நூரு நபிகள் வந்தனரே…

நூரு வாலா ஆயாஹே

       நூரு லேகர் ஆயாஹே

ஷாரே ஆலம் மேயே தேகோ

       கைஷா நூரு சாயாஹே!

நூரு நபிகள் வந்தனரே

       நூரைக் கொண்டு வந்தனரே

கண்மணி நபியின் திரு வரவாலே

       அகிலம் முழுதும் ஒளிர்ந்ததுவே!

اَلصَّلٰوةُ وَالسَّلَامُ))

 ஜப்த லக்யே சாந்து தாரே

       ஜில் மிலாதே ஜாயேங்கே

தப்தலக் ஜெஸ்னே விலாதத்

       ஹம் மனாத்தே ஜாயேங்கே!

சூரிய சந்திர நட்சத்திரங்கள்

       ஒளியை உமிழும் காலமெல்லாம்

சுந்தர நபியின் சந்தன வரவைக்

       கொண்டாடி இன்பம் கண்டிடுவோம்!

اَلصَّلٰوةُ وَالسَّلَامُ))

நாத்து கானி மௌத் பீஹம்

       சேச்சுரா ஸகதீ நஹீ

கப்ரு மே பீ முஸ்தஃபா கி

கீத்து காத்தே ஜாயேங்கே!

நபி புகழ் பாடும் அடிமைகள் நமக்கு

       மரணங் கூடத் தடையில்லை

கப்ரிலும் கூட முஸ்தஃபா நபி மேல்

புகழைப் பாடிக் கொண்டிருப்போம்

اَلصَّلٰوةُ وَالسَّلَامُ))

ஈத் மீலா துன்னபி மே

       தில் படா மஸ்ரூர் ஹே

ஈத் திவானின் கீதோ

       ஷாரா ரபீவூன் நூருஹே!

மீலாதுன் னபி பெருநாளில்

       இதயம் மகிழ்வில் திளைத்திடுமே

கண்மணி நபியின் காதலருக்கே

       இம்மாதம் முழுதும் மீலாதே!

اَلصَّلٰوةُ والسَّلاَمُ

       عَلَيْكُ يَارَسُوْلَ الله

اَلصَّلٰوةُ وَالسَّلَٰامُ

       عَلَيْكَ يَا حَبِيْبُ الله

(நிறைவு)

நூரினில் நூரான…

நூரினில் நூரான

       நூரே முஹம்மதிய்யா

நுபுவத்தின் முத்திரையை

       முத்திடுவோம் வாருங்களேன்

கண்ணீரும் கரைந்தோட

       கண்மணி தர்பாரை

களிப்போடு காண்போமே

       அன்பான சகோதரியே!

முதலாம் வசந்தமாம்

       ரபீயுல் அவ்வலிலே

முழுமதியாய் தோன்றிய

       முத்திரை நபி அழகே

ரஹ்மானின் புண்ணிய

       நேசராய் வந்தீரே

ரஹ்மத்துலில் ஆலமீனாய்

       ஆலத்தில் அவதரித்தீர்

அங்கம் குளிர்ந்திட

       பங்கம் மறைந்திட

அலங்காரமாய் பிறந்தீர்

       அன்பார்ந்த ஆன்றலரே!

உங்களை ஆசித்தோர்

       ஆஷிக்காய் மனம் பெற்றோர்

உங்களை வெறுத்தோர்கள்

       வெதும்பியே போனார்கள்

மன்னரே மஹ்மூதே

       முஸ்தஃபா மா நபியே

மலர வைப்பீர் எங்களையும்

       ஆஷிக்கீன் கூட்டத்திலே

தாஜுல் முத்த கீனே

தாஹாவே தவப் பொருளே

என் தலையினில் கிரீடமாய்

       சூடிடுவேன் தங்களையே!

