அத்தஸவ்வுப்-ஸூபிஸம்-Athasawwuf-Sufisam

அத்தஸவ்வுபு-ஸூபிஸம்

(التّصوّف)

தொகுப்பாளர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரி அவர்கள்.

என்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் துவக்கம்.
உஜூதாலும்-உளதாலும், தாத்து – தத்சொரூபத்தாலும் ஒன்றாகிய பரம்பொருளான ஏகனாகிய ஒருவனுக்கே சர்வ புகழும்.

மிக்க சம்பூரணத்துவமாக வெளிஜயான அல்லாஹுதஆலாவின் பேரொளியான, காருண்யமான, மெஞ்ஞானப் பட்டினமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், இறைநேசர்கள், ஷெய்குமார்கள் அனைவர்கள் மீதும் கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக!

اوّلُ الدّين معرفةُ الله அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் – மார்க்கத்தில் முதன்மையானது அல்லாஹுத்தஆலாவை அறிவது' என்ற திருவாக்கின்படி முதல்கடமை அல்லாஹுதஆலாவை அறிவதாகும்.

இதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதுவும் சரியாக அமையாது.

ஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள் இக்கலைக்கு அத்தஸவ்வுபு-ஸூபிஸம் என்றும், இது உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை செலவளித்து மக்களுக்கு அதிலும் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இதன் எதார்த்தமான மெஞ்ஞான வஹ்தத்துல் வுஜூது –உளது ஒன்று என்பதை வாய் மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர்கள் தம்தமக்கு தவ்கு – அனுபவ அறிவினாலும் கஷ்பு – உதிப்பு வெளிப்பாடு அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து குர்ஆன் ஹதீதுகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக.

வாழையடி வாழையாக அதன் தொடர் ஷெய்குமார்கள் மூலம் வந்துக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.

'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்பது இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வது போல், அல்லாஹ்வுக்காக இருதயத்தை தனிமைப்படுத்துவதும், அவனல்லாதவற்றை (நீக்கி) அற்பமாக கருதுவதாகும்.

இம்மெஞ்ஞான கலைக்கு 'அத்தஸவ்வுபு – ஸூபிஸம்' என்று பெயர் வைப்பதற்கு நான்கு காரணங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்.

1. இக்கலையுடையவர்களான ஸூபிய்யாக்களின் அஸ்ரார் – இரகசியங்கள் தெளிவானதாகவும், அவர்களது அடிச்சுவடுகள் சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் 'அத்தஸவ்வுபு' என்பதின் மூலம் ஸபா-சுத்தம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

2. இவர்களது ஊக்கம் உயர்வாகவும், அல்லாஹுதஆலா அளவில் அவர்களது இருதயம் முன்னோக்கி இருப்பதினாலும் அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் الصّفّ الاوّل அஸ்ஸப்புல் அவ்வல் – முதல் வரிசையில் இருக்கிறார்கள்.

இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் அஸ்ஸப்புல் அவ்வல் -முதல் வரிசை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

3. இவர்களது குணாதிசியங்கள், நபி நாயகத்தின் திண்ணை தோழர்களான   அஹ்லுஸ்ஸுப்பாக்களின் குணாதிசியங்களுக்கு நெருக்கமாக اهل الصّفّةஇருப்பதினாலாகும். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் ஸுபு;பத் -திண்ணை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

நம் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் ஸூபி மன்ஸில்களின் திறப்பு விழா வாழ்த்துப் பாடல்களில்,

نُسمّي بصوفي منزل  للتّبرّك . بمنزل اصحاب النّبي اهل الصّفّة                                                                                                

நாம் நாயகத் தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பத்-வராந்தைகாரர்களுடைய ஸ்தலத்தைக் கொண்டு பரகத்தை நாடி இதற்கு 'ஸூபி மன்ஸில்' என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று பாடியுள்ளார்கள்.

4. இவர்கள் ஸூப்-கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வந்ததினாலாகும்.

இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் 'ஸூப்-கம்பளி'என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.

ஸூப் – கம்பளி ஆடை அல்லாஹு தஆலாவுக்கும், அவனது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உகப்பானதாக இருந்ததினால் 'யாஅய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தத்திர் (கம்பளி) ஆடை போர்த்தியவரே! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்திருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்!

இக்காரணங்களை மனதில் கொண்டு இவ்வடியேன் இந்நூலுக்கு 'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்று பெயர் வைத்துள்ளேன்.

இந்நூலில் எழுதப்பட்டது அனைத்தும், இத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களான மகான்களின் நூற்களிலிருந்தே சுருக்கி எழுதியுள்ளேன்.

அதிலும் குறிப்பாக சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பள்ளுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்துஹ்பத்துல் முர்ஸலா, அல்ஹகீகா நூலிலிருந்தும், அல் அல்லாமா காதிரு லெப்பை இப்னு அப்தில் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்தரீஆ' நூலிலிருந்தும், இம்மூன்று நூற்களுக்கும் மொத்தமாக தமிழில் சங்கைக்குரிய மகான் எங்கள் ஷெய்குநாயகம் அவர்கள் மொழிப் பெயர்த்த நூலிலிருந்தும்,
சங்கைக்குரிய மகான் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் அவர்கள் எழுதிய 'அல்ஹக், அஸ்ஸுலூக் என்ற நூற்களின் மொழிப்பெயர்ப்பில் இருந்தும் (மொழிபெயர்ப்பு நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் அவர்கள் செய்துள்ளார்கள்) 'அல்ஹகீகா' என்ற நூலிலிருந்தும் (மொழிபெயர்ப்பு நம் சங்கைக்குரிய கலீபா செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள் செய்துள்ளார்கள்)

மகான் அஷ்ஷெய்கு அலி இப்னு அஹ்மதல் மஹாயிமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'இறாஅத்துத்தகாயிகி' என்ற நூலை மொழிபெயர்த்;து 'அகமியக்கண்ணாடி' என்ற பெயரில் நம் ஷெய்கு நாயகம்  அவர்கள் வெளியிட்ட நூலிலிருந்தும் அவர்கள் தொகுத்த 'இள்ஹாறுல் ஹக் – சத்தியப் பிரகடனம்' என்ற நூலிலிருந்தும் சுருக்கி தொகுத்துள்ளேன். அடியேனின் சில குறிப்புகளை தவிர்த்து வேறு எந்த சொந்தக் கருத்தையும்
எழுதவில்லை.

முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும் நம் மகான்களான ஷெய்குமார்களின் நூற்களின் கருத்துக்கள் மனதில் விளங்க முடியாமல் இருக்கின்றனவே என்று மனச்சோர்வடைந்து அங்கலாய்ந்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் மிக சுருக்கமாகவும், விளக்கமாகவும் இது சம்பந்தமான ஒரு நூல் வெளியிட வேண்டுமென்று நீண்ட காலமாக இருந்த அபிலாசை இப்போதுதான் கைகூடி உங்கள் கரங்களில் தவழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

எல்லோர்களும் இதை வரவேற்று படித்து பயன் பெறுவதே எமது குறிக்கோள்! மூல நூற்களைக் கொண்டு பயனடைந்தது போல இந்நூலைக் கொண்டும் பயனடைந்து இவ்வடியேனுக்கு துஆ செய்யுங்கள்.

நம் ஷெய்குமார்களின் பொருட்டால் மேலும் பல நூற்கள் எழுத உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஞான வழிப்பாட்டையில் வெற்றி நடைப்போட்டு சித்தியடைந்து, நல் மகான்களின் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா சேர்த்து வைப்பானாக! ஆமீன்.

சமுதாய ஊழியன்,

S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன்

அத்தஸவ்வுபு-ஸூபிஸம்

சுருதி, யுக்திப் பிரமாணத்தாலும் இறைவனை அறிந்த மெஞ்ஞானிகளான ஆரிபீன்களின் 'தவ்கு' எனும் அனுபவ அறிவினாலும் அறியப்பட்டது.

எதார்த்தத்தில் பரம்பொருளான அல்லாஹுதஆலாவும் அவனுடைய செயல்களுமேயல்லாது வேறொன்றுமில்லை. வாஜிபுல் உஜூதான – எப்போதும் உளதாக இருப்பது அவசியமான மெய்ப்பொருளான அல்லாஹுhஆலாவுக்கு உருவமும், காலதேச எல்லைகளும் வேறெவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும் அந்த அரூபியான வாஜிபுல் உஜூதான அல்லாஹுதஆலாவில் அரூபத் தன்மை கெடாமல் மும்கினுல் உஜூதான – உளது, இலது இவை இரண்டும் அவசியமில்லாத சிருஷ்டிகள் தோன்றுகின்றன.

அவன் தனது இல்மில் – அறிவில் இருந்ததை ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றன் வழியாகவும் வெளிப்படுத்துகிறான் – படைக்கிறான். முந்தின சிருஷ்டி இரண்டாவது சிருஷ்டிக்கு ஸபபு – காரணமாகவும், இரண்டாவது சிருஷ்டி முந்தின சிருஷ்டிக்கு முஸப்பபு – காரியமாகவும் இருந்த போதிலும் முந்தையது இரண்டாவதைப் படைக்கவில்லை.
முந்தியதை எப்படி அல்லாஹுதஆலா படைத்தானோ அதைப்போல் இரண்டாவதையும் அவனேதான் படைத்தான். முந்தியது எப்படி அவனுடைய தத்துவம் எனும் கரத்தில் அகப்பட்டிருக்கிறதோ அதைப்போல் பிந்தியதும் அவனுடைய தத்துவக்கரத்திலேயே அகப்பட்டிருக்கிறது.

அவனன்றி ஓர் அணுவும் ஆடவோ அசையவோ முடியாது.

இப்படி ஒன்றன் பின்னொன்று அதன் பின் மற்றொன்றாக இப்படியே சங்கிலித் தொடரைப் போன்று வெளியாகிக் கொண்டிருக்கிற அகில உலகத்தின் சகல சிருஷ்டிகளும் அந்த மெய்ப்பொருளான ஹக்குத்தஆலாவைக் கொண்டே நிலைத்திருப்பதினால் அவை அனைத்தும் 'அஃராளு – ஆதேயம் எனவும், 'ளில்லு – நிழல்' எனவும், இன்னும் இதே கருத்தைக் கொண்டு அவைகள் 'கியால்-கற்பனை' எனவும் ஸூபிய்யாக்களான மெஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இவை அனைத்திற்கும் நிலைக்களம் ஹக்குத்தஆலாவின் உஜூதேயாகும்.

மேலும் இரண்டாவது சிருஷ்டி முந்திய சிருஷ்டிக்குப் பிற்பாடு வருவதினாலும், அதைச் சார்ந்திருப்பதினாலும் முந்தியதை இரண்டாவதற்கு 'ஹகீக்கத்து தாத்து –தற்சொரூபம்' – 'ஜௌஹர்- ஆதாரம்' என்றும், இரண்டாவதை முந்தியதின் 'அறளு – ஆதேயம்' என்றும், 'ஸிபத்து – இலட்சணம்' பிஃலு-செயல்' என்றும் சொல்லுவார்கள்.
ஆகவே உலகம் பூராவும் 'அஃறாள் -ஆதேயங்களும்' ஜவாஹிறு – ஆதாரங்களுமாகும். ஹக்குத்தஆலாவைக் கொண்டு நிலைத்திருப்பதால் சகல வஸ்த்துகளும் அவனைக் கொண்டு தரிபாடாக இருக்கின்றன. இதனால் 'ஹகாயிகுல் அஷ்யாயி தாபிதுன் – வஸ்த்துக்களின் எதார்த்தம் தரிபாடானது' என்று சொல்லுவார்கள்.
ஸூபஸ்த்தாயிகள் என்பவர்கள் 'ஆலம் – அகிலம்' என்பது கனவு அதற்கு நிலைக்களம் மனிதனின் கற்பனையேயாகும் என்று சொல்கிறார்கள். இது சுத்த தவறான கொள்கையாகும்.

'வஹ்தத்துல் உஜூது – உஜூது ஒன்று' என்று சொல்பவர்களிடத்தில் நகலிய்யத் -சுருதி பிரமாணத்தாலும் அகலிய்யத் -யுக்தி பிரமாணத்தாலும், கஷ்பிய்யத் -காட்சி அனுபவப் பிரமாணத்தாலும் உஜூதாக-உளதாக இருப்பது ஹக்கு ஸுபுஹானஹு வதஆலாவின் உஜூதாகவே இருக்கும்.
அவனுடைய தாத்தானது –தற்சொரூபமானது அவனுடைய உஜூதுக்கு ஐனானதாக-தானானதாகவே ஆகும். வேறானது அல்ல.

முதகல்லிமீன்களான உஸூலுடைய உலமாக்கள் அவனது தாத்தாகிறது அவனுடைய உஜூதுக்கு வேறானதும், அதை வேண்டுவதுமாகும் என்று சொல்கிறார்கள்.

சரியான சொல் முந்தினதுவேயாகும். உஜூது ஒன்று, தாத்து இரண்டு-பலது என்று சொல்வதும் பிழையானதுவாகும்.


معرفةُ الله மஃரிபத்துல்லாஹ்-அல்லாஹுதஆலாவை அறிவது.

அல்லாஹுதஆலாவை அறிவதற்கு மூன்று வழிகளாகும். تنزيه  1.          தன்ஸீஹின் படி அறிவதாகும். அதாவது – அவனுடைய தாத்து, சிபத்துகளின் புறத்தினால் அவனுக்கு இலாயிக்கல்லாதவைகள் அடங்கலை விட்டும் பரிசுத்தமானவன்    என்று அறிவதாகும். இவ்வழி குறைவான வழியாகும்.

2. தஷ்பீஹின்  تشبيه படி அறிவதாகும். அதாவது متشابه  முதஷாபிஹான – நேர் பொருள் பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை அவைகளின் நேரடியான பொருள்களிலேயே சுமத்தாட்டுவதும், இன்னும் அவனுடைய தாத்து, சிபாத்துகளின் புறத்தினால் சிருஷ்டிகளுடைய உருவங்களையும் உறுப்புகளையும் அவனுக்கு தரிப்படுத்துவதாகும்.
இவ்வழி குப்ரான வழியாகும். அல்லாஹு தஆலா இவைகளை விட்டும் மிக உயர்வாகி பரிசுத்தமாகிவிட்டான

3. தன்ஸீஹுக்கும் தஷ்பீஹுக்கும் இடையில் சேகரமாக்கிய படியும், பின்பு கலப்பற்ற தன்ஸீஹின் படியும் அறிவதாகும். تنزيه محض

ليس كمثله شييٌ அதாவது:-

லைஸக மித்லிஹி ஷைவுன்' –அவனைப் போன்று ஒரு வஸ்த்துவுமில்லை (42:11) என்று அவன் சொன்னது போல் அவனுடைய தாத்தின் புறத்தினால் எவ்விதமான எல்லையும், கட்டுப்பாடும், கோலமும் இல்லை என்று நம்புவதும்,
வலஹு குல்லு ஷையின் وله كلّ شي – அவனுக்கு எல்லா வஸ்த்துவும் உண்டு (27:91) என்று அவன் சொன்னது போல்
அவனுக்கு அவனுடைய சிபாத்தின் புறத்தினாலும் தஜல்லியாத்தின்  تخلّيات -தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப்பட்டவைகள் எல்லாம் உண்டு என்று நம்புவதும்,அல்லாஹு தஆலாவுக்கு வேறொரு பொருள் அறவே இல்லாததினால் வேறொன்றைக் கொண்டு ஒப்பானவனில்லை என்றும் 'தஸ்பீஹ்' உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த 'தன்ஸீஹ்'யை விட்டும் பேதகமாகவுமில்லை என்று நம்புவதும்,இன்னும் 'தன்ஸீஹானது' அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்ததாகும். 'தஷ்பீஹானது' அவனுடைய மள்ஹரை-வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும்,

ஸுபுஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யசிபூன் سبحان ربّالعزّة عماّ يصفونசிறப்புடைய உம்முடைய போஷகன், அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன்' (37:180) என்று சொன்னதுபோல் அவன் தன்ஸீஹ், தஷ்பீஹ் இவை இரண்டிலேயும் கட்டுப்பட்டவனில்லை என்று நம்புவதுமாகும். இவ்வழிதான் பரிபூரண வழியாகும்.

அல்லாஹு தஆலாவின் உஜூதிற்கு கோலமில்லை, எல்லையுமில்லை, கட்டுப்பாடுமில்லை. அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும், குணப்பாட்டிலும், எல்லையிலும் வெளியானது – தோன்றினது கோலமின்மை, எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில் இருந்ததோ அதை விட்டும் பேதகப்படவுமில்லை. ஆதியில் எதன் பேரில் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது.

சங்கைக்குரிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகம்' எனும் நூலில் சொன்ன கவிகளின் கருத்தும் இதுவேதான்.

فانْ قلت بالتّنزيه كنْت مقيّدًا     وان قلت با لتّشْبيه كنت محمدّدًا
وان قلت بالامرين كنت مسدّدًا    وكنت اماما فيامعارف سيدًا
فمن قال بالاشفع كان مشرّكًا      ومن قال بالافراد كان موحّدًا
فايّاك والتّشبيه ان كنت ثنيًا      واياك واتّنويه ان كنت مفردًا

'நீன் தன்ஸீஹை கொண்டு (மட்டும் தஷ்பீஹ் இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை தன்ஸீஹ் உடைய சூரத்தை-கோலத்தைக் கொண்டு) கட்டுப்பாட்டுகு;குள் ஆக்கிவிட்டாய். நீன் 'தஷ்பீஹ்' கொண்டு (மட்டும் 'தன்ஸீஹ்' இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை 'தஷ்பீஹ்' உடைய கோலத்தைக் கொண்டு) எல்லைக்குள் ஆக்கி விட்டாய். நீன் (தன்ஸீஹ், தஷ்பீஹ் எனும்) இரண்டு கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும், மஃரிபாவில் -மெஞ்ஞானங்களில் இமாமாகவும் தலைவனாகவும் ஆகுவாய்

ஆகவே எவன் (ஒன்றாகிய ஹக்கை அவனோடு கல்கை –சிருஷ்டியை தரிபடுத்துவது கொண்டு) இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் (உஜூதில் கல்கை ஹக்கோடு) கூட்டாக்கியவனாகுவான். எவன் ஒன்றாக்கி சொல்வானேயானால் அவன் (ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று தரிபடுத்தி அவனோடு அவனல்லாததை தரிபடுத்தாததினால்)முவஹ்ஹிதாக (ஒன்றாக்கியவனாக) ஆகுவான்.

ஆகையினால் நீன் (ஹக்கையும், கல்கையும் இரண்டு என்று சொல்லி) இரண்டாக்குவாயானால்(கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக் கொண்டு) ஒப்பாக்குவதை பயந்து கொள்! தவிர்த்து கொள்!!

(எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து –வெளிப்பாட்டின் கோலம் என்றும், அது தன்னிலே மவ்ஜூது –உளதானது அல்ல என்றும் தரிபடுத்துவது அவசியமாகும்.) நீன் ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள்!

இன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றேயாகும். ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும். உஜூதில் பலது என்பது மள்ஹருடைய –வெளியாகும் ஸ்தானத்தினுடைய புறத்தினாலேயே ஆகும்.


وماالوجه الّا واحدٌ غير انّه     اذاانت اعددتّ المراياتعدّدا

'முகம் ஒன்றையல்லாதில்லை. எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகிவிடும்.'

சகல சிருஷ்டிகளும் அந்த உஜூதான – உளதான ஹக்குதஆலாவை விட்டும் நீங்கி இருக்காது.

ஆகவே சிருஷ்டிகளை உண்டாக்குவதற்கு முன்பும், பின்பும் அந்த உஜூது ஹக்குதஆலா ஒருவனுக்கு மட்டுமேயாகும். உலகமாகிறது அதன் சகல பாகங்களுடன் அஃராளு- ஆதேயங்களாகும். ஆதாரமாகிறது அந்த உஜூதேயாகும்.


انّما الكون خيال فهو حقٌ في ال حقيقة . كلّ من يفهم هاذا حاز اسرار الطّريقة

'நிச்சயமாக கௌன் -சிருஷ்டிகள் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும். இதை விளங்கிய ஒவ்வொருவரும் தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக் கொண்டார்' என்று சங்கைக்குரிய மகான் முஹ்யித்தீன் இப்னு அரபி அவர்கள் பாடிய கவியின் கருத்தும் இதுவாகும்.

உலகம் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அதற்கு உஜூது இல்லை. கண்ணாடியில் பதியும் கோலத்தைப் போன்றும், தாகித்தவன் கானல் நீரை பார்த்து தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும். மெய்ப்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றுமில்லை.
 

மற்தபாக்கள் – படித்தரங்கள். مرتبة

  ரபீவுத்தரஜாதرفيع الدّرخات;-படித்தரங்கள் உயர்த்தியானவன்' என்று திருக்குர்ஆனில் 40:15       சொன்னதுபோல் அவனது உஜூது வெளியாவதை தேடிய கமாலாத்து  –பூரணத்துவமான மற்தபாக்களில் இறங்குகிற புறத்தில் அனேகமான மற்தபாக்கள் அவனது உஜூதுக்கு உண்டு.

மெஞ்ஞானிகளான ஸூபியாக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் காட்டியுள்ளார்கள். சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜியலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது 'அல்கஹ்பு வற்றஹீம். الكهف والرّقيم – எனும் நூலில் நாற்பது படித்தரங்களை எண்ணிக் காட்டியுள்ளார்கள். எங்களது ஷெய்கு  நாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அத்துஹ்பத்துல் முற்ஸலாவின் மொழிப் பெயர்ப்பு நூலை காண்க!)

அத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலாசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு மற்தபாக்களாக – படித்தரங்களாக சுருக்கி எழுதியுள்ளார்கள். அதனை மிக சுருக்கமாக கீழே தருகிறோம்.
 

1. அல் அஹதிய்யத்-
 الاحديّة
தனித்தன்மையானது.
அல்லாதஅய்யுனு –குறிப்பில்லாதது
அல்இத்லாகு-குறிப்பை விட்டும் பொதுப்படையானது.
அத்தாதுல் பஹ்து-கலப்பற்ற தத்சொரூபம்.
ஜம்வுல்ஜம்வு-சேகரத்தின் சேகரம்.
ஹகீகத்துல் ஹகாயிகி-எதார்த்தங்களின் எதார்த்தம்.
அல்அமா-விபரமில்லாதது.
அத்தாத்துல் ஸாதஜ்-கலப்பற்ற தாத்து.
அல்மஸ்கூத்து அன்ஹு-அதைத் தொட்டும் வாய் பொத்தப்பட்டது. இதற்கு மேலால் வேறொரு மர்த்த்தபா இல்லை. சகல மர்தபாக்களும் இதற்கு கீழே உள்ளதாகும்.
 

2. அல் வஹ்தத்-தனியாக இருப்பது.
அத்தஅய்யனுல் அவ்வல்-முதலாவது குறிப்பு.
அல்ஹகீகத்துல் முஹம்மதிய்யா-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம்.
மகாமு அவ்அத்னா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சொந்தமான, அரி, பெரிய பாக்கியமான மிஃராஜில் இங்கு வரை ஏற்றம் கிடைத்ததினால் 'அதை விட இன்னும் மிக நெருக்கமான இடம்' என்று சொல்லப்பட்டது.
அல்பற்ஸகுல் குப்றா-மிக பெரிய மத்திபமானது.
 

3. அல்வாஹிதிய்யத்-ஒன்றாக இருப்பது.
அத்தஅய்யுனத்தானி-இரண்டாவது குறிப்பு
அல்ஹகீகத்துல் இன்ஸானிய்யா-மானுஷீகத்தின் எதார்த்தம்.
காப கௌஸைனி-இரு வில்லின் நாண்.
மற்தபத்துல் அஸ்மா-பெயர்களின் படித்தரம்.
இம் மூன்று படித்தரங்களும் பூர்வீகமானதாகும். துவக்கமில்லாததாகும். முந்தியது பிந்தியது என்று ஆனது புத்தியினாலாகும். காலத்தினால் அல்ல. காலமும், ஸ்தலமும் இல்லாத போது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான்.
 

