ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு

ஒவ்வொரு நபிக்கும் சுவனத்தில் ஒரு துணைவர் இருப்பார். அத்தகைய என் துணைவர் உதுமான்’ எனப் போற்றிய பெருந்தகை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

ஸாஹிபுல் ஹிஜ்ரத்தைன் (பிறந்த மண்ணை) இருமுறை துறந்து சென்ற தோழர், துன்னூரைன் – இரண்டு ஒளிகளைப் பெற்றவர் என்று சரித்திரம் புகழும் ஸையிதினா உதுமான் இப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரை,

உதுமான் இப்னு அப்பான் இப்னு அபுல் ஆஸ் இப்னு உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்துல் மனாஃப் என்று தந்தை வழியிலும்,

உதுமான் இப்னு உர்வா பின்த்து குறைஷ் இப்னு ரபீஃஆ இப்னு அப்துஷ் ஷம்ஸ் இப்னு அப்து மனாஃப் என்று தாய் வழியிலும்

ஆறாவது தலைமுறையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேருகிறது.

இவர்களின் தாயைப் பெற்ற அன்னையார் உம்முல் ஹக்கீம்-அல்பைழா அவர்களும் நபி பெருமானாரின் தந்தையார் அப்துல்லாஹ் அவர்களும் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பிறந்த ஒரே தாய்வயிற்று மக்களாவர்.

‘காமிலுல் ஹயா இ வல் ஈமானம் – நாணமும் (இறை) நம்பிக்கையும் நிரம்பப் பெற்றவர்’ என விண்ணகமும், மண்ணவரும் போற்றும் அம் மானமிகு மாண்பாளர் நபிகளார் அவர்கள் பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து ‘தாயிஃப்’ நகரில் பிறந்தார்கள்.

நபிகளார் பிறந்த ஹாஷிம் கோத்திரத்தைப் போன்றே, உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்த உமையா கோத்திரமும் மக்கமா நகரில் மிகுந்த செல்வாக்கும், கண்ணியமும் பெற்று விளங்கிய ஒரு கோத்திரமாகும்.

இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்திலும் இவர்கள் விபச்சாரத்தையும், மதுவின் வாடையையும் நுகர்ந்தவர்கள் அல்லர். பொறாமை, வஞ்சக சூது, புழுக்கத்தை விட்டும் விடுபட்டிருந்த ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்ந்த சிந்தனையில் நபிகளாருக்கு ஒரு கண்ணிய இடமிருந்தது. இருப்பினும் அதிகமான பழக்க உறவு ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடனேயே இருந்தது. இருவருக்குமிடையே இருந்த வாணிப உறவு இதற்கு காரணமாயிருக்கலாம்.

பெருமானாரின் நபித்துவத்தை ஹழ்ரத் அபூபக்கர் அவர்கள் ஏற்ற அன்று உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவில் இருக்கவில்லை. வாணிப நிமித்தமாக ஸிரியா சென்றிருந்தனர். திரும்பியதும் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்கச் சென்றனர். அவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கையில் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அங்கு வந்துற்றார்கள். அவர்களின் சொற்களில் இருந்த உண்மையைக் கண்டு உதுமான் நாயகம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.உமையாக்களில் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் உதுமான் நாயகம் அவர்களாக இருந்தார்கள். பல்வேறு தொல்லைகளை அவரது சிறிய தந்தை கொடுத்தபோதும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்கவே இல்லை.

‘நானும் உதுமானும் எங்கள் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சாயலாக இருக்கிறோம் என்று ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த பொன்மொழியும், ‘குணத்திலும் உதுமான் என்னையே ஒத்திருக்கிறார்’ என ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த மற்றொரு பொன்மொழியும் உதுமான் நாயகத்தைப் பற்றி நமக்கு முழுமையாக எடுத்துரைக்கிறது.

பெருமானாரின் மகளான ருக்கையா, உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் அபூலஹபின் இரு மக்களான உத்பா, உத்தைபா என்ற இருவருக்கும் மணமுடிக்கப் பெற்றிருந்தனர். (மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தனர் என்று மற்றொரு கருத்தும் உள்ளது) அபூலஹபையும் அவள் மனைவி உம்முஜமீலையும் சபித்து அல்லாஹ்விடமிருந்து வேதவசனங்கள் இறங்கின. பெருமானர் அவர்கள் அவற்றை ஓதிக்காட்ட கேட்ட அபூலஹபும், உம்முஜமீலும் தங்கள் மக்களாhன உத்பா, உத்தைபா இருவரையும் பலவந்தப்படுத்தி ருகையா, உம்முகுல்தூம் ஆகிய இருவரையும் விவாகபந்தங்களிலிருந்து விலக்கிடச் செய்தனர்.

பெருமானார் இதனால் துயரப்பட வேண்டும் என்ற நோக்கினாலேயே அவர்கள் இவ்வாறு செய்தனர். செல்வச் செழிப்போடு விளங்கிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாயகியை திருமணம் முடித்ததால் பெருமானாரின் உள்ளம் பெருமகிழ்வு கொண்டது.

நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு அபிசீனியாவுக்கு குடிபெயர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்த போது, ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ருகையா நாச்சியாரோடு முதல் அணியிலேயே ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டார்கள்.

அபிசீனிய வாழ்க்கையிலேயே அத்தம்பதிகள் தங்கள் தலை மகனைப் பெற்றெடுத்து அவருக்கு அப்துல்லாஹ் எனப் பெயரும் சூட்டினர். இதனாலேயே அவர்களுக்கு அபூஅப்துல்லாஹ் என்றும் அழைக்கப் பெற்றார்கள். ஆயினும் அம்மகனார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழவில்லை.

அபிசீனியாவிலிருந்து திரும்பி மக்காநகர் வந்த உதுமான் நாயகம் அவர்கள், மக்கத்து முஸ்லிம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லத் துவங்கிய போது ஹழ்ரத் உதுமான் நாயகமும் தம் மனைவி ருகையா நாயகியோடு மதீனா சென்று விட்டார்கள்.

மதீனாவில் நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த ஹழ்ரத் அவ்ஸ் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விருந்தினராகத் தங்கியிருந்தார்கள்.

பத்ருபோர் நடந்தபோது உதுமான் நாயகம் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவரது மனைவியார் சுகமில்லாமல் இருந்தனர். அவர்களை கவனித்துக் கொள்ள மதீனாவிலேயே அன்னாரை தங்கச் சொன்னது நபிகளாரே. அந்த நோயின் கடுமையிலேயே துணைவியாரை அவர்கள் இழக்க நேரிட்டது.

பத்ருபோரில் வெற்றிபெற்றவுடன் கிடைத்த ஙனீமத்துப் பொருளில் உதுமான் நாயகத்திற்கும் ஒரு பங்கை கொடுத்தார்கள். போரில் கலந்துகொண்டதற்கான மறுமைப் பலனும் அவர்களுக்கு உண்டு என நன்மாராயமும் கூறினார்கள்.

அதன்பிறகு தம்முடைய அடுத்த மகளார் உம்முகுல்தூமையும் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்து வைத்தார்கள்.

அடுத்து நடந்த உஹதுப் போரில் உதுமான் நாயகமும் கலந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு 1400தோழர்களுடன் ஹுதைபியாவை வந்தடைந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசியிடம் தூது செல்ல ஹழ்ரத் உதுமான் அவர்களையே அனுப்பி வைத்தார்கள். பெருமானார் போர்புரியவரவில்லை. இறைவின் திருவீட்டை தரிசிக்கவே வந்துள்ளனர் என்று குறைஷிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர்களில் எவரையும் மக்காவினுள் அனுமதிக்க மறுத்து நின்றனர்.

‘உதுமானே! எங்களிடையே உமது கண்ணியம் என்றும் மதிக்கத்தக்கதாகவே உள்ளது. நீர் வேண்டுமானால் கஅபாவைச் சுற்றிவர நாங்கள் அனுமதிப்போம்’ என குறைஷிகள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டுமே தனிச் சலுகை காட்டினர்.

‘ஆண்டவனின் தூதரை பிரிந்து ஒருக்காலும் அவ்வாறு நான் செய்யமாட்டேன்’ என ஏற்க மறுத்துவிட்டார்கள்.

தர்க்கத்தால் உதுமான் நாயகத்தை திரும்பிச் செல்லவிடாது தாமதிக்கச் செய்தான் குறைஷிகள். அந்த தாமதத்தால் அவர்கள் கொல்லபட்டே போனார்களோ என்ற ஐயம் ஹுதைபிய்யாவில் தங்கியிருந்த தோழர்களிடையே எழுந்தது.

அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பழிதீர்க்க ஹுதைபியாவின் ஸஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானார் அவர்களின் கரம் பிடித்துப் பிரமாணம் செய்தார்கள்.

‘நிச்சயமாக உதுமான் அல்லாஹ்வுடையவும் அவனின் தூதருடையவும் நாட்டஙக்ளின் பேரிலேயே சென்றிருக்கிறார்’ என அறிவித்த பெருமானார் அவர்கள் தங்கள் இடக்கரத்தை நீட்டி வலக்கரத்தால் அதனைப் பற்றியவர்களாக, ‘இறைவா! இதோ ஒன்று உதுமானின் கரம். மற்றொன்று என் கரம். உதுமானுக்குப் பகரமாக நான் பிரமாணம் செய்கிறேன்’ என்றார்கள்.

பின்னர் உதுமான் நாயகம் திரும்பி வந்தபோது அவர்களை பெருமகிழ்வோடு வரவேற்ற தோழர்களிடம், இன்னும் ஓராண்டு காலம் மக்காவிலிருந்தாலும் சரியே, அண்ணலார் வந்துசேராத வரை நான் ஒருபோதும் கஅபாவைச் சுற்றியிருக்கவே மாட்டேன்’ என ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய செய்தி அவர்களின் இதயத் தூய்மையை காட்டியது.

‘பீரே ரூமா’ என்ற நல்ல நீர் கிடைக்கும் கிணறு மதீனாவில் இருந்தது. அதுவும் அது யூதனிடம் இருந்தது. அதிலிருந்து நீர் எடுக்க முஸ்லிம்களை தடுத்து நின்றான். குடிப்பதற்கு நல்லநீர் கிடைக்காமல் தங்கள் தோழர்கள் படும் துயர் கண்டு தாஹா நபி அவர்களும் துயருற்றார்கள்.

‘பீரேரூமா’வை விலைபேசிப் பெற்று முஸ்லிம்களுக்கு உடமையாக்குபவர் உங்களில் எவரோ –நான் அவருக்கு சுவனத்தைப் பற்றி உறுதி கூறுகிறேன்’ என்று நாயகம் அவர்கள் அறிவித்தார்கள்.

உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை யூதனிடமிருந்து விலைபேசி வாங்கி முஸ்லிம்களுக்கு உடமையாக்கி வைத்தார்கள்.

மதீனாவின் பள்ளியில் தொழுவதற்கு இடம் போதாமை ஏற்பட்டபோது, பள்ளியைச் சூழ உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி மதீனாவின் பள்ளியை விரிவுபடுத்த அர்ப்பணித்தார்கள்.

ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் பெருமானார் அவர்கள் தபூக் போருக்கு ஆயத்தமானபோது, முப்பதினாயிரம் வீரர்களையும் பதினாயிரம் புரவிக்காரர்களையும் கொண்ட அப்படையில் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதினாயிரம் பேர்களுக்கான முழுச் செலவையும் ஏற்றார்கள்.

தபூக்போரிலிருந்து திரும்பிய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மனைவி உம்முகுல்தூம் அவர்களின் மரணச் செய்தியே வரவேற்றது. தம் மருமகரை அணைத்து ஆறுதல் வழங்கிய அல்லாஹ்வின் தூதர் அவர்கள்’ உதுமானே! என்னிடம் இன்னும் நாற்பது பெண்மக்கள் இருப்பினும் அவர்களை ஒருவர் பின் ஒருவராக உமக்கு மணமுடித்து அளிப்பேன்’ என்று கூறினார்கள்.

மதீனாவை விட்டும் போருக்காக வெளிச் செல்ல நேர்ந்த இரு சந்தர்ப்பங்களில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மதீனாவில் தம் கலீபாவாகவும் நியமித்துச் சென்றிருக்கிறார்கள்.

அவ்வப்போது இறைவனிடமிருந்து இறங்கிக் கொண்டிருந்த இறைவசனங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் ஹழ்ரத் உதுமான் ரலில்லாஹு அன்ஹு அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

முந்திய இரு கலீபாக்களான ஹழ்ரத் அபூபக்கர், ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோருக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு துணையாக இறுதிவரை நின்றார்கள். ஹிஜ்ரி 24ஆம் வருடத்தில் ஹழ்ரத் உமர் நாயகம் அவர்கள் ஷஹீதான பின்பு மூன்று நாட்கள் கழித்து நான்காம் நாள் காலை பள்ளியில் கூடியிருந்த மக்கள் முன்னே ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹழ்ரத் உதுமான் நாயகத்தை கலீபாவாக அறிவித்து, தாமே முதலாவதாக அவர்களின் கரம் பற்றி பிரமாணம் செய்தனர். அதன்பின் மற்றவர்கள் பிரமாணம் செய்து முடித்தனர்.

பரந்துவிட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின் ஏற்பட்ட கலகங்களை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதி நிலவச் செய்தார்கள்.

ஸிரியாவில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பின்னர் ரோமர்கள் ஆர்மீனியாவிலும் பதுங்கிக் கொண்டனர். அங்கும் கலகக்கொடி ஏந்தவே தமது ஆளுநர்களை அனுப்பி அதை அடக்கினர்.

ஸிரியாவின் ஆளுநராக திறம்பட நிர்வாகம் செய்து வந்த ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது எல்லைக்கு அருகிலுள்ள ரோமர்களிடம் மிகவும் உஷாராகவே இருந்தார்கள். அவ்வப்போது ரோமர்களின் துள்ளல்களையும் அடக்கியே வந்தனர். இருப்பினும் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றாதவரை ரோமர்கள் அடங்கமாட்டார்கள் என்று எண்ணினார்கள். ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்தில் அவர்களிடம் சொல்லப்பட்டபோது அவர்கள் அதற்கு மறுத்து விட்டார்கள். ஆனால் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஹழ்ரத் முஆவியா நாயகம் அவர்கள் கடற்படையை அமைத்தனர்.

ஹிஜ்ரி 27அல்லது 28ல் முதன் முதலாக புறப்பட்ட அப்படை ஸைப்ரஸை கைப்பற்ற முயன்றனர். அங்கு நிலைகொண்டிருந்த ரோமப்படைகளை முஸ்லிம்கள் வென்றனர்.

கலீஃபா அவாக்ள் ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ரோமானியக் கடற்படை வீரர்கள் எவரையும் கொல்வதை விட அவர்களை கைதிகளாகவே பிடித்து அவர்களிடம் கடற்போரின் நுணுக்கங்களை முஸ்லிம்களுக்கு கற்பிக்கும்படியாகவும் எழுதினார்கள். ஹழ்ரத் முஆவியா அவர்களும் அவ்விதமே செயல்பட்டார்கள்.

வடக்கிலும் மேற்கிலும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்ததைப் போன்று கிழக்கிலும் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வென்றார்கள்.

ஹிஜ்ரி 31ஆம் ஆண்டில் சில ஆயிரம்படைகளுடன் பலக்ஃகின் பக்கம் வந்த யஸ்தஜிர்த் சிறு வெற்றிகளைக் கண்டாலும் தொடர்ந்து முன்னேற அவனால் முடியவில்லை. அவன் முஸ்லிம் படைகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் திருகை அரைப்பவன் குடிலுக்குள் தஞ்சம் புகுந்தான். அவன் அவனுக்கு உணவு, உடை அளித்து அவன் உறங்கும்போது அவனை கொலை செய்து விட்டான். சுமார் 400வருடம் பாரம்பரியத்தைக் கொண்ட ஈரானிய மன்னன் தன் அரசபோகங்களை நான்கே ஆண்டுகள் அனுபவித்து இறந்து விட்டான்.

ஹிஜ்ரி 32ல் ஒரு பலமான கடற்போர் நடைபெற்றது.ஐரோப்பாவின் அந்தலூஸை வெற்றி கொள்ள முஸ்லிம்படைகள் சென்றபோது கான்ஸ்டன்டைன் ஒரு பெரும்படையைத் திரட்;டி மத்தியதரைக் கடலுகக்கு சென்று போரிட்டு முஸ்லிம்களிடம் தோற்றுப் Nபுhனான்.

கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலேயே உயர்ந்த முறையில் சித்தப்படுத்தப்பட்டிருந்த இஸ்லாமிய இராணுவம் கலீஃபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திறம்பட்ட நடவடிக்கையால் மேலும் உரம்பெற்றது.

மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்வாகத்தை விரிவுபடுத்தினார்கள். அவைகளை பொறுப்புடன் நடத்த பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன. மதீனாவுக்கு வந்து சேரும் பாதைகள் விரிவுப்படுத்தப்பட்டன. பாலங்கள் அமைத்தார்கள். பள்ளிவாசல்கள் ஆங்காங்கே நிர்ணமானிக்கப்பட்டன.கடைவீதிகள், காவல்நிலையங்கள், உணவு மாடங்கள், நீர்க் கிணறுகள் அமைக்க்பட்டன.

