எல்லா அருளும் நிறைந்தவன் நீ….

எல்லா அருளும் நிறைந்தவன் நீ….

By Sufi Manzil 0 Comment June 24, 2015

Print Friendly, PDF & Email

எல்லா அருளும் நிறைந்தவன் நீ

       எல்லை யில்லா வல்லமை நீ!

வாழும் நாட்க ளெல்லாம்

       வளமாய் நன்றி செலுத்த

வல்லவன் நீயே வையத்தில் துணையே

       பெருந் தன்மையாம் ஙொப்ரானே

புவியோர்க்கு நீ நல்கிடுவாய்!

(எல்லா அருளும்…)

நோய் நொடிகள் நீங்க

       நிலத்தின் கஷ்டம் நீங்க

மண்ணின் மாந்தரிடம்

       நாங்கள் மீள மாட்டோம்

எத்துன்பத்திலும்

       எத்துயரத்திலும்

எம்மை நீயே காத்திடுவாய்!

(எல்லா அருளும்…)

எங்கள் நாட்டத் தேட்டம்

       எளிதில் நுகரச் செய்வாய்

எங்கள் நபி ஏந்தல்

       எழில் குடும்பத் தோழர்

நல் வழித் துயர்ந்தோர்

       நல்லடியார் மீதும்

நிறை ஸலவாத் மொழிந்

       திடுவாய்!

(எல்லா அருளும்…)

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.