தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?

By Sufi Manzil 0 Comment May 26, 2010

Print Friendly, PDF & Email

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு.

கேள்வி: தொழுகைக்குப் பின்னர் சப்தமிட்டு கூட்டமாக திக்றுச் செய்வதற்கு ஆதாரமுண்டா?                                                                             

                                                                                                                    ரஹ்மத்துல்லாஹ், கூத்தா நல்லூர்.

பதில்: பர்ளான தொழுகை முடிந்த பின்னர் சப்தமிட்டு திக்று செய்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்திலிருந்தது.

தக்பீர் சப்தம் கேட்டதும் தொழுகை முடிந்து விட்டது என அறிந்து கொள்வேன் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.

                                                                                                புகாரி: வால்யூம் 1 பக்கம் 116

தொழுகைக்கும் பின் சப்தமிட்டு திக்றுச் செய்வது சுன்னத் என்ற ஸலபீன் (முன்னோர்)களின் கூற்றுக்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். பின்னோர்களில் இப்னு ஹஸ்ம் ளாஹிரியும் சுன்னத் என்றே கூறுகின்றனர் என இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றனர்.

                                                                              ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 237.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கூறிய பின் சப்தமிட்டு லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு எனக் கூறுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 88.

தொழுகைக்குப் பின் சப்தமிட்டு திக்ரு செய்வதற்கு இது தெளிவான ஆதாரம் என ஷெய்க் அப்துல்ஹக் முஹத்திது திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கின்றனர்.

                                                                       அஷிஃஅத்துல்லம்ஆத்; பாகம் 1, பக்கம் 419.

நன்றி: வஸீலா 1-11-87