Soofi Hazrath Kahiri-செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு
By Sufi Manzil
செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு
காயல்பட்டணத்தில் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் 39 வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ல் சி.ஏ.கே. அஹ்மது முஹ்யித்தீன்-முஹம்மது இபுறாகீம் நாச்சி ஆகிய தம்பதிகளுக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார்கள். காயல்பட்டணத்தில் 8 ஜுஸ்வு வரை ஹிப்ழு ஓதினார்கள். ஆலிமாக விருப்பம் கொண்டு அச் சமயம் நகருக்கு வருகை தந்திருந்த காதிரிய்யா தரீகாவின் பிரபலமான செய்கு ஸெய்யிது குடும்பத்தவரான ழியாவுல் ஹக் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிம் தங்கள் அவாவை சொன்னபோது அவர்கள் அவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்று கொடுத்து ஊர் எல்லை வரை சென்று வழியனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர்கள் ழியாவுல் ஹக் ஸூபி ஹஜ்ரத் அவர்களிடம் பைஅத்து வேண்டி நிற்க, என்னை விட மகத்தான வேறொருவர் தங்களுக்கு பைஅத் தருவார்கள். காத்திருங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.
சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் சேர்ந்த அவர்கள், பின்பு பொதக்குடி அந் நூருல் முஹம்மதிய்யி அரபிக் கல்லூhயில் செய்குல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் சேர்ந்து அவர்களிடம் கல்வி கற்று அவர்களின் அன்புக்கு உரித்தானவர்களாயினர்.
ஹிஜ்ரி 1345 ல் அப்துல் கரீம் ஹஜ்ரத் வாத்தான பிறகு, ஹிஜ்ரி 1349 ல் ஸனது வழங்கப்பட்ட போது அப்போதைய கல்லூரி முதல்வாரன முஹம்மது அப்துற் றஹ்மான் ஆலிம் அவர்களால் மௌலவி ஆலிம் பாஸில் நூரி ஸனது அவர்களுக்கு வழங்கப்பட்டது..
இலங்கை காத்தான்குடியைச் சார்ந்த முஹம்மது தம்பி ஆலிம்- மரியம் உம்மாள் ஆகியோரின் புதல்வர் அஹமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் அவர்களும் இவர்களுடன் ஒன்றாக கல்வி பயின்றார்கள்.
பொதக்குடி மத்ரஸாவிற்கு வருகை தந்த ஞான சூரியன் இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன் ஷhஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வருகை தந்திருந்த சமயம் இவர்களையும் இவர்களது தோழர் அஹமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் (இவர்களின் மறைவு கி.பி.1952 அக்டோபர் 2-அடக்கஸ்தலம் காத்தான்குடி) அவர்களையும் ஹைதராபாத் வரும்படி அழைத்தார்கள். அதற்கிணங்க அவர்கள் அங்கு சென்று 6 மாதம் வரை தங்கியிருந்து ஞானக் பேரமுதை அருந்தினர். இறுதியில் செய்கு அவர்கள் அவர்களுக்கு காதிரிய்யா, நக்ஷகந்தியா, ரிபாயிய்யா, ஜிஷ;திய்யா, முஜத்திதிய்யா தரீகுகளில் ஜதுபு, சுலூக்கு வழிகளில் பைஅத்தும், கிலாபத்தும் கொடுத்தார்கள்.
ஹிஜ்ரி 1349 ஜமாதுல் அவ்வல் பிறை 22 புதன் கிழமை (15-10-1930) அன்று அவர்கள் தோல்சாப்பு முஹம்மது அப்துல்லா நச்சி என்ற பெண்ணரசியை திருமணம் புரிந்தார்கள். இத் திருமணத்தில் ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்களும் கலந்து கொண்டார்கள். 1932ல் முதல் மனைவி இறையடி சேர்ந்து விடவே, இரண்டாவதாக தோல்சாப்பு மகுதூம் பாத்திமா என்ற மாதரசியை திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு மூன்று பெண் மக்களும், ஒரு ஆண் மகனும் பிறந்தார்கள். ஆண் மகனார் அஹ்மது முஹ்யித்தீன் அவர்கள் 214-2-1983 அன்று இறையடி சேர்ந்து விட்டார்கள். இவர்களின் இரண்டாவது மகளை மௌலவி ஊண்டி M.M.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள் திருமணம் முடித்துள்ளார்கள். இவர்கள் அன்னாரின் கலீபாக்களில் ஒருவராக திகழ்கிறார்கள்
செய்குனா அவர்கள் வியாபாரம் செய்தார்கள் அதனால் நஷடமும், மன நிம்மதியும் போய்விடுவதால் அதை விட்டொழித்து விட்டு தமது ஆசானின் உபதேசப்படி மக்களுக்கு ஞானம் போதிக்க தங்கள் பார்வையை திருப்பினர். அதற்குமுன் இறைவனை தனித்திருந்து திக்ரு செய்வதற்காக வேண்டியும் தமது நண்பர் அட்டாளச் சேனை அகமது மீரான் ஸூபி அவர்களை சந்திப்பதற்காகவும் வேண்டி 1946 ல் இலங்கை சென்றார்கள். கிராங்குளம் எனுமிடத்திலுள்ள தோட்டத்தில் சுமார் ஒன்றரை வருடம் கலவத்திருந்தார்கள்.பின்பு கொடிக்கால்பாளையம் அ.த. அப்துல் மஜீத் ஸூபி அவர்களின் தோட்டத்தில் சில காலமும், காயல்பட்டணம் இரட்டைகுளப் பள்ளியில் ஓராண்டும் கல்வத்திருந்தார்கள். மீண்டும் 1949 ம் வருடம் இலங்கை சென்று கொழும்பு சம்மாங்கோட்டுப் பள்ளியில் சில மாதங்கள் இமாமத் பணியினை செவ்வனே செய்தார்கள். பின்பு இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று ஞானங்களையும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் போதித்தார்கள். அதற்காக ஸூபி மன்ஜில்களை உருவாக்கினார்கள்.
