Tasbeeh Prayer-தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்!
By Sufi Manzil
தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரம்:
இறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்:-
எனது சிறிய தந்தையார் அவர்களே, பத்துவகை பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்ற ஒரு நற்செயலை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதை நீங்கள் செய்தால் 1.முன்பாவங்கள் 2.பின்பாவங்கள் 3. பழைய பாவங்கள் 4. புதிய பாவங்கள் 5. தவறுதலாக செய்த பாவங்கள் 6. வேண்டுமென்றே செய்த பாவங்கள் 7. சிறிய வாகங்கள் 8. பெரிய பாவங்கள் 9. ரகசியமாக செய்த பாவங்கள் 10 பகிரங்கமாக செய்த பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து ஸூரா இன்னும் லம்மு ஸூராவை ஓதியபின் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்பதை 15 தடவை, ருகூவில் 10 தடவை, நிலையில் 10 தடவை, முதல் ஸஜ்தாவில் 10 தடவை, சிறு இருப்பில் 10 தடவை, இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவை பின்பு எழுந்து 10 தடவைகள் கூற வேண்டும். முடிந்தால் இத்தொழுகையை ஒரு நாளைக்கு ஒருமுறை தொழுங்கள். இயலாவிடில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை தொழுங்கள். அதற்கும் முடியாவிட்டால் ஆயுளில் ஒரு முறையாவது தொழுது கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.