Kayalpatnam Ziyarams-காயல்பட்டணத்தில் மகான்களின் மக்பராக்கள்!

   காயல்பட்டணத்தில் எண்ணற்ற இறைநேசச் செல்வர்கள் மறைந்து வாழ்கின்றனர். அவர்களில் நமது கண்ணுக்குத் தெரியவந்த இறைநேசர்களின் ஜியாரத்துகளின் பட்டியல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

வ.எ. இறைநேசர்களின் பெயர் ஜியாரத் இடம் உரூஸ் நாள் இறைநேசர் பற்றிய சிறு குறிப்பு
1. ஹழரத் முத்து மொகுதூம் ஷஹீத் வலி ரலியல்லாஹு அன்ஹு காட்டுமொகுதூம் பள்ளி ஜமாஅத்துல் அவ்வல் பிறை 14 – ஹிஜ்ரி 539

வஞ்சனை, சூனியம்,அகற்றக் கூடியவர்கள் பேய்,பிசாசு, நீக்க கூடியவர்கள்

ஏர்வாடி இப்ராஹிம் ஷஹீத் வலி அவர்களுக்கு பாட்டனாராவார்கள்

2. ஹழரத் மன்னர் அப்துல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு காட்டுமொகுதூம் பள்ளி   காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள்
3. ஹழரத் பாலப்பா – ஹழரத் சீனியப்பா வலி ரலியல்லாஹு அன்ஹுமா காட்டுமொகுதூம் பள்ளி   காட்டுமொகுதூம் வலி அவர்களுடன் வந்தவர்கள்
4. ஹழரத் ஹாபிழ் அமீர் வலி ரலியல்லாஹு அன்ஹு பெரிய நெசவு தெரு ஹாபிழ் அமீர் பள்ளி துல்கஃதா பிறை 14 பெரிய சம்சுதீன் வலி அவர்களின் மாணவர் – இயற்பெயர் சாகுல்ஹமீது
5. ஹழரத் துல்க அஹ்மது ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு பெரிய நெசவு தெரு ஹாபிழ் அமீர் பள்ளி    
6. ஹழரத் ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு

மரைக்கார் பள்ளி, மரைக்கார் பள்ளி தெரு

ஹிஜ்ரி 1079 – ரபியுல் ஆகிர் பிறை 19 ஹழரத் ஷாம் ஷஹாபுத்தின் வலி, ஹழரத் சதகத்துல்லா வலி ,ஹழரத் சின்ன சம்சுத்தீன்வலி ,ஹழரத் அஹ்மது வலி, ஹழரத் சலாஹீத்தீன் வலி, ஆகியோரின் தந்தை
7. ஹழரத் சாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அப்பா பள்ளி, அப்பா பள்ளிதெரு
 
ரஜப் பிறை 21 ஹிஜ்ரி 1221 ஹதீதுகளை பாடல்களாக யாத்தளித்தவர்கள்.
8.
ஹழரத் ஷெய்கு நூர்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு
பரிமார் தெரு, ஸபர் பிறை 15  
9. ஹழரத் செய்யிது ராபியத்தும்மாள் வலி ரலியல்லாஹு அன்ஹா
கடைப்பள்ளி,
சி.கஸ்டம்ஸ் ரோடு
   
10. ஹழரத் ஷெய்கு அபூபக்கர் சின்ன முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு மேல சித்தன்தெரு ரமலான் பிறை 3
 
ஷாதுலிய்யா தரீகாவை சார்ந்தவர்கள்.
தைக்கா சாகிபு வலியின் மச்சான்
11. ஹழரத் ஷெய்கு செய்யிதகமது பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு முத்துவாப்பா தைக்கா தெரு. துல்ஹஜ் பிறை 27 சின்ன முத்துவாப்பா வலி அவர்களின் சகோதரர் ஆவார்கள்.
12. ஹழரத் முஹம்மது பளுலுல்லாஹ் (ஈக்கி அப்பா) வலி ரலியல்லாஹு அன்ஹு முத்துவாப்பா தைக்கா தெரு. ஹிஜ்ரி 595 ஷஹீது
 
