غَوْثُ الْوَرٰى يَا بَيْتُ-கௌதுல் வரா யா முஹ்யித்தீன் பைத்

இந்தியா, குமரி மாவட்டம், கோட்டாறிலிருந்து வந்து காதிரிய்யா தரீகாவை இலங்கையில் பரப்பிய மகான் ஹஜ்ரத் ரஜபுல் காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இலங்கை காலி கழுவல்லயில் அடங்கியுள்ளார்கள். இவர்களின் மக்பரா துஆ கபூலாகும் இடம் என்று நமது ஷெய்கு நாயகம் ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

غَوْثُ الْوَرٰى يَادَسْتَكِيْرْ يَا مُحْيِيَ الدِّيْنِ
 اَحْيِ الْقُلُوْبَ بِغَوْثِكُمْ يَا مُحْيِيَ الدِّيْنِ
மானிடரை இரட்சித்து கைதாங்கும் முஹிய்யத்தீன்
மாண்ட கல்பை உயிராக்கும் கௌதே முஹிய்யத்தீன்
وَاجْعَلْ لِنَا زِلَةٍ عَلَيْنَا يَا مُحْيِيَ الدِّيْنِ
 وَلِاٰفَةٍ فِيْنَا مَنَامً يَا مُحْيِيَ الدِّيْنِ
ஆபத்தை தூராக்கி எம்மை ஆளும் முஹிய்யத்தீன்
அபாய கஷ்டத்தை அகற்றி வைப்பீர் முஹிய்யத்தீன்
مُسْتَبِدِلًا كَمُظَفَّرٍ يَا مُحْيِيَ الدِّيْنِ
 وَكَغَيْرِهِ مٍنْ صَبْوَةٍ يَا مُحْيِيَ الدِّيْنِ
முளஃப்பரைப் போல நற்கதியருள்வீர் முஹிய்யத்தீன்
மடமையை விட்டும் நீக்க வரம் தாரும் முஹிய்யத்தீன்
خُذْ بِيَدِ مَنْ عَثُرَ فِيْنَا مُحْيِيَ الدِّيْنِ
 مَادَامَ دِيْكُكَ صَائِحًا يَا مُحْيِيَ الدِّيْنِ
சறுக்கியோரை கைதாங்கும் முஹிய்யத்தீன்;
சங்கையும் சேவல் என்று சப்திக்கும் முஹிய்யத்தீன்
تَصْلِيْقُكُمْ نِعْمَ الْبِضَاعَةُ مُحْيِيَ الدِّيْنِ
 تَكْذِيْبُكُمْ سُمُّ سَاعَةٍ يَا مُحْيِيَ الدِّيْنِ
உம்மை உண்மை கொண்டோர் உறுதி பெற்றார் முஹிய்யத்தீன்
உம்மை பொய் என்போர் கடும் நஞ்சை தின்பார் முஹிய்யத்தீன்
وَاسْلُكْنَا بِالْمُحَمَّدِيْ يَا مُحْيِيَ الدِّيْنِ
 وَأْذَنْ عَلَيْنَا اَوْقَاتَنَا يَا مُحْيِيَ الدِّيْنِ
நபி நாயகர் வழியில் நடத்தி வைப்பீர் முஹிய்யத்தீன்
நலவாக என் தீனை காத்தருள்வீர் முஹிய்யத்தீன்
وَحْسِنْ خَوَاتِمَنَا وَخُذْ يَا مُحْيِيَ الدِّيْنِ
 اَيَادِيَنَا سَكَرَاتَنَا يَا مُحْيِيَ الدِّيْنِ
எங்கள் முடிவை அழகாக்கி கைதாங்கும் முஹிய்யத்தீன்
எங்கள் மரண வேளையில் ஈடேற்றும் கௌதே முஹிய்யத்தீன்
غَوْثُ الْوَرٰى يَادَسْتَكِيْرْ يَا مُحْيِيَ الدِّيْنِ
 اَحْيِ الْقُلُوْبَ بِغَوْثِكُمْ يَا مُحْيِيَ الدِّيْنِ
اَللهُ زَادَ مُحَمَّدًا تَكْرِيْمًا
 صَلُّوْ عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا ٭

Samu Sihabudeen Wali – ஷாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு.

