Greatness of Salawats and its Uses-ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும்.

Greatness of Salawats and its Uses-ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும்.

By Sufi Manzil 0 Comment May 8, 2010

Print Friendly, PDF & Email

ஸலவாத்தின் மகத்துவமும், அதன் பலன்களும்.

தொகுப்பாளர்: அல்-ஹாபிழ். F.M . இப்றாஹிம் ரப்பானி ஆலிம்.

 

'திடனாக அல்லாஹ்வும் இன்னும் அவனது மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர். விசுவாசிகளே! நீங்களும் (அந்நபியின் மீது) ஸலவாத்துச் சொல்லி இன்னும் ஸலாம் சொல்லும் விதமாக ஸலாமும் சொல்லுங்கள்.; -அல்-குர்ஆன் 33:56.

ரஸூல் இல்லையேல்….

நபியே! உம்மை நாம் படைத்திருக்காவிடில் இவ்வுலகைப் படைத்திருக்க மாட்டோம். நபியே! நாம் உம்மை படைத்திருக்காவிடில் விண்ணுலகைப் படைத்திருக்க மாட்டோம். நபியே! நாம் உம்மை படைத்திருக்காவிடில் நமது நாயகத்தன்மையை நாம் வெளிப்படுத்தி இருக்க மாட்டோம். (அல்-ஹதீஸ்)


 

ஒருவர் தனது மனைவி, மக்கள் மற்றும் அளைவரைக் காண என்னை (அதிகம்) நேசிக்காதவரை உண்மையான விசுவாசியாக மாட்டார். (அல்-ஹதீஸ்)

ஈமான் கொண்ட விசுவாசிகளே தன்னைவிட, தன் தாய் தந்தையரை விட, தான்பெற்ற பிள்ளைகளை விட, தன் மனைவியை விட, தேடிய செல்வத்தை விட, தன்னுயிரை விட மேலாக என் ரஸூலை நேசிக்காதவரை நீ உண்மையான முஃமினாக முடியாது. நிச்சயமாக நானும், மலக்குகளும் என் நபியின் மீது சலவாத்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம். எனவே முஃமின்களே நீங்களும் என் நபியின் மீது ஸலவாத்து சொல்லுங்கள்.

என்னுடைய ரஸூலை கண்ணியப்படுத்துபவர்களை நான் சகல விதத்திலும் கண்ணியப்படுத்துகிறேன்.

கிடைத்தற்கரிய இந்த பொக்கிஷத்தை பேணிப் பாதுகாத்து அல்லாஹ்வுடைய கண்ணியத்தைப் பெறுங்கள்.

ஒருநாள் காலை இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம். ஒரு பெண் கண்ணீர் வடித்தபடி வருகிறார்,

தன்னுடைய இளம் வயது மகள் கடந்த சிலவ நாட்களுக்கு முன் இறந்து விட்டாள், நேற்றிரவு என் கனவில் அவள் தலைவிரி கோலமாக எரியும் நெருப்பின் மத்தியில் என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்! என ஓலமிடுவதைக் கண்டேன். இதன் பொருள் என்ன? என்று கேட்க, அதற்கு இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்கள் மகள் நரகத்தில் இருக்கிறாள். அவளுக்காக சதகா செய்யுங்கள் என்று கூறி அனுப்பினார்கள்.

அன்றிரவு ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கனவில் புதுப்பெண் கோலத்தில் ஒரு பெண் வந்து, சலாம் கூறி என்னைத் தெரியவில்லையா? என்று கேட்க, அவர்களும் நீ யார்? என்று வினவுகிறார்கள்.

அதற்கு அந்தப் பெண் நேற்று காலை தங்களிடம் ஒரு பெண் வந்து என்னைப் பற்றி என் நிலையினைப் பற்றி தங்களிடம் கூறியபோது என் பேரில் சதகா அதிகம் செய்யும்படி கூறி அனுப்பினீர்கள் அல்லவா! அவரின் மகள்தான் நா ன்' என்று கூற… அதற்கு இமாம் அவர்கள் நீ எப்படி சொர்க்கத்திற்குள் வந்தாய்? என்று கேட்க…, நேற்று காலை எனது கப்ரின் வழியாகச் சென்ற ஒரு வழிப் போக்கர் செல்லும் வழியில் ஒரே ஒரு ஸலவாத்தை சொல்லி அதன் தவாபை எனக்கு எத்தி வைக்க, அல்லாஹ்விடம் துஆ கேட்டுவிட்டுச் சென்றார். அந்த ஸலவாத்தின் பொருட்டு அல்லாஹ் என்ககு சொர்க்கத்தை வழங்கிவிட்டான் என்று கூறியதாக சரித்திரச் சான்றுகள் கூறும்.

