அத்தஸவ்வுப்-ஸூபிஸம்-Athasawwuf-Sufisam

அத்தஸவ்வுபு-ஸூபிஸம்

(التّصوّف)

தொகுப்பாளர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரி அவர்கள்.

என்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் துவக்கம்.
உஜூதாலும்-உளதாலும், தாத்து – தத்சொரூபத்தாலும் ஒன்றாகிய பரம்பொருளான ஏகனாகிய ஒருவனுக்கே சர்வ புகழும்.

மிக்க சம்பூரணத்துவமாக வெளிஜயான அல்லாஹுதஆலாவின் பேரொளியான, காருண்யமான, மெஞ்ஞானப் பட்டினமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், இறைநேசர்கள், ஷெய்குமார்கள் அனைவர்கள் மீதும் கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக!

اوّلُ الدّين معرفةُ الله அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் – மார்க்கத்தில் முதன்மையானது அல்லாஹுத்தஆலாவை அறிவது' என்ற திருவாக்கின்படி முதல்கடமை அல்லாஹுதஆலாவை அறிவதாகும்.

இதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதுவும் சரியாக அமையாது.

ஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள் இக்கலைக்கு அத்தஸவ்வுபு-ஸூபிஸம் என்றும், இது உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை செலவளித்து மக்களுக்கு அதிலும் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இதன் எதார்த்தமான மெஞ்ஞான வஹ்தத்துல் வுஜூது –உளது ஒன்று என்பதை வாய் மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர்கள் தம்தமக்கு தவ்கு – அனுபவ அறிவினாலும் கஷ்பு – உதிப்பு வெளிப்பாடு அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து குர்ஆன் ஹதீதுகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக.

வாழையடி வாழையாக அதன் தொடர் ஷெய்குமார்கள் மூலம் வந்துக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.

'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்பது இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வது போல், அல்லாஹ்வுக்காக இருதயத்தை தனிமைப்படுத்துவதும், அவனல்லாதவற்றை (நீக்கி) அற்பமாக கருதுவதாகும்.

இம்மெஞ்ஞான கலைக்கு 'அத்தஸவ்வுபு – ஸூபிஸம்' என்று பெயர் வைப்பதற்கு நான்கு காரணங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்.

1. இக்கலையுடையவர்களான ஸூபிய்யாக்களின் அஸ்ரார் – இரகசியங்கள் தெளிவானதாகவும், அவர்களது அடிச்சுவடுகள் சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் 'அத்தஸவ்வுபு' என்பதின் மூலம் ஸபா-சுத்தம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

2. இவர்களது ஊக்கம் உயர்வாகவும், அல்லாஹுதஆலா அளவில் அவர்களது இருதயம் முன்னோக்கி இருப்பதினாலும் அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் الصّفّ الاوّل அஸ்ஸப்புல் அவ்வல் – முதல் வரிசையில் இருக்கிறார்கள்.

இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் அஸ்ஸப்புல் அவ்வல் -முதல் வரிசை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

3. இவர்களது குணாதிசியங்கள், நபி நாயகத்தின் திண்ணை தோழர்களான   அஹ்லுஸ்ஸுப்பாக்களின் குணாதிசியங்களுக்கு நெருக்கமாக اهل الصّفّةஇருப்பதினாலாகும். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் ஸுபு;பத் -திண்ணை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

நம் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் ஸூபி மன்ஸில்களின் திறப்பு விழா வாழ்த்துப் பாடல்களில்,

نُسمّي بصوفي منزل  للتّبرّك . بمنزل اصحاب النّبي اهل الصّفّة                                                                                                

நாம் நாயகத் தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பத்-வராந்தைகாரர்களுடைய ஸ்தலத்தைக் கொண்டு பரகத்தை நாடி இதற்கு 'ஸூபி மன்ஸில்' என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று பாடியுள்ளார்கள்.

4. இவர்கள் ஸூப்-கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வந்ததினாலாகும்.

இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் 'ஸூப்-கம்பளி'என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

ஸூப் – கம்பளி ஆடை அல்லாஹு தஆலாவுக்கும், அவனது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உகப்பானதாக இருந்ததினால் 'யாஅய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தத்திர் (கம்பளி) ஆடை போர்த்தியவரே! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்திருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்!

இக்காரணங்களை மனதில் கொண்டு இவ்வடியேன் இந்நூலுக்கு 'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்று பெயர் வைத்துள்ளேன்.

இந்நூலில் எழுதப்பட்டது அனைத்தும், இத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களான மகான்களின் நூற்களிலிருந்தே சுருக்கி எழுதியுள்ளேன்.

அதிலும் குறிப்பாக சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பள்ளுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்துஹ்பத்துல் முர்ஸலா, அல்ஹகீகா நூலிலிருந்தும், அல் அல்லாமா காதிரு லெப்பை இப்னு அப்தில் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்தரீஆ' நூலிலிருந்தும், இம்மூன்று நூற்களுக்கும் மொத்தமாக தமிழில் சங்கைக்குரிய மகான் எங்கள் ஷெய்குநாயகம் அவர்கள் மொழிப் பெயர்த்த நூலிலிருந்தும்,
சங்கைக்குரிய மகான் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் அவர்கள் எழுதிய 'அல்ஹக், அஸ்ஸுலூக் என்ற நூற்களின் மொழிப்பெயர்ப்பில் இருந்தும் (மொழிபெயர்ப்பு நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் அவர்கள் செய்துள்ளார்கள்) 'அல்ஹகீகா' என்ற நூலிலிருந்தும் (மொழிபெயர்ப்பு நம் சங்கைக்குரிய கலீபா செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள் செய்துள்ளார்கள்)

மகான் அஷ்ஷெய்கு அலி இப்னு அஹ்மதல் மஹாயிமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'இறாஅத்துத்தகாயிகி' என்ற நூலை மொழிபெயர்த்;து 'அகமியக்கண்ணாடி' என்ற பெயரில் நம் ஷெய்கு நாயகம்  அவர்கள் வெளியிட்ட நூலிலிருந்தும் அவர்கள் தொகுத்த 'இள்ஹாறுல் ஹக் – சத்தியப் பிரகடனம்' என்ற நூலிலிருந்தும் சுருக்கி தொகுத்துள்ளேன். அடியேனின் சில குறிப்புகளை தவிர்த்து வேறு எந்த சொந்தக் கருத்தையும்
எழுதவில்லை.

முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும் நம் மகான்களான ஷெய்குமார்களின் நூற்களின் கருத்துக்கள் மனதில் விளங்க முடியாமல் இருக்கின்றனவே என்று மனச்சோர்வடைந்து அங்கலாய்ந்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் மிக சுருக்கமாகவும், விளக்கமாகவும் இது சம்பந்தமான ஒரு நூல் வெளியிட வேண்டுமென்று நீண்ட காலமாக இருந்த அபிலாசை இப்போதுதான் கைகூடி உங்கள் கரங்களில் தவழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

எல்லோர்களும் இதை வரவேற்று படித்து பயன் பெறுவதே எமது குறிக்கோள்! மூல நூற்களைக் கொண்டு பயனடைந்தது போல இந்நூலைக் கொண்டும் பயனடைந்து இவ்வடியேனுக்கு துஆ செய்யுங்கள்.

நம் ஷெய்குமார்களின் பொருட்டால் மேலும் பல நூற்கள் எழுத உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஞான வழிப்பாட்டையில் வெற்றி நடைப்போட்டு சித்தியடைந்து, நல் மகான்களின் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா சேர்த்து வைப்பானாக! ஆமீன்.

சமுதாய ஊழியன்,

S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன்

அத்தஸவ்வுபு-ஸூபிஸம்

சுருதி, யுக்திப் பிரமாணத்தாலும் இறைவனை அறிந்த மெஞ்ஞானிகளான ஆரிபீன்களின் 'தவ்கு' எனும் அனுபவ அறிவினாலும் அறியப்பட்டது.

எதார்த்தத்தில் பரம்பொருளான அல்லாஹுதஆலாவும் அவனுடைய செயல்களுமேயல்லாது வேறொன்றுமில்லை. வாஜிபுல் உஜூதான – எப்போதும் உளதாக இருப்பது அவசியமான மெய்ப்பொருளான அல்லாஹுhஆலாவுக்கு உருவமும், காலதேச எல்லைகளும் வேறெவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும் அந்த அரூபியான வாஜிபுல் உஜூதான அல்லாஹுதஆலாவில் அரூபத் தன்மை கெடாமல் மும்கினுல் உஜூதான – உளது, இலது இவை இரண்டும் அவசியமில்லாத சிருஷ்டிகள் தோன்றுகின்றன.

அவன் தனது இல்மில் – அறிவில் இருந்ததை ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றன் வழியாகவும் வெளிப்படுத்துகிறான் – படைக்கிறான். முந்தின சிருஷ்டி இரண்டாவது சிருஷ்டிக்கு ஸபபு – காரணமாகவும், இரண்டாவது சிருஷ்டி முந்தின சிருஷ்டிக்கு முஸப்பபு – காரியமாகவும் இருந்த போதிலும் முந்தையது இரண்டாவதைப் படைக்கவில்லை.
முந்தியதை எப்படி அல்லாஹுதஆலா படைத்தானோ அதைப்போல் இரண்டாவதையும் அவனேதான் படைத்தான். முந்தியது எப்படி அவனுடைய தத்துவம் எனும் கரத்தில் அகப்பட்டிருக்கிறதோ அதைப்போல் பிந்தியதும் அவனுடைய தத்துவக்கரத்திலேயே அகப்பட்டிருக்கிறது.

அவனன்றி ஓர் அணுவும் ஆடவோ அசையவோ முடியாது.

இப்படி ஒன்றன் பின்னொன்று அதன் பின் மற்றொன்றாக இப்படியே சங்கிலித் தொடரைப் போன்று வெளியாகிக் கொண்டிருக்கிற அகில உலகத்தின் சகல சிருஷ்டிகளும் அந்த மெய்ப்பொருளான ஹக்குத்தஆலாவைக் கொண்டே நிலைத்திருப்பதினால் அவை அனைத்தும் 'அஃராளு – ஆதேயம் எனவும், 'ளில்லு – நிழல்' எனவும், இன்னும் இதே கருத்தைக் கொண்டு அவைகள் 'கியால்-கற்பனை' எனவும் ஸூபிய்யாக்களான மெஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இவை அனைத்திற்கும் நிலைக்களம் ஹக்குத்தஆலாவின் உஜூதேயாகும்.

மேலும் இரண்டாவது சிருஷ்டி முந்திய சிருஷ்டிக்குப் பிற்பாடு வருவதினாலும், அதைச் சார்ந்திருப்பதினாலும் முந்தியதை இரண்டாவதற்கு 'ஹகீக்கத்து தாத்து –தற்சொரூபம்' – 'ஜௌஹர்- ஆதாரம்' என்றும், இரண்டாவதை முந்தியதின் 'அறளு – ஆதேயம்' என்றும், 'ஸிபத்து – இலட்சணம்' பிஃலு-செயல்' என்றும் சொல்லுவார்கள்.
ஆகவே உலகம் பூராவும் 'அஃறாள் -ஆதேயங்களும்' ஜவாஹிறு – ஆதாரங்களுமாகும். ஹக்குத்தஆலாவைக் கொண்டு நிலைத்திருப்பதால் சகல வஸ்த்துகளும் அவனைக் கொண்டு தரிபாடாக இருக்கின்றன. இதனால் 'ஹகாயிகுல் அஷ்யாயி தாபிதுன் – வஸ்த்துக்களின் எதார்த்தம் தரிபாடானது' என்று சொல்லுவார்கள்.
ஸூபஸ்த்தாயிகள் என்பவர்கள் 'ஆலம் – அகிலம்' என்பது கனவு அதற்கு நிலைக்களம் மனிதனின் கற்பனையேயாகும் என்று சொல்கிறார்கள். இது சுத்த தவறான கொள்கையாகும்.

'வஹ்தத்துல் உஜூது – உஜூது ஒன்று' என்று சொல்பவர்களிடத்தில் நகலிய்யத் -சுருதி பிரமாணத்தாலும் அகலிய்யத் -யுக்தி பிரமாணத்தாலும், கஷ்பிய்யத் -காட்சி அனுபவப் பிரமாணத்தாலும் உஜூதாக-உளதாக இருப்பது ஹக்கு ஸுபுஹானஹு வதஆலாவின் உஜூதாகவே இருக்கும்.
அவனுடைய தாத்தானது –தற்சொரூபமானது அவனுடைய உஜூதுக்கு ஐனானதாக-தானானதாகவே ஆகும். வேறானது அல்ல.

முதகல்லிமீன்களான உஸூலுடைய உலமாக்கள் அவனது தாத்தாகிறது அவனுடைய உஜூதுக்கு வேறானதும், அதை வேண்டுவதுமாகும் என்று சொல்கிறார்கள்.

சரியான சொல் முந்தினதுவேயாகும். உஜூது ஒன்று, தாத்து இரண்டு-பலது என்று சொல்வதும் பிழையானதுவாகும்.


معرفةُ الله மஃரிபத்துல்லாஹ்-அல்லாஹுதஆலாவை அறிவது.

அல்லாஹுதஆலாவை அறிவதற்கு மூன்று வழிகளாகும். تنزيه  1.          தன்ஸீஹின் படி அறிவதாகும். அதாவது – அவனுடைய தாத்து, சிபத்துகளின் புறத்தினால் அவனுக்கு இலாயிக்கல்லாதவைகள் அடங்கலை விட்டும் பரிசுத்தமானவன்    என்று அறிவதாகும். இவ்வழி குறைவான வழியாகும்.

2. தஷ்பீஹின்  تشبيه படி அறிவதாகும். அதாவது متشابه  முதஷாபிஹான – நேர் பொருள் பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை அவைகளின் நேரடியான பொருள்களிலேயே சுமத்தாட்டுவதும், இன்னும் அவனுடைய தாத்து, சிபாத்துகளின் புறத்தினால் சிருஷ்டிகளுடைய உருவங்களையும் உறுப்புகளையும் அவனுக்கு தரிப்படுத்துவதாகும்.
இவ்வழி குப்ரான வழியாகும். அல்லாஹு தஆலா இவைகளை விட்டும் மிக உயர்வாகி பரிசுத்தமாகிவிட்டான

3. தன்ஸீஹுக்கும் தஷ்பீஹுக்கும் இடையில் சேகரமாக்கிய படியும், பின்பு கலப்பற்ற தன்ஸீஹின் படியும் அறிவதாகும். تنزيه محض

ليس كمثله شييٌ அதாவது:-

லைஸக மித்லிஹி ஷைவுன்' –அவனைப் போன்று ஒரு வஸ்த்துவுமில்லை (42:11) என்று அவன் சொன்னது போல் அவனுடைய தாத்தின் புறத்தினால் எவ்விதமான எல்லையும், கட்டுப்பாடும், கோலமும் இல்லை என்று நம்புவதும்,
வலஹு குல்லு ஷையின் وله كلّ شي – அவனுக்கு எல்லா வஸ்த்துவும் உண்டு (27:91) என்று அவன் சொன்னது போல்
அவனுக்கு அவனுடைய சிபாத்தின் புறத்தினாலும் தஜல்லியாத்தின்  تخلّيات -தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப்பட்டவைகள் எல்லாம் உண்டு என்று நம்புவதும்,அல்லாஹு தஆலாவுக்கு வேறொரு பொருள் அறவே இல்லாததினால் வேறொன்றைக் கொண்டு ஒப்பானவனில்லை என்றும் 'தஸ்பீஹ்' உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த 'தன்ஸீஹ்'யை விட்டும் பேதகமாகவுமில்லை என்று நம்புவதும்,இன்னும் 'தன்ஸீஹானது' அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்ததாகும். 'தஷ்பீஹானது' அவனுடைய மள்ஹரை-வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும்,

ஸுபுஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யசிபூன் سبحان ربّالعزّة عماّ يصفونசிறப்புடைய உம்முடைய போஷகன், அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன்' (37:180) என்று சொன்னதுபோல் அவன் தன்ஸீஹ், தஷ்பீஹ் இவை இரண்டிலேயும் கட்டுப்பட்டவனில்லை என்று நம்புவதுமாகும். இவ்வழிதான் பரிபூரண வழியாகும்.

அல்லாஹு தஆலாவின் உஜூதிற்கு கோலமில்லை, எல்லையுமில்லை, கட்டுப்பாடுமில்லை. அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும், குணப்பாட்டிலும், எல்லையிலும் வெளியானது – தோன்றினது கோலமின்மை, எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில் இருந்ததோ அதை விட்டும் பேதகப்படவுமில்லை. ஆதியில் எதன் பேரில் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது.

சங்கைக்குரிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகம்' எனும் நூலில் சொன்ன கவிகளின் கருத்தும் இதுவேதான்.

فانْ قلت بالتّنزيه كنْت مقيّدًا     وان قلت با لتّشْبيه كنت محمدّدًا
وان قلت بالامرين كنت مسدّدًا    وكنت اماما فيامعارف سيدًا
فمن قال بالاشفع كان مشرّكًا      ومن قال بالافراد كان موحّدًا
فايّاك والتّشبيه ان كنت ثنيًا      واياك واتّنويه ان كنت مفردًا

'நீன் தன்ஸீஹை கொண்டு (மட்டும் தஷ்பீஹ் இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை தன்ஸீஹ் உடைய சூரத்தை-கோலத்தைக் கொண்டு) கட்டுப்பாட்டுகு;குள் ஆக்கிவிட்டாய். நீன் 'தஷ்பீஹ்' கொண்டு (மட்டும் 'தன்ஸீஹ்' இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை 'தஷ்பீஹ்' உடைய கோலத்தைக் கொண்டு) எல்லைக்குள் ஆக்கி விட்டாய். நீன் (தன்ஸீஹ், தஷ்பீஹ் எனும்) இரண்டு கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும், மஃரிபாவில் -மெஞ்ஞானங்களில் இமாமாகவும் தலைவனாகவும் ஆகுவாய்

ஆகவே எவன் (ஒன்றாகிய ஹக்கை அவனோடு கல்கை –சிருஷ்டியை தரிபடுத்துவது கொண்டு) இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் (உஜூதில் கல்கை ஹக்கோடு) கூட்டாக்கியவனாகுவான். எவன் ஒன்றாக்கி சொல்வானேயானால் அவன் (ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று தரிபடுத்தி அவனோடு அவனல்லாததை தரிபடுத்தாததினால்)முவஹ்ஹிதாக (ஒன்றாக்கியவனாக) ஆகுவான்.

ஆகையினால் நீன் (ஹக்கையும், கல்கையும் இரண்டு என்று சொல்லி) இரண்டாக்குவாயானால்(கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக் கொண்டு) ஒப்பாக்குவதை பயந்து கொள்! தவிர்த்து கொள்!!

(எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து –வெளிப்பாட்டின் கோலம் என்றும், அது தன்னிலே மவ்ஜூது –உளதானது அல்ல என்றும் தரிபடுத்துவது அவசியமாகும்.) நீன் ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள்!

இன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றேயாகும். ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும். உஜூதில் பலது என்பது மள்ஹருடைய –வெளியாகும் ஸ்தானத்தினுடைய புறத்தினாலேயே ஆகும்.


وماالوجه الّا واحدٌ غير انّه     اذاانت اعددتّ المراياتعدّدا

'முகம் ஒன்றையல்லாதில்லை. எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகிவிடும்.'

சகல சிருஷ்டிகளும் அந்த உஜூதான – உளதான ஹக்குதஆலாவை விட்டும் நீங்கி இருக்காது.

ஆகவே சிருஷ்டிகளை உண்டாக்குவதற்கு முன்பும், பின்பும் அந்த உஜூது ஹக்குதஆலா ஒருவனுக்கு மட்டுமேயாகும். உலகமாகிறது அதன் சகல பாகங்களுடன் அஃராளு- ஆதேயங்களாகும். ஆதாரமாகிறது அந்த உஜூதேயாகும்.


انّما الكون خيال فهو حقٌ في ال حقيقة . كلّ من يفهم هاذا حاز اسرار الطّريقة

'நிச்சயமாக கௌன் -சிருஷ்டிகள் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும். இதை விளங்கிய ஒவ்வொருவரும் தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக் கொண்டார்' என்று சங்கைக்குரிய மகான் முஹ்யித்தீன் இப்னு அரபி அவர்கள் பாடிய கவியின் கருத்தும் இதுவாகும்.

உலகம் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அதற்கு உஜூது இல்லை. கண்ணாடியில் பதியும் கோலத்தைப் போன்றும், தாகித்தவன் கானல் நீரை பார்த்து தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும். மெய்ப்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றுமில்லை.
 

மற்தபாக்கள் – படித்தரங்கள். مرتبة

  ரபீவுத்தரஜாதرفيع الدّرخات;-படித்தரங்கள் உயர்த்தியானவன்' என்று திருக்குர்ஆனில் 40:15       சொன்னதுபோல் அவனது உஜூது வெளியாவதை தேடிய கமாலாத்து  –பூரணத்துவமான மற்தபாக்களில் இறங்குகிற புறத்தில் அனேகமான மற்தபாக்கள் அவனது உஜூதுக்கு உண்டு.

மெஞ்ஞானிகளான ஸூபியாக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் காட்டியுள்ளார்கள். சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜியலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது 'அல்கஹ்பு வற்றஹீம். الكهف والرّقيم – எனும் நூலில் நாற்பது படித்தரங்களை எண்ணிக் காட்டியுள்ளார்கள். எங்களது ஷெய்கு  நாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அத்துஹ்பத்துல் முற்ஸலாவின் மொழிப் பெயர்ப்பு நூலை காண்க!)

அத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலாசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு மற்தபாக்களாக – படித்தரங்களாக சுருக்கி எழுதியுள்ளார்கள். அதனை மிக சுருக்கமாக கீழே தருகிறோம்.
 

