்பு வந்த ஸஹாபாக்களும், அவர்களுக்குப் பின்பு வந்தவர்களும்(தாபியீன்களும்), ஒரு ஊரில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் ஜும்ஆவை நடத்தவே இல்லை. ஆனால், அவர்களோ திறந்த வெளியிலும், சிறு பட்டணத்திலும் ஈத்(பெருநாள்) தொழுகையை (பல இடங்களில்) நடத்தி இருக்கிறார்கள் என்பதே.  – (ஷரஹுல் முஹத்தப் முடிவு)

இக்னாஃ என்ற நூலுக்கு அல்லாமா புஜைரமீ ரலியல்லாஹு அன்ஹு எழுதிய ஹாஷியாவில் காணப்படுவது

ஒரே இடத்தில் சேகரமாக முடியாத் தன்மையிலுள்ள கஷ்டம் என்பது பெருங் கூட்டத்தினாலுமுண்டாகும். அல்லது கொலை பாதகமோ-அல்லது உபாப் என்ற நூலிலும், அதன் விரிவுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கிணங்க ஊர் எல்லையைச் சார்ந்திருப்பவருக்கு அவ்வூரில் (பாங்கு சொல்லும்) சப்தம் எட்டமுடியாத நிலைமையில் நெடுந்தொலை தூரமோ இருப்பினும்(சேகரமாக முடியாத் தன்மையிலுள்ள) கஷ்டம் என்பது உண்டாகும் என 'அன்வார்' என்ற கிரந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உஜ்ஹூரி ரலியல்லாஹு அன்ஹு உடைய விளக்கவுரை

ஊர்வாசிகளிடையே கொலைபாதகம் ஏற்பட்டுவிடுமாயின், நாற்பதுபேர் வரையிலுள்ள ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஜும்ஆ கடமையாகும். ஊரின் எல்லைகள் பெருந்தூரமாக இருக்குமேயானால், அத்தகைய தொலைவில் வசிப்பவன் ஊரிலிருந்து பாங்கு சொல்லப்படும் தொனியை கேட்க முடியாதபடியும், அவன் ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றிய பின்பு தனது ஸ்தலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றால் ஊருக்கு வந்து ஜும்ஆவை பெற்றுக் கொள்ள முடியாதபடியும் உள்ள தொலை தூரமாக இருநதால்(இந்த ஜும்ஆவுக்கு வரவேண்டியதில்லை)- அவன் ஸுப்ஹுக்கு முன்பே அந்த ஸ்தலத்திலிருந்து புறப்பட வேண்டுமென்பதில்லை. ஏனெனில், ஸுப்ஹுக்குப் பின்புதான் ஜும்ஆ விதியாகிறது-அப்போது(அவனிருக்கக் கூடிய)அத்தொலைப் பிரதேசத்தில் நாற்பது பேர்கள் சேர்வார்களாயின் அவர்கள் அங்கு ஜும்ஆ தொழுவார்கள். இன்றேல் லுஹரைத் தொழுவார்கள். ஊருக்குள்ளாக இருந்துக் கொண்டிருப்பவன் விஷயத்தில் பாங்கு சப்தத்தைக் கேட்க முடிகிறதா என்ற நிபந்தனை கிடையாது. ஆனால், அந்நிபந்தனை ஊருக்கு வெளிப்புறமாக உள்ளவன் விஷயத்தில்தான் என்பது ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. –(புஜைரமீ ரலியல்லாஹு அன்ஹு ஹாஷியா முடிவு.)

தஹ்ரீர் எனும் நூலுக்கு ஷைகு ஷர்கவீ ரலியல்லாஹு அன்ஹு உடைய ஹாஷியாவில் உள்ள விளக்கம்.

ஜனங்கள் ஒருங்கே சேகரமாக முடியாத கஷ்டம் ஏற்பட்டாலேயொழிய எனபதைப் பற்றி விளக்குவதைத் தொடர்ந்து கூறப்படுவது:- ஏராளமான ஜனங்கள் பெரும் நெருக்கடியாகக் கூடுவதாலோ அல்லது அவர்கள் மத்தியில் ஹராம், ஸஃது என்ற கோஷ்டிகளுக்கு மத்தியில் ஏற்பட்டது போன்ற கொலைபாதகத் தன்மை உண்டாகியிருந்தாலோ அல்லது ஊர் எல்லையிலிருந்து பாங்கு சப்தம் அதற்குரிய நிபந்தனைகளுக்கிணங்க எட்டாத அளவுக்கு நெடுந்தொலைதூரம் இருந்தாலோ ஒரே இடத்தில் ஒருங்கே சேகரமாக முடியாத கஷ்டம் என்பதாகும்.  (ஷைகு ஷர்காவீ  உடைய ஹாஷியா முடிவு)

பாபள்லு ரலியல்லாஹு அன்ஹு உடைய ஷாஹுக்கு, குர்தீ ரலியல்லாஹு அன்ஹு எழுதிய ஹாஷியாவில் உள்ளது:-

(பிரஸ்தாப) கஷ்டம் என்பதற்குச் சரியான விளக்கக் கட்டுப்படு யாதெனில், துஹ்பாவில் கூறப்பட்ட பிரகாரம், வழக்கத்தில் தாங்கிக் கொள்ள முடியாத அவ்வளவு சங்கடமான கஷ்டம் என்பதே. (ஹாஷியா குர்தீ முடிவு)

ஷைகு இபுனு ஹஜர் இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பதாவா குப்ராவில் காணப்படுவது:-

கீழ்க்கண்ட விஸயங்களை இபுனு ஹஜர் இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்டது:-