 

Samu Shihabuddin Wali

 
Samu Shihabuddin Waliyullah was the fourth son of Saint Sulaiman.He was born on 1045 A.H. He studied under his father and elder brothers. He composed many poetical works. His work Ikhtilab Malai which is based on Mizanul Kubra of Abdul Wahab ash’ Shahrani, a great Arab Scholar. This manuscript deals with 550 points in which the Shafiyi and Hanafiyi school of Jurisprudence differ. Another book entitled Faydur Rahman fi Ikthilafil Aimmatil Ayan which also deals with the differnce of opinion of the four Imams. Samu Shihabuddin Wali composed many Qasidahs in Arabic and in Arabu Tamil in praise of our holy Prophet Muhammad (sallalahu alaihi wa sallam) . He composed in Arabic Moulid (Panegyric) on our Prophet entitled Miladus Samj Fi Madaihin Nabiyyit Tihami. He composed many poems like Rasul Malai, Periya Hadith Malai, Penn Puthi Malai, Kalyana Bidat Malai and Thegai Malai etc. He developed Arabu Tamil and toured various town with his brothers Salahuddin and propagated Islam. Periya Hadith Manikka Malai contains translations of one thousand one hundred and nineteen selected traditionsof Holy Prophet. Shinna Hadith Malai consists of 608 Hadith. Both these works have been printed several times in Tamil. He expired on 1121 A.H. and his shrine is at Appa Palli Mosque Campus. He was great Savant and revivalist.

ஷாமு ஷிஹாபுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு

    

செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் தம்பியாக சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நான்காவது மகனாக பிறந்த இவர்கள் மாபெரும் இறைநேசச் செல்வராகவும், தமிழிலும்,அரபியிலும் கவி இயற்ற வல்லவராகவும் விளங்கினார்கள்.
 
    மார்க்கத்தில் ஊடுருவியுள்ள அனாச்சாரங்களை கண்டித்தும், மக்களுக்கு அறிவுரைகளைக் கூறியும், மார்க்க சட்டதிட்டங்களை போதித்தும் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீதும் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும் புகழ்ப்பாக்கள் பாடியுள்ளனர்.
 
    பெரிய ஹதீது மாணிக்க மாலை,சின்ன ஹதீது மாணிக்க மாலை, நஸிஹத்து உபதேச மாலை,இஹ்யா மாலை, ரசூல் மாலை, கல்யாண பித்அத்து மாலை, தம்பாக் மாலை  (புகையிலையின் தீமை பற்றியது), அதபு மாலை, மஃரிபத் மாலை போன்ற பல்வேறு மாலைகள் இயற்றியுள்ளனர்.
 
     முதலில் காட்டுத் தெருவில் மரைக்காயர் ஒருவரின்  பெண்ணை திருமணம் முடித்திருந்தார்கள். தம் மாமனார் வீட்டில் நடந்த திருமணத்தில் ஆடம்பரம் இருக்கவே, அதில் கலந்து கொள்வதை தவிர்த்ததோடு தம் மனைவியையும் போகாதிருக்கச் சொன்னார்கள். மனைவி அதை மீறி கலந்து கொண்டதால் அவளை மணவிடுதலை செய்துவிட்டார்கள்.
   
   ஹஜ் சென்றிருந்த சமயம் அங்கு வந்திருந்த துருக்கி சுல்தான் முராதை சந்தித்து அரபு நாட்டில் புகை பிடிக்கும் வழக்கத்தை தடை செய்ய வேண்டிக் கொண்டார்கள். அவரும் அதை தடை செய்தார்.
இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரப் பணி புரிந்தார்கள்.
  
    இவர்களின் அடக்கவிடம் காயல்பட்டணம் அப்பா பள்ளியின் காம்பவுண்டில் அமைந்துள்ளது. வருடந்தோறும் கந்தூரி நடந்து வந்தது. சமீபகாலமாக வஹ்ஹாபிய சித்தாந்தத்தை கடைபிடிக்கும் நபர்களின் கையில் பள்ளி நிர்வாகம் சென்றதால் கந்தூரி நடப்பதில்லை.
 

 

Mappillai Lebbe Alim Wali-மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலி

 மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு

 

 

காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது.