1. அல் அஹதிய்யத்-
 الاحديّة
தனித்தன்மையானது.
அல்லாதஅய்யுனு –குறிப்பில்லாதது
அல்இத்லாகு-குறிப்பை விட்டும் பொதுப்படையானது.
அத்தாதுல் பஹ்து-கலப்பற்ற தத்சொரூபம்.
ஜம்வுல்ஜம்வு-சேகரத்தின் சேகரம்.
ஹகீகத்துல் ஹகாயிகி-எதார்த்தங்களின் எதார்த்தம்.
அல்அமா-விபரமில்லாதது.
அத்தாத்துல் ஸாதஜ்-கலப்பற்ற தாத்து.
அல்மஸ்கூத்து அன்ஹு-அதைத் தொட்டும் வாய் பொத்தப்பட்டது. இதற்கு மேலால் வேறொரு மர்த்த்தபா இல்லை. சகல மர்தபாக்களும் இதற்கு கீழே உள்ளதாகும்.
 

2. அல் வஹ்தத்-தனியாக இருப்பது.
அத்தஅய்யனுல் அவ்வல்-முதலாவது குறிப்பு.
அல்ஹகீகத்துல் முஹம்மதிய்யா-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம்.
மகாமு அவ்அத்னா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சொந்தமான, அரி, பெரிய பாக்கியமான மிஃராஜில் இங்கு வரை ஏற்றம் கிடைத்ததினால் 'அதை விட இன்னும் மிக நெருக்கமான இடம்' என்று சொல்லப்பட்டது.
அல்பற்ஸகுல் குப்றா-மிக பெரிய மத்திபமானது.
 

3. அல்வாஹிதிய்யத்-ஒன்றாக இருப்பது.
அத்தஅய்யுனத்தானி-இரண்டாவது குறிப்பு
அல்ஹகீகத்துல் இன்ஸானிய்யா-மானுஷீகத்தின் எதார்த்தம்.
காப கௌஸைனி-இரு வில்லின் நாண்.
மற்தபத்துல் அஸ்மா-பெயர்களின் படித்தரம்.
இம் மூன்று படித்தரங்களும் பூர்வீகமானதாகும். துவக்கமில்லாததாகும். முந்தியது பிந்தியது என்று ஆனது புத்தியினாலாகும். காலத்தினால் அல்ல. காலமும், ஸ்தலமும் இல்லாத போது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான்.
 

4. ஆலமுல் அர்வாஹ்-ரூஹுகளின் உலகம்.
ஆலமுல் ஜபரூத் -பொருந்தும் உலகம்.
ஆலமுல் கியாலுல் முத்லக்-கட்டுப்பாடாகாத கற்பனை உலகம்.
 

5.ஆலமுல் மிதால்-மாதிரி உலகம் (சூட்சும உலகம்)
ஆலமுல் கியாலில் முகய்யத்-கட்டுப்பாடான கற்பனை உலகம்.
 

6. ஆலமுல் அஜ்ஸாம்- சடங்கள் உலகம்.
ஆலமுஷ்ஷஹாதத்-சாக்கிர உலகம்.
ஆலமுல் முல்க்- ஆட்சி அதிகார உலகம்.
 

7. அல்இன்ஸான் -மனிதன்.
இதுதான் கடைசியான தஜல்லி-தோற்றமும் உடையுமாகும். ஒவ்வொரு படித்தரங்களின் பெயர்களுக்குரிய காரணங்கள், குணங்கள் பற்றி தக்க விளக்கமாக 'அத்துஹ்பத்துல் முற்ஸலா' எனும் நூல் போன்றவைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசையுள்ளவர்கள் அவைகளில் காண்க!
 

ஒரு மற்தபாவில்-படித்தரத்தில் இருந்து வேறொரு படித்தரத்திற்கு வருவதற்கு தஜல்லி- தோற்றம், தனஸ்ஸுல்-இறக்கம் என்று சொல்வார்கள்.
 

உதாரணமாக:- பாலாக இருக்கும் தன்மையிலிருந்து தயிரின் தன்மைக்கு வந்தால் அப்போது பால், தயிரின் கோலத்தில் தஜல்லியானது-தோன்றியது, வெளியானது, அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள்.
மெழுகு வர்த்தியின் எண்ணெய் உறைந்து மெழுகின் தன்மையில் வந்தால் அப்போது மெழுகுவர்த்தியின் எண்ணெய் மெழுகின் கோலத்தில் தஜல்லியானது- தோன்றியது, வெளியானது அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். முதல் தன்மைக்கு நிலைமைக்கு திரும்பினால் உறூஜ்-ஏறுவது என்று சொல்வார்கள்.
 

மேற்கூறப்பட்ட 'அஹதிய்யத்' என்ற முதல் படித்தரம் அல்லாத ஏனை படித்தரங்களில் ஏறி, கூறப்பட்ட படித்தரங்களில் இருப்பது அனைத்தும் மனிதனில் வெளியானால் அவனுக்கு 'அல் இன்ஸானுல் காமில்' –சம்பூரண மனிதன் என்று சொல்லப்படும்.
 

இவ்வகையான ஏற்றம் சம்பூரணமாக நமது நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில்தான் ஆனது. இதனாலேயே 'அக்மலுல் காமிலீன்-பூரணமானவர்களில் மிக சம்பூரணமானவர்'களாக ஆனார்கள்.
 

'பாத்திஹுல் உஜூத்'-உஜூதுக்கு (உலகிற்கு) திறவு கோலாக, ஆரம்பமானவர்களாக இருப்பது போல், 'காத்தமுன் னபிய்யீன்'-நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக, முத்திரங்கமானவர்களாக ஆனார்கள்.
 

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம்.
 

படித்தரங்களுக்கிடையில் பாகுபடுத்துவது:

بر مر تبة ازوجودحكم دارد . كر فرق مراتب نه كني زنديقي

ஹர்மற்தபா அஸ் உஜூதே ஹுக்மு தாரத் கர்பர்கே மறாத்திப் ந குனி ஸிந்தீகி.
 

'உஜூதுடைய ஒவ்வொரு படித்தரங்களுக்கும், ஒரு (தனிமையான) ஹுக்மு –சட்டம் இருக்கிறது. நீ, படித்தரங்களுக்கிடையில் பாகுபாடு வைக்கவில்லையானால், ஸிந்தீக்காய் -காபிராகி விடுவாய்' என்று பாரஸீக கவிஞர் சொன்னது போல் உலூஹிய்யத்தின்-தெய்வீகத்தின் படித்தரங்களின் பெயர்களை சிருஷ்டிகளின் படித்தரங்களில் நடத்தக் கூடாது.
 

எவனாவது அக்லையோ-அறிவையோ, அல்லது நப்ஸையோ அல்லது தபீஅத்தை- இயற்கையையோ அல்லது நட்சத்திரங்கள், அனாஸிருகள்-பூதங்கள், ஜமாதாத்து-நிரஸப் பொருள்கள், நபாதாத்து-தாவரப் பொருள்கள், ஹயவானாத்-ஜீவப் பொருள்கள் இவைகள் ஹக்குத் தஆலாவின் மள்ஹராக இருப்பதைக் கவனித்து தெய்வமென்று – அல்லாஹ்வென்று சொல்வானேயாயால் நிச்சயமாக அவன் பிழை செய்து விட்டான். ஸிந்தீக்காகி விட்டான் -காபிராகி விட்டான்.
 

ஜைது என்பவனின் கையைப் பார்த்து அது ஜைது என்று சொன்னால் பிழை செய்தவன் போலாகுவான்.
சகலத்திலும் உஜூது ஒன்றுதான் என்று சொன்னாலும் சரி, ஒவ்வொரு வஸ்துவும் இலாஹு -தெய்வம் என்று சொல்வதற்கு அனுமதியில்லை. இவ்விடம் கால் சருகி ஷிர்க்கில் வீழ்வதற்கான அபாயகரமான இடம். கவனம்! கவனம்!!


الوجود الحقيقي – الوجود الاضافي – العينيّة – الغيريّة

அல் உஜூது ஹகீகி, அல் உஜூதுல் இளாபி-எதார்த்தமான உள்ளமை, சேர்மானமான உள்ளமை. அல் ஐனிய்யத், அல் ஙைரியத்-தானானது, வேறானது பற்றிய விளக்கம்:

ஐஸும், தண்ணீரும் இரண்டும் மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ அதுவே ஐஸாகும். எது ஐஸோ அது தண்ணீராகும்.
 

ஆனால் தண்ணீரின் ஓடுகின்ற உருவம் இப்போது மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உண்டாகிவிட்டது. மேலும் இந்த ஐஸின் உருவத்துடைய ஹுக்முகளும், குணபாடுகளும், அதாவது:- இயற்கை சுபாவமும், குணமும் கூட தண்ணீரை விட்டும் அலாதியாகிவிட்டது.
 

ஆனால் ஐஸின் உருவத்துடைய உஜூது-உள்ளமையாகிறது ஹகீகிய்யா-எதார்த்தமானதாக இல்லை. என்றாலும் எந்த உள்ளமை தண்ணீருக்கு இருந்ததோ அதே உள்ளமைதான் இந்த ஐஸுக்குமாகும். ஐஸின் உருவம் சுயமான உள்ளமையின் வாடையையும் கூட நுகரவில்லை. வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கனவிலும், கற்பனையிலுமே அதன் தோற்றமிருக்கிறது.
 

பாருங்கள்! ஒரு கிலோ உடையுள்ள தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஐஸின் உருவத்தில் உறைய வையுங்கள். பின்னர் எடை போட்டுப் பார்த்தீர்களேயானால் கூடுதல், குறைதல் இல்லாது ஒரு கிலோ ஐஸே இருக்கும். பின்னர் அந்த ஐஸை உருக வைத்தால் தண்ணீரின் முந்திய உருவம் திரும்பவும் வந்து விடும். பின்னர் இந்த தண்ணீரை எடைபோட்டால் அதே எடைதானிருக்கும். அதாவது கூடுதல் குறைதல் இல்லாது ஒரு கிலோ தண்ணீரே இருக்கும்.
 

இதேபோல் ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் செய்யுங்கள். பின்னர் எடைபோட்டுப் பாருங்கள். ஒரு கிராம் தங்கமே இருக்கும். உருக்கி விடுவீர்களேயானால் அந்த ஒரு கிராம் தங்கமே இருக்கும். மோதிரம் வரவும் இல்லை. போகவும் இல்லை.
 

ஐஸ் தண்ணீரின் ஒரு நிலையும், கோலமும் ஆகும். மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும் கோலமும் ஆகும். ஐஸும், மோதிரமும் எதார்த்தமான உள்ளமையின் வாடையை நுகரவில்லை.
 

குமுளியும், அலையும், பனி கட்டியினால் உண்டாக்கப்பட்ட கூஜாவும் ஹகீகத்தின் -எதார்த்தமான புறத்தினால் இவை அனைத்தும் தண்ணீர் தானாகும். நாம ரூபங்களான குறிப்புகளின் படி தண்ணீருக்கு வேறானதாகும்.

இதைப் போல கானல் நீரும் ஹகீகத்தின் புறத்தினால் ஆகாயம்தானாகும். குறிப்பின் புறத்தினால் ஆகாயத்திற்கு வேறானதாகும்.


كلّ شيي هالك الاّ وجهه

குல்லு ஷெய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு'-சகல வஸ்த்துக்களும் அழிந்ததாகும். (இல்லாமலானது ஆகும்.) அவனுடைய வஜ்ஹை(தாத்தை)தவிர' –அல்-குர்ஆன் (28:88) என்பதின் கருத்தும் இதுதான்.

ஐஸைப் பார்த்து தண்ணீர் என்றோ, அல்லது தண்ணீரைப் பார்த்து ஐஸ் என்றோ, தங்கத்தைப் பார்த்து மோதிரம் என்றோ, மோதிரத்தைப் பார்த்து தங்கம் என்றோ குமிழி, அலை, கூஜாவைப் பார்த்து தண்ணீர் என்றோ சொல்லக் கூடாது.
 

ஐஸ் தண்ணீர்தான். தண்ணீர்தான் ஐஸ். மோதிரம் தங்கம்தான். தங்கம்தான் மோதிரம். குமிழி, அலை, கூஜா தண்ணீர்தான். தண்ணீர்தான் குமிழி, அலை, கூஜா. என்றாலும் அது அது எந்தக் கோலத்தில் இருக்கிறதோ அந்தக் கோலத்தின் ஹுக்மை-சட்டத்தை நடத்தாட்ட வேண்டும். இது ஷரீஅத் சட்டமாகும்.
 

ஆகவே எல்லா மற்தபாக்களிலும்-படித்தரங்களில் பேதகமாகாமலும், மாறாமலும், பிளாமலும், உலையாமலும், எதார்த்தமாக உண்டானதாக இருக்கக் கூடியது கலப்பற்ற உஜூது- பரம்பொருள் மட்டுமெயாகும். இதுவே ரப்புடைய வஜ்ஹு-தாத்தாகும்.
சுகங்கள், துன்பங்கள், வேதனைகள் பற்றி
உஜூதானது தாத்தாலும் ஒன்றே. சிபத்துகளாலும் ஒன்றே. அதற்கு அறவே எண்ணிக்கை இல்லை என்று சரியான ஆதாரங்களைக் கொண்டு தரிப்பட்டிருக்க, விதிவிலக்குகளைக் கொண்டு வருத்தப்படுவது ஏன்?
அவ்விதி விலக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சுகம் கிடைக்குமென்றும், விரோதம் செய்தால் வேதனை கிடைக்குமென்றும், ஈருலக சம்பந்தமான பலவகையான நோய் நொம்பலங்களைக் கொண்டு சோதிப்பது ஏன்?
தன்தனக்கே சுகத்தைக் கொடுப்பதும், வேதனை படுத்துவதாக ஆகாதா? என்ற கேள்விகள் மனதில் வந்தால் அதற்கான பதில்களை அறிந்துக் கொள்ளுங்கள்:-

وما خلقت الجنّ والانس الاّ ليعبدون
 

வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லாலி யஃபுதூன்.
 

'ஜின்களையும், மனுக்களையும் என்னை வணங்குவதற்காகவேயல்லாது நான் படைக்கவில்லை' என்று அல்லாஹுதஆலா குர்ஆனில் (51:56) சொல்வது போன்று வணக்கம் புரிவதும், வருத்தங்களும், சுகங்களும் வேதனைகளும், துன்பங்களும் இவை அடங்கலும் சிருஷ்டிகளான குறிப்புகள் அளவில் மீளுவதாகும். அவனது உஜூது இவை அனைத்தை விட்டும் தூய்மையானதாகும்.
 

குறிப்பு:- சிருஷ்டியான குறிப்பு எனும் உணர்வு இவனில் இருக்கும்போதுதான் இவை அனைத்துமாகும். இவனது சிருஷ்டி என்ற உணர்வு அழிந்து போகி, அல்லாஹுதஆலா அளவில் போகிவிட்டால் அல்லாஹுதஆலாவின் உஜூதே அன்றி வேறு எதுவும் இல்லை.
 

அஷ்ஷுஹூது – இறைவனை காட்சி காண்பது

ஷுஹூது- காட்சி காண்பது இருவகை:
 

1. அஹ்லுல் ஜம்யி- சேகரமானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவதொரு வஸ்துவை பார்த்தார்களேயானால் இது ஹக்குதஆலா தனது அஸ்மாக்களை-பெயர்களைப் பூண்டவனாக 'அஃயானுதாபிதா' எனும் கண்ணாடியில் அதைக் கொண்டு வெளியான வெளிப்பாடாகும் என்று தங்களது ஹிருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
 

இவர்களிடத்தில் ஹக்குதஆலா ளாஹிராக-வெளியானவனாகவும், உலகம் பாதினாகும்-உள்ளானதாகும். சகல வஸ்த்துகளிலும் முதலாவது எட்டிக் கொள்வது அந்த உஜூதாகும்.
 

2. அஹ்லுல் பர்க் – பிரிவினையானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவது ஒரு வஸ்துவைப் பார்த்தார்களேயானால் இந்த வஸ்த்து அஃயானு தாஃபிதாவின் நிழல்களில் நின்றுமொரு நிழலாகும். அதை ஹக்குதஆலா தனது உஜூது எனும் கண்ணாடியில் வெளியாக்கியிருக்கிறான் என்று தங்களது இருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
 

இவர்களிடத்தில் ஹக்குதஆலா பாதினாகும்-உள்ளானவனாகவும், உலகம் ளாஹிராக-வெளியானதாகும்.
 

இவ்விரண்டு காட்சிகளை நீ அறிந்துக் கொண்டு இவை இரண்டையும், அல்லது இதில் ஒன்றையாவது பற்றிப் பிடித்துக் கொள்!
 

குறிப்பு:- அல்லாஹு தஆலாவின் இல்முல் இஜ்மாலியில்- தொகுப்டபான அறிவிலவ் தன்னையுமத் சிருஷ்டிகளையும் அறியும் பொழுது அறியப்பட்டதற்கு 'ஷஃனு' என்றும், இல்முத்தப்ஸீலில்-வகுப்பான அறிவில் அறியும் போது 'அஃயானு தாபிதா' என்றும், சிருஷ்டியான வெளியிலான உலகத்திற்கு 'அஃயானுல் காரிஜிய்யா' என்றும் சொல்வார்கள்.
 

காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள்

சிருஷ்டிகளாகிய மள்ஹருகளில்-வெளியாகும் ஸ்தானங்களில் காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள் பல. அவைகளில் மூன்று வழிகளை ஆரிபீன்களான மெய்ஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
 

 

1. قل الله ثمّ ذرهمகுலில்லாஹ் தும்ம தர்ஹும் 'அல்லாஹ் என்று சொல்லும், பின்னர் அவர்களை விட்டுவிடுங்கள்'- அல்குர்ஆன்(61:91)என்ற திருவசனத்திற்கு இணங்க, நீ ஜாமிஆன இஸ்மாகிய – அனைத்தையும் சேகரமாக்கிய பெயரான 'அல்லாஹ்' எனும் அச்சரங்களை 'பிக்ரு-சிந்தனை' எனும் பேனாவைக் கொண்டு இருதயமெனும் பலகையில் சூரிய ஒளியான சாயத்தைக் கொண்டு எழுத வேண்டும்.
அதாவது:- இப்படி ஒளியாக மனதில் எழுதப்பட்டிருப்பதாக சிந்திக்க வேண்டும். இந்த கோலமும் அல்லாஹுதஆலாவின் வெளிப்பாடுகளில் ஒரு வெளிப்பாடு. இதில் அவன் ஹுலூஸ்-விடுதி விடுதல், இத்திஹாது-ஒன்றாக சேர்தல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.
குறிப்பு: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் ஹுலூல்-விடுதிவிடுதல், இறங்குதல் என்றும், தண்ணீரும் சீனியும் ஒன்றாய் சேர்ந்தால் இத்திஹாது-ஒன்றாக சேர்தல் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு இரண்டு பொருள்கள் வேண்டும்.
இங்கு அல்லாஹுதஆலாவும், அவனுடைய தோற்றங்களுமே அல்லாது வேறொன்றும் இல்லை. ஐஸில் தண்ணீர்  வெளியானது போலும், தங்க நகைகளில் தங்கம் வெளியானது போலும் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

2.  اقرأ كتابك كف بنفسك اليوم عليك حسيبا

இக்ரஃ கிதாபக கபா பிநப்ஸிகல் யவ்ம அலைக்க ஹஸீபா
'உன்னுடைய கிதாபை ஏட்டை ஓது. இன்று நீனே உன்பேரில் கேள்வி கேட்கிறவனாக போதும்; -அல்-குர்ஆன் (17:14) என்ற திருவசனத்திற்கிணங்க உன்னுடைய 'ஐனுத்தாபிதா –வகுப்பான அல்லாஹ்வின் அறிவில் உள்ளதையும்' 'ஐனல் காரிஜா-சிருஷ்டியான வெளிரங்கமான உஜூதையும்' திடப்படுத்திக் கொண்டு இரண்டையும் ஒன்றாக ஆக்கி உன்னுடைய ஐனகாரிஜா, அல்லாஹ்வின் வெளியாகும் தானங்களில் ஒரு வெளியாகும் தானம், அதில் ஹுலூல், இத்திஹாது இல்லாமல் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் கொள்வதாகும்.

3. قل ان كنتم تحبّون الله فاتبعوني يحببكم الله

குல் இன்குன்தும் துஹிப்பூனல்லாஹ பத்தபிவூனி யுஹ்பிபுகுமுல்லாஹ்-'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பீர்களேயானால் என்னை பின்பற்றுங்கள்' என்று (நபியே) சொல்லுங்கள் -அல்குர்ஆன் (3:31) என்ற திருவசனத்திற்கிணங்க, ஆலமுல் கபீர் – (முழு சிருஷ்டியான) பெரிய உலகத்தையும், ஆலமுஸ்ஸகீர் -(மனிதனான) சிறிய உலகத்தையும், நிச்சயத்துக் கொண்டு பின் பெரிய உலகத்தை எடுத்துக் கொண்டு இது அல்லாஹுத் தஆலாவின் மள்ஹறுகளில் சம்பூரணமானது என்றும், இதில் ஹக்குதஆலா ஹுலூல்-விடுதி விடுதல், இத்திஹாது –ஒன்றாக சேருதல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.

இம்மூன்று வழிகளையும் அறிந்துக் கொண்டால் உன்னுடைய காமிலான ஷெய்குடைய உத்தரவின்படி மூன்றில் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் அருள் உன்னை இரண்டாவது பனாவின் ஸ்தானத்தளவில் சேர்த்து வைக்கிற வரையிலும் உன் அகக் கண்ணை கொண்டு அதை முஷாகதா-தியானித்துக் கொண்டு இருக்கவும்.
குளிப்பாட்டுகிறவனின் கையில் மைய்யித்தைப் போல், உன் நப்ஸை காமிலான ஷெய்கிடத்தில் ஒப்படைத்து அவருக்கு நீன் தொண்டு செய்வதைக் கொண்டேயல்லாது உனக்கு அது எளிதாகாது.
 