4. ஆலமுல் அர்வாஹ்-ரூஹுகளின் உலகம்.
ஆலமுல் ஜபரூத் -பொருந்தும் உலகம்.
ஆலமுல் கியாலுல் முத்லக்-கட்டுப்பாடாகாத கற்பனை உலகம்.
 

5.ஆலமுல் மிதால்-மாதிரி உலகம் (சூட்சும உலகம்)
ஆலமுல் கியாலில் முகய்யத்-கட்டுப்பாடான கற்பனை உலகம்.
 

6. ஆலமுல் அஜ்ஸாம்- சடங்கள் உலகம்.
ஆலமுஷ்ஷஹாதத்-சாக்கிர உலகம்.
ஆலமுல் முல்க்- ஆட்சி அதிகார உலகம்.
 

7. அல்இன்ஸான் -மனிதன்.
இதுதான் கடைசியான தஜல்லி-தோற்றமும் உடையுமாகும். ஒவ்வொரு படித்தரங்களின் பெயர்களுக்குரிய காரணங்கள், குணங்கள் பற்றி தக்க விளக்கமாக 'அத்துஹ்பத்துல் முற்ஸலா' எனும் நூல் போன்றவைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசையுள்ளவர்கள் அவைகளில் காண்க!
 

ஒரு மற்தபாவில்-படித்தரத்தில் இருந்து வேறொரு படித்தரத்திற்கு வருவதற்கு தஜல்லி- தோற்றம், தனஸ்ஸுல்-இறக்கம் என்று சொல்வார்கள்.
 

உதாரணமாக:- பாலாக இருக்கும் தன்மையிலிருந்து தயிரின் தன்மைக்கு வந்தால் அப்போது பால், தயிரின் கோலத்தில் தஜல்லியானது-தோன்றியது, வெளியானது, அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள்.
மெழுகு வர்த்தியின் எண்ணெய் உறைந்து மெழுகின் தன்மையில் வந்தால் அப்போது மெழுகுவர்த்தியின் எண்ணெய் மெழுகின் கோலத்தில் தஜல்லியானது- தோன்றியது, வெளியானது அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். முதல் தன்மைக்கு நிலைமைக்கு திரும்பினால் உறூஜ்-ஏறுவது என்று சொல்வார்கள்.
 

மேற்கூறப்பட்ட 'அஹதிய்யத்' என்ற முதல் படித்தரம் அல்லாத ஏனை படித்தரங்களில் ஏறி, கூறப்பட்ட படித்தரங்களில் இருப்பது அனைத்தும் மனிதனில் வெளியானால் அவனுக்கு 'அல் இன்ஸானுல் காமில்' –சம்பூரண மனிதன் என்று சொல்லப்படும்.
 

இவ்வகையான ஏற்றம் சம்பூரணமாக நமது நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில்தான் ஆனது. இதனாலேயே 'அக்மலுல் காமிலீன்-பூரணமானவர்களில் மிக சம்பூரணமானவர்'களாக ஆனார்கள்.
 

'பாத்திஹுல் உஜூத்'-உஜூதுக்கு (உலகிற்கு) திறவு கோலாக, ஆரம்பமானவர்களாக இருப்பது போல், 'காத்தமுன் னபிய்யீன்'-நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக, முத்திரங்கமானவர்களாக ஆனார்கள்.
 

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம்.
 

படித்தரங்களுக்கிடையில் பாகுபடுத்துவது:

بر مر تبة ازوجودحكم دارد . كر فرق مراتب نه كني زنديقي

ஹர்மற்தபா அஸ் உஜூதே ஹுக்மு தாரத் கர்பர்கே மறாத்திப் ந குனி ஸிந்தீகி.
 

'உஜூதுடைய ஒவ்வொரு படித்தரங்களுக்கும், ஒரு (தனிமையான) ஹுக்மு –சட்டம் இருக்கிறது. நீ, படித்தரங்களுக்கிடையில் பாகுபாடு வைக்கவில்லையானால், ஸிந்தீக்காய் -காபிராகி விடுவாய்' என்று பாரஸீக கவிஞர் சொன்னது போல் உலூஹிய்யத்தின்-தெய்வீகத்தின் படித்தரங்களின் பெயர்களை சிருஷ்டிகளின் படித்தரங்களில் நடத்தக் கூடாது.
 

எவனாவது அக்லையோ-அறிவையோ, அல்லது நப்ஸையோ அல்லது தபீஅத்தை- இயற்கையையோ அல்லது நட்சத்திரங்கள், அனாஸிருகள்-பூதங்கள், ஜமாதாத்து-நிரஸப் பொருள்கள், நபாதாத்து-தாவரப் பொருள்கள், ஹயவானாத்-ஜீவப் பொருள்கள் இவைகள் ஹக்குத் தஆலாவின் மள்ஹராக இருப்பதைக் கவனித்து தெய்வமென்று – அல்லாஹ்வென்று சொல்வானேயாயால் நிச்சயமாக அவன் பிழை செய்து விட்டான். ஸிந்தீக்காகி விட்டான் -காபிராகி விட்டான்.
 

ஜைது என்பவனின் கையைப் பார்த்து அது ஜைது என்று சொன்னால் பிழை செய்தவன் போலாகுவான்.
சகலத்திலும் உஜூது ஒன்றுதான் என்று சொன்னாலும் சரி, ஒவ்வொரு வஸ்துவும் இலாஹு -தெய்வம் என்று சொல்வதற்கு அனுமதியில்லை. இவ்விடம் கால் சருகி ஷிர்க்கில் வீழ்வதற்கான அபாயகரமான இடம். கவனம்! கவனம்!!


الوجود الحقيقي – الوجود الاضافي – العينيّة – الغيريّة

அல் உஜூது ஹகீகி, அல் உஜூதுல் இளாபி-எதார்த்தமான உள்ளமை, சேர்மானமான உள்ளமை. அல் ஐனிய்யத், அல் ஙைரியத்-தானானது, வேறானது பற்றிய விளக்கம்:

ஐஸும், தண்ணீரும் இரண்டும் மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ அதுவே ஐஸாகும். எது ஐஸோ அது தண்ணீராகும்.
 

ஆனால் தண்ணீரின் ஓடுகின்ற உருவம் இப்போது மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உண்டாகிவிட்டது. மேலும் இந்த ஐஸின் உருவத்துடைய ஹுக்முகளும், குணபாடுகளும், அதாவது:- இயற்கை சுபாவமும், குணமும் கூட தண்ணீரை விட்டும் அலாதியாகிவிட்டது.
 

ஆனால் ஐஸின் உருவத்துடைய உஜூது-உள்ளமையாகிறது ஹகீகிய்யா-எதார்த்தமானதாக இல்லை. என்றாலும் எந்த உள்ளமை தண்ணீருக்கு இருந்ததோ அதே உள்ளமைதான் இந்த ஐஸுக்குமாகும். ஐஸின் உருவம் சுயமான உள்ளமையின் வாடையையும் கூட நுகரவில்லை. வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கனவிலும், கற்பனையிலுமே அதன் தோற்றமிருக்கிறது.
 

பாருங்கள்! ஒரு கிலோ உடையுள்ள தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஐஸின் உருவத்தில் உறைய வையுங்கள். பின்னர் எடை போட்டுப் பார்த்தீர்களேயானால் கூடுதல், குறைதல் இல்லாது ஒரு கிலோ ஐஸே இருக்கும். பின்னர் அந்த ஐஸை உருக வைத்தால் தண்ணீரின் முந்திய உருவம் திரும்பவும் வந்து விடும். பின்னர் இந்த தண்ணீரை எடைபோட்டால் அதே எடைதானிருக்கும். அதாவது கூடுதல் குறைதல் இல்லாது ஒரு கிலோ தண்ணீரே இருக்கும்.
 

இதேபோல் ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் செய்யுங்கள். பின்னர் எடைபோட்டுப் பாருங்கள். ஒரு கிராம் தங்கமே இருக்கும். உருக்கி விடுவீர்களேயானால் அந்த ஒரு கிராம் தங்கமே இருக்கும். மோதிரம் வரவும் இல்லை. போகவும் இல்லை.
 

ஐஸ் தண்ணீரின் ஒரு நிலையும், கோலமும் ஆகும். மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும் கோலமும் ஆகும். ஐஸும், மோதிரமும் எதார்த்தமான உள்ளமையின் வாடையை நுகரவில்லை.
 

குமுளியும், அலையும், பனி கட்டியினால் உண்டாக்கப்பட்ட கூஜாவும் ஹகீகத்தின் -எதார்த்தமான புறத்தினால் இவை அனைத்தும் தண்ணீர் தானாகும். நாம ரூபங்களான குறிப்புகளின் படி தண்ணீருக்கு வேறானதாகும்.

இதைப் போல கானல் நீரும் ஹகீகத்தின் புறத்தினால் ஆகாயம்தானாகும். குறிப்பின் புறத்தினால் ஆகாயத்திற்கு வேறானதாகும்.


كلّ شيي هالك الاّ وجهه

குல்லு ஷெய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு'-சகல வஸ்த்துக்களும் அழிந்ததாகும். (இல்லாமலானது ஆகும்.) அவனுடைய வஜ்ஹை(தாத்தை)தவிர' –அல்-குர்ஆன் (28:88) என்பதின் கருத்தும் இதுதான்.

ஐஸைப் பார்த்து தண்ணீர் என்றோ, அல்லது தண்ணீரைப் பார்த்து ஐஸ் என்றோ, தங்கத்தைப் பார்த்து மோதிரம் என்றோ, மோதிரத்தைப் பார்த்து தங்கம் என்றோ குமிழி, அலை, கூஜாவைப் பார்த்து தண்ணீர் என்றோ சொல்லக் கூடாது.
 

ஐஸ் தண்ணீர்தான். தண்ணீர்தான் ஐஸ். மோதிரம் தங்கம்தான். தங்கம்தான் மோதிரம். குமிழி, அலை, கூஜா தண்ணீர்தான். தண்ணீர்தான் குமிழி, அலை, கூஜா. என்றாலும் அது அது எந்தக் கோலத்தில் இருக்கிறதோ அந்தக் கோலத்தின் ஹுக்மை-சட்டத்தை நடத்தாட்ட வேண்டும். இது ஷரீஅத் சட்டமாகும்.
 

ஆகவே எல்லா மற்தபாக்களிலும்-படித்தரங்களில் பேதகமாகாமலும், மாறாமலும், பிளாமலும், உலையாமலும், எதார்த்தமாக உண்டானதாக இருக்கக் கூடியது கலப்பற்ற உஜூது- பரம்பொருள் மட்டுமெயாகும். இதுவே ரப்புடைய வஜ்ஹு-தாத்தாகும்.
சுகங்கள், துன்பங்கள், வேதனைகள் பற்றி
உஜூதானது தாத்தாலும் ஒன்றே. சிபத்துகளாலும் ஒன்றே. அதற்கு அறவே எண்ணிக்கை இல்லை என்று சரியான ஆதாரங்களைக் கொண்டு தரிப்பட்டிருக்க, விதிவிலக்குகளைக் கொண்டு வருத்தப்படுவது ஏன்?
அவ்விதி விலக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சுகம் கிடைக்குமென்றும், விரோதம் செய்தால் வேதனை கிடைக்குமென்றும், ஈருலக சம்பந்தமான பலவகையான நோய் நொம்பலங்களைக் கொண்டு சோதிப்பது ஏன்?
தன்தனக்கே சுகத்தைக் கொடுப்பதும், வேதனை படுத்துவதாக ஆகாதா? என்ற கேள்விகள் மனதில் வந்தால் அதற்கான பதில்களை அறிந்துக் கொள்ளுங்கள்:-

وما خلقت الجنّ والانس الاّ ليعبدون
 

வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லாலி யஃபுதூன்.
 

'ஜின்களையும், மனுக்களையும் என்னை வணங்குவதற்காகவேயல்லாது நான் படைக்கவில்லை' என்று அல்லாஹுதஆலா குர்ஆனில் (51:56) சொல்வது போன்று வணக்கம் புரிவதும், வருத்தங்களும், சுகங்களும் வேதனைகளும், துன்பங்களும் இவை அடங்கலும் சிருஷ்டிகளான குறிப்புகள் அளவில் மீளுவதாகும். அவனது உஜூது இவை அனைத்தை விட்டும் தூய்மையானதாகும்.
 

குறிப்பு:- சிருஷ்டியான குறிப்பு எனும் உணர்வு இவனில் இருக்கும்போதுதான் இவை அனைத்துமாகும். இவனது சிருஷ்டி என்ற உணர்வு அழிந்து போகி, அல்லாஹுதஆலா அளவில் போகிவிட்டால் அல்லாஹுதஆலாவின் உஜூதே அன்றி வேறு எதுவும் இல்லை.
 

அஷ்ஷுஹூது – இறைவனை காட்சி காண்பது

ஷுஹூது- காட்சி காண்பது இருவகை:
 

1. அஹ்லுல் ஜம்யி- சேகரமானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவதொரு வஸ்துவை பார்த்தார்களேயானால் இது ஹக்குதஆலா தனது அஸ்மாக்களை-பெயர்களைப் பூண்டவனாக 'அஃயானுதாபிதா' எனும் கண்ணாடியில் அதைக் கொண்டு வெளியான வெளிப்பாடாகும் என்று தங்களது ஹிருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
 

இவர்களிடத்தில் ஹக்குதஆலா ளாஹிராக-வெளியானவனாகவும், உலகம் பாதினாகும்-உள்ளானதாகும். சகல வஸ்த்துகளிலும் முதலாவது எட்டிக் கொள்வது அந்த உஜூதாகும்.
 

2. அஹ்லுல் பர்க் – பிரிவினையானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவது ஒரு வஸ்துவைப் பார்த்தார்களேயானால் இந்த வஸ்த்து அஃயானு தாஃபிதாவின் நிழல்களில் நின்றுமொரு நிழலாகும். அதை ஹக்குதஆலா தனது உஜூது எனும் கண்ணாடியில் வெளியாக்கியிருக்கிறான் என்று தங்களது இருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
 

இவர்களிடத்தில் ஹக்குதஆலா பாதினாகும்-உள்ளானவனாகவும், உலகம் ளாஹிராக-வெளியானதாகும்.
 

இவ்விரண்டு காட்சிகளை நீ அறிந்துக் கொண்டு இவை இரண்டையும், அல்லது இதில் ஒன்றையாவது பற்றிப் பிடித்துக் கொள்!
 

குறிப்பு:- அல்லாஹு தஆலாவின் இல்முல் இஜ்மாலியில்- தொகுப்டபான அறிவிலவ் தன்னையுமத் சிருஷ்டிகளையும் அறியும் பொழுது அறியப்பட்டதற்கு 'ஷஃனு' என்றும், இல்முத்தப்ஸீலில்-வகுப்பான அறிவில் அறியும் போது 'அஃயானு தாபிதா' என்றும், சிருஷ்டியான வெளியிலான உலகத்திற்கு 'அஃயானுல் காரிஜிய்யா' என்றும் சொல்வார்கள்.
 

காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள்

சிருஷ்டிகளாகிய மள்ஹருகளில்-வெளியாகும் ஸ்தானங்களில் காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள் பல. அவைகளில் மூன்று வழிகளை ஆரிபீன்களான மெய்ஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
 

 

1. قل الله ثمّ ذرهمகுலில்லாஹ் தும்ம தர்ஹும் 'அல்லாஹ் என்று சொல்லும், பின்னர் அவர்களை விட்டுவிடுங்கள்'- அல்குர்ஆன்(61:91)என்ற திருவசனத்திற்கு இணங்க, நீ ஜாமிஆன இஸ்மாகிய – அனைத்தையும் சேகரமாக்கிய பெயரான 'அல்லாஹ்' எனும் அச்சரங்களை 'பிக்ரு-சிந்தனை' எனும் பேனாவைக் கொண்டு இருதயமெனும் பலகையில் சூரிய ஒளியான சாயத்தைக் கொண்டு எழுத வேண்டும்.
அதாவது:- இப்படி ஒளியாக மனதில் எழுதப்பட்டிருப்பதாக சிந்திக்க வேண்டும். இந்த கோலமும் அல்லாஹுதஆலாவின் வெளிப்பாடுகளில் ஒரு வெளிப்பாடு. இதில் அவன் ஹுலூஸ்-விடுதி விடுதல், இத்திஹாது-ஒன்றாக சேர்தல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.
குறிப்பு: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் ஹுலூல்-விடுதிவிடுதல், இறங்குதல் என்றும், தண்ணீரும் சீனியும் ஒன்றாய் சேர்ந்தால் இத்திஹாது-ஒன்றாக சேர்தல் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு இரண்டு பொருள்கள் வேண்டும்.
இங்கு அல்லாஹுதஆலாவும், அவனுடைய தோற்றங்களுமே அல்லாது வேறொன்றும் இல்லை. ஐஸில் தண்ணீர்  வெளியானது போலும், தங்க நகைகளில் தங்கம் வெளியானது போலும் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

2.  اقرأ كتابك كف بنفسك اليوم عليك حسيبا

இக்ரஃ கிதாபக கபா பிநப்ஸிகல் யவ்ம அலைக்க ஹஸீபா
'உன்னுடைய கிதாபை ஏட்டை ஓது. இன்று நீனே உன்பேரில் கேள்வி கேட்கிறவனாக போதும்; -அல்-குர்ஆன் (17:14) என்ற திருவசனத்திற்கிணங்க உன்னுடைய 'ஐனுத்தாபிதா –வகுப்பான அல்லாஹ்வின் அறிவில் உள்ளதையும்' 'ஐனல் காரிஜா-சிருஷ்டியான வெளிரங்கமான உஜூதையும்' திடப்படுத்திக் கொண்டு இரண்டையும் ஒன்றாக ஆக்கி உன்னுடைய ஐனகாரிஜா, அல்லாஹ்வின் வெளியாகும் தானங்களில் ஒரு வெளியாகும் தானம், அதில் ஹுலூல், இத்திஹாது இல்லாமல் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் கொள்வதாகும்.

3. قل ان كنتم تحبّون الله فاتبعوني يحببكم الله

குல் இன்குன்தும் துஹிப்பூனல்லாஹ பத்தபிவூனி யுஹ்பிபுகுமுல்லாஹ்-'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பீர்களேயானால் என்னை பின்பற்றுங்கள்' என்று (நபியே) சொல்லுங்கள் -அல்குர்ஆன் (3:31) என்ற திருவசனத்திற்கிணங்க, ஆலமுல் கபீர் – (முழு சிருஷ்டியான) பெரிய உலகத்தையும், ஆலமுஸ்ஸகீர் -(மனிதனான) சிறிய உலகத்தையும், நிச்சயத்துக் கொண்டு பின் பெரிய உலகத்தை எடுத்துக் கொண்டு இது அல்லாஹுத் தஆலாவின் மள்ஹறுகளில் சம்பூரணமானது என்றும், இதில் ஹக்குதஆலா ஹுலூல்-விடுதி விடுதல், இத்திஹாது –ஒன்றாக சேருதல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.

இம்மூன்று வழிகளையும் அறிந்துக் கொண்டால் உன்னுடைய காமிலான ஷெய்குடைய உத்தரவின்படி மூன்றில் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் அருள் உன்னை இரண்டாவது பனாவின் ஸ்தானத்தளவில் சேர்த்து வைக்கிற வரையிலும் உன் அகக் கண்ணை கொண்டு அதை முஷாகதா-தியானித்துக் கொண்டு இருக்கவும்.
குளிப்பாட்டுகிறவனின் கையில் மைய்யித்தைப் போல், உன் நப்ஸை காமிலான ஷெய்கிடத்தில் ஒப்படைத்து அவருக்கு நீன் தொண்டு செய்வதைக் கொண்டேயல்லாது உனக்கு அது எளிதாகாது.
 

அல்லாஹுதஆலாவின் பக்கம் நெருங்குவது பற்றிய விளக்கம்.

அல்லாஹ்தஆலாவின் பக்கம் நெருங்குவது இரு வகையிலாகும்.

1. குற்புன்னவாபில்-நபிலான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது:-


لا يزال عبدي يتقرّب اليّ بانّوافل حتّي احبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع به وبصره الّذي يبصره به
ويده الّتي يبطش بها ورجله الّتي يمشي بها – رواه البخري

'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும், நான் அவனை உகந்து விட்டால் அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் ஆகி விடுகின்றேன்.'
(அல்ஹதீது குத்ஸி) அறிவிப்பு: புகாரி, மிஷ்காத் ஹதீது எண்:2260.

'குற்புன்னவாபில்' என்பது மனிதனுக்கு அல்லாஹுதஆலாவினால் இரவலாக கொடுக்கப்பட்ட, கட்டுப்பாடான, மானுஷீகத்துவ இலட்சணங்களில் கட்டுப்பாடுகள் அழிந்து அதற்கு பகரமாக கட்டுப்பாடுகள் இல்லாத அல்லாஹுதஆலாவின் இலட்சணங்கள் மனிதனில் வெளியாவதாகும்.

அப்போது அல்லாஹுதஆலாவின் உத்தரவு கொண்டு அல்லாஹுதஆலா செய்வது போன்று இவனும் செய்வான். 'மனித சிபாத்துகள் -இலட்சணங்கள் அல்லாஹுதஆலாவின் பூர்வீகமான இலட்சணங்களில் பனாவாகிறது-நாஸ்தியாகிறது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது நப்லான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.

2. குற்புல் பறாயில்-கடமையான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது.


ما تقرّب الي عبدي بشيي احبّ الي ممّا افترضت عليه

என்னுடைய அடியான் என்னளவில் அவன் மீது நான் கடமையாக்கியதைவிட எனக்கு உகப்பான எப்பொருளைக் கொண்டும் நெருங்குவதில்லை.
நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260

'குற்புல் பறாயில் என்பது அடியான் சகல சிருஷ்டிகளின் உணர்வையும், தன்னை உணர்வதையும் கூட விட்டு விட்டு ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றைத் தவிர மற்றவை ஒன்றும் அவன் பார்வையில் ஷுஹூதில் தரிப்பாடாகாத விதமாக முழுவதுமாக ஐக்கியமாக அல்லாஹுதஆலாவில் பனாவாகிவிடுவதாகும்.

'அடியானுடைய தாத்து, அல்லாஹு தஆலாவின் தாத்தில் பனாவாகிறது-நாஸ்தியாவது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது பர்ளான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.

அடியான் தன் நப்ஸை விட்டும் இல்லாமலாகி மானுஷீக உஜூது உரியப்பட்டு அடிமைத்தனத்தின் ஒளி நூர்ந்து போகி சிருஷ்டியான ரூஹு பனாவாகிவிடுமானால் அப்போது அடியான் அல்லாஹுதஆலாவின் தாத்திய்யான தஜல்லிக்கும், சரிபாத்தியான தஜல்லிக்கும் தகுதியாகிவிடுகிறான்.

இவன் பேரில் அல்லாஹு தஆலா தாத்தைக் கொண்டு அல்லது சிபத்துக்களைக் கொண்டு தஜல்லியாக நாடினால் இவனை விட்டும் உரியப்பட்டதற்கு பகரமாக தன்னுடைய தாத்தில் நின்றும் ஒரு 'லதீபா'-அதி நுட்பமானதை, ஒன்றாய் சேராமலாகவும் அடியானின் ஹைக்கலில்-கோலத்தில் வைக்கிறான். அதற்குத்தான் 'ரூஹுல் குத்ஸு'(படைப்பினங்களை விட்டும்) பரிசுத்தமான ஆன்மா என்று பெயர் சொல்லப்படும்.