ஹிஜ்ரி 29ஆம் ஆண்டு பள்ளியை சுற்றி குடியிருந்த மக்கள் பள்ளியை விரிவுபடுத்துவதற்காக கலீபாஅவர்களின் வேண்டுகேளை ஏற்று அதை விட்டுக் கொடுத்தனர். அதை விரிவுபடுத்தினர்.

ஆளுநர்களையும், அதிகாரிகளையும் நியமித்த கலீபா அவர்கள் அவர்களை கண்காணிக்கவும் தவறவில்லை.

போர்களில் சிறையாகி கைதியாக வருபவர்களுக்கு தீன் மார்க்கத்தின் நெறிமுறைகளை போதிப்பார்கள். அவர்களின் அருளுரைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் இஸ்லாத்தில்இணைந்து விடுவார்கள். இதில் எந்த நிர்ப்பந்தத்தையும் சுமத்தமாட்டார்கள்.

ஒருமுறை வெள்ளிக்கிழமை மதீனாவின் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் திரள் பெரிதாக கூடியிருக்க அவர்களில் பலரின் செவிகளிலும் பாங்கின் ஓசை கேட்காமலே போய்விட்டது. அதனை அறிந்த கலீபா அவர்கள் மறு வெள்ளிக்கிழமை முதலே, வழமையாகக் கூறும் பாங்குக்கு சற்று முன்னதாகவே பள்ளிக்கு வெளியில் அதிகப்படியாக ஒருமுறை பாங்கொலிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கட்டளைப் படியே இன்றும் அது நடைமுறையில் இருந்து வருகிறது.

ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஒன்று சேர்த்து ஒரு நூலுருவிலாக்கப்பட்டு அப்பிரதி முதலில் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பாதுகாப்பாக இருந்தது. மக்களிடையே புழக்கத்தில் இல்லை.

அஜர்பைஜான், ஆர்மீனியா பகுதிகளில் கலகங்களை அடக்கச் சென்ற நபித்தோழர் ஹழரத் ஹுதைபத்துல் யமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆன் பலவாறாக ஓதக் கேட்டு அதை கலீபா அவர்களிடம் எடுத்துரைத்தார். கலீபா அவர்கள் ஹப்ஸா நாயகியிடமிருந்த குர்ஆனை வாங்கி சஹாபாக்கள் குழுக்களை ஏற்பாடு செய்து அவர்களை ஓதச் செய்து குர்ஆன் 7பிரதிகள் எடுக்கப்பட்டன.

அதில் ஒன்றை மதீனாவில் கலீபா அவர்கள் தங்களிடமே வைத்துக் கொண்டார்கள். மற்றவைகளை மக்கா, ஸிரியா, யமன், பஹ்ரைன், கூஃபா, பஸ்ரா ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைத்து அதன்படியே திருமறை ஓதப்படவேண்டுமென கட்டளையிட்டார்கள்.

ஹிஜ்ரி 35ஆம் ஆண்டு துல்ஹஜ்ஜு பிறை 18அல்லது 24ஆம் நாள், இஸ்லாத்தின் மூன்றாவது கலீபா, தங்களையும் முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்ட ஒரு கூட்டத்தாரின் கரங்களாலேயே, ‘எவ்விதக் குற்றமுமற்றவர் கலீஃபா’ என முடிவு காணப்பட்ட நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

எகிப்தில் இப்னு ஸபா கலீஃபா அவர்கள் மீது பகைமையை உண்டாக்கி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான். ஏற்கனவே ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கலீபா அவர்கள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக தீர்ப்பு செய்ததால் அதனால் கோபமடைந்த அவர்கள் எகிப்து சென்று வாழ்ந்து வந்தனர். அவர்களுகம் கலீபா அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இதேபோல் ஹழ்ரத் முஹம்மது இப்னு அபீ ஹுதைஃதஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களை ஆளுநராக கலீபா அவர்கள் நியமிக்காததால் அவர்கள் மீது பகைமை கொண்டிருந்தனர். இவர்களும் எகிப்தில்தான் வாழ்ந்து வந்தனர். இவர்களின் பிரச்சாரங்களாலும் கலீபா அவர்களின் ஆட்சிக்கு எதிராக குழப்பங்களும், கலகங்களும் உண்டாக ஆரம்பித்தன.

கலீபாவின் மீது இந்தக் கலகக் காரர்கள் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கு கலீபா அவர்கள் தக்க பதில் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் கலீபாவை அவர்கள் சுமத்திய அபாண்ட குற்றச்சாட்டுகளுக்காக கொல்லத் துணிந்தனர்.

ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் சஹாபாக்கள் சிலர் கலகக்காரர்களோடு சமாதானம் பேசி அவர்கள் விரும்பியபடி முஹம்மது இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எகிப்திற்கு கலகத்தை அனுப்ப அனுமதியை கலீபா அவர்களிடம் பெற்றுத் தந்தனர்.

ஆனால் 5ஆம் நாள் காலையில் புரட்சி ஓய்ந்து விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த சஹாபாக்கள் பெருத்த ஆரவாரத்தினை கேட்டார்கள். அதில் கலீபாவை கொல்வோம், வஞ்சகத்தை வெல்வோம், பழிக்குப் பழி தீர்ப்போம் என்ற குரல்கள் கேட்டு திடுக்கிட்டார்கள். எகிப்தியர்களை கண்டு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். என்ன நடந்தது? என்று.

பயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் மூன்றாம் நாள் ஒரு அடிமை எங்களை முந்திச் சென்றுக் கொண்டிருந்தான். அவனின் வேகத்தில் எங்களுக்கு ஐயம் பிறந்தது. அவனை விசாரித்ததில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் கலீபாவின் முத்திரையும் பதிக்கப்பட்டிருந்தது. அதில் முஹம்மது இப்னு அபூபக்கரையும்,மஹ்ஹ முஹாஜிர்களையும், அன்சார்களையும் கொலை செய்துவிட்டு அபூஸர்ராஹ்வையே பதவியில் நீடிக்கும்படி எழுதப்பட்டிருந்தது. அதனால் கலீபா எங்களுக்கு வாக்குறுதிக்கு மாறு செய்துவிட்டார். வஞ்சித்துவிட்டார் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் சூளுரைத்தனர்.

கலீபா உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுபற்றி கேட்டார்கள். அந்த கடிதம் நான் எழுதவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொன்னார்கள். கடிதத்தின் வாசகங்களும் இது வஞ்சகர்களால் எழுதப்பட்டது என்பதையே காட்டி நின்றது.

அந்த அடிமையை என்னிடம் ஒப்படையுங்கள். அவனை விசாரித்து இது எப்படி நடந்தது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்கள். அதற்கு நாங்கள் அவனை விசாரித்து விட்டோம். உங்கள் முத்திரையை வைத்திருக்கும் மர்வானின் சதியே இது. எனவே மர்வானை எங்களிடம் ஒப்படையுங்கள் என்றார்கள். கலீபா அவர்கள் மறுத்து விட்டார்கள்.

நாங்கள் உங்களை சந்தேகிக்கவில்லை. தங்கள் அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிடுங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று நீதியுடன் நடக்கும் அதிகாரிகளை நியமியுங்கள் என்று கலகக்காரர்கள் தெரிவித்தனர்.

கலீபா அவர்கள் நீங்கள் கூறுகிறவர்களை நியமனம் செய்யவேண்டும். குற்றவாளிகளை நீங்களே விசாரணை செய்ய வேண்டும்; என்றால் கிலாபத் என்னுடையதாக எப்படி ஆகும்? என்று கேட்டார்கள்.

நிச்சயமாக அப்படித்தான் ஆக வேண்டும். இல்லையானால் நீங்கள் பதவி விலகுங்கள் என்றனர் எகிப்தியர்கள்.

கிலாஃபத் என்பது அல்லாஹ் எனக்கருளிய மேலாடை. ஒருக்காலும் அதனை நான் என் கரத்தால் கழற்றி வீசமாட்டேன் என உறுதியுடன் கூறினார்கள்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி கலகக்காரர்கள் கலீபா அவர்களின் வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகை ஏறத்தாழ நாற்பது நாட்கள் வரை நீடித்தது.

இதற்கிடையில் துணைக்கு வெளிமாகாணங்களிலிருந்து படைகளை கலீபா அவர்கள் வரவழைத்தார்கள். அதுவந்து சேரும்வரை அங்குள்ள அதிகாரிகள் நிதானம் காட்டியிருப்பார்களேயானால் கலீபா அவர்களுக்கு துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

வெளிமாகாண படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று கலகக்காரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் கலீபா அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் கலகக்காரர்களால் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர், உணவு வீட்டுக்குள் செல்வதும் நிறுத்தப்பட்டது.

கலிபா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தங்கள் நிலைமையை சொன்னபோது, அன்னார் கலீபா அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துதவினார்கள்.

ஹஜ்ஜுடைய காலமும் முடிந்து விட்டது. இனி முற்றுகையை நீடிக்கச் செய்தால் பேராபத்துகள் விளையும் என்று கலகக்காரர்கள் சிந்திக்கலாயினர். அன்சார்களும், முஹாஜிர்களும் கலீபா அவர்களுக்காக இரத்தம் சிந்தி போராட தயாராக இருந்தனர். ஆனால் அதற்கு கலீபா அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கலீபா அவர்களின் வாசல்வழியாக கலகக்காரர்கள் நுழைந்துவிடாமல் தடுக்க காவல் காத்திட ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிறுத்தியிருந்தார்கள்.

ஆனால் கலகக்காரர்கள் பின்வழியாகச் சென்று வீட்டினுள் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நால்வர் நுழைந்தனர். மற்றர்களை வெளியே நிறுத்திவிட்டு முஹம்மது இப்னு அபூபக்கர் அவர்கள் மட்டும் உள்ளே சென்று, குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஹழ்ரத் உதுமான் இப்னு அப்பான் அவர்களின் தாடியை பிடித்து, கேலியாக சில வார்த்தைகளைக் கேட்டனர்.

அதற்கு கலீபா அவர்கள் ‘என் சகோதரர் மகனே! உம்முடைய தகப்பனார் இருந்திருப்பின் என் முதுமையை மிகக் கண்ணியப்படுத்துவார். உம்மின் இச்செயலைக் கண்டு நிச்சயம் நாணமுறுவார் என்று சொன்ன சொல் முஹம்மத் இப்னு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை குத்தீட்டிபோல் தாக்கியது. உடனே உடல் முழுவதும் வியர்த்தொழுக கலீபா அவர்களை விட்டும் ஓடிவிட்டார்.

அதனைக் கண்ட வெளியில் நின்றவர்களில் ஒருவன் வாளுடன் உள்ளே நுழைந்தான். மற்றொருவன் கலீபா அவர்களை நோக்கி வாளை வீசினான் தடுத்த கலீபா அவர்களின் மனைவி நாயிலா அம்மையாரின் கைவிரல்கள் நான்கு துண்டித்து விழுந்தன. அவ்வாள் கலீபாவின் சிரசிலும் பட்டு அதனால் வெளியான இரத்தம் அவர்கள் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனின்

فَسَيَكْفِيْكَهُمُ اللهُ

உங்களுக்கு அல்லாஹ் போதுமானவன் (2:137) என்ற வசனத்தின் மேல் பட்டது. கலீபா அவர்களின் உயிர் பிரிந்தது.

அன்னாரின் ஜனாஸா மூன்று நாட்களுக்குப் பிறகு கலீஃபா அவர்களின் உடல் பதினேழு சஹாபாக்கள் சுமந்து செல்ல ஜன்னத்துல் பகீயின் அருகிலுள்ள மையவாடியில் (தற்போது இவ்விடம் ஜன்னத்துல் பகீஃயுடன் சேர்ந்துள்ளது) அடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரை கொலை செய்த கூட்டத்தார் இறுதியில் மிகவும் கேவலத்திற்குள்ளாகி ஈமானிழந்து செத்து மடிந்தனர் என்று வரலாறு கூறுகிறது

ஹழ்ரத் பிலால் ரழியல்லாஹு அன்ஹு

பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) யின் எஜமான் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்த உமைய்யா பின் கலஃப் என்பவன்.

பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். நபிகளார் ஏகதெய்வ வழிபாட்டை வலியுறுத்தி இஸ்லாத்தை எடுத்துரைத்தபோது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர்.  அடிமைகளாயிருந்தவர்களில் முதன்முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே.

உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை ‘அஹதுன் அஹதுன்’ என்றே கூறினார்கள்.

அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விலைக்கு பின்னர் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் விடுதலை செய்தார்கள்.

மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு)யை நியமிக்கிறார்கள். முதல் முஅத்தீன் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) என நாம் அறிகிறோம்.

பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை (முன்னாள் எஜமான்) பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொன்றார்கள்.

மக்கா வெற்றி கொள்ளப்பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி((ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே.

ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி வாங்கி வேறொருவர் பாங்கு சொன்னபோது, சற்று நேரம் கழித்து ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘ஏன் இன்னும் பாங்கு கூறவில்லை? என்று வினவினர்.

வேறொருவர் இன்று பாங்கு கூறினாரே!’ என்றனர் அண்ணல். அது கேட்ட ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘பிலாலின் பாங்கு அர்ஷு வரைக்கும் கேட்குமே. இன்று கேட்கவில்லையே என்றுதான் வினவினேன்’ என்றனர்.

நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அரேபியாவில் நானே முதல் முஸ்லிம். அபினீசியாவில் பிலாலே முதல் முஸ்லிம்’ என்று இவர்களை அவர்கள் புகழ்ந்து கூறினர்.

மற்றொரு சமயம் அண்ணலார் வழக்கமாக பால் அருந்திவந்த கோப்பையை கை தவறிக் கீழே போட்டு உடைத்து விட்ட போது, இவர்கள் மீது பெரிதும் வெகுண்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் அண்ணல் நபிகளார் வந்ததும் ‘நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான அன்பின் காரணமாகவே பிலால் கவனக்குறைவாக நடந்து கொண்டார். அவரைக் கண்டித்து வையுங்கள். அல்லது விலக்கி விடுங்கள் என்று சொன்னார்கள்.

அதுகேட்ட அண்ணலார், ஒருவர் ஒரு செயலை ஆற்றும்போது அதில் அவருடைய கவனம் குறையின் அது வேறொன்றில் போய் பதிகிறது என்று பொருள். பிலால் அப்பணியை ஆற்றும்போது அவருடைய கவனம் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும். அதற்காக வேண்டியா அவரை விலக்குமாறு கூறுகிறாய்? ஒருவேளை பிலாலை விலக்குவதா, ஆயிஷாவை விலக்குவதா என்ற பிரச்சனை ஏற்படின் உன்னையே விலக்கி விடுவேனேயன்றி பிலாலை விலக்கி விடமாட்டேன் என்றனர்.

ஒருமுறை குறைஷிகளை சிறிது குறைவாகப் பேசியதற்காக நபித்தோழர் ஒருவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது சினந்து, அச்செய்தியை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சொன்னபோது, எவருடைய மனத்தை நோவினை செய்வது அல்லாஹ்வையும் அவனுடைய தூதுவரையும் வருத்தமுறச் செய்யுமொ அவருடைய மனத்தையா நீர் நோவினை செய்தீர்?’ என்று அத்தோழரிடம் சொன்னார்கள் அண்ணல் பெருமானார். அக்கணமே அவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்டார்.

இவர்களை கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்யிதினா (எங்களின் எசமானே) என்று அழைத்தனர்.

அண்ணலார் அவர்கள் மேற்கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட இவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்ததும் மதீனாவைக் காணச் சகியாமல் சென்று அங்குள்ள கூலான் என்ற இடத்தில்; வாழ்ந்து வந்தனர். இதன்பின்  இவர்கள் தம் வானாளில் இரண்டு தடவைகள்தாம் பாங்கு சொல்லியுள்ளனர்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜெருஸலம் வந்தபோது ளுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்ல கலீபா அவர்களும், மற்றவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க பாங்கு சொன்னார்கள்.

இரண்டாவது, அண்ணல் நபிகளார்  இவர்களின் கனவில் தோன்றி இவர்களை மதீனா வருமாறு அழைக்க அதன்படி மதீனா சென்று அண்ணலாரின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வேண்டியதற்கிணங்க பாங்கு சொன்னார்கள்.

பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. இதன்பின் திமிஷ்க் சென்று வாழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி 20 ஆம் ஆண்டில் தம் 70 வது வயதில் காலமாகி அங்குள்ள பாபுஸ் ஸகீர் என்ற கோட்டை வாயிலின் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

மிஃராஜ் சென்று திரும்பிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.

ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு

நபித்துவம் என்னுடன் முற்றுப் பெறாதிருந்தால் உமர் நபியாகத் தகுந்தவரே’ என்றும்,

உங்களிடையே நான் இன்னும் எத்துணை காலம் உயிர் வாழ்வேன் என்பதை நிச்சயமாக நான் அறிய மாட்டேன். எனக்குப் பின்னர் நீங்கள் அபூபக்கரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்றும்,

என அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

‘எல்லா அரபுகளின் அறிவையும் ஒரு தட்டில் வைத்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவைத் துலாக்கோலின் மறுதட்டில் வைத்தால் அந்த மறுதட்டே கனத்து நிற்கும்…. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு ஒரு கணம் அமர்ந்திருப்பதை ஓராண்டு கால வழிபாட்டை விட நான் மேலானதாக நினைக்கிறேன்’ என்றார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அண்ணலெம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே வாளெடுத்து கொல்ல சூளுரைத்து வந்தவர்தானே ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

பொறுப்புகளை பகிர்ந்து மக்கமா நகரத்தை நிர்வகித்து வந்து பத்துக் குறைஷி கோத்திரங்களில் ‘அதீ’ கோத்திரத்தமும் ஒன்று. அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏழாவது தலைமுறைப் பாட்டனார் ‘முர்ரஹ்’வின் உடன்பிறந்தவரே அதீ.