13. ஹழரத் கலிபா அப்பா வலி வலி ரலியல்லாஹு அன்ஹு
கீழநெய்னார் தெரு ஹிஜ்ரி 595  
14. ஹழரத் முஹம்மது அபூபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு
கற்புடையார் பள்ளி,
கீழநெய்னார் தெரு
ஹிஜ்ரி 847  
15. .
ஹழரத் பேர் மஹ்மூது மஜ்தூபு வலி ரலியல்லாஹு அன்ஹு
மன்பவுல் பறகாத் சங்கம்,
நெய்னா தெரு.

ஹிஜ்ரி 1125 ரபியுல் அவ்வல் பிறை 14

 

தவறிபோன,களவுபோன பொருட்களை பெறுவதற்கு இவர்கள் பேரில் பாத்திஹா ஓதுவார்கள்.
16.

ஹழரத் ஷெய்கு ஹஸன் முதலியார் வலி
ரலியல்லாஹு அன்ஹு

அரபு முதலியார் செய்யிதஹமது வலிரலியல்லாஹு அன்ஹு

அஹமது நாச்சி பின்த் ரமலான் வலிரலியல்லாஹு அன்ஹு

மௌலானா சித்திக் வலி ரலியல்லாஹு அன்ஹு

ஹழரத் அப்துல் மலிக்வலி ரலியல்லாஹு அன்ஹு


ஹழரத் பீவி மறியம் வலிரலியல்லாஹு அன்ஹா

ஹழரத் ஷெய்கு அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு

குத்பா சிறு பள்ளி, நெய்னார் தெரு

ஹிஜ்ரி794 ஜமாத்துல் ஆகிர் பிறை 22

ஹிஜ்ரி 670 ஜமாத்துல் ஆகிர் பிறை 17

ஹிஜ்ரி 806 துல்ஹஜ் பிறை 9

 

ஹிஜ்ரி 812 ரமலான் பிறை 9

ஹிஜ்ரி 812 ஷவ்வால் பிறை 4,

 

ஹிஜ்ரி 822, ரஜப்பிறை 8

 

ஹிஜ்ரி 853, ரபீயுல் அவ்வல் பிறை 22
 

 
17 ஹழரத் சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு   மீகாயில் பள்ளி, நெய்னார்தெரு ஹிஜ்ரி 848  
18 ஹழரத் பெரிய லெப்பை அப்பா வலி
ஹழரத் சின்ன லெப்பை அப்பாவலி ரலியல்லாஹு அன்ஹு
லெப்பை அப்பா மகாம்
நெய்னாதெரு. –
ரபீயுல் ஆகிர் பிறை 25 கொடைவள்ளல்கள். தூத்துக்குடி ஜாமிஆ பள்ளி கட்டியவர்கள் கட்ட பொம்மனை எதிர்த்தவர்கள்.
19. ஹழரத் வரகவி காசிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு
சதுக்கை தெரு.
 
துல்கஃதா பிறை 12 ஹிஜ்ரி 1117 திருப்புகழ் பாடியவர்கள்
20 ஹழரத் செய்யிது காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு காழிஅலாவுத்தீன் அப்பா தைக்கா சதுக்கைதெரு. ஷஃபான் பிறை 20 ஹிஜ்ரி 973 காழியாக இருந்தவர்கள். பெண் வீட்டில் மாப்பிள்ளை தங்குவதற்கு வழியை உண்டு பண்ணியவர்கள்.
21 ஹழரத் செய்யிது அப்துர் ரஷீது வலி ரலியல்லாஹு அன்ஹு காழி அலாவுத்தீன்அப்பா தைக்கா சதுக்கை தெரு
 
ஹிஜ்ரி 971 – காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை கட்டியவர்கள்.

