காயல்பட்டினம் மஹான் அல் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனாரும், கலீபாவுமாகிய மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி ஸூபி அவர்கள் இன்று ஹிஜ்ரி 1435 ரபியுல் அவ்வல் பிறை 8 வெள்ளிக்கிழமை (10-01-2014) மாலை 5 மணியளவில் நாகர்கோயிலில் வைத்து மறைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாருக்கு வயது 74. அன்னாரின் பூதஉடல் காயல்பட்டினம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
ஸூபி ஹழ்ரத் அவர்களின் கலீபாவின் கந்தூரி அழைப்பிதழ்!
காயல்பட்டினம் கண்டெடுத்த மகான் ஷைகுனா அஷ்ஷைகுல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபா ஷெய்குனா முஹம்மதலி சைபுத்தீன் பாகவி ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வருடாந்திர கந்தூரி நிகழ்வு இன்ஷா அல்லாஹ்…