அதீயின் புதல்வர் ஸராஹ்

அவரின் புதல்வர் கர்த்

அவரின் புதல்வர் அப்துல்லாஹ்

அவரின் புதல்வர் ரபாஹ்

அவரின் புதல்வர் அப்துல் உஜ்ஸா

அவரின் புதல்வர் நுபைல்

அவரின் புதல்வர் கத்தாப்

அவரின் புதல்வர் ஹழ்ரத் உமர்

இவர்களின் அன்னை’கன்த்தமா’ ஹிஷாம் இப்னு முகீராவின் மகள். இவ்வகையில் அபூஜஹலும் இவர்களுக்குத் தாய்மாமனே ஆக வேண்டும்.

எழுதப்படிக்கத் தெரிந்த பதினேழு பேரில் தாமும் ஒருவர் என்ற தகுதியை அவர்கள் தமக்குத் தாமே உண்டாக்கிக் கொண்டவர்கள் உமர் இப்னு கத்தாப் அவர்கள்.குறைஷிகள் சார்பாக பிற நாட்டவரிடமும், பிற கூட்டத்தாரிடமும் தூது செல்லும் பொறுப்பு அதீ குடும்பத்தாரைச் சார்ந்திருந்தது. வாழையடிவாழையாக தம்மை வந்து சேர்ந்த பொறுப்பை இனி தம் மகனார் உமரே வகிக்கத் தகுதியானவர் என எண்ணி அவர்களிடமே அதனை ஒப்படைந்து விட்டார் கத்தாப்.

இவ்வாறாக உமர் ரலியல்லாஹு அன்ஹு 27ஆம் வயதில் உலவிக் கொண்டிருந்த போது அண்ணலெம்பெருமானார் அல்லாஹ்வின் தூதர் என்று தம்மை அறிவித்து இஸ்லாத்தை எடுத்துரைக்க ஆரம்பித்திருந்தனர்.

ஏறத்தாழ ஆறாண்டு காலம் வரை அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. ஆனால் தம் உடன்பிறந்த தங்கை பாத்திமா, தங்கையின் கணவர் ஸஈத் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறவினர் நுஐம் இப்னு அப்துல்லாஹ் ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர்.

முஹம்மதை கொல்வேன் என்று வாளேந்தி சென்று கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வழியில் ஹழ்ரத் நுஐம் இப்னு அப்துல்லாஹ் தடுத்து, உமது வீட்டில் சென்று பாரும். அங்கு உம் தங்கையும், அவர் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளனரே என்று சொன்னார். அதற்கு ஆதாரமென்ன? என்று கேட்டார்.

உம்மால் அறுக்கப்பட்டவற்றின் இறைச்சியினை அவ்விருவரும் உண்ணமாட்டார்கள். ஏனெனில் நீர் அவற்றை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்திருக்க மாட்டீர் என்று.

ஒரு வெள்ளாட்டின் பொரித்த இறைச்சியை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு தம் உடன்பிறந்தாரின் வீட்டுக்கு சென்றார். உள்ளே இனிமையாக ஓதப்படும் குரல் கேட்டார்.

அதன் பிரதிகளை தம்மிடம் தருமாறும் அதைப் பார்த்துவிட்டுத் தருகிறேன் என்றும் கேட்டார்கள். நீர் சுத்தமாக குளித்து விட்டு வந்தால்தான் அதைத் தருவேன் என்று கூறினார் தங்கை. அவ்வாறே அவர் செய்து விட்டு வந்ததும்,

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ طه . مَا أَنزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَىٰ. إِلَّا تَذْكِرَةً لِّمَن يَخْشَىٰ.

‘அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவக்குகிறேன்.

தாஹா நபியே! அஞ்சக் கூடியவர்களுக்கொரு நல்லுபதேசமாகவே அன்றி நீர் துன்பப்படுவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உம்மீது அருள் செய்யவில்லை’

(அல்-குர்ஆன் 20:1-3)

என்று ஓதிய அவர்கள் தொடர்ந்து ஓத ஆரம்பித்தார்கள். இதில் எட்டாவது வசனத்தை ஓதி முடித்ததும்

அவனைத் தவிர வேறு யாரைத்தான் அழைப்பது? இதைத்தான் குறைஷிகள் எதிர்க்கிறார்களா? என்று

அங்கேயே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும், அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவனின் தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன் என்றும் உரத்துக் கூறினார்கள்.

நேரே தாருல் அர்க்கம் சென்றார்கள். அண்ணலெம்பெருமானார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றனர்.

சஹாபாக்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அண்ணலார் உமர் நாயகத்திற்கும் ஹிஜ்ரத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். அன்னார் நெஞ்சுரத்தோடு குறைஷிகளின் முன் சென்று இந்த உமர் ஹிஜ்ரத் புறப்பட்டு செல்கிறான். தைரியமிருந்தால் தடுப்பவர்கள் தடுத்துப்பார்க்கட்டும் என்று வீரமாக பேசியே சென்றார்கள். அவர்களுடன் ஏறத்தாழ இருபத நபர்கள் இணைந்து சென்றார்கள்.

மதீனாவில் அன்னாரின் வாழ்வை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். நாயகத்தோடு இருந்த பதினோராண்டு காலத்தில் அவர்களின் வாழ்வு நாயகத்தோடு பின்னிப் பிணைந்தே இருந்தது.

முஹாஜிர்களுக்கும், அன்சார்களுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட சகோதரப் பிணைப்பில் ஹழ்ரத் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸாலிம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தலைவரான உத்பா இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற அன்சாரியின் சகோதரர் ஆயினர். ஆரம்பத்தில் அந்த குடும்பத்தார் குபாவில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஹழ்ரத் உமர் நாயகமும் ஆரம்பத்தில் சில நாட்கள் குபாவில் வாழ நேர்ந்தது. குபாவோ மதீனாவிலிருந்து மூன்று கல் தொலைவில் இருந்தது. அதனால் தொடர்ச்சியாக நாயகத்தின் மஜ்லிஸுகளில் கலந்து கொள்ள முடியாமலிருந்தது.

இஸ்லாத்தின் முதல் போரானது பத்ருபோரில் உமர் நாயகமும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களில் உமர் நாயகத்தின் குடும்பத்தினர் மட்டும் 12பேர் இருந்தனர்.

போரில் சிறைபிடிக்கப்பட்ட 70குறைஷிகளையும் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களிடமிருந்து ஈட்டுப் பணம்பெற்றுக் கொண்டு விடுவிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தனர். ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அந்த குறைஷிகள் அல்லாஹ்விற்கும் ரஸூலுக்கும் பகைவர்களல்லவா? எனவே அந்த கைதிகளை அவர்களின் உறவினர்களிடமே ஒப்படையுங்கள். அவர்கள் தத்தம் கரங்களாலேயே அவர்களின் உறவினர்களை வெட்டி மாய்க்கட்டும். இதுவே தண்டனை என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குமுறலாக கூறக் கேட்டதைக் கண்ட நபிகளார்,

‘என் தோழர் அபூபக்கர் நபிமார்களில் இப்றாஹீம், ஈஸா அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரைப் போன்றவர். உமரோ நூஹ், மூஸா அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரை ஒத்தவர்’ என வர்ணித்த நபிகளார் ஹழ்ரத் அபூபக்கர் அவர்களின் கருத்துக்கேற்பவே கைதிகளை விடுதலை செய்தனர்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் நடைபெற்ற உஹத் போரில் வீரத்துடன் போரிட்டனர். தாம் வென்று விட்டதாக ஆணவமாக கூக்குரலிட்ட குறைஷிகளுக்கு தக்க நேரத்தில் பதிலளித்து அன்னார்களின் சந்தோஷத்தை இல்லாமலாக்கினர்.

ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் அகழ்ப்போரில் தீவிரப் பங்காற்றினர்.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டில் இறையில்லத்தை உம்ரா செய்யும் எண்ணம் கொண்டு நபி பெருமானார் அவர்கள் தங்கள் தோழர்களுடன் நிராயுதபாணியாகவே புறப்பட்டார்கள். ‘துல்ஹுலைஃபா’ என்ற இடத்தில் தங்கிய சமயம் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே, ‘பெருமானே! நாம் நிராயுதபாணியாக செல்வது சரியில்லை’ என்று சொன்ன கருத்தை நபிகளார் ஏற்று மதீனாவிலிருந்து ஆயுதங்களை கொண்டு வரச் செய்தார்கள். ஹழ்ரத் உமர் நாயகத்தின் ஊகம் சரியானது என்பதற்கு ஹுதைபிய்யாவில் நடைபெற்ற சம்பவங்களே சான்றாய் அமைந்து விட்டது.

ஹி;ஜரி ஏழாம்ஆண்டில் நடைபெற்ற கைபர் படையெடுப்பின் வெற்றியில் தங்களுக்கு கிடைத்த ஒரு நிலத்தை ஹழ்ரத் உமர் அவர்கள் அல்லாஹ்வுக்காக வக்பு செய்தார்கள். வரலாற்றில் வக்பு செய்யப்பட்ட முதல் பூமி இதுவே.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்கா வெற்றியின் போது பெருமானார் கரம் பற்றி மக்கள் கூட்டம் கூட்டமாக பிரமாணம் ஏற்ற போது, பெண்களிடம் பிரமாணம் பெறும் பொறுப்பை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே ஏற்றிருந்தனர். அதனையடுத்து நடைபெற்ற ஹுனைன் போரிலும் அவர்கள் பங்காற்றினர். ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் தபூக் போருக்காகத் தங்கள் உடைமைகளில் சரிபாதியை பிரித்துக் கொணர்ந்து அன்புடன் அளித்தனர். ஹிஜ்ரி 10ஆண்டில் நபி பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறைவேற்றிய ஹஜ்ஜிலும் உடன் இருந்தனர்.

வாழ்நாள் நெடுகிலும் தம்மைத் துயர்ந்து உடலாலும் பொருளாலும் தம்மை அர்ப்பணித்த அத்தோழரை பெருமானார் அவர்களும் பெரிதும் நேசித்தார்கள்.

‘அரஃபாவாசிகளைக் கொண்டு பெருமை கொள்ளும் அல்லாஹ் உமரைக் கொண்டு அதிகம் பெருமை கொள்வான்’ என்றுரைத்த நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உமரிடத்தில் பகை கண்டவர் என்னிடத்திலேயே பகை கொண்டார். உமரை நேசித்தவர் என்னையே நேசித்தார்’ என்றும் அறிவித்தார்கள்.

ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளார் ஹஃப்ஸா நாயகி ஒரு போரில் தம் கணவரை இழந்து கைம்பெண்ணாக நின்றபோது, நபி பெருமானார் அவர்கள் அவரைத் தாமே மணந்து மறுவாழ்வளித்து பெருமையுறச் செய்தார்கள்.

ஒருநாள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வலக் கரத்தை ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோளின் மேலிட்டவர்களாக, தம் இடக்கரத்தை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தோழில் மேலிட்டவர்களாக, பள்ளியினுள் நுழைந்த போது அங்கிருந்த தோழர்களை நோக்கிக் கூறினார்கள்:

‘இப்படித்தான் நாங்கள் எழுப்பப்படுவோம் மறுமை நாளன்று’ என்று.

அண்ணல் எம்பெருமானார் அவர்கள் மறைந்த அன்று தங்கள் இல்லத்துள் நடைபெற்ற நிகழ்வை அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் விவரிக்கிறார்கள்: அன்னையாரின் அனுமதி பெற்று ஹழ்ரத் உமர் அவர்களோடு ஹழ்ரத் முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் உள்ளே நுழைகிறார்கள். படுக்கையில் இருந்த அண்ணலாரின் முகத்தை உற்றுநோக்கிய ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகக் கவலையோடு கூறிக் கொண்டார்கள்: ‘எத்துணை கடுமையான மயக்கம் ஏற்பட்டிருக்கிறது எம்பிரான் அவர்களுக்கு’ என்று.

அவர்களின் தோள்களைப் பற்றிய ஹழ்ரத் முகீரா அவர்கள் கேட்டார்கள்:’ அபல் ஹஃப்ஸ்! அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பது விளங்கவில்லையா உமக்கு’ என்று.

மறுகணமே, ‘முகீரா’ என்ற உறுமல் கேட்டது ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து. என்ன உளறுகிறீர்கள்? நீங்கள் சொல்வது பொய். நீ ஒரு குழப்பக்காரனாய்த் தோன்றுகிறீர்கள்? ஒரேயொரு நயவஞ்சகனும் மதீனாவினுள் எஞ்சியிருக்கும் நிலையிலும் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பார்களா? இல்லை. ஒருக்காலும் இல்லை’ எனக் கூறியவர்களாக வெளியேறிய அவர்களின் கரம் வாளை உருவிக் கொண்டது.

பள்ளியினுள் நுழைந்த அவர்கள், ‘நபிபெருமானார் அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று கூறத் துணிந்தவர்களை இந்த வாளால் வெட்டுவேன். ஒருக்காலும் அவர்கள் மரணிக்கவே இல்லை. மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வோடு வசனிக்கச் சென்றிருக்கிறார்கள். மீண்டும் வருவார்கள்’ என்றார்கள்.

ஆயிஷா நாயகியும் கூறுகிறார்கள்: ‘நானும் அப்படித்தான் எண்ணினேன். உமருடைய கூற்று உண்மையாகவே இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். இன்னும் சற்று நேரத்தில் நபி அவர்கள் விழித்தெழுவார்கள். தாங்கள் இறந்து விட்டதாகக் கதைத்துக் குழப்பம் விளைவிக்க எண்ணயவர்களை வாளேந்தி வெட்டி வீழ்த்துவார்கள் என எதிர்பார்த்தேன்’ என்று.

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் திருமறையின் 3:144ஆம் வசனத்தை ஓதிக் காட்டி அவர்களுக்கு உண்மையை விளங்க வைத்தார்கள்.

நபிகள் நாயகத்தை குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் அன்ஸாரிகள் ஒன்றுகூடி அவர்களில் ஒருவரை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க எண்ணினார்கள் என்ற செய்தி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஹழரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுத்த உரிமை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையேச் சாரும்.

ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதவியேற்ற நாள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனா வாழ்வின் இரண்டாம் கட்ட ஆரம்ப நாளாகும். அன்னாரின் இரண்டே காலாண்டு காலமும் அவர்களுக்குத் துணையாக நின்றார்கள்.

பூமியில் ஷைத்;தான்கள் உமரைக் கண்டு அஞ்சியோடுகின்றனர். வானத்திலோ எந்த ஒரு மலக்கும் உமரைக் கண்ணியப்படுத்தாமல் இல்லை’, என்றும்,

‘பெருமானே! உமர் அவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். அவரின் கோபம் இறைவனுக்கு மிகப் பிரியமானதாக இருக்கிறது என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே வந்து கூறியதாகவும்,

ஒருமுறை ஹழ்ரத் உமர் அவர்களைச் சுட்டிக்காட் நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இவரின் பொருட்டால் குழப்பங்களின் வாசல் அடைபட்டிருக்கிறது. இவர்கள் உயிரோடிருக்கும்வரை எந்த ஒருவனும் குழப்பம் விளைவிக்க துணிவு பெறமாட்டான் என்றும் உள்ள பொன்மொழிகளையும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடத்தையைக் கண்டும் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே கிலாபத்துக்கு தகுதியானவர்கள் என்று அவர்களை தங்கள் மரணத் தருவாயில் ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நியமித்தார்கள்.

ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு ஜமாதில் அவ்வல் மாதம் 13ஆம் நாள் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மதீனா வாழ்வின் மூன்றாம் கட்டத் துவக்க நாளாகும். மறைந்த கலீஃபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை அடக்கம் செய்தபின் உமர் ரலியல்லாஹு அன்ஹு கிலாஃபத்தை அன்று ஏற்றார்கள்.

பதவிஏற்றபின் உடல் அடக்கத்திற்காக நாட்டின் பல புறமிருந்தும் வந்திருந்தவர்கள் கலீஃபாவிடம் பிரமாணம் செய்தபின் அவர்களை போருக்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார்கள் கலீஃபா அவர்கள். ஜுஸ்ர் போர் எனப் பெயரிடப்பட்ட ஈரானியர்களுடன் நடைபெற்ற அந்த போரில் முஸ்லிம்களுக்கு தோல்வியே கிடைத்தது. முஸ்லிம்களுக்கு கிடைத்த தோல்வி இதுதான் கடைசியான தோல்வியாக இருந்தது.

தோற்றுப் போன முஸ்லிம்களிடம் வீரஉரை நிகழ்த்திய கலீபா அவர்கள், அன்னாரின் பேச்சைக் கண்டு நாடெங்கும் வாழ்ந்த அரபு கிறித்துவர்களையும் கிளர்ந்தெழுகச் செய்தது. அவர்களையும் சேர்த்து ஹழ்ரத் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் பஜ்லி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் படையை அனுப்பி அதில் வெற்றியும் கண்டனர். அந்த போருக்கு ‘லுபைப் போர்’ எனப்பட்டது. இப்போரில் ஓரிலட்சம் ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். அப்போரில் தோல்வியடைந்த ருஸ்த்தும் முஸ்லிம்களுக்கு ஆபத்தானவனாக இருந்தான். ஹிஜ்ரி 14ஆம் ஆண்டில் மதீனாவின் பொறுப்பை ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தாமே படைநடத்தி சென்றனர். சில காரணங்களுக்காக கலீபா அவர்கள் ஹழ்ரத் ஸஃது இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை படைநடத்திட செய்தனர். காதிஸிய்யா என்னுமிடத்தில் நடைபெற்ற போரே ரானியர்களுக்கு ஊதப்பட்ட ஸூர் ஆகும்.