இறை நெருக்கம் கிடைத்திட்ட

       மிஃராஜின் நேரத்திலும்

இறை சமூகம் நம் தனையே

       நினைத் துருகிய நாயகமே

நரகத்தில் பெண்ணில் நிலைக்

       கண்டு மனம் வெதும்பி

நாவதைப் பேணிக் கொள்

       நவின்றீர்கள் நாயகமே!

பெண் மகவே என் மகள்தான்

       காத்தீரே எம் இனத்தை

பெருமானே உங்கள்

       புகழ் பாடி மகிழ்ந்திடுவோம்!

உயிர்ப் பிரியும் உன்னத

       நேரத்திலும் எம்மானே

உம்மத்தை உயிர் மூச்சாய்

       கொண்டீர்கள் கோமானே!

எம் உயிர்ப் பிரியும் முன்

       உம் முகத்தை யாம் காண

மடியினில் பிச்சையாய்

       கேட்கிறோம் கோமானே!

தட்டாமல் தருவீரே

       ஹோஜா முஹம்மதரே

விரட்டாமல் ஏற்பீரே

       ஏகோனின் இரசூலே!

அனலாய் கொதித்திடும்

       மஹ்ஷரின் நேரத்திலும்

அரவணைப்பீர் லிவாவுல்

       ஹம்தினில் அண்ணலரே!

தாகித்தால் நாவரண்டு

       தவித்திடும் தருணத்திலே

தங்க நிகர் ஹவ்ழினில்

       புணல் தருவீர் ஆருயிரே!

மஹ்மூ தெனும் தலத்தில்

       மன்னான் முன் சிரம் பணிந்து

மாண்பான மன்றாட்டம்

       புரிந்திடுவீர் கோமானே!

ஸிராத்துல் பாலமதை

       மின்னலென யாம் கடக்க

சிறப்பான முந்தானையைத்

       தருவீரே முஹம்மதரே!

அர்ஷினை அலங்கரிக்கும்

       அல்லாஹ்வின் ஜோதி தனை

அகம் மலர முகம் மலர

       பார்த்திடணும் பார்த்திபரே!

அல்லாஹ் நீ உவந்திடும்

       எம் உயிரான உத்தமரின்

அருகினில் யாம் இருக்க

       வரம் தருவாய் வல்லவனே!

ஷரீஅத் நெறி முறையைச்

       சரியாமல் நிறுத்திய எம்

ஸாதாத் தாம் குருநாதர்

       முஹ்யித்தீன் ஆண்டகையின்

பெயர்த் துலங்கும் எம்

       எம் ஸபையினர்க் கூடியே

பெருமிதமாய் உழைப்போர்தம்

       வாழ்வெல்லாம் செழித்தோங்க

இகபர வாழ் வெல்லாம்

       இறையன்பும் நபியன்பும்

இறைஞ்சியைக் கேட்கின்றோம்

தந்திடுவாய் ரஹ்மானே!

(நிறைவு)

ஞான முதமே மானிடர்க் கூடி…

ஞான முதமே மானிடர்க் கூடி

       ஞானந் தனிலே மாபுகழ் பாடி

கமலும் ஒலி நாதா

       கருணை நபி பேரா!

கலையுறு ஜீலான் பதி மீதே

       கவி அபுசாலிஹ் மகவாக

நிலைப் பெற இஸ்லாம்

       நெறித் தர வந்த

நீதி முஹிய்யிதீன் நாயகரே!

பொய் புவி இன்பம் மேலெனவே

மொழி விழிந்தோர் மன்னர்தனிலே

மெய் நிலை யோங்க

       அமுதுரைத் தந்த

மா முஹிய்யித்தீன் நாயகரே!

தசைமிசை தவமார் ஒலிகளுக்கே

       தலையெனத் திகழும் மணி விளக்கே

நிறைவுட னிஸ்லாம்

       முறையினில் வாழ்ந்த

திரு முஹிய்யிதீன் நாயகரே!!

