Zuha Prayer Dua-ளுஹா தொழுகை துஆ
By Sufi Manzil
லுஹா தொழுகை -துஆ
சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் ளுஹர் தொழுகையின் வக்து வரும் வரை ளுஹாவின் நேரமாகும். ஆனால் பகல் பொழுதின் நான்கில் ஒரு பகுதி சென்றபின் தொழுவது சிறப்பானதாகும். இதை காலை 9 மணி முதல் 11 மணிவரை குறிப்பிடலாம்.
சுவனபதியில் ஒரு நுழைவுவாயிலுக்கு ளுஹா என்று பெயர். ளுஹாத் தொழுகையினைத் தொடர்ந்து தொழுபவர்கள் இவ்வாயிலின் வழியாக நுழைந்து வருமாறு அழைக்கப்படுவார்கள். -நூல்: தப்ரானி.
ளுஹாவின் இரண்டு ரக்அத்துகளை தொடர்ந்து தொழுபவரின் பாவங்கள் கடலின் நுரையளவு(அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும் -அபூதாவூத்.
யா அபாதர்! நீங்கள் இரண்டு ரக்அத்துகள் லுஹா தொழுதால் அல்லாஹ்வை மறந்தோர்களின் அணியில் சேர்க்கப்பட மாட்டீர்கள். நான்கு ரக்அத்துகள் தொழுதால் உபகாரியின் அணியிலும், ஆறு ரக்அத்துகள் தொழுதால் வணக்கசாலிகளின் அணியிலும், எட்டு ரக்அத்துகள் தொழுதால் வெற்றியாளர்கள் அணியிலும் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். பத்து ரக்அத்துகள் தொழுதால் அன்றைய பாவங்கள் எழுதப்படுவதில்லை. பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுதால்' சுவனபதியில் உங்களுக்காக ஒரு மாளிகை எழுப்பப்படும் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்குகள் நமக்கு இத் தொழுகையின் சிறப்பை எடுத்துக் காட்டும்.
முதல் ரக்அத்தில் 'லஸ்ஸம்ஸி வள்ளுஹாஹா' அல்லது 'குல்யாஅய்யுஹல் காபிரூன' சூராவும், இரண்டாம் ரக்அத்தில் 'வள்ளுஹா வல்லைலி' அல்லது 'குல்ஹுவல்லாஹு அஹது' சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.ளுஹா தொழுதபின் கீழ்காணும் துஅவை ஓதுவது மிகச் சிறப்பானதாகும்.
دُعَاء
اَللّٰهُمَّ اِنِّ الضُّحَاءَ ضُحَائُكَ وَالْبَهَاءَ بَهَائُكَ وَالْجَمَالَ جَمَالُكَ وَالْقُوَّةَ قَوَّتُكَ وَالْقُدْرَةَ قُدْرَتُكَ وَالْعِصْمَةَ عِصْمَتُكَ . اَللّٰهُمَّ اِنْ كَانَ رِزْقِىْ فِى السَّمَاءِ فَاَنْزِلْهُ وَاِنْ كَانَ فِى الْاَرْضِ فَاَخْرٍجْهُ وَاِنْ كَانَ مُعْسِرًا فَيَسِّرْهُ وَاِنْ كَانَ حَرَامًا فَطَهِّرْهُ وَاِنْ كَانَ بَعِيْدًا فَقَرِّبْهُ بِحَقِّ ضُحَائِكَ وَبَهَائِكَ وَجَمَالِكَ وَقُدْرَتِكَ اٰتِنَا مَا اٰتَيْتَ عِبَادَكَ الصَّالِحِيْنَ .