அல்லாஹுதஆலாவின் பக்கம் நெருங்குவது பற்றிய விளக்கம்.

அல்லாஹ்தஆலாவின் பக்கம் நெருங்குவது இரு வகையிலாகும்.

1. குற்புன்னவாபில்-நபிலான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது:-


لا يزال عبدي يتقرّب اليّ بانّوافل حتّي احبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع به وبصره الّذي يبصره به
ويده الّتي يبطش بها ورجله الّتي يمشي بها – رواه البخري

'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும், நான் அவனை உகந்து விட்டால் அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் ஆகி விடுகின்றேன்.'
(அல்ஹதீது குத்ஸி) அறிவிப்பு: புகாரி, மிஷ்காத் ஹதீது எண்:2260.

'குற்புன்னவாபில்' என்பது மனிதனுக்கு அல்லாஹுதஆலாவினால் இரவலாக கொடுக்கப்பட்ட, கட்டுப்பாடான, மானுஷீகத்துவ இலட்சணங்களில் கட்டுப்பாடுகள் அழிந்து அதற்கு பகரமாக கட்டுப்பாடுகள் இல்லாத அல்லாஹுதஆலாவின் இலட்சணங்கள் மனிதனில் வெளியாவதாகும்.

அப்போது அல்லாஹுதஆலாவின் உத்தரவு கொண்டு அல்லாஹுதஆலா செய்வது போன்று இவனும் செய்வான். 'மனித சிபாத்துகள் -இலட்சணங்கள் அல்லாஹுதஆலாவின் பூர்வீகமான இலட்சணங்களில் பனாவாகிறது-நாஸ்தியாகிறது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது நப்லான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.

2. குற்புல் பறாயில்-கடமையான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது.


ما تقرّب الي عبدي بشيي احبّ الي ممّا افترضت عليه

என்னுடைய அடியான் என்னளவில் அவன் மீது நான் கடமையாக்கியதைவிட எனக்கு உகப்பான எப்பொருளைக் கொண்டும் நெருங்குவதில்லை.
நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260

'குற்புல் பறாயில் என்பது அடியான் சகல சிருஷ்டிகளின் உணர்வையும், தன்னை உணர்வதையும் கூட விட்டு விட்டு ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றைத் தவிர மற்றவை ஒன்றும் அவன் பார்வையில் ஷுஹூதில் தரிப்பாடாகாத விதமாக முழுவதுமாக ஐக்கியமாக அல்லாஹுதஆலாவில் பனாவாகிவிடுவதாகும்.

'அடியானுடைய தாத்து, அல்லாஹு தஆலாவின் தாத்தில் பனாவாகிறது-நாஸ்தியாவது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது பர்ளான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.

அடியான் தன் நப்ஸை விட்டும் இல்லாமலாகி மானுஷீக உஜூது உரியப்பட்டு அடிமைத்தனத்தின் ஒளி நூர்ந்து போகி சிருஷ்டியான ரூஹு பனாவாகிவிடுமானால் அப்போது அடியான் அல்லாஹுதஆலாவின் தாத்திய்யான தஜல்லிக்கும், சரிபாத்தியான தஜல்லிக்கும் தகுதியாகிவிடுகிறான்.

இவன் பேரில் அல்லாஹு தஆலா தாத்தைக் கொண்டு அல்லது சிபத்துக்களைக் கொண்டு தஜல்லியாக நாடினால் இவனை விட்டும் உரியப்பட்டதற்கு பகரமாக தன்னுடைய தாத்தில் நின்றும் ஒரு 'லதீபா'-அதி நுட்பமானதை, ஒன்றாய் சேராமலாகவும் அடியானின் ஹைக்கலில்-கோலத்தில் வைக்கிறான். அதற்குத்தான் 'ரூஹுல் குத்ஸு'(படைப்பினங்களை விட்டும்) பரிசுத்தமான ஆன்மா என்று பெயர் சொல்லப்படும்.

ஆகவே ஹக்குதஆலா தனது தாத்தைக் கொண்டோ அல்லது சிபத்துக்களில் ஒரு சிபத்தைக் கொண்டோ தஜல்லியானால் எதார்த்தத்தில் அவனும், அவனுடைய சிபத்தும் அவன் தன்பேரிலேயே வெளியானான். அடியானின் பேரில் அல்ல. இந்நேரத்தில் அடியானை அல்லாஹுதஆலா என்று சொல்லிவிடக் கூடாது.

முறாக்கபா செய்யும் முறை

குற்புன்னவாபிலும், குற்புல் பறாயிலும் சொல்லப்பட்ட அல்லாஹுதஆலா அளவில் நீ, நெருங்குவதை நாடினால் முதலாவதாக நபி நாயகம் ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் அவர்களை சொல்லாலும், செயலாலும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் பின்பற்றி நடப்பதை பற்றிப் பிடித்துக் கொள். உன் வெளிரங்கம் உள்ரங்கத்திற்கும், உள்ரங்கம் வெளிரங்கத்திற்கும் மாற்றமாக ஆகுவதை பயந்து கொள்! அது உனது அமல்களை அழித்து விடும். அல்லாஹுதஆலாவை விட்டும் தூரப்படுத்திவிடும்.

இரண்டாவதாக கலிமத்துத் தய்யிபா (லாஇலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் தானாகவே இருக்கிற வஹ்தத்துல் உஜூதின்-உஜூது உன்றாக இருப்பதின் முறாக்கபாவை அதற்கு உளு இருக்க வேண்டும் என்ற விதியில்லாமல் (உளு இருந்தால் உத்தமம்தான்) இன்ன நேரத்தில்தான் செய்ய வேண்டுமென்றில்லாமல் எல்லா நேரத்திலும், மூச்சு போவது வருவது பற்றி கவனிக்காமலும், கலிமத்துத் தய்யிபாவின் அட்சரங்களை நோட்டமிடாமல் அதன் உட்கருத்தை மட்டுமே அல்லாது வேறொன்றையும் நோட்டமிடாது நீ நின்றவனாய், உட்கார்ந்தவனாய், நடக்கின்றவனாய், படுத்திருக்கிறவனாய், சகல நிலைமைகளிலும் செய்து வர வேண்டும்.

முறாக்கபா செய்யும்போது, முதலாவதாக உன்னுடைய ஹகீகத்தும், அந்தரங்கமும் ஹக்குதஆலாவுக்கு வேறாக இருப்பதான 'அன்னிய்யத்தை –நான் என்ற உணர்வை நீக்க வேண்டும். இதுதான் 'லாயிலாஹ' என்று நீக்குவதின் பொருளாகும்.

இரண்டாவதாக உன் கல்பில் ஹக்கு ஸுப்ஹானஹுவதஆலாவின் உஜூதை தரிப்படுத்துவதாகும். இதுதான் 'இல்லல்லாஹ்' என்று தரிபடுத்துவதின் பொருளாகும்.

சங்கைக்குரிய எங்களது தாதாபீர் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது 'அஸ்ஸுலூக்-இறைவழி நடை' எனும் உர்து நூலில், எல்லா தரீக்காக்களையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து எழுதிய முறாக்கபாவை அவர்களது கலீபா சங்கைக்குரிய எங்களது ஆன்மீக குருநாதர் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மொழி பெயர்த்துள்ள அந்த அஸ்ஸுலூக் வாசகத்தை அப்படியே தருகிறேன்.

மிகச்சுருக்கமான, சக்தி வாய்ந்த, மிக்க நம்பிக்கையான, எதார்த்தமான முறாக்கபாவாகிறது:-

ஒரே அடியாக கண்ணை மூடிக் கொண்டு ஹக்குதஆலாவின் தாத்தாகிய தன்னுடைய கல்பு இருதயமெனும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்து விட்டு உப்பு சமுத்திரத்தில் கரைந்து போவது போல் தன்னை அழித்து விட வேண்டும். தன்னோடு சகல உலகத்தையும் அழித்து விட வேண்டும்.

மனிதன் தானே உலகமாகும். எப்பொழுது மனிதன் அழிந்து விடுகிறானோ, அப்போது அவனோடு உலகம் அனைத்தும் அழிந்து விடுகிறது. உலகத்தில் எத்தனை சூறத்துகள் (கோலங்கள்) இருக்கின்றதோ அத்தனையும் மனிதனுடைய சூறத்துகளேயாகும்.

உலகம் ஒரு கண்ணாடி வீடாகும். மனிதனுடைய சூறத்துகள் அதில் காட்சியளிக்கிறது. எப்பொழுது மனிதன் கண்ணாடி வீட்டை விட்டும் வெளிப்பட்டு விடுவானோ ஒரு சூறத்தும் எந்த கண்ணாடியிலும் எஞ்சியிராது. இதே விதமாகவே மனிதனுக்கு அவசியம்.

அதாவது:- ஒவ்வொரு அணுக்களுடைய சூறத்துக்களையும் தன்னுடைய சூறத்தின் பிரதிபிம்பம் என்று உணர வேண்டும். இன்னும் உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவின் உசும்புதல், ஒடுங்குதலும், என்னுடைய உசும்புதல், ஒடுங்குதலோடு கட்டுண்டதாகும் என்று உறுதிக் கொள்ள வேண்டும்.

இன்னும் எப்பொழுது கண்ணை மூடி விடுகிறானோ அப்போது உறுதி கொள்ள வேண்டும்.

அதாவது:- நான் எந்த சூறத்தின் காரணமாக தாத்தை விடடும் பிரிந்திருந்தேனோ அந்த என்னுடைய இன்ஸானிய்யத்தான சூறத்து-மனித உருவம் அழிந்து விட்டது. இப்பொழுது நான் தாத்து தானாகிவிட்டேன். வானம், பூமி இன்னும் சகல உலகமும் என்னோடு அழிந்து விட்டது. இப்போது நான் சூறத்தும், நிறமுமில்லாது சுத்தமாகயிருக்கிறேன். நான் உருவம், நிறமில்லாத, கரையில்லாத சமுத்திரமாக இருக்கும். எதுவரையிலும் என்றால் நான் சமுத்திரiமாக இருக்கும் என்ற நினைப்புங்கூட அழிந்து விட வேண்டும். இன்னும் இந்த நானும், சமுத்திரத்தின் நானும் தாத்து தானாக ஆகிவி;ட வேண்டும்.

ஆண்டவா! உனது நேசர் தீர்க்;கதரிசிகளுக்கெல்லாம் நாயகமான எங்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொருட்டினால் எங்களுக்கு இந்த வலுப்பமான வாழ்வைக் கொடுத்தருள்வாயாக! ஆமீன்!!

குறிப்பு:- இந்த முறாக்கபாவை அடிப்படையாக வைத்துதான் நம் ஷெய்குநாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பைஅத் எடுக்கும் போது முரீதீன்களுக்கு இதை உபதேசித்தும், ஸில்ஸிலாவில் இணைத்தும் இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

اسّير الباطنஅஸ்ஸய்றுல் பாதின்- அகமிய (இறைவழி) நடை:

அகமிய இறைவழி நடை ஆறு வகை:
 

1. அஸ்ஸய்று லில்லாஹிاسّير لله- அல்லாஹ்வுக்காக அறியாமையில் இருந்து அறிவளவில் நடப்பது.
2.அஸ்ஸய்று இலல்லாஹிاسّير الي الله-அல்லாஹ் அளவில் அறிவிலிருந்து அமல்(வணக்கம்) அளவில் நடப்பது.
3.அஸ்ஸய்று குபில்லாஹிاسّير في الله- அல்லாஹ்வில் நடப்பது- அவனில் பனாவாகுவது-மாயுவுவது.
4. அஸ்ஸய்று மினல்லாஹிاسّير من الله- அல்லாஹ்வில் நின்றும் நடப்பது. மஹ்வில்-அழிவில் இருந்து ஸஹ்வு-தெளிவு அளவில் மீள்வது கொண்டு பகாவாகும்-நிலைப்பதுவாகும்.
5. அஸ்ஸய்று பில்லாஹிاسّير باالله -அல்லாஹ்வைக் கொண்டு நடப்பது அல்லாஹ் உடைய சிபத்துகள், அஸ்மாக்களைக் கொண்டு பூணுவதாகிய பகாவுல் பகாவாகும்.-நிலைப்பதிலும் நிலைப்பதுவாகும்.
6. அஸ்ஸய்று மஅல்லாஹிاسّير مع الله-அல்லாஹ் உடன் நடப்பது மேலுலகத்திலும், கீழுலகத்திலும் ஆட்சி, அதிகாரம் செய்வதாகும்.
 

வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்குர்ஆன் ஆதாரங்கள்

ولله المشرق والمغرب فاينما تولّوا فثمّ وجه الله
 

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியது. எப்பக்கம் (புலனால் அல்லது புத்தியால்) முன்னோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (தத்சொரூபத்தின் வெளிப்பாடு) இருக்கிறது (2:115)


ونحن اقرب اليه من حبا الوريد

நாம் அவனளவில் (அவனுடைய சக்திகளின் அந்தரங்கமாக இருக்கிறவிதத்தில்) அவனுடைய பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம். (50:16)


وهو معكم اينما كنتم

நீங்கள் எங்கிருந்தாலம் (சகலத்திலும் அவனது உஜூது ஊடுறுவி இருக்கிற விதத்தில்) அவன் உங்களுடன் இருக்கிறான். (57:4)


ونحن اقرب اليه منكم ولاكن لا تبصرون

(மரண தருவாயிலிருக்கிற) அவன் அளவில் (அவனுடைய உறுப்புகளாகவும், சக்திகளாகவும் வெளிப்பாடாக இருக்கிற விதத்தில்) உங்களை விட நாம் மிக நெருக்கமாக இருக்கிறோம். என்றாலும் நீங்கள் (அதன் அந்தரங்கத்தை) பார்த்தறிய மாட்டீர்கள். (56:85)


انّ الّذين يبا يعونك انّما يبايعون الله يد الله فوق ايديهم

(நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கை கொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில்தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது.(48:10)


هو الاوّل والآخر والضاهر والباطن وهو بكلّ شيي عليم

அவனே (சகல சிருஷ்டிகளைக் காண) முந்தியவன்,(மள்ஹறு-வெளிப்பாடு ஸ்தானங்களில்  வெளிப்படுவதில்) பிந்தியவன், (சிருஷ்டிகளின் கோலங்களைக் கொண்டு) வெளியானவன், (சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளை விட்டும்) உள்ளானவன். அவன் சர்வ பொருள்களைக்  கொண்டும் அறிந்தவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். (57:3)


وفي انفسكم افلا تبصرون

உங்களது நப்ஸுகளிலேயே (வஹ்தத்துல் உஜூதுடைய அத்தாட்சிகள்) இருக்கிறது. நீங்கள் பார்க்க வேண்டாமா? (51:21)


واذا سئلك عبادي عنّي فانّي قريب

(நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன் (என்று சொல்வீராக!) (2:186)


وما رميت اذ رميت ولاكنّ الله رمي

(நபியே! காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது(வெளியில் உங்களில் நின்றும் வீசும் கோலம் உண்டானாலும்) நீங்கள் வீசவில்லை. எனினும் (உள்ளாகவும், அந்தரங்கமாகவும் இருக்கிற) அல்லாஹ் வீசினான். (8:17)

وكان الله بكلّ شيي محيطا அல்லாஹு தஆலா (ஒரு அணுவும் கூட விடாது சகலத்திலும் ஊடுறுவிருக்கிற விதத்தில்) சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகிவிட்டான். (4:126)

الا انّه بكلّ شيي محيطஅறிந்து கொள்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளைக் கொண்டு சூழ்ந்திருக்கிறான். (41:54)

வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்ஹதீது ஆதாரங்கள்.


اصدق كلمة قالها الشاعر كلمة لبيد—
الا كلّ شيئ ما خلا الله باطل. (متفق عليه)

(அறபி) கவிஞர் சொன்ன வார்த்தைகளில் உண்மையான வார்த்தை லுபைது கவிஞரின் 'அறிந்து கொள்! அல்லாஹ் அல்லாத அனைத்து பொருள்களும் பாதிலாகும் – தரிபாடாகாத இல்லாமையாகும்' என்று சொன்னதாகும்.
-புகாரி, முஸ்லிம், மிஷ்காத் ஹதீது எண் 4778


فماذا بعدالحقّي الّا الضّلال

மெய்ப்பொருளுக்கு (அல்லாஹு தஆலாவின் உஜூதுக்கு) பின்னால் (வழிகேடான) பொய்யே அல்லாதில்லை (10:32) என்ற திருக்குர்ஆன் வசனத்தில் இருப்பது போன்று சிருஷ்டிகளுக்கு ஹக்கு சுபுஹானஹுவதஆலாவின் உஜூது பைழான் -உலிப்பதினால் அன்றி அறவே உஜூது இல்லை.


انّ احدكم اذا قام الي الصّلوة فانّما يناجي ربّه بينه وبين القبلة

உங்களில் ஒருவன் தொழுகைக்கு நின்றால் அவன் தன் ரப்பு-போசகனோடு வசனிக்கிறான். ஆகவே அவனுடைய ரப்பு (தஜல்லியின் புறத்தினால்) அவனுக்கும் கிப்லாவுக்குமிடையில் இருக்கிறான்.
(அல்ஹதீது)


لا يزال عبدي يبقرّب اليّ لا لنّوافل حتي اُحبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع له ولصره الّذي يبصر به ويده الّتي يبطش بها ورجله الّتي يكسي بها   رواهالبخاري

'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும் நான் அவனை உகந்து விட்டால் (بالقوّةபில்குவ்வத்தி-அமைப்பில் இருந்ததைப் போல் بالفعلபில் பிஃலி-வெளியிலும்) அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும் அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகிவிடுகின்றேன்.'
நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260

عن ابي هريرة رضي الله عنه قال قال رسوالله صلّي الله عليه وسلّم انّ الله يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني……استطعمتك فلم تطعمني………..استسقيتك فلم تسقني…………رواع مسلم

நிச்சயமாக அல்லாஹுதஆலா கியாமத் நாளில் சொல்வான்:-

ஆதமின் மகனே! (மனிதனே!) நான் (சிருஷ்டியான மற்தபாவில்-படித்தரத்தில் இறங்கின புறத்தில்) வியாதியஸ்தனாக இருந்தேன். என்னை சுகம் விசாரிக்க வரவில்லை. உணவளிக்க தேடினேன். எனக்கு உணவளிக்க வில்லை. தண்ணீர் புகட்டத் தேடினேன். எனக்கு தண்ணீர் புகட்டவில்லை…(நீண்டதொரு ஹதீதின் சுருக்கம்)
-மிஷ்காத் ஹதீது எண்:1523


والّذي نفس محمّد بيده لو انّكم تدلّيتم بحبل الي الاض لهبط علي الله ثمّ قرأعليه الصّلاوة والسلام هو الاوّل والآاخر والباطن وهو بكلّ شيي عليم

முஹம்மதுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக தண்ணீர் மொள்வதற்கு கயிற்றுடன் வாளியை பூமியில் இறக்குவீர்களேயானால் அது அல்லாஹ்வின் மேல் விழும். பின்பு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனே முன்னவன், அவனே பின்னவன், அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், அவன் சகல பொருள்களையும் அறிந்தவன் என்ற (57:3) திருவசனத்தை ஓதினார்கள்.
நூல்: திர்மிதி

இறைவா! எங்களது அகத்தையும் புறத்தையும் மஃரிபத் எனும் ஞான ஜோதியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக! எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு-ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு-அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்;ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

முற்று பெற்றது.

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்-Real Fact of Noorie Sah Tareeka

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்!

1. நூரிஷாஹ்வின் ஞானவழித் தொடர்

2.யார் இந்த ஸெய்யித் அஹ்மத் பரேலவீ?

3.நூரிஷாஹ் தரீகாவின் ஷெய்குமார்களின் நிலைகள்

4.நூரிஷாஹ் தரீகாவின் மெய்(அஞ்)ஞானமும், ஸூபிகளின் மெய்ஞ்ஞானமும்

5.உண்மை ஸூபியாக்களின் நிலை

6.ஆதார நூல்கள்

தமிழகத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன் மெய்ஞ்ஞான வழி, தரீகத், சுன்னத் வல் ஜமாஅத், ஷெய்குமார்கள் என்ற போர்வையில் நுழைந்த இயக்கம்தான் நூரி ஷாஹ் தரீகா ஆகும். ஆரம்பத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சார்ந்த நூரி ஷாஹ் என்பவர் தன்னை காதிரிய்யா, ஜிஷ்திய்யா தரீகாக்களின் ஷெய்கு என்று பிரபலபடுத்திக் கொண்டுதான் நுழைந்தார். பின் மக்களிடையே தான் ஸில்ஸிலாயே நூரிய்யா என்ற தரீகத்தின் ஸ்தாபகர் என்று கூறிக் கொண்டார். நன்கு நாவன்மையுடைய அவருடைய பேச்சில் மதிமயங்கி கேரளா, தமிழ்நாடு முஸ்லிம்களில் ஆலிம்களும் அவரிடம் பைஅத் வாங்கினார்கள்.

இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இவரது ஷெய்கான கௌஸ் அலி ஷாஹ் என்பவர் தமது தரீகாவை நிறுவி அங்கும் முரீதுகள் கொடுத்து வந்தார். இந்நிலையில்தான் நூரி ஷாஹ் தமிழகத்தில் நுழைந்தார். இவ்விருவர்களுக்கிடையே பிரச்சனைகள் தோன்றி இருவரும் சொற்போரில் ஈடுபட்டனர். அவன் என் முரீது இல்லை மரீதாகி விட்டான் என்று ஷெய்கு கூறும் அளவிற்கும், ஷெய்கின் முரீதுகள் நூரி ஷாஹ்வா? நாரி ஷாஹ்வா?, என்று வால்போஸ்டர் ஒட்டி பிரபலப்படுத்தியிருக்கும் அளவிற்கு பகைமைகளை வளர்த்துக் கொண்டனர்.