ஒரு ஊரில் புராதனமான இரு ஜும்ஆப் பள்ளிகள் உள்ளன. அவற்றிலொன்று மிகப் புரதனமானதாகவும், ரொம்ப சின்னதாகவும் உள்ளது. ஸுல்தானோ அல்லது அவரது பிரதிநிதியோ அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்தக் கூடாதென்று அவ்வூர்வாசிகளுக்கு கட்டளையிட்டார். ஆனால், அவர்கள் அந்த உத்தரவுக்கு மாறாக நடந்தனர். (ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்தினர்) ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்துவது ஆகுமான காரியமே என்று (தங்களின் மதுஹபுப் பிரகாரம்) நிர்ணயங் கொண்டவர்கள் அவர்களிடையே இருந்திருப்பினுங்கூட, அவர்களுடைய அத்தொழுகை நிறைவேறுமா? அவர்கள் இமாமுக்கோ(ஸுல்தனுக்கோ) அல்லது அவருடைய பிரதிநிதிக்கோ கட்டுப்படாமல் மாற்றமாக நடந்தார்கள் என்பதற்காக, தொழுகையை விட்ட குற்றம் என்று அவர்களை சிரச்சேதம் செய்வதற்கும், அவர்களது பொருட்களை கைப்பற்றுவதற்கும் கூடுமா? அதனால் அவர்கள் கெட்ட பாபிகளாகி விடுவார்களா? அவர்களின் சாட்சியத்திற்கு மதிப்பே இல்லாமலாகிவிடுமா? மேலே குறிப்பிட்ட இரு ஜும்ஆ மஸ்ஜிதுகளில் ஒன்றிலுள்ள இமாம், ஹம்பலி மதுஹபைத் தொடர்ந்திருந்தவர், நான் இமாம் அஹ்மது உடைய (ஹம்பலி) மதுஹபை றெம்பவும் அருவறுப்பாகக் காண்கிறேன். ஆகவே அதை வெறுத்து கை கழுவிவிட்டேன் என்று கூறி, பின்பு மாலிகு மதுஹபில் மாறிக் கொண்டார். இத்தகைய செயலினால் அவர் மாலிக்கு மதுஹபைப் பின்பற்றியவராகி விடுவாரா? உலகப்பயனைக் கருதி அவர் மதுஹபு மாறி இருந்தால் அது கூடுமா? அவருடைய இமாமத்து(தொழுகை)கூடுமா?

தங்களிடம் வினவப்பட்ட மேற்கணட வினாக்களுக்கு இமாம் இபுனுஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி  நன்கு துலாம்பரப்படுத்தி ஆணித்தரமாக பதிலுரைத்தார்கள். அவை வருமாறு:-

ஒன்றுக்கு றே;பட்ட ஜும்ஆ நடத்துவது ஆகாது என்பதே இமாம் ஷாபீயீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடையவும், மற்றும் பரவான்களான உலமாக்களில் பெரும்பாலருடையவும் தீர்ப்பாகும். ஆனால் ஒருங்கே அனைவரும் சேகரமாவதற்குப் போதிய விசாலமான இடம் இவ்வூரில் இல்லாதபடியால், மற்றொன்று தேவை என்ற தவிர்க்க முடியாத அவசியம் ஏற்பட்டால் மாத்திரம் அவசியத்திற்குத் தக்கபடி ஒன்றுக்கு மேல் நடத்துவது ஆகும். மேலும், ஜும்ஆ தொழுவதற்கு மஸ்ஜிதுதான் வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. மஸ்ஜிது அல்லாத ஓரிடம் ஊர் ஜனங்கள் அத்தனை பேரும் ஒருங்கே சேகரமாகித் தொழ விசாலமுடையதாக இருப்பின், ஜும்ஆவை அங்கே நடத்துவது கடமையாகிவிடும்.

அத்தியாவசியத் தேவையில்லாதவண்ணம், ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடக்குமேயானால், அவற்றில் முந்தியதுதான் சரியான ஜும்ஆவாகும். முந்தியது என்பது இஹ்ராமுடைய தக்பீர் கட்டுவதில் எது முந்துகிறதோ அதுவே என்பது கவனிக்கப்பட வேண்டும்.

இமாமோ(ஸுல்தானோ) அல்லது அவருடைய பிரதிநிதியோ பாபமற்ற காரியத்தை ஏவுவார்களேயானால் அதற்குக் கட்டுப்பட்டு நடத்தல் கட்டாயக் கடமையாகும். அதற்கு மாற்றமாக நடப்பவனுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அவனுக்குக் கிடைக்கும் அத் தண்டனையைக் கண்டு அவனைப் போன்ற மற்ற ஆசாமிகள் பயந்து நடுங்கும் அளவுக்கு அது கடுமையானதாக இருத்தல் வேண்டும்.

மார்க்கச் சட்டதிட்ட அடிப்படைகளின் ஞானம் பெறாத சாதாரணப் பேர்வழிக்கு, அவன் விருப்பம் போல ஷாபியீ மதுஹபையோ, மாலிகு மதுஹபையோ அல்லது வேறெந்த மதுஹபையோ பின்தொடருவது ஆகும்தான். ஆனால், அவ்வாறு தொடருவது இபாதத்தில் இலேசைக் கருதியோ அல்லது எந்த மதுஹபுடைய இமாமை அவன் பின்பற்றி இருக்கிறானோ அந்த இமாம் சொல்லி இராதவற்றையும் கையாண்டு இரண்டுங் கெட்டான் நிலைமையில் ஆகியோ இருந்தால் அது கூடாது.

ஆகவே, மேலே விளக்கிய சட்டதிட்டங்களின் மூலம் கீழ்கண்ட உண்மைகள் நிதரிசனமாகின்றன.

