முஹம்மத் அப்துல் அலீம் சித்தீகி (மீரட் மௌலானா) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.

 

பெயர்: முஹம்மது அப்துல் அலீம் சித்தீகி

குலமும் கோத்திரமும்: முதலாம் கலீஃபா ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்  வழித் தோன்றலாக தந்தையார் மூலமாக 36 வது தலைமுறையிலும், தாயார் மூலமாக 32வது தலைமுறையிலும் வந்துதித்தார்கள்.

தந்தையின் பெயர்: ஹழ்ரத் மௌலானா முஃப்தி அப்துல் ஹக்கீம் ஜோஷ் சித்தீகி காதிரி.

பிறந்த தேதி:  ஹிஜ்ரி 1310 ரமலான் பிறை 15 திங்கள் கிழமை. (03-04-1893)

வளர்ப்பும் கல்வியும்: அரபி, உருது, ஃபார்ஸி வீட்டிலேயே தம் தந்தையாரிடம் கற்றார்கள். தமது ஏழாம் வயதிலேயே முழுகுர்ஆனையும் சிறப்பாக மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றனர். அதற்குப் பின் மத்ரஸா அரபியா இஸ்லாமிய்யாவில் சேர்ந்து படித்தார்கள். தந்தையார் மறைவிற்குப்பின் தாயாரும், பின்பு அன்னாரின் மூத்த சகோதரர் மௌலானா முக்தார் அஹ்மத் சித்தீகியின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

பட்ட மேற்படிப்பு: மத்ரஸா அரபியாவில் மௌலவி ஆலிம் என்ற பட்டத்தை ஹிஜ்ரி 1326ல் பெற்றார்கள். பின் ஆங்கிலக் கல்லூhயிpல் சேர்ந்து பி.ஏ. பட்டமும், அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் எல்.ஹெச்.பி. என்ற வழக்கறிஞர் பட்டமும் பெற்றார்கள். பின் ஹக்கீம் இஹ்திஷாமுத்தீன் அவர்களிடம் யூனானி வைத்திய முறையைக் கற்றுத் தேர்ந்தார்கள்.

ஆசிரியர்கள்: முஃப்தி அப்துல் ஹக்கீம் ஜோஷ் சித்தீகி, மௌலானா முக்தார் சித்தீகி, ஹழ்ரத் மௌலானா அஹ்மத் ரிழா கான் பாழில் பரேல்வி.

ஹதீது கலையில் இஜாஸத் எனும் அனுமதி: ஹிஜ்ரி 1332 துல்ஹஜ் பிறை 19 ல் சிஹாஹ் சித்தா என்ற சஹீஹான 6 கிரந்தங்களின் ரிவாயத்துகளுக்கு இஜாஸத் என்ற அனுமதியை ஆலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் அவர்களிடம் பெற்றார்கள்.

பைஅத்:

தமது மூத்த சகோதரர் முக்தார் சித்தீகியிடம் பைஅத்தும், கிலாபத்தும், அஹ்லு பைத்தைச் சார்ந்த ஷெய்குல் மஷாயிக் ஹழ்ரத் செய்யிது ஷாஹ் முஹம்மது அலீ ஹுஸைன் அஷ்ரஃபி ஜீலானி கசோச்சவி அஷ்ரஃபி மியான் அவர்களிடம் கிலாபத்தும் பெற்றார்கள். மேலும் பரேல்வி அஃலா ஹழ்ரத் அவர்களின் பிரதான கலீபாவாகவும் திகழ்ந்தார்கள்.

