Sunnath Prayers-சுன்னத்தான தொழுகைகள்

சுன்னத்தான தொழுகைகள்.

லைலத்துர் ரகாயீப் தொழுகை:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் தந்தையாகிய அப்துல்லாஹ்வின் திருநுதலில் இலங்கிக் கொண்டிருந்த நூரே முஹம்மதிய்யா ரஜப் மாதம் முதல் நாள் வெள்ளி இரவு ஆமினாவின் கருப்பையில் போய் தரித்தது. இது கி.பி. 570-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் நாள் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவில் நிகழ்ந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ரஜப் மாதம் முதல் நாள் வெள்ளிக் கிழமை வராது. ஆதலால் ஒவ்வோராண்டும் ரஜப் முதல் வெள்ளிக் கிழமையை லைலத்துர் ரகாயீப் எனப் பெயரிட்டு அவ்விரவில் விசேஷப் பிரார்த்தனை செய்வது ஹிஜ்ரி 3-ம் நூற்றாண்டில் பைத்துல் முகத்தஸில் தொடங்கப்பட்டது. ஸூபிய்யாக்கள்  இதனை வணக்கத்திற்குரிய சிறந்த இரவாகக் கருதுகின்றனர். எனவே, சூபிய்யாக்களின் தலைவராகிய சுல்தான் செய்யது அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இத் தொழுகையை வழக்கமாக தொழுது வந்தார்கள். ரஜபு மாத்தின் முதல் வியாழக் கிழமை  இரவு 'லைலத்துல் முபாரக்' என்று கூறப்படுகிறது. அதாவது பரக்கத் பொருந்திய இரவு ரஜபு மாதம் முதல் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் எவர் இறைதியானத்தில் ஈடுபடுகின்றாரோ அவரது குற்றங்களை மன்னிப்பதாக இறைவன் வாக்களித்துள்ளான் என அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அந்த இரவில் மஃரிபுத் தொழுகைக்குப் பின் ஆறு சலாமைக் கொண்டு 12 ரகஅத் சுன்னத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரகஅத்திலும் சூரத்துல் பாத்திஹாவுக்குப் பின் 'இன்னா அன்ஸல்னா' என்ற சூராவை ஒரு விடுத்தமும்,'குல்ஹு வல்லாஹு' என்ற சூராவை 12 விடுத்தமும் ஓதி பேணுதலாக தொழுது முடிக்க வேண்டும்.

இந்த தொழுகையை இரண்டிரண்டு ரக்அத்தாக 6 சலாமைக் கொண்டு தொழுவது மேலானது. அல்லது நான்கு நான்கு ரகஅத்துகளாக மூன்று சலாமுடன் தொழுது முடிக்கலாம். பின்பு திக்ரு ஸலவாத்துகள் ஓதி உருக்கமாக துஆ செய்ய வேண்டும். இத் தொழுகையை தொடர்ந்து தொழுது வந்தால் பல நற்பேறுகள் கிடைக்கும்.

இஸ்திஹ்ஃபார் தொழுகை:

ஒருவன் வறுமையோ, துன்பமோ அடையின் அது அவன் செய்த பாவச் செயல்களின் பலனேயாகும். ஒருவன் பாவமான காரியம் ஒன்று செய்து விட்டான். எனவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவற்றிற்குப் பின்வருமாறு பரிகாரம் கூறியுள்ளார்கள். 'உன்னுடைய வாழ்வில் வறுமையோ, துன்பமோ ஏற்படின் உன் தேவைகளை அல்லாஹ்விடம் சாட்டி, இஸ்திஹ்ஃபார் சுன்னத் இரண்டு ரக்கஅத் தொழுவாயாக!' என்று.

நிய்யத்: சுன்னத்தான இஸ்திஹ்ஃபார் தொழுகை இரண்டு ரகஅத்தையும் அல்லாஹ்வுக்காக தொழுகிறேன் என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.

முதல் ரக்அத்தில் சூரா ஃபாத்திஹாவும், சூரத்துல் கத்ரும் (இன்னா அன்ஸல்னா) ஓதிய பின் அஸ்தஹ்ஃபிருல்லாஹ் என்று 15 தடவை ஓதி ருகூஉக்குச் செல்ல வேண்டும். அதில் தஸ்பீஹ் செய்த பின் 10 தடவையும், பின் இஃதிதாலில் 10 தடவையும், பின் ஸஜ்தாவில் 10 தடவையும், பின் சிறு இருப்பில் 10 தடவையும், பின் இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவையும் அஸ்தஹ்ஃபிருல்லாஹ் ஓதி எழுந்து நின்று மீண்டும் மேலே கூறப்பட்ட வண்ணம் இரண்டாவது ரக்அத்திலும் செய்ய வேண்டும். இறுதி இருப்பில் 10 தடவை அஸ்தஹ்ஃபிருல்லாஹ் ஓதிய பின்னர் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுத்து அல்லாஹ்விடம் உன் குறைகளை எடுத்துரைத்து 'துஆ' கேட்பின் வறுமை நீங்கி மகிழ்ச்சியுறுவாய்!' என்று கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள். இத் தொழுகையில் மொத்தம் 140 தடவை அஸ்தஹ்ஃபிருல்லாஹ் ஓதுவது அமைந்துள்ளது. ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இத்தொழுகையை அதிகமாக தொழுது வந்தார்கள்.

மழைத் தேடி பிரார்த்தனை தொழுகை: (ஸலாத்துல் இஸ்திஸ்கா)

மழையின்றி பஞ்சம் ஏற்பட்ட சமயங்களில் மூன்று நாட்களுக்கு ஸுன்னத்தான நோன்பு பிடித்து, தவ்பாச் செய்து நான்காவது நாளில் ஆடு, மாடு முதலிய பிராணிகளுடன் இமாமும், ஊர்வாசிகளும், சிறுவர்களும், வயது முதிர்ந்த பெரியார்களும், சான்றோர்களும், மற்றுமுள்ளோர்களும் பரிசுத்தமான மனதுடன் பரிசுத்தமான வஸ்திரங்களை அணிந்தவர்களாக நடந்து, பரந்த மைதான வெளியில் வந்து, வெயிலில் நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுது, பிறகு குத்பா ஓதி, துஆவை மனமுருகிக் கண்ணீர் வடித்து உருக்கமாக கேட்க வேண்டும்.

நிய்யத்: 'உஸல்லி ஸலாத்தல் இஸ்திஸ்காஇ ரக்அத்தைனி முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ; ஷரீபத்தி லில்லாஹி அல்லாஹு அக்பர்' ( மழைத் தேடி தொழும் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன்) என்று நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸலாத்துல் குஸூபி – கிரகணத் தொழுகை:

சூரியன் அல்லது சந்திரன் கிரகணம் பிடித்திருக்கும் போது இரண்டு ரக்அத்துத் தொழுவது விசேஷமான ஸுன்னத்தாகும். இதில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு ருகூஉகள் உண்டு. முந்திய நிலையில் ஸூரத்து பாத்திஹாவுக்குப் பின் ஸூரத்து பகராவையும், முந்திய ருகூஉக்குப் போய் விட்டுத் திரும்ப நிலைக்கு வந்து அதில் ஸூரத்து ஆலஇம்ரானையும், இரண்டாவது ரக்அத்தில் முதல் நிலையில் ஸூரத்து பாத்திஹாவுக்குப் பின் ஸூரத்து நிஸாவையும், ருகூஉக்குப் போய்விட்டுத் திரும்பி நிற்கும் பிந்திய நிலையில் ஸூரத்து மாயிதாவையும் ஓதுவது ஸுன்னத்து. இந்த ஸூராக்களை ஓத இயலாவிடில் அவை போன்ற அளவுக்கு வேறு ஸூராக்களை ஓதிக் கொள்ளலாம். ருகூஉகளை நீட்டிச் செய்வதும் ஸுன்னத்தாகும். முந்திய ருகூஉவில் ஸூரத்து பகராவின் ஆயத்துகளில் நூறு ஓதக் கூஎய அளவுக்கும், இரண்டாவதில் எண்பதின் அளவுக்கும், மூன்றாவதில் எழுபதின் அளவுக்கும், நான்காவதில் ஐம்பதின் அளவுக்கும் தஸ்பீஹ் செய்வது மிகச் சிறப்பாகும். தொழுகை முடிந்தபிறகு இரண்டு குத்பாக்கள் ஓதுவதும் ஸுன்னத்தாகும்.