அப்துல் காதிரெனும் பேரால்

அற்புத மாற்றிய ஒலி மேரே

இப்புவி தீனோர்

       இதயத்தில் இலங்கும்

எழில் முஹிய்யிதீன் நாயகரே!!

பெருவளம் சூழும் பகுதாதிலே

       நறுமணம் வீசிடும் அதிபரே

மறுவதிலாக மதி யமுதான

குரு முஹிய்யிதீன் நாயகரே!

(நிறைவு)

ஞானத்தின் திறவுகோல்…

ஞானத்தின் திறவுகோல்

       நாயகம் அல்லவா – நபி(2)

கானத்தின் நான் அதைக்

       கொஞ்சம் இங்கு சொல்லவா!

பள்ளிச் சென்று படித்த தில்லை

       பாடம் ஏதும் கேட்டதில்லை

சொல்லித் தரும் தகுதி இந்த

       துன்யாவில் எவர்க்கு மில்லை

அல்லாஹ்வே ஆசிரியன்

       அனைத்துமே ஆச்சரியம்

சொன்னதெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

வானமதைப் பார்த் திருந்தார்

       வள்ளல் நபி சிந்தித்தார்

கான மலைக் கடல் அலையைக்

       கண்டிறையைப் புகழ்ந்திட்டார்

இறைவன் சொல்லித் தந்தான்

       ஏந்தல் நபி அள்ளிக் கொண்டார்

சொன்ன தெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

ஹீரா யெனும் மலைக் குகையே

       இள நிலைப் பள்ளிக் கூடம்

சீரான வஹீ மூலம்

       சிந்தனையாய் பலப் பாடம்

ஜிப்ரீல் ஏந்தி வந்தார்

சாந்த நபி எழுதிக் கொண்டார்

சொன்னதெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

கலிமா தொழுகை நோன்பு

       ஜகாத்து ஹஜ்ஜுடனே

பழுது ஏதுமில்லா

       பண்பான வாழ்க்கை முறை

வகுப்புகள் நடந்தனவே

       வாஞ்சை நபி தொடர்ந்தனரே

சொன்ன தெல்லாம் நீதிகளே

சத்தியத்தின் சேதிகளே!

பொருளியல் அரசியலில்

       புதுமை விஞ்ஞான மதில்

அருளியல் இல்லறத்தில்

       ஆன்மீக வழிமுறையில்

எத்துறையும் கற்றிருந்தார்

       ஏகன் அருள் பெற்றுயர்ந்தார்

சொன்னதெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

பண்பான நபி பெருமான்

       பல்கலைக் கழக மன்றோ

அன்பான மாணவராய்

       அவர் வழி உம்மத் தன்றே

தேர்வினிலே வென்றிடுவோம்

       தீன் வழியில் நின்றிடுவோம்

சொன்;னதெல்லாம் நீதிகளே!

       சத்தியத்தின் சேதிகளே! (2)

(ஞானத்தின்…)

(நிறைவு)

கௌது யா முஹிய்யத்தீன்…

கௌது  யா முஹிய்யத்தீன்

       அப்துல் காதிர் ஜீலானி

மன்னி மன்னி வேண்டுகிறோம்

       எங்கள் துயர்த் தீர்ப்பீரே!

புனித மிக்க ஜீலான் – நகர்

       பதிலே பதியில் பிறந்தீர்

இஸ்லாத்தின் பண்பைப் பரப்ப

       பஃதாதில் அரசுப் புரிந்தீர்

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

அன்னைச் சொன்ன வாக்கை

       கண் போலக் காத்து வந்தீர்

கள்வர் கல்பை மாற்றி –உயர்ப்

       பண்பின் தீனை வளர்த்தீர்

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

தாஹா நபியின் பேரா

       தவ சீலக் குரு நாதா

அருளாளன் தீனும் ஓங்க

       அயராமல் உழைத்தீர் நாதா!

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

முத்தி லுதித்த ஒலியே

       உலகோர்கள் போற்றும் குத்பே

எந்நாளும் எம்மைக் காத்து

       அருள் புரிவீர் புரிவீர் குத்பே!