 

 

22 ஹழரத் ஷெய்கு அப்துல்லாஹ் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு –  காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஆறாம் பள்ளி தெரு  ஹிஜ்ரி 987   காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியை கட்டிக் கொடுத்த கல்தச்சர் அப்பா அவர்கள்.
23. ஹழரத்பெரிய சம்சுத்தீன்வலி ரலியல்லாஹு அன்ஹு காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி,
ஆறாம்பள்ளி தெரு
ஷஃபான் பிறை ஹிஜ்ரி 1032 துல்ஹஜ் பிறை 8 ஜின்களுக்குஓதி கொடுப்பவர்கள.
24. ஹழரத் சின்ன சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி,
ஆறாம்பள்ளி தெரு
துல்ஹஜ்பிறை 6 ஹிஜ்ரி 1092 துல்ஹஜ் பிறை 8 சுலைமான்வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார்.
25. ஹழரத் செய்யிது அப்துர் ரஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு காதிரிய்யா கொடிமரசிறு நெய்னார்பள்ளி, ஆறாம்பள்ளி தெரு துல்ஹஜ்பிறை 15 ஹிஜ்ரி 1098 துல்ஹஜ் பிறை 8 பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார்.
26 ஹழரத் சின்ன உவைஸ்னா லெப்பை ஆலிம் வலிரலியல்லாஹு அன்ஹு   காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, ஆறாம் பள்ளி தெரு   பெரிய சம்சுத்தீன் அப்பா அவர்களின் பேத்தி மாப்பிள்ளை.
227. ஹழரத் பாலப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ரபியுல் அவ்வல் பிறை 15 உமர்வலி அவர்களின் உஸ்தாது, ஷெய்குமாவார்கள்.
28 ஹழரத் நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு  மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி  ஹிஜ்ரி 995  
29 ஹழரத் லுகவி முகம்மது லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி  ரமலான் பிறை 18  
30 ஹழரத் அப்துல்லா லெப்பை ஆலிம் வலி ரலியல்லாஹு அன்ஹு   மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ரமலான் பிறை 10  
31. ஹழரத் சேகுனா அப்பா (எ)சேக்னா லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு
மொகுதூம் தெரு, மொகுதூம் பள்ளி ரபியுல் அவ்வல் பிறை 14 ,ஹிஜ்ரி 1117 – பேர்கால சம்பந்தப்பட்ட விஷயங்கள் சரிவர இவர்கள் பேரில் பாத்திஹா ஓதவும்.
32. ஹழரத் உமர் காஹிரி வலி ரலியல்லாஹு அன்ஹு சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு.
 
துல்கஃதா பிறை 14 ஹிஜ்ரி1216 துல்கஃதா பிறை14 அல்லபுல் அலிஃப் பைத் கோர்வை செய்த குத்பு ஜமான் ஆவார்கள்.
33. ஹழரத் தைக்கா சாகிபுவலி ரலியல்லாஹு அன்ஹு சாகிபு அப்பா தைக்கா, தைக்காதெரு.
 
ஸபர் பிறை 14 ஸபர் பிறை 14 உமர்வலி அவர்களின் மகனும் கலீபாவும் ஆவார்கள். குத்பு ஜமான்.
34 ஹழரத் முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு   சின்னப்பா மகாம் புதுப்பள்ளிஅருகில் ஷஃபான் பிறை 14  
35. ஹழரத் ஜஃபர் சாதிக் வலி ரலியல்லாஹு அன்ஹு பெரிய நெசவு தெரு ரஜப்பிறை 22 ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள்
36. ஹழ்ரத் ஷெய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு மேலப்பள்ளி, பைபாஸ் ரோடு ஹிஜ்ரி 818  ரமலான் பிறை 21.
 
ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள்
3. ஹழ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மேலப்பள்ளி, பைபாஸ் ரோடு   தைக்கா ஸாஹிபு வலி அவர்களின் மச்சி
38. ஹழ்ரத் ஷெய்கு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு
ஷெய்கு ஹுஸைன் பள்ளி, L.F. ரோடு, புதிய பேருந்து நிலையம் எதிரில் ஜமாஅத்துல் ஆகிர் பிறை 22 ஹழரத் ஜஃபர் சாதிக் வலி, ஷெய்கு சலாகுதீன் வலி ,ஷெய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் சகோதரர்கள்
39 ஹழரத் செய்யிது முகம்மது ஹாஜியப்பா வலிரலியல்லாஹுஅன்ஹு  ஹாஜியப்பா தைக்கா,  மெயின்ரோடு    
40 ஹழரத் யூசுப் வலி ரலியல்லாஹு அன்ஹு  கோமான் தெரு பின்புறம்    
41 ஹழரத் செய்யிது அஹமது பின் ஷாஹிது இப்னு முஹம்மது கறீம்மதனி வலிரலியல்லாஹுஅன்ஹு   கோசுமரை ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8  
42 ஹழரத் கோசுமரை வலி ரலியல்லாஹு அன்ஹும்  கோசுமரை பள்ளி    
43 ஹழரத் காட்டு பக்கீர் வலி ரலியல்லாஹு அன்ஹு  பைபாஸ்ரோடு    
44 ஹழரத் குட்டியப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு 
அலியார் தெரு    

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு.

கேள்வி: தொழுகைக்குப் பின்னர் சப்தமிட்டு கூட்டமாக திக்றுச் செய்வதற்கு ஆதாரமுண்டா?                                                                             

                                                                                                                    ரஹ்மத்துல்லாஹ், கூத்தா நல்லூர்.

பதில்: பர்ளான தொழுகை முடிந்த பின்னர் சப்தமிட்டு திக்று செய்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்திலிருந்தது.

தக்பீர் சப்தம் கேட்டதும் தொழுகை முடிந்து விட்டது என அறிந்து கொள்வேன் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.

                                                                                                புகாரி: வால்யூம் 1 பக்கம் 116

தொழுகைக்கும் பின் சப்தமிட்டு திக்றுச் செய்வது சுன்னத் என்ற ஸலபீன் (முன்னோர்)களின் கூற்றுக்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். பின்னோர்களில் இப்னு ஹஸ்ம் ளாஹிரியும் சுன்னத் என்றே கூறுகின்றனர் என இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றனர்.

                                                                              ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 237.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கூறிய பின் சப்தமிட்டு லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு எனக் கூறுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 88.

தொழுகைக்குப் பின் சப்தமிட்டு திக்ரு செய்வதற்கு இது தெளிவான ஆதாரம் என ஷெய்க் அப்துல்ஹக் முஹத்திது திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கின்றனர்.

                                                                       அஷிஃஅத்துல்லம்ஆத்; பாகம் 1, பக்கம் 419.

நன்றி: வஸீலா 1-11-87

Chennai Porur Sufi Manzil

currently manzil is in First Floor of our Peer Bhais house.

Soofi Manzil

C/o. Usman Ali

4/24,First Street,

RE Nagar, Porur,

Chennai- 600116.

தற்போது  நமது தரீகத் சகோதரர் இல்லத்தில் வைத்து   பிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு மஃரிபு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ்     மற்றும் கந்தூரி வைபவங்கள் நடந்து வருகிறது. மன்ஜில் கட்டுவதற்கு முயன்று வருகிறோம்.

Meditation-திக்ரின் சிறப்புகள்

அல்லா ஹ்வை நினைவு கூறுதல்- திக்ரு செய்தல். 

 In Tamil:-  Moulana Assheikh   As sah Sheikh Abdul Qadir Sufi Hazrath Kahiri   Kadasallahu Sirrahul Azeez.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ.

اَلْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ ، وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ، وَاصَّلاَةُ وَاسَّلاَمُ عَلٰى اَشْرَفِ الْمُرْسَلِيْنَ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهِ وَصَحْبِه اَجْمَعِيْنَ ،

அறிந்து கொள்! திக்ராகிறது ரஹ்மானை பொருத்தமாக்கும். ஷைத்தானை வருத்தமாக்கும். மேலும் ஷைத்தானுடைய கோட்டைகளை உடைத்து, அவனுடைய பட்டாளங்களை முறியடித்து விரட்டி விடும்.

  மனக் கவலையை போக்கி சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். உடலையும் மனதையும் உறுதியாக்கும். அகத்தையும் முகத்தையும் பிரகாசமாக்கும்.

  திக்ரு செய்கிறவனை கண்டவர்கள் அஞ்சக்கூடிய வித்தில் அவன் முகத்தில் கம்பீரத் தோற்றத்தை கொடுக்கும். இரணத்தை அதிகப்படுத்தும்.

  திக்ரு செய்கிறவனோடு மறுகுதலாக இருப்பவன் சீதேவியாவான். அவன்கூட இருப்பவன் மூதேவியாகான்.

   அழுகையோடும், சஞ்சலத்தோடும் திக்ரு செய்வதாகிறது, கியாமத்து நாளில் அர்ஷுடைய நிழலில் உட்காரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாகும்.

திக்ராகிறது அதில் ஈடுபட்டவனுக்கு விலாயத் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
 

ஆகவே எவனுக்கு திக்ரை கொடுக்கப்பட்டதோ அவன் விலாயத்தின் பதவிக்கு தகுதியானவனென்று அவனுக்கு அருகதை சீட்டை கொடுக்கப்பட்டு விட்டது.

எவனைவிட்டும திக்ரை உரியப்பட்டதோ அவனை விலாயத்தின் பதவியை விட்டும் நீக்கப்பட்டு விட்டது.

திக்ருடைய மஜ்லிஸாகிறது அவர்களில் சாந்தம் நிலவும்.அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹுத் தஆலாவின் கிருபை அவர்களை பொதியும். அல்லாஹீதஆலா அவர்களை அர்ஷிலே திக்ரு செய்வான்.

திக்ரின் வரிசையை பற்றி குர்ஆன், ஹதீதுகளில் மட்டிலடங்கா அனேக ஆதாரங்கள் வந்திருக்கின்றன. சிலதை எழுதுகிறேன்:-

 

يَآ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِرًا وَسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹுத்தஆலாவை மீகுதமாக திக்ரு செய்யுங்கள். காலையும், மாலையும் அவனை துதி செய்யுங்கள்.

 

وَالذّٰاكِرِيْنَ اللهَ كَثِيْرًا وَالذَّاكِرَاتِ اَعَدَّاللهُ لَهُمْ مَغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا

அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்யும் ஆண்களும், மிகுதமாக திக்ரு செய்யும் பெண்களும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வலுப்பமான கூலியையும், பாவமன்னிப்பையும் தங்கரியம் செய்து வைத்திருக்கிறான்.

 

فَاذْكُرُوْنِيْ اَذْكُرُكُمْ

 என்னை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நான் உங்களை திக்ரு செய்கிறேன்.

 

وَاذْكُرِاسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا

காலையும் மாலையும் உம்முடைய இரட்சகனுடைய நாமத்தை ஸ்தோத்திரம் செய்வீராக!

