வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி (அல்-ஜாமியுல் இழ்ரார்-(AL JAMIUL ILRAR) உருவாக காரணகர்த்தாக்கள்

வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி (அல்-ஜாமியுல் இழ்ரார்-(AL JAMIUL ILRAR) உருவாக காரணகர்த்தாக்கள்

By Sufi Manzil 0 Comment April 11, 2010

தென்னிந்தியா, தூத்துக்குடி மாவட்டம் (முன்னாள் திருநெல்வேலி மாவட்டம்) காயல்பட்டணம் நகரில் பெரும்பான்மையாக வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஷாபி மத்ஹபைப் பின்பற்றி தொழக் கூடியவர்கள். ஆங்காங்கே ஐவேளை தொழுகை நடத்துவதற்கென்று பள்ளிகள் இருந்தபோதிலும், ஊர் முஸ்லிம்கள் அனைவர்களும் ஷாபி மத்ஹபின் படி வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகை சேர்ந்து தொழுவதற்கு ஊரின் மத்தியில் அமைந்துள்ள குத்பா பெரிய, குத்பா சிறிய பள்ளியில்(வாரம் ஒரு பள்ளியில்)தான் ஜும்ஆ தொழுகை நடைபெறுவது வழக்கமாயிருந்தது. ஊர் பொதுமைக்கும் அந்தப் பள்ளியே போதுமானதாக இருந்தது.

ஒற்றுமையாக இருந்துவந்த ஊரில் கடந்த 1953-54-ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் L.K. லெப்பைத் தம்பி ஹாஜி அவர்களும், M.K.T. அபூபக்கர் ஹாஜி அவர்களும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ரோஷமாக இரு பிரிவினர்களும் மோதிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு, இறுதியில் M.K.T. அபூபக்கர் ஹாஜி அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஒற்றுமையாக இருந்து வந்த ஊரை மிகச் சிறுபான்மையினராக இருந்து வந்த ஒரு குழுவினர் – இந்தச் சூழ்நிலையை தமக்குச் சாதகமாக மாற்றியமைத்து அப்போது புதிதாக ஊருக்குள் அடியெடுத்து வைத்திருந்த தப்லீக் ஜமாஅத்தினர் (Zaviya kayalpatnam), சுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் தந்திரமாக பிளவை ஏற்படுத்தி,  பிரச்சினைகளை முற்ற வைத்து அதுவரை ஊரில் நடைபெற்று வந்த ஒரு ஜும்ஆவிற்கும் அதிகமாக மற்றொரு புதிய ஜும்ஆவை ஹிஜ்ரி 1374, ஷஃபான் மாதம் பிறை 7 (1-4-55) முதல் ஊரின் புதுப்பள்ளியில் உண்டாக்கி விட்டனர்.

இந்த ஜும்ஆ ஆரம்பிக்குமுன், ஊரின் முதுபெரும் உலமாவான முஹ்யித்தீன் தம்பி ஆலிம் அவர்கள் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு ஊர் பிரிவினையைத் தடுத்து, முஸ்லிம்களிடையே ஒற்றுமையை ஓங்கச் செய்ய சில முயற்சிகளை எடுத்தார்கள். அதில் அவர்கள் புதிய ஜும்ஆ ஆரம்பிக்கப் போவதைக் கேள்வியுற்றவுடன் அந்தத் தரப்பு பெரியவர்களை சந்தித்து இதைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு தாங்கள் எடுத்த முடிவிலேயே உறுதியாக இருந்தார்கள்.

அதனால் இறுதியாக இஸ்லாமிய ஷரீஅத்தைக் காக்க 1955 ஆம் வருடம் துல்கஃதா மாதம்  ஒரு பத்வா வெளியிட்டார்கள். அதில் ஷாபி மத்ஹப் படி காயல்பட்டணம் நகரில் இரண்டாவது ஜும்ஆ நடைபெறுவது கூடாது, அது ஹறாம். அவ்வாறு நடந்தால் அல்லாஹ்வின் கஹ்ர் இறங்கும் என்று குர்ஆன், ஹதீது ஆதாரத்தோடு கூறியிருந்தனர். இது ஜும்ஆ மொழி பெயர்ப்பு என்று தமிழில் நூல் வடிவில் வெளிவந்தது.

