கந்தூரி கூட்டம்

காயல்பட்டினம் ஸூபி மன்ஸிலில் குத்புல் ஹிந்த் அதாயிர் ரஸூல் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி கூட்டம் கடந்த வியாழக்கிழமை 19-3-2014 அன்று மன்ஜிலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ஸில் கலீபா எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி, ஸூபி அவர்கள் தலைமை ஏற்றார்கள். கந்தூரி கமிட்டி தலைவராக அல்ஹாஜ் எஸ்.எம். தாஜுத்தீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் ரஜப் பிறை 6 (மே மாதம் 5ஆம் தேதி) கந்தூரியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் பாத்திஹா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


கந்தூரிக்கான நேர்ச்சை, காணிக்கைகளை அனுப்ப:

எஸ்.எம். தாஜுத்தீன்,

ஸூபி மன்ஸில்,

குத்துக்கல் தெரு,

காயல்பட்டினம்-628204

மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் மறைவு

கதீபுல் ஹிந்த் ஸெய்யிது ஸாதாத் மௌலவி மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் அவர்கள் 21-3-2014 வெள்ளிக்கிழமை வபாத்தாகி விட்டார்கள். தப்லீக் ஜமாஅத் கியாஹே? என்ற நூலை எழுதியவர்கள். பல்லாயிரக்கணக்கான முரீதீன்களைப் பெற்றவர்கள். மாபெரும் கராமத் உடையவர்கள். அன்னாரின் மகாமைப் பற்றி சிறு குறிப்பு:
 

மாநாட்டில் கண்ட காட்சி

(குளம் ஜமால் முஹம்மத்> காயல்பட்டணம்.)

தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் இரண்டாவது மாநாடு தரணி போற்றும் பெரும் மாநாடாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். வஹ்ஹாபிகளின் வயிற்றில் பெரும்புளியை கரைத்தது முஹிப்புர் ரஸூல் (நபிகளாரின் நேசர்)களுக்கு புனிதமாகி விட்டது.

மேன்மைக்குரிய ஷைகுநாயகம் சையத் மஜ்ஹர் ரப்பானி ஹஜ்ரத் கிப்லா மத்தலில்லாஹுல் ஆலி அவர்கள் தலைமை தாங்கியது பெரும் சிறப்பு. அம்மாநாட்டில் நான் கண்டு மெய்மறந்த மறக்க முடியாத காட்சி இது.

மாநாட்டின் முதல்நான் இரவு கடைசி பேச்சாளராக வருகை தந்து பேசிய மௌலானா கௌஸர் ரப்பானி ஹழ்ரத் அவர்கள்> நாம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை நேரில் பார்க்கவில்லை. ஆனால் இதோ இருக்கிறார்களே இவர்களை (மஜ்ஹர் ரப்பானி ஹஜ்ரத் கிப்லா மத்தலில்லாஹுல் ஆலி) முஹ்யித்தீனாகப் பார்க்கிறோம் என்று ஷைகவர்களை சைகைக் காட்டிப் பேசியபோது அவர்களின் முகம் மாறி விட்டது. எவ்வாறு எனில்> முஹ்யித்தீன்  ஆண்டகை அவர்களாகவே மாறிவிட்டது. சுப்ஹானல்லாஹ். என்ன ஆச்சரியம். ரலியல்லாஹு அன்ஹு.

இப்பாவிக்கு முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மிகவும் பூரித்துப் போனேன். ஏற்கனவே நான் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் இதை உறுதியாகக் கண்டு கொண்டேன். எனக்கு உர்து மொழியும் தெரியாது. இருந்தும் மௌலானா கௌஸர் ரப்பானி கிப்லா அவர்கள் பேசிய முறை> சைகை மூலம் அவர்கள் பேசியதை புரிந்து கொண்டேன்.

முதல்நாள் மாநாடு முடிந்ததும் என்னுடன் வந்திருந்த ஜனாப் மீரா சாஹிப் காக்கா அவர்களும் நான் கண்டவாறே கண்டதாகவும்> மேலும் ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி> காஜா முஈனுத்தீன் சிஷ்தீ ரலியல்லாஹு அன்ஹுமா  ஆகியோரைக் கண்டதாகவும் சொன்னார்கள். அதுமுதல் மாநாடு முடியும் வரை ஷைகு நாயகம் அவர்களின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பெரும் பாக்கியத்தைத் தந்த வல்ல இறைவனுக்கும்> அதற்கு உதவிய மாநாட்டுக் குழுவினருக்கும் மற்றும் அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வானாக. ஆமீன்.

