Zakat on Shariah- ஜகாத்தின் ஷரீஅத் சட்டங்கள்.
By Sufi Manzil
ஜகாத்.
'இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்குத் தந்ததிலிருந்து செலவளியுங்கள்'-(குர்ஆன் 2:54)
' எந்த செல்வத்திற்கு உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாக (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்கினானே அந்தச் செல்வத்திலிருந்து செலவளியுங்கள்' (குர்ஆன் 57:7)
இஸ்லாத்தின் நான்காவது கடiமாயன 'ஜக்காத்' வறியவர்களும் வாழ வேண்டும் என்பதற்காக வல்ல இறைவனால் வகுக்கப்பட்ட வளமையான பொருளாதாரத் திட்டம் ஆகும். 'ஜகாத்' எனும் அரபிச் சொல்லுக்குத் 'தூய்மை படுத்துதல்' என்று பொருள். செல்வந்தர்கள் சேமிக்கும் நிதியிலிருந்து, இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குகாக வெளளியேற்றப்பட்டாக வேண்டும். இந்த விகிதப்படி செல்வந்தர்கள், ஏழைகளின் உரிமையைத் தம்முடைய உடைமையிலிருந்து வெளியேற்றத் தவறினால் செல்வர்கள் தம்வசம் வைத்திருக்கும் எஞ்சிய 97.5 சதவீதம் நிதியும் தூய்மையை இழந்துவிடுகிறது. இவ்வாறு தூய்மையை இழக்காமல் செல்வந்தர்களின் நிதி முழுவதும் தூய்மையுடன் இருக்க, ஏழைகளுக்கு வழங்கப்படும் இரண்டை சதவீதம் கட்டாயத் த ருமம் துணை செய்வதால் இந்தக் கட்டாயத் தருமத்திற்கு 'ஜகாத்'(தூய்மை படுத்துதல்) என்று வைக்கப்பட்ட பெயர் பொருத்தமாக அமைகிறது.
ஜகாத்தாய் வழங்கிட தகுதிபெறும் பொருட்கள்
1. தங்கம், வெள்ளி அல்லது இவ்விரண்டின் இடத்தை நிரப்பும் 'கரன்சி' நோட்டு போன்ற நாணயங்கள்.
2. வியாபாரப் பொருட்கள்.
3. தானியங்கள் மற்றும் பழவகைகள்.
4. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்.
ஜகாத் வழங்கக் கடமைபட்டவர்களிடம் இருக்க வேண்டிய நிதியின் அளவு:
1. ஜகாத்து நிதி தங்கமாக இருந்தால், 85 கிராமுக்கு; குறையாத அளவு தங்கத்தை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
2. வெள்ளியாக இருந்தால் 595 கிராமுக்கு குறையாத அளவு வெள்ளியை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
3. ரூபாய் நோட்டுகளாக இருந்தால் 85 கிராம் தங்கத்தின் அன்றைய மார்க்கட் விலை என்ன? என்ற விபரத்தைத் தெரிந்து, அந்த விலைக்குக் குறையாத அளவு ரூபாயை ஒருவருடம் முழுவதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
4. ஜகாத்து நிதி வியாபாரப் பொருட்களாக இருந்தால், வியாபாரம் தொடங்கிய நாளிலிருந்து ஒருவருடம் நிறைவு பெற்றவுடன், வியாபாரப் பொருட்களின் விலைப்பட்டியல் தயாரிக்க ப்பட வேண்டும். அப்போது மொத்தப் பொருட்களின் விலைமதிப்பு 85 கிராம் தங்கத்தின் விலை மதிப்பை அடைந்து விட்டால் அந்தப் பொருட்களுக்காக ஜகாத்து கொடுப்பது அவசியம் ஆகும். வியாபாரப் பொருட்கள் ஒருவர், உரிமையாக்கிக் கொண்ட ஆரம்பகட்டத்தில் அவை 85 கிராம் தங்கத்தின் விலை மதிப்பை அடையாமலிருந்தாலும் சரியே, ஒரு வருடத்தின் முடீவில் அவை மேற்கண்ட விலை மதிப்பை அடைந்தால் அதற்கென ஜகாத்து கொடுப்பது அவசியம் ஆகும். வருடத்தின் இடைப்பட்ட நாட்களில் கிடைக்கும் இலாபங்களெல்லாம் மூலதனத்துடன் சேர்க்கப்பட்டு கணிக்கப்படும். எனவே, 25,000 ரூபாய் மூலதனத்துடன் ஒரு வியாபாரத்தை தொடங்கிய ஒருவருக்கு, மாதம் சராசரி 1500 ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்ததென்றால், வருட முடிவில் அவருடைய மொத்த இலாபமாகிய 18000 ரூபாயை 25000 ரூபாயுடன் சேர்த்துக் கூட்டும்போது வரும் 42000 ரூபாய் 85 கிராம் தங்கத்தின் விலையைவிட அதிகமானால் இத்தகையவர் ஜகாத்து கொடுக்க கடமைப்பட்டிருக்கிறார்.
