Fatwa about Pseudo Disciples-ஷெய்குக்கு மாற்றமான முரீது பற்றிய பத்வா

Fatwa about Pseudo Disciples-ஷெய்குக்கு மாற்றமான முரீது பற்றிய பத்வா

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

ஷெய்குக்கு மாற்றமான முரீது பற்றிய பத்வா.

In Tamil: K.M.N.நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்லரி,உலவி அவர்கள்

இந்த பத்வா வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபிக கல்லூரியின் ஸ்தாபகரும், மாமேதையுமான மௌலானா, மௌலவி ஷம்ஸுல் உலமா அல்ஹாஜ் அப்துல் வஹ்ஹாப் ஹஜ்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியரும், ஞான மேதையுமான குத்பே வேலூர் என்று போற்றப்பட்ட குத்வத்துஸ் ஸாலிகீன் ஷெய்குஷ் ஷீயூக் மௌலானா ஷாஹ் முஹ்யித்தீன் வேலூர் (குத்திச ஸர்ரஹுல் அஜீஸ்) அவர்களின் பார்ஸி தொகுப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

வினா:- ஒரு மனிதர் பிரபல்யமான தரீகாவில் நேர்மையான கொள்கையுடைய ஷெய்கு(ஞான வழி காட்டி) இடத்தில் பைஅத்து(ஞான தீட்சை) பெற்று, பின் அஞ்ஞான ஆசிரியரை மறுக்கிறார். மேலும் அக்குரு சகவாசத்தை(பைஅத்தை) விட்டும் தன்னை நீக்கிக் கொள்வதற்கும் உறுதி கொள்கிறார். தம்முடைய ஷெய்கையும், அஷ்ஷெய்குடைய ஷெய்குமார்களையும் மரியாதையின்றி இழிவுபடுத்ததுகிறார்! இவருக்கு ஷரீஅத்-தரீகத்தின் முறைப்படி என்ன தீர்ப்பு?

விடை:- எந்த ஒரு மனிதர் காமிலான பீர்(வழி காட்டி) உடைய பைஅத்தை முறித்துவிட்டால், அவர் தரீகத்தில் (முர்தத்து) மாறுபட்டவராக ஆகிவிடுகிறார்!.
(மகான் ஷாஹுல் ஹமீது ஆண்டகையின் ஞான குரு) ஷெய்கு முஹம்மது கௌது குவாலிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது அவ்ராதே கௌதிய்யாவில் கூறுகிறார்கள்: '(பைஅத்தான)ஆரம்பத்தில் பைஅத்தின் மூலம் பலன் பெற வேண்டும் என்று எண்ணுவது முரீதுடைய வேலையாகும். பைஅத்திற்கு பின்னால் ஷெய்கு ஜீவித்திருந்து முரீது(பாலிகான) பருவமடைந்தவனாக இருந்தால், ஷெய்கின் இஷ்டத்தில் உள்ளதாகும்.

முரீது ஆனபின், சீடன் அந்த ஷெய்கின் பைஅத்தை முறித்துவிட எண்ணினால் அவரால் முறிக்க இயலாது. அவர் வேறு எந்த ஷெய்கிடம் பைஅத்து வாங்கினாலும் அவர் அங்கு முரீதாக மாட்டார்.

எந்த ஷெய்கு ஆரம்பமாக இவரை முரீதாக அக்கினாரோ அவரின் பைஅத்திலேயே நிலைத்திருப்பார். இப்பைஅத்தை ஏற்றுக் கொள்வதும், மறுத்து விடுவதும் ஷெய்குடைய உரிமையாகும்.

பைஅத்தின் சட்டம்(நிகாஹ்) திருமண சட்டத்தைப் போன்றதாகும். திருமணம்(மஜாஸி) வெளிப்படையானது. பைஅத்து என்பது(ஹகீகி) அந்தரங்கமானது ஆகும்.

முந்தைய ஷைகை விட்டும் மாறிவிட்டால், அவர் தரீகத்தில்(முர்தத்) மாறுபபட்பவராகும். ஷெய்கை மறுப்பதும், அவருக்கு தொல்லை தருவதும் துரதிஷ்டத்தின் வேராகும்.

இமாமே ரப்பானி ஷெய்கு அஹ்மது சர்ஹிந்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது மப்தவோ மஆத் என்ற நூலில் எழுதுகிறார்கள்: அல்லாஹ் ஹக் சுப்ஹான ஹுஅத்தஆலாவின் இன்ஆம்(அருளுக்கும்) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் இக்ஸான்(கருணைக்கும்) பின்னால் சீடன் ஷெய்குக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்- மற்ற (கடமைக்குரிய)வர்களின் கடமையை விட மேம்பட்டதாகும்.

அதுமட்டுமல்ல! மற்றவர்களின் கடமைகளுக்கும் ஷெய்கின் கடமைகளுக்கும் எச்சம்பந்தமும் இல்லை. ஆனால், உண்மையிலேயே உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்தான் அனைவருக்கும் ஷெய்காக இருக்கிறார்கள்.