இறைவனின் இனிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: 'என்னிடம் வானவர் கோமான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்கள் வருகைதந்து, ஒருவர் தங்கள் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்வாரேயாயின் நான் அவரது கரம் பற்றி சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாக தாண்டச் செய்வேன். மீக்காயில் அலைஹிஸ்ஸலாம் வந்து, அவருக்குத் தங்களின் ஹெளழுல் கௌஸரின் தடாகத்திலிருந்து தண்ணீர் புகட்டுவேன். இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, நான் அவருக்காக இறைவனின் திருமுன் ஸுஜுது செய்து அவரது பாபங்கள் மன்னிக்கப்படும்வரை எனது தலையை நான் ஸுஜூதிலிருந்து உயர்த்த மாட்டேன். இஜ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, நான் அவரது ரூஹை நபிமார்களின் ரூஹை கைப்பற்றுவது போன்று எளிதாகக் கைப்பற்றுவேன் என்று கூறினர்.

அடுத்து ஷெய்கு அபூ ஸுலைமான் தாரானீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றனர்: நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கோ அல்லது மறுக்கப்படுவதற்கோ உரிய சாத்தியங்களுண்டு. ஆனால் இறைவனின் இனிய நேசரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதப்படும் ஸலவாத்து அங்கீகாரத்தைத் தவிர எந்நிலையிலும தள்ளப்படுவதே இல்லை.

மேலும் மகத்துவமிக்க முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரின் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் சிரமங்களோ, தாமதமோ ஏற்பட்டால் அவர் என்மீது ஸலவாத்தை அதிகமாக சொல்லட்டும். அது அவரது சிரமங்களை நீக்கி, துன்பங்களைப் போக்கி, இரணத்தை அதிகப்படுத்தி நாட்டங்களையும் நிறைவேற்றித் தரும் என்பதாகப் பகர்கின்றனர்.

ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றனர், ஹஜ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், உங்களில் யாராவது என்னை கண்ணியப்படுத்தும் பொருட்டு என்மீது ஸலவாத்துச் சொல்வாரேயாயின், அல்லாஹ் அவரது ஸலவாத்தைக் கொண்டு ஒரு வானவரை உருவாக்குகிறான். அந்த மலக்கின் ஒரு இறக்கை கிழக்கு திசையிலும் மற்றோர் இறக்கை மேற்குத்  திசையிலும் அகன்று விரிந்திருக்கும். அவரை நோக்கி அல்லாஹ், என் ரஸூலின் மீது ஸலவாத்துச் சொன்ன அந்த மனிதர் மீது ஸலவாத்துச் சொல் எனக் கட்டளையிடுகிறான். அவ்வானவரும் மறுமைநாள் வரை அவர்மீது ஸலவாத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்.

இமாம் ஸகாவீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் தமது முஸ்த்ததாபுல் கலாம் என்னும் நூலில் ரஹ்மத்துல்லில் ஆலமீனான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஒரு ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர்:

தாஹா நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்நவின்றார்கள். அல்லாஹ் உடைய வானவர் ஒருவர் இருக்கிறார். அவரின் ஒரு இறக்கை கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும் விரிந்துள்ளது. எவரேனும் என்மீது மிகுந்த நேசத்தோடு ஸலவாத்துச் சொன்னால் உடனே அவ்வானவர் தண்ணீரில் மூழ்கி எழுந்து தனது இறக்கையை உதறுகிறார். அந்த இறக்கையிலிருந்து எத்தனை சொட்டுத் தண்ணீர் விழுகிறதோ, ஒவ்வொரு தண்ணீர் துளியிலிருந்தும் ஒரு மலக்கை அல்லாஹ் படைக்கிறான். அம்மலக்குகள் அனைவரும் தனது ரஸூலின் மீது ஸலவாத்துச் சொன்ன அந்த மனிதரின் பாப மன்னிப்புக்காக மறுமை நாள்வரை இறைவனிடம் இறைஞ்சுகின்றனர்.