ஹிஜ்ரி 15ஆம் ஆண்டில் ரோமானியர்களோடு யர்மூக்கில் போர் புரிந்து வென்றனர். இதுவும் காதிஸியாப் போர் போல் வரலாற்றில் மிகவும் இடம் பெற்றுவிட்டது.

ஹிஜ்ரி 16ஆண்டில் பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது.

ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் ஹிஜாஸை வாட்டிய பஞ்சத்தால் வான் பொய்த்து, பயிர்களும் கனிகளும் அழிந்து, மக்கள் பரிதவித்தலைய பைத்துல்மால் செல்வத்தை மக்களின் பசிதீர்க்க செலவழித்தனர்.ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் பஞ்சம் பீடித்தது.

ஹழ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கனவில் திருத்தோற்றம் வழங்கி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள ‘பிலாலே! உமருக்கு என் ஸலாமைக் கூறுவீராக, வான்பொழியும். பஞ்சம் ஒழியும் என அவருக்கு நன்மாராயம் கூறுவீராக! எனினும் எமக்களித்த வாக்குறுதியை அவர் நிறைவுப்படுத்தாதேனோ!’ எனக் கேட்டு மறைந்தார்கள்.

மறுநாள் தாம் கண்ட கனவை ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சொன்னதும், சஹாபாக்கள் ஒன்றுகூடி தீர்க்கமாக ஆராய்ந்தார்கள். இறுதியாக ‘ஸலாத்துல் இஸ்திஸ்கா’ என்னும் பஞ்சகாலத் தொழுகையை நாம் தொழ நபிகளார் பணித்திருக்கிறார்கள் என்று முடிவு கண்டனர்.

கலீபா அவர்கள் மக்களனைவரையும் ஊருக்கு வெளியே ஒன்று திரட்டினார்கள். நபிமணித்தோழர்களை அவர்களுக்கு முன்னே நிற்கச் செய்தார்கள். நபிகளாரின் சிறிய தந்தை ஹழ்ரத்; அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தலைமையாக நிறுத்தினார்கள். அன்னை ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்த பெருமானாரின் திருப்போர்வையை கேட்டுப் பெற்று தங்கள் சிரசின் மேல் போர்த்திக் கொண்டவர்களாக, ஹழ்ரத் அப்பாஸ் நாயகமவர்களின் கரத்தை விண்ணின்பால் தாங்கிப் பிடித்தவர்களாக, ‘எங்கள் நாயனே! உன் தூதர் பெருமானை நீ எங்களிடமிருந்து அழைத்துக் கொண்ட நிலையில், இன்று எங்களிடையே இருக்கும் அவர்களின் சிறிய தந்தையையே உன் முன் வஸீலாவாக வைத்து நிற்கிறோம். அவர்களின்பொருட்டு எங்களின் பிழைகளை நீ பொறுத்தருள்வாயாக! என்று இறைஞ்சினார்கள். அவர்களின் வேண்டுதலை ஏற்று ஹழ்ரத் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் கரங்களை ஏந்தி இறைஞ்ச ஆரம்பித்தார்கள். அவர்களின் இறைஞ்சுதல் நிறைவுறும் முன்னதாகவே மழைபொழியத் துவங்கியது. சுமார் ஒருவாரகாலம் வரை மழை பெய்தது.

மதீனாவின் பஞ்சம் அகலும் முன்பாகவே ஸிரியாவில் காலரா நோய் பரவியது. ஹிஜ்ரி 17ஆம் ஆண்டு இறுதியில் உருவாகிய இந்நோய் ஹிஜ்ரி 18ஆம் ஆண்டில் பயங்கரமாக உருவெடுத்து மெஸபடோமியா வரை தொடர்ந்தது. இந்நோய்க்கு பெருவாரியான வீரர்கள் பலியாகினர். கலீஃபா அவர்கள் நிவாரணப் பணிகளை அவ்வப்போது செய்து வந்தனர்.

பாரஸீகத்தில் காதிஸியாப்போரில் தோல்வி கண்ட ஈரானியத் தளபதி ஹர்மூஸான் முஸ்லிம்களுக்கு தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பல்வேறு போர்களுக்கு வித்திட்டாலும்,அதில் தோல்விகளையே தழுவினான். இறுதியில் நடந்த போரில் ‘தன்னை மதீனாவுக்கே அனுப்பி ககலீஃபா அவர்களின் நேரடித் தீர்ப்புக்கு விட்டுவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு சரணடைந்து விட்டான்.

அதன்படி மதீனா வந்த ஹர்மூஸான் வெகு சாதுரியத்தோடு கலீபா அவர்களிடம் உயிர்ப் பிச்சை வாங்கிக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று கலீஃபாவிடமே உபகாரச் சம்பளமும் பெற்றுக் கொண்டு மதீனாவிலேயே தங்கி வாழ்ந்தான்.

ஹர்மூஸானின் விசாரணையின் போது கலீஃபா அவர்கள் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். ஈரானிய பூமியில் சகல கலகங்களுக்கும் யஸ்தஜி;ர்தின் பின்னணி உதவியே காரணம் என்பதைப் புரிந்து கொண்ட கலீஃபா அவர்கள் அவனை ஒழிக்காதவரை நிம்மதியாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

ஹிஜ்ரி 21ல் ‘நிஹாவந்த்’ என்ற இடத்தில் ஒன்றரை லட்சம் ஈரானியர்கள் மர்தான்ஷா என்பவனின் தலைமையில் ஒன்று திரண்டனர். இம்முறை யஸ்தஜிர்தின் விஷமத்தை வேரோடு பிடுங்கியெறிய கலீபா உமர் அவர்கள் நிஹாவந்த்துக்கு தாமே புறப்பட்டு சென்றார்கள். ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனை தடுத்து, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கூஃபாவிலிருந்த நுஉமான் இப்னு முக்ரின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைத்தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டு கலீஃபா அவர்களின் கட்டளைகள் அவருக்கு பறந்தது. பஸராவிலிருந்து அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சேர்ந்து முப்பதினாயிரம் படைகளைத் திரட்டி நிஹாவந்த் சென்றார்கள்.

கிஸ்ராவின் வலிமையையே நிர்மூலமாக்கி ஈரானிய பூமி முழுவதிலும் இஸ்லாம் விரைந்து பரவத் தலைவாசலாக அமைந்தது நிஹாவந்த் போரேயாகும். நிஹாவந்தில் இஸ்லாமியர்கள் பெற்ற வெற்றியை ‘ஃபத்ஹுல் ஃபுத்தூஹ்’- வெற்றிகளுக்கெல்லாம் பெரு வெற்றி என்கின்றனர்.

ஹிஜ்ரி 20ஆம்ஆண்டிலேயே எகிப்து வெல்லப்பட்டது. ஹிஜ்ரி 21ஆண்டில் இஸ்ஃபஹானும், 22ஆம் ஆண்டில் அஜர்பைஜானும்,23ல் கிர்மான், ஸீஸ்தான் முதலியவற்றையும் வென்று இந்திய நாட்டின் எல்லையை ஒட்டிய மக்ரானிலும் முஸ்லிம் வீரர்கள் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டினர்.

ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு ஜமாதில் அவ்வல் மாதம் 23ஆம் நாள் ஹிஜாஸின் எல்லைக்குள் மட்டுமே அடங்கிய ஒரு சிறு இஸ்லாமியக் குடியரசின் தலைமையை ஏற்ற ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 23ஆண்டு இறுதி நாளன்று எகிப்து, ஸிரியா, இராக், ஈரானிய மாநிலங்களையும் ஒன்றிணைத்த பரந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் சக்ராதிபதியாக இருந்தார்கள். ஏறத்தாழ ஓராயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு நகரங்கள் வெள்ளிக் கொள்ளப்பட்டிருந்தன.

இதில் ஒரு விசேசமான செய்தி என்னவென்றால், கலீபா அவர்கள் எந்தவொரு போர்க்களத்திலும் காணப்படவேயில்லை. ஆனால் உமர் என்ற வெறும் பெயரைக் கேட்டே எதிரிகள் பொறிகலங்கி போயினர். ஒரு குறுகிய காலத்தில் இருபத்தி நான்கு இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து முப்பது சதுரமைல்களுக்குப் பரந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யத்தை அவர்கள் நிறுவினார்கள்.

படைகளை போருக்கு அனுப்பிவிட்டு தங்களது ஞானதிஷ்டியால் அதை கண்காணித்து படைகளை வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

பாருங்கள்! மதீனாப் பள்ளியில் ஒருநாள் வெள்ளிக்கிழமை உரைநிகழ்த்திக் கொண்டிருந்த கலீபா அவாக்ள் தங்கள் உரையினூடே சற்று தாமதித்து ‘யா ஸாரியா! அல்ஜபல், யா ஸாரியா அல்ஜபல் – ஸாரியாவே! அதோ மலை, ஸாரியாவே அதோ மலை –என அடுத்தடுத்து மும்முறை கூறினார்கள். சிறு மவுனத்துக்குப் பின் கலீபா அவர்கள் தங்கள் உரையைத் தொடர்ந்தார்கள்.

தொழுகை முடிந்ததும் ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதுபற்றி கலீபா அவர்களிடம் கேட்டார்கள், எதிரிகளின் கூட்டம் முஸ்லிம்களைப் பின் தொடர்ந்து செல்வது எனக்குக் காட்டப்பட்டது. நம் சகோதரர்களை நான் எச்சரித்தேன்’ என்று பதிலுரைத்தார்கள்.

படைநடத்திவிட்டு மதீனா திரும்பிய ஸாரியா இப்னு ஸனீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், படைநடத்திக் கொண்டிருந்தபோது கலீபாவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். அங்கு மலை தெரிந்தது. மலைமீது ஏறிப் பார்த்தேன். மறுபுறம் எங்களின் எதிரிகள் எங்களை தேடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே நாங்கள் மலை மீதிருந்தே அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்து வெற்றியும் கண்டோம்’ என்று சொன்னார்கள்.

கலீபா அவர்கள் எந்தவொரு விசயத்திலும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. கருத்து சொல்வதற்கென்று முஹாஜர்களைக் கொண்ட குழு ஒன்றும், முஹாஜிர்களும், அன்சாரிகளும் கலந்த குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் கலந்து ஆலோசித்தபின்னரே பள்ளியில் மக்களை கூட்டி அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சொல்லி கருத்து கேட்பார்கள். பின்னர் முடிவு எடுப்பார்கள்.

ஒற்றர்கள் தரும் செய்திகள் துல்லியமாக ஆராயப்படும். இதற்கென்று ஹழ்ரத் முஹம்மத் இப்னு மஸ்லமா ரலியல்லாஹு அன்ஹு என்ற அன்ஸாரித் தோழர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்துவார்கள்.

தவறு புரிந்தவர்களைக் கண்டித்த கலீஃபா அவாக்ள் தம் ஆளுநர்களின் திறமையை சிலாகிக்கவும் தவறவில்லை.

கலீபா அவர்கள் மக்களிடையே மார்க்க ஒழுக்கப் பேணுதல்களை நிலை நிறுத்துதில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தினார்கள்.

மொத்தத்தில் கலீஃபா அவர்களின் காலத்தில் மதீனா ஒரு பல்கலைக் கழகமாகவே திகழ்ந்தது. அனைத்துக் கலைகளுக்கும் வல்லுனர்கள் அங்கு பயிற்றுவிக்கப்பட்டனர். பரிசோதிக்கப்பட்டனர். பின்னரே அவர்களுக்குப் பொறுப்புகள் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

நீதித்துறையில் ஒருக்காலும் அவர்கள் பரிந்துரையை அனுமதிப்பதில்லை. கலீபா காலத்தில் விசாரணைகள் மிக எளிதாக இருந்தன. சம்பிரதாயங்கள் பூரண சுதந்திரத்துடன் கடைபிடிக்கப்பட்டன. வழக்குகள் உடனுக்குடன் துரிதமாக நிறைவேற்றப்பட்டன. வழக்குகள் நியாயமாக நடைபெற கலீபா அவர்களின் கண்காணிப்பு இருந்தது.

போரில் கிடைத்த கனீமத்துப் பொருட்களை பங்கீடு செய்ய முறையான வழிமுறை அமைத்தார்கள். பைத்துல்மால்களுக்குச் சொந்தமாக கட்டிடங்களை அமைத்து அவற்றில் பொருள்களை பாதுகாக்கச் செய்து அதனை முஸ்லிம்களிடையே நிரந்தரத் தொடர் ஊதியமாக பங்கீடு செய்ய முறை அமைத்தார்கள்.

வெற்றி கொள்ளப்பட்ட பூமிகளில் அதிகாரிகளை நியமித்து நிலங்களை அளக்கச் செய்து தீர்வைகளை விதித்தார்கள்.

உலகாதாய முன்னேற்றித்தினூடே ஆன்மீக உயர்விலும் கலீபா அவர்கள் கவனம் செலுத்தினார்கள். தம்மைப் போலவே தம் மக்களும் மாநபி வாழ்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஹிஜ்ரி 14ஆம் ஆண்டில் தராவீஹ் என்னும் கூட்டுத் தொழுகையின் மூலம் புனித ரமலானின் இரவுகளுக்கு உயிரூட்டச் செய்தார்கள்.

ஹிஜ்ரி 17ஆம் ஆண்டில் உம்ராவிற்காக மக்கா வந்த கலீபா அவர்கள் கபாவைச் சூழ இருந்த வணக்கத்தலத்தை விரிவுப்படுத்தினார்கள். அறிஞர்களைக் கொண்டு ஹரம் எனப்படும் புனித எல்லைகளை ஆய்ந்து நிர்ணயப்படுத்தி அடையாளக் கல்தூண்களை ஆங்காங்கே நட்டுவித்தார்கள்.

ஹிஜ்ரி ஆண்டு சகாப்தம் ஹிஜ்ரி 17ஆண்டில் கலீபா அவர்களாலே உருவாக்கப்பட்டது.

சஹாபாக்களின் கருத:;துக்கேற்ப தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் செலவழித்ததெல்லாம் நாளொன்றுக்கு இரண்டு திர்ஹங்களேயாகும்.அவர்களின் உணவோ மிக எளிமையானதாக இருந்தது. சாதாரண ரொட்டியும், ஜைத்தூண் எண்ணெயுமாக இருந்தது. அந்த ரொட்டியும் சலிக்காத மாவினாலானது.

தம்முடைய ஹஜ்ஜுப் பயணங்களில் கூட ஒரு கூடாரத்தையும் தம்முடன் செல்வதில்லை. மரங்களின் மேல் போர்வையை விரித்து அதன் நிழலிலேயே தங்கிக் கொள்வார்கள்.

ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திருந்த கலீஃபா அவர்கள், மினாவின் வெளியில் தங்கியிருந்தபோது, தங்கள் இரு கரங்களையும் ஏந்தி ‘இறைவா! நான் முதுமையை அடைந்து விட்டேன். என் நினைவுகள் நிலைமாறிக் கொண்டிருக்கின்றன. அறிவு தடுமாறி, தீமைகள் உருவாகும் நிலைமை தோன்றுமுன் என்னை உன்பால் அழைத்துக் கொள்வாயாக! என்று இறைஞ்சிய பின் கலீஃபா அவர்கள் சரியாக ஒருமாதம் கூட உலகில் வாழவில்லை.

ஹஜ்ஜின் கடமைகளை முடித்து மதீனா திரும்பிய கலீஃபா அவர்கள் பள்ளியில் ஒரு நாள் உரையாற்றிய போது, ‘ ஒரு செந்நிறச் சேவல் என்னை இரண்டு அல்லுது மூன்று முறை கொத்திட கனவில் கண்டேன். என் மரணம் அண்மிவிட்டதற்குரிய முன்னறிவிப்பு இது’ என்று குறிப்பிட்டார்கள். பள்ளியில் அவர்கள் ஆற்றிய கடைசிஉரையாகவும் அது அமைந்துத விட்டது.

துல்ஹஜ் பிறை 26ம் பிறை தேய்ந்து மறைந்து மறுநாள் பொழுதும் புலர்ந்து கொண்டிருந்தது. என்றும் போல் அன்றும் சுப்ஹு தொழுகையை நடத்துவதற்காக கலீஃபா அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். மிஹ்ராபை அடைந்து அல்லாஹு அக்பர் என்று சொல்லி தக்பீர் கட்டி மிஸ்மிலையும் ஓதி முடித்தார்கள். அச்சமயம் பின்னால் அணிகளிடையே முகத்தை மறைத்தவண்ணம் ஒரு முஸ்லிமைப் போன்றே கலந்து நின்றிருந்த ‘அபூலூலூ’ என்றழைக்கப்பட்ட பைரோஸ் என்பவன் (நிஹாவந்த் போரில் சிறைபிடிக்படப்பட்டு ஹழ்ரத் முகீரா இப்னு ஷுஅபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கிடைத்த ஒரு பாரஸீக அடிமை) சரெனெப் பாhய்ந்து கலீபா அவர்கள் மீது

وَكَانَ اَمْرُ اللهِ قَدَرً اٰمَّقْدُوْرَا.

அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன’ (33:38) என்ற திருவசனம் அவர்கள் ஓதி நின்ற சமயம் தனது குறுவாளை கலீபாவின் உடலின் மீது அடுத்தடுத்து ஆறு முறை செலுத்தினான். சற்றுப் பின் நகர்ந்து தம் பின்னே நின்ற ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கரம் பற்றி முன் நகர்த்திவிட்டு கீழே சாய்ந்தார்கள் கலீஃபா.

வெறியன் பைரோஸ் தப்பிக்க குறுவாளை சுழற்றிக் கொண்டே ஓடினான். அந்தவாள் பதிமூன்று பேர்கள் மீது பட்டு அதில் அறுவர் இறந்தனர். இறுதியில் ஒரு ஈராக்கிய வீரர் அவனை முகத்தில் துணியை வீசி பிடித்துவிட்டார். இனி தப்பிக்க முடியாது என்றெண்ணிய அவன் குறுவாளாலேயே தன்னையம் மாய்ந்துக் கொண்டான்.

மயக்கமடைந்த அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். குறுவாள் ஆழமாகப் பாய்ந்ததில் அவர்களின் குடலே துண்டிக்கப்பட்டுவிட்டது. கொடுக்கம் மருந்துகளும், உணவுகளும் அவ்வழியே வெளியில் வந்தது.

மறுநாள் தங்கள் மகனார் ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து தங்களுக்கிருந்த கடனை கணக்கிட செய்தார்கள். எண்பதாயிரம் திர்ஹங்கள் இருப்பதாக தெரிந்தது. என் வீட்டை விற்று கடனை தீர்த்துவிடு. அதுபோதாதெனில் அதீ கோத்திரத்தாரைக் கொண்டு அதனைத் தீர்த்து விடு. அதுவும் போதாவிடில் குறைஷிகளின் துணை கொண்டு அதனை தீர்த்துவிடு. எக்காரணம் கொண்டும் பிறர் மீது இச்சுமையை ஏற்றிவிடாதே என்று கூறினார்கள்.

தங்கள் மகனாரை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று தம் முன்னோடிகளான இரு தோழர்களுக்கும் அருகிலேயே தாம் அடங்கப் பெற விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் அனுமதியளிப்பார்களா என்றும் கேட்டு வரும்படி கூறினார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னையாரிடம் சென்று கேட்டபோது, ‘அந்த இடத்தை எனக்காகவே நான் வைத்திருந்தேன். அமீருல் முஃமினீன் அவர்களுக்கு இன்று நான் அதனை அன்பளிப்பாகத் தந்து விட்டேன்’ என்று கூறினார்கள். அச்செய்தியைக் கேள்வியுற்ற கலீஃபா அவர்கள் ‘என் வாழ்வில் இதுவே நான் பெற்ற இறுதிப் பெரும்பேறு’ என்றார்கள்.

மரணத்தின் மடியில் மூன்று நாட்கள் வரை அறபோதம் செய்து கொண்டிருந்த கலீஃபா அவர்களின் ஆன்மா ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் கடைசி நாளோடு தன் உடற்கட்டை விட்டும் பிரிந்தது. ஹழ்ரத் ஸுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையை நடத்தி முடித்தார்கள். அந்தவுடல் அன்னையாரின் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் ரஸூலே! தங்களின் அன்புத் தோழர் தங்கள் அருகை நாடுவதால் அவருக்கு மறைவதற்காக நான் இவ்விடத்தைத விட்டும் செல்கிறேன்’ என்றவர்களாக அதனை விட்டும் வெளியேறிவிட்டனர்.

ஹழ்ரத் உதுமான், அலீ, அப்;துர் ரஹ்மான், தல்ஹா, ஸமது இப்னு அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலீஃபாவின் உடலை ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறையின் அருகில் அடக்கம் செய்தார்கள்.

குடும்ப வாழ்வு:

நிறைய மக்களை பெற வேண்டும் என்பதற்காக பலமுறை மணமுடித்திருந்தார்கள்.

முதல் திருமணம் ஹழ்ரத் உதுமான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடன்பிறந்த ஜைனப் என்ற பெண்மணியோடு நடைபெற்றது. இவர்கள் மக்காவிலேயே மரணித்து விட்டார்கள். இவர்கள் மூலம் அன்னை ஹஃப்ஸா, ஹழ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் பிறந்தனர்.

2ஆவது அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி கரீபா என்பவர். இவர் இஸ்லாத்தை ஏற்காததால் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டில் விவாக பந்தத்திலிருந்து விலக்கப்பட்டார்.

3ஆவது ஆத்திகா. இவரும் இஸ்லாத்தை ஏற்காது விவாக விடுதலை பெற்றவராயினும், இவரின் மகனார் ஹழ்ரத் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு முஸ்லிமாகி வாழ்ந்தனர்.

மதீனா வாழ்வில் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் ஆஸிம் இப்னு தாபித் ரலியல்லாஹு என்ற அன்ஸாரியின் மகளார் ஜமீலா என்பவரை மணமுடித்தார்கள். ஆயினும் ஏதோ காரணத்தால் இவரும் மணவிடுதலை செய்யப்பட்டார்.

தங்கள் பிந்திய காலத்தில் பெருமானார் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவுத் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளார் உம்மு குல்தூம் பின்த் ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்தார்கள்.

மனிதர்களில் சிறந்த இப்புனிதரைப் பற்றி ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தேடி உலகம் வரவில்லi. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அதனைத் தேடிச் செல்லவில்லை. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமோ உலகம் வந்து குவிந்து நின்றது. அவர்களோ அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லi என்றார்கள்.

முற்றும்

ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹா

صفية بنت عبد المطلب

அன்னை ஆமினாவுக்குச் சகோதரி ஒருவர் இருந்தார் – ஹாலா பின்த் வஹ்ப். தம்மகன் அப்துல்லாஹ்வுக்கு ஆமினாவை மணமுடித்த அப்துல் முத்தலிப் ஹாலாவை மணந்துகொண்டார். ஏறக்குறைய ஒரே காலத்தில் இவ்விருவரின் திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அப்துல் முத்தலிப் – ஹாலா தம்பதியருக்குப்  பிறந்தவர்களே ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், ஸஃபிய்யாபின்த் அப்துல் முத்தலிப் – ரலியல்லாஹு அன்ஹுமா.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு ஸஃபிய்யா  பின்த் அப்துல் முத்தலிப், தாயார் ஆமீனாவின் சகோதரிமகள் ஆதலால் அக்காள் என்றொரு உறவு; தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரி என்றவகையில் அத்தை என்று மற்றொரு உறவு. ஆனால் அரபியரின் வழக்கப்படி, அப்துல்முத்தலிபின் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஸஃபிய்யா  ரலியல்லாஹு அன்ஹா, நபியவர்களின் அத்தை என்ற உறவு முறையிலேயே வரலாற்றில் அறியப்படுகின்றார். இரண்டு வயது மூத்த அத்தை.

ஸஃபிய்யாவுக்குமுதல் திருமணம் ஹாரித் இப்னு ஹர்ப் என்பவருடன் நிகழ்ந்தது. ஹாரித் -குரைஷி குலத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவரும்அன்னை உம்மு ஹபீபா, முஆவியா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் தந்தையுமானஅபூஸுஃப்யான் இப்னு ஹர்பின் சகோதரர்.

ஸஃபிய்யாவுக்கு ஹாரித் இப்னுஹர்பின் மூலமாய் ஸஃபி என்றொரு மகன். சில காலம் கழித்து ஹாரித் இப்னுல்ஹர்ப் இறந்த போனார். பின்னர் ஸஃபிய்யாவுக்கு மறுமணம் நிகழ்வுற்றது.

அந்தஇரண்டாம் கணவரின் பெயர் அவ்வாம் இப்னுல் குவைலித். இவர், நபியவர்களின்முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் உடன்பிறந்த சகோதரர்.

அவ்வாம்-ஸஃபிய்யா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர் – ஸுபைர், அல்-ஸாஇப், அப்துல் கஅபா. ஸஃபிய்யாவுக்குப் பிறந்த பிள்ளைகளுள்மற்றவர்களைப் பற்றி அதிகமான குறிப்புகள் இல்லை, ஸுபைர் இப்னுல் அவ்வாமைத்தவிர. ‘இவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம்’ என்று நபியவர்கள் அறிவித்தார்களேபத்துப்பேர், அவர்களுள் ஸுபைர் இப்னுல் அவ்வாம் ஒருவர்.

அவ்வாம்இப்னுல் குவைலித் இறந்ததும் மீண்டும் விதவையானார் ஸஃபிய்யா . அப்பொழுதுஸுபைருக்குப் பாலகப் பருவம். மிகமிகக் கடுமையான ஓர் எளிய வாழ்க்கைக்குஸுபைரைப் பழக்கப்படுத்தி வளர்க்க ஆரம்பித்தார் ஸஃபிய்யா.

நபியவர்கள்ஏகத்துவத்தைப் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்; அதைத் தம்உறவினர்களிடமிருந்து துவக்க வேண்டும் என்று அல்லாஹ்விடமிருந்து கட்டளைவந்து சேர்ந்தது.

இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!”  (சூரா அஷ்-ஷுரா 26:214) என்று அறிவித்தான் இறைவன். அதன் அடிப்படையில் தம்பாட்டனார் அப்துல் முத்தலிப் வகையிலான உறவினர்களை அழைத்து அவ்வப்போதுபிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்

ஸஃபிய்யாவின்இளவயது மகன் ஸுபைரும் தம் தாயுடன் சேர்ந்து இஸ்லாத்தினுள் நுழைந்தார்.மக்காவில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குஸஃபிய்யாவும்இலக்கானார். அதையெல்லாம் தாங்கிக்கொண்டு பொறுத்துக்கொண்டுநகர்ந்தது அவரது வாழ்க்கை. இறுதியில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் காலம் வந்ததும் அனைத்தையும் துறந்துவிட்டு மதீனா சென்றார்கள்.

இயற்கையிலேயேவீரமும் தீரமும் நிறைந்து போயிருந்ததால் பின்னர் நிகழ்வுற்றப் போர்களில்வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார் ஸஃபிய்யா. உஹதுப் போர் நடைபெற்றபோதுவயதில் மூத்த பெண்மணி அவர். ஆனால் களத்திற்குச் சென்ற முக்கியமான பெண்களுள்அவரும் ஒருவர். தண்ணீர் சுமந்து சென்று களத்திலுள்ள முஸ்லிம் வீரர்களுக்கு அளிப்பது, அம்புகளை உடனுக்குடன் கூர் தீட்டித் தருவது என்று இயங்க ஆரம்பித்தார் அவர்.

போர்எதிரிகளுக்குச் சாதகமாகிப் போன தருணம். நபியவர்களைச் சுற்றி வெகு சிலதோழர்களைத் தவிர யாருமில்லை. அவர்களை நோக்கிக் குரைஷிகள் முன்னேறுவதைக்கண்டார் ஸஃபிய்யா. தண்ணீர் சுமந்திருந்த தோல் துருத்திகளைத் தூக்கிஎறிந்துவிட்டு, தம் குட்டிகளைக் காக்கப் பாயும் பெண் புலியைப்போல்தடதடவென்று ஓடினார் அவர்.

அங்கு, களத்தில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டு, எதிரிப் பெண்களால் உடல் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கிடந்தார்.  தம் சகோதரனின் உடல் கிடக்கும் களப்பகுதிக்கு ஸஃபிய்யா ஓடிவருவதைக் கண்ட நபியவர்கள் உடனே ஸுபைரிடம், “உன்தாயார் வருகிறார், அவரை தடுத்து நிறுத்து,” எனப் பணித்தார்கள்.

தம் சகோதரன் அவ்விதம் கிடப்பதை ஸஃபிய்யா காணக்கூடாது, அது அவருக்குப் பெரும்சோகத்தை விளைவிக்கும் என்று நபியவர்கள் கருதினார்கள். விரைந்து சென்றஸுபைர் தம் தாயை வழிமறித்து, “திரும்பிச் செல்லுங்கள் அம்மா. திரும்பிச் செல்லுங்கள்” என்று தடுத்தார்.

“ஹும்!வழியைவிடு. உனக்கு இன்று தாயே கிடையாது!” என்று மூர்க்கமான பதில் வந்தது.அவர் கண்களிலும் புத்தியிலும் இருந்த ஒரே அக்கறை நபியவர்களின் நலம்.

“அல்லாஹ்வின் தூதர் உங்களைத் திரும்பிச் செல்லும்படி கட்டளையிட்டுள்ளார்கள்” என்றார் ஸுபைர்.

“ஏன்?” என்று கேட்ட ஸஃபிய்யாவுக்கு விஷயம் உடனே புரிந்து போனது. “என் சகோதரன்ஹம்ஸா கொல்லப்பட்டார்; அவரது அங்கங்கள் துண்டாடப்பட்டன. அதுதானே விஷயம்? அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு மடிந்து விட்டார் என்பது எனக்குத்தெரியும். அல்லாஹ்வுக்காக இது நிகழ்ந்திருப்பின் எனக்கு அது மகிழ்வே. அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவன் நாடினால் நான் பொறுமையுடன் இருப்பேன்.வழியைவிடு.”

நபியவர்களுக்கு ஸஃபிய்யாவின் பதில் தெரியவந்ததும், அவரை அனுமதிக்கும்படி ஸுபைருக்குத் தெரிவித்தார்கள்.

போர்முடிவுற்றதும் ஸஃபிய்யா தம் சகோதரன் ஹம்ஸாவின் உடலைக் கண்டார். நிதானமானதீர்க்கமான வார்த்தைகள் வெளிப்பட்டன.

“நாம்அல்லாஹ்வுக்கே உரியவர்களாய் இருக்கிறோம். அவனிடமே நாம் மீள்வோம். இதுஅல்லாஹ்வுக்காக நிகழ்ந்துள்ளது. அல்லாஹ் என்ன விதித்துள்ளானோ அதை நான்ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குரியஅல்லாஹ்வின் வெகுமதிக்காக நான் பொறுமையுடன் காத்திருப்பேன்.”

இந்தப் போரில் முக்கியமான ஓர் ஏற்பாடாக முஸ்லிம் பெண்களை ஹஸ்ஸான் இப்னுதாபித் ரலியல்லாஹு அன்ஹுவுக்குச் சொந்தமான ‘ஃபாஉ’ எனும் கோட்டை ஒன்றில்பத்திரமாகத் தங்க வைத்திருந்தார்கள் நபியவர்கள். அது உயரத்தில்அமைந்திருந்த, பாதுகாப்பான வசதிமிக்க கோட்டை. இந்தப் போரில் பனூகுரைளாவினர் யூதர்கள் முதல் வேலையாக இந்தக் கோட்டைக்குச் சிலஒற்றர்களை அனுப்பிவைத்தார்கள்.

இங்கு முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாவலாய் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது பனூ குரைளா யூதர்களின் யூகம். எனவே, முஸ்லிம் பெண்களுக்கு இங்குத் தொந்தரவு அளிக்க ஆரம்பித்துவிட்டால்அங்கு, களத்தில் ஆட்டத்தை எளிதாகக் கலைத்துவிடலாம் என்று நயவஞ்சக யூத மூளைதிட்டமிட்டது. அந்தக் கோட்டையை நெருங்கி வேவுபார்க்க ஆரம்பித்தனர் சிலர்.

உளவு பார்க்க வந்த யூதனை கொன்று கோட்டைக்கு வெளியே வீசினார்கள். அதைக் கண்ட கோட்டைக்கு வெளியே இருந்த மற்ற யூதர்கள் அலறிக் கொண்டு ஓடினர். அவர்களின் திட்டம் தவிடுபொடியானது ஸபியா நாயகியின் வீரதீரத்தால்.

தமக்குள்சுரந்த வீரத்தைப் பாலாகவும் சொல்லாகவும் செயலாகவும் தம் மகனுக்கு ஊட்டிவளர்த்த வீரத் தாய் அவர்.

முஸ்லிம்களின் எதிரியைத் தனியாளாகக் கொன்ற முதல் பெண் எனும் பெருமை பெற்றவராக நீண்டகாலம் வாழ்ந்து, கலீஃபா உமர் இப்னுல் கத்தாபின் காலத்தில் மரணமடைந்துஜன்னத்துல் பகீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பெற்றார் ஸஃபிய்யா பின்த்அப்துல் முத்தலிப்.

உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா

மக்காவில் முஸ்லிம்களுக்குக் கொடுமையும் அக்கிரமும்நடைபெற ஆரம்பித்தபோது அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, தாங்கிக் கொண்டு மக்கத்துக் குரைஷிகளை உளவுபார்த்து அவர்களது திட்டங்களை நபியவர்களுக்குத் தெரிவிப்பதில் திறம்படசெயல்பட்டார் உம்மு அய்மன்.நீக்ரோ அடிமைப் பெண்ணான இவர்களின் இயற்பெயர் பரிகாவாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையாவார்.

ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் மகனான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவரின் மாமன்மார்களிடம் காட்டி வருவதற்காக யத்ரிப் அழைத்துச்சென்றபொழுது இவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார். திரும்பும் வழியில் ‘அப்வா’ என்னும் இடத்தில் ஆமினா நாயகி அவர்கள் மறைந்துவிடவே, அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அண்ணலாரை பத்திரமாக மக்கா கொண்டு வந்து அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் ஒப்படைத்தவர்கள் இவர்கள்தாம்.