பள்ளியின் காணிக்கைத்  தொழுகை (தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை):

ஒளுவுடன் பள்ளியினுள் சென்றவர் உட்காருவதற்கு முன்னர் பள்ளியின்காணிக்கையாக இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும். மறதியாகவோ தெரியாமலோ அத் தொழுகையைத் தொழாமல் உட்கார்ந்து விட்டால் இரு ரக்அத்கள் தொழக் கூடிய நேரம் செல்வதற்;கு முன்னர் எழுந்து அதைத் தொழலாம். ஆனால் பள்ளுத் தொழுகையைபோ, ஸுன்னத் தொழுகையையோ தொழும்போது, தஹிய்யத்துத் தொழுகையை அதோடு நிய்யத்துச் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதை தொழுவது போலாகிவிடும்.

முதலாம் ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப் பின் 'காபிரூன்' சூராவும், இரண்டாம் ரக்அத்தில் 'இக்லாஸ்' சூராவும் ஓதலாம்.

 எவர் ஒருவர் ஒளு இல்லாமலோ அல்லது வேறு காரணத்தினாலோ 'தஹிய்யத்து' தொழ வசதி ஏற்படாது போனால், அவர் மூன்றாம் கலிமாதன்னை நான்கு தடவை ஓதிக் கொள்வது ஸுன்னத்தாகும்.

ஒளுவுடைய ஸுன்னத்து தொழுகை:

ஒளு செய்த பின் அதற்காக இரண்டு ரக்அத்கள் ஸுன்னத் தொழுவது சிறந்தது. அதில் முதல் ரக்அத்தில் பர்திஹா சூராவிற்குப்பின்

 'வலவ் அன்னஹும் இதுளழமூ அன்ஃபுஸஹும் ஜாஊக்க ஃபஸ்தக்ஃபிருல்லாஹ வஸ்தக்ஃபரலஹுமுர் ரஸூலு லவஜதஹுல்லாஹ தவ்வாபன் ரஹீமா'

என்ற ஆயத்தையும், இரண்டாவது ரக்அத்தில்,

'வமய்யஃமல் ஸூஅன் அவ்யள்லிம் நப்ஸஹு தும்ம யஸ்தஃபிரில்லாஹ யஜிதில்லாஹ ஙபூரர் ரஹீமா'

என்ற ஆயத்தையும் ஓத வேண்டும்.

தஹஜ்ஜுத் தொழுகை

இரவில் உறங்கி விழித்துத் தொழும் தொழுகைக்கு தஹஜ்ஜுத் தொழுகை என்று பெயர். இது ஆகக் குறைந்தது இரண்டு ரக்அத்தாகவும், அதிகபட்சம் கணக்கில்லாமலும் தொழலாம். திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இத் தொழுகை சொந்தமாக பர்ளாக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஸூபியாக்கள் இத் தொழுகையை தங்கள் மீது விதிக்கப்பட்ட கடமை என்று மதித்து தொழுது வந்தனர். இதன் நன்மையை அல்லாஹ்வையன்றி வேறுயாரும் அறிய மாட்டார்கள்.

ளுஹாத் தொழுகை

எனது அன்பர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், ளுஹாத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளதை; தொழுது வருமாறும், நான் தூங்குவதற்கு முன் வித்ரு தொழுமாறும் எனக்கு நல்லுபதேசம் (வஸிய்யத்) செய்தார்கள் என ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  எட்டு ரக்அத்துகள் ளுஹா தொழுவார்கள். அதில் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கொடுப்பார்கள் என அபூதாவூத் ஹதீது கிரந்தம் அறிவிக்கின்றது.

