அரபிக் கலாசாலையில் 7 வது பட்டமளிப்பு விழா!
By Sufi Manzil
மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையில் 7 வது பட்டமளிப்பு விழா!
கடந்த 18-07-2010 ஞாயிற்றுக் கிழமை (ஹிஜ்ரி 1431 ஷஃபான் பிறை 06) காலை 9.30 மணியளவில் இலங்கை ஏறாவூர் ஸூபி மன்ஸில் சார்பாக நடாத்தப்பட்டு வரும் மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையில் 7 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவும், 8வது தலைப்பாகை சூடும் விழாவும் காட்டுப்பள்ளி வீதி, கலாசாலை மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இச் சிறப்பு மிகு விழாவிற்கு தலைமை தாங்கி நடத்தி நடந்தவர்கள் சங்கைமிகு ஷெய்குனா ஸெய்யிது பூக்கோயாத் தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமை மகனார் அல்ஹாஜ் பி.ஏ. முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம் ஸகாபி, காதிரி, அல் ஹஸனி (இந்தியா) அவர்கள். சிறப்பு அதிதியாக கலந்து கொண்டவர்கள் ஷெய்குனா மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் அல் ஆலிமுல் பாழில் ரஹ்மானி, பாகவி கலீபத்துல் காதிரி (இந்தியா) அவர்கள்.
இவ்வரபி கலாசாலையின் பேராசிரியர்களாக பணி புரிபவர்கள்:
மௌலவி அல்ஹாபிழ் ஏ. நாகூர் மீரான் பாழில், பாகவி இந்தியா (முதல்வர்) அவர்கள்.
மௌலவி டபிள்யு. ரயீஸுத்தீன் கௌஸி அவர்கள்.
மௌலவி எம்பி. அப்துல் ஹஃபீல் கௌஸி அவர்கள்.
நிகழ்ச்சில் முன்னதாக சுபுஹுத் தொழுகைக்குப் பின் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது.
காலை 9.30 மணியளவில் கிராஅத் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.
மாணவர்கள் கல்லூரி கீதம் பாட, வரவேற்புரைக்குப் பின் தலைமையுரையை தலைவர் அவர்கள் ஆற்ற பின் வாழ்த்துரையை மத்ரஸா உலமாக்கள் ஆற்றினார்கள். பின் பட்டம் பெறும் மௌலவி மார்களுக்கு 'முஸ்தபி' பட்டத்தை சங்கைமிகு ஷெய்குநாயகம் ஸைபுத்தீன் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் வழங்கி ஆசியுரை வழங்கினார்கள். இறுதியில் துஆ பிராhத்தனையுடன் ஸலாவத் ஓதி நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன.
பட்டம் பெற்ற மாணவர்கள்:
1. மௌலவி ஜே. முஹம்மது மபாயிஸ் முஸ்தபி, அக்கரைப் பற்று,
2. மௌலவி ஏஎம். முஹம்மது அஹ்ஸன் முஸ்தபி, அத்துக்கல, பொலனறுவை.
3. மௌலவி எம்.எஸ். முஹம்மது றியாழ் முஸ்தபி, பல்லியா கொட, அக்பர்புர, பொலன்னறுவை.
4. மௌலவி ஆர்எம். முஹம்மது மர்சூக் முஸ்தபி, சுங்காவில், பொலன்னறுவை.
5. மௌலவி எம். அறபாத் முஸ்தபி, ஏறாவூர்.
தலைப்பாகை சூடும் மாணவர்கள்:
1. ஜனாப். எம். முஹம்மது பிர்தௌஸ், ஏறாவூர்
2. ஜனாப். டி. முஹம்மது நிஸ்வர், ஏறாவூர்.
3. ஜனாப். என்.எல். முஹம்மது பாரிஸ,; ஏறாவூர்.
மத்ரஸாவிற்காக நன்கொடைகளை அனுப்பி அல்லாஹ்வின் நல்லருளையும் ஷெய்குமார்களின் துஆபரக்கத்தையும் பெற்றிட அன்புடன் வேண்டுகிறார்கள் ஏறாவூர் மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலை நிர்வாகத்தினர்.
மத்ரஸாவிற்கான செலவுகள் விபரம்: (ஒருநாள் செலவுகள்- இலங்கை ரூ.)
1. காலை உணவு ரூ. 1500
2. மதிய உணவு ரூ 2500
3. இரவு உணவு ரூ 2000
4. மூன்று வேளை தேனீர் ரூ 500
மொத்தம் இலங்கை ரூ 6500
பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்:
Eravur-People's Bank A/C No: 123-1001-10000-396.
ஹிஸ்புல்லாஹ் ஸபை,
ஸூபி மன்ஸில்,
காட்டுப்பள்ளி வீதி, ஏறாவூர்.
Phone: 0094-652240469