இந்த பத்வாவின் உண்மையைக் கண்டு அதற்கு எதிர் பத்வா வெளியிட எதிர்தரப்பினர், முன்னர் மேற்படி ஆலிம் அவர்களிடம் தாங்கள் முன்னர்கூறிய காரணங்களைக் கூறாமல், தங்களின் வசதிக்கேற்ப புதிய காரணத்தைக் கூறி இரண்டாவது ஜும்ஆ நடத்துவது ஆகும் என்று பத்வா வெளியிட்டனர். இது ஜும்ஆ பத்வா விளக்கம் என்ற பெயரில் ஒரு பத்வா நூல் 25-11-1955 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அந்த பத்வாவை தொகுத்தவர் காயல்பட்டணம் ஜாவியா மத்ரஸாவின் முதல்வராக இருந்த சா.ஷாஹுல் ஹமீது ஆலிம் முப்தி என்பவர்கள். அவர்கள் சொன்ன காரணம்: ‘கிதால்’ என்னும் நோக்கமாக சொல்லப்பட்டது. உயிர்க்கும், பொருளுக்கும், மானத்திற்கும் பாதுகாப்பில்லை என்றும் ஊரில் உள்ள நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே பள்ளியில் ஜும்ஆ தொழ முடியாமை ஆகிய இரு காரணங்கள் சொல்லப்பட்டு இரண்டாவது ஜும்ஆ ஆகுமானது என்றும் விளக்கப்பட்டிருந்தது.

இந்த பத்வாவில் வினா கேட்டவர் கேட்ட கேள்விக்கு (அதாவது உயிர், பொருளுக்கும், மானத்திற்கும் பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களுக்கு) உரிய பதிலை அளித்ததினால் அந்த பதிலை சரியானதாக ஏற்று காயல்பட்டினத்தை சாராத வெளியூர் உலமாக்கள் (அவர்கள் காயல்பட்டணத்தின் உண்மை நடப்புகளை அறியாததின் காரணத்தினால்) அதில் கையொப்பம் இட்டிருந்தனர்.

 ஆனால் உண்மையில் எவ்வித கொலை பாதகமும் நடைபெறக் கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை. பல்வேறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தன. அதுவும் காலப்போக்கில் மறைந்துவிட்டன. இரு பகுதியிலும் உள்ளவர்கள் வீடுகளில், பள்ளிகளில், தைக்காக்களில், தர்காக்களில் நடைபெற்ற விஷேசங்கள், துக்க சம்பவங்களுக்கு சென்று வரக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். ஒரு கொலை பாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பின் பயத்தால் ஒருவர் பகுதிக்கு மற்றவர்கள்(எதிர்தரப்பினர்கள்) செல்லமாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. அச் சூழ்நிலை இல்லாததால் இவர்கள் வெளியிட்ட பத்வா காரணமில்லாமல் போய்விடுகிறது. அதனால் இரண்டாவது ஜும்ஆ என்பது  அவர்கள் கூறிய காரணத்தினாலேயே கூடாததாகி விடுகிறது.

மேலும் ஊரின் ஜும்ஆ தொழக்கூடிய மக்கள் ஒரே பள்ளியில் தொழுவதற்கு போதிய இடவசதியும் இருந்திருக்கிறது. இது நன்றாக யூகித்துப் பார்த்தாலே நன்கு விளங்கும்.

ஆனால் இவையனைத்தையும் அறிந்த காயல்பட்டினத்தில் பிறந்து, வளர்ந்த கற்றறிந்த மக்கள், குறிப்பாக உலமாக்கள்; செய்த மாபெரும் பிழை இதை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டத் தவறியதுதான்.

அதனால்தான் இரண்டாவது ஜும்ஆவிற்கென்று புதிய பள்ளியை உருவாக்கும் நிலைக்கு செல்ல நேரிட்டது. அது வழிகேட்டிற்கும் வித்திட்டது.