அண்ணலாரை இளவயதில் வளர்த்ததில் இவருக்கும் பங்குண்டு. அண்ணலார் இவர்களை தம் தாயைப் போன்றே கருதினர். பிற்காலத்தில் அவர்கள் இவரை நோக்கி, ‘என் தாய்க்குப் பின்னர் நீரே என் தாய்’ என்று நன்றியுணர்வுடன் கூறினர். மேலும் இவரே தம் குடும்பத்தில் எஞ்சிய உறுப்பினர் என்றும் கூறினர்.

கதீஜா நாயகியை அண்ணலார் திருமணம் முடித்தபின் இவர்களை விடுதலை செய்து விட்டனர். குறைஷிகளின் கொடுமை தாளாது அபினீஷியா சென்றவர்களில் இவர்களும் ஒருவர். பின்னர் இவர்கள் மதீனா வந்த போது கஸ்ரஜ் கூட்டத்தைச் சார்ந்த உபைத் பின் ஜைதை மணமுடித்து அய்மன் என்ற மகனை ஈன்றெடுத்தார். இதனால் இவருக்கு உம்மு ஐமன் என்ற பெயர் ஏற்பட்டது.

முஸ்லிம்களின்மீதுசினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்முஅய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர்! சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்குஇடமுண்டு உம்மு அய்மன்”

“சொர்க்கவாசிப் பெண்ணைத்திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்மு அய்மனை  மணம் புரிந்து கொள்ளட்டும்.”

அப்பொழுது உம்மு அய்மனின் வயதுஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்மு அய்மனின் அகத்தையும் கருத்தில் கொண்டு முன் வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.

“அல்லாஹ்வின் தூதரே! நான் உம்மு அய்மனை மணந்து கொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.”

உம்மு அய்மனும் சரி, அவரை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தஸைது இப்னு ஹாரிதாவும் சரி, நபியவர்களின் வாழ்க்கையுடன் மிக ஆழமாய்ப்பின்னிப் பிணைந்தவர்கள். நபியவர்களுக்கு ஸைது மகனைப்போன்றவர் என்றால், உம்மு அய்மன் அன்னை.

மக்காவில்குரைஷியர் கொடுமை முடிவுக்கு வராமல் மதீனாவுக்கு நகர ஆரம்பித்தார்கள். அந்தக்காலகட்டத்தில் ஒருநாள்தன்னந்தனியாக, கால்நடையாகவே கிளம்பிவிட்டார் உம்மு அய்மன்.

உஹதுப் போரில்தோழியர் சிலரும் இடம் பெற்றிருந்தார்கள். அதில் உம்மு அய்மனும் ஒருவர்.முஸ்லிம் வீரர்களுக்குக் குடிநீர் அளிப்பது, காயமுற்றவர்களுக்குச் சிகிச்சைஅளிப்பது என்று சுறுசுறுப்பான களப்பணி.

பின்னர் ஃகைபர், ஹுனைன்யுத்தங்களின் போதும் நபியவர்களுடன் இணைந்து களம் புகுந்தார் உம்மு அய்மன்.முத்ஆ யுத்தத்தில் அவர் கணவர் ஸைதும்  ஹுனைன் யுத்தத்தில் அவர் மகன்அய்மனும் உயிர்த் தியாகிகளாகிப் போனார்கள். எழுபது வயதை எட்டிவிட்டிருந்தஅவர் அதன் பிறகு பெரும்பாலான காலத்தை வீட்டிலேயே கழித்தார். தம் அணுக்கத்தோழர்கள் அபூபக்ரு, உமரை அழைத்துக்கொண்டு நபியவர்கள் அவரது வீட்டிற்குச்சென்று நலம் விசாரித்து வருவது வழக்கம்.

நபியவர்கள்இறந்த பிறகு உம்மு அய்மனை நலம் விசாரிக்கச் சென்றனர் கலீஃபா அபூபக்ரும்உமரும். “வாருங்கள். நாம் சென்று உம்மு அய்மனைச் சந்தித்துவிட்டு வருவோம்.நபியவர்கள் செய்ததை நாமும் செய்வோம்,” என்று உமரை அழைத்துக்கொண்டுசென்றிருந்தார். அபூபக்ரு.

இவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் அழஆரம்பித்துவிட்டார் உம்மு அய்மன். “ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் தன்தூதருக்கு வாக்களித்துள்ளது சாலச் சிறப்பானதன்றோ!” நபியவர்களின் இழப்பைநினைத்து அழுகிறார் என்று நினைத்தார்கள் அவர்கள். ஆனால் காரணம் அதையும்மிகைத்திருந்தது.

“வானத்திலிருந்து இறங்கும் இறைவேதம் நின்று போய்விட்டதே என்று அழுகிறேன்.”

பிற்காலத்தில்மற்றொரு முறையும் அழுதார் உம்மு அய்மன். உமர் ரலியல்லாஹு கொல்லப்பட்டசெய்தி அறிந்து அழுதிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் மக்கள் விசாரிக்க, “இன்று இஸ்லாம் பலவீனம் அடைந்துவிட்டது,” என்றார் உம்மு அய்மன். உமரின்திறமையின் மீதும் இறைப்பற்றின் மீதும் அவரது திட உறுதி, புத்திக் கூர்மை, ஆளுமையின்மீதும் உள்ளார்ந்த பார்வை இருந்திருக்கிறது உம்மு அய்மனுக்கு.

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது மரணமடைந்தார் உம்மு அய்மன்.

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு

உபைஇப்னு கஅப் மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர். யத்ரிபில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

பின்னர் அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் ஒருவர், நபியவர்களின் புனிதக்கரம்  பற்றிப் பிரமாணம் அளித்தவர் என்றுஇஸ்லாத்துடனான உறவு துவங்கியது. பத்ரு யுத்தத்தில்பங்கு பெறும் அடுத்த பாக்கியமும் பெற்றார் உபை இப்னு கஅப். அதைத் தொடர்ந்துநிகழ்ந்த யுத்தங்களிலெல்லாம் நபியவர்களின் படையணியில் உபை ஒரு முக்கிய வீரர்.

குர்ஆன்முழுவதும் மனனம் செவியுறுவோர் மகிழ்வுறும் குரல் வளத்தில் பாராயணம் என்றுஉருவானார் உபை. அழகுற ஓதுவது என்பதுடன் நின்று போகாமல் குர்ஆனைப் பற்றியஅவரது ஞானம்தான் அவருக்கு இறைவன் அளித்த தனிச் சிறப்பு.

‘குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த நால்வரிடம் செல்லுங்கள்’ என்று நபியவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர் உபை இப்னு கஅப். மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும்.

அத்தகுபரிந்துரைக்கு உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சிலநிகழ்வுகளும் சாட்சி. ஒருநாள் நபியவர்கள் உபையிடம் “ஓ அபூமுன்திர்!அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது?” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வும்அவனுடைய தூதரும் அதைச் சிறப்பாக அறிந்தவர்கள்” என்று பதில் வந்தது.மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார்கள் நபியவர்கள்.

வணங்குதற்குரியவன் அவனையன்றி வேறில்லை; அவனே அல்லாஹ்! அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன்.(சிறு)கண்ணயர்வோ(ஆழ்ந்த)உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கேஉரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும்? படைப்பினங்களின் அகத்தையும் புறத்தையும் அவன் நன்கறிவான். அவனுடையஅனுமதியின்றி எவரும் அவனுடைய அறிவின் விளிம்பைக்கூட நெருங்க இயலாது.அவனுடைய அரசாட்சி, வானங்களிலும் பூமியிலும் விரிந்து பரந்து நிற்கின்றது.அவ்விரண்டையும் ஆள்வதும் காப்பதும் அவனுக்கு ஒரு பொருட்டன்று. அவன்மிக்குயர்ந்தவன்; கண்ணியமிக்கவன்”

சூராஅல் பகராவின் 255ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் தெரிவித்தார்உபை. அதைக்கேட்டு நபியவர்களின் முகம் மகிழ்வால் மிளிர்ந்தது. உபையின்மார்பைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்தார்கள். ‘சரியான பதிலைச் சொன்னாய்உபை’ என்ற அங்கீகாரம் அது.

”உபை! நான் உமக்காக குர்ஆனை விரித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்கள் நபியவர்கள்.

‘குப்’பெனஅவரைக் குதூகலம் தாக்கியது. தம்முடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவில்லை. கேட்டுவிட்டார்.

“அல்லாஹ்வின் தூதரே. தங்களிடம் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதா?”

“ஆம்” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். “உம்முடைய பெயர், வம்சாவளி ஆகியவற்றுடன் விண்ணிலிருந்து குறிப்பிடப்பட்டீர் உபை.”

நபியவர்களின்தோழர்களுள் மிக முக்கியமான ஒருவராகப் பரிணமித்தார் உபை இப்னு கஅப்.அவருடைய எழுத்தறிவு நபியவர்களுக்குச் சேவகம் புரிந்தது.

குர்ஆன் வசனங்கள்அருளப்படும்போது அதை எழுதப் பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் இருந்தனர். அந்தச்சிலருள் உபையும் ஒருவர். அது மட்டுமின்றி நபியவர்களின் கடிதப்பரிமாற்றங்களில் உதவுவதும் உபையின் பணியாக இருந்தது.

உஹதுப் போருக்குமக்காவிலிருந்து குரைஷிப் படைகள் புறப்பட்டவுடன், படையின் முழுவிவரங்களையும் அவசர அவசரமாக ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதைநபியவர்களுக்கு அனுப்பி வைத்தார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்ரலியல்லாஹு அன்ஹு. அக்கடிதம் வந்து சேர்ந்தபோது நபியவர்கள் குபாவிலுள்ளபள்ளிவாசலில் இருந்தார்கள். அதை நபியவர்களுக்குப் படித்துக் காண்பித்தவர்உபை. பிற்காலத்தில் பொய்யன் முஸைலமாவின் தூதுவர்கள் நபியவர்களிடம் வந்தபோதுஅவனுக்கு நபியவர்கள் தெரிவித்த பதிலை எழுதித் தந்தவரும் உபை.

நபியவர்களின்மறைவிற்குப்பின் உபையின் வாழ்க்கையில் இறையச்சம் – தக்வா – வழிசெலுத்தும்விசையாய் அமைந்து போனது. இஷாத்தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் தங்கி, இறை வழிபாட்டிலோ, மக்களுக்குப்பாடம் எடுப்பதிலோ அவரது நேரம் கழியும். கல்வி கற்கவும் ஆலோசனை வேண்டியும்பலர் அவரிடம் வருவார்கள்.
ஒருவருக்குவழங்கிய ஆலோசனையில், “இறை நம்பிக்கையாளனுக்கு நான்கு அம்சங்கள். ஏதேனும்துயர் நிகழ்ந்தால் அவன் பொறுமை காத்து உறுதியுடன் இருப்பான். தனக்குக்கிடைக்கப் பெறுவதற்கு இறைவனுக்கு நன்றி உரைப்பான். அவன் பேசுவது உண்மைமட்டுமே. அவன் வழங்கும் தீர்ப்பு நீதி வழுவாது.”

தோழர்கள்மத்தியில் உபைக்கு நல்ல மதிப்பு, மரியாதை. “முஸ்லிம்களின் தலைவர் என்றுஅவரை அழைப்பார் உமர். அந்த அடைமொழி மக்களிடம் மிகவும் பிரபல்யம். “நபியவர்களின் காலத்தின்போது குர்ஆனைத் தொகுத்தவர்கள் நால்வர். உபை இப்னுகஅப், முஆத் பின் ஜபல், ஸைது இப்னு ஹாரிதா, அபூஸைது எனும் அந்த நால்வருமே அன்ஸார்கள்” என்று அனஸ் பின் மாலிக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் தமக்கே தமக்கெனத் தம் கைப்பட எழுதிய குர்ஆன் பிரதியொன்று உபை இப்னு கஅபின் வசம் இருந்தது.

அபூபக்ருரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் தமக்கென ஓர் ஆலோசனைக்குழுவை உருவாக்கினார். சிறந்த ஞானமும் துணிவும் மார்க்கச் சட்ட நுண்ணறிவும்பொருந்திய முஹாஜிரீன், அன்ஸார் தோழர்கள் உள்ளடங்கிய அந்தக் குழு “அஹ்லர்ரஅயீ” என்று அழைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்தவர்கள் மிக முக்கியத்தோழர்களான உமர், உதுமான், அலீ, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், முஆத் பின்ஜபல், ஸைது இப்னு ஹாரிதா. இவர்களுடன் உபை இப்னு கஅப். ரலியல்லாஹு அன்ஹும்.

அபூபக்ரு தமது ஆட்சிக் காலத்தில் பல விஷயங்களில் உபை இப்னு கஅபிடம் ஆலோசனைகேட்குமளவிற்கு அவர்மீது அபூபக்ருக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது.

அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுக்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரது ஆலோசனைக் குழுவிலும் மேற்சொன்ன தோழர்களும் இடம் பிடித்தனர்.

ஸிரியாவிலும் இராக்கிலும் இஸ்லாமிய ஆட்சி பரவி அங்குள்ள மக்களுக்குக் கல்வி கற்பிக்கமார்க்க ஞானம் மிக்க தோழர்களை உமர் அனுப்பி வைத்தபோதும் தமக்கென மதீனாவில் அவர் தங்க வைத்துக்கொண்ட தோழர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர். தம்அருகிலேயே தமக்கு உதவியாக உபை இருக்க வேண்டும் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு திடமாக எண்ணியதால், அவருக்கு ஆட்சிப் பொறுப்பு, ஆளுநர் பதவி என்று அளித்துத்தொலைவில் வைக்காமல், ‘இங்கேயே இருங்கள்’ என்று தம்மருகில் வைத்துக் கொண்டார்.

லீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார்.

அப்போது இறை வசனம் ஒன்று அவரது நினைவிற்கு வந்தது.ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றை(செய்ததாக)க் கூறி நோவினை செய்பவர்கள்… – சூரா அல் அஹ்ஸாபின் 58 ஆவது வசனம் அது.

இந்த வசனத்திற்கு விளக்கம் பெற நினைத்தார்.

தோழர் அபூமுன்திருடைய இல்லத்திற்கு விரைந்தார். அங்கே தமதுவீட்டில் ஒரு திண்டில் அமர்ந்திருந்த அந்தத் தோழர், கலீஃபா உமரைக் கண்டதும்வரவேற்றார். தமது திண்டை அவருக்கு அளித்து, “அமருங்கள் அமீருல் மூஃமினீன்” என்று உபசரித்தார்.

‘எவ்வளவுகவலையுடன் வந்திருக்கிறேன், இதென்ன திண்டும் உபசரிப்பும்’ என்பதைப்போல்அதைத் தமது காலால் தள்ளி அகற்றி விட்டுத் தரையில் அமர்ந்து கொண்டார் உமர்இப்னுல் கத்தாப். மேற்சொன்ன வசனத்தை ஓதி, “இந்த வசனம் குறிப்பிடும் நபர்நானோ என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நான் இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கிழைக்கிறேனோ?”

அபூமுன்திர் பதில் அளித்தார்: “ஆட்சியாளராகிய நீர் மக்களின்மீது அக்கறை கொள்ளாமல்இருக்க முடியாது. எனும்போது அவர்களது நலனுக்கான விதிகளும் கட்டளைகளும்விலக்கப்பட வேண்டிய செயல்களுக்கான தடைகளும் ஏற்படுத்தத்தானே வேண்டும்.” அவையெல்லாம் இறை நம்பிக்கையாளர்களுக்குச் செய்யப்படும் தீவினை அல்ல என்று விளக்கமளித்தார் உபை ரலியல்லாஹு அன்ஹு.

“நீர் சொல்வது புரிகிறது. எனினும் அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்” என்று விடைபெற்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

கலீஃபாவேதேடி வந்து ஆலோசனை பெறும் அளவிற்கு அந்தத் தோழருக்கு மெச்சத்தகுந்தகுர்ஆன் ஞானம் அமையப் பெற்றிருந்தது.
“மக்களே!யாரெல்லாம் குர்ஆனைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அவர்கள் உபை இப்னுகஅபிடம் செல்லவும். வாரிசுரிமை பற்றி அறிய ஸைது இப்னு தாபித்திடமும்சட்டதிட்டங்கள் பற்றி அறிய முஆத் பின் ஜபலிடமும் பணப் பரிமாற்றம்குறித்தவற்றை என்னிடமும் கேளுங்கள்” என்று அறிவித்துள்ளார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

ஆட்சித்தலைவராக உமர் இருந்தாலும் அவரிடம் உபை நேர்மையாகவும் வெளிப்படையாகவும்பேசக்கூடியவர். அச்சம் என்பது இறைவனுக்கே என்றிருந்தவர்.

ஒருமுறை உபை இப்னுகஅப் ஒரு வசனத்தை ஓதும்போது, அதைச் சரியாக நினைவில் வைத்திராத உமர்குறுக்கிட்டு, “நீர் தவறாகச் சொல்கின்றீர்” என்றார்.

உடனே பதில் வந்தது. “இல்லை. நீர்தான் தவறிழைக்கின்றீர்.”

இதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஒரு மனிதர். அவருக்குப் பெரும் திகைப்பு. “அமீருல் மூஃமினீனைப் பொய்யர் என்கின்றீரா?”