 

அல்லாஹும்ம ஸல்லி அலா சையிதினா முஹம்மதின் மஃதனில் ஜுதி வல் கரம் மன்பஇல் இல்மி வல்ஹில்மி வல் ஹிக்கம் வஅலா ஆலிஹி வபாரிக் வ ஸல்லிம்

பின்னும் ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களின் விலா எலும்பைக் கொண்டு ஹவ்வா அலைஹிஸ்ஸலாமவர்களை உருவாக்கினான். ஆதம் நபியவர்கள் ஹவ்வாவைக் கண்டபோது, ஹவ்வாவின் மீது ஆசை மேலோங்கவே, ஆதம் நபியவர்கள் அல்லாஹ்விடம், இறைவா! ஹவ்வாவை எனக்கு நிகாஹ் செய்து கொடு எனக் கேட்க, ஆதமே!ஹவ்வாக்குரிய மஹ்ரை முதலில் கொடுத்து விடும் என்று சொன்னான்.

அதற்கு ஆதம் நபி ஹவ்வாக்குரிய மஹர் என்ன? எனக் கேட்க, அதற்கிறைவன், ஆதமே! அர்ஷpன் தலைவாயிலில் எனது பெயரோடு சேர்த்து எழுதப்பட்டுள்ள எனது ஹபீபான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்வீராக. அதுதான் நீர் ஹவ்வாவுக்குச் செலுத்தும் மஹ்ர் என்று கூறிட அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தை ஓதி ஹவ்வாவுக்கு மஹ்ராகத் தந்தனர்.    

                                                                                                              நூல்: ஸஆதத்துத் தாரைன்.


 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க வ அலா ஆலிக்க வ அஸ்ஹாபிக்க யாரஸூலல்லாஹ்.

பார்த்தீர்களா! மனித இனத்தின் முதல் மனிதரான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹவ்வாவை தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றிட காத்தமுன் நபியின் ஸலவாத்துத்தான் மஹ்ராக பயன்பட்டுள்ளது. இல்லையெனில் ஆதம் ஹவ்வாவைக் கொண்டு விரிந்து பரந்த மனித இனம் முழுவதுமே ஹராமில் அல்லவா தோன்றியிருக்கும்? மனித இனத்தை முறைதவறிய பிறப்பிலிருந்து காத்திட்ட ஸலவாத்தை சதா சர்வ நேரமும் நாம் ஓதி வர வேண்டும்.

அல்லாஹும்ம ஸல்லி அலா சையிதினா முஹம்மதின் நூரில் கல்பி வ குர்ரத்தில் ஐனி வஅலா ஆலிஹீ வ பாரிக் வஸல்லிம்

ஷரீஅத்துடைய வாழ்க்கை கொண்டவர்களும், சுன்னத்தை மிகுந்த பக்தியோடு நடைமுறைபடுத்துகிறவர்களும், அண்ணல் நபிகளார் மீது அதிகமதிகம் ஸலவாத்து சொல்பவர்களுமான அல்லாமா அபுல் ஹஸன் இப்னு ஹாரிஸ் லைஸி ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகின்றனர்:

நான் ஒருமுறை மிகுந்த வறுமையிலும், கஷ்டத்திலும் உழன்று கொண்டிருந்தபோது பெருநாள் வந்து விட்டது. பொழுது விடிந்தால் பெருநாள், என்பிள்ளைகளுக்கு பெருநாள் அன்று நல்ல உணவோ, உடுத்திக் கொள்ள நல்ல ஆடைகளோ இல்லை. நாளை பெருநாளாயிற்றே! என்ன செய்யப் போகிறோம் என கவலையில் மூழ்கியவனாக இரவை கழித்துக் கொண்டிருந்தேன்.

நடு நிசியில் திடீரென்று எனது வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நான் கதவைத் திறக்க, சிலர் தங்களின் கைகளில் தட்டுகளை ஏந்தியவர்களாக நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அந்த ஊரிலேயே மிகவும் வசதி படைத்தவர். அவர் எனக்கு முன்னால் வந்து, சகோதரா! நான் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன். என்னவென்று சொல்லுவேன்? எனது நாதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டிடும் பேறு பெற்றேன்.

ஆம்! எனது ரஸூலை கண்டேன். வந்த வள்ளல் நபி என்னை நோக்கி, அபுல் ஹஸன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றனர். உனக்கு அல்லாஹ் அளவுக்கதிகமாகவே தந்திருக்கிறான். போ. அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய். நீ போகும்போது அவரின் குழந்தைகளுக்குத் தேவையான துணிகளையும் கொண்டு செல். அவர் கையில் கொஞ்சம் பணமும் கொடு. நாளை அவர்கள் பெருநாளை நல்லவிதமாகக் கொண்டாட்டும் என்று கூறினர். அபுல் ஹஸன்! உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் தேவையான அனைத்தையும் கொண்டு வந்திருக்கிNறு;. அதனைப் பெற்று எனது ரஸூலின் உத்திரவை நிறைவேற்றிய பாக்கியத்தை எனக்கு நல்கிட வேண்டும். அவ்வாறே பெற்றுக் கொள்ளப்பட்டு அபுல்ஹஸன் இல்லத்தினர் மறுநாள் பெருநானை மகிழ்வோடு கொண்டாடினர். 