ஆகவே ஹக்குதஆலா தனது தாத்தைக் கொண்டோ அல்லது சிபத்துக்களில் ஒரு சிபத்தைக் கொண்டோ தஜல்லியானால் எதார்த்தத்தில் அவனும், அவனுடைய சிபத்தும் அவன் தன்பேரிலேயே வெளியானான். அடியானின் பேரில் அல்ல. இந்நேரத்தில் அடியானை அல்லாஹுதஆலா என்று சொல்லிவிடக் கூடாது.

முறாக்கபா செய்யும் முறை

குற்புன்னவாபிலும், குற்புல் பறாயிலும் சொல்லப்பட்ட அல்லாஹுதஆலா அளவில் நீ, நெருங்குவதை நாடினால் முதலாவதாக நபி நாயகம் ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் அவர்களை சொல்லாலும், செயலாலும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் பின்பற்றி நடப்பதை பற்றிப் பிடித்துக் கொள். உன் வெளிரங்கம் உள்ரங்கத்திற்கும், உள்ரங்கம் வெளிரங்கத்திற்கும் மாற்றமாக ஆகுவதை பயந்து கொள்! அது உனது அமல்களை அழித்து விடும். அல்லாஹுதஆலாவை விட்டும் தூரப்படுத்திவிடும்.

இரண்டாவதாக கலிமத்துத் தய்யிபா (லாஇலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் தானாகவே இருக்கிற வஹ்தத்துல் உஜூதின்-உஜூது உன்றாக இருப்பதின் முறாக்கபாவை அதற்கு உளு இருக்க வேண்டும் என்ற விதியில்லாமல் (உளு இருந்தால் உத்தமம்தான்) இன்ன நேரத்தில்தான் செய்ய வேண்டுமென்றில்லாமல் எல்லா நேரத்திலும், மூச்சு போவது வருவது பற்றி கவனிக்காமலும், கலிமத்துத் தய்யிபாவின் அட்சரங்களை நோட்டமிடாமல் அதன் உட்கருத்தை மட்டுமே அல்லாது வேறொன்றையும் நோட்டமிடாது நீ நின்றவனாய், உட்கார்ந்தவனாய், நடக்கின்றவனாய், படுத்திருக்கிறவனாய், சகல நிலைமைகளிலும் செய்து வர வேண்டும்.

முறாக்கபா செய்யும்போது, முதலாவதாக உன்னுடைய ஹகீகத்தும், அந்தரங்கமும் ஹக்குதஆலாவுக்கு வேறாக இருப்பதான 'அன்னிய்யத்தை –நான் என்ற உணர்வை நீக்க வேண்டும். இதுதான் 'லாயிலாஹ' என்று நீக்குவதின் பொருளாகும்.

இரண்டாவதாக உன் கல்பில் ஹக்கு ஸுப்ஹானஹுவதஆலாவின் உஜூதை தரிப்படுத்துவதாகும். இதுதான் 'இல்லல்லாஹ்' என்று தரிபடுத்துவதின் பொருளாகும்.

சங்கைக்குரிய எங்களது தாதாபீர் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது 'அஸ்ஸுலூக்-இறைவழி நடை' எனும் உர்து நூலில், எல்லா தரீக்காக்களையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து எழுதிய முறாக்கபாவை அவர்களது கலீபா சங்கைக்குரிய எங்களது ஆன்மீக குருநாதர் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மொழி பெயர்த்துள்ள அந்த அஸ்ஸுலூக் வாசகத்தை அப்படியே தருகிறேன்.

மிகச்சுருக்கமான, சக்தி வாய்ந்த, மிக்க நம்பிக்கையான, எதார்த்தமான முறாக்கபாவாகிறது:-

ஒரே அடியாக கண்ணை மூடிக் கொண்டு ஹக்குதஆலாவின் தாத்தாகிய தன்னுடைய கல்பு இருதயமெனும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்து விட்டு உப்பு சமுத்திரத்தில் கரைந்து போவது போல் தன்னை அழித்து விட வேண்டும். தன்னோடு சகல உலகத்தையும் அழித்து விட வேண்டும்.

மனிதன் தானே உலகமாகும். எப்பொழுது மனிதன் அழிந்து விடுகிறானோ, அப்போது அவனோடு உலகம் அனைத்தும் அழிந்து விடுகிறது. உலகத்தில் எத்தனை சூறத்துகள் (கோலங்கள்) இருக்கின்றதோ அத்தனையும் மனிதனுடைய சூறத்துகளேயாகும்.

உலகம் ஒரு கண்ணாடி வீடாகும். மனிதனுடைய சூறத்துகள் அதில் காட்சியளிக்கிறது. எப்பொழுது மனிதன் கண்ணாடி வீட்டை விட்டும் வெளிப்பட்டு விடுவானோ ஒரு சூறத்தும் எந்த கண்ணாடியிலும் எஞ்சியிராது. இதே விதமாகவே மனிதனுக்கு அவசியம்.

அதாவது:- ஒவ்வொரு அணுக்களுடைய சூறத்துக்களையும் தன்னுடைய சூறத்தின் பிரதிபிம்பம் என்று உணர வேண்டும். இன்னும் உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவின் உசும்புதல், ஒடுங்குதலும், என்னுடைய உசும்புதல், ஒடுங்குதலோடு கட்டுண்டதாகும் என்று உறுதிக் கொள்ள வேண்டும்.

இன்னும் எப்பொழுது கண்ணை மூடி விடுகிறானோ அப்போது உறுதி கொள்ள வேண்டும்.

அதாவது:- நான் எந்த சூறத்தின் காரணமாக தாத்தை விடடும் பிரிந்திருந்தேனோ அந்த என்னுடைய இன்ஸானிய்யத்தான சூறத்து-மனித உருவம் அழிந்து விட்டது. இப்பொழுது நான் தாத்து தானாகிவிட்டேன். வானம், பூமி இன்னும் சகல உலகமும் என்னோடு அழிந்து விட்டது. இப்போது நான் சூறத்தும், நிறமுமில்லாது சுத்தமாகயிருக்கிறேன். நான் உருவம், நிறமில்லாத, கரையில்லாத சமுத்திரமாக இருக்கும். எதுவரையிலும் என்றால் நான் சமுத்திரiமாக இருக்கும் என்ற நினைப்புங்கூட அழிந்து விட வேண்டும். இன்னும் இந்த நானும், சமுத்திரத்தின் நானும் தாத்து தானாக ஆகிவி;ட வேண்டும்.

ஆண்டவா! உனது நேசர் தீர்க்;கதரிசிகளுக்கெல்லாம் நாயகமான எங்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொருட்டினால் எங்களுக்கு இந்த வலுப்பமான வாழ்வைக் கொடுத்தருள்வாயாக! ஆமீன்!!

குறிப்பு:- இந்த முறாக்கபாவை அடிப்படையாக வைத்துதான் நம் ஷெய்குநாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பைஅத் எடுக்கும் போது முரீதீன்களுக்கு இதை உபதேசித்தும், ஸில்ஸிலாவில் இணைத்தும் இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

اسّير الباطنஅஸ்ஸய்றுல் பாதின்- அகமிய (இறைவழி) நடை:

அகமிய இறைவழி நடை ஆறு வகை:
 

1. அஸ்ஸய்று லில்லாஹிاسّير لله- அல்லாஹ்வுக்காக அறியாமையில் இருந்து அறிவளவில் நடப்பது.
2.அஸ்ஸய்று இலல்லாஹிاسّير الي الله-அல்லாஹ் அளவில் அறிவிலிருந்து அமல்(வணக்கம்) அளவில் நடப்பது.
3.அஸ்ஸய்று குபில்லாஹிاسّير في الله- அல்லாஹ்வில் நடப்பது- அவனில் பனாவாகுவது-மாயுவுவது.
4. அஸ்ஸய்று மினல்லாஹிاسّير من الله- அல்லாஹ்வில் நின்றும் நடப்பது. மஹ்வில்-அழிவில் இருந்து ஸஹ்வு-தெளிவு அளவில் மீள்வது கொண்டு பகாவாகும்-நிலைப்பதுவாகும்.
5. அஸ்ஸய்று பில்லாஹிاسّير باالله -அல்லாஹ்வைக் கொண்டு நடப்பது அல்லாஹ் உடைய சிபத்துகள், அஸ்மாக்களைக் கொண்டு பூணுவதாகிய பகாவுல் பகாவாகும்.-நிலைப்பதிலும் நிலைப்பதுவாகும்.
6. அஸ்ஸய்று மஅல்லாஹிاسّير مع الله-அல்லாஹ் உடன் நடப்பது மேலுலகத்திலும், கீழுலகத்திலும் ஆட்சி, அதிகாரம் செய்வதாகும்.
 

வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்குர்ஆன் ஆதாரங்கள்

ولله المشرق والمغرب فاينما تولّوا فثمّ وجه الله
 

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியது. எப்பக்கம் (புலனால் அல்லது புத்தியால்) முன்னோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (தத்சொரூபத்தின் வெளிப்பாடு) இருக்கிறது (2:115)


ونحن اقرب اليه من حبا الوريد

நாம் அவனளவில் (அவனுடைய சக்திகளின் அந்தரங்கமாக இருக்கிறவிதத்தில்) அவனுடைய பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம். (50:16)


وهو معكم اينما كنتم

நீங்கள் எங்கிருந்தாலம் (சகலத்திலும் அவனது உஜூது ஊடுறுவி இருக்கிற விதத்தில்) அவன் உங்களுடன் இருக்கிறான். (57:4)


ونحن اقرب اليه منكم ولاكن لا تبصرون

(மரண தருவாயிலிருக்கிற) அவன் அளவில் (அவனுடைய உறுப்புகளாகவும், சக்திகளாகவும் வெளிப்பாடாக இருக்கிற விதத்தில்) உங்களை விட நாம் மிக நெருக்கமாக இருக்கிறோம். என்றாலும் நீங்கள் (அதன் அந்தரங்கத்தை) பார்த்தறிய மாட்டீர்கள். (56:85)


انّ الّذين يبا يعونك انّما يبايعون الله يد الله فوق ايديهم

(நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கை கொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில்தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது.(48:10)


هو الاوّل والآخر والضاهر والباطن وهو بكلّ شيي عليم

அவனே (சகல சிருஷ்டிகளைக் காண) முந்தியவன்,(மள்ஹறு-வெளிப்பாடு ஸ்தானங்களில்  வெளிப்படுவதில்) பிந்தியவன், (சிருஷ்டிகளின் கோலங்களைக் கொண்டு) வெளியானவன், (சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளை விட்டும்) உள்ளானவன். அவன் சர்வ பொருள்களைக்  கொண்டும் அறிந்தவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். (57:3)


وفي انفسكم افلا تبصرون

உங்களது நப்ஸுகளிலேயே (வஹ்தத்துல் உஜூதுடைய அத்தாட்சிகள்) இருக்கிறது. நீங்கள் பார்க்க வேண்டாமா? (51:21)


واذا سئلك عبادي عنّي فانّي قريب

(நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன் (என்று சொல்வீராக!) (2:186)


وما رميت اذ رميت ولاكنّ الله رمي

(நபியே! காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது(வெளியில் உங்களில் நின்றும் வீசும் கோலம் உண்டானாலும்) நீங்கள் வீசவில்லை. எனினும் (உள்ளாகவும், அந்தரங்கமாகவும் இருக்கிற) அல்லாஹ் வீசினான். (8:17)

وكان الله بكلّ شيي محيطا அல்லாஹு தஆலா (ஒரு அணுவும் கூட விடாது சகலத்திலும் ஊடுறுவிருக்கிற விதத்தில்) சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகிவிட்டான். (4:126)

الا انّه بكلّ شيي محيطஅறிந்து கொள்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளைக் கொண்டு சூழ்ந்திருக்கிறான். (41:54)

வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்ஹதீது ஆதாரங்கள்.


اصدق كلمة قالها الشاعر كلمة لبيد—
الا كلّ شيئ ما خلا الله باطل. (متفق عليه)

(அறபி) கவிஞர் சொன்ன வார்த்தைகளில் உண்மையான வார்த்தை லுபைது கவிஞரின் 'அறிந்து கொள்! அல்லாஹ் அல்லாத அனைத்து பொருள்களும் பாதிலாகும் – தரிபாடாகாத இல்லாமையாகும்' என்று சொன்னதாகும்.
-புகாரி, முஸ்லிம், மிஷ்காத் ஹதீது எண் 4778


فماذا بعدالحقّي الّا الضّلال

மெய்ப்பொருளுக்கு (அல்லாஹு தஆலாவின் உஜூதுக்கு) பின்னால் (வழிகேடான) பொய்யே அல்லாதில்லை (10:32) என்ற திருக்குர்ஆன் வசனத்தில் இருப்பது போன்று சிருஷ்டிகளுக்கு ஹக்கு சுபுஹானஹுவதஆலாவின் உஜூது பைழான் -உலிப்பதினால் அன்றி அறவே உஜூது இல்லை.


انّ احدكم اذا قام الي الصّلوة فانّما يناجي ربّه بينه وبين القبلة

உங்களில் ஒருவன் தொழுகைக்கு நின்றால் அவன் தன் ரப்பு-போசகனோடு வசனிக்கிறான். ஆகவே அவனுடைய ரப்பு (தஜல்லியின் புறத்தினால்) அவனுக்கும் கிப்லாவுக்குமிடையில் இருக்கிறான்.
(அல்ஹதீது)


لا يزال عبدي يبقرّب اليّ لا لنّوافل حتي اُحبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع له ولصره الّذي يبصر به ويده الّتي يبطش بها ورجله الّتي يكسي بها   رواهالبخاري

'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும் நான் அவனை உகந்து விட்டால் (بالقوّةபில்குவ்வத்தி-அமைப்பில் இருந்ததைப் போல் بالفعلபில் பிஃலி-வெளியிலும்) அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும் அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகிவிடுகின்றேன்.'
நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260

عن ابي هريرة رضي الله عنه قال قال رسوالله صلّي الله عليه وسلّم انّ الله يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني……استطعمتك فلم تطعمني………..استسقيتك فلم تسقني…………رواع مسلم

நிச்சயமாக அல்லாஹுதஆலா கியாமத் நாளில் சொல்வான்:-

ஆதமின் மகனே! (மனிதனே!) நான் (சிருஷ்டியான மற்தபாவில்-படித்தரத்தில் இறங்கின புறத்தில்) வியாதியஸ்தனாக இருந்தேன். என்னை சுகம் விசாரிக்க வரவில்லை. உணவளிக்க தேடினேன். எனக்கு உணவளிக்க வில்லை. தண்ணீர் புகட்டத் தேடினேன். எனக்கு தண்ணீர் புகட்டவில்லை…(நீண்டதொரு ஹதீதின் சுருக்கம்)
-மிஷ்காத் ஹதீது எண்:1523


والّذي نفس محمّد بيده لو انّكم تدلّيتم بحبل الي الاض لهبط علي الله ثمّ قرأعليه الصّلاوة والسلام هو الاوّل والآاخر والباطن وهو بكلّ شيي عليم

முஹம்மதுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக தண்ணீர் மொள்வதற்கு கயிற்றுடன் வாளியை பூமியில் இறக்குவீர்களேயானால் அது அல்லாஹ்வின் மேல் விழும். பின்பு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனே முன்னவன், அவனே பின்னவன், அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், அவன் சகல பொருள்களையும் அறிந்தவன் என்ற (57:3) திருவசனத்தை ஓதினார்கள்.
நூல்: திர்மிதி

இறைவா! எங்களது அகத்தையும் புறத்தையும் மஃரிபத் எனும் ஞான ஜோதியைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக! எங்கள் ஷெய்குமார்களின் அத்தஸவ்வுபு-ஸூபிஸம் மெஞ்ஞான நூற்களைப் படித்து விளங்கி அதன்படி செயல்படுத்தி, சித்தி, முக்தியடைந்து அவர்களுக்கு கிடைத்த பைளு-அருள் கடாட்சியத்தை போன்று எங்களுக்கும் கிடைத்து இம்மையிலும், மறுமையிலும் திரு லிகா-தரிசனத்தை பெற்று அவர்களுடன் உயர் சுவனபதியில் ஒன்று சேர்;ந்து வாழ எல்லாம் வல்ல பரம்பொருளான அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

முற்று பெற்றது.

Soofi Hazrath Kahiri-செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு

 செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு

  காயல்பட்டணத்தில் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் 39 வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ல் சி.ஏ.கே. அஹ்மது முஹ்யித்தீன்-முஹம்மது இபுறாகீம் நாச்சி ஆகிய தம்பதிகளுக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார்கள். காயல்பட்டணத்தில் 8 ஜுஸ்வு வரை ஹிப்ழு ஓதினார்கள். ஆலிமாக விருப்பம் கொண்டு அச் சமயம் நகருக்கு வருகை தந்திருந்த காதிரிய்யா தரீகாவின் பிரபலமான செய்கு ஸெய்யிது குடும்பத்தவரான ழியாவுல் ஹக் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிம் தங்கள் அவாவை சொன்னபோது அவர்கள் அவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்று கொடுத்து ஊர் எல்லை வரை சென்று வழியனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவர்கள் ழியாவுல் ஹக் ஸூபி ஹஜ்ரத் அவர்களிடம் பைஅத்து வேண்டி நிற்க, என்னை விட மகத்தான வேறொருவர் தங்களுக்கு பைஅத் தருவார்கள். காத்திருங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

   சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரியில் சேர்ந்த அவர்கள், பின்பு பொதக்குடி அந் நூருல் முஹம்மதிய்யி அரபிக் கல்லூhயில் செய்குல் காமில் அப்துல் கரீம் ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் சேர்ந்து அவர்களிடம் கல்வி கற்று அவர்களின் அன்புக்கு உரித்தானவர்களாயினர்.

  ஹிஜ்ரி 1345 ல் அப்துல் கரீம் ஹஜ்ரத் வாத்தான பிறகு, ஹிஜ்ரி 1349 ல் ஸனது வழங்கப்பட்ட போது அப்போதைய கல்லூரி முதல்வாரன முஹம்மது அப்துற் றஹ்மான் ஆலிம் அவர்களால் மௌலவி ஆலிம் பாஸில் நூரி ஸனது அவர்களுக்கு வழங்கப்பட்டது..

   இலங்கை காத்தான்குடியைச் சார்ந்த முஹம்மது தம்பி ஆலிம்- மரியம் உம்மாள் ஆகியோரின் புதல்வர் அஹமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் அவர்களும் இவர்களுடன் ஒன்றாக கல்வி பயின்றார்கள்.

பொதக்குடி மத்ரஸாவிற்கு வருகை தந்த ஞான சூரியன் இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாயிழீன் ஷhஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வருகை தந்திருந்த சமயம் இவர்களையும் இவர்களது தோழர் அஹமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் (இவர்களின் மறைவு கி.பி.1952 அக்டோபர் 2-அடக்கஸ்தலம் காத்தான்குடி) அவர்களையும் ஹைதராபாத் வரும்படி அழைத்தார்கள். அதற்கிணங்க அவர்கள் அங்கு சென்று 6 மாதம் வரை தங்கியிருந்து ஞானக் பேரமுதை அருந்தினர். இறுதியில் செய்கு அவர்கள் அவர்களுக்கு  காதிரிய்யா, நக்ஷகந்தியா, ரிபாயிய்யா, ஜிஷ;திய்யா, முஜத்திதிய்யா தரீகுகளில் ஜதுபு, சுலூக்கு வழிகளில் பைஅத்தும், கிலாபத்தும் கொடுத்தார்கள். 

ஹிஜ்ரி 1349 ஜமாதுல் அவ்வல் பிறை 22 புதன் கிழமை (15-10-1930) அன்று அவர்கள் தோல்சாப்பு முஹம்மது அப்துல்லா நச்சி என்ற பெண்ணரசியை திருமணம் புரிந்தார்கள். இத் திருமணத்தில் ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்களும் கலந்து கொண்டார்கள். 1932ல் முதல் மனைவி இறையடி  சேர்ந்து விடவே, இரண்டாவதாக தோல்சாப்பு மகுதூம் பாத்திமா என்ற மாதரசியை திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு மூன்று பெண் மக்களும், ஒரு ஆண் மகனும் பிறந்தார்கள். ஆண் மகனார் அஹ்மது முஹ்யித்தீன் அவர்கள் 214-2-1983 அன்று இறையடி சேர்ந்து விட்டார்கள். இவர்களின் இரண்டாவது மகளை மௌலவி ஊண்டி M.M.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள் திருமணம் முடித்துள்ளார்கள். இவர்கள் அன்னாரின் கலீபாக்களில் ஒருவராக திகழ்கிறார்கள்

   செய்குனா அவர்கள் வியாபாரம் செய்தார்கள் அதனால் நஷடமும், மன நிம்மதியும் போய்விடுவதால் அதை விட்டொழித்து விட்டு தமது ஆசானின் உபதேசப்படி மக்களுக்கு ஞானம் போதிக்க தங்கள் பார்வையை திருப்பினர். அதற்குமுன் இறைவனை தனித்திருந்து திக்ரு செய்வதற்காக வேண்டியும் தமது நண்பர் அட்டாளச் சேனை அகமது மீரான் ஸூபி அவர்களை சந்திப்பதற்காகவும் வேண்டி 1946 ல் இலங்கை சென்றார்கள். கிராங்குளம் எனுமிடத்திலுள்ள தோட்டத்தில் சுமார் ஒன்றரை வருடம் கலவத்திருந்தார்கள்.பின்பு கொடிக்கால்பாளையம் அ.த. அப்துல் மஜீத் ஸூபி அவர்களின் தோட்டத்தில் சில காலமும், காயல்பட்டணம் இரட்டைகுளப் பள்ளியில் ஓராண்டும் கல்வத்திருந்தார்கள். மீண்டும் 1949 ம் வருடம் இலங்கை சென்று கொழும்பு சம்மாங்கோட்டுப் பள்ளியில் சில மாதங்கள் இமாமத் பணியினை செவ்வனே செய்தார்கள். பின்பு இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று ஞானங்களையும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் போதித்தார்கள். அதற்காக ஸூபி மன்ஜில்களை உருவாக்கினார்கள்.

  1963 ம் வருடம் இஸ்லாத்தின் இறுதி கடமையாம் காயல்பட்டணத்திலிருந்து சென்று ஹஜ்ஜினை நிறைவேற்றினார்கள். 

     1968 ம் வருடம் தப்லீக் ஜமாஅத்தினர்களுடன் இலங்கை மாத்தறையில் விவாத மாநாட்டில் விவாதித்து தப்லீக் ஜமாஅத்தினர்களை விரண்டோடச் செய்தனர்.
செய்குனா அவர்கள் எழுதிய

ஞானம் போதிக்கும் நூற்கள்:

1. அத் துஹ்பத்துல் முர்ஸலா.
2. அஸ்ஸுலூக்.
3. ஞான தீபம்.(மிஷ;காத்துல் அன்வார்)
4. அல் ஹக்கு 1
5. அல் ஹக்கு (கேள்வி-பதில்)
6. அத்தகாயிகு
7. அஸ்ராருல் கல்வத்(கல்வத்தின் ரகசியங்கள்)
8. அகமியக் கண்ணாடி
9. கலிமத்துல் ஹக்.

     செய்குனா அவர்கள் எழுதிய கொள்கை விளக்க நூற்கள்:

1. இள்ஹாறுல் ஹக்-சத்தியப் பிரகடனம்.
2. உலமாக்களின் உண்மை பத்வா
3. அறிவாளர்களே ஆராய்ந்த பாருங்கள்.
4. காதியாணி-தேவ்பந்து சம்பாஷணை.
5. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்.
6. சுவர்க்க நகைகளா? அல்ல.நுரக விலங்குகள்.
7. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு.
8. மவ்தூதி சாஹிபும் அவரது ஜமாஅNது இஸ்லாமி இயக்கமும்.
9. அல் முஹன்னதின் அண்டப் புளுகு.
10. தப்லீக் என்றால் என்ன?
11. புலியைக் கண்டு ஓட்டம்.

