வித்ர் தொழுகை எத்தனை ரகத்துகள் எப்படி தொழ வேண்டும்?

 

கேள்வி: அஸ்ஸலாமு அழைக்கும். வித்ர் தொழுகை எத்தனை ரகத்துகள்? எப்படி தொழ வேண்டும்? மூன்றும் தொடர்ச்சியாக தொழவேண்டும அல்லது இரண்டு 10 ஒன்றாக தொழ வேண்டுமா?

 

mohideen hameedhulla [email protected]

Sun, Aug 21, 2011 at 9:08 PM

பதில்:

இரவு நேரத்தின் இறுதித் தொழுகைiயாக உங்களின் வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்- புகாரி, முஸ்லிம்.

வித்ரு என்பதின் பொருள் ஒற்றைப்படையானது என்பதாகும். இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து அதிகாலைப் பொழுது உதயமாகும்வரை வித்ரு தொழுது கொள்ளலாம். வித்ரு ஷாபி மத்ஹப் படி ஸுன்னத்தும், ஹனபி மத்ஹப் படி வாஜிபுமாகும். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஓன்பது, பதினொன்று ஒன்று ஒற்றைப்படையாக தொழ வேண்டும். ஷாபி மத்ஹபில் வித்ரின் குறைந்த அளவு ஒரு ரக்அத் ஆகும். அதிக அளவு 11 ரக்அத் ஆகும். வித்ரை இரண்டு ரக்அத் ஒரு ஸலாமாகவும், ஒரு ரக்அத் மற்றொரு ஸலாமாகவும் தொழ வேண்டும்.

மூன்று ரக்அத் தொழும்போது முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ஸூராவும் இரண்டாவது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன் ஸூராவும், முன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹது, பலக், நாஸ் ஸூராக்களையும் ஓதுவது ஸுன்னத்தாகும்.

வித்ரை மூன்றை விட அதிகமாக தொழும்போது கடைசி ரக்அத்தில் ஒரு அத்தஹிய்யாத்தும் அதற்கு பின்னுள்ள ரக்அத்தில் ஒரு அத்தஹிய்யாத்தும் ஆக இரு அத்தஹிய்யாத் மட்டுமே ஓதிட வேண்டும். இரண்டு அத்தஹிய்யாத்தை விட அதிகப்படுத்தினால் தொழுகை முறிந்து விடும்.

ஹனபி மத்ஹபில் மூன்று ரக்அத்துகளையும் சேர்த்து தொழ வேண்டும். மூன்றாவது ரக்அத்தில் குனூத் ஓத வேண்டும்.

ஸஹாபாப் பெருமக்களில் ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இஷா தொழுதபின் உடனே வித்ரையும் தொழுது விடுவார்கள். ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் உறங்கி எழுந்து, பிறகு வித்ரைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். இந்த விபரத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியேற்றதும் 'அபூபக்கர் பேணுதல் உடையவர். உமர் தன்னம்பிக்கை உடையவர் என இரு செயல்களையும் புகழ்ந்துரைத்தனர்.-பைஹகி.

  • Related Posts

    தேவ்பந்திகளின் வார்த்தைகள் குஃப்ர் எனச் சொல்லிக் கொண்டே அவர்களைப் பின்துயர்ந்து தொழுபவர் பற்றி…

    தேவ்பந்திகளின் வார்த்தைகள் குஃப்ர் எனச் சொல்லிக் கொண்டே அவர்களைப் பின்துயர்ந்து தொழுபவர் பற்றி… கேள்வி: ஜைது என்பவர் அரபு நாட்டில் வசிக்கிறார். அரபுலகில் வழிகெட்ட வஹ்ஹாபிய மதம் பரவலாகி இருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜைதானவர் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின்…

    அல்லாஹ்வை சூழ்ச்சியாளன் என்று சொல்லலாமா?

    கேள்வி :- நமது சுன்னத் வல் ஜமாஅத்தினர்களிலும் சிலர் வஹ்ஹாபிகள் கூறுவது போன்று அல்லாஹ்வைப் பற்றி அவன் சூழ்ச்சி செய்பவன் என்று சொல்கின்றனர். அதற்கு உதாரணமாக கீழ்காணும் ஆயத்தை காட்டுகின்றனர். وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ…

    You Missed

    Casino News Latest Casino & Gambling News November 2026 Casino.com

    Top Trends Shaping the Future of the Casino Industry

    Best No Deposit Bonus Codes 2026: Up to $55 Free Casino Cash

    Chicken Road: Eğlence ve Heyecanı Bir Arada Sunan Oyun Deneyimi

    Best Online Casinos UK 2026 Non-Gamstop Casinos Reviewed

    Best Casino Sites August 2026 Find Casinos Online