ஆஷூரா நல்வாழ்த்துக்கள்.!!

ஆஷூரா நல்வாழ்த்துக்கள்.!!

By Sufi Manzil 0 Comment December 5, 2011

ஆஷூரா தினம்! முஹர்ரம் பிறை 10 நிறைய நபிமார்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் நீக்கப்பட்ட நாள். அல்லாஹ்வின் லவ்ஹு, கலம், அர்ஷ}, குர்ஸி போன்றவை படைக்கப்பட்ட நாள். தியாகத்தின்வேந்தர் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கயவர்களால் ஷஹீதாக்கப்பட்ட நாள்.

திருத்தூதர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் நீக்கப்பட்டதற்கு நன்றி செலுத்துவதற்காக யூதர்கள் ஒரு நாள் நோன்பு பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இதைக் கேள்வியுற்ற நபிகளார் இதற்கு நோன்பு பிடிக்க நாம்தான் தகுதியானவர்கள். எனவே யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி பிறை 9, 10 அல்லமது 10, 11 தினங்களில் நோன்பு பிடிப்பது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

ஆஷூரா தினத்தில் நமது முன்னோர்கள் செய்துவந்த நல்லமல்களில் ஒன்றான ஆஷூரா துஆவை ஓதுவோம். அதற்குரிய பலன்களைப் பெற்றிடுவோம். ஹஸன் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் மௌலிது ஷரீபை ஓதுவோம். அனைவருக்கும் ஆஷூரா நல்வாழ்த்துக்கள்.!

https://sufimanzil.org/articles/duadikirawrads/ashura-dua