5. உணவாக அமைந்து, வழக்கமாக விரும்பி உண்ணப்படும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களாகவோ, பேரீச்சம் பழமாகவோ, ஜக்காத்துப் பொருட்கள் அமைந்திருந்தால்- அவை உமி, தோல் ஆகியவை நீக்கப்பட்டு சேமிக்கப்படுகிறதா? அல்லது உமி, தோல் ஆகியவை நீக்கப்படாமல் சேமிக்கப்படுகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும். உமி, தோல் போன்றவை நீக்கப்பட்டு; சேமிக்கப்பட்டால் அந்தத் தானியம் 900 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். உமி, தோல் நீக்கப்படாமல் சேமிக்கப்பட்டால் அந்தத் தானியம் 1800 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். எனவே முதல்வகைத் தானியம் 900 லிட்டருக்குக் குறைவாக இருந்தாலோ 2-ம் வகைத் தானியம் 1800 லிட்டருக்குக் குறைவாக இருந்தாலோ அந்தத் தானியத்திலிருந்து ஜகாத் வழங்க வேண்டிய அவசியமில்லை.
6. ஜகாத் நிதி ஆடு, மாடு, போன்ற கால்நடையாக இருக்கும் போது, அவற்றிலிருந்து ஜகாத் வழங்குவது அவசியம் ஆக வேண்டுமானால் 40-க்கு குறையாத ஆடுகளையோ அல்லது 30-க்கு குறையாத மாடுகளையோ ஒருவர் பெற்றிருக்க வேண்டும். 40-க்கு குறைவான ஆடுகளைப் பெற்றிருப்பவர்களும், 30-க்கு குறைவான மாடுகளை வைத்திருப்பவர்களும் ஜகாத்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஜகாத்தாய் வழங்கிடத் தகுதிபெறும் பொருட்களிலிருந்து, ஜகாத்தின் அளவீடுகள்:
1. தங்கத்திலிருந்து வழங்க வேண்டிய ஜகாத்து 2.5 சதவீதம் ஆகும். எனவே ஜகாத்து கடமையான குறைந்தபட்ச அளவாகிய 85 கிராம் தங்கத்தை வைத்திருப்பவர்கள், அதிலிருந்து 2 கிராம் 125 மி. கிராம் தங்கத்தை ஜக்காத்தாக வழங்க வேண்டும்.
2.வெள்ளியிலிருந்து வழங்கவேண்டிய ஜக்காத்தும் 2.5 சதவீதம் ஆகும். எனவே, ஜகாத்து கடiமாயன குறைந்த பட்ச அளவாகிய 595 கிராம் வெள்ளியை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து 14 கிராம் 895 மி.கி வெள்ளியை ஜக்காத்தாக கொடுக்க வேண்டும்.
3.ரூபாய் நோட்டுகளிலிருந்து வழங்கவேண்டிய ஜகாத்தும் 2.5 சதவீதம் ஆகும். எனவே ஜகாத்து கடமையான குறைந்தபட்ச அளவாகிய 85 கிராம் தங்கத்தின் விலைமதிப்பு பெற்ற ரூபாயை வைத்திருப்பவர்கள், அதிலிரு:ந்து 2 கிராம் 25 மி.கிராம் தங்கத்தின் விலை மதிப்புள்ள ரூபாயை ஜகாத்தாக வழங்க வேண்டும்.