 

 

اِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلٰى حَلْقَةٍ مِنْ اَصْحَابِه فَقَالَ مَا اَجْلَسَكُمْ قَالُوْا جَلَسْنَا نَذْكُرُاللهَ وَنَحْمَدُهُ عَلٰى مَاهَدَانَا لِلْاِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا قَالَ اَللهِ مَااَجْلَسَكُمْ اِلَّا ذٰلِكَ قَالُوْا اللهِ مَااَجْلَسَنَا اِلّاَ ذٰلِكَ قَالَ اَمَا اَنِّيْ لَمْ اَسْتَحْلِفْكُمْ تَهْمَةً لَكُمْ وَلٰكِنَّهُ اَتَانِيْ جِبْرِيْلُ فَاَخْبَرَنِيْ اَنَّ اللهَ تَعَالٰى يُبَاهِيْ بِكُمُ الْمَلٰئِكَةَ اَخْرَجَهُ مُسْلِمٌ وَالتّرْمَذيْ .               

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு நாள் தங்கள் தோழர்களின் கூட்டத்திற்கு சென்று, 'நீங்கள் ஏன் கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள், அல்லாஹுத்தஆலா எங்களுக்கு பெரும் உபகாரம் செய்து எங்களை சுத்த சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் நேர்வழி காட்டியதற்காக அவனை நாங்கள் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சஹாபாக்களை பார்த்து) அல்லாஹ்வின் ஆணை! நீங்கள் இதற்காகத்தானா கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள் அல்லாஹ்வின் ஆணை! நாங்கள் இதற்காகவேதான் கூடிக் கொண்டிருக்கிறோம். நபி அவர்கள் நான் உங்கள் பேரில் சந்தேகப்பட்டதற்காக சத்தியம் செய்து கேட்டதல்ல, எங்கிலும் அல்லாஹுதஆலா உங்களைக் கொண்டு மலக்குகளிடத்தில் பெருமை பேசுவதாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சொன்னார்கள்' என்றார்கள்.

 

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعٰالٰى  عَنْهُ قَالَ قَالَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ لِلهِ مَلَائِكَةً يَطُزْفُوْنَ فِي الطُّرُقِ يَلْتَمِسُوْنَ اَهْلَ الذِّكْرِ فَاِذَا وَجَدُوْا قَوْمًا يَذْكُرُوْنَ اللهَ تُنَادُوْا هَلُمُّوْا اِلٰى حَاجَتِكُمْ فَيَحُفُّوْنَهُمْ بِاَجْنِحَتِهِمْ اِلٰى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ اَعْلَمُ بِهِمْ مَايَقُوْلُ عِبَادِيْ قَالَ يَقُوْلُوْنَ يُسَبِّحُوْنَكَ وَيُكَبِّرُوْنَكَ وَيُحَمِّدُوْنَكَ وَيُمَجِّدُوْنَكَ قَالَ فَيَقُوْلُ هَلْ رَأَوْنِيْ قَالَ فَيَقُوْلُوْنَ لاَوَاللهِ مَارَأَوْكَ قَالَ فَيَقُوْلُ كَيْفَ لَوْرَأَوْنِيْ قَالَ يَقُوْلُوْنَ لَوْرَأَوْكَ كَانُوْا اَشَدَّ لَكَ عِبَادَةً وَاَشَدَّلَكَ تَمْجِيْدًا وَاَكْرلَكَ تَسْبِيْحًا قَالَ فَيَقُوْلُ فَمَايَسْأَلُوْنَ قَالَ يَقُوْلُوْنَ يَسْاءلُوْنَكَ الْجَنَّةَ قَالَ فَيَقُوْلُ وَهَلْ رَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ وَاللهِ مَارَأَوْهَا يَارَبِّ قَالَ يَقُوْلُ فَكَيْفَ لَوْرَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ لَوْ اَنَّهُمْ رَأَوْهَا كَانُوْا اَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَاَشَدَّ لَهَا طَلَبًا وَاَعْظَمَ فِيْهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَذُوْنَ قَالَ يَقُوْلُوْنَ يَتَعَوَّذُوْنَ مِنَ النَّارِ قَالَ فَيَقُوْلُ وَهَلْ رَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ وَاللهِ مَارَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ فَكَيْفَ لَوْرَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ لَوْ لَوْرَأَوْهَا كَانُوْا اَشَدَّ مِنْهَا فِرَارً وَاَشَدَّلَهَا مَخَافَةً قَالَ فَيَقُوْلُ اُشْهِدُكُمْ اَنِّيْ قَدْغَفَرْتُ لَهُمْ قَالَ يَقُوْلُ مَلَكٌ مِنَ الْمَلَائِكَةِ فِيْهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ اِنَّمَا جَاءَلِحَاجَةٍ قَالَ هُمُ

அபுஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு ரிவாயத்து செய்கிறார்கள்:- நபி பெருமானார் அவர்கள் சொன்னார்கள், 'அல்லாஹுத் தஆலாவிற்கு சில மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வீதிகளில் சுற்றிக்கொண்டு திக்ரு செய்பவர்களை தேடிக் கொண்டிருப்பார்கள். திக்ரு செய்பவர்களை கண்டுவிட்டார்களானால், நீங்கள் தேடியது இதோ! இருக்கிறது விரைந்து வாருங்கள் என்று தங்களுக்கிடையில் கூப்பிடுவார்கள். எல்லாவர்களும் வந்து அவர்கள் இறகுகளை கொண்டு முதல் வானம் வரையிலும் திக்ரு செய்பவர்களை சூழ்ந்து கொள்வார்கள்.

அந்த மலக்குகளைப் பார்த்து அல்லாஹு தஆலா அவன் அறிந்தவனாக இருந்து அடியார்களை கொண்டு பெருமை பாராட்டி என் அடியார்கள் என்ன சொல்கிறார்கள்? என்று கேட்பான். மலக்குகள்(உன் அடியார்கள்) உன்னை துதி செய்கிறார்கள். பெருமைபடுத்துகிறார்கள், மகிமை படுத்துகிறார்கள், புகழ்கிறார்கள் என்று சொல்வார்கள்.

அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்தர்களா?

மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை.

அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்திருந்தாலோ?

மலக்குகள்:- அவர்கள் உன்னைப் பார்த்திருந்தார்களேயானால் உன்னை ரெம்பவும் வணங்குவார்கள், மிகுதமாக மகிமை படுத்துவார்கள், துதி செய்வார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் என்னிடம் எதைக் கேட்கிறார்கள்.?

மலக்குகள்:- அவர்கள் உன்னிடத்தில் சுவர்க்கத்தை கேட்கிறார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அந்த சொர்க்கத்தை பார்த்திருக்கிறார்களா?

மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை இரட்சகா!

அல்லாஹு தஆலா:- அவர்கள் அதைப் பார்த்திருப்பார்களேயானால் எப்படி?

மலக்குகள்:-அவர்கள் அந்த சொர்க்கத்தைப் பார்த்திருந்தால் அன்னமும் ஆசையுடையவர்களாகவும், அதில் அதிக தேட்டமுடையவர்களாகவும் அதன் பேரில் வேட்கையுடையவர்களாகவும் இருப்பார்கள்.

அல்லாஹு தஆலா:- பின்பு அவர்கள் எதை விட்டும் காவல் தேடுகிறார்கள்?

மலக்குகள்:- அவர்கள் நரகத்தை விட்டும் காவல் தேடுகிறார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?

மலக்குகள்:-சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அதைப் பார்த்திருந்தாலோ?

மலக்குகள்:-அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அதைவிட்டும் ரெம்ப பயப்படுவார்கள். ரெம்ப ஓடுவார்கள்.

அல்லாஹு தஆலா:-மலக்குகளே நான் உஙகளை சாட்சியாக்குகிறேன். நான் அவர்களுடைய பாவங்களையெல்லாம் பொருத்துவிட்டேன்.

மலக்கிலொருவர்:- பலானவன்(இன்னவன்)அந்த கூட்டத்தை சேர்ந்தவனல்ல. அவன் ஒரு தேவைக்காக வந்தவன்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அவர்களோடு உட்கார்ந்தவனும் மூதேவியாகானே அப்படிப்பட்டவர்கள்.(ஆகையினால் அவனுக்கும் தான் பாவம் பொறுக்கப்பட்டது) என்று சொல்வான்.