1963 ம் வருடம் இஸ்லாத்தின் இறுதி கடமையாம் காயல்பட்டணத்திலிருந்து சென்று ஹஜ்ஜினை நிறைவேற்றினார்கள்.
1968 ம் வருடம் தப்லீக் ஜமாஅத்தினர்களுடன் இலங்கை மாத்தறையில் விவாத மாநாட்டில் விவாதித்து தப்லீக் ஜமாஅத்தினர்களை விரண்டோடச் செய்தனர்.
செய்குனா அவர்கள் எழுதிய
ஞானம் போதிக்கும் நூற்கள்:
1. அத் துஹ்பத்துல் முர்ஸலா.
2. அஸ்ஸுலூக்.
3. ஞான தீபம்.(மிஷ;காத்துல் அன்வார்)
4. அல் ஹக்கு 1
5. அல் ஹக்கு (கேள்வி-பதில்)
6. அத்தகாயிகு
7. அஸ்ராருல் கல்வத்(கல்வத்தின் ரகசியங்கள்)
8. அகமியக் கண்ணாடி
9. கலிமத்துல் ஹக்.
செய்குனா அவர்கள் எழுதிய கொள்கை விளக்க நூற்கள்:
1. இள்ஹாறுல் ஹக்-சத்தியப் பிரகடனம்.
2. உலமாக்களின் உண்மை பத்வா
3. அறிவாளர்களே ஆராய்ந்த பாருங்கள்.
4. காதியாணி-தேவ்பந்து சம்பாஷணை.
5. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்.
6. சுவர்க்க நகைகளா? அல்ல.நுரக விலங்குகள்.
7. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு.
8. மவ்தூதி சாஹிபும் அவரது ஜமாஅNது இஸ்லாமி இயக்கமும்.
9. அல் முஹன்னதின் அண்டப் புளுகு.
10. தப்லீக் என்றால் என்ன?
11. புலியைக் கண்டு ஓட்டம்.
இறுதி வரை எந்தவொரு தனி மனிதனுக்கும், சக்திக்கும் பணியாமல் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவோ,பின்வாங்கவோ செய்யாமல், அழி மொழி சொற்களை கேட்டு முகம் சுளிக்காமல் சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களால் வகுத்து தரப்பட்ட நேர்வழியில் சென்று வீரத்தோடு கொள்கைளளை போதித்து
அனைவராலும் ஸூபி ஹலரத் என்று அழைக்கப்பட்ட அல்லாமா செய்குல் காமில் ஸூபி ஹலரத் அவர்கள் ஹிஜ்ரி 1402 புனித ரமலான் பிறை 24 (16-07-1982) வெள்ளிக் கிழமை அன்று நோன்பு வைத்த நிலையில் சுப்ஹிற்குப் பின் கொழும்பில் வைத்து இறையடி சேர்ந்தார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் கொழும்பு குப்பியாவத்தையில் நல்லடக்கம் செய்யப்பட்டு ஜியாரத் நடைபெற்று வருகிறது.
தமிழ் நாட்டில் வஹ்ஹாபிகளான தப்லீகை தோலுரித்துக் காட்டியவர்கள் இவர்கள். காயல்பட்டணம் ஸூபி ஹலரத் என்றால் வஹ்ஹாபிகள் நடுநடுங்குவர்.
இவர்களின் மறைவிற்குப் பின் தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபைக்கு தலைவராக அன்னாரின் கலீபாக்களில் ஒருவரான மௌலவி S.M.H..சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்களை தேர்ந்தெடுத்தது ஸூபி ஹலரத் அவர்களின் மார்க்க சேவைக்கு சூட்டப் பட்ட மணிமகுடமாகும்.
இவர்களின் கந்தூரி வைபவம் இலங்கையின் பல பாகங்களிலும், இந்தியாவின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகிறது.