யா சுல்தானுல் ஆரிஃபீன் துஆ(தமிழ் பொருளுடன்)-Ya Sulthanul Arifeen Dua

யா சுல்தானுல் ஆரிஃபீன் துஆ(தமிழ் பொருளுடன்)-Ya Sulthanul Arifeen Dua

By Sufi Manzil 0 Comment April 22, 2011

Print Friendly, PDF & Email

யா சுல்தானல் ஆரிஃபீன்- ஹே ஞானிகளுக்கு அரசரே!

யா தாஜல் முஹக்கிகீன்- உருவான பொருள் தருவோரின் மகுடமே!

யா சாகியல் ஹுமய்யா- கோபம் தணிப்பவரே! ஞானமது புகட்டுபவரே!

யா ஜமீலல் முஹய்யா- வதன சுந்தரரே!

யா பரக்கத்தல் அனாம்- மனிதர்களின் அபிவிருத்தியே!

யா மிஸ்பாஹழ்ழளாம்- இருள் நீக்கும் ஒளிவிளக்கே!

யா ஷம்ஸு பிலா அஃபல்- நிலவில்லாத கதிரவனே!

யா துர்ரு பிலா மதல்- நிகரில்லா முத்தே!

யப பத்ரு பிலா கபல்-மருவில்லாப் பௌர்ணமியே!

யா பஹ்ரு பிளா தரஃப்- கரை காணமுடியாத கடலே!

யா பாஜுல் அஸ்ஹப்- சுடர் வீசும் பறவையே!(அஞ்சா நெஞ்சமான தீரமானவரே!)

யா ஃபாரிஜல் குரப்- இடர் மாற்றும் அமானமே!

யாகௌதுல் அஃலம்- பெருமதிப்பிற்குரிய இரட்சகரே!

யா வாஸிஅல் கரம்-கொடை வள்ளலே!

யா கன்ஜல் ஹகாயிக்-இரகசியங்கள் நிறைந்த பொக்கிஷமே!

யா மஃதினத் தகாயிகு-நுட்பத்தின் உறைவிடமே! சுரங்கமே!

யா வாஸித ஸில்கி வஸ்ஸுலூக்- நல்வழிகளுக்கு நடுநாயகமே!

யா ஸாஹிபல் முல்கி வல் முலூகி-ஆதிக்கமும் அரசாங்கமும் உடையவரே!

யாஷம்ஸ ஸுமூஸி-கதிரவனுக்கெல்லாம் கதிரவனே!

யாஜஹரத்தன் னுஃபூஸ்-சுவாஸோ சுவாசத்தின் சுக்கிரனே!

யா ஹாதியன்னஸம்-இனிய தென்றல் காற்றின் பக்கம் வழிகாட்டுபவரே!

யா முஹிய்ய ரிமம்-இத்துப் போன எலும்பையும் கூட உயிர்ப்பிப்பவரே!

யா ஆளியல் ஹிமம்-முயற்சிகளின் உச்சமே!

யா நாமூஸல் உமம்-உம்மத்துக்களின் மெச்சமே!

யா ஹுஜ்ஜத்தல் ஆஸிக்கீன்- காதலர்களின் ஆதாரமே!

யா ஸுல்தானல் வாஸிலீன்- விதேய முக்தர்களுக்கரசரே!

யா வாரிதல் முஹ்தார்-தெரிந்தெடுக்கப்பட்ட நாயகத்தின் அனந்தரமே!

யா ஹஜானத்தல் அஸ்ரார்-இரகசியங்களின் பொக்கிஷமே!

யா முப்திய ஜமாலில்லாஹ்-அல்லாஹ்வின் அழகை அம்பலப்படுத்துபவரே!

யா நாயிப ரஸூலில்லாஹ்-இறைத்தூதரின் பிரதிநிதியே!

யா கபிதல் முஸ்தஃபா-தூய நபியின் ஈரல்குலையே!

யா ஸாஹிபல் வஃபா-வாக்கு நாணயமுள்ளவரே!

யா ஸிர்ரல் முர்தளா-திருப் பொருத்தம் பெற்றவரின் திருவுள்ளமே!

யா நூறல் முஜ்தபா- தெரிந்தெடுக்கப்பட்டவரின் ஒளியே!

யா குர்ரத்தல் உயூன்-ஞானக் கண்களின் குளிர்ச்சியே!

யாதல் வஜ்ஹில் மைமூன்-அச்சம் தீர்ந்த திருமுகம் உடையவரே!

யாதஸ் ஸலாஹில் அஹ்வால்-பதஷ்ட நிலைகளையும் இணக்குபவரே!

யா ஸாதிகல் அக்வால்-வாக்கில் உண்மையாளரே!

யா ஸைஃபல்லாஹில் மஸ்லூல்-வீச்சின் மேல் வீச்சாக வீசப்படும் அல்லாஹ்வின் வாளே!

யா தமரத்தல் பத்தூல்-மாதர்க்கரசியின் கனியே! 

யா அர்ஹமன்னாஸ்-மனித சமூகத்திற்கிரங்கும் தயாளரே!

யா முத்ஹிபல் பஃஸ்-துன்பம் துடைப்பவரே!

யா மிஃப்தாஹல் குனூஜ்-இன்ப ஞானப்பொக்கிஷத்தின் திறவுகோலே!

யா மஃதினர் ருமூஜ்-வாக்கு வன்மை ஊறி வரும் சுரங்கமே!

யா கஃபத்தல் வாஸிலீன்-விதேக முக்தர்களின் தலைமை பீடமே!

யா கிப்லத்தல் முவஹ்ஹிதீன்-அத்வைதிகளின் திருமுகமே!

யா முர்ஷிதத் தாலிபீன்-தேட்டமுள்ளவர் நாட்டப்படி சேர்ப்பவரே!

யா முஹ்ஜிலல் மத்தர்- விளைவு தரும் மழையே!

யா முஹ்ஸினல் பஷர்-எளிமையான மனுகுலத்திற்கு இனியவை செய்பவரே!

யா குவ்வத்தல் ளுஅஃபர்-இயலாமைக்காரர்களின் வலுவே!

யா மல்ஜாஅல் குரபா-இல்லாமைக்காரர்களின் ஒதுங்குமிடமே!

யா இமாமல் முத்தகீன்-இரண்டாய்க் காண பயந்தோரின் இமாமே!(மனதை சரியவிடாமல் தியானித்தோரின் இமாமே!)

யா ஸஃப்வத்தல் ஆபிதீன்- வழிப்பட்டோரின் தெளிவே!

யா கவியல் அர்கான்- தீனின் தூணைப் பலப்படுத்துவோரே!

யா ஹபீபர் ரஹ்மான்-தீPனோருக்கும் வீணோருக்கும் இரங்கும் தயாளுவின் நேசரே!

யா முஹிய்யல் கலாமில் கதீம்-பூர்வீக வாக்கை உயிர்ப்பிப்பவரே!

யா ஷிபாஅஸ் ஸகாமில் முகீம்-நிரந்தரமான நோய்க்குங் கூட நிவாரணமானவரே!

யா அத்கல் அத்கியா- பேணுதலுள்ளவர்களையெல்லோரையும் விட மிக பேணுதலானவரே!

யா அஸ்ஃபல் அஸ்ஃபியா- தெளிவடைந்தவர்களிலெல்லாம் மிகத் தெளிவடைந்தவரே!

யா நாரல்லாஹில் மூக்கத-மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பே!

யா ஹயாத்தல் அஃப்யிதா-இதயங்களின் ஜீவனே!

யா ஷெய்கல் குல்லி-பரிபூரண ஞானகுருவே!

யா தலீலஸ் ஸுபுலி-எல்லா வழிகட்கும் ஆதாரமே!

யா நகீபல் மஹபூபீன்-அன்பர்கட்கு இனியவரே!

யா மக்ஸூதஸ் ஸாலிகீன்-அன்பு மார்க்கம் நடப்பவரின் நாட்டமே!

யா கரீமத் தரஃபைன்-இகத்திலும் பரத்திலும் கொடை கொடுக்கும் வள்ளலே!

யா உம்தத்தல் ஃபரீகைன்-துவைதம், அத்வைதம்களுக்கு முக்கியமானவரே!

யா காழியல்' குளாத-நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதியே!

யா முஃபத்திஹல் முக்லகாத்தி-தீராப் பிரச்சனைகளைத் தீர்ப்பவரே!

யா  ஹாயித்தல் அஸ்யாயி-எல்லா வஸ்த்துகளையும் சூழ்ந்தவரே!

யா நூரல் மலாயி-சற்ஜனங்களின் பிரகாசமே!

யா முன்தஹல் அமல் ஹீன யன்கத்திஉல் அமல்- கதி முட்டிய வேளையிலும் விதியே நடக்கும் என்ற மேலெண்ணத்தின் (முடிவே) ஆதாரமே!

யா ஸெய்யிதஸ் ஸாதாத்-நாயகர்க்கெல்லாம் நாயகமே!

யா மன்பஅஸ் ஸஆதாத்-நற்பாக்கியத்தின் உறைவிடமே! ஊற்றே!

யா ளியாஅஸ் ஸமாவாத்தி வல் அர்ளீன்-ஞான வானங்களுக்கும் பூமிகளுக்கும் உள்ள வெளிச்சமே!

யா காமூஸல் வாயிழீன்-ஞான உபதேசிகளின் சமுத்திரமே!

யா கௌதுல் வரா-பரம துரோகிகளையும் இரட்சிப்பவரே!

யா குத்வத்தரஸ்ஸரா-ஆசனா சக்தியே! அகமிய சக்தியே!

யா ஜமீலல் பவாயிது-உபயோகத்திற்குள்ள உள்ளழகே!

யா முன்ஜிபிஸ்ஸதாயிதி- ஊழ்வினைத் துன்பத்திலும் ஈடேற்றம் செய்பவரே!

யா பஹ்ரஷ் ஷரீஆ-சரியையின் சாகரமே!

யா சுல்தானத் தரீகா-கிரியையின் அதிகாரமே!

யா புர்கானல் ஹகீகா-யோகத்தின் ஆதாரமே!

யா நூரல் மஃரிபா-ஞானத்தின் உள்பொருளே!

யா காஸிஃபல் அஸ்ராhர்-மறை பொருளை வெளியாக்குபவரே!

யா காஃபிரல் அவ்ஜார்-மறந்து செய்த தவறுகளை மன்னிப்பவரே!

யா திராஜல் அவ்லியா-இறைநேசச் செம்மல்களின் நிதானமே!

யா அளுதல் ஃபுகரா-ஏழைகளுக்கு ஆதரவு கொடுக்கும் முன்கையே!

யாதல் அஹ்வாலில் அளீமத்தி-மகத்தான மேம்பாட்டை உடையவரே!

யாதல் அவ்ஷாபி ரஹீம-இரக்கமுள்ள பண்புள்ளவரே!

யாதல் மக்ரூமாத்தில் ஜலிய்யா-வெளிரங்கமான-பகிரங்கமான சங்கையானவரே!

யா மத்ஹபல் ஹன்பலிய்யா-இமாம் ஹன்பலிக்கு துணை நின்றவரே!

யா இமாமல் அயிம்ம-இமாம்களுக்கெல்லாம் இமாமே!

யா ஃபாத்திஹல் முஸ்கிலாத-கஷ்ட நிவாரணியே!

யா மக்பூல ரப்பில் ஜினான்-சுவனாபதியின் சம்மதரே!

யா ஜலீஸர் ரஹ்மான்-பரம தயாளுவை அடுத்திருப்பவரே!

யா மஷ்ஹூர் மின் ஜீலான்-ஜெய்லானின் பிரஸ்தாபரே!

யா ஷாஹ்  யா ஸிர்ரல்லாஹ்-அல்லாஹ்வின் அந்தரங்கம் என்ற அரசே!

யா அஃபிஃபு யா ஷரீஃபு–மாசற்ற தூய்மையான வள்ளலே!

யா தக்கியு  யா நகியு-வாய்மையே! வனப்பு மிக்கவரே!

யா சதீக் யா சித்தீக்- உண்மையானவரே!உதாரமதியே!

யா ஆஷிகு யா மஃஸூக்- காதலரே! காதலிக்கப்படுபவரே!

யா குத்பல் அக்தாப்-நடுநாயகமே!

யா ஃபர்தல் அஹ்பாப்-நண்பர்களில் விசேஷமானவரே!

யா செய்யிதீ-எம் தலைவரே!

யா ஸனதீ-எம் ஆதாரமே!

யா மவ்லாயீ-என் எஜமானே!

யா ஃபுஆதீ-என்னை நிலை நிறுத்துபவரே!

யா கௌனீ-என் உதவிக் கண்ணே!

யா கியாதீ-என்கதியே!

யா ராஹத்தீ-ஆனந்தமே!

யா ஃபாரிஜல் குர்பத்தீ-என் துயரம் நீக்குபவரே!

யா ளியாய்யி- எனது உட்பிரகாசமே!

யா ஷிஃபாஈ-என் நிவாரணியே!

யா காழியல் ஹாஜாதி-என் நாட்டம் நிறைவேற்றுபவரே!

யா சுல்தான் முஹ்யித்தீன் யா அப்தல்காதிர்-சர்வாஸன ஒளியே! வல்லமையுடையவரே!

யா நூரஸ்ஸராயிர் யா ஸாஹிபல் குத்ரதி- திருநோக்கு அருள்பவரே! எனது உட்பிரகாசமே!

யா வாஹிபன் னள்ர யா மன் ளஹர ஸிர்ருஹு ஃபித்துன்யா வல் ஆஹிரா -இகத்திலும் பரத்திலும் தன் இரகசியத்தை வெளிப்படுத்துபவரே! எங்களுக்கு இறங்குவீராக!

அல்லாஹும்ம இன்னீ நஸ்அலுக்க அன் துஹ்யிய குலூபனா பிநூரி மக்ரிஃபதிக அபதன் கமா துஹ்யித்தீன்-
இறைவா! தீனை ஹயாத்தாக்கியது போல் உன்னையறியும் ஞானப் பிரகாசம் கொண்டு எப்போதும் எங்கள் இதயத்தை ஹயாத்தாக்க வேண்டுகிறேன்.

யா முஹ்யியத்தீன் யா சுல்தான் யா ஜமிஅ அன்வாரி ரஹ்மான் யா வாஹிது  யா குத்பல் இர்ஃபான் உன்ளுர் இலைனா பிஅய்னல் இனாயா யா ஸிர்ரல் இஹ்ஸான் உம்துத்னா யா ஷரீஅல்லுத்ஃப்-

ஹே தயாள பிரகாசங்களை ஒன்று சேர்ப்பவரே! ஞான மணி முத்தான ஏகனே! ஹே! மனித ரகசியமே! ஒரு கண் பார்ப்பீராக! ஹே முஹ்யித்தீன் அதிகாரமே! அல்லாஹ்வின்பால் அல்லாஹ்வின் உதவியால் அதிவேகம் கிருபை செய்யும் மின்சாரமே! வேகமானவரே! எமக்கு உதவி செய்வீராக!        

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ.

اَلْحَمْدُلِلهِ رَبِّ الْعَالمِيْنْ حَمْدًا يُّوافِي نِعْمَهُ وَيكَافِي مَزِيْدَهُ. اَلّٰلهُمَّ صَلِّ وَسَلِّمْ وَباَرِكْ وَكَرِّمْ عَليٰ رَسُوْلِكَ سَيِّدِنَا وَنبِيِّنَا وَمَوْلٰنَا مُحَمَّدٍ وَعَليٰ اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ*اٰمِيْنَ يَاسُلْطاَنَ الْعاَرِفِيْنَ’ ياَتاَجَ الْمُحَقِّقِيْنْ’يَا شَاقِيَ الْحُمَيَّا’ يَاجَمِيْلَ الْمُحَيَّا’ يَابَرَكَةَ اْلاَ نَامِ’ يَامِصْبَاحَ الظَّلاَمِ’ ياَشَمْسُ بِلاَ اَفَلْ’ ياَدُرُّبِلاَ مَثَلْ’ ياَبَدْرُ بِلاَ كَلَفْ’ ياَبَحْرُبِلاَ طَرَفْ’ ياَبَازُالْاَشْهَبُ’ ياَفَارِجَ الْكُرَبِ’يَاغَوْثُ الْاَعْظَمْ’ ياَوَاسِعَ الْكَرَمِ’ يَاكَنْزَالْحَقَائِقِ’ يَامَعْدِنَ الدَّقَائِقِ’ يَا وَاسِطَ السِّلْكِ وَالسُّلُوْكِ’ يَاصَاحِبَ الْمُلْكِ وَالْمُلُوْكِ’ يَاشَمْسَ الشُّمُوْسِ’ ياَزَهْرَةَالنُّفُوْسِ’ ياَ هاَدِيَ النَّسَمِ’ يَامُحْيِيَ الرِّمَمْ’ يَاعَالِيَ الْهِمَمِ’ يَانَامُوْسَ الْاُمَمِ’ يَاحُجَّةَّ الْعَاشِقِيْنَ ’ يَاسُلْطَانَ الْوَاصِلِيْنَ’ يَاوَارِثَ الْمُخْتَارِ’ يَاخَزَانَةَ الْاَسْرَارِ’ يَامُبْدِأَ جَمَالِ الله’ يَانَائِبَ رَسُوْلِ اللهِ’ يَاكَبِدَ الْمُصْطَفٰي’ يَاصاَحِبَ الْوَفٰي’ يَاسِرَّ الْمُرْتَضٰي’ يَاقُرَّةَالْعُيُوْنِ’ يَاذَالْوَجْهِ الْمَيْمُوْنْ’ يَاذَا الصَّلاَحِ الْاَحْوَالِ’ يَاصَادِقَ الْاَقْوَالِ’ يَاسَيْفَ اللهِ الْمَسْلُوْلَ’ يَاثَمَرَةَالْبَتُوْلِ ’ يَااَرْحَمَ النَّاسِ’ يَامُذْهِبَ الْبَأْسِ’ يَامِفْتَاحَ الْكُنُوْزِ’ يَامَعْدِنَ الرُّمُوْزِ’ يَاكَعْبَةَ الْوَاصِلِيْنَ’ يَاقِبْلَةَ الْمُوَحِّدِيْنْ’ يَامُرْشِدَ الطَّالِبِيْنَ’ يَامُخْجِلَ الْمَطَرِ’ يَا مُحْسِنَ الْبَشَرِ’يَاقُوَّةَ الضُّعَفَاءِ’ يَامَلْجَأَ الْغُرَبَاءِ’ يَااِمَامَ الْمُتَّقِيْنَ’ يَاصَفْوَةَالْعَابِدِيْنَ’ يَاقَوِيَّ الْاَرْكَانِ’ يَاحَبِيْبَ الرَّحْمٰنِ’ يَامُحْيِيَ الْكَلاَمِ الْقَدِيْمِ’ يَاشِفَاءَ السَّقَامِ الْمُقِيْمِ’ يَااَتْقَي الْاَتْقِيَاءِ’ يَااَصْفَي الْاَصْفِيَاءِ’ يَانَارَاللهِ الْمُوْقَدَةَ’يَاحَيٰوةَالْاَفْئِدَةِ’ يَاشَيْخَ الْكُلِّ’ يَادَلِيْلَ السُّبْلِ’يَانَقِيْبَ الْمَحَبُوْبِيْنَ’ يَامَقْصُوْدَ السَّالِكِيْنَ’يَاكَرِيْمَ الطَّرَفَيْنِ’ يَاعُمْدَةَ الْفَرِيْقَيْنِ’يَا قَاضِيَ الْقُضَاةِ’يَامُفَتِّحَ الْمُغْلَقَاتِ’يَاحَائِطَ الْاَشْيَاءِ’ يَانُوْرَ الْمَلاَءِ’ يَامُنْتَهَي الْاَمَلِ’حِيْنَ يَنْقَطِعُ الْعَمَلُ’ يَاسَيِّدَالسَّادَاتِ’ يَامَنْبَعَ السَّعَادَاتِ’ يَاضِيَاءَ السَّمَوَاتِ وَالْاَرْضِيْنَ’ يَاقَامُوْسَ الْوَاعِظِيْنَ’ يَاغَوْثَ الْوَرٰي’ يَاقُدْوَةَ السَّرٰي’يَاحَبْلَ الْقَلَائِدِ’يَامُنَجِّيْ فِي الشَّدَائِدِ’ يَابَحْرَ الشَّرِيْعَةِ’ يَاسُلْطَانَ الطَّرِيْقَةِ’ يَابُرْهَانَ الْحَقِيْقَةِ’ يَانُوْرَالْمَعْرِفَةِ’ يَاكَاشِفَ الْاَسْرَارِ’يَاغَافِرَالْاَوْزَارِ’يَاطِرَازَالْاَوْلِيَاءِ’ يَا عَضُدَالْفُقَرَاءِ’ يَاذَا الْاَحْوَالِ الْعَظِيْمَةِ’ يَاذَا الْاَوْصَافِ الرَّحِيْمَةِ’ يَاذَا الْمَكْرُمَاتِ الْجَلِيَّةِ’ يَامَذْهَبَ الْحَنْبَلِيَّةِ’ يَااِمَامَ الْاَئِمَّةِ’ يَافَاتِحَ الْمُشْكِلاَتِ’ يَامَقْبُوْلَ رَبِّ الْجِنَانِ’ يَاجَلِيْسَ الرَّحْمَانِ’ يَامَشْهُوْرُ مِنْ جِيْلاَنِ’ يَاشَاهُ’يَاسِرَّاللهْ’ يَاعَفِيْفُ’ يَاشَرِيْفُ’يَاتَقِيُّ’يَا نَقِيُّ’ يَافَرْدُ’يَاصَمَدُ’ يَاصَدِيْقُ’ يَامَعْشُوْقُ’ يَاقُطْبَ الْاَقْطَابِ’ يَافَرْدَالْاَحْبَابِ’ يَاسَيِّدِيْ’ يَاسَنَدِيْ’ يَا مَوْلآئيِ’ يَافُؤَادِيْ’ يَاغَوْنِيْ’يَاغَوْثِي’ يَاغِيَاثِي’ يَارَاحَتِيْ’ يَافَارِجَ كُرْبَتِيْ’ يَاضِيَاءِيْ’ يَاشِفَائِيْ’ يَاقَاضِيَ الْحَاجَاتِ’ يَاسُلْطَانْ مُحْيِ الدِّيْنِ’ يَاعَبْدَالْقَادِرِ’ يَانُوْرَ السَّرَائِرِ’ يَاصَاحِبَ الْقُدْرَةِ’ يَاوَاهِبَ النَّظْرَةِ’ يَامَنْ ظَهَرَ سِرُّهُ فِي الدُّنْيَا  وَالْاٰخِرَةِ’نَسْئَلُكَ اَنْ تُحْيِيَ قُلُوْبَنَا بِنُوْرِ  مَعْرِفَتِكَ اَبَدًا كَمَا تُحْيِ الدِّيْنَ 3 يَامُحْيِيَ الدِّيْنِ ’ يَاسُلْطَانُ’ يَاجَامِعَ اَنْوَارِ الرَّحْمَانِ’ يَاوَاحِدُ’يَاقُطْبَ الْعِرْفَانِ’ اُنْظُرْ اِلَيْنَا بِعَيْنِ الْعِنَايَةِ’ يَاسِرَّالْاِحْسَانِ’ اُمْدُدْنَا يَاسَرِيْعَ الُّلطْفِ’ يَااللهُ يَااللهُ يَااللهُ يَارَحْمٰنُ يَارَحْمٰنُ يَارَحْمٰنُ يَارَحِيْمُ يَارَحِيْمُ يَارَحِيْمُ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ. وَصَلَّي للهُ وَسَلَّمَ عَلٰي خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُللهِ رَبِّ الْعَالَمِيْنَ.