ஷாபீயீ இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பின்பற்றிய ஊர்வாசிகள், தங்கள் ஊரில் எவ்விடத்தில் இடம்பாடுள்ளதோ அங்கு அனைவரும் ஒன்றுகூடி அந்த ஒரே இடத்தில்தான் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற வேண்டியது வாஜிபான கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்து (பஸாது) அபத்தத் தொழுகையை தொழ முற்படுவார்கNளுயானால், அவர்கள் குற்றவாளிகளாகவும், கெட்ட பாபிகளாகவும் ஆகிவிடுகிறார்கள். மேலும், அவர்களது சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. அவர்களுக்கு(ஸுல்தான்) இமாம் மிகமிகக் கடுமையான சிட்சைகளைக் கொண்டு தண்டனை கொடுப்பார்.  பின்னால் சொல்லப்படுகிற நிலைமை உண்டானாலொழிய, இதற்காக அவர்களைச் சிரச்சேதம் செய்வதற்கு இடமில்லை. அதாவது, அவர்கள் ஜும்ஆ தொழுவதை விட்டிருக்கும் தன்மையில்-அதற்கு பதிலாக நாங்கள் லுஹரைத் தொழுது கொள்வோம் என்று சொன்னாலும் சரியே!-ஜும்அவைNயு தொழும்படியாக அவர்களுக்கு இமாம்(ஸுல்தான்0 கட்டளையிடுவார். அவருடைய கட்டளையை அவர்கள் மீறி மாற்றமாக நடந்தால், தொழுகையை விட்டவனை (தாரிகுஸ்ஸலாத்தை) கொல்லப்படுவது போல, அந்நிபந்தனையின்படி அவர்களை சொல்லப்படும். ஜும்ஆவையோ அல்லது மற்ற பருளான எந்தத் தொழுகையையோ விட்டு சும்மாயிருப்பது ஆகும் என்று அவர்கள் கூற முற்பட்டாலொழிய அவர்களது சொத்துக்களகை; கைப்பற்றப்படமாட்டாது. ஏனெனில், அவ்வாறு அவர்கள் கூறிவிட்டால் மார்க்கத்தை விட்டு மாறிய முர்த்தத்துகாகி விடுவார்கள். அதனால், அவர்களை சிரசாக்கினையும் செய்யப்பட்டு அவர்களது சொத்துக்களை பொதுநிதி(பைத்துல்மால்)யில் சேர்க்கப்பட வேண்டியதாகிவிடும். மேலே கூறப்பட்ட அத்தகைய காரணங்களுண்டாகாமல் அவர்களை சிரசாக்கினை செய்வதும், பொருளைக் கைப்பற்றுவதும் கூடாது. ஆனால்,(ராஜ்ய அதிபர்) இமாமுக்கோ அவரது பிரதிநிதிக்கோ கட்டுப்படாது. மாற்றமாக நடப்பார்களாயின் அரசாக்கினையை மீறிய தோஷிகள் என்ற குற்றச்சாட்டின் நிபந்தனைப்படி கொல்லப்படுவார்கள்.

(பள்ளிவாசலின்) இமாம் மாலிக்கு மதுஹபைச் சார்ந்திருக்கிறாரா அல்லது மற்ற மதுஹபைச் சார்ந்திருக்கிறாரா என்பதைக் கவனிக்க வேண்டியது பிரதானமில்லை. ஆனால், ஒரு ஊரில் பல ஜும்ஆக்கள் நடத்த ஆகும் என்று அனுமதிக்கும் மதுஹபுடையவர்கள் அவ்வாறு நடத்தும்போது அவ்வூரிலள்ள ஷாபீயீ மதுஹபைச் சார்ந்தவர்கள் மீது கடமையாதெனில், அந்த(பல) ஜும்ஆக்களில் எது முந்தி நடக்கிறதோ அதில் சேர்ந்து தொழுவதே!

(ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆக்கள் நடக்கும்போது) 1)அவற்றில் முற்தியது எது என அறியப்படாவிடினும், 2)அல்லது யாவும் முன்பின்னின்றி ஒன்றுபோல நடைபெற்றதாக அறியப்படினும், 3) அல்லது அவற்றில் ஏதோ ஒன்று முந்திவிட்டதாக விளங்கி, ஆனால் அது எது எனத் தெரியாவிடினும் 4) அல்லது அவ்வாறு முந்தியது  எது என்று தெரிந்திருந்து, ஆனால் பின்பு அது பற்றி குறிப்பு மறதியாகிவிடினும் 5) அல்லது அவை முன், பினனாக நடைபெற்றது பற்றியோ சந்தேகம் ஏற்படினும் (மேலே சொல்லி வந்த நிலைமைகளில்) மூன்றாவது, நான்காவது நிலைமைகளைத் தவிர மற்ற நிலைமைகளில், அவர்கள் மீது இரண்டாவது தடவையாக ஜும்ஆ நடத்த வேண்டியது கடமையாகி விடுகிறது. ஏனென்றால், அவர்களுக்கு ஜும்ஆ சரியாக நிறைவேறவில்லை. பிரஸ்தாப மூன்றாவது, நான்காவது நிலைமைகளில் அவர்கள் லுஹரைத்தான் தொழ வேண்டும்.

ஒரு மதுஹபை (தக்லீது) தொடர்ந்திருப்பதாகச் சொல்லிக் கொள்வது பிரதானமில்லை. ஆனால், பின்பற்ற ஆகுமான இமாமுடைய மதுஹபைத் தொடர்ந்திருப்பது என்பது அந்த மதுஹபின் படி ஒழுகி அமல் செய்வது என்பதே லட்சியமாக இருத்தல் வேண்டும். அத்துடன் முன்னர் குறிப்பிட்ட நிபந்தனைகளையும் ஏற்று பூண்டிருத்தல் வேண்டும்.

