ஏழையாக வாழ்ந்த தேனோ…

ஏழையாக வாழ்ந்த தேனோ…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

Print Friendly, PDF & Email

ஏழையாக வாழ்ந்த தேனோ

       யார சூலுல்லாஹ்

நாளை மஹ்ஷர் வேளை உதவும்

       யா ஹபீபுல்லாஹ்

ஏந்தலராய் தானிருந்தும்

ஏற்றமான வாழ்விருந்தும்

       யா நபியுல்லாஹ்!

எல்லாம் வல்ல இறைவன் தூதே

       எம்மான் முஸ்தஃபாவே

நல்லோர்ப் போற்றும் நபிகட்கரசே

       நாதர் முஸ்தஃபாவே

தொல்லைத் துன்பம் சூழ்ந்த போதும்

தூய வெற்றிக் கண்டீர் நாளும்

       தூதர் முஸ்தஃபாவே!

(ஏழையாகவே…)

அல்லாஹ்வின் அருமை நபியே

       அண்ணல் முஸ்தஃபாவே

அல்லல்களை வாழ்வாய்க் கொண்ட

       அஹ்மத் முஸ்தஃபாவே

அடி வயிற்றில் கல்லைக் கட்டி

அற்புதமாய் பசியை மறைத்தீர்

       ஆற்றல் முஸ்தஃபாவே

(ஏழையாகவே…)

தீனோரின் திருவின் திருவே

       தீனின் முஸ்தஃபாவே

வானோர் வாழ்த்தும் வளர்ப்பே

       வள்ளல் முஸ்தஃபாவே

ஏனோவாழ்வில் இன்னல் கண்டீர்

       ஏகனருள் ஏற்றுக் கொண்டீர்

ஏந்தல் முஸ்தஃபாவே!

(ஏழையாக…)

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.