                                                                                                           நூல்: ஸஆதத்துத் தாரைன்.

இமாம் ஸகாவீ ரஹிமஹுல்லாஹுவைக் கொண்டு அறிவிக்கப்படுகிறது: அல்லாமா இப்னு ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவுக்கு ஸலவாத்தை ஓதுவது வழக்கம்.

ஒருநாள் இரவு தாஜ்தாரே மதீனா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகை தந்துள்ளனர். அண்ணலாரின் வருகையால் என் வீடு முழுவதும் பேரொளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

வருகைதந்த நபி என்னை நோக்கி, உமது வாயை முன்னால் கொண்டு வா. எந்த வாயால் நீ என்மீது ஸலவாத்துச் சொல்கிறாயோ, அந்த உதட்டை நான் முத்தமிட வேண்டுமென்று சொல்ல, நான் மிகுந்த வெட்கத்தோடு நபிகளாரின் உதட்டுக்கு நேராக என் உதட்டைக் n காண்டு செல்ல, உதய நபி என் உதட்டை முத்தமிட்டனர். இக்கவைக் கண்டு நான் விழித்தெழுந்த போது என் இல்லம் முழுவதும் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. எனது உதட்டிலிருந்து அந்த நறுமணம் வீசிக் கொண்டிருந்தது. கிட்டதட்ட எட்டு நாட்கள் வரை இந்த நறுமணம் வீட்டைக் கமழச் செய்து கொண்டிருந்தது.

                                                                                                                         நூல்: ஜத்புல் குலூப்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர். ஒருமுறை நபிகள் கோமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களை நோக்கி, உங்களில் யார் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜை நிறைவேற்றி, மார்க்கப் போரிலும் பங்கு பற்றுகின்றாரோ, அவருக்கு நானூறு ஹஜ்ஜு செய்வதற்குரிய நன்மை வழங்கப்படும் என்று சொல்ல, அங்கிருந்த தோழர்களில் சிலர் நபிகளாரின் இந்த வார்த்தையைக் கேட்டு மனமொடிந்து போனவர்களாக, நமக்கு அதற்குரிய சக்தியும், வசதியும் இல்லையே என்று வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருக்க,….

அத்தோழர்களின் எண்ணத்தை தெரிந்து கொண்ட இறைவனின் ரஹ்மத் பொங்கியெழுந்து, தன் ரஸூலின் மீது வஹியை இறக்கிச் சொன்னான், ஓ! ஹபீபே! உம் மீது யார் ஸலவாத்துச் சொல்கிறாரோ, அவர் நானூறு ஹஜ்ஜுச் செய்த நன்மையையும் பெறுவார் என்று கூறினான்.

                                                                                                                           நூல்: ஜத்புல் குலூப்.

ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர், கருணை நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களில் எவரேனும் என்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொன்னால் அல்லாஹ் அந்த ஸலவாத்தைச் சொன்னவரின் மூச்சுக் காற்றிலிருந்து ஒரு மேகத்தைப் படைக்கிறான். பின்னர் அந்த மேகத்தை மழையாக பொழியச் செய்கிறான். அந்த மழை பூமியின் மீது வந்து விழுகின்ற போது மண்ணில் விழுந்த ஒவ்வொரு துளியிலிருந்தும் தங்கத்தை உருவாக்குகிறான். இன்னும் மலைகள் மீது விழுந்த ஒவ்வொரு துளியிலிருந்தும் வெள்ளியை உருவாக்குகிறான். இதுபோன்றே காபிர்கள் மீது விழும் ஒவ்வொரு துளியிலிருந்தும் அதன் பரக்கத்தால் அவர்களுக்கு ஈமானைத் தந்து முஃமின்களாக்குகிறான் என்று கூறுகின்றனர்.

                                                                                                           நூல்: முகாஷிபத்துல் குலூப்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றனர். ஈருலக ரட்சகர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனர், இறைவனின் அடியார் எப்போதுமு என்மீது ஸலவாத்துச் சொல்கிறாரோ, அதனை ஒரு வானவர் இறைவனின் சன்னிதானத்திற்கு கொண்டு சென்று சமர்ப்பிக்கிறார். அப்போதிறைவன் எனது ஹபீபின் மீது சொல்லப்பட்ட இந்த காணிக்கையை எனது ரஸூலின் கப்ருக்கு கொண்டு செல். எனது ரஸூல் ஸலவாத்தை சொன்ன அந்த அடியானுக்காக துஆ செய்யட்டும். இன்னும் அவர்களின் கண்களும் குளிர்ச்சி அடையட்டும் என்று கூறுகிறான்.                    –முஸ்னதுல் பிர்தௌஸ்.