கற்ற மொழிகள்:

உலகின் முக்கிய 16 மொழிகளில் பாண்டித்துவம் பெற்றிருந்தார்கள். அவைகள்: உருது, அரபி, பார்ஸி, இந்தோநேஷி, ஆங்கிலம், ஜப்பானி, ஜெர்மன், சீன மொழி, டச்சு, ஸவாஹிலி(ஆப்பிரிக்க பாஷை), பிராசிலா, மலாய், ஹிந்தி, சிங்களம் போன்றவைகள். அவற்றில் சில பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் (ழுசநைவெயட டுயபெரயபநள) பன்மொழி பன்னாட்டு மொழிகளில் முனைவர் -டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

கலீஃபாக்கள்: 

பல்லாயிரக்கணக்கான முரீதுகளை பெற்றிருந்தார்கள். குறிப்பாக மொரிஷியஸ் தீவில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹழ்ரத் அவர்களின் முரீதுகளும் மாணவர்களுமாக இருந்தார்கள். பல கலீபாக்கள் இருந்தாலும் மௌலானா ஷாஹ் அஹ்மது நூரானி சித்தீகி (ஹழ்ரத் அவர்களின் மகனார்), டாக்டர் பழ்லுர் ரஹ்மான் அன்சார், மௌலானா முப்தி பழ்ளுர் ரஹ்மான் ரஹ்மானி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இஸ்லாமிய தஃவத்து பணி:

சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள், கிறித்துவர்கள், நாத்திகர்கள் போன்றோரை தம் நன்னடத்தையால் ஹக்கான மார்க்கத்தை எடுத்து வைத்து இஸ்லாத்தைத் தழுவச் செய்தார்கள். 

பற்பல நாடுகளில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தும், நூலகங்களை அமைத்தும், அனாதை இல்லங்கள், மருத்துவ மனைகள் ஆங்காங்கே மக்களுக்காக தேவைப்படும் மன்றங்கள், அமைப்புகள் நிர்மாணித்து அவற்றிற்கான கட்டிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். அந்த அமைப்புகள் இன்றுவரை செயலாற்றி ஹழ்ரத் அவர்களின் நினைவைப் போற்றுகின்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடவுள் மறுப்பு கொள்கை மக்களை வெகுவாக பாதித்த போது 1949 ல் சிங்கப்பூரில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தன்ஜீமெ பைனுல் மஸாஹிம் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள். அது இன்றுவரை உலகளாவிய அளவில் செயல்படுவது குறிப்பிடத்ததக்கது.

நூல்கள்:

1. லதாயிஃபுல் மஆரிஃப் – வலிமார்கள் பற்றி இறைமெய்ஞ்ஞான ரகசியங்கள் பற்றிய நூல்.

2. திக்ரே ஹபீப் – பெருமானாரின் பெருமையைப் போற்றும் இரண்டு பாகங்கள் அடங்கிய நூல்.

3.அஹ்காமே ரம்ஜானுல் முபாரக் – நோன்பின் மாண்பும் அதற்குரிய சட்டங்களும்.

4.பஹாரே ஷபாப் – இளைஞர்களுக்கு அறைகூவல்.

5. தேவ்பந்தி மௌலவி கா ஈமான் – தேவ்பந்த் உலமாக்கள் தமது ஈமானை வஹ்ஹாபிகளுக்கு விற்றுவிட்டதாக சாடும் ஆதாரப்பூர்வ நூல்.

6. ஃபர்ரத் மின் கஸ்வரா- அஷ்ரப் அலி தானவி மேல் கொடுக்கப்பட்ட குப்ரு பத்வா.

7. அல்மர்ரதுல் காதிய்யானிய்யா – காதியாணிகள் ஏன் காபிராகிப் போனார்கள் என்பதை விளக்கும் நூல்.

ஆங்கில நூற்கள்:

 

1. The claron

2. The Elementary Teaching of Islam

3. How to Preach Islam

4. The Mirar

ஹழ்ரத் அவர்கள் 1931ல் சிங்கப்பூரிலிருந்து ரியல் இஸ்லாம் என்ற பத்திரிகையும், 1936ல் தி ஜெனியூன் இஸ்லாம் என்ற பத்திரிகையையும் நடத்தினார்கள்.

பேச்சாற்றல்:

ஹழ்ரத் அவர்கள் இனிமையான குரலில் மேற்கோள்களாக ஆயத்துக்களும், ஹதீதுகளும், சம்பவங்களும் கூறி உரையாற்றும் போது மக்கள் மதிமயங்கி கேட்பார்கள். 

