Madihur Rasool Sadackathullah wali- மாதிஹுர் ரஸூல் செய்கு சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
Sadakathulla Appa Waliyullah : (1042 – 1115 A.H / 1632 – 1703 A.D)
Sadakathulla Appa Waliyullah is widely known as Madihur Rasul. Sadakathulla Appa was the third son of Saint Sulaiman Waliyullah. He was born on 1042 A.H. He studied under his father. Later he went to Adirampattinam and studied under his father’s class mate Magudoom Shaikh Abdul Qadir alias Magudoom Shinnina Lebbai Alim Wali who built the Jumma Mosque in Adirampattinam around 1640 A.D Magudoom Shinnina Wali and Sulaiman Wali studied under Periya Shamsuddeen Wali around 1020 A.H. He taught both men and jinns.
Qasidatul Witriyyah is the famousArabic Epic of Sadakathulla Appa. He has composed several thousand lines of long and short poems. His works also include commentaries on the works of famous Arab authors, criticism on some famous writings and contributions in the form of takhmis and tashtir. He visited various parts of India and preached Islam. He met the great Moghul emperor Aurangazib at Jamiah Mosque near the Red Fort, Delhi. The emperor maintained good relatinship with him and appointed his son Muhammad Lebbai Alim Wali as one of the scholars in the group of Alims who had prepared the famous fatwas called Fatwa Alamgiri. Sadakathulla Appa worked in Mecca and Madina for two years. He taught various subjects to the students in the holy cities. His younger brothers Salahuddin Wali and Samu Shihabuddin Wali traveled with him and propagated Islam. Sadakathulla Appa mostly spent his time in prayer and Dikr at Errattai Kulam Palli. At his old age he stayed at Keelakarai. Follwing Sadakathulla Appa SeethaKadi also went and settled at Keelakarai. When his master and guide Magudoom Shinnina Lebbai Alim came to Erwadi, he invited him and requested to stay at Keelakarai.The shrines of saint Magudoom Sinnina Alim and of a saint sadakathulla Appa are at Keelakarai.
மாதிஹுர் ரஸூல் செய்கு சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு.
காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் செய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூன்றாவது மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1042 ம ஆண்டு இவ்வுலகில் அவதரித்தார்கள். தமது தந்தையின் பெயராகிய சதக்கா என்ற பெயரை இவர்களுக்கு சூட்டினார்கள். தம் தந்தையிடம் குர் ஆனை ஏழு வயதிற்குள்ளேயே ஓதி முடித்து மனனமும் செய்துவிட்டனர். தன் தந்தையிடமே மார்க்க சட்டதிட்டங்களையும் படித்தார்கள்.
தந்தை தமது மகனை உயர்தரமான மார்க்க, ஆன்மீக கல்வி கற்க தமது பள்ளித் தோழர் அதிராம்பட்டினம் மஹ்தூம் சின்னானீ லெப்பை ஆலிம் அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள். கல்வி கற்று ஊர் வந்த பின் மேலப்பாளையத்தில் வாழ்ந்த ஒரு இறை நேசர் குடும்பத்தில் தோன்றிய மர்யம் என்ற மாதரசியை மணம் முடித்து வைத்தார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு முஹம்மது லெப்பை என்ற ஆண் மகனும், கதீஜா,ஆமீனா,ஜைனப்,உம்மு ஹானி,ஸாரா ஆகிய ஐந்து பெண் மக்களும் பிறந்தனர். ஸாரா என்ற பெண் மகளைத் தவிர மற்ற அனைவருக்கும் காயல்பட்டணத்திலேயே திருமணம் முடித்துக் கொடுத்து விட்டனர்.