கேரளா சென்று அங்கும் தன் தரீகாவை பரப்பிய நூரிஷாஹ் பட்டிக்காடு என்னும் ஊரில் ஜாமிஆ அரபிய்யா நூரிய்யா என்ற அரபு கல்லூரி (மத்ரஸா) யை தோற்றுவித்தார்.

மக்கள் இவர் சேவையாற்றுகிறார் என்று எண்ணி இவர் தரீகாவில் சேரவாரம்பித்தனர். இவரின் தரீகாவில் மக்கள் கூட்டம் அதிகமாகவே தன் கொள்கைகளை பகிரங்கமாக பேசவாரம்பித்தார். இவரின் இந்தப் போக்கை கண்ட கேரளாவின் சமஸ்த கேரளா ஜம்இய்யத்து உலமா சபையினர் மௌலவி கே.கே. அபூபக்கர் முஸ்லியார் தலைமையில் ஒன்று கூடி இவரின் கொள்கை மற்றும் தரீகத்தை ஆய்வு செய்து கடந்த 16-12-1974 அன்று, 'நூரிஷாஹ் தரீகா இஸ்லாம் மார்க்கத்தின் ஷரீஅத்திற்கு மாற்றமானது என்றும், ஆகவே பொதுமக்கள் இத்தரீகாவில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்குமாறு மக்களை வேண்டி' தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினாhர்கள்.

அதன்பின் கேரளா பட்டிக்காடு நூரிய்யா மத்ரஸாவை விட்டும் நூரிஷாஹ் தரீகாவினர் வெளியேற்றப்பட்டு சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் அந்த நிர்வாகத்தை எடுத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

15-5-77 அன்று ஹாஜி எம். அப்துல் ஹகீம் சாகிப் (ஆயங்குடி) அவர்களால் வெளியிடப்பட்ட பிரசுரத்தில், நாகப்பட்டினம் நஸீஹத்துல் இஸ்லாமிய அங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு கேரளா ஜன்னத்துல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் இ.கே. ஹஸன் முஸலியார்(பாகவி) அளித்த விளக்கவுரையின் இறுதியில் 'இத்தரீகாவானது மார்க்கத்திற்குப் புறம்பானதும், அதனுடைய அந்தரங்கம் குஃப்ரின்பால் சேர்ந்ததுமாகும்' என்றும்,

எவர் தன்னை ஷைகு என்று தாவா செய்து கொண்டு மேற்கூறிய செயல்களை செய்கின்றாரோ அவர் முழுப் பொய்யராவார். குழப்பத்திற்கும் மனோ இச்சைக்கும் அவர் ஷைகாவார். அவரை விட்டு நீங்கவதும், முஸ்லிம்களை விட்டு அவர்களை விரட்டுவதும் வாஜிப் எனும் கடமையாகும் என்றும் கூறியுள்ளார்கள்.
ஏன் இந்த பத்வா? அதில் கொடுக்கப்பட்டிருந்த காரணங்கள்:

1.    'முஹம்மத்', அஹ்மத்' என்பவற்றை திக்ரு செய்வது மார்க்கத்திற்கு முரண்பட்டது. பழிப்பிற்குரிய தீமையாகும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரியாதையைக் கிழிப்பதாகும்.
2.    பெண்களுடன் அவரும் அவருடைய கலீபாக்களும் நேரடியாகச் பேசுவதும், பெண்கள் ஷைகுடைய கால், கைகளை பிடித்து விடுவதும் ஹராமானதாகும் என்பவை முக்கியமானவை.

இவ்வாறு ஆலிம்களாலும், உலமா சபையினராலும் விரட்டப்பட்ட ஷைத்தானியத்தான தரீகாவின் அடிமூடு (மூல பிதாக்கள்) எத்தகையவர்கள், ஞானவழித் தொடர் எத்தகையது? அவர்கள் ஞானம் பற்றிய கருத்த என்ன? தற்போதுள்ள கலீபாக்களின் நிலை என்ன? அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளுக்கு ஒப்பானதா? முரண்பட்டதா? என்று சற்று ஆராய்வோம்:

நூரிஷாஹ்வின் ஞானவழித் தொடர்:

தரீகா என்றால் மெய்ஞ்ஞான நாதாக்களின் வழித் தொடர் (ஸில்ஸிலா) அவசியம். அத் தொடர் கண்ணியமிக்கவர்களாகவும், சுன்னத் வல் ஜமாஅத்தினர்களைச் சார்ந்தவர்களாகவும் உள்ளவர்களைக் கொண்டதாக இருப்பது அவசியத்திலும் அவசியம்.கனவில் பெற்றதாக இருக்கக் கூடாது. வழித் தொடர் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்பு தம் ஷெய்கிலிருந்து முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்று அல்லாஹ்வை அடைய முடியும்.

நூரிஷாஹ்வின் தொடரை பார்ப்போமானால், அவர் 8 தரீகாவிற்கு கிலாபத் பெற்றவராகவும், தன்னை ஷெய்கு என்றும் கூறி நூல் வெளியிட்டுள்ளார். இவரின் சுஹரவர்திய்யா, நக்ஷபந்தியா தரீகாக்களின் தொடர்களில் ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடுத்து அவர்களின் மகனார் ஸெய்யிதினா இமாம் ஹஸன் அடுத்து (அவர்களின் மகனார்) ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

உலகிலுள்ள எந்த ஸில்ஸிலாவிலும் இந்த வழிமுறை இல்லை. மற்றும் வரலாற்றுக் குறிப்புகளோ, ஆதாரங்களோ காணக்கிடைக்கவில்லை.

'தபகாத்திய்யா'சில்சிலாவில் 7, 8வது தொடருக்குப் பின் நீண்டதொரு ஷெய்குமார்கள் இடைவெளி உள்ளது.

அடுத்து, ஸில்ஸிலாயே அக்பரிய்யா உவைஸிய்யாவில் நூரிஷாஹ் 5வது ஷெய்காக வருகிறார். சுமார் 1430 வருடங்களுக்கு இந்த தரீகாவில் 5 ஷெய்குமார்கள்தானா?

ஆக தங்களுக்கு தகுந்தவாறு ஸில்ஸிலா தொடர்களைத் தயாரித்துள்ளார் என்பதும், இந்த ஸில்ஸிலாக்கள் போலியானவை என்பதும் தெரியவருகிறது. அப்படியிருக்க, இந்த தொடரில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிஸ்பத் எவ்வாறு கிடைக்கும்.?

இதில் மிக முக்கியமான விஷயம் யாதெனில், நக்ஷபந்தியா தொடரில் 39 வதாகவும், நக்ஷபந்தியா உவைஸிய்யா, அக்பரிய்யா தரீகாக்களில் 31 வதாகவும் வரும் ஷைய்கு ஸையித் அஹ்மத் பரேலவீ என்பவர். இவரின் அடக்கஸ்தலம் பாலாகோட் (பஞ்சாப்)டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த ஸெய்யித் அஹ்மத் பரேலவீ?

இந்த ஸெயித் அஹ்மத் பரேலவீ என்பவர் யார்? இவரின் கொள்கை என்ன? இவரின் மரணம் எப்படி சம்பவித்தது? இவருக்கு அடக்கஸ்தலம் இருப்பது என்று சொல்லப்பட்டது உண்மையா? என்று பார்க்கும்போது,

இவர் ஒரு பக்கா வஹ்ஹாபி ஆவார். தப்லீக் ஜமாஅத்தின் மூல குருவான மௌலவி இஸ்மாயில் திஹ்லவி என்பவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தவ்ஹீது' என்னும் வஹ்ஹாபிய சித்தாந்த நூலை 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் மொழிபெயர்த்து இந்தியாவில் வெளியிட்டவர். இதில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். மேலும் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமான கொள்கைகளை எழுதியுள்ளார்.

இவரைப் (திஹ்லவியைப்) பற்றிக் கூட நூரி ஷாஹ் 'இஸ்மாயீல் திஹ்லவி, ரஷீத் அஹ்மது கங்கோஹி போன்றோர் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கைகளை பரப்ப தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் இவர்களால் முஸ்லிம்களின் ஏகத்துவக் கோட்டை கலகலத்துவிட்டது' என்றும் பேசியதை ஷைகுனா செய்யது நூரிஷாஹ், ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் (தொகுப்பு: கனி சிஷ்தி ) பக்கம் 60, 61ல் கூறப்பட்டுள்ளது.

இவரின் ஞான குருதான் மௌலவி ஸையித் அஹ்மது பரேலவீ என்பவர். இவருடன் இவரது சிஷ்யர் இஸ்மாயில் திஹ்லவியும் சேர்ந்து தங்களது வஹ்ஹாபியக் கொள்கைகளை முஸ்லிம்களிடையே பரப்பவும், ஆங்கிலேய அரசிற்கு கூலியாக செயல்பட்டனர். இவர்களின் கொள்கைகள் மிக மோசமானதாக இருந்ததால் பட்டாண் முஸ்லிம்களால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு தூர வீசப்பட்டனர்.

ஆனால் இவர்களை இந்த தரீகாவினரும், தப்லீக் இயக்கத்தினர்களும் 'தியாகி' என்கின்றனர். இவர்கள் தியாகியாக ஆவதற்கு முஸ்லிம்களின் எதிரிகளோடு ஜிஹாத் செய்தார்களா? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. மேலும் அப்போது சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்தியர்களுக்கு எதிராகவும், ஆங்கில அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர் என்பதை இவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து எடுத்துக் காட்டி 'பாஸ்பான்' எனும் பத்திரிகை ஆசிரியர் மௌலானா முஸ்தாக் அஹ்மத் சாஹிப் நிஜாமி(இலாஹாபாத்) அவர்கள் எழுதிய நூலான 'கூன்கே ஆன்ஸு'(இரத்தக் கண்ணீர்) எனும் நூலிலிருந்து பார்த்தால் உண்மை புரியும். அதன் ஆதாரங்களை இங்கே தருகிறேன்.

1.    'ஸையத் சாஹிப்(பரேலவி)யுடன் முஜாஹிதீன்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர். உடன் மௌலானா இஸ்மாயீல்(திஹ்லவி) உடைய ஆலோசனையின் பேரில் இலாஹாபாத்தைச் சார்ந்த செல்வந்தர் ஷைகு குலாம் அலியவர்கள் மூலம் தொடர்பு கொண்டு வடமேற்கு மாகாண லெப்டினட் கவர்னருடைய சமூகத்திற்கு 'நாங்கள் சீக்கியர்களுடன் ஜிஹாத் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறோம். இதில் ஆங்கிலேய அரசுக்கு ஆட்சேபணை ஏதமில்லையே!' என்று கேட்டோம். அதற்கவர்கள் …….. எங்களின் செயல்திட்டம் மற்றும் அமைதிக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதிருக்குமேயானால் நமக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று லெப்டினட் கவர்னர் சாஹிப் தெளிவாக எழுதி விட்டார்'.

              நூல்:-ஹயாத்துத் தையிபா பக்கம் 302
              தொகுப்பு: மீர்ஜா ஹைரத் தெஹ்லவி.

இந்திய நாட்டை அப்போது ஆக்கிரமித்து அட்டூழியங்களும், கொடுமைகளும் செய்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசை எதிர்த்த மார்க்கப்போர் புரிய இந்திய உலமாக்கள் பத்வா வெளியிட்டு களத்திலும் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்(அதற்காக மௌலானா பஜ்லுல் ஹக் ஹைதராபாதி ரஹிமஹுல்லாஹ் போன்றோர் தம் இன்னுயிரை நீ;த்தனர்) ஆங்கியேல அரசின் கைக்கூலிகளாக செயல்பட்டு வந்தஇந்த சையத் அஹ்மது பரேலவி, இஸ்மாயில் திஹ்லவி போன்றோர் அவர்களின் அணுசரணை, தயவிற்காக கடிதம் எழுதுகின்றனர் பாருங்கள். இந்த உதவியுடன் செய்யும் சண்டைகளை 'ஜிஹாத்' என்று சொல்லி ஜிஹாத்திற்கு புதுவிளக்கம் அளிக்கின்றார்கள் இவர்கள்.

2.    'கல்கத்தாவில் மௌலவி இஸ்மாயில் (திஹ்லவி) ஜிஹாதைப் பற்றி பயான் செய்து கொண்டிருக்கும்போது, ஒருவர் எழுந்து நின்று, 'நீங்கள் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய பத்வா கொடுப்பதில்லை என்று கேட்டார். அதற்க மௌலவி இஸ்மாயில்…… 'ஆங்கிலேயர்களுடன் ஜிஹாத் செய்வதென்பது எவ்வகையிலும் வாஜிபில்லை…….அவர்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால் அப்படித் தாக்குவொரை எதிர்த்துப் போரிட வேண்டியது முஸ்லிம்களது கடமையாகும்….'
                  
                              நூல்: ஹயாத்துத் தையிபா பக்கம் 296

இவர்களின் இந்த ஆங்கிலேய பாசம்தான் இவர்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக செயல்படத் தூண்டிற்று. அதனாலேயேதான் இஸ்மாயில் திஹ்லவி ஹஜ் சென்றிருந்த சமயம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தவ்ஹீது' எனம் நூலை எடுத்து வந்து 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைள் கூறப்பட்டிருந்தன.

இந்தக் கொள்கைகளை இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்பி ஒன்றுபட்டு போராடும் முஸ்லிம்களை சிதறடிக்கச் செய்து பலவீனப்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஜிஹாத் பத்வாவை பலமிலக்கச் செய்வதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது.

இதற்காக இவர்கள் ஊர்ஊராக சென்றனர். அதற்கு ஆங்கிலேய அரசம் உதவிக்கரம் பலவகையிலும் செய்து கொண்டே வந்தது.

சையத் அஹ்மத் பரேலவிக்கு ஆங்கிலேயர் செய்த உதவி பற்றி அபுல்ஹஸன் அலி நத்வியால் எழுதப்பட்ட 'ஸீரத்தே ஸையத் அஹ்மத்' எனும் நூலின் முதல் பாகம் பக்கம் 190 ல் கூறப்பட்டுள்ளது:

'இதற்குள் குதிரை மீது சவாரியாகி ஒரு ஆங்கிலேயன் சில பல்லக்குளில் உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு (எங்கள்) படகுக்கருகில் வருவதைப் பார்த்தோம். அருகில் வந்த ஆங்கிலேயன்,…….பாதிரிசாஹிப் எங்கேயிருக்கிறார்? என்று வினவினான். உடனே ஹஜ்ரத் அவர்கள் படகிலிருந்து 'நான் இங்கே இருக்கிறேன்' என பதில் தந்தனர்.

'…….தங்களுக்காக சூரியன் மறையும் வரை உணவு தயாரிப்பதில் மும்முரமாயிருந்தேன். இது கேட்டஸையத் சாஹிப் (பரேலவி) அவர்கள், கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களை தமது பாத்திரங்களுக்கு மாற்றுமாறு ஆணையிட, உணவு பெற்றுக் கொள்ளப்பட்டு கூட்டத்தினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது…..'

அடுத்து, சையத் சாஹிப்(பரேலவீ) ஜிஹாதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த நேரம் அப்போது டில்லியைச் சார்ந்த தனவந்தர்கள் மூலமாக முஹம்மது இஸ்ஹாக் என்பவரிடமிருந்து சையத் சாஹிபுடைய பெயருக்கு ஏழாயிரம் ரூபாய்க்கான ஒரு உண்டி(ஒரு வகை செக் போன்றது) அனுப்பப்பட்டது….'

நூல்: தாரீகே அஜீபஹ் பக்கம் 89

இவ்வாறு பல்வேறு வழிகளில் பணமும், உணவும் இஸ்லாத்தைக் கூறுபோடும் பணியை செய்வதற்காக செய்யித் அஹ்மத் பரேலவிக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. மேலம் ஆங்கிலேய அரசின் ஆதரவும் இருந்தது. இந்த தைரியத்தில்தான் செய்யத் சாஹிப் சில காரியங்களைச் செய்தார். அவர் செய்த இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களை பார்ப்போம்.

'நாங்கள் சையத் சாஹிப் அவர்களைத் தேடித் தேடி அலைந்து கொண்டே ஒரு நாள் ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ளோரிடம் விசாரித்தபோது, புதிதாக கட்டப்பட்டிருந்த கப்ரு அப்போதுதான் இடித்துத் தள்ளப்பட்டிருந்ததென்பதை அறிந்தோம். உயரமாக கப்ரு இருந்த காரணத்தினால் சையத் சாஹிப் அவர்கள்தான் அதை இடிக்கச் செய்தார்கள் என்பதை தெரியவந்தபோது……'

நூல்: அர்வாஹே ஸலாஸஹ் பக்கம் 140

இவ்வாறு மகான்களின் கப்ருகளை இடித்து தரைமட்;;டமாக்கியவர் ஒரு தரீகாவின் ஷெய்கு என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? அந்த தரீகாதான் எப்படி இருக்கும்?

தற்போது பார்த்தால் இந்த தரீகாவின் ஷெய்குமார்களுக்கு உயரமான கப்ருகள்? கந்தூரிகள்? அதை கொண்டாடுவதற்குள் பிரச்சனைகள், கோர்ட் வரை செல்கின்றனர். என்னே இவர்களின் கேடுகெட் கொள்கை! இதுதான் நூரிஷாஹ் தரீகாவின் இலட்சணம்.

ஜிஹாத் செய்யப்போகிறேன் என்று மார்தட்டி சென்ற இந்த செய்யித் சாஹிப் ஜிஹாதை உண்மையில் செய்தாரா?

தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் இல்யாஸ் மௌலவியின் குரு ரஷீத் அஹ்மது கங்கோஹி தமது 'தத்கிரத்துர் ரஷீது' பாகம் 2 பக்கம் 270ல், 'அம்பேட்டவி நகரில் வசிக்கும் ஹாபிஸ் ஜானி என்பவர் தம்மிடம் கூறியதாக, '……ஹஜ்ரத்மார்களும் செய்யித் சாஹிபுடன் சேர்ந்து ஜிஹாதுக்காக சென்று கொண்டிருந்தனர். யாகிஸ்தானுடைய அதிகாரி 'யார் முஹம்மது கான்' என்பவருடன் சையத் சாஹிப் அவர்கள் முதன்முதலாக ஜிஹாத் செய்தனர்' என்று கூறுகிறார்.

இதே வாசகங்கள் ஸீரத்தே ஸையத் அஹ்மத் (ஆசிரியர்: அபுல்ஹஸன் நத்வி) பாகம் 1, பக்கம் 190ல் காணக் கிடக்கிறது.

இஸ்லாமியர்களுடன் அதுவும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுடனும், தங்களது கொள்கையை ஏற்காதவர்களுடனும் சண்டை செய்வதை இவர்கள் ஜிஹாத் என்கின்றனர். இதுதான் வஹ்ஹாபிகளின் தலைவன் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கொள்கை. இதற்காகத்தான் இவர்கள் பாடுபட்டார்கள். இதைத்ததான்,

'ஸையத் அஹ்மத் மற்றம் மௌலவீ இஸ்மாயீல் திஹ்லவியும் 'பீச்தார்' எனும் இடத்திற்கு போய் சேர்ந்தபோது, அங்குள்ள தனவந்தர் 'பதஹ்கான்' என்பவர் துவக்கத்தில் இவர்களுக்கு மிகவும் மரியாதை பணிவிடை செய்து வந்தார். இவர்களும் சிறிது நாட்கள் வரை அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் இவர்களிருவரும் அங்குள்ளோரிடம் அநியாயமும், அக்கிரமும் செய்ய ஆரம்பித்தனர். அங்கு வாழ்ந்த மக்களை தீய நெறி கொண்டோரென்றும், தீய மார்க்கமுடையோரென்றும் கூறத் துவங்கினர். நிலைiமை மிகவும் மோசமாகவே இவர்களிருவரையும் அதே ஸ்தலத்'தில் பட்டாண்கள் தீர்த்து விட்டனர். தமது அக்கிரம அழிச்சாட்டியத்தால் அவ்விருவரும் பட்டாண்களால் கொல்லப்பட்டனர்.'

(நூல்: கூன்கே ஆன்ஸு முதல்பாகம் பக்கம் 36)
 

கேடுகெட்ட கொள்கைக்காக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தியதற்காக கொல்லப்பட்ட இந்த கேடுகெட்ட ஸைய்யித் அஹ்மத் பரேலவீ ஒரு தரீகாவின் ஷெய்கு என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவ்வாறு இருக்கும் தரீகாதான் சுன்னத் வல் ஜமாஅத் தரீகாதானா? சிந்தித்துப் பாருங்கள்.

ஆக நூரிஷாஹ்வின் தரீகா போலியானது என்பதும், மக்களை ஏமாற்ற தயாரிக்கப்பட்ட ஸில்ஸிலாவைக் கொண்டது என்பதும் வழிகெட்ட தலைவர்களை குருமார்களாக கொண்டது என்பதும் மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் புலனாகிறது. ஆக இத் தரீகாவில் பொதுமக்கள் சேருவது கூடாது என்று மேற்கூறிய பத்வாக்கள் சொன்னது உண்மை என்றாகிறது.