    இறுதி வரை எந்தவொரு தனி மனிதனுக்கும், சக்திக்கும் பணியாமல் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவோ,பின்வாங்கவோ செய்யாமல், அழி மொழி சொற்களை கேட்டு முகம் சுளிக்காமல் சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களால் வகுத்து தரப்பட்ட நேர்வழியில் சென்று வீரத்தோடு கொள்கைளளை  போதித்து 
 அனைவராலும் ஸூபி ஹலரத் என்று அழைக்கப்பட்ட அல்லாமா செய்குல் காமில் ஸூபி ஹலரத் அவர்கள் ஹிஜ்ரி 1402 புனித ரமலான் பிறை 24 (16-07-1982) வெள்ளிக் கிழமை அன்று நோன்பு வைத்த நிலையில் சுப்ஹிற்குப் பின் கொழும்பில் வைத்து இறையடி சேர்ந்தார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் கொழும்பு குப்பியாவத்தையில் நல்லடக்கம் செய்யப்பட்டு ஜியாரத் நடைபெற்று வருகிறது.

    தமிழ் நாட்டில் வஹ்ஹாபிகளான தப்லீகை தோலுரித்துக் காட்டியவர்கள் இவர்கள். காயல்பட்டணம் ஸூபி ஹலரத் என்றால் வஹ்ஹாபிகள் நடுநடுங்குவர்.

   இவர்களின் மறைவிற்குப் பின் தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபைக்கு தலைவராக அன்னாரின் கலீபாக்களில் ஒருவரான மௌலவி S.M.H..சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்களை தேர்ந்தெடுத்தது ஸூபி ஹலரத் அவர்களின் மார்க்க சேவைக்கு சூட்டப் பட்ட மணிமகுடமாகும்.

    இவர்களின் கந்தூரி வைபவம் இலங்கையின் பல பாகங்களிலும், இந்தியாவின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகிறது.

அரபிக் கலாசாலையில் 7 வது பட்டமளிப்பு விழா!

மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையில் 7 வது பட்டமளிப்பு விழா!

கடந்த 18-07-2010 ஞாயிற்றுக் கிழமை (ஹிஜ்ரி 1431 ஷஃபான் பிறை 06) காலை 9.30 மணியளவில் இலங்கை ஏறாவூர் ஸூபி மன்ஸில் சார்பாக நடாத்தப்பட்டு வரும் மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையில் 7 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவும், 8வது  தலைப்பாகை சூடும் விழாவும் காட்டுப்பள்ளி வீதி, கலாசாலை மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இச் சிறப்பு மிகு விழாவிற்கு தலைமை தாங்கி  நடத்தி நடந்தவர்கள் சங்கைமிகு ஷெய்குனா ஸெய்யிது பூக்கோயாத் தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனார் அல்ஹாஜ் பி.ஏ. முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம் ஸகாபி, காதிரி, அல் ஹஸனி (இந்தியா) அவர்கள். சிறப்பு அதிதியாக கலந்து கொண்டவர்கள் ஷெய்குனா மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் அல் ஆலிமுல் பாழில் ரஹ்மானி, பாகவி கலீபத்துல் காதிரி (இந்தியா) அவர்கள்.

இவ்வரபி கலாசாலையின் பேராசிரியர்களாக பணி புரிபவர்கள்:

மௌலவி அல்ஹாபிழ் ஏ. நாகூர் மீரான் பாழில், பாகவி இந்தியா (முதல்வர்) அவர்கள்.

மௌலவி டபிள்யு. ரயீஸுத்தீன் கௌஸி அவர்கள்.

மௌலவி எம்பி. அப்துல் ஹஃபீல் கௌஸி அவர்கள்.

நிகழ்ச்சில் முன்னதாக சுபுஹுத் தொழுகைக்குப் பின் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது.

காலை 9.30 மணியளவில் கிராஅத் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

மாணவர்கள் கல்லூரி கீதம் பாட, வரவேற்புரைக்குப் பின் தலைமையுரையை தலைவர் அவர்கள் ஆற்ற பின் வாழ்த்துரையை மத்ரஸா உலமாக்கள் ஆற்றினார்கள். பின் பட்டம் பெறும் மௌலவி மார்களுக்கு 'முஸ்தபி' பட்டத்தை சங்கைமிகு ஷெய்குநாயகம் ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் வழங்கி ஆசியுரை வழங்கினார்கள். இறுதியில் துஆ பிராhத்தனையுடன் ஸலாவத் ஓதி நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன.

பட்டம் பெற்ற மாணவர்கள்:

1. மௌலவி ஜே. முஹம்மது மபாயிஸ் முஸ்தபி, அக்கரைப் பற்று,
2. மௌலவி ஏஎம். முஹம்மது அஹ்ஸன் முஸ்தபி, அத்துக்கல, பொலனறுவை.
3. மௌலவி எம்.எஸ். முஹம்மது றியாழ் முஸ்தபி, பல்லியா கொட, அக்பர்புர, பொலன்னறுவை.
4. மௌலவி ஆர்எம். முஹம்மது மர்சூக் முஸ்தபி, சுங்காவில், பொலன்னறுவை.
5. மௌலவி எம். அறபாத் முஸ்தபி, ஏறாவூர்.

தலைப்பாகை சூடும் மாணவர்கள்:

1. ஜனாப். எம். முஹம்மது பிர்தௌஸ், ஏறாவூர்
2. ஜனாப். டி. முஹம்மது நிஸ்வர், ஏறாவூர்.
3. ஜனாப். என்.எல். முஹம்மது பாரிஸ,; ஏறாவூர்.

மத்ரஸாவிற்காக நன்கொடைகளை அனுப்பி அல்லாஹ்வின் நல்லருளையும் ஷெய்குமார்களின் துஆபரக்கத்தையும் பெற்றிட அன்புடன் வேண்டுகிறார்கள் ஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலை நிர்வாகத்தினர்.

மத்ரஸாவிற்கான செலவுகள் விபரம்: (ஒருநாள் செலவுகள்- இலங்கை ரூ.)

1. காலை உணவு                  ரூ. 1500
2.  மதிய உணவு                   ரூ 2500
3. இரவு உணவு                     ரூ 2000
4. மூன்று வேளை தேனீர் ரூ 500

     மொத்தம்         இலங்கை ரூ 6500

பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்:

Eravur-People's Bank A/C No: 123-1001-10000-396.

ஹிஸ்புல்லாஹ் ஸபை,
ஸூபி மன்ஸில்,
காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர்.

Phone: 0094-652240469

ஷெய்கு ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் இந்தியா திரும்புதல்

 

ஷெய்கு ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் இந்தியா திரும்புதல்:

காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரதான கலீபா ஹஜ்ரத் எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஸூபி காதிரி அவர்கள் தங்களது இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்ஷா அல்லாஹ் நாளை மறுதினம் (20-07-2010) அன்று தாயகம் திரும்புகிறார்கள்.

ஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்-Odukku Fatwa and Shaikuna

ஒடுக்கு பத்வாவும் ஷெய்குனா அவர்களும்:

காயல்பட்டணம் ஜாவியாவில் மவுத்தானவர்களுக்கு 3ம் நாள் பாத்திஹா, 40ம் நாள் பாத்திஹா, வருட பாத்திஹா ஓதுவது கூடாது, மய்யித்தை அடக்கச் செல்லும் போது அத்துடன் ரொட்டி, பழம், உப்பு போன்ற பொருட்களை சுமந்து சென்று தருமம் செய்வது (ஒடுக்கு) கொடுப்பது கூடாது என்றும் பத்வா ஒன்றை 5-1-1967 ல் வெளியிட்டனர். இந்த பத்வாவை வெளியிட்டவர் மௌலவி சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தின் (ஜாவியா அரபிக் கல்லூரி முதல்வர், காயல்பட்டணம்) அவர்கள். காயல்பட்டணத்தைச் சார்ந்த மௌலவி பாளையம் மஹ்மூது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள், மௌலவி ஐதுரூஸ் ஆலிம் பாகவி அவர்கள் போன்றோர்களும் இதை சரிகண்டு கையொப்பமிட்டுள்ளனர். (இதற்கு மாற்றமாக ஒடுக்கு கூடும் என்றும், 3ம் நாள் பாத்திஹா, 40ம் நாள் பாத்திஹா கூடும் என்று  பத்வா  மஹ்லறா அரபிக் கல்லூரியிலிருந்து வெளிவந்தது. இதை தொகுத்தவர்: மௌலவி எம்.எஸ்.அப்துல் காதிர் பாகவி (சதர் முதர்ரிஸ், மஹ்லறா, காயல்பட்டணம்)அவர்கள்.)

ஒடுக்கு பத்வா பற்றி விவாதிக்கத் தயார் என்று பகிரங்கமாக மஹ்லறத்துல் காதிரிய்யா சபையினரால் வெளியிடப்பட்ட பிரசுரத்தின் பிரதி:

இந்த ஜாவியா மத்ரஸாவின் பத்வாவினால் காயல்பட்டணத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இறந்துவிட்ட மாமாவுக்கு 40 வது கத்தம் ஓதப்படுமானால் உனது சகோதரியை (எனது மனைவியை) தலாக் சொல்லிவிடுவேன் என்று ஒருவர் மிரட்ட, அப்படித் தலாக் சொன்னால் எனது மனைவியான உனது சகோதரியை நானும் தலாக் சொல்லி விடுவேன்' என்று 40-வது கத்தம் என் தந்தைக்கு ஓதுவேன் என்று கூறியவர் பதிலுக்குக் கூற ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக செல்வம் படைத்த அந்த வீட்டில் மௌனமாகவே 40 வது கத்தம் ஓதப்பட்டது! இந் நிகழ்ச்சி நமதூர் குறுக்குத் தெருவில்தான் நடைபெற்றது. இக்குழப்பத்தை தீர்க்கவும், மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை உலமாக்கள் கலந்து பேசுவதின் மூலம் தீர்த்து ஊரில் ஒற்றுமையை ஏற்படுத்திட 'சன்மார்க்க ஊழியர் குழு' அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் N.M.K. இபுறாஹீம்(மவ்லானா), M.K.S.A. தாஹிர், P.S. முஹிய்யத்தீன், S.M.B. மஹ்மூது ஹுஸைன், T.S.A.ஜிப்ரீ, S.K.M.. சதக்கத்துல்லாஹ், K.M.K. காதிர் சுலைமான் ஆகியோர் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்.

இவர்கள் ஒடுக்கு பற்றிய பிரச்சனைக்கும், தப்லீக் பற்றிய பிரச்சனைக்கும் உலமாக்கள் பேசி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை உலமாக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களிடம் ஒப்பம் பெற்று உலமாக்கள் மாநாட்டைக் கூட்ட இந்த குழு கடந்த 16-11-67 அன்று ஒரு பிரசுரம் வெளியிட்டது. அதன் பின் 17-11-67 ல் மஹ்லறா சென்று ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் அவர்களிடமும், S.M.H. முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் அவர்களிடமும், M.S. முஹம்மது அப்துல் காதிர் பாகவி அவர்களிடமும் ஒப்புதல் பெற்று வந்தனர். பின்னர், 18-11-67 அன்று ஜாமியுல் அஸ்ஹர் சென்று அங்கு இருந்த மௌலவி மு.க. செய்யிது இபுறாகீம் ஆலிம் முப்தி, சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தி (சாவண்ணா ஆலிம்), தை. ஷெய்கு அலி ஆலிம் ஆகிய உலமாக்களிடம் சென்று வந்த நோக்கத்தைக் கூறி கையெழுத்துக் கேட்டனர். அதற்கு அவர்கள் பலவாறு பேசி பிரச்சனையை திசை திருப்பிட முயன்றபோது (ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஆலிமுல் கைபு மற்றும் ஸுஜூது பற்றி தப்பும் தவறுமாக பேசியிருப்பதாகவும் அதற்கும் சேர்த்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் செய்யிது ஆலிம் அவர்கள் சொல்ல), சென்றிருந்தவர்கள் நாங்கள் அவர்களிடம் சென்று பேசி ஒப்புதல் வாங்கி வருகிறோம் என்று சொல்லி சென்றார்கள்.

அதன்பின் 19-11-67 ல் கனம் ஸூபி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து விவரம் கூறி அனுமதி கேட்டனர். அதற்கு அவர்களும், நான் பேசியது சரிதான். அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதற்குரிய விளக்கத்தை கலீபா அப்பா தைக்காவில் பேசும்போது நான் விளக்கி பேசிவிட்டேன். இருந்தபோதும், அவர்கள் இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளதான் வேண்டும் என்றால் அதற்கும் நாங்கள் தயார் என்று சொன்னார்கள்.

இவ்விஷயத்தை பட்டறை செய்யது ஆலிம் அவர்களிடம் சொன்னபோது, சரி நீங்கள் சொன்ன இரு பிரச்சனைகளை மட்டும் பேசி விவாதிக்கலாம், நாளை வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். அதன்பிறகு பலமுறை அவர்களை சந்தித்து கேட்டபோதும் அலைக் கழித்தார்களே தவிர அதற்குரிய பதிலை அவர்களிடமிருந்து பெற முடியவில்லை. அதனால் அந்தக் குழுவினர் ஆலிம்களை தனித்தனியாக சந்தித்து ஒப்புதல் பெற முயற்சியை மேற்கொண்டனர். முதலில் மௌலவி ஐதுரூஸ் பாகவி அவர்களையும், புதுப்பள்ளி பேஷ் இமாம் T.A.S. செய்யிது முஹம்மது பாகவி அவர்களையும், மௌலவி மஹ்மூது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களையும் , பிறகு முத்துவாப்பா தைக்காவில் வைத்து T.E.S. ஷெய்க் அலி ஆலிம் அவர்களை சந்தித்து இதுபற்றி கூறி அதற்கு ஒப்புதல் கேட்க அவர்கள் அனைவர்களும் சாக்குபோக்கு சொல்லி இறுதிவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அவர்கள் கொண்ட கொள்கையிலேயே உறுதியாக இருந்தனர். தாங்கள் வெளியிட்ட  (சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான) பத்வா சரியானது என்ற கொள்கையிலேயே இருந்தனர். இறுதியில் இந்த பிரச்சனை பேசி முடிவெடுக்க முடியாமலேயே முடிந்து விட்டது.

ஆக ஊரில் வஹ்ஹாபியக் கருத்துக்களை முதன்முதலில் பரப்பியவர்கள் மௌலவி மு.க.செய்யிது ஆலிம் முப்தியும், அவரின் அடிவருடியாக செயல்பட்ட சா. சாகுல் ஹமீது ஆலிம் முப்தி போன்றவர்களும் அவர்களின் சகாக்களும்தான்  என்று தெரிகிறது.

சுன்னத் ஜமாஅத்திற்கு மாறுபட்ட கொள்கை கொண்ட பிரச்சனையாக இருந்தால் அதைப் பற்றி விவாதித்து அதற்கு விளக்கம் அளிக்க ஷெய்குனா அவர்கள் எக்காலத்திலும் பின்வாங்கியதில்லை. எதற்கும் தயங்கியதில்லை என்பது 'காயல்பட்டினத்தில் உலமாக்கள் மாநாட்டைக் கூட்டிவைக்க சன்மார்க்க ஊழியர் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளக்கம்' என்ற தலைப்பில் 12-01-1968 ல் M.K.S.A. தாஹிர் (அமைப்பாளர், சன்மார்கக் ஊழியர் குழு) என்பவரால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஆணித்தரமாக தெரிவிக்கிறது.

Print

ஸூபி மன்ஜிலின் புதிய கட்டிடம் திறப்பு விழா!-New Sufimanzil Building Opened!

ஸூபி மன்ஜிலின் புதிய கட்டிடம் திறப்பு விழா!

கடந்த 2-05-2010 ஞாயிற்றுக் கிழமை, காயல்பட்டினம் ஹிஸ்புல்லாஹ் சபை டிரஸ்ட்டால் நடத்தப்பெறும் ஸூபி மன்ஜிலுக்காக திருநெல்வேலி டவுண் சாலியார் தெருவில் வாங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா மௌலானா மௌலவி அஷ்-ஷெய்கு ஊண்டி W.M.M.செய்யிது முஹம்மது ஆலிம் காதிரி ஸூபி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மன்ஜிலின் நிர்வாகத்தினர் ஹாஜி S.M.தாஜுத்தீன் அவர்கள், நோ.மஹ்மூது அவர்கள், W.K.M. சாலிஹ் அவர்கள், Z.A. செய்கு அப்துல் காதிர் அவர்கள், இன்ஜினீயர் ஹஸன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்டிடம் மிகவும் சிறப்பானதாக அமையப்பெற்றிருந்தது. கட்டிடத்தின் மாடியை கட்டுவதற்கு சுமார் ரூ.ஒரு இலட்சம் தேவைப்படுகிறது. அதையும் கட்டி முடித்தால் மிகவும் சிறப்பாக, பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதனால் முஹிப்பீன்கள், முரீதீன்களான உங்களை நாடுகின்றனர் காயல்பட்டணம் ஸூபி மன்ஜில் நிர்வாகத்தார்.

தங்களது தாராள நன்கொடைகளை காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலுக்கு அனுப்பித் தர வேண்டுகிறார்கள்.

Kayalpatnam Sufi Hazrath-காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு

 By: Hisbullah Sabai, Sufi Manzil, Kayalpatnam-628204 Inida.

 
 அல்ஆரிபுல்லாஹ் அல்முஹிப்புர்ரஸூல் அஷ்ஷெய்குல் காமில்  அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹலரத் பாழில்நூரிஸித்தீகி  காதிரி காஹிரி
கத்தஸல்லாஹுஸிர்ரஹுல் அஸீஸ்

அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்.

            பூவுலக மக்கள் புண்ணிய வாழ்க்கைக்கு வழிகாட்டி, அவர்களை நெறிபடுத்தி நல்வாழ்வு வாழ வகை செய்திட வல்லான் அல்லாஹ் தன் வளமார்கருணையின் பொருட்டினால் நபிமார்களை வையகத்திற்கு அருளாய்த் தந்தான்.பேரருளாய்ப் பிறந்த பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுடைய வருகையோடு நபிமார்கள் என்ற தொடர் முற்றுப் பெறவும் …….

           தொடர்ந்து அவர்களின் வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆன்மீகத்தையும், ஏகத்துவத்தையும், எழிலார் இஸ்லாத்தின் இனிய நற்கருத்துக்களையும் அவனி மக்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் நெறி தவறிப்போகாமல் நல்வழிப்படுத்தவும், நீதமான வாழ்க்கை முறைகளை மேற்கொள்ளவும் செய்திட இறை நேயப் பெருமக்களை     அன்பளிப்பாக வழங்கினான் இறைவன்!
 

இறைநேசர்கள்:
   

         அல்லாஹ்வின்ஆணைகளையும், ரசூலுல்லாஹ்வின் போதனைகளையும் சிரமேற் கொண்டு சன்மார்க்க நெறி தவறாது ஷரீஅத் – தரீகத் – ஹகீகத் ஆகிய படித்தரங்களைக் கடந்து இறுதிக் கட்டமாக மஃரிபத் எனும் ஞானப்பேரமுதை மாந்தி மகிழ்ந்தவர்கள் தாம் இறைநேசப் பெருமக்கள்.

    உயர் மர்தபாவின் உச்சாணிக் கொம்பிலே கொலுவீற்றிருக்கும் இறை நேசர்களைக் குறித்து 'இறைவனுக்கு உவப்பானவர்கள் இவர்கள்! அந்தரங்க –பகிரங்க விஷயங்களைத் தெரிந்தவர்கள் இவர்கள் இறைவனது கண்ணாடிகள்.ஒவ்வொரு ஒலியும் நூஹ் நபியவர்களுடைய கப்பல் என அறிந்து கொள்க! இவர்களை உவந்து போற்றினால் நாசமெனும் ஜலப் பிரளயத்திலிருந்து நீ தப்பி விடுவாய்!' என்று மத்னவீ மணி மாலையில் ஞான மகான் அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
 

      பாரில் பல பொருட்கள் ஒன்று மற்றொன்றைச் சார்ந்து அதன் உதவியைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் ஒட்டி உறவாடி நிற்பதைக் காணலாம். வெப்பமும் தண்ணீரும் பூமிக்குத் தேவை. இவற்றினால்தான் பூமி செழிப்புடன் பூக்கிறது. காய்க்கிறது!

    மண்ணின் பசுமைக்கு வெயிலும், மழையும் தேவைப்படுவது போன்றே உலக மக்கள் நேர்வழி சென்றுய்ய நபிமார்களுடையவும், பின்னர் இறை நேசர்களுடையவும் தேவையினை எதிர் நோக்கி உள்ளனர்.

    அருளை வழங்குபவன் அல்லாஹ். ஆனால் அதனைப் படைப்பினங்களுக்குப் பங்கு வைத்து தருபவர் அண்ணல் நபியுல்லாஹ் அவர்களே! பின்னர் இப்பணி ஒலிமார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே தான் 'எனது உம்மத்துகளில் நாற்பது நபர்கள் நபி இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தை உடையவர்களாக என்றும் இருந்து வருவர்.இறைவன் அவர்களைக் கொண்டு மக்களின் பிணிகளைப் போக்குவான். மழை பொழிவிப்பான். அவர்களைக் கொண்டு தான் உலகோர்க்கு உதவிகள் புரியப்படும்' (நூல் : தப்ரானி) என நாயகமவர்கள் அறிவித்தனர்.

    நபி பெருமானுடைய நுபுவ்வத் எனும் பேரொளிப் பிழம்பை ஸஹாபாக்கள் நேரடியாக பெற்றார்கள். பின்னால் வந்த இறைநேசர்கள் நபிதோழர்களிடமிருந்து அந்த பேரொளியை பெற்றனர். நாம் ஒலிமார்களிட மிருந்து அதனைப் பெறுகின்றோம்.
 

       ஏனெனில் இறைத்        தோழர்கள் நுபுவத்தின்
ஜோதியினைப் பிரதிபலித்துக் காட்டுகின்ற கண்ணாடிகள். அதனற்றான் இறைக்காதலர்களது புனிதக் கரம் பற்றி பைஅத்து பெறுகின்ற பொதுமக்கள் அதனைப் பின்பற்றி தம் வாழ்க்கை முறைகளையும், வழிமுறைகளையும் அமைத்துக் கொண்டு அமல் செய்கின்ற போது நுபுவ்வத்தின் ஜோதியினைப் பெறுகின்றனர்.
 

    ஈமான், இஸ்லாம் பற்றி விளக்கம் தந்து நல்வழி காட்டுவோர் ஆலிம்கள். ஆலிம்களால் தெளிவாக்கம் செய்யப்பட்டஈமானைப்பாதுகாத்து இறையச்சமுடையோ

ராய் வாழ்வதற்கு பாதையமைத்துத் தருவோர் அவ்லியாக்கள்தான்!
  

       தொழுகையில் உடல் சுத்தம், இடம் சுத்தம், கிப்லாவை முன்னோக்குதல் ஈறாக இன்னபிற ஷர்த்துக்களையும், பர்ழுகளையும், சுன்னத்துகளையும் கற்றுத் தருகின்றனர் ஆலிம்கள்!
  

          ஆனால் தொழுகையின் போது உளத் தூய்மையாக இருக்க வேண்டுவது குறித்துக் கற்றுத் தருவோர் இறைநேசர்களன்றோ? கற்றுத் தருவதோட அதற்கான பக்குவ நிலையை ஊட்டுபவர்களும் அவர்களே!
  

         துரு ஏறிவிட்ட இரும்பை நெருப்பு உலையில்வைத்து துருவை அகற்றலாம். ஆனால் இருளால் சூழ்ந்து அக அறிவை இழந்துவிட்ட இதயத்தை என்ன செய்வது? அக்காரிருளை அகற்றிட இறைநேசர்தம் தோழமை அவசியம்.
   