இன்னும் இருலோக வேந்தர் முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனர், என்மீது ஒருவர் ஸலவாத்துச் சொன்னால் அவரது நாவினின்றும் வெளிப்பட்ட அந்த ஸலவாத்த கிழக்கிலும், மேற்கிலும் பரவி கடலிலும் கரையிலும் நிறைந்து பிரபஞ்சத்தின் மூலவரான அகில உலகத்தின் அதிபதியான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சொல்லப்பட்ட ஸலவாத்து நான் என்று ஒலித்துக் கொண்டே செல்கிறது. இதன் சப்தத்தை கேட்கும் பிரபஞ்சத்தின் வஸ்துக்களனைத்தும் அந்த ஸலவாத்தை சொன்னவர் மீது ஸலவாத்து சொல்கின்றன.

அதன்பின் அந்த ஸலவாத்திலிருந்து ஒரு பறவை படைக்கப்படும். அப்பறவைக்கு எழுபதாயிரம் தோள்களிருக்கும். ஒவ்வொரு தொளிலும் எழுபதாயிரம் இறக்கைகள் இருக்கும் ஒவ்வொரு இறக்கைக்கும் எழுபதாயிரம் முகங்களும், ஒவ்வொரு முகத்திலும் எழுபதாயிரம் நாவுகளும், ஒவ்வொரு நாவிலும் எழுபதாயிரம் பாiஷகளைக் கொண்டு இறைவனை தஸ்பீஹ் செய்து கொண்டு இருக்கும். அந்த தஸ்பீஹின் நன்மைகளனைத்தும் அந்த ஸலவாத்தை சொன்னவருக்கு கிடைத்து கொண்டிருக்கும்.

                                                                                                              நூல்: தலாயிலுல் ஹைராத்

 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க வஅலா ஆலிக்க வ அஸ்ஹாபிக்க யா ஹபீபல்லாஹ்

தினற்தோறும் காலையிலும், மாலையிலும் எழுபதாயிரம் மலக்குகள் மதீனாவிலுள்ள நபிகள் நாதரின் புனிதமிகு ரௌழாஷரீபில் இறங்கி இனிய நாதரான இதய வேந்தரின் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர். இதில் ஒருமுறை நபிகளாரின் ரௌழா ஷரீபிற்று வருகை தந்து ஸலவாத்துச் சொல்லும் மலக்குகள் பின்னர் மீண்டும் மறுமை நாள் வரை திரும்ப வருவதில்லை.

இன்னும் போர்வை போர்த்திய புனித நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கையாக தம் சமூக மக்களுக்கு அறிவுரை தருகின்ற போது, எனது ஸலவாத்தைக் கொண்டு துவக்கப்படாத பிரார்த்தனைகள் அனைத்தும் இறை சன்னிதானத்தை விட்டும் விரட்டப்பட்டதாயிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களின் காலத்தில் பனீ இஸ்ராயீல்களில் ளரு மனிதன் இருந்தான். அவன் பெரும் அநியாயக் காரனாகவும், ஜனங்கள் மீது சதா அழிச்சாட்டியம் புரிபவனாகவும் இருந்தான். ஊர் மக்கள் அவனது தொல்லை தாங்காது அவனை ஊரை விட்டு காட்டுப் பக்கமாக விரட்டியடித்து விட்டனர். காட்டிற்குச் சென்று வாழ்ந்து இறுதியில் அவனை மரணம் சமீபித்து அங்கேயே இறந்தும் போனான்.

அவன் இறந்தபின் அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ அறிவித்து, மூஸாவே! எனது நேசர்களில் ஒருவர் காட்டில் இறந்து கிடக்கிறார். நீர் ஊர் மக்களை உம்முடன் அழைத்துச்  சென்று அவரை நன்முறையில் அடக்கம் செய்யுங்கள் என்று கட்டளையிட, மூஸா நபியவர்களும் ஊர் மக்களும் அங்கே சென்று பார்க்க, இறந்து கிடந்த அவர் ஊர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டவரே என்பதை அறிந்து, இவனது துன்பம் தாங்க முடியாமல் தானே இவனை விரட்டியடித்தோம். இவன் எப்படி இறைவனின் நேசனாக முடியும்? என்று ஊர் மக்கள் மூஸா நபியவர்களிடம் கேட்க, மூஸா நபி இறைவனிடம் இதுபற்றி விபரம் கேட்கவும், அல்லாஹ், மூஸாவே! இறந்து கிடக்கும் இவர் ஊர்மக்களால் துரத்தியடிக்கப்பட்டவர்தான். இந்த மனிதர் தன் வாழ்வில் தீமையைத் தவிர வேறு எதையும் செய்ததுமில்லை.