“அமீருல்மூஃமினீன் மீது எனக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையும் வெகு நிச்சயமாகஉண்டு. அதற்காக அல்லாஹ்வின் அருள்மறையிலுள்ள வசனத்தை அவர் தவறாக நினைவில்வைத்திருந்தால் அதைச் சரியென்று நான் சொல்ல முடியாது.”

“உபை சரியாகச் சொன்னார்” என்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

மற்றொருமுறைகலீஃபா உமருக்கும் உபை இப்னு கஅபுக்கும் இடையில் ஒரு தோப்பின் உரிமைசம்பந்தமாய் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பத்திரம், பதிவு அலுவலகம் பட்டாபோன்றவை தோன்றியிராத காலம் அது. ஒரு தோப்பு தமக்குச் சொந்தமானது என்றுஉரிமை கோரினார் உபை இப்னு கஅப். கலீஃபா உமர் அதை மறுத்தார். இருவரும்தங்களுக்கு இடையே நீதிபதியாக ஸைது இப்னு தாபித்தை நியமித்துக் கொண்டார்கள்.

ஸைது இருவரின்வாதங்களையும் கேட்டார். அந்தத் தோப்பு உமருக்கு உரிமையானது எனத் தெரிந்துதீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு, தோப்பை உபை இப்னு கஅபுக்கே அன்பளிப்பாக வழங்கிவிட்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

பிறகுஉதுமான் ரலியல்லாஹு அன்ஹு தமது ஆட்சியின்போது, குர்ஆன் பிரதிகளை எழுதப்பன்னிரண்டு தோழர்களை நியமித்தார். அவர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர்.

ஹிஜ்ரீ 29ஆம் ஆண்டு. மதீனாவில் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

அஸ்மா பின்த் யஸீத் ரலியல்லாஹு அன்ஹா

மதீனாவில்அக்காலத்தில் வாழ்ந்துவந்த இரு பெரும் கோத்திரங்கள் அவ்ஸ், கஸ்ரஜ். அப்துல் அஷ்ஷால் என்பது அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கிளை. இந்தஅப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவரே அஸ்மா பின்த் யஸீத் இப்னுல் ஸகன்.முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிற்றன்னை மகள் இவர்.

இக்குலத்தின்பெருந்தலைவராய்த் திகழ்ந்தவர் ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு. ஸஅதின்தாயார் பெயர் கப்ஷா பின்த் ரஃபீஉ.  இந்த இரண்டு பெண்மணிகளும் முக்கியமானஇரு தோழர்களுக்கு நெருங்கிய உறவு என்பதை அறிந்து கொள்ளவே இந்த உறவுமுறைவிளக்கம். நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வந்ததும் அவர்களிடம்சத்தியப் பிரமாணம் அளி்த்த முதல் இரு அன்ஸாரிப் பெண்கள் இவர்கள்.ரலியல்லாஹு அன்ஹுமா.

இவர்களின் பட்டப் பெயர் உம்மு சல்மா என்பதாகும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்தவுடன் இவர்கள் பெண்கள் குழுவுடன் வந்து இஸ்லாத்தை தழுவினார்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இல்லறம் நடத்த அவர்களின் இல்லத்திற்கு முதன்முதலாக வந்தபோது அவருடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

பெருமானாரிடம் உறுதிப் பிரமாணம் செய்யக் கையை நீட்டுமாறு வேண்ட, ‘நான் எனக்குரியவர் அல்லாத அன்னியப் பெண்ணின் கரத்தை தொடமாட்டேன்’ என்று பெருமானார் அவர்கள் சொன்னார்கள். இதன்பின் ஒரு சட்டியில் தண்ணீர் கொண்டுவரச் செய்து அதில் தம் கரங்களை முக்கி எடுத்து பெண்களையும் அவ்விதமே செய்யுமாறு கூறி, இது தம் கரம்பற்றி உறுதிப்பிரமாணம் செய்தது போலாகும் என்று அண்ணலார் கூறினார்கள்.

அஸ்மாவிடம் சிறப்பொன்று அமைந்திருந்தது.தெளிவாகவும் அருமையாகவும் பேசும் நாவன்மை. அதற்கான சான்றிதழ்நபியவர்களிடமிருந்தே கிடைத்தது அவருக்கு.

ஒருநாள் நபியவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தார் அஸ்மா பின்த் யஸீத்.

“அல்லாஹ்வின்தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். முஸ்லிம்பெண்கள், அவர்தம் தூதுவராக என்னைத் தங்களிடம் அனுப்பியுள்ளார்கள். நான்அவர்கள் கூறியதைத் தங்களிடம் தெரிவிக்கிறேன். இங்கு நான் சொல்லப்போகும்அவர்களது கருத்தே என் கருத்தும்கூட. ஆண்கள் பெண்கள் இரு பாலாருக்கும்பொதுவாக அல்லாஹ் தங்களை அனுப்பி வைத்துள்ளான். நாங்கள் உங்களிடம்நம்பிக்கைக் கொண்டோம்; பின்பற்றுகிறோம். பெண்களாகிய நாங்கள் வீட்டின்தூண்களைப் போல் தனித்து வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கணவர்களுக்கு தாம்பத்யசுகம் அளிக்கிறோம்; அவர்களின் பிள்ளைகளைச் சுமக்கிறோம். அவர்கள்ஜிஹாதுக்குச் சென்றுவிடும்போது அவர்களது வீடு, வாசல், செல்வத்தைப்பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.

ஆண்களுக்கோகூட்டுத் தொழுகையும் ஜும்ஆத் தொழுகையும் பிரேத நல்லடக்கத்தில் ஈடுபவதும்ஜிஹாது புரிவதும் என்று பல நல் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன.  அல்லாஹ்வின் தூதரே! அவர்களது நற்கூலியில் எங்களுக்கும் பங்கு இருக்கவேண்டுமில்லையா?”

தெளிவான, அழகான, நேர்மையான, சுருக்கமான உரை அது.வியந்துபோன நபியவர்கள் தம் தோழர்களிடம் திரும்பி, “தமது மார்க்கம் பற்றிஇத்தனை அழகாக வேறு எந்தப் பெண்ணாவது கேள்வி எழுப்பி, பேசிகேட்டிருக்கிறீர்களா?”

“அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இல்லை. ஒரு பெண் இந்தளவு தெளிவாய்ப் பேசக்கூடும் என்று நாங்கள் நினைத்ததில்லை.”

“அஸ்மா!உன் தோழியரிடம் சென்று சொல், ‘தம் கணவனுக்குச் சிறந்த இல்லத்துணையாகவும்அவனது மகிழ்வே தனது நாட்டமாகவும் அவனது தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவளாகவும் ஒரு பெண் அமையும்போது ஆணின் நற்கூலிகள் என்று நீவிவரித்ததற்கு இணையான அனைத்தும் அவளுக்கும் கிடைத்துவிடும்’ என்று.”

இறைத் தூதர் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்து இறைவனைப் புகழ்ந்தவாறு அங்கிருந்து விலகினார் அஸ்மா.

ஏறத்தாழ நபியவர்களின் 81 ஹதீஸ்களை அவர் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

“நபியவர்களின்ஒட்டகமான அத்பாவின் சேணைக் கயிற்றை நான் பிடித்துக் கொண்டிருந்தபொழுதுஅவர்களுக்கு சூரா அல்-மாயிதா முழுவதுமாய் அருளப்பட்டது. அதன் கனம் எந்தளவுஇருந்ததென்றால் ஒட்டகத்தின் கால்கள் அனேகமாய் ஒடிந்துவிடும் அளவிற்குப் பளுஏற்பட்டுப்போனது” என்று அறிவித்துள்ளார் அஸ்மா.

நபியவர்களுடன்பலமுறை போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார் அவர். மக்காவிற்கு நபியவர்கள்உம்ரா சென்றபோது அந்தக் குழுவில் அஸ்மாவும் ஒருவர்.

ஹுதைபியாஉடன்படிக்கை நிகழ்விற்கு முன்னர், உதுமான் ரலியல்லாஹு அன்ஹுகொல்லப்பட்டதாய்ச் செய்தி பரவிக் குழப்பம் தோன்றிய நேரத்தில், ‘உயிரைக்கொடுத்தும் போராடுவோம்’ என்று மரத்தினடியில் சத்தியப் பிரமாணம் செய்துகொடுத்தனர் தோழர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பைஅத்துர் ரிள்வான்’ எனும்அந்தப் பிரமாணம் அளித்தவர்களில் ஒருவர் அஸ்மா.

இப்படி அவரதுஇயல்பிலும் உதிரத்திலும் வீரம் கலந்திருந்ததால் யர்மூக் போரின்போதுகளத்திற்குச் சென்றிருந்தார் அஸ்மா. இக்கட்டான போர்ச் சூழ்நிலையில், ரோமவீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வந்துவிட்டிருக்க, கூடாரம் அமைக்கநாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு தனி ஆளாய் ஒன்பது ரோமப் போர் வீரர்களைக் கொன்றுவிட்டுத்தான் ஓய்ந்தார். சிலிர்க்கவைக்கும் வீரம் அவருடையது.

இந்தப்போரின் வெற்றிக்குப் பிறகு, முஸ்லிம்கள் வசம் ஸிரியா வந்ததும் அங்கேயேதங்கிவிட்டார் அஸ்மா. பெண்களுக்கு இஸ்லாமியப் பாடங்களைக் கற்றுத்தருவதுஅவரது தலையாய பணியாகிப்போனது. நீண்ட ஆயுளுடன் ஏறத்தாழ 90 வயதுவரைவாழ்ந்திருந்தார்.

ஹிஜ்ரீ 69ஆம் ஆண்டு மரணம் அவரைத் தழுவியது.டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ‘பாபுஸ்ஸகீர்’ என்னும் அடக்கத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார் அஸ்மா பின்த் யஸீத்.

அஸ்மா பின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா

அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜூபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவியும்,மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழியல்லாஹு அன்ஹு)யின் அன்பு அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள்.

இவர்கள் உயரமாகவும்> பருமனாகவும் இருப்பார்கள். இறுதிவரை பற்கள் விழவில்லை. கண்பார்வை மட்டும் சற்று மங்கிப் போயிருந்தது. இவர்கள் நான்கு ஆண்மக்களையும், மூன்று பெண்மக்களையும் ஈன்றெடுத்தனர்.

இவர்களும்> அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் குதைலா பின்த் அப்துல் உஸ்ஸா என்னும் பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள். குதைலா இஸ்லாத்தை தழுவ மறுத்ததால் மற்றொரு அறிவிப்பின்படி அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை தழுவும் முன் அவர்களை விவாக விலக்கு செய்து விட்டார்கள்.இறைவனின் மீது உண்மையான உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் சிறுவயது முதலே இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பெரும் பணிகளை ஆற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்!

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழைப்பை 18வது நபராக அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.

மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபிகளார் ஹிஜ்ரத் புறப்படும் போது நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்.அலீ ரழியல்லாஹு அன்ஹு,சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுக்கும் மட்டுமே அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும். அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், தம் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் மக்காவின் அருகிலிருந்த தௌர் குகையில் இருக்கும்போது எதிரிகளின் நிலைமைகளை அனுசரித்து சில நாட்களாக அங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதும் அந்நாட்களில் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்தான் அவ்விருவருக்கும் உணவு தயாரித்து மிகமிக இரகசியமாகக் குகைக்குச் சென்று கொடுத்து வரவேண்டும் என்பதும் திட்டம்.

அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அபூஜஹ்ல் வேகமாகக் கதவைத்தட்டினான்.உள்ளேயிருந்து வெளியே வந்து கதவைத் திறந்தார்கள் அஸ்மா நாயகி.

உன் தந்தை எங்கே? இது அபூஜஹ்லின் அகங்காரக் கேள்வி.அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது:

உரிய பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் மிரட்டினான் ஆனால் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கன்னத்தில் கையை ஓங்கி பளீரென அறைந்தான்!

பொறுமைக் கடலான அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த அடியைத் தாங்கிக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனித்திடலானார்கள்.

குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொல்லியனுப்பியப்படி அலீ ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

மறுபுறத்தில் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்.அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? சித்தீகின் மகளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது.

உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.

இந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஷதாதுந் நிதாகைன்– (இரு வாருடையவரே!) என்று அழைத்தார்கள்! அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்!

ஹிஜ்ரத்தின்போது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் தந்தைஅபூகுஹாஃபா முதியவராகவும் கண்பார்வை இழந்தவராகவும் இருந்தார்.அவர் அதுவரை அவர் இஸ்லாமிய நெறியை ஏற்றிருக்கவில்லை! ஹிஜ்ரத் சென்ற ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்கு செலவிற்கு பணம் வைத்துவிட்டு செல்லாமல் அனைத்தையும் எடுத்துவிட்டு சென்றுவிட்டதாக தம் பேத்தியிடம் முறையிட்டபோது,

முதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பணப்பையில் அவற்றைப் போட்டு அதனைப் பணப் பெட்டியில் வைத்துஅதை குலுக்கி காட்டினார்கள்.அப்போது அபூகுஹாஃபா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மனம் நிம்மதி அடைந்தார்கள்.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதுவரை ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவில்லை. அவர்களின் மாமி மகன் ஜுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் மக்காவிலேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தது!

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏற்பாட்டின்படி, அப்துல்லாஹ் தம் தாயாரையும் சகோதரிகள் அஸ்மா, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஇருவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்!

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது! ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே! இதனை அறிந்த முஸ்லிம்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் சூட்டி, அதனைத் தூக்கிக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் திருச்சமூகம் வந்தார்கள். மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஒரு பேரீச்சம் பழத்தைத் தம் திருவாயில் இட்டு மென்று அதனைக் குழந்தைக்கு ஊட்டினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றதற்காக தம்முடைய சொத்து சுகங்களை இழந்தும், குறைஷிகளின் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டும் இருந்தார் ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் . இறுதியில் அபிசீனியா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ள வேண்டியதாயிற்று!

செல்வம் கொழித்த குடும்பத்தின் இந்த ஏழை மணாளருக்குத்தான் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மணம் முடிக்கப்பட்டார்கள்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த பொருள்களும் மக்காவில் மாட்டிக் கொண்டன! இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை! ஒருசில நாட்களுக்குப் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒரு சிறிய பேரீச்சந் தோட்டத்தை வழங்கினார்கள்!

சில நாட்களுக்குப் பிறகு என் தந்தையார் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் எனக்கு ஒரு பணியாளைக் கொடுத்து உதவினார்கள். அதனால் சிரமம் பெருமளவு குறைந்து விட்டது.

இத்தகைய ஏழ்மையின் காரணத்தால்தான் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக மிகவும் இறுக்கிப் பிடித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள். மிதமிஞசிய கடும் சிக்கனப் போக்கினை ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கண்டித்தார்கள். ‘இவ்வாறு ஒவ்வொன்றையும் அளந்து நிறுத்திப் பார்த்து கஞ்சத்தனம் செய்து கொண்டு இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் அல்லாஹ்வும் அந்த அளவுக்கே வழங்குவான்’ என்று அறிவுரை பகர்ந்தார்கள்.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பம் நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்.

அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘என் தாயார் மற்றும் சிறிய தாயார் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இருவரை விடவும் அதிகமாக கொடை வழங்குபவர் எவரையும் நான் கண்டதில்லை. கொடை வழங்கும் முறை அவ்விருவரிடமும் மாறுபட்டிருந்தது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் முறை என்னவெனில், அவர்கள் தமது வருவாயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைப்பார்கள். கடைசியில் கணிசமான அளவு சேர்ந்ததும் தேவைப்பட்டோருக்கு பங்கிட்டு அளித்து விடுவார்கள். ஆனால் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை இதற்கு மாற்றமாக இருந்தது. அவர்கள் நாளொன்றுக்கு எதையும் சேமித்து வைப்பதில்லை. எது மிஞ்சினாலும் அதே நேரத்தில் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.’

பிற்காலத்தில் அவர்களின் சகோதரி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மரணம் அடைந்தபோது ஒரு நிலத்தைத் தமது சொத்தாக விட்டுச் சென்றார்கள். அதற்கு அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. ஆகையால் அந்த பூமி அவர்களுக்கே கிடைத்தது! அதனை விற்றுக் கிடைத்த சுமார் ஒரு இலட்சம் திர்ஹம் முழுவதையும் தம்முடைய உறவினர்களில் தேவைப்பட்டோருக்குப் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள்!

ஒருமுறை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

உடனே கட்டித் தழுவத் துடித்த அவர்களின் கரங்கள் சோர்ந்து விடுகின்றன. கண்கள் பார்வையை தாழ்த்தி விடுகின்றன. அன்புடன் வரவேற்பதற்காக எழுந்த நாவு.. வாருங்கள் என்று கூற மறுத்துவிட்டது!

என்னுடைய தாயார் நீண்ட நாட்களுக்கப் பிறகு என்னைக் காண வந்திருக்கின்றார். இறைவனை நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவரை நான் வரவேற்று உபசரிக்கலாமா? என்பதை இறைத்தூதரிடம் கேட்டுச்சொல்’ என்று தன் சகோதரி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் தூது அனுப்பினார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கொடுத்தபிறகுதான், அவர்கள் தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்!

