Tamil Bayan before Jumma inside the Mosque Debate-ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டணத்தில் நடத்திய விவாதம்
By Sufi Manzil
ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டணத்தில் நடத்திய விவாதம்:
தென்னிந்தியா, காயல்பட்டணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர்ஆகும். இங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவர்களும் ஷாபியீ மத்ஹபை பின்பற்றியவர்களே! இங்கு சுன்னத்வல் ஜமாஅத் முறைப்படி நமது முன்னோர்களால் கட்டப்பட்ட இரு ஜும்ஆ பள்ளிகள் (குத்பா பெரிய பள்ளி, குத்பா சிறிய பள்ளி) உள்ளன. வாரம் ஒரு முறை ஒரு பள்ளியில் ஜும்ஆ நடைபெற்று வருகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை இப்பள்ளியில் ஜும்ஆ குத்பா பயான்கள் அரபி மொழியிலேயே நடைபெற்று வந்திருக்கிறது. ஜும்ஆ தினங்களில் மக்கள் முன்கூட்டியே பள்ளிக்குச் சென்று தொழுது ஸூரா கஹ்பு, இன்ன பிற ஸூராக்களையும், ஸலவாத்து ஷரீபுகளை ஓதிக் கொண்டும் எவ்வித இடையூறு இல்லாமல் அமல்கள் செய்து வருவது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் நடந்த 1980-ம் வருடம் மௌலவி நஹ்வி செய்யதஹ்மது ஆலிம் அவர்கள் ஜும்ஆவில் தமிழில் பயான் பண்ணினார்கள். அச் சமயத்தில் அங்கிருந்த ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த பயான் மாக்கத்திற்கு விரோதமானது. அவ்வாறு பண்ணுவது மார்க்க சட்டப்படி ஹராம் என்று தடுத்தார்கள். அச்சமயத்தில் இது ஊர் மக்கள் மத்தியில் மிகவும் பிரச்சனைக்குரியதாக ஆகி, அதற்குரிய ஆதாரங்களை இரு தரப்பினர்களும் தர வேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கப்பட்டனர். ஷெய்குனா அவர்கள் தரப்பில் ஷெய்குனா அவர்களும், அவர்களது கலீபாக்களான W.M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள், S.M.H. முஹம்மதலி சைபுத்தீன ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்கள், மௌலவி அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஆலிம் அவர்கள் ஆகியோரும், எதிர் தரப்பில் S.N. சாகிபுத் தம்பி ஆலிம் அவர்கள், M.S. அப்துல் காதிர் பாகவி அவர்கள் போன்றவர்களும்; கலந்து கொண்டனர்.
கனம். குளம் லெப்பைத் தம்பி ஹாஜி (குத்பா பெரியபள்ளி தலைவர்) அவர்கள் முன்னிலையில் இப்பிரச்சனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப்படையில் (மார்க்க சட்டப்படி அல்ல) முடிவு எடுக்கப்பட்டு தமிழில் பயான் நடந்து வருகிறது. அச் சமயத்தில் நமது ஷெய்குனா அவர்கள் அங்கு சமர்ப்பித்த பத்வாக்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
அச்சமயத்தில் நமது ஷெய்குனா அவர்களை எதிர்த்தவர்கள் தங்களது வாழ்க்கையில் அடைந்த இழிநிலைகளையும், துன்பங்களையும், பட்ட நோய்களையும் இந்நகர மக்கள் நன்கு அறிவார்கள்.
பத்வா ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி ஷெய்குனா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடிதம்
ஜும்ஆவிற்கு முன் உள் பள்ளியில் அரயபியல்லாத வேறு மொழியில் பயான் பண்ணுவது ஆகாது என்பதற்கு ஷெய்குனா அவர்களால் கொடுக்கப்பட்ட பத்வாக்களை பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்கள்.
ஜும்ஆ பயானுக்கு எதிர்ப்பாக கொடுக்கப்பட்ட கடிதத்தின் நகல்.
பெரிய,சிறிய குத்பா பள்ளி மானேஜர் ஜனாப். குளம் லெப்பைத் தம்பி ஹாஜி அவர்களுக்கு கொடுத்த மனு:-
நீங்கள் 4-3-80 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு ஜும்ஆ தினத்தில் உபன்னியாசம் செய்வது பற்றி உலமாக்களிடம் இருந்து வந்திருக்கும் பத்வாக்களை உலமாக்களால் பரீசிலனை செய்ய இருப்பதை பார்க்க வரும்படி அழைத்திருந்த அழைப்பை ஏற்று நாங்கள் வந்தருந்தோம். அங்கு ஆகும் என்று சொன்னவர்களின் பத்வாக்களையும் ஆகாது என்று சொன்னவர்களின் பத்வாக்களையும் வாசித்துக் காட்டியதை நாங்கள் கேட்டோம்.
ஆகாது என்று சொன்னவர்கள் ஜும்ஆ தினத்தில் பாங்கிற்கு முன்னாலும் பின்னாலும் பிரசங்கம் செய்வது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் காலங்களில் நடக்காத பித்அத்தான விஷயம். மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாகாக்கள், தாபியீன்கள், இமாம்கள் செய்து வந்த சுன்னத்தான அமல்களை தடுக்கக் கூடியதாக இருப்பதினால் இது கெட்ட பித்அத், ஹராம். இதை தடுக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்கள்.