மேலே பிரஸ்தாபிக்கப்பட்ட நபர், முன்பு ஹம்பலி மதுஹபிலிருந்து வந்தவர், (மாலிகு மதுஹபில் மாறியபோது) கூறிய வார்த்தைகள் ஹம்பலி மதுஹபை இழிவுபடுத்த வேண்டும் என்பதாகவோ, அல்லது அதன் இமாம் அஹ்மது ரலியல்லாஹு அன்ஹீ அவர்களின் கௌரவத்தை குறைக்க வேண்டும் என்பதாகவோ உள்ள நோக்கத்துடனிருக்க்குமானால், அந்த நபருக்கு புத்தி வருத்தக்கூடிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உலகப் பயனைக் கருதி, அந்நபர் தானிருந்து வந்த மதுஹபை விட்டு மற்ற மதுஹபுக்கு மாறுவது என்பது கூடாது. இதற்காகவும் அவருக்குத் தகுந்த தண்டனை சிட்சை கொடுக்கப்பட வேண்டும். உலகப் பயனைக் கருதி நான் மதுஹபு மாறவில்லை என்று, கத்தியம் பண்ணாமல், அவர் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதே. முஜ்தஹிதான ஒரு(மதுஹபுடைய) இமாமை அவர் பின்தொடர்ந்திருப்பது சரி என்று நிரூபணமானால், அவருக்குப் பின்னால் நின்று தொழும் மஃமூடைய கொள்கையின்படி, தொழுகையை (பாத்தில்) அபத்தமாக்கக் கூடிய செயல் எதையும் அவர் செய்யாதிருக்கும் கொலமெல்லாம் அவருக்குப் பின்னின்று தொழுவது கூடும்.

(ராஜ்ய அதிபர்) இமாமோ அல்லது அவரது பிரதிநிதியோ ஒரு ஊரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்தக் கூடாது என் உத்தரவு பிறப்பிக்கும்போது அவ்வூர்வாசிகள் அனைவருக்கும் அவ்வுத்தரவுக்க கட்டுப்பட்டு நடக்க வேண்டியது கடமையாகிவிடுகிறது. அவர்கள் யாவருமோ, அல்லது ஒரு சிலரோ –ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ நடத்த ஆகும் என்று அனுமதியளிக்கிற இமாமுடைய மதுஹபைப் பின்பற்றியவர்களாக இருப்பினும் சரியே. அதற்கு மாற்றமாக அவர்கள் நடப்பார்களேயானால் அவர்களை அவர் (ராஜ்ய அதிபரான இமாம்) தண்டிப்பார். மேலும், அவர்கள் பாபிகளாகவும் ஆகிறார்கள். முன் சொல்லப்பட்டபடி அவர்களது சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளப்படவு மாட்டாது. முன்னர் குறிப்பிடப்பட்ட நிபந்தனைக் கராணங்கள் இருந்தாலன்றி அவர்களது சொத்துக்கள் கைப்பற்றப்படவும், அவர்களுக்கு சிரசாக்கினைத் தண்டனை கொடுக்கப்படவும் மாட்டா.மதுஹபுடைய இமாம்கள் (முஜ்மஉ) ஏகோபித்த அபிப்பிராயமுடனோ அல்லது (கிலாபு) மாற்றபிப்பிராயமுடனோ சொல்லி இருக்கக் கூடிய வாஜிபுகளுக்கு முரண்பாடாக நடப்பதன் மூலம் மாத்திரம் குப்ரு உண்டாகி விடமென்பதும், அல்லது அவனுடைய மனைவழயை விலக்கி வைக்க வேண்டுமென்பதும் நிடையாது. ஆனால், தீனுல் இஸ்லாமில், இமாம்களெல்லாம் ஏகோபித்துச் சொல்லியுள்ள சர்வசாதாரணமாக யாருக்கும் தெரிந்திருக்கக் கூடிய ஸினா(விபச்சாரம்) போன்ற ஒரு ஹராமான காரியத்தை ஹலாலான காரியம் என்று சொன்னாலும் அதன் மூலம் குப்ரும், ரித்தத்தும் உண்டாகிவிடும். அவ்வாறு சொன்னவனுக்கு அவனுடைய மனைவியோடும், வெள்ளாட்டியோடும் புணர்ச்சி செய்வது ஹராமாக்கப்பட்டு விடும். இமாம் (ராஜ்ய அதிபர்) அவனை தௌபாச் செய்யுமாறு கட்டளையிடுவார். அதன்படி அவன் தௌபாச் செய்து மீண்டால் சரி, இல்லாவிடில் அவனுடைய கழுத்தை துண்டிக்கப்படும். (பதாவா குப்ரா: முடிவு)

'கல்யூபீ' கிரந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது:-

வழக்கத்தில் தாங்க முடியாத அவ்வளவு கஷ்டத்தை உண்டாக்கும் வண்ணமாக ஊரின் இரு கோடிகளுக்கிடையே நெடுந் தொலைதூரம் அமைந்திருப்பதுவும், ஒன்றுக்கு மேற்பட்ட(ஜும்ஆவை) நடத்துவதற்கு ஆகும் என்று அனுமதிக்கக் கூடிய காரணங்களைச் சார்ந்தது. ஏனெனில், அவ்வாறு தொலைதூரத்திலுள்ள வீட்டுக்காரன்(ஊருக்குள் நடக்கும் ஜும்ஆவுக்கு) நஷ்டமெடுத்து வரத்தான் வேண்டுமென்ற கட்டாய விதியை நீக்கிவிடுகிறது. மேலும், ஊரின் இரு பகுதிக்காரர்களிடையே வம்பு வழக்கும், கடும்பகையும் உண்டாகி இருத்தலும் அவ்வாறு அனுமதிக்கக் கூடிய காரணங்களைச் சார்ந்ததே. முதலில் குறிப்பிட்ட தொலைதூரத்தாலுள்ள) கஷ்டம் இல்லாதிருப்பினும் சரியே. இதன்பிரகாரம் அவ்விரு பகுதியுடைய மொத்த(ஜன) எண்ணிக்கையோ அல்லது ஒவ்வொரு பகுதியுடைய எண்ணிக்கையோ நாற்பதுக்குக் குறைவாக இருந்தால் அவர்களில் எவருக்கும் ஜும்ஆ வாஜிபாக மாட்டாது. (கல்யூபி-முடிவு)