இருப்பினும் இவர் தனது மரணத்தருவாயில் என்னை நோக்கி, கருணாகரா! நான் என் வாழ்நாள் முழுவதும் தீங்கைத்  தவிர வேறு எதையும் செய்ததில்லைதான். ஆனால் ஒருமுறை உனது ரஸூல் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜனங்களுக்கு நல்லுபதேசம் வழங்கிக் கொண்டிருந்தபோது, அச்சபையில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது மூஸா நபியவர்கள் எனக்குப்பின் ஒரு ரஸூல் இவ்வுலகிற்கு வருகை தருவார். அவர் பொருட்டே இறைவன் அனைத்தையும் படைத்தான். அவரின் புனிதமிகு  திருப்பெயர் முஹம்மத் என்பதாகும். அவர்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்லும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்தையும் விட்டு தூய்மையடைவார் என்று சொன்னதை கேட்டு, நானும் அந்த உனது ஹபீபின் மீது அப்போதே ஸலவாத்துச் சொன்னேன். இறiவா! அந்த ஸலவாத்தின் பொருட்டு எனது பாவங்களை பொறுத்துக் கொள் என்று என் ஹபீபின் ஸலவாத்தை முன்னிறுத்தி கேட்டதால் அவனின் சகல பாவங்களையும் மன்னித்ததோடு அவனை எனது நேசர்களில்(வலி) ஒருவராக உயர்த்திக் கொண்டேன் என்று அல்லாஹ் கூறினான்.'

                                                                                                                                            நூல்: அல்-கவ்லுல் பதீஃ

எனவே அதிகமாக ஸலவாத்துச்சொல்லி அல்லாஹ் மற்றும் அவனது ரஸூல் நேசத்தைப் பெற்றவர் கூட்டத்தில் நம்மனைவரையும் சேர்த்தருள்வானாக! ஆமீன். ஆமீன், யாரப்பல் ஆலமீன்.

ஸலவாத் ஓதத் துவங்கும் முன்…

ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி மற்றும் ஷெய்கு அப்துல் கரீமில் ஜீலி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றனர், 'இதய வேந்தரும் இனிய தூதருமான தாஜ்தாரே மதீனா, ஸர்க்காரே தோ ஆலாம் ரஹ்மத்துல்லில் ஆலமீன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்த ஓதும் நீங்கள் இயன்றவரை ஒளுவுடன் ஓத வேண்டும். அத்துடன் ஸலவாத்து ஓதுகின்ற நிங்கள் உங்களை தங்கள் நபியின் முன் இருப்பதாகவும், நபிகளார் உங்கள் முன்னால் ஆஜராகி இருக்கின்றனரென்றும் மனதில் திண்ணமாக நம்புவதோடு, உங்களை பார்த்துக் கொண்டுள்ள உங்களின் ரஸூலின் திருமுன் மிகுந்த கண்ணியத்தோடும், மரியதையோடும் அத்தர் போன்ற மணம் பூசியவர்களாக ஓதுங்கள். ஏனெனில் நாதர் நபி அன ஜலீஸுன் மன் தக்கரனீ என்னை நினைப்பவருடன் நான் இருக்கிறேன் என்று கூறுவதெ நீங்கள் ஸலவாத்தை ஓதத் துவங்கியதும் அண்ணல் நபி உங்கள் முன் ஆஜராகி விடுகின்றனர் என்பதற்குரிய சான்றாகும்.

மேலும் சகோதரா! உனக்கு நான் நல்லுபதேசம் செய்கிறேன். நீ எப்போதும் நபிகள் நாதரின் திருவுருவத்தையும், அவர்களின் அற்புதமான குண ஒழுக்கங்களையும் உனது மனதில் நிலைப்படுத்தி வைத்திரு. அவ்வாறாயின் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் உனது ஆன்மா நபிகளாரின் பரிசுத்தமான தாத்தை சமீபித்து அதனுடன் கலக்கத் துவங்கிவிடும். அப்போது இருலோக வேந்தரான இறைவனின் இனிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்முன் தோற்றம் தருவார்கள். நீ அவர்களை காணும் பேறு பெறுவாய். அது மட்டுமல்ல! அண்ணலாருடன் நீ பேசிடவும் செய்வாய்.