4. வியாபாரப் பொருட்களிலிருந்து வழங்க வேண்டிய ஜகாத்தும் 2.5 சதவீதம் ஆகும். எனவே ஜக்காத்து கடமையான குறைந்தபட்ச அளவாகிய 85 கிராம் தங்கதத்தின் விலைமதிப்புடைய வியாபாரப் பொருட்களை வருடக் கடைசியில் வைத்திருப்பவர்கள், அதிலிருந்து 2 கிராம் 125 மி.கிராம் தங்கத்தின் விலைமதிப்புள்ள வியாபாரப் பொருட்களின் விலையை ஜகாத்தாக வழங்க வேண்டும்.
5. தானியங்கள் முளைத்து வளர்வதற்காகப் பொருட் செலவின்றி நீர்ப்பாசனம் செய்யப்பட்டால்-(அதாவது, மழை நீரினால் பயிர் முறைத்தல்) அத்தகைய தானியங்களில் 900 லிட்டர் தானியத்தை வைத்திருப்பவர்கள் 90 லிட்டர் (1ஃ10) தானியத்தை ஜக்காத்தாக வழங்க வேண்டும். அதே நேரத்தில் தானியங்கள் முளைப்பதாகப் பொருட் செலவுடன் நீர்ப்பாசனம் செய்யப்பட்டால் (அதாவது பம்பு செட் வைத்து தானியங்களுக்கு நீர்ப்பாய்ச்சினால்) அத்தகைய தானியங்களில் 900 லிட்டர் தானியத்தை வைத்திருப்பவர்கள் 45 லிட்டர் (1ஃ20) தானியத்தை ஜக்காத்தாக வழங்க வேண்டும்.
6. ஆடுகளிலிருந்து ஜக்காத்து வழங்குபவர்கள் 40 முதல் 120 வரையுள்ள ஆடுகளைக் கைவசம் வைத்திருந்தால் அவற்றிலிருந்து ஒரு ஆட்டையும், 121 முதல் 200 வரையுள்ள ஆடுகளைக் கைவசம் வைத்திருந்தால் அவற்றிலிருந்து 2 ஆடுகளையும், 201 முதல் 39 வரையுள்ள ஆடுகளைக் கைவசம் வைத்திருந்தால் 3 ஆடுகளையும், 400 முதல் 499 வரையுள்ள ஆடுகுளைக் கைவசம் வைத்திருந்தால் 4 ஆடுகளையும் அதற்குமேல் ஒவ்வொரு நூறுக்கும் ஒரு ஆட்டையும் ஜக்காத்தாக வழங்க வேண்டும்.
7. மாடுகளிலிருந்து ஜக்காத்து வழங்குபவர்கள் 30 முதல் 39 வரையுள்ள மாடுகளைக் கைவசம் வைத்திருந்தால், அவற்றிலிருந்து ஒரு வயதுள்ள ஒரு கன்றையும், 4 முதல் 59 வரையுள்ள மாடுகளைக் கைவசம் வைத்திருப்பவர்கள் 2 வயதுள்ள இளம் பசுவையும், 60 மாடுகளைக் கைவசம் வைத்திருப்பவர்கள் ஒர வயதுள்ள 2 கன்றுகளையும், பிறகு ஒவ்வொரு 30 மாடுகளுக்கும் ஒரு வயதுள்ள ஒரு கன்று வீதமும், ஒவ்வொரு 40 மாடுகளுக்கும் 2 வயதுள்ள ஒரு இளம் பசு வீதமும் ஜக்காத்தாக கொடுக்க வேண்டும். இவற்றில் இரண்டு அளவுகளுக்கு இடைப்பட்ட எண்களுக்கு கணக்குப் பார்க்க வேண்டாம்.
ஜக்காத்துப் பெற்றிட தகுதி வாய்ந்தவர்கள்:
1. எவ்வித வருமானமுமில்லாத பரம ஏழைகள் (பக்கீர்)
2. வருமானத்தை விட செலவினங்கள் விஞ்சிய ஏழைகள் (மிஸ்கீன்)
3. ஜக்காத்து நிதியின் வசூலர்களாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.
4. புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்.
5. அடிமைகளை விடுதலை செய்தல்
6. கடனில் மூழ்கித் தவிப்பவர்கள்.
7. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவோர்.
8. வழிப்போக்கர்கள் ஆகிய எட்டு வகையினர்.
இந்த எட்டுக் கூட்டத்தாரைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்தால் ஜக்காத்து செல்லாது.