1434ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!

1434ம் வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!

By Sufi Manzil 0 Comment November 15, 2012

Print Friendly, PDF & Email

ஹிஜ்ரி 1433 துல்ஹஜ் மாதத்தோடு முடிவுற்று புதிய ஆண்டு ஹிஜ்ரி 1434 முஹர்ரம் முதல் பிறையோடு பிறக்கிறது. அனைவருக்கும் புனித புத்தாண்டு வாழத்துக்கள்.
அல்லாஹு ஸுப்ஹானஹுவத்தஆலா இவ்வுலகைப் படைத்ததும், நபிமார்களுக்கு அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் துன்பங்களிலிருந்து மீட்சி அளித்த நாளும் (ஆஷூரா -முஹர்ரம் பிறை 10) இந்த மாதத்தில் தான் வருகிறது. அதற்காகத்தான் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 அன்று நோன்பு பிடிப்பது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.  பிறக்கின்ற இந்த புத்தாண்டில் அதிகமதிகம் அமல்கள் செய்து இறைநெருக்கத்தையும், இறையோனின் விலாயத்தையும் வல்ல நாயனின் துஆ பரக்கத்தாலும், நமது ஷெய்குமார்களின் நல்லாசியாலும் பெற்றிட வாழ்த்துகிறோம்