  ஞான மேதை கீழக்கரை தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவராக விளங்கும் பேற்றினை பெற்றார்கள். தமது பத்தாம் வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்து, பின் இஸ்லாமியக் கலை ஞானங்களை கற்றுத் தேர்ந்தனர். தமது ஆசிரியரின் மகளான சாரா உம்மாளை மணமுடித்தார்கள். அதனால் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டதால் மாப்பிள்ளை லெப்பை ஆலிமாக-இமாமுல் அரூஸாக அழைக்கப்பட்டார்கள். தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.

 இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர். இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய இவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் மகத்தானது.

மஙானீ, பத்ஹுத் தைய்யான், ஙனீமத்துஸ்ஸாலிஹீன்,மின்ஹத்து ஸரன்தீப், ஹதிய்யா மாலை, ஹத்யா ஷரீப், ராத்திபத்துல் ஜலாலிய்யா போன்ற எண்ணற்ற கிரந்தங்களை நமக்குத் தந்துள்ளார்கள்.   

தங்களது 84 ம் வயதில் ரஜப் பிறை 5 ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள்.          

இவர்களின் அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் உள்ளது.

Mappilai Lebbai Alim Wali: (1232 – 1316 A.H / 1816 – 1898 A.D)

               Sayyid Muhammad alias Mappilai Lebbai Alim Wali was born on Tuesday 18th Muharram in 1232 A.H / 1816 A.D at Kayalpatnam. His father Shaikh Ahmad popularly known as Vellai Ahmad Wali was the son of Miran Lebbai Alim. His mother name was Amina. Both the father and mother of Mappilai Lebbai Alim Wali were the descendants of Saint Sadakathulla Appa. He was born in the same house in which Appa lived at Kayalpatnam. In his early he had stammering problem problem which was cured by the Duva of Shaikh Ahmad Nusky alias Pal Appa. He learnt Holy Quran by heart at the age of nine and studied under his father who was a great scholar and an eminent spiritual personality. He went to Keela Karai during his boyhood with his father, mother and one brother. The other brothers and sisters remained at Kayalpatnam . In Keela Karai, he studied under Thaika Sahib Wali alias Keela Karain Thaika Sahib Wali. He got married her daughter Sarah. He composed Hadya Malai  as a result of her request. He wasa disciple of Thaika Sahib Wali. He was a great scholar and a saint. His mastery of the Arabic knowledge is well known. He was a powerful speaker and a writer. He has written many books and composed many poems both in Arabic and Tamil. He visited Ceylon and many Arabic countries. His sons Abdul Qadir alias Khalwath Nayagam and Shahul Hameed Wali were all great scholars and saints. He expired on 1316 A.H. and was buried at Keela Karai  besides Shaik Thaika Sahib Wali.

 

Soofi Hazrath Kahiri-செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு

 செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு

  காயல்பட்டணத்தில் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் 39 வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ல் சி.ஏ.கே. அஹ்மது முஹ்யித்தீன்-முஹம்மது இபுறாகீம் நாச்சி ஆகிய தம்பதிகளுக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார்கள். காயல்பட்டணத்தில் 8 ஜுஸ்வு வரை ஹிப்ழு ஓதினார்கள். ஆலிமாக விருப்பம் கொண்டு அச் சமயம் நகருக்கு வருகை தந்திருந்த காதிரிய்யா தரீகாவின் பிரபலமான செய்கு ஸெய்யிது குடும்பத்தவரான ழியாவுல் ஹக் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிம் தங்கள் அவாவை சொன்னபோது அவர்கள் அவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்று கொடுத்து ஊர் எல்லை வரை சென்று வழியனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர்கள் ழியாவுல் ஹக் ஸூபி ஹஜ்ரத் அவர்களிடம் பைஅத்து வேண்டி நிற்க, என்னை விட மகத்தான வேறொருவர் தங்களுக்கு பைஅத் தருவார்கள். காத்திருங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

   சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் சேர்ந்த அவர்கள், பின்பு பொதக்குடி அந் நூருல் முஹம்மதிய்யி அரபிக் கல்லூhயில் செய்குல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் சேர்ந்து அவர்களிடம் கல்வி கற்று அவர்களின் அன்புக்கு உரித்தானவர்களாயினர்.