டோக்கியோவில் பேசிக் கொண்டிருக்கும்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தின் முனைவர் பேராசிரியர் என்.ஹெச். பராஸ் அவர்கள் இது போன்ற இனிமையான குரலில் கருத்துமிக்க ஒரு சொற்பொழிவை கேட்டதில்லை என்று சிலாகித்துக் கூறினார்.

ஹழ்ரத் அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி எல்லா மதங்களின் குருமார்களும் சேர்ந்து ர்ளை நுஒயடவநன நுஅinஅநnஉந என்ற பட்டத்தை வழங்கினர்.

ஹஜ் பயணம்:

தமது வாழ்நாளில் 36 முறை ஹஜ்ஜுக்குச் சென்று வந்துள்ள ஹழ்ரத் அவர்கள் 1919 ல் முதல் முறையாக ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். ஹாஜிகளிடம் வரி விதித்த அக்காலத்திய வஹ்ஹாபிய சவூதி மன்னர் சுல்தான் அப்துல் அஜீஸ் பின் சவூதிடம் வாதாடி போராடி முழுமையாக வரிவிதிப்பை நீக்கினார். அன்றுமுதல் இன்றுவரை எந்த ஹாஜிகள் மீதும் வரிவிதிப்பு இல்லை.

மறைவு:

தமது உயிருக்கும் மேலாக நேசித்த ரஸூலுல்லாஹ்வை விட ஒரு நொடி கூட அதிக வயது வாழக் கூடாது என்று துஆ கேட்டு வந்தார்கள். அதேபோல் தம் மௌத் மதீனாவில்தான் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களாக 1953ம் ஆண்டு தமது 62வது வயதில் மதீனா முனவ்வரா சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். மக்கள் இதுபற்றி வினவியபோது தமது வயதில் இன்னும் ஒருவருடமே பாக்கியுள்ளதாக தெரிவித்தார்கள்.

அவர்களின் எண்ணப்படியே துல்ஹஜ் பிறை 22, ஹிஜ்ரி 1373 (22-08-1954) அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அன்னாரின் விருப்பப்படியே மதீனா ஷரீபில் அவர்களின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமா?

கேள்வி: மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா? அதனை அவரால் கேட்க முடியுமா?

பதில்: 'நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ஒரு மனிதன் இறந்ததும் மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு திரும்புகின்ற மக்களின் பாதணியின் சப்தத்தை அந்த மைய்யித்துக் கேட்கின்றது'என. (நூல்: புகாரி)

இறந்தவரின் உடலை கப்றில் வைத்து நல்லடக்கம் செய்த பின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய்.

இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து உனது நாயன் யார்? உனது நபி யார்? உனது சகோதரர்கள் யார்? உனது கிப்லா எது? உனது இமாம் யார்? என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , எனது சகோதரர்கள் முஸ்லிம்கள், எனது கிப்லா கஃபா, எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லியபின் அவரை விட்டும் விடைபெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார். (நூல் தப்றானி)

தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்மத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், மஹல்லி போன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, 'ஆம்! அது சுன்னத்தான காரியம்' என்று சொன்னார்கள்.

எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும்.

ஆதாரம்: றூஹ் பக்கம் 20.

இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கூறுகின்றார்கள், 'புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும். ஆதாரம்: துஹ்பா, பாகம் 3, பக்கம் 207.

இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது ஸுன்னத்தா, அல்லது மக்ரூஹா? தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்வதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா? என்று கேட்டதற்கு

சிறு குழந்தை தவிர்ந்தவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் ஆகும். ஆதாரம்: பதாவா றமலி பாகம்2, பக்கம் 38.

ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்வி கணக்கோ கிடையாது. அதனால், ஷாபிஈ மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்த முன்) அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்பட மாட்டாது என்று.

தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும். இமாம் நவவி அவர்கள் ரௌலா என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள்.