நன்றி: அஹ்லெ சுன்னத் மாத இதழ் அக்டோபர் 1996

40ஆவது நாள் பாத்திஹா

மகான் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும், மருமகனுமாகிய மௌலவி அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களின் 40ஆவது நாள் பாத்திஹா இன்று (18-2-2014) செவ்வாய் காலை 9 மணியளவில் அன்னாரின் குத்துக்கல் தெரு இல்லத்தில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஷெய்குனாவின் கலீபா ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் மறைவு

காயல்பட்டினம் மஹான் அல் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனாரும், கலீபாவுமாகிய மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி ஸூபி அவர்கள் இன்று ஹிஜ்ரி 1435 ரபியுல் அவ்வல் பிறை 8 வெள்ளிக்கிழமை (10-01-2014) மாலை 5 மணியளவில் நாகர்கோயிலில் வைத்து மறைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாருக்கு வயது 74. அன்னாரின் பூதஉடல் காயல்பட்டினம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இருமகான்களின் கந்தூரி அழைப்பு 2013

இமாமுல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதர் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 78ஆவது வருட கந்தூரி மற்றும் அன்னாரின் கலீபா அல் ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல் அல் அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ்   ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸித்தீகி அல்காதிரி காஹிரி ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அஅவாக்ளின் 32 ஆம் வருட கந்தூரி விழா இன்ஷா அல்லாஹ் வருகிறஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 10 (18-08-2013) ஞாயிறு  அன்று நடைபெறவுள்ளது.

காலை சுப்ஹு தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் ஒதி தமாம் செய்து அன்று மாலை 4.30 மணிக்கு மவ்லித் ஷரீப் ஓதி, மஃரிபுக்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெற்று, இரு மகான்களுடைய ஜீவியசரிரைதயும், மார்க்க உபன்னியாசமும் நடைபெற்று நேச்ச்சை வழங்கக்படவுள்ளது. அனைவர்களும் கலந்து மகான்களின் துஆப் பேற்றினை பெற்றேக அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: காயல்பட்டினம் ஸூபி மன்ஸில், குத்துக்கல் தெரு,

நேர்ச்சை மற்றும் நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

மு.அ. முஹம்மது தஸ்தகீர்,

ஸூபி மன்ஜில்,

93A குத்துக்கல் தெரு,

கா யல்பட்டனம்

தாதாபீர் ஹைதராபாத் ஸூபி அவர்களின் பேரர் மறைவு!

 

சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதர் ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் மகனார் அப்துஷ்ஷகூர் ஸூபி அவர்களின் மகன்  அப்துர் ரஜ்ஜாக் ஸூபி அவர்கள் இன்று 13-5-2013 திங்கட்கிழமை ஹைதராபாத்தில் வைத்து வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷாஅல்லாஹ் அன்னாரின் அடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

காஜா முயீனுத்தீன் ஜிஷ்தி ரலியல்லாஹுதஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்

 

அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1434 ரஜப் பிறை 5 (16-05-2013) வியாழக்கிழமை; காயல்பட்டினம், குத்துக்கல் தெரு, ஸுபி மன்ஸிலில் அஜ்மீர் காஜா நாயகம் கந்தூரி விழா நடைபெறவுள்ளது. 

வழமைபோல் இவ்வருடமும் காலை சுப்ஹுக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படும். மாலை 4.30 மணிக்கு அன்னாரது மவ்லிது ஷரீபு ஓதி, மஃரிபுத் தொழுகைக்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெற்று அன்னாரது ஜீவிய சரிதமும், மார்க்க உபன்னியாசமும் நடைபெறும். அதன்பின் தபர்ரூக் என்னும் நேர்ச்சை விநியோகிக்கப்பட்டு விழா இனிதே நிறைவுறும் இன்ஷாஅல்லாஹ்.

இம்மஜ்லிஸிற்கு தாங்கள் அனைவரும் வருகை தந்து நற்பயன் அடைய வேண்டுகிறோம்.

இம்மாமேதை அவர்கள் பேரிலுள்ள நன்கொடை, நேர்ச்சைகளை தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களிடமும் கூடுதலாக வசூல் செய்து  ஜனாப் S.M. தாஜுத்தீன் , 93 A குத்துக்கல் தெரு, காயல்பட்டினம். என்ற முகவரிக்கு அனுப்பித் தர வேண்டுகிறோம்.

வல்ல ரஹ்மான் சங்கைமிகு காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துஆ பொருட்டால் நம் அனைவர்களின் நாட்டதேட்டங்களை நிறைவேற்றித் தந்தருள்வானாக! ஆமீன்.

இவண்,

காஜா முயீனுத்தீன் ஜிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி கமிட்டி,

ஸூபி மன்ஸில், காயல்பட்டினம்.