 

عَنْ اَبِيْ سَعِيْدِاخُدْرِيْ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلّىَ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ اَيُّ الْعِبَادِ اَفْضَلُ وَاَرْفَعُ دَرَجَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيٰمَةِ قَالَ اَلذَّاكِرُوْنَ اللهَ كَثِيْرًا قِيْلَ يَارَسُوْلَ اللهِ وَمِنَ الْغَارِيْ فِيْ سَبِيْلِ اللهِ قَالَ لَوْضَرَبَ بِسَيْفِه حَتّٰى يَنْكَسِرَ وَيَتَخَضَّبَ دَمًا فَاِنَّ ذَاكِرَاللهِ اَفْضَلُ مِنْهُ دَرَجَةً اَخْرَجَهُ التِّرْمَذِيْ .

அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது:

அடியர்களில் யார் ரெம்ப வருசையானவரும், கியாமத் நாளில் அல்லாஹுதஆலா இடத்தில் பதவியால் உயர்ந்தவர்? என்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.

அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்கிறவர்களென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

அல்லாஹுத்தஆலாவின் பாதையில் யுத்தம் செய்தவரை பார்க்கிலுமா? என்று கேட்கப்பட்டது.

வாள் முறிந்து ரத்தத்தால் தோய்மளவும்(அல்லாஹ்வின் பாதையில்) வெட்டினாலும் அவனை விடவும் அல்லாஹுவை திக்ரு செய்தவன் பதவியால் வருசையானவனென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

 

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ قَالَ يَقُوْلُ اللهُ تَعَالٰى اَنَاعِنْدَظَنِّ عَبْدِيْ بِيْ وَاَنَامَعَهُ فَاِنْ ذَكَرَنِيْ فِيْ نَفْسِه ذَكَرْتُهُ فِيْ نَفْسِيْ وَاِنْ ذَكَرَنِيْ فِيْ مَلَأٍ ذَكَرْتُهُ فِيْ مَلَأٍ خَيْرٍ مِّنْهُمْ وَاِنْ تَقَرَّبَ اِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ اِلَيْهِ ذِرَاعًا وَاِنْ تَقَرَّبَ ذِرَاعًا تَقَرَّبْتُ اِلَيْهِ بَاعًا وَاِنْ اَتَانِيْ يَمْشِيْ اَتَيْنُهُ هَرْوَلَةً اَخْرَجَهُ الْبُخَارِيْ وَمُسْلٍمٌ وَالتِّرْمَذِيْ

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து    செய்யப்படுகிறது, அல்லாஹுத்தஅலா சொல்வதாக, ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்:-

'நான் என்னுடைய அடியானுடைய எண்ணத்திடத்திலிருக்கிறேன். நான் அவனோடவே இருக்கின். ஆக அவன் என்னை அவன் மனதில் திக்ரு செய்வானேயானால் நான் என் மனதில் அவனை திக்ரு செய்யவும்.என்னை ஒரு கூட்டத்தில் திக்ரு செய்வானேயானால் அவர்களைக்காண விசேஷமான கூடடத்தில் நான் அவனை திக்ரு செய்யவும். என்னிடத்தில் ஒரு ஜான் முடுகுவானேயானால் அவனிடத்தில் ஒரு முழம் முடுகுவான். அவன் ஒரு முழம் முடுகினால் நான் ஒரு கெஜம் முடுகுவேன். என்னிடத்தில் நடந்து வந்தால் நான் அவனிடத்தில் ஓடி வருவேன்.'

Melapalayam Sufi Manzil

soofi manzil,

Thakkadi appa Darga,

Shahul hameed nayagam keela street,

Nethaji Road,

Melapalayam,

Tirunelveli. INDIA.