இவ்வாறு வழிகேட்டிற்கு வித்திட்ட இரண்டாவது ஜும்ஆ பற்றிய பத்வாவிற்கு ஆதரவளித்து கையொப்பமிட்ட காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்களின் விபரங்கள்:

  1. யூசுபு சாகிபு தம்பி மரைக்காயர் அவர்களின் குமாரர் (அல்ஹாபிழ்-அல்ஆலிம்) சாகுல் ஹமீது (பத்வா எழுதியவர்)
  2. ஜனாப். நுஸ்கி ஆலிம் அவர்களின் புதல்வர், (அல்லாமா, அல்ஹாபிழ்) முஹம்மதுஅபூபக்கர் மிஸ்கீன்.
  3. அல்லாமா அல்ஹாஜ் முஹம்மது இபுறாஹீம் (கண்டி ஆலிம்) அவர்களின் புதல்வர்(மௌலவி அல்ஹாபிழ், அல்-ஹாஜ்) முஹம்மது அபுல்ஹஸன் (கொழும்பு சாஹிராக் கல்லூரி அரபி போதகர்) காயல்பட்டினம்.
  4. அல்லாமா ஹாமித் லெப்பை ஆலிம் அவர்களின் புதல்வர்(அல்-ஆலிம்) செய்கு சலாகுத்தீன்.
  5. அல்லாமா அல்ஹாபிள் ஹஸனுந் நுஸ்கீ அவர்களின் புதல்வர் (அல்ஹாபிழ் அல்லாமா) முஹம்மது அப்துல் காதிர் ஆலிம்,
  6. அல்ஹாஜ் சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களின் புதல்வர், (அல்ஹாஜ்) பா.சு. முஹம்மது அப்துல்லாஹ் (ஆலிம், சதக்கலீ)
  7. முஹ்யித்தீன் அப்துல் காதிர்ஆலிம் அவர்களின் புதல்வர் (அல்ஆலிம்) முஹம்மது அப்துர் ரஹ்மான்(சதக்கலீ)
  8. முஹ்யித்தீன் அப்துல் காதிர்ஆலிம் அவர்களின் புதல்வர் (அல்ஹாபிள் அல்ஆலிம்) முஹம்மது அப்துர் ரஹீம்(சதக்கலீ)
  9. செய்யிது அஹ்மது அவர்களின் புதல்வர், சின்ன அஹ்மது (ஆலிம்)
  10. சதக் இப்றாஹீம் அவர்களின் புதல்வர் (அல்ஹாபிள், அல்ஆலிம்) முஹம்மது அலீ சாஹிப்,
  11. அல்ஹாபிள் அல்ஆலிம், முஹம்மது நூஹுல் ஹஸனிய்யி அவர்களின் புதல்வர் (அல்ஹாபிழ்) முஹம்மது அபூபக்ரு அஜ்வாத் (ஆலிம்)
  12. முஹம்மது மரைக்காயர் அவர்களின் புதல்வர், (அல்ஹாபிழ் அல்லாமா) செய்யிது இப்றாஹீம் (ஆலீம் சாகிபு)
  13. அப்துல்லாஹ் சதக்கலீ அவர்களின் புதல்வர் மஹ்மூது சுலைமான் (ஆலீம்)
  14. முஹம்மது அப்துல்லாஹ் சதக்கலீ அவர்களின் புதல்வர் முஹம்மது செய்கு சதக்கத்துல்லாஹ்(ஆலிம்)
  15. அஹ்மது மீரான் சாகிபு அவர்களின் புதல்வர் (அல்ஹாபிள்) முஹம்மது அலி சாகிபு(ஆலிம்)
  16. கண்ணாப்பிள்ளை மரைக்காயர் முஹம்மது ஸதக்கத்துல்லாஹ் (ஆலிம் ஹாபிள்)
  17. செய்யிது இபுறாகீம் அவர்களின் புதல்வர் ஹாபிள் சாகுல் ஹமீது (ஆலிம்)
  18. முஹம்மது இஸ்மாயீல் அவர்களின் புதல்வர், (மௌலவி அல்ஆலிம்) அபுல்ஹஸன் (கொழும்பு அல்ஜாமிஉல் அள்பர் பேஸ்இமாம்)
  19. அல்லாமா முஹம்மது இஸ்மாயீல் ஆலிம், அந்நுஸ்கிய்யி, அத்துர்ரிய்யீ, அவர்களின் புதல்வரும், உலமாக்களின் ஊழியருமான யான் (மௌலானா மௌலவி அல்ஹாபிள்)தை.மு.க. செய்யிது முஹம்மது (ஆலிம்) பக்ரீ. மட்டக்களப்பு- காயல்பட்டினம்.
  20. நூஹு அவர்களின் புதல்வர் சுல்தான் அப்துல் காதிர் (ஆலிம்)
  21. கா.தி. நூகுத் தம்பி அவர்களின் புதல்வர், காதிர் சாகிபு (ஆலிம்)
  22. நூ.த. செய்கு ஸுலைமான் லெப்பை அவர்களின் புதல்வர், (அல்ஹாபிள்) முஹம்மது நூஹுத் தம்பி (ஆலிம்)
  23. நூ.த. செய்கு ஸுலைமான் லெப்பை அவர்களின் புதல்வர், (அல்ஹாபிள்) செய்கு அப்துல்லாஹ் சாகிபு (ஆலிம்)
  24. கல்விக் கடல் முஹம்மது யூஸுப் லெப்பை ஆலிம் அல் பாஸில், அல் காஹிரி அவர்களின் புதல்வர், அஸ்ஸையிதுஸ் ஸாதாத் அல்காஸிமுல் ஹுஸைனிய்யி அஸ்ஸையிது முஹம்மது அப்துர் ரஹ்மான் புகாரீ (மவ்லானா)
  25. ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் புதல்வர், (மௌலவி) அப்துல் மஜீது (ஆலீம்-ஜமாலீ) காயல்பட்டினம்-கீழக்கரை
  26. அல்ஹாபிழ் எம்.ஐ. நூஹு பின் மாதிஹுல் கௌது