                                                                                                                                    நூல்: மதாரிஜுன் நுபுவ்வத்

 

ஸலவாத்துந் நாரிய்யா

 
அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மா அலா ஸெய்யிதினா முஹம்மதினில்லதி தன்ஹல்லு பிஹில் உகது வதன்ஃபரிஜு பிஹில் குரபு வதுக்ளா பிஹில் ஹவாயிஜு வதுனாலு பிஹி ரஙாயிபு வஹுஸ்னல் ஹவாதிமி வயுஸ்தஸ்க்கல்ஙமாமு பி வஜ்ஹிஹிவ் கரீமு வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபி குல்லி லம்ஹத்தின் வநஃப்ஸின் பிஅததி குல்லி மகலூமின் லக்க.

இந்த ஸலவாத்தானது அல்லாஹ்வின் புதையல்களில் ஒன்றாகும். மேற்கு தேசத்தவர்கள் தேடப்பட்ட வலுப்பமான காரியங்களை பெற்றுக் கொள்வதற்கும், திகைப்புக்குரிய பயங்கரமான காரியங்களை  விலக்கிக் கொள்வற்கும்  நாடுவோர் இந்த ஸலவாத்தை 4444 முறை பலரும் ஒன்று சேர்ந்து ஓதி வந்தால் நெருப்பு ஒரு பொருளை எத்தனை விரைவில் கரித்து விடுகின்றதோ, அத்தனை விரைவில் அல்லாஹ் இந்த ஸலவாத்தின் பொருட்டால் நமது நாட்டங்களை நிறைவேற்றி, பெரும் துன்பம் துயரம் போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பு தருகிறான்.

இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றனர், இந்த ஸலவாத்தை ஒருவர் தினந்தோறும் வழக்கமாகக் குறைந்தது 41 முறை அல்லது 100 முறை அல்லது அதற்கும் அதிகமாக ஓதி வந்தால் அவரது துன்பங்கள், துயரங்கள் நீங்கி, அவரது தகுதிழ உயர்வடையும். இரணம் அதிகரிக்கும். அவர் மனிதர்களின் அன்பினைப் பெறுவார். இறைவனிடம் அவரின் இறைஞ்சுதல் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஸலாத்துல் உம்மிய்யி

 
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின் அப்திக்க வநிய்யிக்க வரஸூலிக்கந்நபிய்யில் உம்மிய்யி வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி வபாரிக் வஸல்லிம்

நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. அன்று அதிக அளவில் ஸலவாத்தை ஓதுவதால் பன்மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன. ஒருவர் வெள்ளியன்று இந்த ஸலவாத்தை  எண்பது முறை ஓதினால் அவரது எண்பது ஆண்டுப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஒருவர் வெள்ளியன்று இரவிலோ, பகலிலோ நபிகளார் மீது இந்த ஸலவாத்தை 100 முறை ஓதினால் அல்லாஹ் அவரின் 100 தேவைகளை நிறைவேற்றித் தருகிறான் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளுகின்றனர்.

ஸலாத்து திப்பில் குலூப்

 
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின் திப்பில் குலூபி வதவாயிஹா வஆஃபியத்துல் அப்தானி வஷிஃபாயிஹா வநூரில் அப்ஸாரி வளியாயிஹா வஅலா ஆலிஹி வபாரிக் வஸல்லிம்.

இந்த மேன்மையான ஸலவாத்தை வழக்கமாய் ஓதி வருவதால் மட்டிலடங்கா நன்மையுண்டு. அத்துடன் கண்ணொளியையும், சரீர சுகத்தையும், உள்ளத் தெளிவையும் கொடுக்கப்படும். இன்னும் காலரா, வாந்தி, பேதி, உடல்வலி மற்றும் கடுமையான சோதனைகள் முதலிய ஆபத்துக்களை விட்டும் காப்பாற்றப்படும்.

தாஜுஸ் ஸலவாத்து(தரூதே தாஜ்)


அல்லாஹும்ம ஸல்லி அலா செயிதினா வமௌலானா முஹம்மதின் சாஹிபித்தாஜி வல் மிஃராஜி வல் புராக்கி வல் அலம். தாஃபிஇல் பலாஇ வல் வபாயி வல்கஹ்த்தி வல் மரளி வல் அலம். இஸ்முஹு மக்தூபுன் மர்ஃபூவுன் மஷஃபூஉன் மன்கூஸுன் ஃபில் லவ்ஹி வல்கலம் செய்யிதில் அரபி வல் அஜமி ஜிஸ்முஹு முகத்தஸுன் முஅத்தருன் முதஹ்ஹருன் முனவ்வருன் ஃபில் பைத்தி வல்ஹரம்.