அல்லாமா முப்தீ முஹம்மது தமீம் மத்ராஸு(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் ஸுப்ததுல் பயான் பி ஷாஹி உம்ததிஸ்ஸிப்யான் என்ற கிதாபில் காணப்படுவது:-

'சில தாலிபுல் இல்முகள் ஊரில் வழமையில் தாங்கக் கூடிய பொல்லாப்பினாலும் ஜும்ஆ எண்ணிக்கையை கொண்டு வருவது ஆகும் என்று சொல்வது சுத்தப்பிசகாக இருக்கும்'. கற்றுக்குட்டிகளான அந்த (தாலிபுல் இல்மு) மாணவர்கள் அல்லாமா கல்யூபி சொன்னதையும் அத்தாட்சிக்கு எடுத்துக்காட்டுவது, அல்லாமா கல்யூபியுடைய கருத்துக்கு மாற்றமானதை விளங்கிக் கொள்வதன்பேரில் உருவாக்கப்பட்டுள்ளது. கல்யூபீயினுடைய வார்த்தையாவது:- ஊரின் இரு பகுதிக்காரர்களிடையே வம்புவழக்கும், பொல்லாப்பும் உண்டாகி இருத்தலும் அவ்வாறு அனுமதிக்கக்கூடிய காரணங்களைச் சார்ந்ததே. கஷ்டம் இல்லாதிருப்பினும் சரியே' என்பதாகும். அவர்களுடைய அக்கருத்து, கல்யூபி இமாமுடைய கருத்துக்கு மாறுபட்டதாக உள்ளது. கல்யூபி இமாம் உடைய வாக்கியங்களை ஆதியாரம்பமாக எழுதி, முழு விபரத்தையும் தெளிவுபடச் சொல்லி கருத்து யாது என்பதை நிதரிசனப்படுத்துவோம்.

கல்யூபி இமாமின் வார்த்தைகள் வருமாறு:- 'வழக்கத்தில் தாங்க முடியாத அவ்வளவு கஷ்டத்தை உண்டாக்கும் வண்ணமாக ஊரின் இரு கோடிகளுக்கிடையே நெடுந்தொலை தூரம் அமைந்திருப்பதுவுமும் ஒன்றுக்கு மேற்பட்டதை நடத்துவதற்கு ஆகும் என்று அனுமதிக்கக் கூடிய காரணங்களைச் சார்ந்தது. ஏனெனில், அவ்வாறு தொலைதூரத்திலுள்ள வீட்டுக்காரன் கஷ்டமெடுத்து வரத்தான் வேண்டுமென்ற கட்டாய விதியை அது நீக்கி விடுகிறது. மேலும், ஊரின் இரு பகுதிக்காரர்களிடையே வம்புவழக்கும், பொல்லாப்பும் உண்டாகி இருத்தலும் அவ்வாறு அனுமதிக்கக்கூடிய காரணங்களைச் சார்ந்தது. கஷ்டம் இல்லாதிருப்பினும் சரியே'.

அவ்வார்த்தையின் பிந்திய பகுதிக்கு விளக்கமாவது:- ஊரின் இருபகுதிக்காரர்களிடையே, வழக்கத்தில் தாங்க முடியாத அளவுக்கு வம்பு வழக்கும், பொல்லாப்பும் உண்டாகி இருத்தலும் அவ்வாறு அனுமதியளிக்கக் கூடிய-அதாவது-ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆவை (எண்ணிக்கையை)அனுமதியிக்கக் கூடிய-காரணங்களைச் சார்ந்ததே என்பதாகும். அவ்வார்த்தையின் முந்திய பகுதியில் குறிப்பிட்ட அதாவது-ஊரின் இருகோடிகளுக்கிடையே தொலைதூரக் சஷ்டம் வழக்கத்தில் தாங்க முடியாததாக இருக்க வேண்டும் என்கிற-நிபந்தனை பிந்திய பகுதியில் கிடையாது. ஆகவேதான் பிற்பகுதியில் கஷ்டம் இல்லாதிருப்பினும் சரியே என்று அந்நிபந்தனையில்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அவ்வார்த்தையின் கருத்தாகும்.

