அமிர்தக் கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ்…

அமிர்தக் கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ்

அதை அடுத்து ஓதும்

       முஹம்மதுர்ர சூலுல்லாஹ்!

لَا الٰهَ اِلَّا اللهُ  –   جَلَّ الله

مُحَمَّدُ الرَّسُوْ لُ اللهِ –  صَلَّى الله

மனித இனமே மறுமை

       வாழ்வைக் கண்ணாலே –அதை

மகிழ்ச்சியாக கண்டுக்

       கொள்வாய் தன்னாலே!

அழிந்திடுமே இந்த உலகம்

அழியாத பொருளே அந்த உலகம்

அதை அறிந்திருந்தும் ஏன் வீண் கலகம்

நீ அறவே புரியா நபி திலகம்

அறிந்து மனதே முன்னாலே

சுத்தமாக்கி வணக்கம்

       செய்வாய் தன்னாலே!

(மனித இனமே…)

கபுரினிலே உன்னைத் தள்ளி – கரை

மீதினுள் மண்ணை அள்ளி

கை சேதம் சலிப்புமாய் எண்ணி

மதக் கடமை எனும் பல உண்ணி

அடக்குமுன் மனதை முன்னாலே

சுத்தமாக்கி வணக்கம்

செய்வாய் தன்னாலே!

(மனித இனமே…)

முன்கர் -நகீர் உன்னை நோக்கி

முதல் கேள்வி கணக்குகளில் ஆக்கி

அதை மீறினால் உன்னைத் தாக்கி

உமிழ் துண்ண வேதனையில் ஆக்கி

அடக்கு முன் மனதை முன்னாலே

சுத்தமாக்கி வணக்கம்

       செய்வாய் தன்னாலே

மனித இனமே மறுமை

வாழ்வைக் கண்ணாலே

     அதை மகிழ்ச்சியாக கண்டுக்

              கொள்வாய் தன்னாலே!

     (அமிர்தக் கலிமா..)

(நிறைவு)

அருள் முழங்கும் மதினாவில்…

அருள் முழங்கும் மதினாவில்

அமைதிக் கொண்ட இறைத்தூதே

இருள் நிறைந்த எம் நெஞ்சம்

என்றும் தேடும் மஹ்மூதே!

மஹ்மூதே!! மஹ்மூதே!!

மஹ்மூதே!! முஹம்மததே!!

கண்ணிருந்தும் ஒளி யில்லை

       கனி யிருந்தும் சுவை யில்லை

பண்ணிருந்தும் இசை யில்லை

       பறந்து வரவும் வழியில்லை

நபியே! நபியே!!

       நபியே! நபியே!!

பண்ணிருந்தும் இசை யில்லை

       பறந்து வரவும் வழியில்லை

(அருள் முழங்கும் ….)

சிறகிருக்கும் பறவைகளே

நீங்கள் சீக்கிரமாய் செல்லுங்களேன்

பரிதவிக்கும் என் நிலையை

நபி யிடந்தான் சொல்லுங்களேன்

செல்லுங்கள் செல்லுங்கள்

செல்லுங்கள் சொல்லுங்கள்

பரிதவிக்கும் என் நிலையை

நபி யிடந்தான் சொல்லுங்களேன்!!

(அருள் முழங்கும் …)

(நிறைவு)

அன்பின் வடிவாய் வந்த…

அன்பின் வடிவாய் வந்த

       அண்ணல் நபியே

ஆதி இறைத் தூதரென

       நெஞ்சின் ஒலியே!

இன்பம் தேன் மலர் தீன் கனியே

இதயம் மேவிடும் மாமணியே

       என்றும் உமை மறவோம்

       எண்ணி தினம் புகழ்வோம்

எழில் மதினா நகர் மாமதியே!

கன்னல் சுவை மிகும் கனியமுதே

கண்கள் தேடிடும் கலை மதியே

       கொண்டும் மகிழ் புகழ்வோம்

       கொஞ்சும் மொழி மறவோம்

கோமான் நபி நாத ரெங்கள் கோமளமே!