           இறைநேயப் பெருமக்களின் சகவாசமும் அவர்களது அருட்நிறை பார்வையும் கண நேரத்தில் மனித மனங்களின் மருவினைப் போக்கி அகத்தெளிவினை அள்ளி வழங்கிய வரலாறுகள் ஏராளம்!

ஷெய்குனா ஹலரத்:
 
    இப்படி இறைவனால் மனுக்குலத்திற்கு கருணையாய் வழங்கப்பட்ட  இறைநேச         பெருமக்களுள்         பல
நூற்றுக்கணக்கானோர் பிறந்த – வளர்ந்த வாழ்ந்த பேரூர் காயல்பட்டணம்.
   

        பண்டைய காலம் முதற் கொண்டு வகையான வரலாற்றுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் காயல்பட்டணத்தில் தோன்றி மறைந்த இறைநேசர்களது பட்டியலைத் தயாரிப்பது என்றால் அதுவே மகத்தானதோர் பணியாக அமையும்.
   

         இப்பட்டியலில் சிறப்பானதோர் இடத்தினைப் பெற்று நிறைவானதோர் வாழ்வினை மேற்கொண்ட பெருந்தகைதான் நம் கண்ணியத்திற்குரிய அல்ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பர்ரஸூல் அல்லாமா அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல்காதிர் ஸூபி ஹலரத் கத்தஸ்ல்லாஹுஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள்!
  

      தமிழகம், கேரளம் மட்டுமின்றி ஈழத் திருநாட்டில்மற்றும் அன்னாரைத்தெரிந்தோரெல்லாம் கண்ணியத்தொடு – அன்பொடு 'ஸூபி ஹலரத்' என்று
அழைக்கப்பட்ட இப்பெருமகனார் -காயல்பட்டணத்தின் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு ஊ.யு.மு.அகமது முஹ்யித்தீன் – முஹம்மது இபுராஹீம் நாச்சி தம்பதியருக்கு கடைசிக் குழந்தையாகப் பிறந்தார்கள்.
 
ஷெய்குனா அவர்களின் வம்சப் பரம்பரை :
 
    வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வகையானவாழ்வில் ஒன்றாக இணைந்து அவர்களின் சுக துக்கங்களில் தோளோடு தோள் நின்ற இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் போற்றிப் புகழப்படுகின்ற பெருமகனார் செய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் 39 வது தலைமுறையில் பூவுலகம் பெற்றெடுத்த புனிதப் பெருமகனார் எங்கள் ஷெய்குனா அவர்கள.; அகத்துறை வென்ற அந்த ஆன்மீகப் பெருவள்ளலது வமிசப் பரம்பரைப் பட்டியல் இதோ :
 

1.செய்யிதினா அபுபக்கர் 2.அப்துல்லாஹ் 3.ஸஈது 4. ஸஃது 5.இஸ்மாயீல்6.ஈஸா 7.இல்யாஸ் 8.அப்துல் கரீம் 9.இப்ராஹீம் 10.ஹுசைன் 11.ஜாபிர்12.அஹ்மது 13.ஸாலிம் 14.ஸாலிஹ் 15.ஜகரிய்யா 16.அப்துல் கரீம் 17.மகுதூம் 18.ஹாஷிம் என்ற பெயரில் பிரபலமான உமர் 19.ஸுபைர் 20.ஹுஸைன் அப்துல்லாஹ் 21.முஹம்மது 22.ஷெய்கு மகுதூம் 23.முஹம்மது கில்ஜீ மிஸ்ரி காஹிரி 24.ஹிழ்று 25.ஷிஹாபுத்தீன் 26.அல்ஹாஜ்ஜுல் ஹரமைன் அஹ்மது 27.முஹம்மது 28.அஹ்மது 29.முகம்மது 30.மகுதூம் 31.அப்துல் காதிர் 32.அஹ்மது மீரான் சாஹிபு 33.மீரான் லெப்பை 34.அஹ்மது தம்பி 35.மணிப்பாட்டு மரைக்காயர் என்று அறியப்பட்ட முஹம்மது இஸ்மாயீல் மரைக்காயர் 36.மகுதூம் முகம்மது 37.முஹம்மது இஸ்மாயீல் 38.சின்ன அஹமது முஹ்யித்தீன் 39.ஷெய்குனா ஷெய்குல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் காதிரி காஹிரி.
 

ஷெய்குனா அவர்களின் கல்வி:
 
     ஷெய்குனா அவர்களை சிறப்பானதொரு ஹாபிழாக்கிப் பார்க்க வேண்டுமென்பது அன்னாரது பெற்றோர்களின் வேணவா. எனவே அவர்களுக்கு ஆரம்பக் கல்வியை உள்ளூர் உலமாப் பெருமக்களிடம் கற்றுக் கொடுத்த பின்னர், காயல்பட்டணத்திலேயே ஹிப்ழு மதரசாவில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். 
   

       ஆனால் ஷெய்குனா அவர்களின் அவா வேறு விதமாக அமைந்திருந்தது. ஊரில் ஹாபிள்களை விட ஆலிம்களுக்கே அதிக மதிப்பு இருப்பதை கவனித்து வந்த ஹலரத் அவர்களது இளம் மனது தாமும் ஒரு ஆலிமாகிட வேண்டும் என்பதிலேயே இலயித்திருந்ததால் ஹிப்ளில் அவர்களது முழுக் கவனமும் செல்லவில்லை.
  

         ஷெய்குனா அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துக் கொண்ட தந்தையார் அவர்களை ஓத வைக்க இணக்கம் தெரிவித்தார் ஆயினும் மகனார் வெளியூர் சென்று கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
  

        உள்ளூரில் இருக்கின்ற தரமிக்க ஆலிம்களிடம் கல்வி பயிலலாமெனக் கூறினர்.மட்டுமின்றி அந்நேரத்தில் இல்மு காயல்பட்டணத்தில் தான் இருக்கிறது மற்ற இடங்களில் இல்லை என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் எக்காரணத்தைக் கூறினாலும் ஷெய்குனா அவர்கள் தாம் வெளியூர் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் பின் வாங்கவில்லை. இக்காரணங்களால் அவர்களது ஹிப்ளு 8 ஜுஸ்வுகளுடன் நின்று போயிற்று!
  

         அந்நேரத்தில் காதிரிய்யா தரீகாவின் பிரபலமான ஷெய்காக விளங்கிய கண்ணியமிகு லியாவுல் ஹக் ஸூபி நாயகம் அவர்கள் ஹைதராபாத்திலிருந்து காயல்பட்டணம் வருகை தந்தனர். செய்யிது குடும்பத்தவரான அவர்கள் மகோன்னதம் மிக்க ஒரு இறைநேசர்.
  

        மக்கள் பலரும் தம் உள்ளக்கிடக்கைகளை அவர்களிடம் எடுத்துரைத்து நிவர்த்தி பெற்றுப் போவதைக் கவனித்து வந்த நம் ஷெய்குனா அவர்களும் தமது விருப்பத்தினை – வெளியூர் சென்று கல்வி கற்றிட கொண்டுள்ள அவாவினை அன்னாரிடம் கூறியபோது ஷெய்குனா அவர்களது கல்வித் தாகத்தினைப் புரிந்துக் கொண்ட அன்னார் உளம் பூரித்து ஷெய்குனா அவர்களது பெற்றோரிடமும் உறவினரிடமும் தாமே நிலைமையை எடுத்துரைத்து அவர்களின் ஒருங்கிணைந்த சம்மதத்தைப் பெற்றுத் தந்ததோடு ஊர் எல்லை வரை வந்து அன்போடு ஷெய்குனா அவர்களை உச்சி முகர்ந்து வழியனுப்பி வைத்தனர்.
  

          இதற்கு மத்தியில் இளைஞர் முதல் முதியோர்வரை பலதரப்பட்டோர் லியாவுல் ஹக் ஸூபி நாயகத்திடம் ஞான தீட்சை – பைஅத் பெற்றுச் செல்வதைக் கண்ட இளவல் ஷெய்குனா தமக்கும் பைஅத் தருமாறு வேண்டி நிற்க, அவர்கள் சொன்னார்கள் 'என்னை விட மகத்தான வேறொருவர் தங்களுக்கு அப்பெரும் பாக்கியத்தினை தந்தருள் புரிவார்கள். காலம் வரும் காத்திருங்கள்!'
   

        பிற்காலத்தில் ஹைதராபாத் வழங்கிய ஞானப் பெருவள்ளலிடம் ஷெய்குனா பைஅத்தும் கிலாபத்தும் பெறவிருக்கிறார்கள் என்பதை இப்படிச் சுட்டிக் காட்டினார்கள் லியாவுல் ஹக் ஸீபி நாயகமவர்கள்!
   

          தம் தோழராம் ஹஸன் மௌலானா என்பாருடன் கல்வி கற்றிடப் புறப்பட்டுச் சென்ற ஷெய்குனா சென்னை வந்து ஜமாலிய்யா அரபிக் கல்லூயில் சேர்ந்தார்கள். கண்ணியமிகு மதார் சாகிபு ஆலிம் அவர்கள் அப்போது அங்கே முதல்வராகப் பணியாற்றி வந்தார்கள்.
   

        ஷெய்குனா அவர்களது கல்வித் தாகம் மென்மேலும் அதிகரிக்கவே அங்கிருந்து பொதக்குடி வந்து அந்நூருல் முஹம்மதிய்யி அரபிக் கல்லூரியில்
சேர்ந்தார்கள். ஆஷிகுர் ரசூல், கன்சுத்தகாயிகு, ஷெய்குல் காமில் அப்துல் கரீம் குத்திஸ ஸிர்ருஹுஅவர்கள் அங்கே முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
  

         ஷெய்குனா அப்துல் கரீம் ஹலரத் அவர்களின் தனியன்புக்குப் பாத்திரமான மாணவராகத் திகழ்ந்தார்கள். கல்வி கற்கின்ற காலத்திலேயே அவர்கள் மிக்கத் திறமையும், ஒழுக்கமும, பெற்றவர்களாகவும், நற்குணமும், நல்லியல்புகளும் கைவரப் பெற்றவர்களாகவும் விளங்கி வந்ததோடு ஒவ்வொரு ஆண்டும் வகுப்பிலேயே முதல் மாணவராகவும் தேறினார்கள்.
  

          அக்காலத்தில் பொதக்குடி மதரசாவில் தஹ்ஸீல் வகுப்பில் தேறிய மாணவர்களுக்கு ஸனது வழங்கும் வழக்கமில்லை. ஆயினும் ஹிஜ்ரி 1345ல்அப்துல் கரீம் ஹலரத் திடீரென இறையடி சேர்ந்த பின்னர் ஸனது வழங்குதல் ஏற்படுத்தப்பட்டது.
    

         அதன்படி கல்லூரியின் பழைய மாணவரான ஷெய்குனா அவர்களுக்கு 1349ல் அப்போதைய கல்லூரி முதல்வர் முஹம்மது அப்துர்ரஹ்மான் இப்னு முஹம்மது ரஜப் ஆலிம் அவர்களால் மௌலவி ஆலிம் பாஸில் நூரி ஸனது வழங்கப்பட்டது.
 
அஹ்மது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் அவர்கள்:
 
          இலங்கை காத்தான் குடியில் முகம்மது தம்பி ஆலிம் ஹாஜியார் – மரியம் உம்மா ஆகியோரின் செல்வப் புதல்வராம் அகமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிம் அவர்கள் நம் ஷெய்குனா பொதக்குடி மதரசாவில் கல்வி பயிலச் சேர்ந்த மறு ஆண்டு பொதக்குடி வந்தார்கள். இருவரும் உற்ற தோழராயினர்.  ஷெய்குனாவை   விட மூத்தவ ராக இருந்தாலும் இருவரும் ஒத்த மனமுடையோராக – கல்வி ஆர்வம் மிக்கோராக – ஞானத்தை தேடும் ஆர்வலர்களாக – உற்ற நண்பர்களாக – சகோதரர்களாக வாழ்ந்தனர்.
 

   மேன்மக்களை மேன்மக்களே நன்கறிவர்! ஒரு இறைநேசப் பெருமகனாரை மற்றொரு இறைநேசரே நன்கறிவார் அகமியத்தைப் புரிந்துக் கொள்வார்!
  

      இருவரும் பிற்காலத்தில் ஒன்றாக சம்சியாபாத் சென்று ஞானப் பெருவேந்தர் முகம்மது அப்துல் காதிர் குத்திஸ ஸிர்ருஹுஅவர்களிடம் கிலாபத் பெற இருந்த காரணத்தினால் அல்லாஹ் இவ்விருவாதம் தம் மனதையும் ஒரே நோக்கில் செல்லக் கூடியதாக ஆக்கி வைத்தான் போலும்!
   

          அகமது மீரான் ஸூபி அவர்கள் 1930 ல் அருட்கவி அப்துர் ரஹ்மான் ஆலிம் அவர்களுடைய மகளார் செய்னம்பு உம்மா என்பாரை மணமுடித்து நல்லற வாழ்வு வாழ்ந்து 1952 அக்டோபர் 2ம் நாள் ஞாயிறு இசாவுக்குப் பின் இறையடி சேர்ந்தார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அவர்களது பொன்னுடலம் அவர்களது இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
   

       ஷெய்குனா பொதக்குடி மதராசாவில் ஓதி முடித்தாகிவிட்டது. தோழர் அகமது மீரான் ஸூபியவர்கள் ஓதி முடிக்க ஓராண்டு பாக்கி இருந்தது. தோழரை விட்டுப் பிரிய மனமில்லாததோடு காமில் வலி அப்துல் கரீம் ஹலரத் அவர்களிடம் தங்கி இருந்து வேண்டிய பணிவிடைகள் செய்து பாக்கியம் பெற்றிட வேண்டுமென்ற ஆசையும் நெஞ்சம் நிறைய இருந்தது. அத்தோட முஹ்யித்தீன் இப்னு அரபி (ரலியல்லாஹுஅன்ஹு) அவர்களுடைய ஞான விளக்கப் பெருநூல் புஸூஸுல் ஹிகமை அப்துல் கரீம் ஹலரத்திடமே ஓதிட வேண்டுமென்ற எண்ணமும் கொண்டிருந்தார்கள் ஷெய்குனா அவர்கள்!
   

         ஒரு ஞானவானின் நெஞ்சத்து எழுத்தை மற்றொரு ஞானவானால் படித்திடவா முடியாது? ஷெய்குனா அவர்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அப்துல் கரீம் ஹலரத் ஷெய்குனாவை தமது உதவியாளராக நியமித்துக் கொண்டு மதராசாவில் தாம் இல்லாத வேளைகளில் தமது பாடங்களை நடத்த அனுமதி கொடுத்து தமது அறையிலேயே அவர்களைத் தங்க வைத்துக் கொண்டார்கள். காமில் வலியின் அருகிலிருக்கும் பாக்கியத்தைப் பெரும் ளபேறாகக் கருதி அவர்களுக்கு ஊழியம் புரிவதிலும் அவர்களிடமிருந்து ஞான அமுதைப் பருகுவதிலும் பேரின்பம் கண்டார்கள் ஷெய்குனா.
 
ஹைதராபாத் ஸூபி ஹலரத் அவர்கள்:
 
    ஷெய்குனா அப்துல் கரீம் ஹலரத் அவர்களின் ஊழியத்தில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான் அப்துல் கரீம் ஹலரத்தின் உஸ்தாது சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது மதார் சாகிபு ஸூபி திடீரென இறைவனடி சேர்ந்து விட்ட செய்தியை அறிகின்ற அப்துல் கரீம் ஹலரத் ஷெய்குனாவுடன் சென்னை சென்று மதார் சாகிபு ஸூபியவர்களை ஸியாரத் செய்து விட்டு சென்னையில் தங்கி இருந்த இமாமுல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன் பஹ்ருல் ஹகாயிகு வத்தகாயிகு ரயீசுல் மஜாதீப் ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் குத்திஸ ஸிர்ருஹு அவர்களை கண்டு தமது மதரசாவிற்கு வருகை தந்திட அழைப்பு விடுத்தனர். இவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட அப்பெரு மகனார் பொதக்குடிக்கு வருகை தந்திட இசைந்தனர்.
   

        ஹைதராபாத் ஞானப் பெருமகான் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய நான்காவது கலீபா மட்டுமின்றி தமிழ் கூறும் நல்லுலகின் தலை சிறந்த பல பெரியார்களுக்கு பைஅத்து வழங்கி உள்ளனர். அன்னாரிடம் பைஅத்துப் பெற்று பாக்கியம் பெற்ற சிலகுறிபிடத்தக்கவர்கள்:
 

சென்னை ஜமாலிய்யா அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி மதார் சாகிபு ஆலிம் அவர்கள்
 வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் மௌலானா மௌலவி அப்துல் ஜப்பார் ஆலிம் அவர்கள்
 இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல் சாகிப்
 திண்டுக்கல் மௌலானா மௌலவி அமீர் பாட்சா ஆலிம் அவர்கள்
 தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை ஸ்தாபகர் தென்காசிமேடை முதலாளி அப்துர் ரஹ்மான் சாகிப்
தஞ்சை மாவட்டம் கொடிக்கால்பாளையம் அ.த.அப்துல் மஜீது ஸூபி அவர்கள்
   

         அல்லாமா அப்துல் ஜப்பார் ஆலிமவர்கள் பெரிய ஷெய்குனா அவர்களால் கேள்வி – பதில் வடிவில் எழுதப்பட்ட 'அல்ஹக்'என்ற உர்து நூலை அரபியில் மொழியாக்கம் செய்ததோடு அன்னாரைப் போற்றிப் புகழ்ந்து'அலா அய்யுஹ்ஷ் ஷெய்குல் வலீ………' என்று தொடங்கும் அரபு கஸீதா ஒன்றினை இயற்றினார்கள். அந்த கஸீதாவில் ஹைதராபாத் மெஞ்ஞானப் பெருவேந்தரைக் குறித்து –மேன்மைமிக்க ஷெய்கு வலியுல்லாஹ் அவர்களே! இக்கால மார்க்க அறிஞருள் நிகரற்ற சம்பூரண பிரகாசமுடைய சூரியனாகத் தாங்கள் இலங்குகின்றீர்கள். அகமியங்களுடைய ஞானப் பெருமான் தாங்கள். வலிமை நிறைந்த ரப்புடைய மழ்ஹர் தாங்கள்!
  

         ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி அவர்களுடைய திருப்பெயர் தாங்கி இருக்கிறீர்கள். எந்த அரசனும் பெரிய மனிதனும் சீமானும் தர இயலாத மாபெரும் பேரின்பப் பாக்கியங்களை எங்களுக்கு வழங்கி உள்ளீர்கள்.
  

       உங்களிடத்தில் ஒளலியாக்களுடைய ரூஹ்களெல்லாம் வருகின்றன! எனப் போற்றிப் பாடுகிறார்கள், அப்துல் ஜப்பார் ஹலரத்!
  

           ஷெய்கு படே சாகிபு எனும் குத்பு ஷைய்கு அஹ்மது பதுருத்தீன் அவர்கள் நமது ஞானப் பெரு வள்ளலுக்கு தமது சென்னை இல்லத்தில் ராஜோபசார விருந்தொன்று அளித்த போது தரையில் அன்னார் நடந்து வருவதற்காக விலை மிகுந்த துணி விரித்து வரவேற்பு நல்கியதோடு அவர்களை ஆரத்தழுவி, 'உங்களை கௌதாக்கி விட்டான்! உங்களை கௌதாக்கி விட்டான்!' என பரவேசத்தோடு கூறினார்கள்.
 
பைஅத்தும் கிலாபத்தும்
 
     'தற்காலத்தின் ஜுனைதுல் பக்தாதி!' என்று புகழப்பட்ட ஞான மகானைப் பற்றி கேள்வியுற்றிருந்த நம் ஷெய்குனா அவர்களைக் கண்ணாரக் கண்டு பைஅத்து பெற்றிட வேண்டுமென பேரார்வம் கொண்டிருந்தனர்.
  

        அவர்கள் பொதக்குடிக்கு வருகை தந்தபோது அன்னாரது வருகை குறித்து படே சாகிபு ஹலரத் அப்துல் கரீம் ஹலரத்தவர்களுக்கு முஹ்யித்தீன் வருகிறார். பலனடைந்து கொள்வீர்களாக! ஏன்று தகவல் கொடுத்தார்கள்.
  

         பொதக்குடி மதரசாவிற்கு வருகை தந்த அன்னாரை கண்ணியத்தோடு வரவேற்ற அப்துல் கரீம் ஹலரத் மாணவர்களுக்கு விடுமுறையளித்து மாணவர்களை அப்பேரின்ப ஞானப் பெரு வள்ளலிடம் முஸாபஹா செய்திடப்
பணித்தனர்.
  

         ஆனால் அம்மகான் தாமே முன்வந்து ஒவ்வொரு மாணவரிடமாக சென்று நம் ஷெய்குனாவிடம் வந்த போது உர்துவில் 'நீங்கள் ஹைதராபாத் வாருங்கள்'; என்று கூப்பிட்டார்கள். அகமது மீரான் ஸூபி வெள்ளி ஆலிமவர்களுக்கு உர்து தெரியாதென்பதை தமது ஞானப் பார்வையால் புரிந்துக் கொண்டு 'அதுரீதுல் மஜீஅ இலா ஹைதராபாத்!' எனக் கேட்கின்றனர். உளம் பூரித்த தோழர்கள் முழுமனதுடன் அவ்வழைப்பினை ஏற்றுக் கொண்டனர்.
  

        இந்நிகழ்ச்சியை நினைவு கூறுகின்ற ஷெய்குனா நான் அப்பெருமகனாரிடம் தனியாக உரையாட வேண்டுமென நினைத்திருந்தேன். அந்த எண்ணத்துடனேயே முஸாபஹா செய்தேன் அன்னாரும் என்னைஹைதராபாத்திற்கு வரும்படிச் சொன்னார்கள் என்பார்கள்.
  

           அவர்கள் ஹைதராபாத் சென்ற சிறிது காலத்திற்குப் பின்னர் ஷெய்குனா அவர்களும் தோழர் வெள்ளி ஆலிமவர்களுமாக 'நாங்கள் எப்போது தங்களின் –சன்னிதானத்திற்கு வர வேண்டு'மெனக் கேட்டுக் கடிதம் எழுதினர். 'இந்தக் கதவு எப்பொதும் திறந்தே இருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பதில் வந்தது.
  

           இருவரும் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். முன்பின் அறிமுகமில்லாத ஊரில் இருவரும் ரயிலை விட்டிறங்கி அங்கே நின்ற போலீஸ் ஒருவரிடம் ஹலரத் அவர்களது முகவரியைக் காட்டி வழிகேட்டனர். அவர்களை அவரே அழைத்துச் சென்றார்.
  

           ஹலரத் அவர்களின் இல்லத்தின் முன்னே நின்று குரல் கொடுத்தனர். அன்னார் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து 'கை கழுகி உள்ளே வாருங்கள்' என கூறி சென்றனர். இருவரும் கை கழுகி உள்ளே சென்றனர். அங்கோர் இன்ப அதிர்ச்சி!
  

           மூவருக்கு உணவு பரிமாறி வைக்கப்பட்டிருந்தது இரண்டு தட்டில் சோறு. ஒரு தட்டில் ரொட்டி. ஹைதராபாத் ஞான வள்ளல் ரொட்டிதான் உண்பார்கள். மூவரும் பசியாறினர்.
  

           அங்கே ஆறு மாதங்கள் வரை இருவரும் தங்கி இருந்து ஞான வாரிதியாய் விளங்கிய அந்த மெஞ்ஞான போதகரிடமிருந்து அள்ளக் குறையா ஞானப் பேரமுதை அருந்தி அருந்தி மகிழ்வுற்றனர்.
  