(ஊர் வம்பு வழக்காலும், பொல்லாப்பாலும் உள்ள கஷ்டமில்லாதிருப்பினும் சரியே என்ற அந்தக் கற்றுக் குட்டிகள் சொல்கிறது இதன் கருத்தல்ல. தொலை தூரத்தாலுள்ள கஷ்டம் இல்லாதிருப்பினும் சரியே என்பதுதான் இதன் கருத்து). இத்தகைய கருத்து, கல்யூபி இமாம் அவர்களுடைய  துடியான வார்த்தையிலிருந்தே நன்கு புலனாகிறது. புத்திக் கோளாறு இல்லாத நேர்மையான விளக்க ஞானம் பெற்றவர்களுக்கு இக் கருத்து மறைந்ததல்ல. நம்முடைய (ஷாபீயீ) மதுஹபைச் சார்ந்த மார்க்க அறிஞர் (புகஹாக்)கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆவை நடத்துவதற்கு ஆகும் என்று அனுமதியளிக்கக்கூடிய முகாந்தரம் அனைத்திலும் 'கஷ்டம்' என்ற நிபந்தனையைக் காரணமாகக் கnhண்டிருப்பதையும், அத்தகைய கஷ்டம் என்பது வழக்கத்தில் தாங்கிக் கொள்ள முடியாத பரம சங்கடமான கஷ்டமாக இருத்தல் வேண்டும் என்ற ஓர் கட்டுப்பாட்டை வகுத்துச் சொல்லி இருப்பதையும், ஜனக் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தாலோ-அல்லது ஜனங்களுக்கிடையே கடும் பகை பொல்லாப்பின் காரணத்தாலோ-அல்லது இதர காரணத்தாலோ, அத்தகைய எதிலும் வழக்கத்தில் தாங்க முடியாத கஷ்டம் இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனையை அவர்கள் (இமாம்கள்) தொக்கி நிற்கச் செய்திருப்பதையும் நீ காணவில்லையா? 'கஷ்டம்' என்பது தாங்கவொண்ணாத பரம சங்கடமான கஷ்டம் என்றிருத்தல் வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மார்க்க அறிஞர்கள் போட்டுள்ளார்கள்'என்று 'பிக்யதுல் முஸ்தர்ஷிதீன்' நூலில் கூறப்பட்டுள்ளது. (அல்லாமா முப்தீ முஹம்மது தமீம் மத்ராஸீ அவர்களின் கிதாபு முடிவு)

ஷைகு இபுனுன்னகீபு ரலியல்லாஹு அன்ஹு உடைய உம்ததுஸ் ஸாலிக் என்ற நூலில் சொல்லப்படுவது:-

மிஸ்ரு, பக்தாது போன்ற இடங்களில் அனைவரும் ஒரேதலத்தில் கூடி சேகரமாவது மகாபெரும் சங்கடம் என்றிருக்குமானால், தேவைக்குத் தகுந்தபடி பல ஜும்ஆக்கள் நடத்துவது ஆகும். மக்காவிலும், மதீனாவிலும் இருப்பது போன்று(ஒரு ஜும்ஆ நடத்துவதில்) சங்கடமில்லாதிருக்கும்போது, அதற்கு மாற்றமாக இரண்டு ஜும்ஆ நடத்தப்படுமேயானால் அவ்விரண்டில் முந்தியதுவே ஜும்ஆவாகும். இரண்டாவதானது(பாத்தில்) அபத்தமாகும். அவ்விரண்டும் (முன்பின்னின்றி) ஏக காலத்தில் நடைபெற்றாலுமோ அல்லது முந்தியது எது என்று தெரியப்படாவிடிலுமா மறுபடியும் ஜும்ஆவை ஆரம்பித்து நடத்தப்பட வேண்டும். (உம்ததுஸ் ஸாலிக் முடிவு)

ஷர்காவீ முதலிய மற்றும் பல ஷாபியீ மதுஹபுடைய கிரந்தங்களில் காணப்படுவது:-

அறிந்து கொள்! இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு தவிர மற்ற மூன்று மதுஹபுடைய இமாம்களும், ஒரு ஜும்ஆவை நடத்தும் விஷயம் (ராஜ்ய அதிகாரியான) இமாமுடைய அல்லது அவரின் பிரதிநிதியுடைய அனுமதியுத்தரவைப் பொறுத்து நிற்கவில்லை என்று ஏகோபித்துக் கூறி இருக்கிறார்கள். மாற்றபிப்பிராய நிவர்த்திக்காகவும், பொல்லாப்பைத் தவிர்ப்பதற்காகவும் அவ்வாறான உத்தரவைப் பெற்றுக் கொள்வது நலமாகும்- ஸுன்னத்தாகும் என்று இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களுடைய தோழர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆவை நடத்தவேண்டுமென்றிருந்தாலோ அத்தகைய உத்தரவு அனுமதியை அவசியமாகப் பெற வேண்டும். ஏனெனில், அது இஜ்திஹாது அபிப்பிராயமுடைய தானத்திலிருக்கிறது. (ஷர்காவீ: முடிவு)

'அல்லாஹ்தான் நேர்மையை மிகவும் தெரிந்தவன். அவனளவிலேயே மீட்சியும், ஒடுக்கமும் உள்ளன.'

கொடை வள்ளலான அல்லாஹ்வின் உதவிகொண்டு, ஹிஜ்ரி 1374 ஷஃபான் 26, புதன்கிழமையன்று காயல்பட்டணம், முஹம்மது அப்துல் காதிர் அவர்களுடைய குமாரர் மா.மு.க. முஹிய்யத்தீன் தம்பி என்பவனால் இவ்விடையின் கோர்வை பூர்த்தியாயிற்று.

இவ்விடையை சரிபார்த்து ஒப்பமிட்டவர்களின் பெயர்களும், நற்சான்றுகளும் வருமாறு:-

1. காயல்பட்டணத்திலுள்ள ஆலிம்களில் தலை சிறந்த அல் ஆலிமுல் அல்லாமா, மௌலவி, நஹ்வி செய்யிது அஹ்மது ஆலிமுல் முப்தி அவர்களின் குமாரர், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீபு கதமிட்டி தலைவர், அல்ஆலிமுல் காமில், அல்ஹாஜ் நஹ்வி முஹம்மது இஸ்மாயில் ஆலிமுல் முப்தி அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சுத்தமாக இருக்கிறது.'