நூரிஷாஹ் தரீகாவின் ஷெய்குமார்களின் நிலைகள்:

1.    நூரிஷாஹ் தரீகாவின் செய்குவான கௌஸலி ஷாஹ் என்பவர் எழுதியதாக கூறப்படும் 'நூருன்னூர்' எனும் நூலின் பக்கம் 9 ல், 'தப்லீக் ஜமாஅத்தின் மூலக் குருமார்களில் ஒருவரான, மக்கா, மதினா உலமாக்களால் 'காபிர்' என்று முத்திரை பத்வா கொடுக்கப்பட்ட, மீரட் மௌலானா அப்துல் ஹலீம் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் (அல் இம்தாது எனும் பத்திரிகையில் தன்னை ரஸூல் என்று தாவா செய்த அவரின் தீயக் கொள்கை பற்றி விசாரிக்கப்பட்டு அதற்கு அவர் பதில் தராமல் தான் கொண்ட கொள்கையிலேயே உறுதியாக இருந்ததால்) காபிர் என்று பத்வா கொடுக்கப்பட்டவரும், பற்றி ஹிப்ளுல் ஈமான் என்ற நூலில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவை பேயன், பைத்தியக்காரன், மதளைக் குழந்தைகளின் அறிவோடு ஒப்பிட்டுப் பேசியவரும் இன்னும் அவர் எழுதிய பல்வேறு நூல்களில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சித்தவருமான மௌலானா அஷ்ரப் அலி தானவி என்பவரைப் பற்றி மகிவும் போற்றிப் புகழ்ந்து எழுதியது மட்டுமில்லாமல், அவருக்கு ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று துஆவும் கேட்டுள்ளார்.

2.    தன்னுடைய குருவின் வழியைப் பின்பற்றிதான் சிஷ்யரான நூரிஷாஹ்வும் 'இறைவனுடைய காதலை விட மஜ்னூன் காதல் பெரிதா? என்ற தலைப்பின் கட்டுரையில் அஷ்ரப் தானவிக்கு கொடுக்கப்பட்ட காபிர் பத்வா போலி என்றும், ஷம்சு தப்ரேஜ், ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி போன்றோர்களுக்கு கொடுக்கப்பட்டதைப் போல் இவருக்கும் பத்வா கொடுக்கப்பட்டது' என்று ஷைகுனா செய்யிது நூரி ஷாஹ் ஷைகுனா ஜுஹூ ஷாஹ் நினைவு மலர் பக்கம் 42 ல் எழுதியுள்ளார்.

ஷம்சுத் தப்ரேஜ், ஜுனைதுல் பக்தாதி நாயகங்கள் ரலியல்லாஹு அன்ஹுமா போன்றோருக்கு எப்போது பத்வா கொடுக்கப்பட்டது? நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்கள் தரக்குறைவாக விமர்சித்தார்களா? தங்களை ரஸூல் என்று வாதித்தார்களா? (நவூதுபில்லாஹி மின்ஹா) எதை எதோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் பாருங்கள் இந்த மார்க்கம் தெரியாதவர்.

இதுபற்றி கேட்டால் அஷ்ரப் அலி தானவி திருந்திவிட்டார் என்றார்கள். அதற்கு ஆதாரம் தாருங்கள் என்று அஹ்லெ சுன்னத் மாத இதழ் மூலம் கேட்டு  சுமார் 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுவரை அவர்களால் தரமுடியவில்லை. இருந்தால்தானே தருவதற்கு. இன்றுவரை அஷ்ரப் அலி தானவி எழுதிய அந்த கேடுகெட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் அவருடைய சில்சிலா கலீபாக்களால்.இவ்வாறிருக்க இந்த அஷ்ரப் அலி தானவியை ஏற்ற இந்த தரீகாவை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

3.    தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது பழமொழி. குருவின் கலீபாவான லால்பேட்டை பஷீர் மௌலானா ஷெய்கு பைஜி ஷாஹ்வின் நிலையை பார்க்கப்போனால், ஷைகுனா செய்யிது நூரி ஷாஹ் ஷைகுனா ஜுஹூ ஷாஹ் நினைவு மலர் எனும் நூலில் அவரது வாழ்க்கை சரிதத்தை கூறும்போது பக்கம் 123 ல்,
'கோட்டைக்குப்பம், நெல்லிக்குப்பம், பாண்டிச்சேரி, கடலூர், திண்டுக்கல் போன்ற தப்லீக் இஜ்திமாக்களில் பிரதான பேச்சாளராக இடம் பிடித்தனர்'

'நூருன்னூர்' எனும் நூலின் பக்கம் 11ல் '(பைஜி ஷாஹ்) தப்லீக் இயக்கத்தில் சேர்ந்து 19 வருடங்கள் சேவை செய்தார்கள்' என்று பெருமையாக கூறப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத் ஒரு வழி கெட்ட இயக்கம் அதில் சேரக்கூடாது என்று சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் பத்வா வெளியிட்டிருக்க இவர் அதில் சேர்ந்து 19 வருடங்கள் பணியாற்றினார் என்று சொல்லப்படுவது இவரின் கொள்கை எத்தகையது என்பது விளங்குகிறது.

அதே நூல் பக்கம் 11ல்  'ஆரம்பத்தில் சென்னையில் வாழ்ந்த ஷைகுநாயகம் பின்னர் லால்பேட்டைக்கு ஹிஜ்ரத் செய்தனர்' என்றும் கூறியதன் தாத்பரியம் என்ன? ஹிஜ்ரத் என்றால் என்ன? என்று கூட விளங்காமல் உளறி கொட்டியிருக்கின்றனர்.

மேலும் தாய்,தந்தை சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வசியம் செய்து வைத்ததையும், பலருக்கு கட்டப் பஞ்சாயத்து செய்து வந்ததையும் ஷெய்குனா செய்யிது நூரிஷாஹ் ஷெய்குனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் பக்கம் 123, 127ல் கூறியிருப்பது இவரின் கீழ்த் தரத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது.

3.கடையநல்லூரைச் சார்ந்த எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி என்ற ஐனி ஷாஹ் என்பவர் 'திருக்கலிமாவின் பொக்கிஷம்(பைஜானே ஷைகீ) எனும் நூலில் 'அணிந்துரை' எனும் பகுதியில் கம்பம் அம்பா நாயகம் அவர்கள் இந்த நூலை மதித்து அணிந்துரை வழங்கியிருப்பதாகவம் அவர்கள் எழுதிய சில வாசகங்களை சொல்லி எழுதியிருப்பதாகவும் சில பொய்களை எழுதி புத்தகத்தை அம்பா நாயகம் அவர்கள் மறைந்த பிறகு வெளியிட்டுள்ளார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்த அணிந்துரையை அம்பா நாயகம் அவர்கள் எழுதவோ சொல்லவோ இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக, இந்நூலைக் கண்ணுற்ற அம்பாநாயகம் அவர்களின் மகனார் மௌலவி அப்துல் கபூர் ஸயீதி அவர்களும், அம்பா நாயகத்தின் முரீது கிருஷ்ணாபட்டணம் மௌலவி ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பஈ அவர்களும் நேரடியாக அப்போது பொரவாச்சேரி மத்ரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்களிடம் சென்று, 'நீங்கள் இந்த புத்தகத்தில் அம்பாநாயகம் அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அதை நாங்கள் பார்க்க இயலுமா?' என்று கேட்ட போது, அவர் மழுப்பலாக, 'அவர்கள் சொல்ல நான் எழுதியதில் அவர்கள் கையொப்பமிட்டார்கள'; என்று சொன்னார். அவர்களிருவரும் 'சரி அந்த கையெழுத்தையாவது காட்டுங்கள் நாங்கள் பார்த்துவிட்டுச் செல்கிறோம்' என்றதற்கு, 'iகெயழுத்திற்குப் பதிலாக சிறு கோடு மட்டும் போட்டார்கள்' என்றிருக்கிறார். அவர்களும் விடவில்லை. 'அந்த கோடையாவது காட்டுங்கள்' என்று கூற, அவர் சும்மா தேடுவது மாதிரி நடித்துவிட்டு 'தற்போது இல்லை' என்று சொல்லவும், 'நீங்கள் இதற்கு மறுப்பு வெளியிட வேண்டும'; என்று அவர்களிருவரும் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். அம்பா நாயகத்தின் மகனார் அவர்களும், அவர்களுடன் சென்ற மௌலவி அவர்களும் இன்றும் இருக்கிறார்கள். நடந்த சம்பவத்தை நேரில் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி தம்மை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் இவர்கள் மார்க்கத்தையும், இஸ்லாமிய ஞானத்தையும் எங்ஙனம் வளர்ப்பார்கள்?

கம்பம் அம்பா நாயகம் அவர்களிடம் பைஜி ஷாஹ் எப்படிப் பட்டவர்? அவரின் ஞானம் எப்படி? அஷ்ரப் அலி தானவியை ஒப்புக் கொள்கிறார்களே! என்று கேட்ட கேள்விக்கு, பைஜி ஷாஹ் வின் ஞானம் சரியில்லை. நமது ஷெய்குமார்கள் சொன்ன ஞானமாக இல்லை. அஷ்ரப் அலி தானவியை ஏற்றுக் கொண்ட யாரும் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க முடியாது என்று பதிலளித்தார்கள். இந்தப் பேச்சின் ஒலிப்பதிவு நாடா பலரிடமும் இருக்கிறது.

இதே ஐனிஷாஹ் என்பவர்தான், 'தப்லீக்கும் அதன் தலைவர்களும்' என்ற புத்தகத்தை எழுதி அதில் அஷ்ரப் அலி தானவியின் கேடுகெட்ட கொள்கைகளை விமர்சித்து, அவரின் மேல் விடப்பட்ட குப்ரு பத்வாவையும் எடுத்துக் காட்டியவர். பின்னர் என்ன நடந்ததோ? தெரியவில்லை.

4.    பொரவாச்சேரியில் பணியாற்றிய அப்துஸ்ஸலாம் மௌலவி என்ற ஜமாலிஷாஹ் என்பவர் தப்லீகின் தலைவர்களுள் ஒருவரான மௌலானா ஜகரிய்யா சாஹிபை போற்றிப் புகழ்ந்தும், அவர் மத்ரஸாவில் தான் ஓதியது பெரும் பாக்கியம் என்றும், அஷ்ரப் அலி தானவியை ஒரு மகான் என்றும் போற்றி புகழ்ந்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அஹ்லெ சுன்னத் மாத இதழ் ஜனவரி 1996 வெளிச்சம் போட்டுக் காட்டி ஜமாலி ஷாஹ்வின் முகத்திரையை கிழித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

5.    இதே மாதிரிதான் அஷ்ரப் அலி தானவி வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தின் மூல குருமார்களுள் ஒருவர் என்று நூரிஷாஹ்வின் பிரதம சீடர் முஸ்லிம் குரல் ஆசிரியர் கனி சிஷ்தி கூறியிருப்பதையும் அஹ்லெசுன்னத் பத்திரிகை வெளியில் கொண்டுவந்தது குறிப்பிபடத்தக்கது.

குருமார்களும், சிஷ்யர்களும் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்டு பைத்தியக்காரத்தனமாக உளறிக் கொட்டுவதற்கு என்ன காரணம்? என்று பார்க்கப்போனால், அவர்களின்  நோக்கம் என்ன என்று தெரியவேண்டுமானால், 'ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர்' என்ற நூலில் உள்ள ஒரு சம்பவம் உங்களுக்கு அதை தெரியப்படுத்தும். அது இதுதான்:

'சர்காரின் (நூரிஷாஹ்) முரீதான ரெயலி; டிரைவர் ரெயலி; ஓட்டும்போது தண்டவாளத்தில் பெரிய மிருகம் இருப்பதை பார்த்ததாகவும், அதன்மீது மோதினால் பெரிய விபத்து நடந்திருக்கும் என்று எண்ணியதாகவும் ஒன்றுமே புரியாத நேரத்தில் சர்க்காரே வந்து எதிரில் தோன்றினார்கள். அப்படியே வண்டி நின்று விட்டது.

அப்போதுதான் எனக்கு மனதில் ஒரு ஊசல், கடந்த மாதம் நான் ஷெய்குனாவுக்கு சேர்க்க வேண்டியதை சேர்க்கத் தவறி விட்டேன் என்றும் அதை ஷைகுனாவிடம் அந்த முரீது சொன்னார். அதற்கு சர்க்கார் கிப்லா சொன்னார்கள் 'புரிந்து கொண்டால் சரி'.

நூல்: ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர், பக்கம் 43.

உங்களுக்க இதன் அர்த்தம், தாத்பரியம் இந்த சம்பவத்தின் மூலம் தெரிந்திருக்கும். முரீதுகள் ஷெய்குமார்களுக்கு மாதமாதம் கப்பம் செலுத்துவதும் இதற்காகத்தான் இவர்கள் ஸில்ஸிலா தயாரித்து, தரீகா என்ற பெயரில் ஒன்றை நடத்துகிறார்கள் என்றும் தெரியவந்திருக்கும்.

6.    நூரிஷாஹ்விடம் அதிக நெருக்கமாக இருந்தவரும், பிலாலி ஷாஹ் என்பவருடைய ஷெய்கா இருப்பவருமான ஜுஹூரி ஷாஹ் என்பவரின் வாழ்க்கையை, ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் (இந்த மலரை தொகுத்தவர் நூரிஷாஹ்வின் பிரதம சீடர் கனி சிஷ்தி என்பவர்) என்ற நூல் பக்கம் 100 ல் வர்ணிக்கிறது,:'காயலான் சடை வைத்து அதன்மூலம் கள்ள சரக்குகளை வாங்கி வந்ததன் காரணமாக பலமுறை பல்வேறு சங்கடங்களில் சிக்கிய சம்பவங்கள் நமது யூசுப் ஹழரத் எனும் ஜுஹூரி ஷாஹ் கிப்லா அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது.'

ஆக முரீதுகள் முதல் ஷெய்குமார்கள் வரை அனைவர்களின் வாழ்க்கையையும், கொள்கைகளையும் உங்கள் கண்முன் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதுதான் இந்த தரீகாவின் நிலை.

சிலர் சொல்கிறார்கள், இந்த தரீகாவிலுள்ள இந்த ஷாஹ் தப்லீகை எதிர்க்கிறார். ரஸூலின் முஹப்பத்தைப் பற்றி அழகாக பேசுகிறார். எனவே அவரை மட்டும் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று. இந்தக் கூற்று மிகவும் மோசமான கூற்றாகும். ஏனெனில் இவர்களின் தலைவர்கள், ஷெய்குமார்கள் அனைவர்களும் நமது உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மோசமாக பேசியும், எழுதியும் வந்தவர்களை ஆதரித்து பேசுவது மட்டுமில்லாமல் அவர்களை மகான்கள் என்றும் கூறுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் தொடர்பு கொண்ட தரீகாவில் இருக்கும் வரை யாரையும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

மேலும் பாருங்கள்! வஹ்ஹாபிகள் தங்களது தீவிரவாதப் போக்கை உலகிற்கு காட்டியது தற்போது பத்திரிகைகளில் வெளிவந்து அவர்களின் உண்மை முகம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. இச்சமயத்தில் இந்த வஹ்ஹாபி தரீகாவான நூரிஷாஹ் தரீகாவைச் சார்ந்த மௌலவி அப்துல் நாஸர் மதானி என்பவரின் தீவிரவாதப் போக்கு தற்போது பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதனைப் பார்வையிட:http://timesofindia.indiatimes.com/city/bangalore/Madani-reveals-he-was-member-of-Hyderabad-terror-outfit/articleshow/6435291.cms


நூரிஷாஹ் தரீகாவின் மெய்(அஞ்)ஞானமும், ஸூபிகளின் மெய்ஞ்ஞானமும்:

தங்களின் முரீதுகளால் ஷம்சுல் ஆரிபீன் என்று புகழப்படும் நூரிஷாஹ், 'காதிரிய்யா, சிஷ்திய்யா தரீகாவிற்கு ஒரு ஷைக என்பதாகக் கூறிக் கொண்டு கேரளாவில் நுழைந்தார். பொதுமக்களும் சில உலமாக்களும் அவரை அங்கீகரித்தனர். மக்களின் மனதில் நல்ல மதிப்பை பெற்ற பின்னர், 'தரீகத்தே நூரிஷாஹ்' என்ற ஒரு தரீகாவிற்கு தான் தனியொரு ஷைகு என்பதாக தாவா செய்தார். தம்மை பின்பற்றிய பிரத்தியேகச் சீடர்களுக்குப் பற்பல தவறான கருத்துக்களை போதித்தார். அவை அல்லாஹ்வுடைய வாக்கு என்றும், தான் அல்லாஹ்வின் தானமென்றும் அல்லாஹ்வுடைய காலம் என்றும, அவனுடைய தூதரின் நிழல் என்றும் வாதித்தார்.'
                            

                                                                                                                              (ஆதாரம்: ஆயங்குடி பிரசுரம் 15-5-1977)

என்று அறிமுகம் கொடுக்கப்பட்ட நூரிஷாஹ்வின் ஞானம், மஃரிபா சரியானதுதானா? நமது மகான்கள் சொன்னதுதானா? என்று பார்க்கும்போது, கம்பம் அம்பா நாயகம் அவர்கள் சொன்ன சொல் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அது, அவர்களின் ஞானமே சரியில்லை' என்பதுதான்.

மெய்ஞ்ஞனாத்தைப் பற்றி தெரிந்த மற்ற ஷெய்குமார்கள் சொல்கிறார்கள், 'மெய்ஞ்ஞானத்தைப் பற்றி சரியாக தெரியாமல் உளறும் வார்த்தையாகத்தான்; இருக்கிறது. இது ஞானமே இல்லை' என்று.

ஆனால் இவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் சொல்லும் ஞானமே சரியானது. மற்றவைகள் தவறானது மட்டுமில்லாமல் மற்ற வஹ்தத்துல் வுஜூது கொள்கையைப் போதிக்கும் மற்ற ஷெய்குமார்கள் தவறிழைத்துவிட்டார்கள். காயல்பட்டணம் தைக்கா சாகிபு வலியுல்லாஹ் சறுகிவிட்டார்கள்.ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஙைரியத்து, ஐனியத்து தெரியாமல் இருக்கிறார்கள்.. ஷிர்க் செய்து விட்டார்கள்.(நவூதுபில்லாஹி மின்ஹா) என்பது போன்ற தவறான செய்திகளை உளறிக் கொட்டுகிறார்கள். தாங்கள் போதிக்கும் தவறான ஞானத்தை 'வஹ்தத்துல் வுஜூது' என்றும் சொல்கிறார்கள்.

இவர்கள் போதிக்கும் ஞானம் வஹ்தத்துல் வுஜூது என்றால், வஹ்தத்துல் வுஜூதைப் போதித்த கௌதுல் அஃலம், அப்துல் கரீம் ஜீலி, முஹ்யித்தீன் இப்னு அரபி, அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி, ஷாஹ் வலியுல்லாஹ், ஆலா ஹஜ்ரத் பரேலவி ரலியல்லாஹு அன்ஹும் போன்ற எண்ணற்ற மகான்கள் இவர்கள் சொல்லியபடி எங்காவது, எந்த கிதாபிலாவது போதித்திருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள் என்று இவர்களால் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? அவர்கள் சொன்ன சொல்லிற்கு இவர்கள்தான் தான்தோன்றித்தனமாக வலிந்துரைகள் செய்திருக்கிறார்கள். இந்த வலிந்துரைகள் மகான்களின் கூற்றுகளுக்கு மாற்றமானவைகளாகும். இவர்களின் ஞானத்தின் சூனியத்தைப் பாருங்கள்:

கௌஸி ஷாஹ் சிஷ்தி காதிரி எழுதியதாக 'நூருன்னூர்' என்ற நூலில் இவர்கள் வெளியிட்ட புதிய ஞானம் பற்றிய வரிகள்:

'வுஜூது ஒன்றாகவும், தாத்து இரண்டாகவும் இருக்கிறது. ஒன்று மவ்ஜூதே ஹகீகிய்யான ஜாத். இன்னொன்று மவ்ஜூதே இளாபிய்யான ஜாத்.  (பக்கம் 76)

'அவனோ அவைகள் ஜாத்திலே வேறானவை. உஜூதிலே ஒன்றானவை என்று அறிகிறான்' (பக்கம் 69)

'உஜூதே முத்லக்தான் ரப்புடைய ஜாத்து. அத தானல்லாத இன்னொரு ஜாத்தான அப்துடைய ஜாத்தை தன்னிலே காட்டுகிறது என்று கூறினால் அது சரிதான்.' (பக் 102)

ஹக்குக்கும் ஹல்குக்கும் உதாரணம் கூறும்போது கடலும் அலையும் போல என்றும், தண்ணீரும் பனிக்கட்டியும் போல என்றும்…..சில விஷயங்களை விளக்குவதற்காகக் கூறியுள்ளார்கள்………அவர்களின் உதாரணங்களை அப்படி அப்படியே நம்பிக் கொண்டு வழி தவறி விடுகிறார்கள்.' (பக் 117)

இவர்கள் கூறுவதிலிருந்து வுஜூது ஒன்று, தாத்து இரண்டு என்றும் ஹக்கிற்கும், கல்கிற்கும் கொடுக்கப்படும் உதாரணங்கள் கடலும் அலையும், தண்ணீரும் பனிக்கட்டியும் என்பது தவறானவை என்றும் வாதிக்கிறார்கள்.

நமது ஷெய்குமார்கள், மகான்கள் சொல்லும் ஞானத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகவும், வழிதவற செய்யக்கூடியதாகவும் இருக்கும் இவர்களின் கூற்றை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்படும் தவறுகள் மற்றும் அபாயங்கள் பற்றி இங்கே ஹைதராபாத் ஸூபி மகான் குத்புஜ் ஜமான் மௌலவி முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அல்ஹகீகா' ( தமிழில்: மௌலவி அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு)என்ற நூலில் விளக்கம் தந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறேன்:

தாத், உஜூது என்ற இரு பெயர்கள் ஒரே அர்த்தத்தை கொடுக்கக் கூடியன. எதன்பேரில் சிபாத்துகள் சேர்க்கப்படுமோ அதற்கு தாத்து என்று பெயர் வைப்பதை ஸூபியாக்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்தாகும். ஹகீகிய்யான தாத்தாகிறது உஜூதாகும். சில அனுபவ அறிவில்லாதவர்கள் ஊகித்ததைப் போல ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்திற்கு மேலதிகமானதாக இல்லை.