ஆதாரம்: ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152.

வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன் முதலில் வாதித்தனர். மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதனையும் நிராகரித்தனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும்.

ஆதாரம்: ரத்துல் முக்தார் பாகம் 1, பக்கம் 571.

தல்கீன் ஓதாதவரும் ஓதமறுப்பவரும் மஃதஸிலா இயக்கத்தைச் சார்ந்தவராகும். இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும் மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்றனர்.

ஆதாரம்: பதாவா ரிஸ்வியா பாகம் 9 பக்கம் 782.

Mahlarathul Quadiriyya – மஹ்ழறத்துல் காதிரிய்யா

mahlara

  சுமார் 100 அடி உயரம்! 100 அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்டவடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு!

முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனிதமிகு ரவ்லா ஷரீஃபின் அமைப்பில் பரவசமூட்டும் பாங்கான கவர்ச்சி! காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் மஹ்லறா.

   அண்ணல் கௌது நாயகத்தின் திருவழிப் பேரர் பகுதாதைச் சார்ந்த ஹழரத் மௌலானா ஸெய்யித் அப்துல்லாஹில் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆலிஜனாப். கம்பெனி அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் (ஸூபி ஹழரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பாட்டனார்) ஹாஜி குளம் சதக்குத் தம்பி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்களின் பெருமுயற்சியின் காரணமாக ஆலிஜனாப். கம்பெனி அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலத்தில் இம்மாமண்டபத்தை நிறுவிமுடித்து, 'மஹ்லறத்துல் காதிரிய்யா' என்று பெயர் சூட்டினார்கள்.

   பகுதாது மௌலானா அவர்கள் இதை கட்டி முடித்து எழுதிய வக்பில்,

  ஹிஜ்ரி 1288 ஷஃபான் பிறை 25 ஞாயிற்றுக் கிழமை பகுதாதைச் சார்ந்த ஸெய்யிது ஹபீபுல் காதிரிய்யி அவர்களின் குமாரர் ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில் ஹனஃபியாகிய நான் கூறுவது,

    திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டணம் நகரில் ஜைனுத்தீன் புலவர் அவர்கள் வீட்டுக்கு வடக்கு, கதீபு மூஸா நெய்னா அவர்களின் வழியினர்கள் வீட்டிற்கு தெற்கு, குத்பா சிறுபள்ளிக்கு மேற்கு, பொதுப் பாதையான அம்பலமரைக்கார் தெருவிற்கு கிழக்கு (இத்துடன் சிறுபள்ளிக்கும் மஹ்லறாவிற்கும் இடையில் ஒரு சிறு பாதை உள்ளது.) இந்நான்கு திசைகளையும் உள்ளடக்கியிருக்கிற தென்வடல் காலடி 75, கிழமேல் தச்சுக் கோல் 45 அளவு கொண்ட நிலத்தை,

   மொகுதூம் முஹம்மது அவர்களின் குமாரர், அஹ்மது முஹ்யித்தீன் லெப்பை ஆலிம் அவர்களிடமிருந்து ரூபாய் 300 க்கு கிரயம் வாங்கி, அல்லாஹ்வின் நற்கூலியையும், அண்ணல் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியையும் வேண்டியவனாக,சுவாதீனமும், நற்சுகமும் உள்ளவனாக இருக்கின்ற நிலையில், கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'காதிரிய்யா' தரீகாவைச் சார்ந்தவர்களுக்காக வக்ஃப் செய்து, இத் திருத்தலத்திற்கு 'மஹ்லறத்துல் காதிரிய்யா' என்று பெயரிட்டிருக்கிறேன்.

   எல்லாம் வல்ல இறைவா! இதைப் புனிதத் தலமாக ஆக்குவாயாக!

இத்தலத்தை எவரேனும் விற்கவோ, வாங்கவோ செய்தால் யுகமுடிவு நாள் வரை அவருக்கு இறைவனின் முனிவு (சாபம்) உண்டாகட்டும்.