இந்நிலையில், இந்த வழிகேட்டு பத்வாவின் அடிப்படையில் புதிய ஜும்ஆவிற்கென்று பள்ளி ஒன்றைக் கட்டுவதற்கு S.O. ஹபீபு அவர்கள், S.A.ஹபீபு அவர்கள், P.S. அப்துல் காதிர் நெய்னா அவர்கள் போன்ற பெரியவர்கள் பெரும் முயற்சி எடுத்து புதிதாக ‘அல்ஹாமிவுல் அஸ்ஹர்’ என்ற பெயரில் பள்ளியை மெயின் ரோட்டில் கட்டி முடித்தனர்.

புதிய ஜும்ஆ பள்ளி பற்றி நம் ஷெய்குனா ஸுபி ஹஜ்ரத் அவர்கள் கூறியது:-

புதிய பள்ளி கட்டி திறக்கப்படும் போது, பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தனர் என்றும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இலங்கை தப்லீக் இயக்கத்தின் ஸ்தாபனரும் முன்னாள் அமீருமான K.A. முஹம்மது அலி ஹாஜியார் அவர்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் தப்லீக் இயக்கத்தின் சேவை பற்றி விரிவாக பேசியதாகவும் அப்பள்ளியின் நிர்வாகத்தினர்களால் வெளியிடப்பட்ட நன்றி அறிக்கை (01-10-58) கூறுகிறது. அச் சமயத்தில் அப்பள்ளியைத் தோற்றுவித்த பிரமுகர்கள், கதீப் மற்றும் ஆலிம்கள் உடனிருந்தனர் என்று அவ்வறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது என்பது அப்பள்ளி எந்நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது விளங்க வரும்.