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

அபு ஸாலிஹ் மகவென உதித்தீர்

       அஞ்ஞான இருளை மாய்த்தீர்

மெஞ்ஞான நிலைக் கண்ட ஞான

       வருவீர் வருவீர்க் குருவே!

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

(நிறைவு)

குத்பாகப் பிறந்தோரே…

குத்பாகப் பிறந்தோரே

       கௌதாகச் சிறந்தோரே

கத்தனின் அர்ஷு தனில்

       முத்தாக ஜொலிப்போரே

மஹ்பூபே சுப்ஹானி

       மஃசூக்கே ரஹ்மானி

கிந்தீலே நூரானி

       நிகரில்லா ஃபர்தானி!

வானமும் பூமியும்

       அர்ஷுடன் குர்ஸெல்லாம்

உமைத் துதித்து பாடிடுமே

       இறையருள் பெற்றிடுமே

வானவர் கோமானும்

நன்னபிகள் சீமானும்

வான் புகழ் ஹிழ்ரும்

       வந்து ஸலாம் கூறிடுவார்

ஆதவனும் நாணமுறும்

       முழு மதியம் மங்கி விடும்

ஜோதியின் மறு பெயராம்

       ஜீலானியின் உதயத்தால்!

ஞானத்தின் செங்கதிர்கள்

       ஞானிலத்தின் பரவிடவே

மோன நிலையில் கடந்துயர்ந்து

       மெய் நிலையில் நிலைத்தீரே!

கானகம் சென்றீரே

       கடுந்தவம் செய்தீரே

காவியம் ஆனீரே

       குவலயம் காத்தீரே!!

உம் பாதம் சுமந்திட்டோர்

       நற்பேறு அடைந்திட்டார்

இமைப் போல உம்மத்தை

       இமயமாய் காத்திட்டார்

மையித்தும் எழுந்திடுமே

       உம் ஆணை வெளிப்பட்டால்

மய்யித்தார் விழுந்திடுவார்

       உம் போதனைச் செவியுற்றால்!

தீனோரின் ரீங்காரம்

       தீன் ஸபைக்கு அலங்காரம்

மேதினிக்கு உபகாரம்

       தைய்யானிடம் புகழாரம்!

உயிரில்லா சடலத்தை

       ரூஹில்லா வணக்கத்தை

உயர்ப் பொங்கும்  சுடரொளியால்

       சீரிலங்கச் செய்தீரே!

ஷஃபாஅத்தின் சங்கீதம்

       இப்போதே தாருமய்யா

ஷிஃபா தனை வேண்டியே

       இருகரம் ஏந்துகிறோம்!

மஹ்ஷரின் வெப்பத்தை

       வெறுமையாய் ஆக்கிடுவீர்

மாஷர்ரின் கடுமைதனை

       மறைத்தே னீர்ப் போக்கிடுவீர்

நாசம் தரும் நரகத்தை

       கடும் கப்ரின் மோசத்தை

பாசம் தரும் இரக்கத் தால்

       இரைந்தே னீர் நீக்கிடுவீர்!

ஜீலானின் புதல்வராகப்

       பக்தாதின் முதல்வராய்

 மேலான அல்லாஹ்வின்

       தத்துவ ரகசியமாய்

நாதனின் தர்பாரில்

       வீற்றிருக்கும் முஹ்ய்யிதீன்

நீதர் முஹம்மதுவின்

       குல விளக்கு வலியுத்தீன்

மாந்தரின் இன்னலை

       கானலாய் மாற்றிடுவீர்

மாதவம் செய்தோரே

       மன்றாடிக் காப்பீரே!

(குத்பாக…)

(நிறைவு)

குரு வேத நீத நாதரே…

குரு வேத நீத நாதரே

அப்துல் காதிரே அபயம்

கோமான் காதிரே அபயம்

தர்ம சீலரானப் பீரே

       தானும் தாரும் தஸ்தகீரே

வறுமமே வராகர்ப் பீரே

       வாசர் நேசர் ராசரே!