            விடை பெறும் காலம் வந்தது ஹலரத் அவர்கள் இருவருக்கும் பைஅத் கொடுத்ததோடு தமது கலீபாக்களாக இருவரையும் ஆசீர்வதித்து தொழில் வர்த்தகம் ஆகியவற்றைவிட இந்த ஞானப் பெருவழியை தேர்ந்தெடுத்து செயலாற்றுமாறு உபதேசித்து வழி அனுப்பி வைத்தனர்.
  

           நமது ஷெய்குனா அவர்களுக்கு ஹைதராபாத் ஹலரத் அவர்கள் காதிரிய்யா, நக்ஷபந்திய்யா, ரிபாஇய்யா, ஜிஷ்திய்யா, முஜத்திய்யா ஆகிய தரீகுகளின் ஜதுபுசுலூக்கு வழிகளில் பைஅத்தும் கிலாபத்தும் வழங்கி உள்ளனர்.
  

காதரிய்யாத் தரீகாவின் ஷெய்குமார்களில் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிலிருந்து 40-வது தலைமுறையிலும்,
  

 காதிரிய்யா அக்பரிய்யாவின் ஷெய்குமார்களில் நாயகமவர்களிடமிருந்து 35-வது தலைமுறையிலும்,  

 நக்ஷபக்திய்யா ஊலாவின் ஷெய்குமார்களில் நாயகமவர்களிடமிருந்து 33 –வது தலைமுறையிலும்,
  

நக்ஷபக்திய்யா தானியாவின் ஷெய்குமார்களில் நாயகமவர்களிடமிருந்து 33–வது தலைமுறையிலும் நமது ஷெய்குனா அவர்கள் வருகிறார்கள்.
 
திருமணம்:


 
 

   ஹிஜ்ரி 1349 ஜமாதுல் அவ்வல் பிறை 22 புதன் கிழமை (15-10-1930) அன்று ஷெய்குனா அவர்கள் தோல்சாப்பு முகம்மது அப்துல்லா நாச்சி என்ற பெண்ணரசியை மணம் புரிந்தனர். இம்மண விழா நிகழ்ச்சியில் ஷெய்குனா அவர்களின் ஞானத் தந்தை ஷெய்குனா ஹைதராபாத் ஸூபி ஹலரத் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். அப்போது அவர்கள் ஷெய்குனா அவர்களிடம் உங்களுக்கு இன்னொரு மாலை காத்திருக்கிறது என்றனர்.

           ஷெய்குனா அவர்களும் பெண்ணரசி அப்துல்லா நாச்சியவர்களும் கொண்ட இனிய இல்லற வாழ்வில் ஆண் மகவொன்றினைப் பெற்றெடுத்தனர். அவருக்குத் தம் தந்தையாரின் பெயரான அகமது முஹ்யித்தீன் என்ற பெயரினை இட்டு மகிழ்ந்தார்கள் ஷெய்குனா அவர்கள்!

           1932ல் முதல் மனைவி இறையடி சேர்ந்துவிடவே தமது குருநாதருடைய முன்னறிவிப்பின் படி இரண்டாவதாக தோல்சாப்பு மகுதூம் பாத்திமா எனும் மாதர்கரசியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டனர். 

          இவர்களுக்கு முகம்மது அப்துல்லா நாச்சி முகம்மது இப்ராஹீம் நாச்சி முகம்மது பாத்திமா என்று மூன்று பெண் மக்கள் பிறந்தனா. இவர்களை முறையே கத்தீபு ஆ.ளு.அகமது முஹ்யித்தீன் மௌலவி M.M.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி O.V.முஹயித்தீன் தம்பி ஆகியோர் மணம் முடித்துள்ளனர்.

           பல்வேறு பகுதிகளில் இருந்துக் கொண்டு ஷெய்குனா அவர்கள் விட்டுச்சென்ற பணியினை சிறப்புற ஆற்றிவரும் அன்னாரின் கலீபாக்களுள் ஒருவராகத் திகழுகின்றார்கள். ஷெய்குனா அவர்களின் இரண்டாவது மருகர் மௌலவி எம்.எம்.செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள்!
(ஷெய்குனா அவர்களின் ஏகப் புதல்வர் அஹ்மது முஹிய்யித்தீன் அவர்கள் 24-2-1983வியாழக்கிழமை இரவு திடீரென தாறுல் பகாவின் சுந்தர வாழ்வினை ஏற்றனர். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அவரது பிழைகள் பொறுத்து சுவனப் பெருவாழ்வினைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்)
 
கல்வத்:
 
      ஷெய்குனா அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வியாபாரங்கள் செய்தனர்.ஆரம்பத்தில் அவை மிக நன்றாக செழிப்போடு நடந்து வரும். ஆனால் சீக்கிரமே அவை பயனளிக்காமல் போய்விடும். இச்சூழ்நிலையில் அவர்களுடைய இரண்டாவது திருமணமும் முடிகிறது. 

      வியாபாரங்களில் தொடர்ந்து நஷ்டமும் அதனால் மன நிம்மதியும் இழக்கவே வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தமது ஆசானின் உபதேசப்படி ஞாலமக்களுக்கு ஞானம் பயிறு;றுவிக்க அந்த ஞானப்பிதா தன் பேரொளிப் பார்வையினைத் திருப்பியது. அகத்துறை துலக்கும் இந்த ஆன்மீகப் பணியிலேயேஅவர்கள் தம் வாழ்வு முழுவதையும் செலவிட்டனர்  

          அதற்கு முன்னோடியாக கல்வத்-தனித்திருந்து இறையோனை திக்று செய்வதற்காகவும் தன் ஆன்மீகச் சகோதரர் இலங்கை அட்டாளச்சேனை அகமது மீரான் ஸூபி அவர்களைச் சந்திப்பத்ற்காகவும் 1946ம் ஆண்டுஇலங்கை சென்றார்கள்.      அப்போது          அகமது        மீரான் ஸூபியவர்கள் கிராங்குளம் எனுமிடத்திலுள்ள தோட்டத்தில் கல்வத் இருப்பதையறிந்து தாமும் அங்கு சென்று இருவருமாக ஒன்றரை மாதங்கள் வரை கல்வத்தில் இருந்தனர். பின் காத்தான்குடி, ஏறாவூர், கொழும்பு முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு காயல்பட்டினம் வந்தனர்.

          பேரின்பத்தைத் தேடி அலைகின்ற உள்ளத்திற்கு உலகத்துச் சிற்றின்பங்கள் எம்மாத்திரம்? ஷெய்குனா இறைதியானத்திலேயே தம் முழுநேரத்தையும் செலவிட்டனர். ஊரில் அவர்களுக்கு முழுநேரமும் தம்மை மறந்த நிலையில் தானெனும் அன்னியத்தை விட்டொழித்த நிலையில் ஹக்கைத் தேடுகின்ற பரமானத்த நிலையில் மூழ்கிப் போக சந்தர்ப்பம் சரியாக வாய்க்காததால் ஊராரிடமோ குடும்பத்தாரிடமோ ஏதும் சொல்லிக் கொள்ளாமல் தனிவழி புறப்பட்டுப் போயினர்.

      தன்னந்தனியராகப் புறப்பட்டுச் சென்ற அத்தகமையாளர் தஞ்சை மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் இருந்த தமது ஆத்மீகச் சகோதரர் அ.த.அப்துல் மஜீது ஸூபியவர்களிடம் வந்து சேர்ந்து அவர்களுடைய தோட்டத்திலேயே சில காலம் கல்வத்தில் இருந்தார்கள். 

      பின்னர் மாதிஹுர் ரஸுல் ஷெய்கு சதகக்கதுல்லாஹ் அப்பா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹலரத் மீக்காயீல் அலைஹிவஸல்லம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியதும் கல்லும் கசிந்துருக உரையாற்றியதுமான காயல்பட்டணம் இரட்டைக்குளம் பள்ளிவாசலில் ஓராண்டு காலம் கல்வத் இருந்தார்கள். 

           1949ல் மீண்டும் ஷெய்குனா அவர்கள் இலங்கை சென்று சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலில் சில மாதங்கள் இமாமத் பணியினை ஏற்று செவ்வனே செயலாற்றி வந்தனர். ஆயினும் சுதந்திரமாக இறைவனைத் தியானிப்பதற்கும் மக்களுக்கு ஞானபோத விளக்கம் செய்வதற்கும் இப்பணி தடையாக இருப்பதாகத் தோன்றவே அப்பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மெஞ்ஞானப் போதங்களை அள்ளி வழங்கி மாசு படிந்த உள்ளங்களை சுத்தப்படுத்தி ஆன்மீக ஒளியேற்றி வைத்தார்கள்.
 
முராகபா பற்றிய விளக்கம்:
 
    பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இயற்றும் தவநிலையான முராகபா மூலம் பதவி – இறை சன்னிதானத்தில் உயர் மர்தபாவினை ஆன்றோர்கள் பெற்றனர். உயர்வுக்குரிய – உயர்வைப் பெற்றுத் தருகிற இந்த முராகபாவை எப்படிச் செய்ய வேண்டும்? என்பது பற்றி ஷெய்குனா அவர்கள் தமது ஸில்ஸிலாவில் முராகபா என்ற பகுதியில் மிகத் தெளிவாக கீழ்கண்டவாறு சொல்லித் தருகிறார்கள்.
  

         தாலிபு அதிக பசி, தாகம் இல்லாமலும் வயிறு நிரம்பாலும் இருக்கும் போது ஓசைகளற்ற தனித்த இடத்தில் அமர்ந்து (இரவின் மூன்றில் இரு பகுதி கழிந்த பின் ஓசைகள் அடங்கிவிடும். எனவே இந்த நேரத்தைப் பயன்படுத்துவது சிறப்பு) கண்ணைப் பொத்தி இடது மார்புக்குக் கீழே இருக்கிற இதயக் கமலத்தை மனக்கண்ணால் கூர்ந்து நோக்கி அல்லாஹ் அல்லாஹ் என மனதால் சொல்ல வேண்டும். தூக்கம் வருமாயின் வாயாலும் கூறலாம்.
  

         அல்லாஹ் என்ற வார்த்தை, மூச்சு வருவது போவது எத்தனை தடவைகள் என்பவற்றில் சிந்தனையை செலுத்தக் கூடாது.
  

          இவ்வாறு முழு வைராக்கியத்துடன் செய்யச் செய்ய தன்னை மறந்து உணர்வற்று ஸ்தம்பித்துப் போகும். இந்நிலைதான் முராகபா – சமாதி நிலை!
  

          இந்நிலைக்குப் பின்னர் தான் முஷாஹதா – காட்சி ஏற்படும். முஷாஹதா பெரும் முயற்சிக்குப் பின்னர் தான் ஏற்படும். முயற்சி இல்லாமல் காட்சி நிலை ஏற்படாது. முடிந்தவரை அதிக நேரத்தை திக்றில் செலவழிக்க வேண்டும். குறைந்தது 15 நிமிட நேரமாவது திக்றுச் செய்ய வேண்டும்.
   

           இரண்டாவது தன்னை மறப்பது, இதற்கு தனது எல்லா நிலைகளிலும் உட்காரும்போதும், நிற்கும்போதும், தூங்கும்போதும், குடிக்கும்போதும், புசிக்கும் போதும் மற்ற வேலைகளை செய்யும் போதும் தன் இயக்கத்தை தியானத்தின்பால் திருப்பிவிட வேண்டும்.
   

           தான் செய்யும் வேலைகளில் மனதை முழுமூச்சாக செலுத்தி விட்டால் பின்னர் தனித்திருந்து திக்று செய்கின்றபோது சிந்தனை அந்த வேலைகளிலேயே இழுபட்டுவிடும்.
   

            உலக சம்பந்தமான எத்தொழிலில் ஈடுபட்டாலும் இறைவனின் எண்ணத்திலேயே இருக்கிற மகான்களைக் குறித்து 'வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் அவர்களை அல்லாஹ்வின் நினைப்பை விட்டு பராக்காக்காது' என்று இறைவன் புகழுகின்றான். முராகபவின் நிலைபற்றி மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் ஷெய்குனா அவர்கள் தருகிற விளக்கமிது!
  

           1963- ம் ஆண்டு ஷெய்குனா அவர்கள் இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ்ஜினை காயல்பட்டணத்திலிருந்து சென்று மிகச் சிறப்புடன் நிறைவேற்றி வந்தார்கள்.
 
ஞான வாரிதி தந்த ஆன்மராக நூல்கள்:
 
          ஷெய்குனா அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டுவது போன்று மனிதன் ஒரு கண்ணாடியைப் போன்றவன். கண்ணாடியில் அழுக்கு படிந்து விட்டால் பார்ப்பவரின் உருவத்தை அதில் காண இயலாது. கண்ணாடியில் அழுக்கு இல்லாமல் கண்ணாடி என்ற கோலமும் மறைய வேண்டும். கோலம் மறைகிற போது கோலத்தை மறக்கின்றபோது உருவம் தெளிவாகத் தெரியும்.
   

           அதுபோன்று மனிதனுடைய மனதில் தான் என்ற அழுக்கு அகம்பாவ எண்ணம் வேரூன்றி நிற்பது வரை – தான் என்ற நினைப்பு நிறைந்திருப்பது வரை இறைவன் அந்த இதயத்தில் வெயிப்பட மாட்டான். ஆதம் நபியை கலீபாவாக தேர்ந்தெடுத்த இறைவன் அவர்களில் தன் அஸ்மாக்களை வெளிப்படுத்தியது போன்று அதற்கான அருகதையோடு மக்களைப் படைத்துள்ளான். உள்ளே இருக்கின்ற இத்தன்மைகள் வெளியே வந்து விடுமானால் அதுதான் முக்தி – சம்பூரணம்.
  

            தான் என்ற எண்ணம் இல்லாமல் போய் விடுகின்ற போது இறைவன்பால் இவன் நெருங்கிவிட்டான் எனப் பொருள். அல்லாஹ்வின் சமூகத்தில் சென்றான் என்பது அவனது அஸ்மாக்கள் அவனிடத்தில் வெளியாக இவன் லாயக்கானவன் ஆகிவிட்டான் என்று பொருள். இப்போது இவர் முக்தி பெற்றார்.
  

              இப்படி தத்துவ முத்துக்களை பாமரர்களும் புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் தெளிவாக வாரித் தந்த ஷெய்குனா அவர்கள் ஞானப் பேரமுதை அருந்தி மகிழ அற்புதமான ஞான நூற்கள் பலவற்றை எழுதியுள்ளார்கள். ஷெய்குனா அவர்கள் எழுதிய ஆன்ம நூற்கள் அக இருள் போக்கி அறிவொளி நல்கும் அற்புதமான நூற்களாகும். அவைகளாவன:
 
1. அத்துஹ்பத்துல் முர்ஸலா 2. அஸ்ஸுலூக்
3. ஞான தீபம் 4. அல்ஙக் 5.அத்தகாயிகு
6. அஸ்ராருல் கல்வத் – கல்வத்தின் ரகசியங்கள்
7. அகமியக்கண்ணாடி 8. கலிமத்துல் ஹக் 9. அல்ஹக் (கேள்வி-பதில்)
 
         ஷெய்குனா அவர்கள் தம்மிடம் பைஅத்துப் பெறுவோருக்கு சில உபதேசங்கள் செய்வார்கள். அந்த உபதேச ரத்தினங்கள் அவர்களால் வழங்கப் பெறுகின்ற அஸ்ஸில்ஸிலத்துல் அலிய்யதுல் காதிரிய்யா வெனும் ஸில்ஸிலா கிதாபிலும் காணக் கிடைக்கிறது. அவை:
 

1. அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும்.
2. ஷரீத்தின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுபட வேண்டும்
3. தரீகத்தினுடைய ஒழுக்கங்களைப் பேண வேண்டும்
4. சுன்னத் ஜமாஅத்தின் கொள்கைகளுக்கு மாறுபட்ட கொள்கைகளைவிட்டு விடுவதோடு, ஜனங்கள்பால் கெட்ட எண்ணம், கபடம், பொறாமைமுதலிய தீய குணங்களைவிட்டு மனத்தூய்மையாக இருக்க வேண்டும்.
5. எல்லோரையும் விட தன்னைத் தாழ்வாகக் கருத வேண்டும்.
6. ஈகை பரோபகாரத்தைக் கடை பிடிக்க வேண்டும்.
 'நான் அல்லாஹ்வின்பால் இரவில் தொழுததாலும்,  பகலில் நோன்பு வைத்ததாலும், கல்வியைக் கற்று கொடுத்ததாலும் சேர்ந்து விடவில்லை. எனினும் ஈகையும் தாழ்மையும் மனத் தூய்மையும் தான் என்னை இறைவன்பால் இணைத்தது' என்று ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றனர்.
7. பித்அத்காரர்கள், அவ்லியாக்களை தரீக்காக்களைப் பற்றி குறைவாகப் பேசுபவர்கள், கெட்டகுணங்களை உடையோர் ஆகியவரோடு வெளிரங்கத்தில் கூட நட்புக் கொள்ளக் கூடாது
8. ஷெய்கின் பேரிலுண்டான முஹப்பத்தில் மூழ்க வேண்டும். முரீது ஜெயம் பெறுவதற்கு அடையாளம் மற்றவர்களைவிட தன் ஷெய்கைத் தெரிந்து அவரை நேசிப்பதும் அவர் கூறுவதை மனமுவந்து கேட்டு நடப்பதும் அவருடன் அவரது எல்லாக் காரியங்களிலும் இணக்கமாக இருப்பதும் வேண்டும்.
9. நற்குணங்களைக் கொண்டு பயன் பெறுவதற்காக கல்பைச் சுத்தமாக்கமுயற்சிக்க வேண்டும். எல்லா சகோதரர்கள் பேரிலும் பொதுவாகவும் நமது தரீகா சகோதரர்களின் பேரில் குறிப்பாகவும் நேசம் வைக்க வேண்டும்.
 
ஷெய்குனா அவர்களின் கொள்கைப் போர்:
 
    ஷெய்குனா அவர்கள் தமது குருநாதரின் வழியைப் பின்பற்றி வழிகேடார்களுக்கும் குழப்பக் கொள்கை படைத்தோருக்கும் ஒரு பெரும் சவாலாகவே எப்போதும் விளங்கி வந்துள்ளார்கள். தீனை விற்றுப் பிழைக்கும் வகையற்றோரின் முகமூடி கிழித்துக் கொள்ளச் செய்வதில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் அவர்கள் செய்த பணி மகத்தானது! மறுக்க முடியாதது!
   

      ஸூபி ஹலரத் என்ற பெயரைக் கேட்டதும் தமிழகத்திலும் சரி. ஈழத்திலும் சரி. வஹ்ஹாபிகள், ஜமாஅத்தே இஸ்லாமிகள், தப்லீகர்கள் போன்ற இன்ன பிற கொள்கைக்காரர்கள் நடுங்கி வாய் பொத்திய வரலாறுகள் ஏராளம் உண்டு!
   

           கபட வேட தாரிகளின் கூடாரங்களை கதிகலங்கச் செய்த ஷெய்குனா அவர்கள் மீது காழ்ப்பு கொண்ட குறைமதியாளர்கள் அவ்வப்போது ஏவிய கேள்விக் கணைகள் சொல்லம்புகள் ஆகியவற்றை முனை மழுங்கச் செய்ததோடு சில அறைகுறை மேதாவிகள் சொரிந்த இழிமொழிகளையும் தாங்கிக் கொண்டு தம் கருமத்தில் கண்ணாயிருந்தார்கள் எங்கள் கண்ணியத்திற்குரிய ஷெய்குனா அவர்கள்!
   

      இப்பணிக்காகவும், இறை தியானத்திற்காகவும், இலங்கையின் பல்வேறு இடங்களிலும் காயல்பட்டிணம், தூத்துக்குடி, மேலப்பாளையம்,கேரளத்தின்பீமாபள்ளி மற்றும் பல பகுதிகளிலும் ஹிஸ்புல்லாஹ் ஸபை ஸூபி மன்ஸில் என்ற பெயரில் ஒரு அமைப்பினை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படவைத்தர்கள்.
  

         தமிழ் கூறும் தீன்குலப் பெருமக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளையும்> மாற்றாரின் குழப்ப வாதங்களையும் தெளிவாகத் தெரிந்துக் கொண்டு செயல்பட – அதள் மூலமாக ஈருலக நல்வாழ்வினையும் பெற்றிட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் பல கொள்கை விளக்க நூற்களையும் ஷெய்குனா எழுதினார்கள். அவற்றுள் குறிப்பிடத் தக்க நூற்கள்:
 

1. இன்ஹாருல் ஹக் – சத்தியப் பிரகடனம்2. உலமாக்களின் உண்மை பத்வா3. அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள்4. காதியானி – தேவ்பந்த் சம்பாசனை 5. தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்6. சுவர்க்க நகைகளா? அல்ல! அது நரக விலங்குகள் 7. தன்னறிவில்லா தக்க பதிலுக்கு தகுந்த விதமாக தலையில்தட்டு8. மவ்தூதி சாகிபும் அவரது ஜமாஅத்தே அஸ்லாமி இயக்கமும்9. அல்முஹன்னதின் அண்டப் புழுகு10. தப்லீக் என்றால் என்ன? 11. புலியைக் கண்டு ஓட்டம்
(மேற்கண்ட ஞான       விளக்க கொள்கை        விளக்க
நூற்களில் பல வெளிவந்து விட்டன. சில இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவர உள்ளன. நூற்கள் தேவைப்படுவோர் ஹிஸ்புல்லாஹ் ஸபை – ஸூபி மன்ஸில் குத்துக்கல் தெரு, காயல்பட்டணம். என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.)
 
மறைவு:
 
          இறுதி வரை எந்தவொரு தனிமனிதனுக்கும் சரி, சக்திக்கும் சரி பணியாமல் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவோ அல்லது பின் வாங்கவோ செய்யாமல் இழி மொழிகளை – சுடுசொற்களை கேட்டு முகம் சுளிக்காமல் சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களால் வகுத்துத் தரப்பட்ட நேர்வழியில் தீரத்தோடு சென்ற – வீரத்தோடு போதித்த கொள்கை முரசம் குணங்குன்று எங்கள் நேசத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாமா ஷெய்குல் காமில் ஷெய்குனா ஹலரத் ஹிஜ்ரி 1402 புனித ரமாலான் பிறை 24 வெள்ளிக்கிழமை சுப்ஹுக்கு சற்று முன்னர் 16-7-1982 அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த நேரத்திலும்கூட நேசமிக்க முரீதீன்கள் பலர் கேட்டுக் கொண்ட போதும் அன்னார் ஒத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நோன்பு வைத்து வந்த நிலையிலேயே எல்லாம் வல்லவனாம் ஏக இறையோன் அல்லாஹுவின் அன்பழைப்பினை ஏற்று இம்மை வாழ்வினை முடித்துக்கொண்டு மறுஉலகப் பெரு வாழ்வினைத் தொடங்கினார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
    

           வழிகேடர்களுக்கு சிம்ம சொப்பமாக விளங்கிய ஷெய்குனா அவர்கள்எண்பது ஆண்டு காலமாக பாரில் வாழ்ந்திருந்து தீன் சேவையாற்றினார்கள்.
    

         ஒரு பெரும் குழுவினர் செய்ய வேண்டிய மாபெரும் சேவையினை தனியொரு மனிதராக நின்று அவர்கள் ஆற்றினார்கள். அப்பெருமகனாரின் தீரமிகு சேவை மகத்தானது மட்டுமல்ல!வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதுமாகும்.
   

          தள்ளாத வயதிலும் தளராத மனத் துணிவோடு புனித இஸ்லாத்தின் நேரான பாதையை சீராக போதித்த ஷெய்குனா அவர்களது பொன்னுடலத்தை தாங்கி நிற்கும் பாக்கியத்தை கொழும்பு குப்பியாவத்தை மையவாடி பெற்றுள்ளது. அன்றாடம் அந்த புனித மிகு அடக்கவிடத்தினில் கூடுகின்ற ஜனத்திரள் அவர்களது ஆன்மீக வித்தையின் அற்புத்ததினை படம் பிடித்து காட்டுகிறது!
 