பஞ்ச காலத்தில் காயல்பட்டணம் இரட்டைக் குளத்துப் பள்ளியில் அமர்ந்து மக்களுக்கு போதனை செய்து கொண்டிருக்கும்போது,அந்தமான் தீவிற்கு மழை பொழிவதற்காக தம் படையினருடன் சென்று கொண்டிருந்த மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கலந்துரையாடி, காயல் நகரில் மழை பொழிய செய்ய வைத்தனர். இதந்காகவே இப் பள்ளிக்கு மீகாயீல் பள்ளி என்று பெயர் வரக் காரணமாயிற்று. மேலும் அப்பா அவர்கள் இந்தப் பள்ளியில் நரக வேதனையைப் பற்றி அற போதம் வழங்கிக் கொண்டிருக்கும் போது, இந்தக் கல் கூட இதனால் கண்ணீர் வடிக்குமே! என்று உரைத்தார்கள்;. இவர்கள் உரை கேட்டு மக்கள் கண்ணீர் வடித்தனர். அவர்கள் கூறிய கல் தூணிலிருந்தும் நீர் கசிந்தது. 2008 ம் ஆண்டு வரை அக்கல் ஈரம் கசியும் படியே இருந்தது. ஆனால் பள்ளி விரிவாகக்கத்தின் போது அக் கல்லை சிமிண்ட்டால் பூசி மெழுகி விட்டனர்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது முஹம்மது இப்னு அபுபக்ருல் பக்தாதி ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள் அரபியில் இயற்றிய வித்ரிய்யா ஷரீஃபை ஐந்தடி பாக்களாக தக்மீஸ் செய்து எழுதி முடித்தனர். மேலும் ஹஜ் சென்று விட்டு மதினாவில் இரண்டு ஆண்டுகள் தங்கி அங்கு அரபிகளுக்கு மார்க்கத்தை போதித்து வந்தார்கள். இடைக்கிடையே மக்கா சென்று உம்ரா செய்து வந்தனர்.
நகர் திரும்பி வந்த அவர்கள் புகழ் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு சென்றது. மக்கள் அவர்களுக்கு பெரிதும் மரியாதை செய்தனர். ஜும்ஆ தொழச் சென்றால் அவர்களுக்கு குடை பிடித்து செல்வர் அவரது சீடர்கள். அப்பா அவர்கள் விரும்பாமலேயே நடந்து வந்தது. இதைப் பொறுக்காத பணக்கார நெய்னார் ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டு ‘என்ன இது? நெய்னாருக்கும் குடை, நெய்யக்காரி மகனுக்கும் குடையா?’ என்று அப்பா அவர்கள் காதுபட உரைத்தார். இதைக் கேட்ட அப்பா அவர்கள் அவர் என்னை அவமதிக்கவில்லை, கல்வியை அவமதித்தார். எனவே அவரும்,அவரின் வழியில் தோன்றும் ஏழு தலைமுறையினரும் கல்வியின் நறுமணத்தை நுகரமாட்டார்கள்’ என்று சொன்னார்கள். இத்துடன் மனம் வெதும்பி தான் கல்வி பயின்றதும், தனது ஆசிரியர் இருக்குமிடமான கீழக்கரையை தன் இருப்பிடமாக்கிக் கொள்ள தன் மனைவி மற்றும் மகள் ஸாரா அம்மையார் ஆகியோருடன் காயல்பட்டணத்தை விட்டு வெளியேறி கீழக்கரை சென்று குடியேறினார்கள். இறுதி காலத்தில் தங்களது ஆசிரியர் மஹ்தூம் சின்னானீ லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தம் வீட்டிலேயே வைத்திருந்தனர். அவர்கள் வபாத்தான (ஹிஜ்ரி1071,ரபியுல் அவ்வல் 5) பின் பழைய ஜீம்ஆ பள்ளியிலேயே அடக்கம் செய்தனர். அவர்கள் வாழ்ந்து வந்த வீடு தற்போது உஸ்வத்துல் ஹஸனா சங்கமாக செயல்படுகிறது.
நாகூர் சென்று சாகுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தரிசித்தார்கள். தக்கலை சென்று பீர் முஹம்மது அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்து உரையாடிவிட்டு வந்தார்கள். வள்ளல் சீதக்காதி அவர்கள் உமறுப் புலவர் அவர்களை அழைத்து வந்து சீறாப் புராணம் என்ற காவியம் எழுத உரை நல்கினர்.