உஜூதாகிறது அவர்களின் யூகத்தின் படி தாத்தை விட அதிகமானதாக ஆகியிருக்குமானால், தாத்தானது தன்னுடைய தாத்தின் மர்தபாவில் அது தனித்த இல்லாததாகவும், உஜூதின் பக்கம் தேவைப்பட்டதாகவும் ஆக வேண்டி வரும். ஆகவே தேவைப்பட்ட பொருள் இலாஹாக இருப்பதற்கு தகுதியற்றதாகும்.

'தாத்து உஜூதைத் தேடுது' என்ற கூற்று அர்த்தமற்றதாகும். ஏனெனில் தேட்டம் என்பது உஜூதிய்யான விஷயமாகும். உஜூதிய்யான விஷயமாகிறது எவ்வாறு அதமிய்யான விஷயத்திலிருந்து உருவாகும்? அதமிய்யான விஷயமாகிறது அதனடைய மர்தபாவில் இல்லாமலான தாத்தாகும்.

அவர்கள் தாத்தை திஹ்னிய்யான (கற்பனையான) விசயம் என்று சொல்வார்களேயானால், அந்த தாத்தாகிறது இரண்டாவதான மஃகூலான வஸ்துக்களாக வேண்டிவரும். அப்படியானால் அதற்கு வெளியில் உஜூது இல்லை. அப்பொழுது இலாஹ் என்பது வெளியில் உண்டாகாத மஃகூலான(விளங்கப்பட்ட) விசயமாகி விடும்.

இவர்கள் இரண்டு தாத்தை தரிபடுத்துவது ஏனெனில், அஹ்காம், ஆதாறுகளை மேலான அல்லாஹ்வின் பக்கம் சேர்ப்பது இயலாது என்ற காரணத்திற்காக. மேலம் தாத்தும், உஜூதும் ஒன்று என்று சொல்கிறவர்களை காபிராக ஆக்குகிறார்கள்.

தாத்துல் மும்கினை – தீமை விளையுமிடமாகவும்,
தாத்துல் வாஜிபை – நன்மை விளையும் இடமாகவும் ஆக்கினார்கள்.

இது கலப்பற்ற ஷிர்க் என்பதை அவர்கள் அறியவுமில்லை. குர்ஆனின் நஸ்ஸான ஆயத்துகளுக்கு மாறுபடுகிறார்கள். இதிலிருந்து பல்வேறு ஆட்சேபணைகள் கிளம்புகின்றன.

1.    தாத்துல் மும்கின் என்பது அவர்களிடத்தில் ஆக்கப்படாததும்,தன் தாத்தைக் கொண்டு தானே நிற்கிறதும் வெளியாக்குகிறவன், உண்டாக்குகிறவன், படைக்கிறவன் பேரில் தேவையில்லாதிருக்குமானால் மும்கினுடைய தாத்துகள் பூர்வீகமானதாகி விடும். பூர்வீகமானது எண்ணிக்கையாவது இங்கு ஏற்படுவதால் இது தௌஹீதுக்கு மாற்றமாகும்.
2.    தாத்துல் மும்கின் அவர்களிடத்தில் ஆக்கப்பட்டதாக இருப்பின், உண்டாக்குகிறவனுடைய உண்டாக்குதல் எனும் குணபாடு நிகழுவது மவ்ஜூதான விஷயத்திலா? அல்லது மஃதூமான விஷயத்திலா? அந்த உண்டாக்குதல் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறான உஜூதிய்யான விஷயத்தில் நிகழுமானால் இங்கேயும் பூர்வீகம் எண்ணிக்கையாவது நிர்ப்பந்தமாகும். இனி அந்த உண்டாக்குதல் எனும் குணம் இல்லாத விஷயத்தில் நிகழுமானால், இல்லாத விஷயம் குணபாட்டை ஏற்றுக் கொள்ளாது.
3.    மும்கினுடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் தரிபட்டது என்று சொன்னால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய இல்மானது மற்ற கமாலிய்யத்தான சிபத்துக்களைப் போல தாத்தின் ஐனாகும். இல்மிய்யான கோலங்கள் என்பது அல்லாஹ்வுடைய அஸ்மாக்கள் ஆகும்.

இல்மிய்யான கோலங்கள் தாத்துக்கு வேறானதும், புதிதானதும் என்று சொன்னால், அப்போது தாத்துல் வாஜிபு புதிதுகளுக்கு இடமளிப்பதாகிவிடும்.

மும்கினாத்துகளுடைய தாத்துக்கள் இல்முடைய மர்தபாவை விட்டும் வெளியேறுவது அல்லாஹ்வுடைய இல்மில் குறைவும், இல்முடைய மர்தபாவில் அறியாமையும் ஏற்படும். ஆனால் மும்கினாத்துகளின் தாத்துக்கள் அல்லாஹ்வின் இல்மில் தரிபட்ட கோலங்களாகும். ஆகவே அந்த கோலங்களாகிறது ஆதியிலிருந்து அந்தம் வரை இல்முடைய மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது வெளியில் வெளியாவதில்லை. அப்போது வெளியில் ஒரு தாத்தைத் தவிர அல்லது ஒரு உஜூதைத் தவிர எட்டிக் கொள்ளப்படவில்லை.

செயல்களாகிறது நல்லதோ கெட்டதோ அது உஜூதிய்யான விஷயமாகும். உஜூதிய்யான விஷயம் அதமிய்யான விஷயத்திலிருந்து உண்டாகாது. உஜூதிய்யான விஷயத்தை அதமிய்யான விஷயத்'தில் சேர்ப்பது இரண்டு இலாஹை தரிபடுத்துவது ஆகும். மஜூஸிகளின் இமாமான ஸறது, சத்து சொல்வது போல். அதாவது:

ஒரு இலாஹ் நன்மையைப் படைக்கிறான். ஒரு இலாஹ் தீமையைப் படைக்கிறான் என்று. ஆனால், நன்மையையும், தீமையையும் அல்லாஹ் தன்பக்கம் சேர்த்துக் கொண்டான். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை ஈமானின் ஷர்த்தாக (அதாவது நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது என்று ஈமான் கொள்வது) ஆக்கினார்கள்.

இந்த இரு தாத்தை தரிபடுத்துபவர்கள் நன்மையை அல்லாஹ்வின் பக்கமும், தீமையை மும்கினுடைய தாத்தின் பக்கமும் சேர்ப்பதினால், அல்லாஹ் ரஸூலுக்கு மாறு செய்து விட்டார்கள். மேலும் நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது என்று சொன்னவர்களை காபிர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். (நவூதுபில்லாஹி மின்ஹா)

இத்துடன் அவர்களுடைய கொள்கையின் பேரில் வேறு ஆட்சேபணைகளும் உண்டு. அவை:

1.    வெளியில் மவ்ஜூதான மும்கினில் மூன்று விஷயங்கள் ஒன்று சேர்கிறது.

                                  1.    தாத்துல் மும்கின் 2. தாத்துல் வாஜிபு 3. உஜூது.

அவர்களிடத்தில் உஜூது என்பது தாத்திய்யான தேட்டத்தைக் கொண்டு தாத்துல் வாஜிபின் பேரில் இடையில் வந்த விஷயமாகும். தாத்திய்யான விஷயம் தாத்தை விட்டும் பிரியாது. மேற்கூறப்பட்ட சேர்க்கை ஒன்று சேர்வது நிர்பந்தமாகும்.

2.    நிச்சயமாக உஜூது வாஜிபுடைய தாத்துக்கு ஆதேயமாகவும், வாஜிபுடைய தாத்து அந்த உஜூதுக்கு ஆதாரமாகவும் உள்ளது.ஆதேயப் பொருள் ஆதாரப் பொருள் இன்றி நிற்பதில்லை. ஆதாரப் பொருளின் நிலையானது ஆதேயப் பொருளின் நிலையாகும். மும்கினுடைய (வெளியில் உண்டான) தாத்து அசம்பாவிதம் என்பதாக இதிலிருந்து தெரிகிறது. காரணம் இரு ஆதாரப் பொருள்களுக்கு ஒரு ஆதேயம் இருப்பது அசம்பாவிதம் என்பதற்காகவும், முதல் ஆதாரப் பொருளை விட்டும் அந்த ஆதேயம் பிரிவது அசம்பாவிதம் என்பதற்காகவும் ஆகும்.

3.     சந்தேகமில்லாமல் மும்கினுடைய தாத்து இல்லாமலானதாகும். வெளியில் உண்டான தாத்துல் மும்கின்:
உஜூது வந்து சேர்ந்ததன் பின் உண்டானால், ஹகீகத்து புரள்வது அசம்பாவிதமாகும்.

அது இல்லாமலிருப்பதுடன் உஜூதுடன் சேர்ந்தது என்றால், இரண்டு எதிரிடைகள் சேர்வது நிர்பந்தமாகும்.

மும்கினுடைய தாத்து அதனுடைய இல்லாமை எனும் அசலின்பேரில் நிற்க உஜூது அதனுடைய கோலத்தின் பேரில் வெளியானால், வாஜிபுடைய தாத்து ஒன்று என்றும், வெளியில் வெளியானது அதனுடைய உஜூதுதான் என்றும் விளங்கும்.

4.    ஒரு இல்லாத வஸ்து அதனைப்போன்று இல்லாத வஸ்துவை உண்டாக்குவதின்பேரில் சக்தி பெறுவது நிர்பந்தமாகும். வெளியில் உண்டான மும்கினுடைய உஜூதிலிருந்து உண்டான செயல்களாகிறது தனித்த மும்கினுடைய தாத்திலிருந்து உண்டாகுமானால் சுயமே இல்லாத ஒன்றிலிருந்து உள்ள விஷயம் உண்டாவது அசம்பாவிதமாகும்.

மும்கினுடைய தாத்திலிருந்தும், வாஜிபுடைய தாத்திலிருந்தும் கூட்டாக செயல்கள் உருவானால் உஜூதானது தீமைகளை உருவாக்குவதில் கூட்டாகி விட்டது. இது தாத்து இரண்டு என்று சொல்பவர்களின் நம்பிக்கைக்கு பிழையாகும்.

வாஜிபுல் உஜூதிலிருந்து தீமையான செயல்கள் உண்டாகுமேயானால், அப்போது உஜூது தீமைகள் உண்டாவதற்கு இடமாகிவிடும். இது நன்மைகள் விளையும் இடத்தில் தீமையைச் சேர்ப்பது என்ற ஆபத்தில் உங்களை இட்டுச் செல்லும். ஆகவே இரு தாத்தை தரிபடுத்துவது சரியில்லை. தரிபடுத்துவது ஷிர்க்காகும்.

5.    ஒரு உதாரணம்: வெளியில் உண்டான ஜெய்து என்பவன் உங்களிடத்தில் அல்லாஹ்வுக்கு வேறானவன் அல்ல. ஏனெனில் நீங்கள் உஜூது ஒன்று என்று ஈமான் கொண்டுள்ளீர்கள். அப்போது வெளியில் உண்டான ஜெய்துவிடமிருந்து உண்டாகும் தீமைகள் அனைத்தும் அல்லாஹ்விலிருந்தே உண்டாகிறது. ஜெய்துடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை. ஆகவே ஜெய்து என்பவனிலிருந்து உண்டாகக் கூடிய தீமைகளை ஜெய்தின் பக்கம் சேர்ப்பதானது உங்களுடைய நம்பிக்கையின்(ஜைது என்பவன் அல்லாஹ்வாகும்) படி அறவே இல்லாத ஜெய்தின் பக்கம் சேர்ப்பது மடமையிலும் மடமையாகும். நீங்கள் எதிலிருந்து விரண்டு ஓடினீர்களோ அதன்பேரில் முகம் குப்புற விழுந்து விட்டீர்கள்.

உண்மை ஸூபியாக்களின் நிலை:

தாத் என்பது உஜூதின் ஐனாகும். உஜூது என்பது தாத்தின் ஐனாகும். ஆலமானது அதன் எல்லாக் கௌனுகளைக் கொண்டும் ஹக்கான உஜூதுடைய ஷுஊனாத்துகளும் சுற்றுகளும் ஆகும்.

வெளியில் மவ்ஜூதான பொருள்கள் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறானவை இல்லை. அல்லது தாத்தின் ஷுஊனாத்துகளுக்கு வேறானவை இல்லை. ஷுஊனாத்துக்கள் மட்டிலடங்காதது ஆகும். அதனுடைய சுற்றுகளும் எண்ணிக்கையற்றதாகும். கௌனுகளுடைய எல்லா அணுக்களும் ஆதியிலிருந்து அந்தம் வரை  ஷுஊனாத் என்னும் உடையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அவன் ஒரு ஷஃன்(காரியத்தின்) உடைய உடையில் இரண்டு தடவை வெளியாவதில்லை. ஒவ்வொரு அணுவின் பேரிலும் சொந்தமான ஒரு கோலத்தைக் கொண்டு வெளியாகிறான். அந்த சொந்தமான கோலத்தைக் கொண்டு வேறு எந்த அணுவிலும் ஒரு காலமும் வெளியாக மாட்டான்.

வெளிப்பாட்டில் இந்த அதிகத்துடனேயே அதிகமாகவில்லை, எண்ணிக்கையாகவில்லை, பேதகமாகவில்லை. அவன் எப்பொழுதும் முன்னுள்ள மாதிரியே இருக்கிறான். அவன் பன்மையுடன் ஒருவனாகவும், ஒருமையுடன் பன்மையானவனாகவும் தாத்தில் அல்லது உஜூதில் ஒருவனானவனும் ஆவான். சுற்றுகளிலும் ஷுஊனாத்துகளிலும் பலதானவனும் ஆவான்.

இத்துடனே ஒருமை பன்மையினதும் பன்மை ஒருமையினதும் ஐனாகும். அவனின் நிலைகளாகிறது அவனின் தாத்தின் ஐனாகும். அவனின் தாத்தாகிறது அவனது நிலைகளின் ஐனாகும். மட்டிலடங்கா ஷுஊனாத்துக்களுடைய அவன் அவனுடைய ஷுஊனாத்துக்களுடைய ஐனாகவும், சுற்றுகளின் ஐனாகவும் (தனி நிலையிலும் கூட்டான நிலையிலும்) ஆகிறான்.

இதுபோல்தான் அவனது ஷுஊனாத்துக்களை(காரியங்களை)க் கொண்டு மொத்தமாக ஐனாகிறான்(தானாகிறான்). தனித்த நிலையிலும் சேர்ந்த நிலையிலும் அவன் எல்லாவற்றினதும் ஐனாகும். எல்லாம் அவனது ஐனுமாகும்.

ஆகவே தாத்தாகிறது ஒரு தாத்தாகும். ஷுஊனாத்துகள் பலதாகும். கடலின் தாத்து ஒன்றானதாகவும், அதன் அலைகள் என்னும் சுற்றுகள் பலதானதும் போல, கடலின் தாத்தாகிறது தனித்தனி எல்லா அலைகளினதும் ஐனாகும். இதுபோலவே மொத்தமாக எல்லா அலைகளினதும் ஐனுமாகும்.

ஐனு ஒன்றானதாகவும், சுற்றுகள் அநேகமானதாகவும் இருக்கும். 'லா மவ்ஜூத .இல்லல்லாஹ்'. இதுதான் ஹகீகிய்யான தௌஹீதுத் தாத்தியாகும்.
   

                            ஆக நூரி ஷாஹ் தரீகா என்பது நமது சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மகான்களின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பது உங்கள் முன் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தெளிவு பெறுங்கள்!!!

ஆதார நூல்கள்:

1.    திருக்கலிமாவின் பொக்கிஷம்.
2.    நூருன்னூர்
3.    15-5-1977 ஆயங்குடி பிரசுரம்
4.    அல் ஹகீகா
5.    தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன?
6.    ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர்.
7.    மெய்ஞ்ஞான வழித் தொடர் ஷஜ்ரா
8.    அஹ்லெ சுன்னத் மாத இதழ்கள்.
9.    தப்லீக்கும் அதன் தலைவர்களும்.
10.    சமஸ்த கேரள ஜம்இய்யத்து உலமா சபை தீர்மானம்.

முற்றும்.

அரபிக் கலாசாலையில் 7 வது பட்டமளிப்பு விழா!

மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையில் 7 வது பட்டமளிப்பு விழா!

கடந்த 18-07-2010 ஞாயிற்றுக் கிழமை (ஹிஜ்ரி 1431 ஷஃபான் பிறை 06) காலை 9.30 மணியளவில் இலங்கை ஏறாவூர் ஸூபி மன்ஸில் சார்பாக நடாத்தப்பட்டு வரும் மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையில் 7 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவும், 8வது  தலைப்பாகை சூடும் விழாவும் காட்டுப்பள்ளி வீதி, கலாசாலை மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இச் சிறப்பு மிகு விழாவிற்கு தலைமை தாங்கி  நடத்தி நடந்தவர்கள் சங்கைமிகு ஷெய்குனா ஸெய்யிது பூக்கோயாத் தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனார் அல்ஹாஜ் பி.ஏ. முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம் ஸகாபி, காதிரி, அல் ஹஸனி (இந்தியா) அவர்கள். சிறப்பு அதிதியாக கலந்து கொண்டவர்கள் ஷெய்குனா மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் அல் ஆலிமுல் பாழில் ரஹ்மானி, பாகவி கலீபத்துல் காதிரி (இந்தியா) அவர்கள்.

இவ்வரபி கலாசாலையின் பேராசிரியர்களாக பணி புரிபவர்கள்:

மௌலவி அல்ஹாபிழ் ஏ. நாகூர் மீரான் பாழில், பாகவி இந்தியா (முதல்வர்) அவர்கள்.

மௌலவி டபிள்யு. ரயீஸுத்தீன் கௌஸி அவர்கள்.

மௌலவி எம்பி. அப்துல் ஹஃபீல் கௌஸி அவர்கள்.

நிகழ்ச்சில் முன்னதாக சுபுஹுத் தொழுகைக்குப் பின் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது.

காலை 9.30 மணியளவில் கிராஅத் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

மாணவர்கள் கல்லூரி கீதம் பாட, வரவேற்புரைக்குப் பின் தலைமையுரையை தலைவர் அவர்கள் ஆற்ற பின் வாழ்த்துரையை மத்ரஸா உலமாக்கள் ஆற்றினார்கள். பின் பட்டம் பெறும் மௌலவி மார்களுக்கு 'முஸ்தபி' பட்டத்தை சங்கைமிகு ஷெய்குநாயகம் ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் வழங்கி ஆசியுரை வழங்கினார்கள். இறுதியில் துஆ பிராhத்தனையுடன் ஸலாவத் ஓதி நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன.

பட்டம் பெற்ற மாணவர்கள்:

1. மௌலவி ஜே. முஹம்மது மபாயிஸ் முஸ்தபி, அக்கரைப் பற்று,
2. மௌலவி ஏஎம். முஹம்மது அஹ்ஸன் முஸ்தபி, அத்துக்கல, பொலனறுவை.
3. மௌலவி எம்.எஸ். முஹம்மது றியாழ் முஸ்தபி, பல்லியா கொட, அக்பர்புர, பொலன்னறுவை.
4. மௌலவி ஆர்எம். முஹம்மது மர்சூக் முஸ்தபி, சுங்காவில், பொலன்னறுவை.
5. மௌலவி எம். அறபாத் முஸ்தபி, ஏறாவூர்.

தலைப்பாகை சூடும் மாணவர்கள்:

1. ஜனாப். எம். முஹம்மது பிர்தௌஸ், ஏறாவூர்
2. ஜனாப். டி. முஹம்மது நிஸ்வர், ஏறாவூர்.
3. ஜனாப். என்.எல். முஹம்மது பாரிஸ,; ஏறாவூர்.

மத்ரஸாவிற்காக நன்கொடைகளை அனுப்பி அல்லாஹ்வின் நல்லருளையும் ஷெய்குமார்களின் துஆபரக்கத்தையும் பெற்றிட அன்புடன் வேண்டுகிறார்கள் ஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலை நிர்வாகத்தினர்.

மத்ரஸாவிற்கான செலவுகள் விபரம்: (ஒருநாள் செலவுகள்- இலங்கை ரூ.)

1. காலை உணவு                  ரூ. 1500
2.  மதிய உணவு                   ரூ 2500
3. இரவு உணவு                     ரூ 2000
4. மூன்று வேளை தேனீர் ரூ 500

     மொத்தம்         இலங்கை ரூ 6500

பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்:

Eravur-People's Bank A/C No: 123-1001-10000-396.

ஹிஸ்புல்லாஹ் ஸபை,
ஸூபி மன்ஸில்,
காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர்.

Phone: 0094-652240469

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு செய்யலாமா?

தொழுகைக்குப் பின் கூட்டுத் திக்ரு.

கேள்வி: தொழுகைக்குப் பின்னர் சப்தமிட்டு கூட்டமாக திக்றுச் செய்வதற்கு ஆதாரமுண்டா?                                                                             

                                                                                                                    ரஹ்மத்துல்லாஹ், கூத்தா நல்லூர்.

பதில்: பர்ளான தொழுகை முடிந்த பின்னர் சப்தமிட்டு திக்று செய்வது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்திலிருந்தது.

தக்பீர் சப்தம் கேட்டதும் தொழுகை முடிந்து விட்டது என அறிந்து கொள்வேன் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.

                                                                                                புகாரி: வால்யூம் 1 பக்கம் 116

தொழுகைக்கும் பின் சப்தமிட்டு திக்றுச் செய்வது சுன்னத் என்ற ஸலபீன் (முன்னோர்)களின் கூற்றுக்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். பின்னோர்களில் இப்னு ஹஸ்ம் ளாஹிரியும் சுன்னத் என்றே கூறுகின்றனர் என இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றனர்.

                                                                              ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 237.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் கூறிய பின் சப்தமிட்டு லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு எனக் கூறுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 88.

தொழுகைக்குப் பின் சப்தமிட்டு திக்ரு செய்வதற்கு இது தெளிவான ஆதாரம் என ஷெய்க் அப்துல்ஹக் முஹத்திது திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கின்றனர்.