எளிய வாழ்வு வாழ்ந்த எங்கள் ஷெய்குனா:
 
         நாடறிந்த ஞான மகானாக வாழ்ந்த ஷெய்குனா அவர்களிடம் ஒரு போதினிலும் சிறிதளவு கூட படாடோபம் இருந்ததில்லை. பெருமையை, விளம்பரத்தை அவர்கள் விரும்பியதுமில்லை.வெள்ளை அல்லது வெள்ளையில் கோடுபோட்ட கைலி ஒரு பனியன, மேலே ஒரு ஜிப்பா, ஒரு துருக்கித் தொப்பி,அதே நிறத்தில் ஒரு சால்வை! இவைகள் தான் அவர்களுடைய உடைகள். எங்கும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த உடைகளுடனும், புன்னகை அரும்பி சாந்த ஒளி முகத்துடனும் தான் மகோன்னதமிக்க அம்மனிதருள் மாணிக்கத்தை கொஞ்சம் கூட அகந்தையோ, ஆணவமோ அற்ற ஞான வள்ளலை இனிய குணங்களில் இமயமாய் உயர்ந்து நின்ற எங்கள் ஷெய்குனா அவர்களை காணலாம்.


   

         ஒரு பெரும் மகானை சந்திக்கச் செல்கின்றோம் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஷெய்குனா அவர்களைச் சந்திக்க வருவோர் அன்னாரின் எளிமைத் தோற்றத்தையும் வயது வித்தியாசங்களையோ ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டையோ பாராமல் எல்லோருடனும் கனிவு ததும்ப இனிமை நிறைய உரையாடுகின்ற, போதனை புரிகின்ற பாங்கை மன விசாலத்தைக் கண்டு அதிசயத்துப் போய் விடுவார்!
   

            கொழும்பில் அவர்கள் தங்குமிடத்திற்குச் சென்றால் மிகத் தெளிவாக அன்னாரது எளிய வாழ்வு தெரிய வரும். ஒரு சிறிய அறை! அதனுள் ஒருமூலையில் இரண்டொரு கைலிகள் ஜிப்பாக்கள் கயிற்றில் தொங்கும். சிலபாய்கள் விரிக்கப்பட்டு ஒரு ஓரத்தில் இரண்டு சிறு தலையணைகள் அறையின் ஒரு புறத்தில் ஏராளமான கிதாபுகள்! இவைதான் அவர்களுடைய சொத்து!
   

           எப்போதும் கிதாபு பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது வருகை தருவோருக்கு ஞான விளக்கங்கள்> கொள்கை விளக்கங்களைப் போதிப்பதும் அவர்களுடைய சந்தேகங்களுக்கு அறிவுப் பூர்வமான – ஆதாரங்களைத் தருவதுமாகவே அவர்களைக் காணலாம்.
 
இலங்கை ஏட்டின் புகழாரம்:
 
     இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் நாளேடான தினகரன் 'ஆலமுல்இஸ்லாம்' பகுதியில் ஷெய்குனா அவர்கள் மறைந்த நாற்பதாம் நாள் கத்முல் குர்ஆன் விழாவினையொட்டி சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டது.அக்கட்டுரையில் ஈழத்தில் ஷெய்குனா அவர்கள் ஆற்றிய அரும் பணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் சுருக்கம்இதோ:
    

        'பஸ்அலூ அஹ்லத் திக்ரி இன்குன்தும் லா     தஃலமூன்'; என்ற இறை வசனம் நீங்கள் அறியாதவராக இருந்தால் இறைதியான சிந்தையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வீர்களாக! என்ற பொருள் தருவதை உணர்ந்த எண்ணற்ற முஸ்லிம்களால் 'ஷெய்க்'; என்றும் 'ஸூபிஹலரத்' என்றும் அழைக்கப்பட்ட பெரியார் மௌலானா மௌலவி அல் ஆலிமுல் பாஜில் அல்ஹாஜ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகி காதிரி காஹிரி நக்ஷபந்தி அவர்கள்!
   

      தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு முன்னைய காலங்களில் சன்மார்க்க விஜயம் செய்து இஸ்லாமிய சமயப் பணியாற்றி இந்த நாட்டில் இஸ்லாமிய உணர்வு தழைத்தோங்க வழிகோலிய மார்க்க உலமாக்களை நாம் மறக்க முடியாது. அத்தகைய சாலிஹான சமயப் பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இந்த ஸூபி ஹஸரத் குறிப்பிடத் தகுந்த ஒருவராவார்.

   

            தற்காலத்தில் நம்மவர் நடுவே இஸ்லாமிய சமயப் பணியாற்றி மெஞ்ஞான வழியின்பால் இஸ்லாமிய இதயங்களை ஈர்த்து சமய உணர்வு பேரின்பமாகப் பெருகியோட வழி சமைத்து நம்மவர் நடுவே வாழ்ந்து மறைந்தவர் இந்த ஸூபி ஹஸரத்தாகும்.
   

           நம் நாட்டு அரசியலில் பங்கேற்றுள்ள சகல கட்சிகளையும் சார்ந்த முஸ்லிம் தலைவர்கள் உட்பட நம் இலங்கை சமுதாயத்தின் சகல துறைகளையும் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் சாதாரணமானவர்கள் என்று பலர் இப்பெரியாரின் மார்க்க உபன்னியாச பயானில் ஈர்க்கப்பட்டு இந்த ஷெய்கிடம் முரீது பெற்று ஞான சிஷ்யர்களாகத் திகழ்வதை மறுக்க முடியாது. மேமன்பாய் சமூகத்து சகோதரர்கள் இப்பெரியாரை 'பீர்பாபா' என்று பேருவகையுடன் அழைக்குமளவிற்கு அவர்களிடம் இப்பெரியாருக்கு பெரு மதிப்பு இருந்தது.
    

           தப்லீக் என்றால் என்ன? தப்லீகின் தாத்பரியம் யாது? அதன் ஸ்தாபகர் யார்? ஸ்தாபகரின் கொள்கை யாது? நபி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தப்லீக் யாது? அதற்கும் இதற்குமுள்ள வேறுபாடுகள் யாவை? என்பன போன்ற வினாக்களுக்கு மிகத் துணிவாகவும் ஆதாரப்பூர்வமான நிறுவுதல்களுடனும் விளக்கம் தந்த ஒரே பெரியார் இந்த ஸூபி ஹஸ்ரத்தான் என்றால் அதை விருப்பு வெறுப்பற்ற விஷயம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.
    

            இவர் தன் முரீதுகளுக்கு வழங்கி வந்த ஞானப் பயிற்சி சொல்லுந்தரமன்று. வாராவாரம் ஹிஸ்புல்லாஹ் ஸபையினர் நாடெங்குமுள்ள ஸூபி மன்ஸில்களில் நடத்தி வரும் ராத்திபு – திக்று மஜ்லிஸ்கள் பல நூறு இதயங்களை ஞான வழியின்பால் ஈர்த்து முரீதீன்களாக்கி வருவது குறிப்பிடத் தக்க அம்சமேயாகும்!
ஷெய்குனா அவர்களைக் குறித்து இலங்கை ஏடு சூட்டியுள்ள புகழாரம் இது!
 
   உண்மையாம் மார்க்கத்தின் தூய கொள்கையெனும் வித்துக்களை சமுதாய மக்கள் தம் உள்ளப் பரப்பில் விதைத்து செழித்து வளர வைத்து உயரிய வாழ்வு ஈருலகிலும் பெறத்தக்க வழி சமைத்துத் தந்த – மாறுபட்ட கொள்கைகளில் வேறுபட்டவர்களின் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு சுட்டிக் காட்டி – அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகிய பாதையினை சிறப்பாக விளக்கித் தந்த எங்கள் ஷெய்குனா 
  

   சத்தியத்தின் பேரொளியாய் நின்றுலவி
   சகலோர்க்கும் நல்வழி புகட்டிய
   சத்தான சன்மார்க்க சீலர்
   ஷரகின் வழி நின்ற தீரர்.
  

      இன்று புற வாழ்வில் நம்முடன் இல்லை! ஆயினும் மகோன்னதம் மிக்க அந்த மாமேதை அவர்களால் வகுத்துத் தரப்பட்ட நெறி முறைகள் நம் முன் இருக்கின்றன!
 

பூ ரத மனதில் புகழ் இறை
பொங்கிய அருட் சுனையை
நா ரதம் ஏந்தி
நயமுடன் தந்தவரே!
சாந்தமும் சத்திய வேத நன்னூலின்
சாறும் கலந்ததனை
எமக்கீந்தவரே!
  

           எம் இனிய ஷெய்குனா! நுங்கள் வழியில் அயராது நாங்கள் உழைத்துய்ய எல்லா அருளும் பெற்றிட வல்லான் இறையிடம் உங்களை வஸீலாவாக்கி வேண்டுகிறோம்!
  

         அருளாளன் அல்லாஹ் ஷெய்குனா அவர்களின் பொருட்டினால் நம் பிழைகள் பொறுத்து வகையான வாழ்வினை ஈருலகிலும் ஈந்தருள் புரிவானாக! ஆமீன்.

ஷெய்குனா அவர்களின் கலீபாக்கள்:-

1. மௌலானா மௌலவி அல்ஹாஜ்  S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி அவர்கள்

2. மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா  தங்கள் அவர்கள்( இவர்கள் மறைந்து விட்டார்கள்)

3.  மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி M.M. செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி அவர்கள்

4.  மௌலானா மௌலவி  H.N. ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் அவர்கள்

5. மௌலானா மௌலவி ஹனீபா ஆலிம்(இலங்கை) அவர்கள்( இவர்கள் மறைந்து விட்டார்கள்)


ஆகியோரை தங்களது கலீபாக்களாக நியமித்துச் சென்றார்கள்.

Is Noorie Sha Thareekat against Sunnat Jamat? நூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும்!

நூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும்!

        தமிழ்நாட்டில் சுமார் 1974ம் ஆண்டு வாக்கில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரிலிருந்து உருது மொழியில் பாண்டித்துவம் பெற்ற நூரி ஷாஹ் என்ற ஹெட் கான்ஸ்டபிள் ஒருவர் தமிழ்நாட்டிற்கு தரீகா ஒன்றை அறிமுகம் செய்து வைக்கிறார். அததுடன் கேரளா மாநிலத்திற்கும் சென்று தமது தரீகாவை பரப்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தமது தரீகாவை பரப்பினார். இவர் பைஅத்து பெற்ற ஷெய்கான கௌது அலி ஷாஹ்விற்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டு, கௌதுஅலி ஷாஹ்வும் அவரது ஆதராவாளர்களும் நூரி ஷாஹ்வா? நாரி ஷாஹ்வா? என்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வால்போஸ்டர் ஒட்டும் அளவிற்கு மோதல் முற்றி ஒரு கட்டத்தில், கௌதுஅலி ஷாஹ், நூரி ஷாஹ்வை அவர் என் முரீது இல்லை. மரீதாகிவிட்டார் என்று அறிவிக்கும் அளவிற்கு சென்றது. அவரின் மௌத்திற்குப் பின் நூரிஷாஹ் தன்னை கலீபாவாக-ஷெய்காக கூறிக் கொண்டு தன் கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தார்.

       கேரளாவில் பட்டிக்காட்டில் ஒரு மத்ரஸாவை உருவாக்கினார். பின் இவரின் கொள்கை கோட்பாடுகள் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமாக இருந்ததினால் இவரின் தரீகா வழிகெட்டது என்று கேரளா உலமா சபையினால் பத்வா வெளியிடப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டார். அதனபின் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்து தமது தரீகாவை பரப்ப முயன்று சுமார் 54 கலீபாக்களை ஏற்படுத்தினார். அவரின் கலீபாக்களில் பல கொள்கைகளை சார்ந்தவர்களும் இருந்தனர். அவரின் சில்சிலா எனும் தொடரில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. அவரின் சில்சிலாவில் வருகின்ற ஷெய்குகளில் ஒருவராக மௌலவி இஸ்மாயில் திஹ்லவி (தக்வியத்துல் ஈமான் நூலின் ஆசிரியர்) யின் நண்பர் செய்யிது அஹ்மது பரேலி எனபவரும் ஒருவர். இவர்களிருவரும் தமது வஹ்ஹாபியக் கொள்கைகளை பரப்ப பஞ்சாப் அருகே சென்றபோது சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டனர். மேலும் ஸெய்யிதினா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடுத்தாண்மையாக ஸெய்யிதினா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகிறார்கள். இது எங்கும் காணப்படாத ஒன்றாகும்.

        அடுத்து, மெய்ஞ்ஞானத்தில் தாத்து மற்றும் உஜுதை இரண்டாக சொல்லி தாத்து பலதும், உஜுது ஒன்று என்றும், இதுவே வஹ்தத்துல் வுஜுது என்றும், இதற்கு மாறற்மான கருத்துடையவர்கள் வழி தவறியவர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

         இவ்வாறு தமிழ்நாட்டில் அவரின் கலீபாக்கள் ஆங்காங்கே தமது சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட கொள்கைகளை கூறி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பதால், அவர்களின் கொள்கை என்ன? என்பதை விளங்க வேண்டி நூரி ஷாஹ் அவர்களின் கலீபாக்களில் ஒருவரான ஜமாலி ஷாஹ் என்பவருக்கு கடிதம் எழுதி கேட்டபோது அதற்கு அவர் அளித்த விபரம்கெட்ட, மடத்தனமான பதிலுக்கு உடன் எழுதிய விளக்கம் இதில் இடம்பெறுகிறது. ஆகவே மக்கள் இந்த தரம் கெட்ட தரீகாவை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுகிறேன்.


1
786/92

அன்பும், நேசமும் கொண்ட  கலீபா ஜமாலி ஷாஹ் நூரி அவர்களுக்கு,

       ஜமால் உடைய சலாம். இதற்குமுன் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதில் கூறி எனக்கு தெளிவு தரும்படி எழுதியிருந்தேன். பதில் இல்லை. சந்தேகம் என்பது நோய். எனவே எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க அன்புடன் வேண்டுகிறேன்.

1. தங்களுடைய சில்சிலா ஷெய்கான நூரி ஷாஹ் ஹஜ்ரத் அவர்கள் எழுதிய 'பைஜானே ஹக்' நூலுக்கு K.A. நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ எழுதிய மறுப்பு நூலான 'இர்பானுல் ஹக்' எனும் நூலில் கூறியவைகள் உண்மையா?

2. மக்கா, மதீனா உலமாக்களாலும், இந்தியாவின் சங்கைமுpகு 268 உலமாக்களாலும் 'காபிர்' என்று தீர்ப்பளிக்கப்பட்ட அஷ்ரப் அலி தானவியை தாங்கள் பெரிய மகான், மெய்ஞ்ஞான ஸூபி என்று கூறுவதாக சொல்லப்படுவது உண்மையா? அஷ்ரப் அலி தானவி எப்படிப் பட்டவர்?

3. ஞான வழியில் நடக்க விரும்பும் எனக்கு தஸவ்வுப் பற்றி அறிவுறுத்தவும். உஜூது, தாத்து பற்றி விளக்கம் தரவும். முக்தி அடைய வழி சொல்லவும்.

மேற்கூறியதற்கு தாங்கள் பதில் எழுதி எனது ஆன்மீகத்திற்கு வழிகாட்ட வேண்டுகிறேன். தாங்கள் ஒரு பொறுப்பாக உள்ளதால் அடியேனுக்கு பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். பின் துஆ சலாம்.
                                                                                                        -Jamal Mohamed

இந்த கடிதத்திற்கு ஜமாலி ஷாஹ் எழுதிய அறிவீனமான பதில்களுக்கு எழுதிய விளக்கமான மறுப்புரை.

1
                                                          786/92                          17-11-95                               
                                                                                                                                    

அன்புள்ள ஜமாலி ஷாஹ் நூரி அவர்களுக்கு,

அல்லாஹ்வின் நேர்வழியை யார் பெ;றார்களோ அவர்கள் அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக! உங்கள் தபால் கடைத்தது. நான் கேட்டிருந்த 3 கேள்விகளுக்கு ஒன்றிற்கு மட்டும் விடையளித்திருந்தீர்கள்.

அந்த விடைகளில் உண்மைக்குப் புறம்பான செய்திகளும், தவறான கருத்து கொள்ளப்பட்ட செய்திகளும் இருந்ததால் மேலும் ளரு காபிரை முஃமினாக்கும்படியும் எழுதியிருந்தால் விளக்கமான, ஆதாரமான, சிந்தனையைத் தூண்டி நல்வழிக்குத் திரும்பும்படியான கருத்துக்கள் கொண்ட பதிலை எழுதியுள்ளேன்.

ஆகவே, இப்பதிலைக் கண்டாவது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு திரும்பி வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன். மேலும் இனிமேல் இதுபோல் மக்களை வழி கெடுக்க முற்படாதீர்கள் என்றும் வேண்டுகிறேன். 

 மற்றவை பின்.                                                           – ஜமால் முஹம்மது.

1
                                 786/92                                                                                                                                                       

அன்புள்ள ஆலிம்களுக்கு,

அல்லாஹ்வின் நேர்வழியை யார் பெ;றார்களோ அவர்கள் அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக! ஆமின். தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றது. ஒரு திறமை மிகுந்த மத்ரஸா என்று சொல்லப்படும் மத்ரஸாவின் நாஜிர் அவர்களின் பதில் வியப்புக்குரியதாக இருந்தது.

மக்கா,மதீனா உலமாக்கள் 35 பேர்களும், இந்திய உலமாக்கள் 265 பேர்களும் அஷ்ரப் அலி தானவி போன்றோரைக் 'காபிர்' என்று தீர்ப்பளித்திருக்கிறார்களே! அவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தாங்கள் எழுதிய பதில் சிரிப்பி;ற்கிடமானது என்பதில் ஐயமில்லை. உங்கள் பதிலில் 'சரஹு பிக்ஹுல் அக்பரின்' வாசகத்திற்கு தாங்கள் எழுதிய கருத்து, 'ஒரு முஸ்லிம் உடைய சொல்,செயல் குப்ருடன் சம்பந்தப்பட்டுள்ளதாக காணப்பட்டால் அவற்றில் 99 சாத்திய் கூறுகள் குப்ருடன் சம்பந்தம் கொண்டிருக்க ஒரே ஒரு சாத்தியக் கூறின் மூலம் மட்டுமே குப்ரை நஃபி செய்யமுடியுமெனில் முப்திகளும், காழிகளும் நஃபியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவது ஏற்றமானது என்பதாகும்.

ஆனால், ஒரு முஸ்லிம் உடைய சொல், செயல் தெளிவாக குப்ருடன் சம்பந்தப்பட்டுள்ளதாக காணப்பட்டால் அவரை 'காபிர்' என்று சொல்வதுதானே மார்க்கச் சட்டம். ஒருவன் அல்லாஹ், ரஸூலைக் குறைவு கண்டால், அவர்களின் சொல், செயல்களை மறுத்தால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்குப் பின் தான் நபி என்று வாதித்தால் அவனின் சொல், செயல்களுக்கு 100 கருத்து வைத்து அதைப் பிரித்தா பார்ப்பார்கள்? இவ்வாறுதான் நீங்கள் ஓதியுள்ளீர்களா? அல்லாஹ், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது கொண்ட நேசம் இவ்வளவுதானா? பிக்ஹு சட்டம் படித்தல்லவா எழுத வேண்டும்.

அடுத்து, 'அஹ்லு கிப்லாவைச் சார்ந்தவரில் எவரையும் 'காபிர்' என்று சொல்ல நமக்கு தகுதியல்லை.' என்கிறீர்கள். உங்கள் வாதப்படி வைத்துப் பார்ப்போம். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்குப் பின் தான் ஒரு நபி என்று வாதிட்ட குலாம் அஹ்மது காதியானியை மட்டும் ஏன் 'காபிர்' என்கிறீர்கள்? மேலும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜை தம் மீது கடமையில்லi என்பவனையும், ஹராமானவற்றை தனக்கு ஜாயிஸ் என்றும் கூறுபவனையும் முஃமின் என்றா கூற முடியும்? நீங்கள் ஓதிப்படித்தவர்தானே! இதெல்லாம் தெரியாமலாயிருக்கும்? யாருடைய நிர்பந்தத்திற்கோ, வேறு ஏதும் கிடைக்கும் என்ற காரணத்திற்கோ ஏன் பயந்து உண்மைக்கு மாறானவற்றை எழுத வேண்டும?;.

'ஷிர்க்' வைக்காமலிருக்கும் காலம் வரை ஒருவரை 'காபிர்' என்று சொல்ல முடியாது' என்கிறீர்கள். ஆனால் முதலி; சரஹு பிக்ஹுல் அக்பருடைய வாசகத்தை நீங்கள் எடுத்துக் காட்டும்போது 'குப்ருடன்(100 சாத்திய் கூறுகள் மூலமும்) சம்பந்தப்பட்டால் அவரை 'காபிர்' என்று கூறலாம் என்ற கருத்துடன் எழுதியுள்ளீர்கள். உங்கள் கூற்றுகளிலேயே முரண்பாடு தெரிகிறதே! தாங்கள் நான்கு மத்ஹபுக்குரிய பிக்ஹு நூற்களில் 'ரித்தத்' உடைய பாடத்தையும், சரஹு பிக்ஹுல் அக்பர் உடைய பிற்பகுதியையும் படிக்கவில்லை போலும்! அதையும் படிக்க முற்படுங்கள். யாருக்கும் அடி பணிய வேண்டாம். உண்மையை எழுதுங்கள், சொல்லுங்கள்.

'சுன்னத் வல்ஜமாஅத் யார்? அல்லாதார் யார்? எனக் கண்டு கொள்ள இயலாத அளவிற்கு நம் சமுதாயத்தில் உலமாக்கள் உள்ளார்கள்' என்கிறீர்கள். தாங்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை எது என்பதை புரிந்து கொள்ளாததே இதற்கு காரணம்.

மேலும் இமாம்களுடைய காலத்தில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளில் ஒரு சிலதுக்கு மாறுபட்ட கொள்கை கொண்டவர்களை அடையாளம் காட்டும் பொருட்டு அந்த கொள்கைகள் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு அப்பாற்பட்டவை என்று கூறி உண்மைக் கொள்கையை நிலை நாட்டினர் இமாம்கள் என்பது அறிந்த ஒன்று. ஆனால் அல்லாஹ், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை குறைவு கண்ட எவரையும் அவர்கள் 'முஃமின்' என்று சொன்னதில்லை. அவர்கள் முஃமின்களே அல்ல என்பது ஏகோபித்த முடிவு என்பதும் நீங்கள் அறியாதது அல்ல!

அடுத்து 'ஈமான், குப்ர் சம்பந்தப்பட்ட பிரச்சனை கல்பு சம்பந்தமானது என்கிறீர்கள். ஒருவன் வெளிரங்கமாக குப்ரை நாடுகிறான், செய்கிறான் என்றால் அவனுடைய கல்பை நோட்டமிட்டா அவனை காபிர், முஃமின் என்று தீர்ப்பளிப்பார்கள்? வெளிரங்கத்தைக் கொண்டுதானே பிக்ஹு மசாலா எடுக்க இயலும்? இது கூட படித்ததுதானே! ஏன் விதண்டாவாதம்?