இப்படிக்கு,

நஹ்வி முஹம்மது இஸ்மாயில்
(காயல்பட்டணம்)

2. அல்ஆலிமுல் பாஸில் (மஹ்லறா மௌலானா அவர்களின் கலீபாவாகிய) பாளையம் அப்துல்காதிர் ஆலிம் அவர்களின் புதல்வர், பாளையம் ஹபீபு முஹம்மது ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை கூறியவர் நேர்மையாகக் கூறியுள்ளார்'

இப்படிக்கு,
பாளையம் ஹபீபு முஹம்மது
(காயல்பட்டணம்)

3. நமது மாகாண கவர்ன்மெண்ட் காஜி. மௌலவி அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லாஹ் ஆலிமுல் முப்தி அவர்களின் முத்திரைஸீலுடன் கூடிய கையொப்பம்:

'இவ்விடை சுத்தமாக இருக்கிறது.'

இப்படிக்கு,
முஹம்மது ஹபீபுல்லாஹ் (காஜி)
மதராஸ்.

4. மதராஸ், மௌலவி தமீம் ஆலிமுல் முப்தி அவர்களின் குமாரர், மௌலவி அபுல்பரகாத் ஆலிம் அவர்களின் முத்திரை ஸீலுடன் கூடிய கையொப்பம்:

இவ்விடை மிகச் சுத்தமாகவும், நேர்மைக்கு இசைந்ததாகவும் உள்ளது'

இப்படிக்கு,
அபுல்பரகாத்,
மதராஸ்.

5. மதராஸ், அல்ஆலிமுல் முப்தி, சுல்தான் அஹ்மது ஸாஹிபு அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சொன்னவர் நேர்மையாகச் சொல்லியுள்ளார்'

இப்படிக்கு,
சுல்தான் அஹ்மது சாஹிபு
மதராஸ்

6. அல் ஆலிமுல் பாஸில், ஹாஜி முஹம்மது முஸலியார் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு,
ஹாஜி முஹம்மது முஸலியார்
மலபார்.

7. காயல்பட்டணம் தைக்கா ஷெய்கு முஹம்மது ஸாலிஹ் வொலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவாகிய அல்ஆலிமுல் பாஹிம், ஸெய்யிது ஷாஹ் முஹம்மது விகாயதுல்லாஹ் காதிரிய்யி, காஜி அவர்களின் முத்திரை ஸீலுடன் கூடிய கையொப்பம்:

'நேர்மையாளர் விடையளித்துள்ளார்'

இப்படிக்கு,
ஸெய்யிது ஷாஹ் விகாயத்துல்லாஹ் காதிரிய்யி, காஜி
மதராஸ்.

8.அல்ஹாஜ் ஸெய்யிது முஹம்மது அவர்களின் மகன் அல்ஆலிமுல் ஹாபிள் முஹம்மது மகுதூம் தம்பி ஆலிம் அவர்களின் கையெப்பம்:

'இவ்விடை சரியாக இருக்கிறது'

இப்படிக்கு,
முஹம்மது மொகுதூம்
காயல்பட்டணம்.

9. அல்ஆலிமுல் ஹாபிள் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை மிகச் சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு,
முஹம்மது சதக்கத்துல்லாஹ்
காயல்பட்டணம்.

10. அல்ஆலிமுல் வரஇய்யி, முஹம்மது ஹஸன் நுஸ்கிய்யி அவர்களின் குமாரர் அல்ஆலிமுல் ஹாபிஸ் அல்ஹாஜ் அஹ்மது லெப்பை ஆலிம் (உஸ்தாதுனா) அவர்களின் கையொப்பம்:

'எவ்வித சந்தேகமும் இன்றி இவ்விடை சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு,
முஹம்மது:
காயல்பட்டணம்.

11. அல்ஹாஜ் முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் புதல்வர் கோஜா முஹம்மது ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சரியாக இருக்கிறது'

இப்படிக்கு,
கோஜா முஹம்மது
காயல்பட்டணம்.

12. அல்ஆலிமுல் அல்லாமா, அல்ஹாஜ் நஹ்வி முஹம்மது இஸ்மாயில் ஆலிம் அவர்களின் குமாரர் அல்ஆலிமுல் ஹாபிஸ் நஹ்வி செய்யிது அஹ்மது ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு,
ஸெய்யிது அஹ்மது
காயல்பட்டணம்.

13. ஸெய்யிது அஹ்மது லெப்பை அவர்களின் குமாரர் ஸெய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சரியாக இருக்கிறது'

இப்படிக்கு,
ஸெய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்
காயல்பட்டணம்.

14.மஹ்ளரா மவுலானா அவர்களின் கலீபாவாகிய அல்ஆலிமுல் முகம்மில், செய்pது இஸ்மாயில் ஆலிமுல் முப்தி(மஹ்ளரா ஆலிம்) காதிரிய்யி அவர்களின் புதல்வர் ஸெய்யிது முஹம்மது புகாரி ஆலிமுல் மஹ்ளரிய்யி  அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை நேர்மையானது'

இப்படிக்கு,
ஸெய்யிது முஹம்மது புகாரி மஹ்ளரிய்யி
காயல்பட்டணம்.

15.அல்ஆலிமுல் முப்தி ஹிஸ்புல்லாஹ் சபை தலைவர், அஷ்ஷைகுல் காமில், சின்ன அ.க. ஷெய்கு அப்துல்காதர் ஆலிம் ஸூபி, காதிரிய்யி நூரி அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு,
காதிமுல் கௌம்(சமூக ஊழியன்)
ஷெய்கு அப்துல் காதிர்(காயல்பட்டணம்)

16. அல்ஆலிமுல் முப்தி, நஹ்வி செய்யிது அஹ்மது ஆலிம் அவர்களின் மகன், அல் ஆலிமுல் ஹாபிஸ், நஹ்வி முஹம்மது இஸ்ஹாக் லெப்பை ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சரியாக இருக்கிறது'

இப்படிக்கு,
காதிமுல் உலமா (உலமாக்களின் ஊழியன்)
நஹ்வி இஸ்ஹாக் லெப்பை(காயல்பட்டணம்.)