மண்ணில் ஒளி தரும் மாணிக்கமே

மாந்தர் நபிகளின் தாயகமே

       மனம் தினம் மகிழ்வோம்

       மணம் பெறப் புகழ்வோம்

மதி முக ராஜ ரெங்கள்

       மக்க நபியே!

அன்பின் வடிவாய் வந்த

       அண்ணல் நபியே

ஆதி இறைத் தூதரென

நெஞ்சின் ஒலியே!

(நிறைவு)

காலமெல்லாம் உம்மை மதிப்பேன்

காருண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே காலமெல்லாம் உங்களை மதிப்பேன்

ஆதி நாயனின் தூதே
எம்மை ஆதரிக்கும் மஹ்மூதே

காலமெல்லாம் உம்மை மதிப்பேன் – மதிப்பேன்
காத்தமுன் நபி புகழ் இசைப்பேன் – இசைப்பேன்
பாவி நான் கரை சேர நல்ல பாதையை நவிள்வீரே (ஆதி…)

நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவே – நினைவே
கெஞ்சுகிறேன் தங்கள் பரிவை – பரிவை
பஞ்;ச மாபாதகமற்றை விட்டும் அஞ்சி வாழ்ந்திட செய்தீர் (ஆதி…)

காருண்யரே எங்கள் உயிரின் – உயிரே
தாரும்மையா உங்கள் தயவை – தயவை
தீதகன்று வாழ உள்ளத் தூய்மை தந்தருள்வீரே (ஆதி…)

பாச்சொல்லும் தீனின் மகவின் – மகவின்
பாவச் செயல் எல்லாம் மாய – மாய
பண்பாடும் தீனோர் எவர்க்கும்
அல்லாஹ் பாவமறச் செய்வாயே!

ஆதி நாயனின் தூதே
எம்மை ஆதரிக்கும் மஹ்மூதே!
(நிறைவு)

பேர்காலமானபோது …

பேர்காலமானபோது சொர்க்கத்து மாதர்களும்
மலக்குகளும் பட்சிகளும் ஆமினத்தை சூழ்ந்தார்கள்

அவர்களுடைய தஸ்பீஹும் ஓசை சப்தம் தொனிகளையும்
ஆமினத்தும் ஆசையுடன் இன்பமாய் கேட்டார்கள்

அவ்வேளை தன்னில் எங்கள் வள்ளல் முஸ்தபா நபியும்
ஆண்டவனை ஓர்மையாக்கி விரலைக் கொண்டு சாடை செய்தே

தொப்புளும் அறுக்கப்பட்டு, கத்னாவும் செய்யப்பட்டு
தலை எண்ணெய் பூசப்பட்டு கண் சுருமா போடப்பட்டு

கலிமாவை ஓதிக் கொண்டு அழகான சூரத்திலே
ஆதிக்கு சாஷ்டாங்கம் செய்து நபி பிறந்தார்கள் 3

பிறந்தவுடன் தாயாரும் பெற்றதற்கு யாதொன்றும்
அடையாளம் காணாமல் தூய்மையுடன் ஆகிவிட்டார்

நபியுடைய ஓர் ஒளிவு சாமூரு கோட்டைகளை
கண்ணாலே பார்க்க மட்டும் வெளிப்பட்டு நின்றதுகாண்

ஆயிரம் வருடமாக அமராத நெருப்பதுவும்
அஹ்மது பிறந்ததினால் அமர்ந்து நூர்ந்து விட்டதுகாண்

புத்துகளும் அடித்துக் கொண்டு கீழே விழுந்தது காண்
கிஸ்ராவும் போதமாறி தட்டழிந்து போகிவிட்டான்

அவ்வேளை ரப்பில் நின்றும் இந்த நபி தம்மை கொண்டு
அடங்களிலும் சுற்றுமென சப்தத்தை கேட்டார்கள்

அப்போது பூமியிலும் வானநகர் அடங்களிலும்
இமைக் கொட்டி நேரத்திலே மலக்கு சுத்தி மீண்டார்கள்

ஆலத்தார் அடங்கள்களும் ஆண்டவர்கள் பிறந்ததினால்
சந்தோஷமெனும் கடலில் மூழ்கி சுகமெடுத்தார்கள்

மவ்லாய சல்லி வசல்லிம் தாயிமன் அபதன்
அலா ஹபீபிக்க ஹைரில் ஹல்க்கி குல்லிஹிமி

பொல்லா நோயும் நில்லாமல் ஓடும்…

பொல்லா நோயும் நில்லாமல் ஓடும்

உங்கள் நாமம் சொன்னால் போதும்

தீன் சோலைதனில் நோய் தீர்க்கும் எங்கள்

முத்து நகர் வாழும் முத்துமணியே!