  இதே 'வக்ஃபு'க்கு கீழ்காணும் நபர்கள் சாட்சிகள். இறைவனே சாட்சிக்கும் பொறுப்புக்கும் மிகவும் மேலானவன்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

                                                  இங்கனம், 
                     ஸெய்யிது அப்துல்லாஹில் காதிரிய்யில்பகுதாதி.

சாட்சிகள்:
1. தைக்கா செய்கு முஹம்மது ஸாலிஹ் லெப்பை – கலீபத்துல் குலஃபா த/பெ. தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு.
2. கிலுரு முஹம்மது – கலீபா த/பெ.செய்கு அப்துல் காதர்.
3. அஹ்மது முஹ்யித்தீன் – கலீபா த/பெ. மொகுதூம் முஹம்மது.
4. முஹம்மது சுலைமான் லெப்பை – கலீபா த.பெ. அப்துல்லா லெப்பை ஆலிம்
5. கதீபு காதர் சாகிபு – கலீபா த/பெ.அபூபக்கர் சாகிப்.
6. பாளையம் முஹம்மது அப்துல் காதர் லெப்பை – கலீபா
7. முஹம்மது சுலைமான் லெப்பை – கலீபத்துல் குலஃபா த/பெ. அப்துல் காதிர் நெய்னா லெப்பை
8. செய்கு  முஹ்யித்தீன் லெப்பை – கலீபா த/பெ. கல்லிடைக்குறிச்சி பீர் முஹம்மது லெப்பை
9. அப்துல் காதிர் த/பெ. அஹ்மது முஹ்யித்தீன்
10. முஹ்யித்தீன் தம்பி த/பெ. விளக்கு முஹம்மது
11. முஹ்யித்தீன் அப்துல் காதர் த/பெ. மீரா லெப்பை.

  இதை கட்டுவதற்கு மௌலானா அவர்களுக்கு அப்போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அவதூறு பேசினர். கொலை செய்யக் கூட முயன்றனர். திருநெல்வேலிக்கு மௌலானா அவர்கள் சென்றிருந்த சமயம் கொலை செய்ய வந்தவர்களுடன் வாள் சண்டை போட்டிருக்கிறார்கள். இது திருநெல்வேலி கெஜட்டிலும் பதிவாகியுள்ளது. தங்களுக்கு நடந்த சம்பவங்களை தங்கள் கைப்பட எழுதி 'அஹ்ஸனுல் அஃமால்' எனும் நூலில் பதிவு செய்துள்ளனர்.

   மஹ்லறா உருவாக பகுதாது மௌலானா அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்த மூலகர்த்தாக்கள் பின் வரும் மூன்று இலட்சியங்களை இதற்கு வகுத்தளித்தனர்.
 

1. அண்ணல் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மேற்கொண்டு நடத்திக் காட்டிய இஸ்லாமிய கலைஞானங்களை பரப்பும் பணியை – மத்ரஸாவை சிறப்புற நடத்துவது.
2.  கீர்த்திமிகு காதிரிய்யா தரீகாவின் திக்ரை தொடர்ந்து நடத்தி வருவது.
3. .நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை – மீலாது விழாவை கொண்டாடுவது.
4. அண்ணல் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் ரபீயுல் ஆகிர் மாதம் கந்தூரி விழா எடுத்து விருந்து உண்ணக் கொடுப்பது.

      1941 ஜூலை 18 அன்று அல்ஹாஜ் நஹ்வி செய்யிதகமது லெப்பை ஆலிம் முப்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மஹ்லறா அரபிக்கல்லூரி புணர் நிர்மாணம் செய்யப்பட்டது.