                                                                       அஷிஃஅத்துல்லம்ஆத்; பாகம் 1, பக்கம் 419.

நன்றி: வஸீலா 1-11-87

ஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா?

ஸல், ரஹ், ரலி போன்றவை போடலாமா?

எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸுபி

அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அழகிய திருநாமத்தை எழுதப்படும் பொழுது அத்துடன் 'ஸல்' என்ற வார்த்தையையும் எழுதப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

ஸலவாத்தின் சுருக்கம்தான் இந்த ஸல், ஸல் அம் என்பவை. இது ஆகுமானதா? என்பது பற்றி ஒரு மார்க்கத் தீர்ப்பு எமது பார்வைக்கு கிட்டியது.

அசட்டையாக சோம்பேறித்தனமாக இப்படி சுருக்கி எழுதுவது விரும்பத் தகுந்ததல்ல! என்று அந்த பத்வா கூறுகிறது.

நமது பாரத் நாட்டில் மிக அறிமுகமான பெரியாரும் ஸுன்னத் வல் ஜமாஅத்தில் தலைசிறந்தவரும், பிரபல மார்க்க அறிஞரும் முப்தியுமான ஒரு மேதையருக்கு ஆப்பிரிக்காவிலிருந்து விளக்கம் கேட்டு ஒரு வினா வருகிறது. கேள்வி கேட்;டவர், தமது கேள்வியில் அண்ணலாரைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஸல் அம்' என்று எழுதியிருந்தார். எனவே அந்த மார்க்கப் பேரறிஞர் அதை மகி கண்டித்து அப்படி எழுதுவது ஆகாது என்று ஒரு பத்வாவே வழங்குகிறார்கள். அந்த பத்வாவின் சுருக்கத்தை இனி காண்போம்.

தங்களது வினாவில், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று எழுதும் இடங்களில் 'ஸல் அம்' என்று எழுதப்பட்டிருந்தது. இது மிக்க கடுமையான ஆகாத காரியமாகும். இந்தப் பழக்கம், நானூறு ஆண்டுகளாக பாமர மக்களிடையேயும், பெரும் மேதைகளிடமும் எப்போடியோ ஊடுருவி விட்டது. சிலர் 'ஸல் அம்' என்றும் வேறு சிலர் 'ஸல்லம்' என்றும், மற்றும் சிலர் 'ஸாது, என்றும் இன்னும் சிலர் 'அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்' என்பதற்கு 'அம்' என்றும் எழுதுகின்றனர்.

கொஞ்ச அளவுமை, அல்லது ஒரு அங்குலக் காகிதம், அல்லது சில வினாடிப் பொழுதை மிச்சப்படுத்துவதற்காக எவ்வளவோ அபரிதமான பாக்கியத்தை விட்டுவிடுகின்றனர்.

'முதன் முதலில் இப்படி ஸலவாத்தைச் சுருக்கி எழுதியவரின் கை துண்டிக்கப்பட்டதாக' இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ் நவின்றுள்ளார்கள்.

'மன்கதப – அலைஹிஸ்ஸலாம் – பில் – ஹம்ஸதி – வல் மீமி – யக்புறு – லிஅன்ஹு – தக்பீபுன் – வதக்பீபுல் – அன்பியாயி – குப்ருன் – அலைஹிஸ்ஸலாம் என்பதை  ஹம்ஸு கொண்டும், மீம் கொண்டும் ('அம்' என்று) எவன் எழுதுவானோ அவன் காபிராகுவான். ஏனென்றால் இலேசாக மதிப்பதுவாகும். நபிமார்களை இலெசாக மதிப்பது குப்ராகும்' என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் துர்ருல் முக்தாரின் ஹாஷpயாவில், பதாவாதாதர் கானியாவில் இருந்து நகல்படுத்துகிறார்கள். வேணுமென்று லேசாக மதிப்பானாகில் அல்லது ஏளனமாக நினைப்பானாகில் அவன் காபிராகி விடுவான் என்பதில் ஐமில்லை. (மஆதல்லாஹ்)

சோம்பேறித்தனமாக, பொடு போக்காக, அறியாமைத்தனமாக செய்வார்களாயின் அவர்கள் காபிராக மாட்டர்கள் என்றாலும், பாக்கியமற்ற, நஸீபு கெட்ட வேலை இது என்றால் மிகையாகாது. இரு நாவுகளில் ஒரு நாவு பேனா! அது  போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று எழுதப்பட வேண்டிய இடங்களில் ஸல் அம் என்று எழுதினால் ஸலவாத்தை நாவினால் மாற்றிய சட்டம் வரத்தானே செய்யும்? 'சொல்லப்பட்ட ஒன்றை வேறொன்றாக மாற்றுவது குற்றம்' என்று குர்ஆன் கூறுகின்றது:-

ப-பத்தலல்லதீன….. அநியாயக் காரர்கள் அவர்களுக்கு ஏவப்பட்டது அல்லாத சொல்லாக மாற்றிவிட்டனர். (அல்லாஹ்வின் வழிபாட்டை விட்டும்) வெளியேறிய காரணத்தால் அநியாயக் காரர்களான அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து கொடிய வேதனையை இறக்கினோம். – அல்குர்ஆன் (2:59)

'ஹித்தத்துன்- எங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதே எங்கள் வேண்டு கோள்' என்று சொல்லுங்கள் என அங்கு இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் சொன்னான். இக்கட்டளையை மாற்றி 'ஹின்ததுன்-கோதுமையே எங்கள் வேண்டு கோள்' என்று சொன்னார்கள். பொருள் அர்த்தமுள்ள வார்த்தையாக அவர்கள் மாற்றியும் கூட இறைவனால் ஏற்பட்ட கட்டளையை மாற்றியதாக தண்டனை பெற்றார்கள் என்றால், இங்கு நமக்கு 'ஈமான் கொண்டவர்களே! அவரின் (நாயகத்தின்) மீது ஸலவாத்து சலாம் சொல்லுங்கள்' என்று இறைவன் கட்டளை பிறப்பித்துள்ளான்.

இறைவனது இக்கட்டளை வாஜிபு அல்லது முஸ்தஹப்பு என்பது அவர்களது திருப்பெயரை கேட்கும் போதெல்லாம், நாவால் சொல்லும் போதெல்லாம், பேனா முனையால் தீட்டும் போதெல்லாம் பொருந்தும்.

அவர்களது திருப் பெயரை எழுதும் போது அதன் தொடராக 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று பூரணமாகத்தானே எழுதப்பட வேண்டும். அதுவின்றி 'ஸல்லம்' 'ஸல்அம்' என்று மாற்றி சுருக்கி அர்த்தமற்றதாக ஆக்குவது எங்ஙனம் பொருந்தும்?

அர்த்தமுள்ள சொல்லாக மாற்றிய இஸ்ரவேலர்களுக்கு கொடிய வேதனை இறக்கப்பட்டிருக்கும்போது அவனது ஹபீபின் ஸலவாத்தை அர்த்தமற்ற வார்த்தையாக மாற்றினால் கொடிய வேதனை கிடைக்காது என்று எவரால் உறுதி கூற முடியும்? (வல் இயாது பில்லாஹ்-காவல்  அவனைக்  கொண்டே இருக்கிறது) இதுவரை ஸலவாத்தை சுருக்குவது முறையில்லை என்று உணர்த்தி வந்தோம்.

அதுபோன்றே ஸஹாபாப் பெருமக்கள், இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள் திருப் பெயர்களோடு 'ரலியல்லாஹு அன்ஹு' என்று எழுதப்படுவதை சுருக்கி 'ரலி' என்று எழுதுவதை நம் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் 'மக்ரூஹ்' என்றும, பாக்கியமற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

'யுக் ரஹுர்ரம்ஸு-பித்தரழ்ழி……. ரலியல்லாஹு அன்ஹு ன்பதை 'ரழி' என்று எழுத்தால் சாடை காட்டுவது மக்ரூஹ் வெறுக்கப்பட்டதாகும் என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். இதை எவன் பொடு போக்கு செய்கின்றானோ அவன் அனேகமான நன்மையை விட்டும் பேறுகெட் போகிறான். ஏராளமான சிறப்பை இழந்து விடுகிறான்' என்று இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷரஹு முஸ்லிமில் எழுதுகிறார்கள்.

அது போன்றே 'குத்திஸ ஸிர்ருஹு' என்பதற்கு சாடையாக 'க' என்றும், 'ரஹ்மத்துல்லாஹி அலைஹி' என்பதற்கு 'ரஹ்' என்றும் எழுதப்படுவதும் பரக்கத் அற்ற துர்பாக்கியத்தனமாகும், இப்படிப்பட்ட காரியங்களை விட்டும் தற்காத்து கொள்வது சாலச் சிறந்தது, அதை எடுத்து நடக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக. (ஆதார நூல்: பத்வா ஆப்பிரிக்கா பக்கம் 45)

எனவே எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் முழுமையாக எழுதுவது-பிரசுரிப்பது மூலமாக வாசகர்களின் நாவுகளில் 'ஸலவாத்'மணத்தைக் கமழச் செய்கின்ற பாக்கியத்தினை பெறலாமல்லவா? அற்குரிய நற்கூலியையும் பெற்றிடலாமன்றோ?

நூல்: யாரஸூலல்லாஹ் என அழைக்கலாமா?

Fatwa about Ziyarat-ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா

ஜியாரத் பற்றிய உலமாக்களின் பத்வா

வினா:

ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து குழுமியிருக்கும் குற்றமான கருமங்களே முற்றும் நிறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில்  குறிப்பிட்ட ஒரு தினத்தில் அவுலியாக்களுடைய 'கப்றுகளை' ஜியாரத்துச் செய்யும் விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன?

மேலும் இவ்விதமான குற்றங்கள் உண்டாகி இருக்கும் நிலைமையில் அந்த ஜியாரத்தைத் தடை செய்லாம் என்பது பற்றி அல்லாமா ஷெய்கு இப்னு ஹஜர் அவர்களுடைய ஃபத்வாக்களில் காணப்படுகிறதா?

இப்படிக்கு,

என். அஹ்மது ஹாஜி.

விடை:

'கப்றுகளை' ஜியாரத்து செய்வது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தாகும். குற்றமான கருமங்களும், விலக்கலான விஷயங்களும் நடைபெறுகின்றன என்பதற்காக 'ஜியாரத்' விடப்பட மாட்டாது. ஏனெனில் 'பித்அத்' கருமங்களுக்காக 'ஸுன்னத்தான காரியம் விடப்படமாட்டாது. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய ஹுக்மு உண்டு. கருமங்கள் அவற்றின் நாட்டமென்ற லட்சியங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆகவே நாடுகின்ற நாட்டத்தின் அசல் சரியாயிருந்தால் எத்தகைய இடையூறும் தீங்கிழைக்க இயலாது. அல்லாமா இப்னு ஹஜர் ஹைதமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய ஃபத்வாவில் கண்ட விடையின் விளக்கம் பின்வருமாறு:

1. குறிப்பிட்ட அத்தினம் விலக்கலான காரியங்களை விட்டும் நீங்கினதாய் அந்நாள் முழுதுமிருக்கலாம். இது ஒரு வகை, இந்நிலையில் ஜியாரத்துடைய சட்டத்தை விளக்கி கூறுவது தேவையில்லை. தெளிவாக இருக்கிறது.

2. அத் தினம் முழுவதும் விலக்கலான கருமங்களைக் கொண்டதாயிருக்கலாம். இது இரண்டாவது வகை. இந்நிலையில் 'ஜியாரத்'துடைய ஹுகும் ஆகிறது, 'ஆணும் பெண்ணும் ஒன்றாக கலந்து நிற்பதை விட்டும் அகல்வதும் அந்த ஆகாத கருமங்களை வெறுப்பதும் தனக்கு சாத்தியமான மட்டில் அவற்றை நீக்கித் தனது அமலை செய்வதுமாகும்.'

3. அத்தினம் சிலவேளை விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கினதாயும் சிலவேளை விலக்கலான கருமங்களை கொண்டதாயும் இருக்கலாம். இது மூன்றாவது வகை. இந்நிலையில் 'ஜியாரத்'துடைய ஹுகும் இருவிதமாகும்.

'விலக்கலான கருமங்களை விட்டும் நீங்கின வேளையில் 'ஜியாரத்து' செய்வது மேலாகும். விலக்கலான கருமங்களைக் கொண்டதாயுள்ள வேளையில் 'ஜியாரத்துச் செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்.' இவ்விருவிதத்துள் முந்தியது மேலே கூறப்பட்ட மூன்று வகை விதத்துள் முதலாவது வகையைச் சேர்ந்தது. பிந்தியது இரண்டாவது விதத்தைச் சார்ந்தது. ஆகையால் ஜியாரத்து செய்பவன் ஆண்பெண் கலந்து நிற்பதை விட்டு விலகுவதிலும் ஆகாத கருமங்களை வெறுத்து தன்னாலியன்ற மட்டில் அவற்றை விலக்கி நீக்குவதிலும் பேணுதலோடு நடந்து கொள்வான்.சட்டப்படி ஜியாரத்து அனுமதிக்கப்பட்டதேயன்றி விலக்கப்படவில்லை. ஏனெனில் விலக்கப்பட்ட கருமங்களை விட்டும் நீங்கியிருக்கும் வேளையில் 'ஜியாரத்' செய்வது மிகவும் அமல் என இப்னு ஹஜருடைய வாசகம் தெளிவாகிறது. இத்தகைய பிரிவுகளையெல்லாம்  உற்றுணராமல் ஒரேடியாக பொதுவாக ஜியாரத்துச் செய்வதே கூடாதென்று யாராகிலும் விலக்குவானேயானால் அவனுடைய சொல்லுக்கு ஒருவிதத்திலும் மதிப்பு கிடையாது. (இப்னு ஹஜர் ஹைதமியின் ஃபத்வாவில் உள்ள விஷயத்தின் கருத்து முடிந்தது)

அதுபற்றி ரத்துல் முஹ்தர் கிரந்தத்தில் அல்லாமா ஷெய்கு இப்னு ஆபிதீன் என்ற பிரபல்யம் பெற்ற முஹம்மது அமீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்தின் சுருக்கம் பின்வருமாறு:

'இப்னு ஹஜர் தனது ஃபத்வாக்களில் கூறுகிறதாவது 'ஜியாரத்து'ச் செய்யப் போகுமிடத்தில் விலக்கப்பட்ட கருமங்களிருப்பினும் ஆணும் பெண்ணும் கலந்து நிற்பது போன்ற குற்றங்கள் நிகழ்ந்தாயிருப்பினும் நீ ஜியாரத்தை விட்டு விட வேண்டாம். இவைபோன்ற காரணங்களுக்காகப் புண்ணியமான கருமங்கள் விடப்பட மாட்டாது. ஜியாரத்துச்  செய்ய வேண்டியது மானிடனின் மீது பொறுப்பாகும். பித்அத்தானவற்றை வெறுக்க வேண்டும். ஆனால் இயலுமாயின்  பித்அத்துகளை நீக்க வேண்டும்.

ஆகவே இமாம் இப்னு ஹஜர் அவர்களுடைய ஃபத்வாக்களிலிருக்கும் விஷயம் யாதெனில் ஜியாரத்துச் செய்கிற ஸ்தலங்களில் விலக்கப்பட்ட கருமங்கள் நிகழக்கூடிய நேரத்தில் ஜியாரத்துச் செய்யும் விதத்தை விபரிப்பதேயன்றி அதை விலக்குவதன்று என்பதே.

இப்படிக்கு,

மௌலானா அஹ்மது கோயா ஷாலியாத்தி,

கேரளா.

நன்றி: வஸீலா 15-11-87, 1-12-1987                 
 

Chennai Porur Sufi Manzil

currently manzil is in First Floor of our Peer Bhais house.

Soofi Manzil

C/o. Usman Ali

4/24,First Street,

RE Nagar, Porur,

Chennai- 600116.

தற்போது  நமது தரீகத் சகோதரர் இல்லத்தில் வைத்து   பிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு மஃரிபு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ்     மற்றும் கந்தூரி வைபவங்கள் நடந்து வருகிறது. மன்ஜில் கட்டுவதற்கு முயன்று வருகிறோம்.

Importance and Needness of Sheikh-Guru-முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி.

யா -அய்யு-ஹல்லதீன-ஆமனுத்தகுல்லாஹ்-வப்தகு-இலைஹில் வஸீலத…..

ஈமான் பொண்டவர்களே! அல்லாஹ்வை தக்வா-அஞ்சி நடங்கள், அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத்- போர் புரியுங்கள், நிச்சயம் நீங்கள் வெற்றி-முக்தி பெறுவீர்கள். -அல்குர்ஆன் 5-35.

மனிதன் வெற்றி பெறுவதற்கும், முக்தி அடைவதற்கும் மிக முக்கியமான நான்கு அம்சங்களை இவ்வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

1. ஈமான் கொள்ளுதல்.
2.தக்வா செய்தல்
3.வஸீலா தேடுதல்.
4.அவன் பாதையில் போர் புரிதல்.

இந் நான்கில் மூன்றாவதான வஸீலாவைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

வஸீலா என்பதற்கு நல்ல கிரியைகளை முற்படுத்துவதும், நல்ல செயல்களை செம்மைபடுத்துவதும் என்பது பொதுவான கருத்து.

இறைவழி நடப்பவன் தனக்கென்று பூரணத்துவமடைந்த நேர்வழி காட்டுபவர்களில் ஒருவரை (முர்ஷிது-ஷெய்கை) தனது உற்ற நண்பராக எடுத்துக் கொள்ளுதல் என்பது குறிப்பிடத்தக்கதான கருத்து என்று மாமேதை மகான் மஹ்மூது தீபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

உண்மையில் இரண்டாம் கருத்துதான் இவ்விடம் வஸீலா என்பதற்கு தகும். ஏனெனில்,

இரண்டாவது அம்சமான தக்வா செய்வதென்பதில் நல்ல கிரிகைகளை முற்படுத்துவதும், நல்செயல்களை செம்மைபடுத்துவதும் அடங்கும்.

தக்வா என்றால் பாவமான காரியங்களை தவிர்த்து நடப்பதும், நல்ல காரியங்களை செய்வதும்தானே! அதையே மூன்றாவது கூறுவது பொருத்தமன்று.

ஷரீஅத். தரீகத், ஹகீகத், மஃரிபத்- சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவன் அளவில் சேர முடியும் என்பது மெய்ஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு.

எனவே இவ் வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஷெய்கு-குருவின் கரம் பிடிப்பது இன்றியமையாத கடமை.

இதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் சொன்னதை நமக்கு கவி நயமாக மாமேதை அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

'வ குல்த- மன்லா லஹு- ஷெய்குன்- ஃப இன்னி………………..'

'எவர்களுக்கு ஷெய்கு இல்லையோ அவர்களுக்கு நிச்சயம் நான் ஷெய்காக-முர்ஷிதாக இருக்கிறேன். அவன் கல்வத்தில்-தனிமையிலும் அவனது உற்ற நண்பனாக நான் இருக்கிறேன். என்னில் நின்றும் அவனுக்கு தொடர்பு உண்ட என்று (கௌது நாயகமே!) நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்'.

என்று பாடி தந்துள்ளார்கள்.

'யவ்ம –நத்உ-குல்ல உனாஸின்-பி இமாமிஹிம்- அன்று(கியாமத் hளில் நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர்(களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம்'(17-71) என்ற இறைவன் கூறியுள்ளான்.

கருத்து:- தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது:- காதிரிய்யா தரீகாகாரர்களே! ஜிஷ்திய்யா தரீகாகாரர்களே! ஷாதுலிய்யா தரீகாகாரர்களே! என்று இப்படியே அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இறைவன்பக்கம் போய் சேருவதற்கு இறைதூதர்கள் பக்கம் போகுவதற்கு ஷெய்குமார்கள்-முர்ஷிதுகள் அவசியம். உதாரணம்:- அனுமதி வழங்கப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அவைகளின் கழுத்தில் அடையாள பட்டிகள் மாட்டியிருப்பது அவசியமாக இருப்பது போல், நமது கழுத்துக்களிலும் எந்த ஷெய்குமார்களின் பட்டியாவது கண்டிப்பாக மாட்டியிருப்பது அவசியம். ஏனெனில்,

நமது நப்ஸு- ஆத்மா நாய் போன்றது. சுதந்திரமாக விட்டு வைக்கலாகாது. அதன் கழுத்தில் பட்டிபோட்டு ஒரு ஷெய்கின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்ய வேண்டும். கழுத்துப்பட்டியில் கொழுகப்பட்டிருக்கும் சங்கிலியின் முதல் கொழுக்குபட்டியிலும், மறுபக்கத்து கொழுக்கு எஜமானின் கரத்தில் இருப்பது போல், ஷெய்கின் கரம் நம் கழுத்திலும்,  ஷெய்கின் ஸில்ஸிலாவான சங்கிலி தொடர்பான மறுபுறம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஜ வ ஸல்லம் அவர்களின் கரத்திலும் இருக்க வேண்டும்.

நாம் இயங்குவது அந்நாயகம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான். நமது ஷெய்கு அதற்கு வஸீலாவாக இடைப் பொருளாக தொடர்பை உண்டாக்கி தருபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான எதார்த்தமான வஸீலாவாகும். இந்த வஸீலாவை தேடும்படியாகத்தான் மேற்கண்ட 5:35 வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

மழை பொழியும் போது அதை நாம் பெறாவிட்டால் அதை வாங்கி வைத்திருக்கும் குளம் குட்டையை நாம் நாடுவது போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஜீவிய காலத்தில் அருள் மழை பொழியும் போது நாம் இல்லை என்றால் வாழையடி வாழையாக அந்த அருள் வெள்ளத்தை வாங்கி வந்திருக்கும் குளம் குட்டைகள் போன் ஷெய்குமார்களின் திருக்கரத்தை பிடித்தால்தானே வயல் போன்ற ஈமானுக்கு அவ்வருள் வெள்ளம் பாய்ந்து ஈமான் உருப்படும். இல்லையென்றால், ஈமான் கருகி சருகாகி விடும் அல்லவா? அல்லாஹ் அந்நிலையை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக!