எதுவரை என்றால்……………

உடலின் மூலம் உண்டான பிள்ளையின் உரிமை பெற்றோருக்கு உரியதாகும்! ஆனால், ஆன்மீகப் பிள்ளையின் உரிமை ஷெய்குக்கே சொந்தமானதாகும். உடலி; மூலம் ஏற்படுகின்ற பிள்ளையின் வாழ்வு சில காலங்களே உள்ளன. ஆன்மீகப் பிள்ளையின் வாழ்வு நிரந்தரமானதும், நீடூடி காலம் உள்ளதுமாகும்.

முரீதின் அந்தரங்க அசுத்தங்களை அவரின் இதய ஆன்மாவிலிருந்து நீக்கி, அகத்தை பரிசுத்த படுத்துகிறவர் ஷெய்குதான்.

சில முரீதுகள் விஷயத்தில் அவர்களின் அசுத்தங்களை நீக்கி, பரிசுத்தவான்களாக திகழச் செய்ய- ஷெய்குமார்களின் உறவும்,(ஆன்மீகப் பார்வையம்) அவசியமாகி விடுகின்றன. ஷெய்குமார்களின் அப்பார்வையின்(அதர் என்னும்)குணபாடு சில காலம் (அம்) முரீதிடம் இருந்து கொண்டே இருக்கிறது.

முரீது இறைவன் அளவில் சேர்வதற்கு இடைத் தொடர்பாக(வாஸிதாவாக) ஷெய்குதான் இருக்கிறார்கள். இறைவன் அளவில்(வாஸில்) சேர்வது ஈருலக பாக்கியங்களையெல்லாம் விட உயர்வானது.

முரீதிடமுள்ள அம்மாரா என்ற நப்ஸின் தீய குணங்களைவிட்டும் நீங்கி நப்ஸே முத்மயின்னா என்ற பதலி அளவில் சேர்வதற்கும் வஸீலாவாக இருக்கிறார். தபயீ செய்கின்றதின் மூலமே எதார்த்தமான குப்ரை விட்டும் வெளியாகி உண்மையான இஸ்லாத்தில் வந்து விடுகிறார்.

இதைப் பற்றி கூறின் விரிந்து கொண்டே செல்லும் (கவி).

மிகக் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில், தன் ஷெய்கை(மனப்பூர்வமாக) ஏற்று நடப்பதில்(ஸஆதத்)நற்பாக்கியமும், மகத்துவமும் இருக்கிறது. குருவை மறுப்பதும், அவருக்கு மாறு செய்வதுமாக இருப்பின், துர்பாக்கியமும், தீங்கும்தான் கிட்டும்! இதை விட்டும் இறைவன் நம்மைக் காத்தருள்வானாக!

இறைவனின் திருப் பொருத்தம் – ஷெய்குவின் பொருத்தம் என்னும் போர்வையில் உள்ளது. எதுவரை முரீது தன்னுடைய ஷெய்கின் பொருத்தத்திலும், ஷெய்கின் சந்தோஷத்திலும் தன்னை(பனா) அழித்துக் கொள்ளவில்லையோ அதுவரை இறைவனிள் (ரிளா) பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளமாட்டான். தன் ஷெய்கை கைவிடுவது ஆபத்தானதாகும். அதன்பின் அவனுக்கு வரும் இழிவும் இடைஞ்சல்களும் அதன் தொடர்தான்.

ஷெய்குக்கு வேதனை தரும் முரீதுக்கு எப்பரிகாரமும் பலனளிக்காது. ஷெய்கை வேதனை தருவது முரீதுக்கு துர்பாக்கியமானதாகும். அல்லாஹ் காப்பாற்றுவானாக! இஸ்லாமிய(அகீதா) கொள்கைகளில் இடைஞ்சலும், ஷரீஅத்துடைய அமலில் குறைகள் ஏற்படுவது இவை ஷெய்குக்கு செய்த நோவினையினால் ஏற்பட்ட தீய வினையாகும்.

முரீதுக்கு ஏற்படும் சில(அஹ்வால் ஜதுபு) தன்மைகள் அந்தரங்கமானது, ஷெய்கை வேதனையுறுத்திய பின்பும், முரீதிடம் அத்தன்மைகளில் சில எஞ்சியிருந்தால் அதை இஸ்திராஜ்(சூனியக்காரர்களுக்கும், மற்றும் வலி கெட்டவர்களுக்கும் உள்ளதைப் போல்) என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஷெய்குக்கு வேதனை தருவது இறுதியல் அழிவுக்கும், நாசத்திற்கும் காரணமாகவே அமையும். நஷ்டத்தை தவிர்த்து எவ்வித இலாபமும், பிரயோசனமும் கிட்டாது.

வஸ்ஸலாமு அலா மனித்தப அல் ஹுதா!

(குத்பே வேலூர்)

நன்றி:-'அல்லத்தீப்'

வெளியீடு: ஸஜ்னத்துல் கரீமிய்யா 60ஆம் ஆண்டு மணிவிழா மலர் 1983.

Add Comment

Your email address will not be published.