    1968 ம் வருடம் இந்தியன் சொஸைட்டி ரெஜிஸ்ட்ரேஸன் ஆக்ட்டில் சொஸைட்டியாக S1/1968ல் 'மஹ்லறத்துல் காதிரிய்யா சபை' என்று பதிவு செய்யப்பட்டது. சபையை நிர்வகிக்க அம்பலமரைக்கார் தெரு, சதுக்கைத் தெரு, குறுக்குத் தெரு, நெய்னார் தெரு, ஆராம்பள்ளித் தெரு, குத்துக்கல் தெரு ஆகிய தெருக்களைச் சார்ந்த  காதிரிய்யா தரீகாவைச் சார்ந்த மேஜரான ஆண்கள் மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள்.

    மஹ்லறா ஆலிம் என்று அழைக்கப்படும் செய்யிது இஸ்மாயில் ஆலிம் முப்தி  ஹஜ்ரத் அவர்கள் 1908 ம் வருடம் மறைந்து மஹ்லறாவின் முன் வாசலுக்கருகில் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள்.

  07-06-1971 திங்கள் கிழமை அரபிக்கல்லூரி தஹ்ஸீல் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு (8 பேர்) மௌலவி-ஆலிம் மஹ்லரி ஸனது முதன் முதலாக கிப்லா ஹஜ்ரத்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : கிப்லா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்     நினைவு மலர்.
                      மஹ்லறத்துல் காதிரிய்யா சபை சட்டதிட்டங்கள்.
                      அஹ்ஸனுல் அஹ்மால்

    மஹ்லறா அரபிக் கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட முக்கிய மார்க்க தீர்ப்புகள்.

1. 3,7,40 ம் நாள் பாத்திஹாக்கள் ஆகுமானது – மார்க்கத்திற்கு     உட்பட்டதுதான் என்று மார்க்கத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
2. மஹ்லறா கலீபா கிலுருமுஹம்மது லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது கொடுக்கப்பட்ட 'காபிர்' பத்வாவிற்கு பதிலாக கொடுக்கப்பட்ட மறுப்பு பத்வா.
3. ஹழரத் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து உதவி தேடும் 'குத்பியத்'செய்வது ஆகும் என்று கொடுக்கப்பட்ட பத்வா.
4. 'ஜும்ஆ பத்வா'- ஒரே ஊரில் ஷாஃபி மத்ஹபு படி இரு ஜும்ஆக்கள் தொழுவது கூடாது என்று வழங்கப் பட்ட தீர்ப்பு
 

நடைபெறும் நிகழ்வுகள்.

கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள இதில் சுன்னத் – வல் – ஜமாஅத் அடிப்படையில் மார்க்கத்தை கற்றுகொடுக்கும் மத்ரஸா நடைபெறுகிறது. அத்துடன் ஹிப்ழு மத்ரஸாவும் நடைபெறுகிறது.

ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃபு ஓதி மீலாது விழா நடத்துதல்.
 
ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 14 வரை கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி வைபவம் :-  காலை கத்முல் குர்ஆன் ஓதி தமாம், மௌலிது ஷரீபு ஓதுதல்.
 
பிறை12,13 அன்று மாதிஹுல் கௌது ஹாமிது லெப்பை ஆலிம் அவர்கள் கோர்வை செய்த கௌது நாயகம் அவர்கள் மீதான வித்ரிய்யா ஓதப்படும்.

பிறை 6 அன்று மஹ்லறா நிறுவனர் செய்யிதினா அப்துல்லாஹில் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கந்தூரி

பிறை 6 முதல் 14 வரை இரவு மார்க்கச் சொற்பொழிவு பிறை 14 அன்று மாபெரும் விருந்து வைபவம் கந்தூரி இரவு காதிரிய்யா ராத்திபு.

ஓவ்வொரு வாரமும் பிரதி வியாழன் பின்னேரம் வெள்ளியிரவு, ஞாயிறு பின்னேரம் திங்களிரவு, மாதம் பிறை 14 ஆகிய நாட்களில் காதிரிய்யா ராத்திபு நடத்துதல்.

பிரதிவாரம் வெள்ளி புர்தா ஷரீபு ஓதுதல்.

ஹழரத் ழியாவுல் ஹக் ஸூபி ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் துல்ஹஜ் மாதம் பிறை 28 அன்று கந்தூரி வைபவம்.