  ஹிஜ்ரி 1345 ல் அப்துல் கரீம் ஹஜ்ரத் வாத்தான பிறகு, ஹிஜ்ரி 1349 ல் ஸனது வழங்கப்பட்ட போது அப்போதைய கல்லூரி முதல்வாரன முஹம்மது அப்துற் றஹ்மான் ஆலிம் அவர்களால் மௌலவி ஆலிம் பாஸில் நூரி ஸனது அவர்களுக்கு வழங்கப்பட்டது..

   இலங்கை காத்தான்குடியைச் சார்ந்த முஹம்மது தம்பி ஆலிம்- மரியம் உம்மாள் ஆகியோரின் புதல்வர் அஹமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் அவர்களும் இவர்களுடன் ஒன்றாக கல்வி பயின்றார்கள்.

பொதக்குடி மத்ரஸாவிற்கு வருகை தந்த ஞான சூரியன் இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன் ஷhஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வருகை தந்திருந்த சமயம் இவர்களையும் இவர்களது தோழர் அஹமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் (இவர்களின் மறைவு கி.பி.1952 அக்டோபர் 2-அடக்கஸ்தலம் காத்தான்குடி) அவர்களையும் ஹைதராபாத் வரும்படி அழைத்தார்கள். அதற்கிணங்க அவர்கள் அங்கு சென்று 6 மாதம் வரை தங்கியிருந்து ஞானக் பேரமுதை அருந்தினர். இறுதியில் செய்கு அவர்கள் அவர்களுக்கு  காதிரிய்யா, நக்ஷகந்தியா, ரிபாயிய்யா, ஜிஷ;திய்யா, முஜத்திதிய்யா தரீகுகளில் ஜதுபு, சுலூக்கு வழிகளில் பைஅத்தும், கிலாபத்தும் கொடுத்தார்கள். 

ஹிஜ்ரி 1349 ஜமாதுல் அவ்வல் பிறை 22 புதன் கிழமை (15-10-1930) அன்று அவர்கள் தோல்சாப்பு முஹம்மது அப்துல்லா நச்சி என்ற பெண்ணரசியை திருமணம் புரிந்தார்கள். இத் திருமணத்தில் ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்களும் கலந்து கொண்டார்கள். 1932ல் முதல் மனைவி இறையடி  சேர்ந்து விடவே, இரண்டாவதாக தோல்சாப்பு மகுதூம் பாத்திமா என்ற மாதரசியை திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு மூன்று பெண் மக்களும், ஒரு ஆண் மகனும் பிறந்தார்கள். ஆண் மகனார் அஹ்மது முஹ்யித்தீன் அவர்கள் 214-2-1983 அன்று இறையடி சேர்ந்து விட்டார்கள். இவர்களின் இரண்டாவது மகளை மௌலவி ஊண்டி M.M.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள் திருமணம் முடித்துள்ளார்கள். இவர்கள் அன்னாரின் கலீபாக்களில் ஒருவராக திகழ்கிறார்கள்

   செய்குனா அவர்கள் வியாபாரம் செய்தார்கள் அதனால் நஷடமும், மன நிம்மதியும் போய்விடுவதால் அதை விட்டொழித்து விட்டு தமது ஆசானின் உபதேசப்படி மக்களுக்கு ஞானம் போதிக்க தங்கள் பார்வையை திருப்பினர். அதற்குமுன் இறைவனை தனித்திருந்து திக்ரு செய்வதற்காக வேண்டியும் தமது நண்பர் அட்டாளச் சேனை அகமது மீரான் ஸூபி அவர்களை சந்திப்பதற்காகவும் வேண்டி 1946 ல் இலங்கை சென்றார்கள். கிராங்குளம் எனுமிடத்திலுள்ள தோட்டத்தில் சுமார் ஒன்றரை வருடம் கலவத்திருந்தார்கள்.பின்பு கொடிக்கால்பாளையம் அ.த. அப்துல் மஜீத் ஸூபி அவர்களின் தோட்டத்தில் சில காலமும், காயல்பட்டணம் இரட்டைகுளப் பள்ளியில் ஓராண்டும் கல்வத்திருந்தார்கள். மீண்டும் 1949 ம் வருடம் இலங்கை சென்று கொழும்பு சம்மாங்கோட்டுப் பள்ளியில் சில மாதங்கள் இமாமத் பணியினை செவ்வனே செய்தார்கள். பின்பு இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று ஞானங்களையும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் போதித்தார்கள். அதற்காக ஸூபி மன்ஜில்களை உருவாக்கினார்கள்.