ஸம்ஸில்லுஹா பத்ரித்துஜா ஸத்ரில் உலா நூரில் ஹுதா கஹ்ஃபில் வரா மிஸ்பாஹிள்ளுளம் ஜமீலிஸ் ஸியம் ஸஃபீஇல் உமம் ஸாஹிபில் ஜூதி வல்கரமி வல்லாஹு ஆசிமுஹு வஜிப்ரீலு ஹா(ர்)திமுஹு வல் புராக்கு மர்கபுஹு வல்மிஃராஜு ஸஃபருஹு வஸித்ரத்துல் முன்தஹா மகாமுஹு வகாப கவ்ஸைனி மத்லூபுஹு வல் மத்லூபு மக்ஸுதுஹு வல் மக்ஸூது மவ்ஜூதுஹு ஸய்யிதில் முர்ஸலீன் ஹா(ர்)த்தமுன் னபிய்யீன் ஷஃபீஇல் முத்னிபீன் அனீஸில் ஙராயிபீன் ரஹ்மத்தன் லில்ஆலமீன் ராஹத்தில் ஆஸிக்கீன் முராதல் முஸ்தாக்கீன் ஷம்ஸில் ஆரிஃபீன் ஸிராஜிஸ்ஸாலிகீன் மிஸ்பாஹில் முகர்ரபீன் முஹிப்பில் ஃபுகராயி வல் மஷாகீன் ஸய்யிதி தக்கலைனி நபிய்யில் ஹரமைனி இமாமில் கிப்லதைனி வஸீலத்தினா ஃபித்தாரைனி ஸாஹிபி காப கவ்ஸைனி மஹ்பூபிரப்பில் மஸ்ரிகைனி வல் மஃரிபைனி ஜத்தில் ஹஸனி வல் ஹுஸைனி மவ்லானா வமவ்லா தக்கலைனி அபில்காஸிமி முஹம்மதிப்னி அப்தில்லாஹி நூரின் மின் நூரில்லாஹி யாஅய்யுஹல் முஸ்தாக்கூன பிநூரி ஜமாலிஹி ஸல்லூ அலைஹி வஆலிஹி வஅஸ்ஹாபிஹி வஸல்லிமூ தஸ்லீமா.

பொதுவாக ஸலவாத்துக்களின் சிறப்பு அளவிட இயலாதது. அதிலும் குறிப்பிடத்தக்க சில ஸலவாத்துக்களின் சிறப்புக்களோ எழுத்தில் வடித்துக் காட் இயலாதவை. அவ்வாறு குறிப்பிடத்தக்க ஸலவாத்துக்களில் ஒன்றாகத்  திகழ்வது தரூதே தாஜ்.

இந்த ஸலவாத்தை ஸலவாத்துக்களின் மணிமகுடம் எனக் கூறப்படுகின்றது. இந்த ஸலவாத்தை ஓதி வருவதால் ஏற்படும் நன்மைகள், பயன்கள் எண்ணிலடங்கா. இதை மனனம் செய்து நிரந்தரமாக ஓதி வருபவர் எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயங் குளிர்ந்த அன்பினைப் பெறுவார்.

செய்வினை, சூனியம், ஜின், ஷைத்தான் போன்றவைகளிலிருந்தும் காலரா, வைசூரி போன் தொத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற இந்த ஸலவாத்தை 11 முறை ஓதித் தண்ணீhதில் ஊதிக் குடித்தால் அவாப்கள் விரைவில் குணமடைவார். ஏழு நாட்கள் தொடர்ந்து இதனை 7 முறை ஓதி தண்ணீரில் ஊதிக் குடித்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரவசம் உண்டாகும்.

நாம் நாடிய நாட்டங்களனைத்தும் அவை ஹலாலானதாக இருந்தால் அவற்றை நிறைவேற்றித் தர வேண்டுமென்று இந்த ஸலவாத்தை ஒளுவோடு 40 முறை ஓதி துஆ கேட்டால் வல்ல அல்லாஹ் நமது நியாயமான நாட்டங்களை விரைவில் நிறைவேற்றித் தருவான்.

இந்த ஸலவாத்தை ஒருவர் தொடர்ந்து ஓதி வந்தால் அவர் பிறரின் பகைமை, பொறாமை, தொல்லை, துன்பம் போன்றவற்றிலிருந்து விடுதலைப் பெறுவார்.

முற்றும்