Omar Wali – உமர் வலி காஹிரி
By Sufi Manzil
Umar Waliyullah kahiri
இவர்கள் செய்கு அப்துல் காதிர் அவர்களின் மகனாக மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளின் பேரராக பிறந்தார்கள். இவர்கள் முதலில் முஹம்மது நுஸ்கி என்ற பாலப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கல்வி கற்றார்கள். அவர்களிடம் பைஅத்தும் பெற்றார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் பேரரான ஸெய்யிது ஜிப்ரி தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பைஅத்தும் கிலாபத்தும் பெற்றார்கள்.
புனித ஹஜ் மற்றும் ஜியாரத்திற்காக மக்கா, மதினா ஷரீபிற்கு சென்றிருந்த சமயம் மான் அஸ்ஸெய்யிது முஹ்ஸின் அல் முகைபலி அவர்களை ரலியல்லாஹு அன்ஹு சந்தித்தார்கள். இவர்களிடம் மறைவான ஞானங்களை கற்று தேர்ந்தர்கள். பைஅத்தும் பெற்றார்கள். ஐந்து வருடங்கள் மதினாவில் ஆசிரியராகவும் பின்பு தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார்கள். பின்பு காயல்பட்டணம் திரும்பி வந்தார்கள்.
ஒரு நாள் மொகுதூம் பள்ளியில் தொழ வைத்துக் கொண்டிருந்தபோது, ஞான ஆசிரியர் ஸெய்யிது முஹம்மது புஹாரி தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அழைப்பதைக் கேட்டார்கள். உடனே கண்ணூர் சென்றார்கள். அங்கு அவர்களிடம் பைஅத் பெற்றார்கள். இவர்கள் காலத்தில் இவர்கள் பெரும் குத்பாக விளங்கினார்கள். உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்தோனிசியா சென்று இஸ்லாத்தை பரப்பினார்கள். இவர்களுக்கு ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தார்கள். அனைவர்களும் வலியுல்லாக்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் ஞானப் பாடல்கள் இயற்றி உள்ளார்கள். அரபி அகர வரிசைப் படி அல்லஃபுல் அலிஃப் எனும் அரபி கவிதையை இயற்றியுள்ளார்கள். இந்தக் கவிதை கேரளாவில் மிகவும் பிரபலமானது. அங்கு மத்ரஸாவில் பாடமாக போதிக்கப்படுகிறது.
இவர்கள் இயற்றிய 'இலாஹி கம் து பக்கினி' எனும் பைத் தமிழகம் மற்றும் இலங்கையில் பிரபலமானது.
இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1216 துல்கஃதா பிறை 14 (கி.பி.1804). அடக்கஸ்தலம் காயல்பட்டணம் ஸாஹிபு அப்பா தைக்கா.