  1963 ம் வருடம் இஸ்லாத்தின் இறுதி கடமையாம் காயல்பட்டணத்திலிருந்து சென்று ஹஜ்ஜினை நிறைவேற்றினார்கள். 

     1968 ம் வருடம் தப்லீக் ஜமாஅத்தினர்களுடன் இலங்கை மாத்தறையில் விவாத மாநாட்டில் விவாதித்து தப்லீக் ஜமாஅத்தினர்களை விரண்டோடச் செய்தனர்.
செய்குனா அவர்கள் எழுதிய

ஞானம் போதிக்கும் நூற்கள்:

1. அத் துஹ்பத்துல் முர்ஸலா.
2. அஸ்ஸுலூக்.
3. ஞான தீபம்.(மிஷ;காத்துல் அன்வார்)
4. அல் ஹக்கு 1
5. அல் ஹக்கு (கேள்வி-பதில்)
6. அத்தகாயிகு
7. அஸ்ராருல் கல்வத்(கல்வத்தின் ரகசியங்கள்)
8. அகமியக் கண்ணாடி
9. கலிமத்துல் ஹக்.

     செய்குனா அவர்கள் எழுதிய கொள்கை விளக்க நூற்கள்:

1. இள்ஹாறுல் ஹக்-சத்தியப் பிரகடனம்.
2. உலமாக்களின் உண்மை பத்வா
3. அறிவாளர்களே ஆராய்ந்த பாருங்கள்.
4. காதியாணி-தேவ்பந்து சம்பாஷணை.
5. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்.
6. சுவர்க்க நகைகளா? அல்ல.நுரக விலங்குகள்.
7. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு.
8. மவ்தூதி சாஹிபும் அவரது ஜமாஅNது இஸ்லாமி இயக்கமும்.
9. அல் முஹன்னதின் அண்டப் புளுகு.
10. தப்லீக் என்றால் என்ன?
11. புலியைக் கண்டு ஓட்டம்.

    இறுதி வரை எந்தவொரு தனி மனிதனுக்கும், சக்திக்கும் பணியாமல் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவோ,பின்வாங்கவோ செய்யாமல், அழி மொழி சொற்களை கேட்டு முகம் சுளிக்காமல் சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களால் வகுத்து தரப்பட்ட நேர்வழியில் சென்று வீரத்தோடு கொள்கைளளை  போதித்து 
 அனைவராலும் ஸூபி ஹலரத் என்று அழைக்கப்பட்ட அல்லாமா செய்குல் காமில் ஸூபி ஹலரத் அவர்கள் ஹிஜ்ரி 1402 புனித ரமலான் பிறை 24 (16-07-1982) வெள்ளிக் கிழமை அன்று நோன்பு வைத்த நிலையில் சுப்ஹிற்குப் பின் கொழும்பில் வைத்து இறையடி சேர்ந்தார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் கொழும்பு குப்பியாவத்தையில் நல்லடக்கம் செய்யப்பட்டு ஜியாரத் நடைபெற்று வருகிறது.

    தமிழ் நாட்டில் வஹ்ஹாபிகளான தப்லீகை தோலுரித்துக் காட்டியவர்கள் இவர்கள். காயல்பட்டணம் ஸூபி ஹலரத் என்றால் வஹ்ஹாபிகள் நடுநடுங்குவர்.

   இவர்களின் மறைவிற்குப் பின் தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபைக்கு தலைவராக அன்னாரின் கலீபாக்களில் ஒருவரான மௌலவி S.M.H..சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்களை தேர்ந்தெடுத்தது ஸூபி ஹலரத் அவர்களின் மார்க்க சேவைக்கு சூட்டப் பட்ட மணிமகுடமாகும்.

    இவர்களின் கந்தூரி வைபவம் இலங்கையின் பல பாகங்களிலும், இந்தியாவின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகிறது.

ஷெய்கு ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் இந்தியா திரும்புதல்

 

ஷெய்கு ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் இந்தியா திரும்புதல்:

காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதான கலீபா ஹஜ்ரத் எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஸூபி காதிரி அவர்கள் தங்களது இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்ஷா அல்லாஹ் நாளை மறுதினம் (20-07-2010) அன்று தாயகம் திரும்புகிறார்கள்.