இதை எங்களது குருநாதர் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் கிழுரிய்யா பைத்தில்,

'ழல்லமன்-ளன்ன-லஅல்லஹு-யபூஸு-பிநப்ஸிஹி
ழாஅ-உம்ரஹு-அகிஸ்-யாரப்பி-பில்-கிழ்றின்னபி'

(ஷெய்குமார்களின் துணையின்றி) தானாக ஜெயம் பெறலாம் என்று எவன் எண்ணினானோ அவன் தனது வயதை பாழ்படுத்திவிட்டான். கிழ்று நபியின் பொருட்டால் எனது இரட்சகனே! என்ழன இரட்சிப்பாயாக!

என்று அழகாக வலியுறுத்தி பாடியுள்ளார்கள். இன்னும் அவர்கள் அதே பைத்தில், ஸுஹ்பத்துஷ் ஷெய்கி-ஸஆததுன்-ஷெய்குவின் சகவாசம் சீதேவித்தனமாகும்., கூனூ-மஅஸ்ஸாதிகீன்-மெய் அன்பர்களுடன் நீங்கள் இருந்து வாருங்கள்(9-119) என்ற திருவசனத்தில் இறைவனின் கட்டளையும் இருக்கின்றது என்றும் பாடியுள்ளார்கள்.

உலுல் அஜ்மிகளில் ஒருவரான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கூட மெஞ்ஞான கடலான கிழ்று நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று மெஞ்ஞான அருளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவன் இட்ட கட்டளையும், அவர்களுக்கு மத்தியில் நடந்த நீண்ட வரலாற்றையும் ஷெய்கு முர்ஷிதுகளின் முக்கியத்ததுவத்தையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஸுரத்துல் கஃபு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதையே அடிப்படையாக வைத்துதான் எங்கள் ஷெய்குநாயகம் கிழ்றியா பைத்தை இயற்றியுள்ளார்கள்.

'ஸுஹ்பத்தே-ஸாலிஹ் குதுனா-ஸாலிஹ் குனத்
ஸுஹ்பத்தே-தாலிஹ் குதுனா-தாலிஹ் குனத்'

நல்லவர்களின் சகவாசம் நல்லவர்களாக மாற்றி விடுகின்றது. கெட்டவர்களின் சகவாசம் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது' என்றும்,

'யக்ஸமானா-ஸுஹ்பத்தே-பா அவ்லியா
பெஹ்தர்-அஸ்-சத்-ஸாலெயே-தாஅத்-பேரியா'

சற்று நேரம் அவ்லியாக்களுடன் சகவாசத்தில் இருப்பது நூறு ஆண்டுகள் முகஸ்துதியின்றி வழிப்படுவதைக் காண மிகச் சிறந்தது' என்றும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடியுள்ளார்கள்.

'அஸ்ஸுஹ்கத்து-துஅத்திரு- சகவாசம் குணபாடு அளிக்கும்' என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ளார்கள்.

'பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்' என்ற தமிழ் முதுமொழியும் ஒன்று உண்டு.

ஆகவே இப்படிப்பட்ட ஷெய்குமார்களின் சகவாசம் மிகத் தேவை. முக்தி பெறுவதற்கு அவர்களின் திருக்கரம் பற்றிப் பிடித்து அவர்களின் தரீகத்தில் செல்லுவது மிக முக்கியமாகும். இவ்வழிதான் நபிமார்கள், சித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள், சாலிஹுன்கள் சென்ற வழி. இதுதான் ஸிரத்தே முஸ்தகீம்-நேரான வழி. இவ் வழியைத்தான் தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும்'இஹ்தினஸ்ஸி ராதல்-முஸ்தகீம்-ஸிராதல்லதீன-அன்அம்த-அலைஹிம்-(இறiவா!) நீ நேரான வழியை எங்களுக்கு காட்டுவாயாக! (அவ்வழி) நீ உபகாரம் புரிந்தவர்களின் வழி' என்று ஓதி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதியும் உண்டு.

'வத்தபிஃ-ஸபீல-மன்-அனாப-இலய்ய- என்னளவில் மீண்டவர்களின் பாதையை பின்பற்றுவீராக! என்ற(31-15) திருவசனமும், அல்லாஹ் அளவில் போய் சேர்ந்து அவனது திருக்காட்சியை கண்டு களித்து மீண்டவர்களான முர்ஷிது-ஷெய்குமார்களை நாம் கரம்பிடித்து பைஅத் தீட்சை பெற்று பின்பற்றியாக வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.

இதுமட்டுமன்று, நமது இக்கட்டான வேலையிலும் நம்மை காப்பாற்றுபவர்களும் அவர்கள்தான். எடுத்துக்காட்டாக,

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிஸ்ரு நாட்ல் ஜுலைஹா அம்மையாரின் அறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வேளையில், 'கன்ஆன்' என்னும் சிற்றூரில் இருந்துக் கொண்டிருக்கும்  யஃகூபு அலைஹிஸ்ஸலாம் அவர்களை(உதவிக்கு)அழைத்தார்கள். உடனே அவ்வறையில் காட்சிக் கொடுத்து ஜுலைஹா அம்மையாரின் மாய லீலையை விட்டும் காப்பாற்றினார்கள் என்பது திருமறை கற்பிக்கும் வரலாறு.

அல்லாமா இமாம் ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு மரண தருவாயில் அவர்களது ஷெய்கு குரு நஜ்முத்தீன் வலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆஜராகி ஈமானை காப்பாற்றினார்கள் என்பது உலகம் அறிந்த வரலாறு.

நம் உடம்பின் நரம்புகள் நம் ஹிருதயத்துடன் தொடர்பு கொண்டு இயங்குவது போல், உலகத்திற்கு ஹிருதயமாக-முக்கிய அங்கமாக மூலக்குருவாக இருந்து வரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு இக்குருமார்கள்தான் தொடர்பை ஏற்படுத்தி தருகிறார்கள். அதுபோழ்துதான் நாம் சரியாக இயங்க முடியும். நமது இலட்சியமும் நிறைவேறும்.

நகரங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளுக்கு பவர் ஹவுஸில் இருந்து வயர் கம்பிகள் மூலம் மின்சக்தி வருவது போல் உலகத்திற்கு பவர்ஹவுஸாக இருந்து வரும் அவ்வுத்தம நபியின் அருள் இயக்க சக்தி வர வேண்டுமானால் வயர் கம்பிகள் போன்று அமைந்திருக்கும் ஷெய்குமார்களின் ஸில்ஸிலா-தொடர்பு இருக்க வேண்டும்.

சூரியக் கதிர்கள் துணியில் மேனியில் படுகின்றன. கரித்துவிடுவதில்லை. ஆனால் பூதக்கண்ணாடியை சூரியக் கதிர்களுக்கும் துணிக்கும் இடைப் பொருளாக வைத்தால் பூதக் கண்ணாடி கதிர்களை ஒன்று கூட்டி துணியை-மேனியை கரித்து விடும் இயக்கத்தை நாம் அறிவோம். இதைப்போல்,

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஸ வஸல்லம் அவர்களின் அருள் ஜோதி உலகத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதி நம் உள்ளத்தில் பட்டு குணப்பாடு அளிக்க வேண்டுமானால் அந்த அருள் ஜோதியை ஒன்று கூட்டிதரும் பூதக் கண்ணாடி போன்ற குருநாதர்களை நம் உள்ளத்திற்கும் பெருமானாரின் அருள் ஜோதிக்கும் இடைப்படுத்தினால் தான் உள்ளத்தில் 'இஷ்க்' எனும் குணப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதையும் இவண் உணர்க! பெருமானாரின் பேரொளியின்றி எவரும் இறைசன்னிதானம் பிரவேசிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை.

ஆகவே முக்தி அடைவதற்கும் இறையருள் வெறுவதற்கும் வஸீலாவான ஷெய்கு-முர்ஷிது ஒருவரை எடுத்துக் கொண்டு இறைவழி நடக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் இவ்வழி நடந்து முக்தி பெற்றவர்களாக ஆகுவதற்கு நல்லுதவி புரிவானாக!

What is Tasawuf?(Tamil)-தஸவ்வுப் என்றால் என்ன?

தஸவ்வுப் என்றால் என்ன?

மௌலானா மௌலவி கே.என்.நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்லரி,உலவி

(அந்தரங்க அகமியக் கல்வி) அல்லது தஸவ்வுப் என்றால் என்ன? என்ற கேள்வி சிந்தனையை கிளரும் மிக முக்கியமான அறிவுள்ள கேள்வியாகும்.

அதை விங்கி கொள்வதற்கு பின்வரும் சில கேள்விகளின் விடைகளையும் விளக்கிக் கொள்வது மிக அவசியமாகும். இஸ்லாத்தில் உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு சிறந்த வகுப்பினர் இருக்கிறார்கள். இவ்விரு வகுப்பினர்களும் எப்போது தோன்றினார்கள்? எப்படி உண்டானார்கள்? எதற்காகத் தோன்றினார்கள்? என்பதே கேள்வியாகும். (மௌலவியும் சூபியும்) கண்ணியமிக்க ஸஹாபாக்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் (ரிஸாலத்) என்னும் சூரியனில் இருந்து வெளியாகும் எல்லா ஞானக் கதிர்களையும், எந்த இடைத் தொடர்புமின்றி ஒவ்வொரு முஸ்லீமும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் போதனையின் மூலம் ஒவ்வொரு மனிதனும் அங்கு வெளிரங்கமான கல்வியிலும் ஷரீஅத்தின் (அமல்கள்) கோட்பாடுகளாலும் சிறந்து விளங்கினர். அங்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் (சுஹ்பத்) என்ற் உறவு கூட்டு இவைகளின் மூலம் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி சுத்தகரித்து(இல்மே பாதின்) அந்தரங்க அகமிய கல்விகளாலும் நிரம்பி இருந்தனர்.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இக் கடமைகளைச் செய்வதோடு திக்ரு(தபக்குர்) இறைச் சிந்தனை (முராகபா) என்னும் நிஷ்டையிலும் சிறந்து காணப்பட்டனர். வெளிரங்க, அந்தரங்க இரு கல்விகளிலும் சேர்ந்திருந்ததின் காரணத்தால் அவர்களுக்கு மத்தியில் அமல் அடிப்படையில் மௌலவி என்றும், சூபி என்றும் எந்தப் பிரிவினர்களும் இருந்ததில்லை. மாறாக, அஸ்ஹாப் அல்லது ஸஹாபா என்ற பெயரைத் தவிர்த்து வேறு எந்த பெயரும் நிலவவில்லை.

சில சஹாபாக்கள் சில குறிப்பான அமல்களின் காரணத்தினால் மற்ற ஸஹாபாக்களைவிட சிறந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். உதாரணமாக அஸ்ஹாபே ஸுப்பா என்ற திண்ணை சஹாபாக்கள் தங்கள் வீடு,வாசல்கள் உலக அலுவல்களையெல்லாம் ஒதுக்கி துறவறத்தில் சிறந்து விளங்குவது இதற்கு தெளிவான ஆதாரமாகும். அவ்வாறு இருப்பினும் கூட ஸஹாபாக்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடோ, வித்தியாசமோ இருக்கவில்லை.

அதன்பின் சங்கைக்குரிய தாபியீன்கள் காலம் வந்தபோது இந்த ஆலிம்-சூபி வெளிரங்க, அந்தரங்க கல்விகளின் தனித்தன்மைகள் வெளியாக ஆரம்பித்தன. அதற்கு பி;ன்பு தபவுத்தாபியீன்களின் காலத்தில் இவ்விரு கல்விகளின் வேறுபாடுகள் இந்த அளவு உண்டாயின. உண்மையில் இதுவே வெளிக்கல்வி என்ற பெயர் உருவான் காலம். இது நபித்துவத்தின் இரண்டாம் நூற்றாண்டாகும்.

அதற்குப்பின் ஷரீஅத் சட்டங்களை தொகுத்து நூல் வடிவில் எழுதும் காலம் வந்தது. மேலம் புனிதமான ஷரீஅத்தைப் பரப்பும் பணி அதிகமானபோது, அமலின் அடிப்படையில் இரு வகுப்பினர்களில் வேறுபாடுகள் கொஞ்சம் அதிகமாயின. ஆகவே எந்த வகுப்பினர்; பிக்ஹு மற்றும் ஷரீஅத் சட்டங்களை தொகுக்கவும், பரப்பவும் பாடுபட்டார்களோ அவர்கள் உலமாக்கள்(இமாம்கள்) என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். பின்பு அவர்களாலும் சில தனித்தனி கலைகளைக் கவனித்து(முஹத்திதீன்கள்) நபிமொழி விற்பன்னர்கள் என்றும் (புகஹா) சட்டமேதைகள் என்றும், திருமறை விரிவுரையாளர்கள் என்றும், இதுபோன்ற பெயர்களால் புகழப்பட்டார்கள். எனினும் அப்புனிதர்கள் வெளிரங்க கல்விக்குப்பின் தங்களது முழு மூச்சுடன்- அந்தரங்க சுத்தி- உளத்தூய்மைக்குரிய காரியங்களில் ஈடுபட்டார்கள். அவர்களே மஷாயிக் -ஞான வழிகாட்டி என்றும் சூபிய்யா அகத்தொளி பெற்றவர்கள் என்றும் போற்றப்பட்டனர். ஆக தன் அகத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்தும் வழிக்குத்தான் -தஸவ்வுப்- என்று பெயர் வந்துள்ளது.

அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களத நூலில் மிகத் தெளிவுபட பல விஷயங்களை கூறிவிட்டு, எவர் தன் உள்ளத்தை அல்லாஹ்வின் ஞாபகத்திலேNயு வைத்து இறைவனை மறக்கச் செய்யும் எந்தப் பொருளும் உள்ளத்தில் நுழைந்து விடாமல் பாதுகாத்து கொண்டிருப்பவர்கள்தான் அஹ்லெ சுன்னத்தில் உள்ள ஞானவான்கள். இவர்கள் தங்களுக்கு தஸவ்வுபை உடையவர்கள் என்று நாமம் சூட்டினர். மேலும் இந்த தஸவ்வுப் என்னும் பெயர் அப்புனிதர்களுக்கு ஹிஜ்ரி 200-ல் இருந்தே பிரபலமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மௌலவி, முல்லா என்னும் பெயர்கள் ஸஹாபாக்கள் காலத்தில் இல்லாதது போன்று சூபி, தஸவ்வுப் என்னும் பெயர்களும் ஸஹாபாக்கள் காலத்தில் இருக்கவில்லை. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே பிரபலமாயின!

சூபி என்ற பெயரை காமிலீன்களான மஷாயிகுமார்களுக்கு அதிகமாகச் சொல்லப்பட்டது. ஞானப்பாட்டையில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு சூபி என்றும பலருக்கு சூபிய்யா என்றும் அம்மேதைகள் சென்றடைந்த வழியில் நடைபோட ஆரம்பித்த ஒருவருக்கு முதஸவ்விப் என்றும் பலருக்கு முதஸவ்விபா என்றும் சொல்லப்பட்டுள்ளது என் அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சூபி எனும் வார்த்தை சூப்(கம்பளி) என்னும் வார்த்தையில் இருந்து பிரிந்தது. காரணம் அம்மேதைகளில் அதிகமானோர் வெளி அலங்காரமான அழகிய உடைகளை அணியாமல் திக்கான ஆடைகளையும், கம்பளி ஆடைகளையும் அணிந்திருக்கிறார்கள் என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர்கள் சூபி என்னும் வார்த்தை சவ்ப் என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது. காரணம் அம்மகான்கள் உலக ஆசாபாசங்கள் சுருங்கக் கூறின் அல்லாஹ் அல்லாத அனைத்தையும் விட்டு அல்லாஹ் அளவிலே தன்னை திருப்பி அவனியிலேயே அர்ப்பணித்து கொண்டார்கள் என்று கூறுகின்றார்கள்.

முடிவாக் இவர்கள் அனைவர்களும் இறைவன் கட்டளைக்கு முற்றிலும் வழிபட்டு அல்லாஹ்விற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். மௌலவி, முல்லா, ஆலிம் இவர்கள்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் போதனைகளைச் செய்கிறார்கள். சூபியாக்கள் இஸ்லாத்திற்கும், குர்ஆன் ஹதீதுக்கும் மாறுபட்டவர்கள் என்று கூறித்திரியும் சில குதர்க்கவாதிகள் அம்மஹான்களின் வரலாறே தெரியாதவர்கள் எனக் சுறலாம். உலமாக்கள், சூபியாக்கள் என்ற இரு குழுவினர்களும் நுபுவ்வத் என்னும் மரத்தில் பிரிந்து வந்த இரு கிளையாகும் என்பதே உண்மையாகும்.

உலமாக்கள்(இல்மே லாஹிர்) வெளிரங்க கல்வியையும், ஷரீஅத் சட்டத்தையும் போதிப்பவர்களாக இருக்கின்றனர். அதைப் போன்று சூபியாக்கள் (இல்மே பாதின்) அந்தரங்க அகமியக் கல்விகளையும், தரீகத்தின் சீரிய முறைகளையும் போதிக்கின்றனர். ஷரீஅத்தின் உலமாக்கள் குர்ஆன் ஹதீதுகளிலிருந்து மார்க்க சட்டங்களை போதிக்கின்றனர்.

சூபியாக்கள் அந்தரங்க(பைஜ்) அருளின் மூலமாக உள தெளிவு பெற்று ஷரீஅத்தின் பிம்பங்களாக காட்சி அளிக்கின்றனர். இரு வகுப்பினர்கள் போதனைகளும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஞான ஊற்றிலிருந்து பொங்கி வரும் அமுதங்களாகும்.

சூபியும், யோகியும்:-

தற்காலத்தில் அறிஞர்கள் என்ற பேர்வையில் திரியும்ஒரு சில புல்லுருவிகள் இறைவனின் அருள் பெற்ற நாதாக்களின் நடைமுறைகள் எல்லாம் இஸ்லாமிய வீரர்கள் இந்தியாவை வெற்றி கொண்ட பின்னர் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தபின் இங்குள்ள இந்து யோகிகளுடன் பழகியபின் அவர்களின் நடைமுறைகளை எடுத்துக் கொண்டார்கள். இந்த சூபியாக்களின் நடைமுறைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மிக தைரியமாக கூறுகின்றனர்.

அல்லாமா அபுல்காசிம் குஷைரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:- இந்த தஸவ்வுப் என்னும் மெய்ஞ்ஞான கல்வியுடைய நாதாக்கள் இல்லாத ஒரு காலம் கூட இஸ்லாத்தில் இருந்திருக்கவில்லை என குறிப்பிடுகின்றனர்.

அல்லாமா அபூ தாலிபுல் மக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது கூதுல்குலூப் என்னும் பெரும் நூலில் வரைந்துள்ளார்கள். அதாவது ஷரீஅத்தின் சட்டமேதைகளான புகஹாக்களுக்கு ஏதாவதொரு மஸஅலாவில் சந்தேகங்களோ, சிக்கல்களோ ஏற்பட்டு திகைப்பு உண்டானால் உடனே அக்காலத்தில் உள்ள ஞான மேதைகளான சூபியாக்களிடம் சென்று அச்சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவேதான் சட்டமேதை ஷாபிஈ வலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏதாவதொரு சட்டங்களில்,மஸ்அலாவில் சிக்கல் ஏற்பட்டால் ஞானமேதைகள் இருக்கும் இல்லங்களுக்குச் சென்று கேட்டு, அம் மஸ்அலாக்களின் தெளிவைப் பெற்றுக் கொள்வார்கள். குறிப்பாக இறைஞானத்தை எவர் உதவியுமின்றி இறைவனின் மூலம் பெற்ற உம்மீயான மாமேதை ஷைபானுர் ராபீ லரியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அதிகம்,அதிகம் சென்று படினமான சட்டங்களின் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்; என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக, இத்தகைய மேதைகள் ஒவ்வொரு காலத்திலும், இரக்கவே செய்கின்றனர். எனவே, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் என் உம்மத்தினர் ஒரு சிறிய கூட்டத்தினர் சத்தியத்தின் மீது நிலைத்து இருப்பார்கள். அவர்களின் விரோதிகள் எவரும் எந்த தீங்கும் செய்ய முடியாது என சிலாகித்துக் கூறியுள்ளார்கள். இத்தகைய மேதைகளின் வரிசையில்தான் மாபெரும் மெய்ஞானி சுல்தானுல் ஆரிபீன் கௌதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், சுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் , அபுல்ஹசன் ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்வலியுல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் ஞானகுரு குத்புஸ்ஸமான் பதருத்தீன் படேஷா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களால் இக்காலத்தில் நேர்வழி காட்டும் குத்பும், முஹ்யித்தீன் இப்னு அரபியுமாக இருக்கிறார்கள் என்று புகழப்பட்ட மாமேதையுமான குத்புஸ்ஸமான், இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன், ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் சூபி ஹஜ்ரத் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களின் பிரதான கலீபாவும், காயல்பட்டணத்தில் பிறந்து சிலோனில் துயில் கொண்டிருக்கும் எனது ஆன்ம குருவும், இன்னும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் குரு பிரானும் ஞானக் கருவூலங்களை மக்களுக்கு அள்ளித்தந்த மகானுமாகிய வலிய்யுல் காமில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் C.A.K. ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி பாஜிலே நூரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இன்னும் இது போல நாதாக்களுகம் இடம் பெறுகின்றனர்.

அல்லாஹ் நம் யாவர்களின் இதயங்களையும், இம் மான்களின் பரக்கத்தாலும், பைஜின் மூலமாகவும் ஒளி பெறச் செய்து அம்மான்களின் அடிச்சுவடுககளை பின்பற்றி நடந்து முக்தி பெற்ற நல்லோர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!