அடுத்து, 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காலத்தில், அவர்கள் முனாபிக்கீ;ன்களை முஸ்லிம்களின் பட்டியலில் சேர்த்தே வாழ்ந்து வந்தார்கள் என்பது சமுதாயம் அறிந்தது என்று எழுதியுள்ளீர்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் முனாபிக்குகளை வெளியாக்கி அவர்களுடன் சேராதிருக்க உபதேசித்ததையும், ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு என்ற சகாபியிடம் முனாபிக்குகளைப் பற்றி கூறி அவர்களின் பட்டியலை கொடுத்துள்ளதையும், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காலத்திற்குப் பி;ன் யாராவது வபாத்தானால் அந்த ஜனாஸாவிற்கு அந்த ஸஹாபி தொழ வருகிறார்களா? என்று பார்த்து விட்டு அவர்கள் வற்தால்தனர் உமர் ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள் தொழுவார்கள் என்ற சம்பவங்களையும் நீங்கள் பார்க்காமல் இருக்கமுடியாது. பார்த்தும் ஏன் நீங்களும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகிறீர்கள்? குர்ஆன் ஷரீபில் காபிர்களை கண்டித்து கூறியிருப்பதை விட அதிகமதிகம் முனாபிக்குகளைத்தான் கண்டித்து கூறப்பட்டடிருப்பது உங்களுக்கு கொஞ்சம்கூட தென்படவில்லை போலும்!

மேலும் இமாமுல் அஃலம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹு அவர்களை கௌதுல் அஃலம் போன்றோர்கள் குறை கூறியுள்ளதாக கொஞ்சம் சுட தயங்காமல் எழுதியுள்ளீர்களே! அபூ ஹனீபா ஹனபிய்யுல் யமனி, அபூ ஹனிபா ஹனபிய்யுல் கூஃபி என்று இருவர்கள் இருந்தார்கள். இதில் கூஃபி அவர்கள் நமது இமாம். எமனி என்பவர் குழப்பக்காரர். எமனியைத்தான் குழப்பக்கரரர் என்று கொளதுல் அஃலம் கண்டித்துள்ளார்கள் என்று ஒரு சாராரும், 'இவ்வாசகம் கௌதுல் அஃலம் கூறியது அல்ல. பிற்காலத்தலி; திணிக்கப்பட்டது என்று ஷாஹ் வலியுல்லாஹ் போன்ற ஒரு சாராரும் கூறியுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லை போலும். திரும்ப ஓத முற்படுங்கள். கௌதுல் அஃலம் அவர்களை விலாயத்து இல்லாத சாதாரண மனிதர் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நபிமார்கள், ஒலிமார்கள் விஷயத்தில் அதபுடன் நடக்க வேண்டும் என்பது தெரியாதா?

அடுத்து, பிரச்சனைக்குரிய உலமாக்கள் பற்றி எழுதும்போது, 'அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. மேலும் அவர்கள் எழுதியதாகக் சுறப்படும் நூற்கள் அவர்கள் எழுதிய பிரதிதான் என்பதை உறுதிபட கூற இயலாது' என்று கூறிவிட்டு 'அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்' எனவும் எழுதியுள்ளீர்கள். அஷ்ரப் அலி போன்ற உலமாக்கள் தோன்றி பல நூற்றாண்டுகள் ஆகிவிடவில்லை. இன்றைய காலகட்டத்தில்தான் தோன்pனார்கள் என்பது அறிந்த ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, நகல் செய்யப்பட்ட ஹதீஸ்கள், சட்டங்கள் போன்றவற்றை ஒப்புக் கொள்ளும் நீங்கள், குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்க் மூலம் மக்களுக்கு அருளப்பட்டது என்பதையும் நம்பும் நீங்கள் உங்கள் கருத்துக்கு ஒத்து வரவில்லை இதை ஒப்புக் கொள்ள மறுத்து, உங்கள் வேஷம் கலைந்து விடும் என்று நொண்டி சாக்கு சொல்கிறீர்கள்.

நீங்கள் போற்றும் அஷ்ரப் அலி தானவி போன்ற உலமாக்கள் 'குப்ரை'க் கொண்டு தீர்க்கமாக எழுதியதை இன்றுரை அவரை மகான், வலி என்று போற்றிப் புகழும் தேவ்பந்த் மத்ரஸாவும், மற்ற குதுப்பானாக்களும், உலமாக்கள் என்பவர்களும் மறுக்கவில்லையே! அதையே தொடர்ந்து புத்தகமாக வெளியிட்டு வருகிறார்களே! அஷ்ரப் அலியின் காலத்திலேயே வெளியிடப்பட்டதே! இவ்வாறு அஷ்ரப் அலி தௌ;ளத் தெளிவாக குப்ருடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று காணும்போது அவரை 'காபிர்' என சொல்ல ஏன் தயங்க வேண்டும்?

மக்கா, மதீனா உலமாக்கள் வெளியிட்ட 'ஹுஸாமுல் ஹரமைன்' என்ற தீர்ப்பு வெளிவரும்போது அஷ்ரப் அலி உயிருடன்தானே இருந்தார். அதற்கு ஏன் ஒரு பதிலும் சொல்லவில்லை? அந்த குப்ர் கொள்கையை ஒப்புக் கொண்டதால்தான் பதில் சொல்லவில்லை. அதே பொல் மீரட் மௌலானா அவர்கள் அஷ்ரப் அலியை நேரில் விசாரித்து நீர் உம்மை ரஸூலாக அறிவித்தது உண்மையா? என்று கேட்டபோது ஏன் மறுக்கவில்லை? தன்னை ரஸுலாக அறிவித்ததினால்தானே! அதன் பிறகுதான் பர்ரத் மின் கஸ்வரா' என்ற தலைப்பில் அஷ்ரப் அலியை 'காபிர்' என்று தீர்ப்பளித்தார்கள். அப்போதும் அஷ்ரப் அலி உயிருடன்தானே இருந்தார். மறுக்கவில்லையே!

இப்னு ஜௌஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வழி கெட்ட கொள்கையில் இருக்கும்போது எழுதிய புத்தகங்களுக்கு அவர்கள் திருந்திய பின் மறுப்பு எழுதினார்களே! அஷ்ரப் அலி அப்படி ஏதும் எழுதினாரா? 'அஷ்ரப் அலி அந்த புத்தகங்களை எழுதினார் என்று உறுதிபட கூற முடியாது' என்று எழுதியு;ளளீர்கள். அஷ்ரப் அலி எழுதிய புத்தகம் சரிதான், .துதான் அவர்க கொள்கை என்று அவருடைய கலீபாக்களே ஒப்புக் கொண்டுள்ளனரே! நீங்கள் படித்துப் பார்க்கவில்லையா?

உங்கள் ஷெய்குமார்கள் அவிழ்த்து விட்டுள்ள கட்டுக் கதை போல் நீங்களும் அவிழ்த்துவிட்டுள்ளீர்கள். அவர்களின் கலீபாக்கள் ஸலவாத்தைமுழுமையாக சொல்லும்படி சொன்னதாகவும், நபி மீது காதல் கொண்டிருந்ததாகவும் எழுதியுள்ளீர்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பெயர் எழுதும் போத ஒரு ஸலவாத்து கூட எழுத உங்களுக்கு மனம் வரவில்லையே ஏன்? உங்கள் சகவாசம் அப்படி. மேலும் அஷ்ரப் அலி கான்பூர் சுன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாவில் ஓதிக் கொடுக்கும் போது மௌலிதுகள் ஓதுவார். ஒருமுறை இதுபற்றி அவரிடம் கேட்கும்போது, இதுமாதிரி நடித்துதான் மக்களை நல்வழிக்கு இழுக்க இயலும் என்றார். இதனால்தனர் இவருக்கு ஹகீமுல் உம்மத் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது போலும். ஷெய்கே இப்படி இருக்கும் போது அவருடைய கலீபா எப்படி இருப்பார்?

துல் குவைஸரா, அப்துல்லா இப்னு மஸ்லூல் போன்ற முனாபிக்குகளை முஃமின் என்று சொல்ல முடியுமா? குலாம் அஹ்மது காதியானி, ஷியாக்கள் போன்றோரை முஃமின் என்றும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றும் சொல்ல முடியுமா? இக் காலகட்டத்தில்தான் தன்னை ரஸூலாக பிரகடனப்படுத்தி ரஸூலை குறைவு படுத்தி எழுதிய அஷ்ரப் அலி தானவியை முஃமின் என்று சொல்ல முடியுமா?

மேலும் உங்கள் சில்சிலாவின் ஷெய்கு நூரி ஷாஹ் அவர்கள் இல்யாஸி தப்லீகை வழிகெட்டது என்று சாடி பேசியது அறிந்த ஒன்று. ஆனால் நீங்கள் இல்யாஸை 'ரஹ்' போட்டு எழுதுகிறீர்களே! என்னே! நீங்கள் ஷெய்கு மீது கொண்ட பணிவு!

ஒவ்வொர காலகட்டத்திலும் வழிகெட்டவர்களை சுன்னத் வல் ஜமாஅத்தினர் அடையாளம் காட்டி சென்றுள்ளனர். அவ்வகையில் அஷ்ரப் அலியை 'காபிர்' என்று சொல்லியுள்ளார்கள். இவ்வாறு காபிர் என்றவரை 'முஃமின்' ஆக்கும் உங்கள் கூட்டம் வழி கெட்டதுதான்.

ஒரு காபிரை 'காபிர்' என்று சொல்லத் தயங்குபவனும் 'காபிர்' என்று உலமாக்ககளின் ஏகோபித்த முடிவுபடி (நூல்: ஷிபா) உங்கள் நிலையை உற்று நோக்குங்கள்.

முற்றும் 

Importance and Needness of Sheikh-Guru-முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

முர்ஷிதுகள்-ஷெய்குமார்கள் தேவைதானா?

மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி.

யா -அய்யு-ஹல்லதீன-ஆமனுத்தகுல்லாஹ்-வப்தகு-இலைஹில் வஸீலத…..

ஈமான் பொண்டவர்களே! அல்லாஹ்வை தக்வா-அஞ்சி நடங்கள், அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத்- போர் புரியுங்கள், நிச்சயம் நீங்கள் வெற்றி-முக்தி பெறுவீர்கள். -அல்குர்ஆன் 5-35.

மனிதன் வெற்றி பெறுவதற்கும், முக்தி அடைவதற்கும் மிக முக்கியமான நான்கு அம்சங்களை இவ்வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

1. ஈமான் கொள்ளுதல்.
2.தக்வா செய்தல்
3.வஸீலா தேடுதல்.
4.அவன் பாதையில் போர் புரிதல்.

இந் நான்கில் மூன்றாவதான வஸீலாவைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

வஸீலா என்பதற்கு நல்ல கிரியைகளை முற்படுத்துவதும், நல்ல செயல்களை செம்மைபடுத்துவதும் என்பது பொதுவான கருத்து.

இறைவழி நடப்பவன் தனக்கென்று பூரணத்துவமடைந்த நேர்வழி காட்டுபவர்களில் ஒருவரை (முர்ஷிது-ஷெய்கை) தனது உற்ற நண்பராக எடுத்துக் கொள்ளுதல் என்பது குறிப்பிடத்தக்கதான கருத்து என்று மாமேதை மகான் மஹ்மூது தீபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

உண்மையில் இரண்டாம் கருத்துதான் இவ்விடம் வஸீலா என்பதற்கு தகும். ஏனெனில்,

இரண்டாவது அம்சமான தக்வா செய்வதென்பதில் நல்ல கிரிகைகளை முற்படுத்துவதும், நல்செயல்களை செம்மைபடுத்துவதும் அடங்கும்.

தக்வா என்றால் பாவமான காரியங்களை தவிர்த்து நடப்பதும், நல்ல காரியங்களை செய்வதும்தானே! அதையே மூன்றாவது கூறுவது பொருத்தமன்று.

ஷரீஅத். தரீகத், ஹகீகத், மஃரிபத்- சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவன் அளவில் சேர முடியும் என்பது மெய்ஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு.

எனவே இவ் வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஷெய்கு-குருவின் கரம் பிடிப்பது இன்றியமையாத கடமை.

இதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் சொன்னதை நமக்கு கவி நயமாக மாமேதை அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

'வ குல்த- மன்லா லஹு- ஷெய்குன்- ஃப இன்னி………………..'

'எவர்களுக்கு ஷெய்கு இல்லையோ அவர்களுக்கு நிச்சயம் நான் ஷெய்காக-முர்ஷிதாக இருக்கிறேன். அவன் கல்வத்தில்-தனிமையிலும் அவனது உற்ற நண்பனாக நான் இருக்கிறேன். என்னில் நின்றும் அவனுக்கு தொடர்பு உண்ட என்று (கௌது நாயகமே!) நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்'.

என்று பாடி தந்துள்ளார்கள்.

'யவ்ம –நத்உ-குல்ல உனாஸின்-பி இமாமிஹிம்- அன்று(கியாமத் hளில் நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர்(களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம்'(17-71) என்ற இறைவன் கூறியுள்ளான்.

கருத்து:- தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது:- காதிரிய்யா தரீகாகாரர்களே! ஜிஷ்திய்யா தரீகாகாரர்களே! ஷாதுலிய்யா தரீகாகாரர்களே! என்று இப்படியே அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இறைவன்பக்கம் போய் சேருவதற்கு இறைதூதர்கள் பக்கம் போகுவதற்கு ஷெய்குமார்கள்-முர்ஷிதுகள் அவசியம். உதாரணம்:- அனுமதி வழங்கப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அவைகளின் கழுத்தில் அடையாள பட்டிகள் மாட்டியிருப்பது அவசியமாக இருப்பது போல், நமது கழுத்துக்களிலும் எந்த ஷெய்குமார்களின் பட்டியாவது கண்டிப்பாக மாட்டியிருப்பது அவசியம். ஏனெனில்,

நமது நப்ஸு- ஆத்மா நாய் போன்றது. சுதந்திரமாக விட்டு வைக்கலாகாது. அதன் கழுத்தில் பட்டிபோட்டு ஒரு ஷெய்கின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்ய வேண்டும். கழுத்துப்பட்டியில் கொழுகப்பட்டிருக்கும் சங்கிலியின் முதல் கொழுக்குபட்டியிலும், மறுபக்கத்து கொழுக்கு எஜமானின் கரத்தில் இருப்பது போல், ஷெய்கின் கரம் நம் கழுத்திலும்,  ஷெய்கின் ஸில்ஸிலாவான சங்கிலி தொடர்பான மறுபுறம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஜ வ ஸல்லம் அவர்களின் கரத்திலும் இருக்க வேண்டும்.

நாம் இயங்குவது அந்நாயகம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான். நமது ஷெய்கு அதற்கு வஸீலாவாக இடைப் பொருளாக தொடர்பை உண்டாக்கி தருபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான எதார்த்தமான வஸீலாவாகும். இந்த வஸீலாவை தேடும்படியாகத்தான் மேற்கண்ட 5:35 வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.

மழை பொழியும் போது அதை நாம் பெறாவிட்டால் அதை வாங்கி வைத்திருக்கும் குளம் குட்டையை நாம் நாடுவது போல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஜீவிய காலத்தில் அருள் மழை பொழியும் போது நாம் இல்லை என்றால் வாழையடி வாழையாக அந்த அருள் வெள்ளத்தை வாங்கி வந்திருக்கும் குளம் குட்டைகள் போன் ஷெய்குமார்களின் திருக்கரத்தை பிடித்தால்தானே வயல் போன்ற ஈமானுக்கு அவ்வருள் வெள்ளம் பாய்ந்து ஈமான் உருப்படும். இல்லையென்றால், ஈமான் கருகி சருகாகி விடும் அல்லவா? அல்லாஹ் அந்நிலையை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக!

இதை எங்களது குருநாதர் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் கிழுரிய்யா பைத்தில்,

'ழல்லமன்-ளன்ன-லஅல்லஹு-யபூஸு-பிநப்ஸிஹி
ழாஅ-உம்ரஹு-அகிஸ்-யாரப்பி-பில்-கிழ்றின்னபி'

(ஷெய்குமார்களின் துணையின்றி) தானாக ஜெயம் பெறலாம் என்று எவன் எண்ணினானோ அவன் தனது வயதை பாழ்படுத்திவிட்டான். கிழ்று நபியின் பொருட்டால் எனது இரட்சகனே! என்ழன இரட்சிப்பாயாக!

என்று அழகாக வலியுறுத்தி பாடியுள்ளார்கள். இன்னும் அவர்கள் அதே பைத்தில், ஸுஹ்பத்துஷ் ஷெய்கி-ஸஆததுன்-ஷெய்குவின் சகவாசம் சீதேவித்தனமாகும்., கூனூ-மஅஸ்ஸாதிகீன்-மெய் அன்பர்களுடன் நீங்கள் இருந்து வாருங்கள்(9-119) என்ற திருவசனத்தில் இறைவனின் கட்டளையும் இருக்கின்றது என்றும் பாடியுள்ளார்கள்.

உலுல் அஜ்மிகளில் ஒருவரான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கூட மெஞ்ஞான கடலான கிழ்று நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று மெஞ்ஞான அருளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவன் இட்ட கட்டளையும், அவர்களுக்கு மத்தியில் நடந்த நீண்ட வரலாற்றையும் ஷெய்கு முர்ஷிதுகளின் முக்கியத்ததுவத்தையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஸுரத்துல் கஃபு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதையே அடிப்படையாக வைத்துதான் எங்கள் ஷெய்குநாயகம் கிழ்றியா பைத்தை இயற்றியுள்ளார்கள்.

'ஸுஹ்பத்தே-ஸாலிஹ் குதுனா-ஸாலிஹ் குனத்
ஸுஹ்பத்தே-தாலிஹ் குதுனா-தாலிஹ் குனத்'

நல்லவர்களின் சகவாசம் நல்லவர்களாக மாற்றி விடுகின்றது. கெட்டவர்களின் சகவாசம் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது' என்றும்,

'யக்ஸமானா-ஸுஹ்பத்தே-பா அவ்லியா
பெஹ்தர்-அஸ்-சத்-ஸாலெயே-தாஅத்-பேரியா'

சற்று நேரம் அவ்லியாக்களுடன் சகவாசத்தில் இருப்பது நூறு ஆண்டுகள் முகஸ்துதியின்றி வழிப்படுவதைக் காண மிகச் சிறந்தது' என்றும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடியுள்ளார்கள்.

'அஸ்ஸுஹ்கத்து-துஅத்திரு- சகவாசம் குணபாடு அளிக்கும்' என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ளார்கள்.

'பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்' என்ற தமிழ் முதுமொழியும் ஒன்று உண்டு.

ஆகவே இப்படிப்பட்ட ஷெய்குமார்களின் சகவாசம் மிகத் தேவை. முக்தி பெறுவதற்கு அவர்களின் திருக்கரம் பற்றிப் பிடித்து அவர்களின் தரீகத்தில் செல்லுவது மிக முக்கியமாகும். இவ்வழிதான் நபிமார்கள், சித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள், சாலிஹுன்கள் சென்ற வழி. இதுதான் ஸிரத்தே முஸ்தகீம்-நேரான வழி. இவ் வழியைத்தான் தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும்'இஹ்தினஸ்ஸி ராதல்-முஸ்தகீம்-ஸிராதல்லதீன-அன்அம்த-அலைஹிம்-(இறiவா!) நீ நேரான வழியை எங்களுக்கு காட்டுவாயாக! (அவ்வழி) நீ உபகாரம் புரிந்தவர்களின் வழி' என்று ஓதி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதியும் உண்டு.

'வத்தபிஃ-ஸபீல-மன்-அனாப-இலய்ய- என்னளவில் மீண்டவர்களின் பாதையை பின்பற்றுவீராக! என்ற(31-15) திருவசனமும், அல்லாஹ் அளவில் போய் சேர்ந்து அவனது திருக்காட்சியை கண்டு களித்து மீண்டவர்களான முர்ஷிது-ஷெய்குமார்களை நாம் கரம்பிடித்து பைஅத் தீட்சை பெற்று பின்பற்றியாக வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.

இதுமட்டுமன்று, நமது இக்கட்டான வேலையிலும் நம்மை காப்பாற்றுபவர்களும் அவர்கள்தான். எடுத்துக்காட்டாக,

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிஸ்ரு நாட்ல் ஜுலைஹா அம்மையாரின் அறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வேளையில், 'கன்ஆன்' என்னும் சிற்றூரில் இருந்துக் கொண்டிருக்கும்  யஃகூபு அலைஹிஸ்ஸலாம் அவர்களை(உதவிக்கு)அழைத்தார்கள். உடனே அவ்வறையில் காட்சிக் கொடுத்து ஜுலைஹா அம்மையாரின் மாய லீலையை விட்டும் காப்பாற்றினார்கள் என்பது திருமறை கற்பிக்கும் வரலாறு.

அல்லாமா இமாம் ராஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு மரண தருவாயில் அவர்களது ஷெய்கு குரு நஜ்முத்தீன் வலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆஜராகி ஈமானை காப்பாற்றினார்கள் என்பது உலகம் அறிந்த வரலாறு.

நம் உடம்பின் நரம்புகள் நம் ஹிருதயத்துடன் தொடர்பு கொண்டு இயங்குவது போல், உலகத்திற்கு ஹிருதயமாக-முக்கிய அங்கமாக மூலக்குருவாக இருந்து வரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு இக்குருமார்கள்தான் தொடர்பை ஏற்படுத்தி தருகிறார்கள். அதுபோழ்துதான் நாம் சரியாக இயங்க முடியும். நமது இலட்சியமும் நிறைவேறும்.

நகரங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளுக்கு பவர் ஹவுஸில் இருந்து வயர் கம்பிகள் மூலம் மின்சக்தி வருவது போல் உலகத்திற்கு பவர்ஹவுஸாக இருந்து வரும் அவ்வுத்தம நபியின் அருள் இயக்க சக்தி வர வேண்டுமானால் வயர் கம்பிகள் போன்று அமைந்திருக்கும் ஷெய்குமார்களின் ஸில்ஸிலா-தொடர்பு இருக்க வேண்டும்.

சூரியக் கதிர்கள் துணியில் மேனியில் படுகின்றன. கரித்துவிடுவதில்லை. ஆனால் பூதக்கண்ணாடியை சூரியக் கதிர்களுக்கும் துணிக்கும் இடைப் பொருளாக வைத்தால் பூதக் கண்ணாடி கதிர்களை ஒன்று கூட்டி துணியை-மேனியை கரித்து விடும் இயக்கத்தை நாம் அறிவோம். இதைப்போல்,

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹஸ வஸல்லம் அவர்களின் அருள் ஜோதி உலகத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதி நம் உள்ளத்தில் பட்டு குணப்பாடு அளிக்க வேண்டுமானால் அந்த அருள் ஜோதியை ஒன்று கூட்டிதரும் பூதக் கண்ணாடி போன்ற குருநாதர்களை நம் உள்ளத்திற்கும் பெருமானாரின் அருள் ஜோதிக்கும் இடைப்படுத்தினால் தான் உள்ளத்தில் 'இஷ்க்' எனும் குணப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பதையும் இவண் உணர்க! பெருமானாரின் பேரொளியின்றி எவரும் இறைசன்னிதானம் பிரவேசிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை.

ஆகவே முக்தி அடைவதற்கும் இறையருள் வெறுவதற்கும் வஸீலாவான ஷெய்கு-முர்ஷிது ஒருவரை எடுத்துக் கொண்டு இறைவழி நடக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் இவ்வழி நடந்து முக்தி பெற்றவர்களாக ஆகுவதற்கு நல்லுதவி புரிவானாக!

ஏனைய சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் உரை-Other Sunny Alim’s Speeches-

1. தமிழ்நாடு அஹ்லெ சுன்னத் உலமா சபை பொருளாளர் மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு சையத் வஜீஹுன்னகீ சகாப் காதிரி ஷுத்தாரி அவர்கள் அவர்களின் உரையினைக் கேட்க இங்கே அழுத்தவும்:

தப்லீக் ஜமாஅத்தும் அதன் தலைவர்களும்

2. காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நடைபெற்ற முவ்வொலிகள் ரலியல்லாஹு அன்ஹும்  கந்தூரி விழாவில் தஞ்சாவூர் மௌலானா மௌலவி அல்-ஹாஜ்  அல்-ஹாபிழ் அப்துர் ரஜ்ஜாக் கௌஸி ஸூபி அவர்கள்  உரையைக் கேட்க இங்கே அழுத்தவும்:

சுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் போலி தரீகாக்கள்