நேர்ச்சை வைத்தோம் உங்கள் பேரில்

நாட்டம் நலமாய் ஜெயமடைந்தோம்

 

தீரா நோயை தீர்க்கும் ஒலியே

மாரா அன்பை செய்வீர் நலமே

கல்பின் இருளை மாற்றும் மருந்தாய்

வல்லோன் ரஹ்மான் தந்தான் பரிசாய்

 

நோயில் வாடும் நிலை வேண்டாம்

மெய்யாம் உங்கள் அருள் வேண்டும்

உங்கள்; தலத்தில் எங்கள் கால்கள்

என்றோ பதியும் பொன்னாள் வருமோ

 

செய்கு தாவூது ஒலியின் பொருட்டால்

எல்லா பலாய்களும் அகன்று

உங்கள் அருளால்  எங்கள் பிழைகள்

எல்லாம் பொறுப்பான் வல்லோன் ரஹ்மான்

 

முத்து மொகுதூம் ஒலியின் பொருட்டால்

எல்லா பலாய்களும் அகன்று

உங்கள் அருளால் எங்கள் பிழைகள்

எல்லாம் பொறுப்பான் வல்லோன் ரஹ்மான்

 

ரப்பி வர்ஹம் (F)பஃ(F)பிரன்னா

வஃபு அன்னா வர்லிஹன்னா

வாஸிஅன்னா வர்(Z)ஸுகன்னா

லிஜமீஇல் ஆலமீன

லாயிலாஹா இல்லல்லாஹு

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

யா முஹ்யித்தீன் ஜீலானி

யா முஹ்யித்தீன் ஜீலானி

எம்மை ஆண்டருள்வீர் மஹாராஜரே 2

எங்கள் அஹ்மது நபி திருப்பேரரே 2 (யா முஹ்யித்தீன்)

வாசமல்லிகை முல்லை சூழ் பகுதாத்

அபுசாலிஹின் புத்திரராய் உதித்த 2

நேசமுடன் மங்கை ஃபாத்திமா ஈன்றெடுத்த

தேசம் புகழும் அப்துல் காதிரே 2

விசுவாசம் கமழும் அப்துல் காதிரே 2 (யா முஹ்யித்தீன்)

உங்கள் தரீகினில் காதிரிய்யா – அதில்

உறுதிக் கொண்டு உங்களை புகழ்ந்திடவே 2

பங்கம் வராமலே எங்களைக் காத்தருள்

சிங்கமெனும் அப்துல் காதிரே – ஓர் 2

சிங்கமெனும் அப்துல் காதிரே – பசுந்

தங்கமெனும் அப்துல் காதிரே (யா முஹ்யித்தீன்)

நேசமுடன் இஸ்லாத்தின் தீனை

காத்து நிற்கும் எஜமானரே –என்றும் 2

நாயகரே அடியனே; மிஸ்கினுக்கருள்

நாயகரெனும் அப்துல் காதிரே 2 – எங்கள்

நாயகரெனும் அப்துல் காதிரே  (யா முஹ்யித்தீன்)

ஆசையுடன் புகழ் கீழக்கரை –துதி

அடியேன் செய்யிது முஹம்மதுக்கருள்வீர்

அடியார் எங்களுக்கும் அருள்வீர்

நேசம் தரும் ஜன்னத்துல் பிர்தௌஸ் பதி

சேர்த்திடும் யா அப்துல் காதிரே – சொர்க்கம்

சேர்த்திடும் அப்துல் காதிரே 2 (யாமுஹ்யித்தீன்)