அப்பள்ளி திறப்புவிழா 26-9-58 வெள்ளிக்கிழமை (ஹிஜ்ரி 1378 ரபீயுல் அவ்வல் பிறை 12) அன்று  திறக்கப்பட்டது. இதற்கு ஹிஜ்ரி வருட கணக்கின்படி ஒரு வருடத்திற்கு முன்பே திறக்கப்பட இருந்தது. நமது ஷெய்குனா அவர்கள், அவ்வாண்டை அப்ஜத் முறைப்படி கணக்கிட்டுப் பார்த்து, இப்பள்ளி குர்ஆனில் கூறப்பட்ட முனாபிக்குகளின் பள்ளியான  ‘மஸ்ஜிது ளிரார்’  என்ற ஆயத்தோடு ஒத்துவருகிறது. எனவே இப்பள்ளி  ‘அல்ஜாமிவுல் ளிரார்-‘

الجامع الضرار

வழிகெட்ட பள்ளி ஆகும் என்று பயானில் பகிரங்கமாக எடுத்துரைத்தார்கள்.

(குறிப்பு:- முஸ்லிம்களிடையே பிளவையுண்டாக்கக் கருதி நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்) மஸ்ஜித் ளிறார் என்ற ஒரு புதியபள்ளியைக் கட்டினார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தபூக் சண்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம் தாங்கள் கட்டிய பள்ளிக்கு தொழவரவேண்டுமென்று நபியவர்களளை அழைத்தார்கள். சண்டைக்கு சென்று திரும்பி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நபியவர்கள் சென்று விட்டார்கள்.  சண்டை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சந்தப்பத்திலே ‘முஸ்லிம்களுள் பிளவையுண்டாக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கிழைக்க வேண்டுமென்பதற்காகவே, அந்த மஸ்ஜித் ளிறார் என்ற பள்ளி நயவஞ்சகர்களால் கட்டப்பட்டிருக்கிறது. நன்மையைக் கருதியே அப்பள்ளியை நாங்கள் கட்டினோம் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள். நபியே! நீர் அங்கு செல்ல வேண்டாம். ஆரம்பத்திலே உள்ள பள்ளிதான் நீர் தொழவும், தொழ வைக்கவும் தகுதியானது’ என்று நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்தான். பிறகு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் கட்டளைப்படி மஸ்ஜிதுல் ளிறார் என்ற அந்த பள்ளி நெருப்புக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவம் திருக்குர்ஆன் ஸூரா அத்தவ்பா, ஆயத்து 107, 108, 110 லும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சரித்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது) ஷெய்குனா அவர்கள் எடுத்துக் காட்டிய அதன் அப்ஜத் கணக்கு:

ا-1          ل-30              ج-3              ا-1               م-40                     ع-70                     ا-1
ل-30         ا-1           ض—800           ر-200             ا-1                     ر-200          =1378

அதன்பின்னால் அப்பள்ளியின் நிர்வாகத்தினர் அப்பள்ளியின் திறப்புவிழாவை அடுத்தவருடம் தள்ளிபோட்டனர். அடுதத பயானில், ‘அவர்கள் நான் சொன்னதை வைத்து திறப்புவிழாவை ஒரு வருடம் தள்ளிப் போட்டுவிட்டனர். நீங்கள் ளிரார் என்பதுடன் ஒரு வருடத்திற்குரிய கணக்கான அலிஃபை சேர்த்து ‘அல்ஜாமிவுல் இழ்ரார்’-  الجامع الاضرار வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி என்று வைத்துக் கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்கள். ஷெய்குனா அவர்கள் இதை ஒரு பள்ளியாகவே ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

(இந்த சா. ஷாஹுல் ஹமீது ஆலிம் முப்தி அவர்கள் தமது இறதி காலம் வரை நமது ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராகவே நடந்து வந்தார் என்பதும், ‘பித்னாவாதி’யாகவே செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்னாரைப் பற்றி கம்பத்தில் வாழ்ந்த அம்பா நாயகம் அவர்கள் அன்னாரின் இறுதிநிலை சரியானதாக இல்லை என்று கூறியுள்ளார்கள்.)

ஷெய்குனா அவர்களின் கூற்றுப்படி தற்போது வரை இப்பள்ளி வஹ்ஹாபிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு மக்களை இன்னும் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவர்களால்  முன்னறிவிப்பு செய்யப்பட்ட ஒரு கராமத்தாக உள்ளது.