மதீனாவில் ஸயீத் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஆளுநராக இருந்தபோது இரவு நேரங்களில் திருட்டும், கொள்ளையும் வழிப்பறியும் பரவலாக நடைபெற்று வந்தன. மக்களை பெரும் பீதியும் அச்சமும் ஆட்கொண்டிருந்தன. அப்போது அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம்முடைய தலைக்கருகில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டுதான் இரவில் தூங்குவார்களாம்.

ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் குடும்பம் துணிவிலும் வீரத்திலும் தன்னிகரற்றுச் சிறந்து விளங்கும் குடும்பமாகும். புகழுக்குரிய இந்த வீரதீரப் பண்பு அக்குடும்பத்தின் முன்னோர்கள் உறவினர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சிறப்பம்சமாகும்.

ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய ஆண் மக்களில் மிகச் சிறந்த வீரராகவும் துணிவுமிக்கவராகவும் விளங்கியவர் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களாவர்.

அமீர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்குப் பிறகு அவருடைய மகன் யஜீத் ஆட்சிக்கு வந்தார். கிலாஃபத் எனும் இறையாட்சித் தத்துவத்திற்கு எதிராக அவர் கலீஃபாவாக நியமிக்ப்பட்டதை முஸ்லிம் சமுதாயத்தினரில் எந்தத் தலைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யஜீதுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களில் எவரும் மேற்கொள்ளத் துணிந்தார்களில்லை.

ஆனால் இரு தலைவர்கள் மட்டுமே யஜீதுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். செயல் ரீதியில் அவனுடன் மோதவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர் கலீஃபா அலீ ரழியல்லாஹு அன்ஹுஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹுதம்பதியினரின் மகனார் ஹூசைன் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள். மற்றொருவர்தான் ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹு- அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா தம்பதியினரின் வீரத்திருமகனாகிய அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள்!

யஜீதின் படையினர் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் எதிர்ப்பை சிலமணி நேரங்களில் முறியடித்து விட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை எளிதில் முறியடிக்க முடியவில்லை! உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது! ஆகையால் யுத்தங்களின் ஒரு நீண்ட தொடர் ஆரம்பமாகி, அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் வீரமரணத்துடன் முடிவுற்றது.

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தொடர்ந்து யஜீதுக்குப் பிறகு மர்வான், பிறகு அப்துல் மலிக் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மிகவும் அறிவுத்திறன் கொண்ட, திட்டமிட்டு செயல்படுத் சூட்சுமம் தெறிந்த ஓர் ஆளுநர் கிடைத்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் என்று வரலாற்றில் பிரபலமாக அறியப்படும் ஆளுநர்தான். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் பெற்று வந்து செல்வாக்கையும் ஈட்டிவந்த ஆதரவுகளையும் குலைத்தார்!

இந்நிலையில் அவர்கள் போர்க்கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய வண்ணம் தம் தாயாரின் சமூகத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சந்தித்து விடைபெற்றுச் செல்வதற்காக! அது அவர்களது இறுதிச் சந்திப்பாகவும் இருந்தது.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அப்போது 100வது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பார்வை மங்கிப்போய் விட்டிருந்தது. அவர்களின் மகனார் வந்து நின்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!

மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ:-

அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும்! எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!’

அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமற்றும் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுபோன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்…! ஆகா! தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.

என் அன்புத் தாயே, ஷாம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!||

மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!||

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –

என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!

இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.

மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு! என்று அறிவுறுத்தினார்கள்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!

பிறகு ஹஜ்ஜாஜ் என்ன செய்தார் தெரியுமா? அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டார்!

ஒரு கொடுங்கோலன் இனங்காட்டப்பட்டான்!

மறுநாள் அன்னை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!

உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்என்றான் ஹஜ்ஜாஜ்.

நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் இரவுத் தொழுகை தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள் அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார் எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.

பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானார். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன், என்று பிதற்றினார்!

நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டானே!

இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.

இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து போய்விட்டாள்

இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!

ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டார்!

பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விடவும்எனும் கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!

வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி துணிபொதிந்து அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்!

அவ்வாறே அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!

உடல் மிகவும் சிதைந்த நிலையில்இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!

மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!

அம்மார் பின் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு

தாயார் பெயர் சுமைய்யா ரழியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு. யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார்கள். இவர்களின் புதல்வரே அம்மார் ரழியல்லாஹு அன்ஹு. இவர்களின் மற்றொரு பெயர் அபுல் யஹ்ஸான் என்பதாகும். இவர்கள் இப்னு சுமைய்யா என்று அழைக்கப்பட்டும் வந்தனர்.

இணை வைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு,சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா ஆவார்.

குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையாரழியல்லாஹு அன்ஹா அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்ரழியல்லாஹு அன்ஹு ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும்படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு.

தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். விட்டு விடுகின்றனர்.

அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹு நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.

அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராகீம்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.

அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது. யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்..

சிறந்த போர் வீரரான அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அபூபக்கர்ரழியல்லாஹு அன்ஹு ஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு, ‘முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள்’என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.

ஹிஜ்ரி 21ல் உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்தில் கூஃபாவின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் ஒற்றைச் செவியன் எனக் கூறினான். அவனை அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தண்டிக்கவில்லை.

ஹுதைபத்துல் யமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார்ரழியல்லாஹு அன்ஹு இருப்பார் எனக் கூறினார்கள்.

ஹிஜ்ரத்திக்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள். (புகாரி)

.ஒருமுறை சுவர் இடிந்து விழுந்து மூர்ச்சையான அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து நபித்தோழர்கள் அவர் இறந்து விட்டதாக எண்ண மீண்டும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சுமையாவின் மகனை அக்கிரமக் காரர்கள் கொலை செய்யப் போகின்றனர் எனக் கூறினார்கள். இவர்களுக்கு அண்ணலார் ‘தையிபுல் முதையிப்’ என்று பெயரிட்டிருந்தனர். இவர்களிடமிருந்து அலி ரலியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் பல ஹதீதுகளைக் கேட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஹிஜ்ரி 37ல் நடைபெற்ற ஸிப்பியீன் போருக்கு முன் இவர்கள் ஈராக் மக்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். நியாயம் நம் பக்கம் உள்ளது. அலியின் படையணியில் சேர்ந்து போர் செய்தவருக்கே இவ்வுலகில் இஸ்லாத்திற்காக உயிர்நீத்த பேறும், மறுமையில் சுவனப் பெருவாழ்வும் கிடைக்கும். எனவே என்னைப் பின்பற்றுங்கள். சுவனத்து வாயில் திறந்து கிடக்கிறது என்று வீர உரை நிகழத்தினர். அப்போது இவர்கள் தாகத்தால் தண்ணீர் கேட்க, தண்ணீருககுப் பதிலாக பால் வந்தது.

அதைக் கண்ட இவர்கள், ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை நோக்கி, ‘இப்னு சுமையா! உம் கடைசி உணவு பாலாக இருக்கும் என்று கூறியதை அங்கிருந்தோரிடம் எடுத்துரைத்து விட்டு,இன்று நான் அண்ணலாரையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப் போகிறேன்’ என்று கூறிப் போர்க்களத்தில் பாய்ந்து வீரப் போர் செய்து இறப்பெய்தினர்.

ஸிப்பீன் போரில் அலிரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை கான சுவனம் ஆசைப்படுகிறது-திர்மிதியில் காணப்படும் நபி மொழி.

இவர்களின் அடக்கவிடம் ஸிஃப்ஃபீனில் இருக்கிறது.

அபூலுபாபா ரலியல்லாஹு அன்ஹு

வரலாற்றுச் சிறப்புமிக்க அகபா உடன்படிக்கையின்போது நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முக்கியமானவர்களுள் ஒருவர் அபூலுபாபா பின் அப்துல் முன்திர், ரலியல்லாஹு அன்ஹு. மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் முந்திரின் மகன்களான ரிஃபாஆ, முபஷ்ஷிர், புஷைர் ஆகியோருள் புஷைர்தாம் பேறுபெயரால் பிரபலமான அபூலுபாபா என்பது இமாம் இப்னு இஸ்ஹாக் மற்றும் அபுல் கல்பீ ஆகியோரின் வரலாற்றுக் குறிப்பு.

இஸ்லாத்தை ஏற்ற தருணத்திலிருந்து அதில் சிறந்து விளங்கி, நபியவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிப் போனார் அபூலுபாபா. மதீனாவில் இருந்த தோழர்களுக்கு அவர்களது வாழ்க்கையின் ஆதாரத்திற்கு  விவசாயம், தொழில் என்று பலதரப்பட்ட அலுவல்கள். அபூலுபாபாவுக்கு வியாபாரம். அதில் அவர் தம் குடும்பத்தை பராமரித்து வந்தார்.

மதீனாவில் ஒன்றான பனூ குறைளா கோத்திரத்தினர் குடியிருப்பின் அருகேதான் அபூலுபாபாவின் வீடு. அவர்களுக்கு மத்தியில்தான் இவரது தொழில் கேந்திரம் அமைந்திருந்தது. பனூ குரைளா யூதர்களுடன் அவருக்கு நல்ல நேசம், சகவாசம். அது அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டுத் தொடர்ந்து கொண்டு இருந்தது.

பத்ருப் போருக்கு முஸ்லிம்கள் கிளம்பிச் சென்றபோது  அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூமிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை நபியவர்கள் அளித்தார்கள். அபூலுபாபா அப்பொழுது பத்ருப் படையில் இடம் பெற்றிருந்தார். பின்னர் நபியவர்கள், அபூலுபாபாவை அழைத்து அவரிடம் மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

உரிய காரணங்களுடனோ, இதர பணிகளினாலோ பத்ருப் போரில் நேரடியாகக் களத்தில் பங்கு பெறாமல் பிற அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்ட தோழர்களும் பத்ருத் தோழர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தத் தோழர்களை அப்படித்தான் நடத்தியிருக்கிறார்கள்.

பத்ரு வெற்றிக்குப் பின்னர் போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் போர் வீரர்களுக்கு எப்படிப் பகிர்ந்து அளிக்கப்பட்டதோ அதே விகிதாசாரத்தில் அபூலுபாபாவுக்கும் அளிக்கப்பட்டது.
யூதர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அவர்கள் மீறினர்.

ஒருநாள் நண்பகல் நேரம். வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களிடம் வந்து இறைச் செய்தி ஒன்றைச் சொன்னார். “முஹம்மது! அல்லாஹ் உம்மைக் குரைளாவை நோக்கி அணிவகுத்துச் செல்லக் கட்டளையிட்டுள்ளான். நான் மற்ற மலக்குகளுடன் அவர்களின் இதயத்தை உலுக்க இப்பொழுது அங்குச் செல்கிறேன்.”

உடனே நபியவர்களின் உத்தரவின்படி மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்யப்பட்டது. அன்று காலைதான், (அகழிப் போர்)பெரியதொரு படையெடுப்பை முடித்துக்கொண்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு, தம் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள் முஸ்லிம்கள். அறிவிப்பை அறிந்த நொடியிலேயே கடகடவென்று ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கிளம்பியது முஸ்லிம்களின் படை.

யூதர்களின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த முற்றுகையை வெகு இலேசாக எடுத்துக்கொண்டு பொறுமையாக இருந்தனர்  யூதர்கள்.

ஆனால் அவர்களுக்கு இதிலிருந்து மீள வழி தெரியவில்லை. அந்த இக்கட்டான தருணத்தில்தான் அவர்களது நினைவிற்கு வந்தார் ஒருவர். அபூலுபாபா.

எனவே, அவரை வரவழைத்துப் பேசினால் தங்களுக்கு நல்ல உபாயம் சொல்வார்; நபியவர்களிடம் இணக்கம் ஏற்படுத்தித்தர ஏதாவது ஒரு வாய்ப்பு இருந்தால் வழிவகை சொல்வார் என்று அவர்களுக்குத் தோன்றியது.

“அபூலுபாபாவிடம் கலந்துரையாட வேண்டும், தயவுசெய்து அவரை எங்களிடம் வரச்சொல்லுங்கள்” என்று கோரிக்கை வந்தது.

அதைக்கேட்டு, “நபியவர்கள் சொன்னால் ஒழிய அவர்களிடமெல்லாம் நான் போக முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் அபூலுபாபா. அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.
அபூலுபாபா அவர்களிடம் பேசினார்கள். இறுதியில் அவர்கள் சொன்னார்கள்:

“ஆம்! நிபந்தனையின்றி நீங்கள் சரணடைவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை” என்று பதில் அளித்தார் அபூலுபாபா. பிறகு தம் கழுத்தை வெட்டுவதுபோல் கையால் சாடை செய்தார். அதாவது சரணடைந்ததும் அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனை பற்றியக் குறிப்பு.

நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட அந்தச் செய்கையின் தீவிரத்தை அடுத்த கணமே உணர்ந்துவிட்டார் அபூலுபாபா. ‘இது ராசத்துரோகம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இழைத்த நம்பிக்கைத் துரோகம்!’ என்று வெலவெலத்துப் போயின அவரது கைகளும் கால்களும். வெட்கமும் குற்ற உணர்ச்சியும் அவரைப் பிடுங்கித் தின்றன. பனூ குரைளா மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கிளம்பியவர், களத்திற்குத் திரும்பவில்லை; நபியவர்களைச் சந்திக்கவில்லை. வேகவேகமாய் மதீனாவின் பள்ளிவாசலுக்கு விரைந்தார். அங்குள்ள ஒரு கம்பத்தில் தம்மைத் தாமே கட்டிப்போட்டுக் கொண்டார்; சத்தியம் செய்துவிட்டார்.

“நான் செய்த காரியத்திற்கு அல்லாஹ் என்னை மன்னிக்கும்வரை நான் என்னை இந்தத் தண்டனையிலிருந்து விடுவித்துக்கொள்ள மாட்டேன். பனூ குரைளா விஷயத்தில் இனி நான் தரகு வேலையில் ஈடுபடவே மாட்டேன். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் துரோகம் இழைத்த பனூ குரைளாவின் குடியிருப்புப் பகுதிக்கு நான் இனி செல்லவே மாட்டேன்.”

நீண்ட நேரமாகியும் சென்றவர் வரவில்லையே என்பதை உணர்ந்தார்கள் நபியவர்கள். ஆச்சரியத்துடன் தம் தோழர்களிடம், “இன்னுமா அபூலுபாபா அவர்களுடன் ஆலோசனையை முடிக்கவில்லை?” விஷயம் அறியவந்திருந்தவர்கள், நபியவர்களிடம் நடந்ததை விவரித்தார்கள்

“அவர் என்னிடம் நேரடியாக வந்திருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக்கு இறைஞ்சியிருப்பேனே. இப்பொழுது இதை அவரே தமக்கு இழைத்துக் கொண்டதால் அல்லாஹ் மன்னிக்கும்வரை என்னால் அவரை விடுவிக்க இயலாது” என்று தம் எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள் நபியவர்கள்.

கம்பத்தில் தம்மைக் கட்டிக்கொண்ட அபூலுபாபா உண்பதையும் பருகுவதையும்கூட நிறுத்திக் கொண்டார். ஒவ்வொரு தொழுகை நேரத்தின்போதும் அவரின் மனைவி வந்து அவரது கட்டுகளை அவிழ்த்துவிடுவார். அவ்வேளையில் தம் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டபின் உளுச் செய்துகொண்டு மக்களுடன் இணைந்து தொழுகையை நிறைவேற்றுவார் அபூலுபாபா. தொழுகை முடிந்ததும் மீண்டும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு வந்துவிடுவார் அவர் மனைவி. இவ்விதமாகவே ஆறு இரவுகள் கழிந்தன. அதன் பிறகுதான் அதிகாலை நேரம் இறை வசனம் வந்து இறங்கியது.

“வேறு சிலர், தங்கள் நல்ல செயல்களைத் தீய செயல்களோடு (அறியாமல்) கலந்துவிட்டனர். அந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடலாம். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பவன்; கருணையாளன்”

என்ற அந்த இறை வாசகம் சூரத்துத் தவ்பாவின் 102ஆவது வசனமாக இடம்பெற்றுவிட்டது.

அந்த வசனம் அருளப்பெற்றதும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். அதைக் கண்ட அன்னை உம்மு ஸலமா ஆச்சரியத்துடன் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க, நபியவர்கள், “அபூலுபாபாவுக்கு மன்னிப்பு அருளப்பட்டுவிட்டது.”….

”ஓ அபூலுபாபா. நற்செய்தி கேளுங்கள். அல்லாஹ் உம்முடைய பாவத்தை மன்னித்து விட்டான்” என்று உரத்து அறிவித்தார்கள் அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா.

“நபியவர்கள் வந்து என்னை விடுவிக்கும்வரை என் கைகள் கட்டப்பட்டே இருக்கட்டும்.”

பின்னர் தொழுகைக்குப் பள்ளிவாசல் வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் கைகளால் கட்டை அவிழ்க்க, விடுதலையானார் அபூலுபாபா.

சொர்க்கத்து பூங்காவின் ஒரு துண்டு என்று வர்ணிக்கப்பட்ட இடத்தில் இப்பொழுதும் ஒரு தூண் இருக்கிறது. அதன்மீது, இது அபூலுபாபாவின் தூண்’ என்றும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மக்கா வெற்றியின்போது தம் குலத்தின் சார்பாய் கொடியேந்திச் சென்றார் அபூலுபாபா. பின்னர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் மறைவிற்குப் பிறகு இவ்வுலக வாழ்வை நீத்தார் அவர்.