அல்லாஹ் என்ற சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ‘தவாலீஹுத் தலாலா-பீ தஸ்ஹீஹுல் ஜலாலா’ என்ற நூலையே எழுதினார்கள். அவ்ரங்கஜீப் பாதுஷh இவர்களை வங்காள கவர்னராக நியமிக்க அப்பா அவர்களிடம் அனுமதி கேட்டு நின்ற போது அதை மறுத்த அப்பா அவர்கள் பாதுஷh அவர்கள் மீண்டும் வேண்டி மருவி நிற்க, தங்கள் பிரதிநிதியாக வள்ளல் சீதக்காதி மரைக்காயரை அப் பதவிக்கு நியமித்தார்கள். வள்ளல் அவர்கள் சீதோஷண நிலை அங்கு ஒத்து வராததால் சில மாதங்களிலேயே ஊர் திரும்பி விட்டனர். அதற்குப் பின் தமிழக காழி பதவி வகிக்க அப்பா அவர்களை பாதுஷh அவர்கள் வேண்டிட, அதற்கும் அப்பா அவர்கள் மறுத்து விடவே பின்னர் வற்புறுத்தலுக்கிணங்க தமது மகனார் முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அப்பதவிக்கு ஏற்படுத்தினார்கள். காயல்பட்டணத்தில் அலுவலகத்தை அமைத்து அப்பதவியை நிர்வகித்தார்கள்.
வித்ரியாவோடு பானத் சுஆத், புர்தா,துக்ருல் மஆது,தப்ரீஜுல் குரபு ஆகிய நூல்களுக்கும் தக்மீஸ் எழுதியுள்ளார்கள். இவற்றைத் தவிர பல நூல்களும், கஸீதாக்களும் குறிப்பாக ஹஜ்ரத் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹீ அவர்கள் மீது யா குத்பா கஸீதாவையும் இயற்றியுள்ளார்கள்.
பள்ளிவாயில்களில் தொழுகை, வணக்கம் ஆகியவற்றைத் தவிர்த்துள்ள செயல்களை ஆற்றுவதும், பேச்சுக்கள் பேசுவதும் பல்லாண்டு வணக்கத்தைப் பாழாக்கி விடும் உன்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை மனத்தில் கொண்டு, பள்ளிவாசல்களை உள் பள்ளி, வெளிப் பள்ளி என இரு அங்கங்களாக வகுத்து நிர்மாணிக்கும் முறையைத் தோற்றுவித்தவர்கள் அப்பா அவர்களே! உள் பள்ளி தொழுகைக் கூடமாகவும் வெளிப் பள்ளி சமுதாய மன்றமாகவும், நீதி விசாரணை, திருமணம், மார்க்கப் போதனை ஆகியவை நடக்குமிடமாகவும் ஆக்கினர்.
அப்பா அவர்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் அப்பா அவர்களின் தம்பி ஸலாஹுத்தீன் வலி, ‘அஃபதுன் னாஸ்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற காயல் செய்கு அப்துல் காதிர் அவர்களும், மஹ்மூது தீபி வலி அவர்களும் ஆவார்கள். ஷரஹுஸ் ஷரீஆ, ஷரஹுப் புலி, மாதிஹுர் ரஸூல், அல் அல்லாமத்துல் ஹிந்த், சுல்தானுல் உலமாயில் அரபி வல் அஜம் போன்ற எண்ணற்ற பட்டப் பெயர்கள் பொண்டு மக்கள் அழைத்தனர்.
இவ்வாறு பெரும் புகழ் பெற்ற ஆன்மீக நாதர் சதக்கத்துல்லாஹில் காதிரி காஹிரி அவர்கள் ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 5 வியாழன் இரவு தங்களது 83 வது வயதில் இந்த அழியும் உலகத்தை விட்டு அழியா உலகை கென்றடைந்தனர். இவர்களின் பொன்னுடல் கீழக்கரை ஜாமிஆ மஸ்ஜிதில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் கந்தூரி வைபவம் காயல்பட்டணம் ஸாஹிபு அப்பா தைக்காவிலும், கீழக்கரையிலும் மற்றும் பல்வேறு நகரங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. காயல்பட்டணம் அப்பா அவர்களின் கந்தூரி வழாவிற்கென்று ஏக்கர் கணக்கில் சொத்து எழுதி வைக்கப்பட்டுள்ளது.