ஆகும் என்று சொன்னவர்கள் இப்பிரசங்கங்கள் செய்வது ஜனங்களுக்கு பிரயோஜனம் அதிகமாக இருப்பதினால் தொழுகைக்கு இடைஞ்சல் இருந்தாலும் ஆகும் என்று சொல்லி இதற்கு ஆதாரமாக இமாம் நவவி அவர்கள் சொல்லியிருக்கக் கூடிய ஒரு வாசகத்திதை அதாவது- ஒரு கூட்டத்தார் பள்ளிவாசலில் குர்ஆனை சப்தமிட்டு ஓதுகின்றார்கள் அவர்கள் ஓதுவதைக் கொண்டு சில ஜனங்கள் பிரயோஜனமடைகின்றார்கள். மற்றவர்கள் இடைஞ்சல் படுகின்றார்கள். இடைஞ்சலை விட பிரயோஜனம் அதிமாக இருக்குமானால் ஓருவது மிக சிறந்தது. அதற்கு மாற்றமாயின் மக்ரூஹாகும் என்ற ஆதாரத்தைக் கொண்டு பயான் செய்வரினால் ஜனங்களுக்கு பிரயோஜனம் அதிகமாக இருப்பதினால் தொழுகின்றவர்களுக்கு இடைஞ்சல் இருந்தாலும் ஆகும் என்றும்,
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வெள்ளிக் கிழைம மிம்பரில் நின்று குத்பா ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ஸஹாபி வந்து, தொழாமல் அமர்ந்து விட்டர். உடனே நாயகமவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து எழுந்து இரண்டு ரக்அத்துகள் தொழு! அதை சுருக்கமாகத் தொழு! எனக் கூறினார்கள். பிறகு வெள்ளிக் சிழமை இமாம் குத்பா ஓதிக் கொண்டிருக்கும் போது உங்களில் யாரேனும் வந்தால் அவர் இரண்டு ரக்அத்துகள் தொழவும். அவ்விரு ரக்கஅத்துகளையும் சுருக்கமாகத் தொழவும் என்று கூறினார்கள் என்பதை ஆதாரமாக காட்டி பிரசங்கம் செய்வது தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகைக்கு இடைஞ்சல் இல்லi என்றும் சொன்னார்கள்.
அதற்கு ஆகாது என்று சொன்ன உலமாக்கள் நவவி இமாம் சொன்னது இரண்டும் சுன்னத்தான வேளையில் ஒரு வேலைக்கு இன்னொரு வேலை இடைஞ்சலாக இருந்தால் பிரயோஜனம் அதிகமாக இருந்தால் அதை செய்வது விசேஷமானது என்றும் இடைஞ்சல் அதிகமாக இருந்தால் மக்ரூஹ் என்றும் செர்னதை செட்ட பித்அத்தான இந்த பிரசங்கத்தினால் பிரயோஜனம் அதிகமாக இருப்பதினால் ஆகும் என்று ஒழுங்கு செய்வது சரியில்லை. இந்த பிரசங்கமே மார்க்கத்தில் கூடாத வேலை என்றும்,
அஸல் குத்பா ஓதும் சமயத்தில் வந்தவரை தஹிய்யத்துல் மஸ்ஜித் ஓதும்படியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதைக் கொண்டு இந்த கெட்ட பித்அத்தான பிரசங்கம் செய்யும் போது தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகைக்கு இடைஞ்சல் இல்லை என்று சொல்வது சரியில்லை என்றும் சொன்னார்கள்.
ஆகும் என்று சொல்லும் உலமாக்களுக்கு இதற்கு தகுந்த பதில் சொல்ல முடியவில்லை. மானேஜரான நீங்கள் பொதுஜனங்கள் அதிகமான பேர்கள் பிரசங்கத்தை விரும்புகிறர்கள். அதனால் வரும்வாரம் பிரசங்கத்தை வைப்போம் என்று சொன்னது முற்றிலும் பொருத்தமில்லாத மார்க்கத்திற்கு மாற்றமான தீர்ப்பாகும்.
இப்படி நீங்கள் செய்வீர்களாயின் கெட்ட காரியத்தை செய்யக் கண்டால் கையால் தட்ட வேண்டும் அல்லது வாயால் தட்ட வேண்டும் அல்லது அல்லது மனதால் வெறுக்க வேண்டும் என்று ஹதீது ஷரீபில் வந்திருப்பதினால் பிரசங்கம் நடந்தால் நாவால் தடுக்கத்தான் செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து தடுக்கத்தான் செய்வோம் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.
ஒப்பங்கள்:
………………..
குறிப்பு: இக் கடிதம் கண்டதும் ஷெய்குனா அவர்கள் தமது முரீது பிள்ளைகளிடம், ஜும்ஆவில் தமிழில் பயான் பண்ணுவது ஹராம்தான். அதை நாம் தடுத்தோம். அவர்கள் கேட்கவில்லை. மார்க்கத்தின்படி பார்க்காமல் முடிவெடுத்து விட்டார்கள். இச்சமயத்தில் ஜும்ஆவில் தமிழில் பயான் நடக்கும்போது நாம் அங்கு செல்லத் தேவையில்லை. அது வீண் குழப்பத்தை உண்டாக்கும் என்று கூறி தடுத்துவிட்டார்கள்.