(அப்துல் …)

வள்ளலிர்ர சூலின் பீரா

       வாதைத் தீர்ப் பீரானப் பீரா

உள்ள மிரக்கம் வைப்பீரா

       உண்மை நன்மை புண்யரே!

(அப்துல்…)

ஜின் னெடுத்த மங்கையரே

       ஜெக மீதழைத்த ஜெயரே

கண்ணின் மணி என் துயரே

       காரும் காமில் காரணரே!

(அப்துல்…)

மதி தவழ் பூஞ்சோலைச் சூழும்

       பதி பஃதா தூரில் வாழும்

அதிபரா அபுசாலிஹ் நாளும்

       அன்ப ரின்ப நண்பரசே!

(அப்துல்…)

(நிறைவு)

காண வேண்டும் நபிகள் பெருமானை…

காண வேண்டும் நபிகள் பெருமானைக்

காலைக் கதிராய் உதித்த பூமானே (2)

சந்தனப் பூங்காற்றே கண்டு வந்து

       சம்மதம் சொல்லி விடு

எந்தன் இரு விழிகள் ஏங்கும்

       சங்கதிச் சொல்லி விடு!

(காண வேண்டும்…)

புதுப் பாதையிலே இந்த உலகை

       அழைத்த திருத் தூதர்

       அருமை மஹ்மூதர்

புரியா நிலையைத் தீர்த்து தெளிவை

       தந்த மறைப் போதகர்

       அருமை நபி நாதர்

காட்டினார்…..

காட்டினார் உலகை மாற்றி

       கருணை வழிக் காட்டி

வந்ததுலகம் நல்வழியில்

       வள்ளல் கொடுத்த நன் கொடையில்

அந்த நபியோ என்னுயிரில்

       அல்லும் பகலும் என் நினைவில்

அதனால் வாழ்வில் அருகே நேரில் (2)

(காண வேண்டும்…)

தணல் பாலையிலே அந்த நாளில்

       முள்ளில் நடந்தார்கள்

       தொல்லைச் சுமந்தார்கள்

தளரா நிலையில் தன்னந் தனியே

       முறையைச் சொன்னார்கள்

       முடிவில் வென்றார்கள்

அண்ணலார்….

அண்ணலார் தந்த வேதம்

       எங்கள் உயிர் நாதம்

தத்துவம் சொன்ன முத்துச் சரம்

       தன்னிகரில்லாத தங்கக் குணம்

அன்னைக் கருவில் வந்த நிலா

       அகிலமெல்லாம் வெற்றி உலா

அதனால் வாழ்வில் அருகே நேரில் (2)

காண வேண்டும் நபிகள்

       பெருமானைக்

காலைக் கதிராய் உதித்தப்

       பூமானே!

(நிறைவு)

கல்புக்குள்ளே உங்களை வைத்தேன்…

கல்புக்குள்ளே உங்களை வைத்தேன்

       யாரசூலுல்லாஹ்

கலிமாவை மனதில் வைத்தேன்

       யாரசூலுல்லாஹ்!

கனிவு மனம்… பணிவுக் குணம்

       யாரசூலுல்லாஹ் … நாளும்

கடமையாக்கி வாழ்ந்திடுவேன்

யாரசூலுல்லாஹ்!

ஐந்து கடமை அகத்தில் கொண்டேன்

       யாரசூலுல்லாஹ் – நான்

சரியாக ஈமான் கொண்டேன்

       யாரசூலுல்லாஹ்!

அரணாக ஷரீஅத் கண்டேன்

       யாரசூலுல்லாஹ்

சங்கையான ஏகத்துவத்தைக் கண்டேன்

       யாரசூலுல்லாஹ்!