17. முஹம்மது நூகு அவர்களின் குமாரர் முஹம்மது இஸ்மாயில் ஆலிம் அவர்களின் கையொப்பம்:

முஹம்மது இஸ்மாயில் நூஹிய்யி
(காயல்பட்டணம்)

18. அல்ஆலிமுல் பாஸில், முஹிய்யத்தீன் மாமுனா லெப்பை ஆலிம் பாக்கவி அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சரியாக இருக்கிறது'

இப்படிக்கு,
முஹிய்யத்தீன் மாமுனா லெப்பை (காயல்பட்டணம்)

19. அல்ஆலிமுல் பாஸில், விளக்கு முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மகன் அல்ஆலிமுல் ஹாபிஸ், காரீ, விளக்கு முஹம்மது உமர் ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'எவ்வித சந்தேகமும் இல்லாமல் இவ்விடை சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு,
முஹம்மது உமர்(காயல்பட்டணம்);

20. அல் ஆலிமுல் முப்தி, நஹ்வி செய்யிது அஹ்மது அவர்களின் குமாரர் அல்ஆலிமுல் ஹாபிஜ், நஹ்வி ஷெய்கு அப்துல்காதிர் ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'எத்தகைய ஷக்கு, சந்தேகமும் இன்றி இவ்விடை சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கிறது'

இப்படிக்கு,
நஹ்வி ஷெய்கு அப்துல்காதிர்(காயல்பட்டணம்)

21. அல்ஆலிமுல் முப்தி, மாதிஹுல் கௌது, அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயீல் ஆலிம் அவர்களின் புதல்வர் அல்ஆலிமுல் ஹாபிஸ், ஹாமிது லெப்பை ஆலிம் முப்தி அவர்களின் கையொப்பம்:

'எனக்குத் தெரிந்தமட்டில் இவ்விடையானது எவ்வித சந்தேகமுமின்றி சரியானதாகவும், சுத்தமானதாகவும் இருக்கிறது'

இப்படிக்கு,
ஹாமிது(இபுனுமாதிஹுல் கௌது)
காயல்பட்டணம்.

22. அல்ஆலிமுல் முப்தி, ஹாபிஸ் ஹாஜி நூஹுத்தம்பி லெப்பை ஆலிம் அவர்களின் குமாரர் அல்ஹாஜ் முஹம்மது மக்கி ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சரியாக இருக்கிறது'

இப்படிக்கு,
ஹாஜி முஹம்மது மக்கி ஸித்தீகிய்யி
(காயல்பட்டணம்)

23. அல்ஆலிமுல் பாஸில் மௌலவி முஹம்மத நூஹுக்கண்ணு, பாஸில் பாக்கவி அவர்களின் கையொப்பம்:

'இவ்விடை சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு,
மௌலவி முஹம்மது நூஹு
பாஸில், பாக்கவி (புவ்வாறு)

24. மஹ்ளரா மௌலானா அவர்களின் கலீபாவாகிய பாளையம் அப்துல்காதிர் ஆலிம் அவர்களின் புதல்வர் அல்ஆலிமுல் பாஸில், பாளையம் முஹம்மது அபூப்ககர் முஹிய்யத்தீன் அப்துல்லாஹ் லெப்பை, (பாளையத்துஆலிம்) அவர்களின் வாய்மொழிச் சான்று விபரம் வருமாறு:-

இவ்விடை மிகச் சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கிறது' என்று அவர்கள் கூறி தான் எக்காலத்திலும், எந்த பத்தவாவிலும் கையொப்பம் போடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதனால், இந்த பத்வாவில் கையொப்பம் போடுவதற்கு தனக்கு சாத்தியப்படவில்லை என்று கூறியதுடன். அவர்களின் மஹல்லாக்காரர் கேட்ட கேள்விக்கு இவ்வூரில் ஒரு ஜும்ஆ நடந்து கொண்டிருக்கும்போது இன்னொரு புதிய ஜும்ஆ நடத்துவது ஆகாது என்று விடை கூறிவிட்டதாகவும், இந்த பத்வா விடையை அவர்களின் பார்வைக்குக் கொண்டுபோய் காண்பித்த சாளை ஓ.எம். ஷெய்கு அப்துல்காதிர் இடம் கூறியதாகவும், மேற்படி நபர் தங்களின் கையொப்பம் இருந்தால் நலமாகுமென்று கூறியதற்கு, தான் மொழிந்த, மேலே குறிப்பிட்ட அவ்விபரங்களை தான் வாயால் கூறியது என்று எழுதிக் கொள்ள அனுமதித்ததாகவும் மேற்படி நபர் இவ்விபரங்களை எழுதித் தந்துள்ளார்.

25. அல்ஆலிமுல் முப்தி ஷெய்கு அப்துல்காதிர் வாப்பா நெய்னா ஆலிம் அவர்களின் புதல்வர் அல்ஆலிமுல் பாஹிம் செ.வா. சாஹுல் ஹமீது ஆலிம் அவர்களின் கையொப்பம்:

'இந்த பதில் சுத்தமாக இருக்கிறது'

இப்படிக்கு
ஷெய்கு அப்துல்காதிர் ஆலிம் குமாரர்
சாஹுல் ஹமீது (காயல்பட்டணம்.)

முற்றும்.

Arabi Fatwa