முன்னவன் தன்னொளியே

       யாரசூலுல்லாஹ் – உங்கள்

முஹப்பத்தில் உகப்பானேன்

       யாரசூலுல்லாஹ்!

கண்மணியே ஹாத்த முன்னே

       யாரசூலுல்லாஹ் – உங்கள்

கரம் பிடிக்கத் துடிக் கின்றேன்

       யாரசூலுல்லாஹ்!

இறையருள் நிறை முகமே

       யாரசூலுல்லாஹ்

தாங்கள் ஏந்தி வந்த மறைக் குர்ஆன்

       யாரசூலுல்லாஹ்!

விரைக் குலத்தின் பெருமையன்றோ

       யாரசூலுல்லாஹ் – நான்

பிசகாமல் தான் நடப்பேன்

       யாரசூலுல்லாஹ்!

மஹ்ஷரின் மகிபதியே

       யாரசூலுல்லாஹ் – உங்கள்

மகிமைக்கு ஈடு உண்டோ

       யாரசூலுல்லாஹ்!

மிஃராஜின் நாயகரே

       யாரசூலுல்லாஹ் -உலகின்

மேன்மையதின் தாயகரே

       யாரசூலுல்லாஹ்!

நெஞ்சத்தில் சஞ்சரிக்கும்

       யாரசூலுல்லாஹ் -உங்கள்

பிஞ்சு முகம் காண வேண்டும்

       யாரசூலுல்லாஹ்!

மஞ்சள் உங்கள் ஓர்மையில்

       யாரசூலுல்லாஹ் -உங்கள்

விஞ்சு முகம் காண வேண்டும்

       யாரசூலுல்லாஹ்!

நுபுவ்வத்தின் நுண்ணறிவே

       யாரசூலுல்லாஹ் -தாங்கள்

நுகர்ந்த குணம் ஈமான் வேண்டும்

       யாரசூலுல்லாஹ்!

ஆயுலகில் ஓர் தடைவ

       யாரசூலுல்லாஹ் – உங்கள்

அழகு முகம் காண வேண்டும்

       யாரசூலுல்லாஹ்!

(கல்புக்குள்ளே…)

(நிறைவு)

கலைஞானம் கமழும் காயல் பட்டணம்…

கலைஞானம் கமழும் காயல் பட்டணம்

கடலோரம் வாழும் தீனின் பெட்டகம்

காமில் ஒலியெனப் பார்ப் புகழ்ந்திடும்

கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!(2)

அல்லாஹ்வின் தூதர் நபி

       நற்பின் அண்ணல்

கலீபா அபூபக்கர் மரபின் கன்னல்

எழில் சூழும் பூவாறு

       நூஹு ஒலிப் பேரர் (2)

கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!

       எங்கள்! (2)

இராமேஸ்வரம் தன்னில் ஒளி வீசியே

இலங்கிடும் இறை நேசர்

       இஸ்மாயீல் ஒலி!

மறையாய்ந்த இவரீந்த மைந்தரானவர்

கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!

எங்கள் (2)

வஜீ ஹுத்தீன் ஷெய்கு அவர்

       வழிக் காட்டலின்

வனத்துள் இருந்தே ஏழாண்டுகள்

சுஜூதென்னும் சீரிய தவமாற்றினார்

கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!

       எங்கள்! (2)

கொடிய விலங்குகள் நடுவினிலே

கண்ணுறங்காது கானகத்தின்

       பசி மறந்தே

முடிவில்லான் அல்லாஹ்விடம்

       கசிந் துருகிய

கண்ணின் மணி முத்துவாப்பா ஒலி!

எங்கள்!(2)

விண் மீனை கைக் கொண்

       டழைத்தவுடன்

விளக்கினுள் வைத்து ஒளி ஏற்றினார்

தன் பேரர் ஹாமிது ஆலிம்

       பயம் நீக்கினார் (2)

கண்ணின் மணி முத்துவாப்பா ஒலி!

       எங்கள்! (2)

(கலை ஞானம்…)