சூரியன் வல்லயப் பிரமாணம் உயர்ந்ததிலிருந்து மத்தியை விட்டு நீங்கும் வரையில் ளுஹாத் தொழுகைக்குரிய நேரமாகும். இதற்கு மொத்தம் எட்டு ரக்அத்துகள் உண்டு. இதை இரண்டு இரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். இதற்கு ஆகக் குறைந்தது இரண்டு ரக்அத்துகளாகும்.

முதலாம் ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப் பின் வஷ;ஷம்ஸி சூராவும், இரண்டாம் ரக்அத்தில்  வள்ளுஹா சூராவும் ஓதலாம். அல்லது முதல் ரக்அத்தில் குல்யா அய்யுஹல் காபிரூன் சூராவும், இரண்டாம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹதுன் சூராவும் ஓதலாம்.

தஸ்பீஹ் தொழுகை:

மொத்தம் 4 ரக்அத்துகள். அதை இரண்டிரண்டு ரக்அத்துகளாக 2 ஸலாமுடனும், அல்லது நான்கு ரக்அத்துகளை ஒரே ஸலாமிலும் தொழுது கொள்ளலாம். இரண்டிரண்டு ரக்அத்துகளாக 2 ஸலமாக தொழுவதுதான் சிறந்தது.

நான்கு ரக்அத்துகளுக்கும் மொத்தம் 300 தஸபீஹ்கள் சொல்ல வேண்டும். தஸ்பீஹ் என்பது மூன்றாம் கலிமா ஓதுவது ஆகும்.

(ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்.)

முதல் ரக்அத்தில் தக்பீர் தஹ்ரிமாவிற்குப் பின் பாத்திஹாவிற்குப் பின் 15 தடவையும், ருகூவில் 10-ம், இஉத்திதாலில் 10-ம், முதல் ஸுஜூதில் 10-ம், பிறகு எழுந்து இருப்பில் 10-ம் இரண்டாம் ஸுஜூதில் 10-ம், பிறகு எழுந்து இருப்பில் 10-ம் ஆக ஒரு ரக்கத்தில் 75 தஸ்பீஹுகள் குறிப்பிட்ட தலங்களில் ஓதுவதாகும். இப்படியாக நான்கு ரக்அத்துகளுக்குக்கும் மொத்தம் 300 தஸ்பீஹுகள் பூர்த்தியாகிவிடும். ஆனால் அத்தஹிய்யாத்துடைய தானங்களைத் தவிர மற்ற தலங்களில் தஸ்பீஹுகளை அந்தந்த தலங்களிலுள்ள திக்ருகளுக்குப் பிறகே ஓத வேண்டும்.

முதல் ரக்அத்தில் 'அல்ஹாக்கும்' இரண்டாம் ரக்அத்தில் 'வல் அஸ்ரியும்' மூன்றாம் ரக்அத்தில் 'குல்யா அய்யுஹல் காபிரூன'வும், நான்காம் ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹது'வும் ஓதுவது சாலச் சிறந்தது.

ஸலாம் கொடுப்பதற்கு முன் ('அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க தவ்பீக்க அஹ்லில் ஹுதா, வஅஉமால அஹ்லில் யக்கீனீ வமுளாஸஹத்த அஹ்லித் தவ்பத்தி வ அஜ்ம அஹ்லிஸ் ஸப்ரி, வஜித்த அஹ்லில் ஹஷ;யத்தி, வதலப அஹ்லிர் ரகுபத்தி, வதஅப்புத அஹ்லில் வரஇ, வஇர்பான அஹ்லில் இல்மி, ஹத்தா அகாபக்க அல்லாஹும்ம இன்னீ இஸ்அலுக்க மகாபத்தன் தஹ்ஜு ஸுனீ பிஹா அன்மஆஸீக்க ஹத்தா அஃமல பிதா அத்திக்க, அமலன் அஸ்தஹிக்கு பிஹி ரிளாக்க, வஹத்தா உனாஸி ஹக்க பித்தவ்பத்தி ஹவ்பன் மின்க வஹத்தா அஹ்லுஸலக்கன் நஸீஹத்த ஹுப்பன் லக்க வஹத்தா அதவக்கல அலைக்க பில் உமூரி குல்லிஹா ஹுஸ்னளன்னின் பிக்கரி ஸுப்ஹான காலிக்கின் நூர்.)

பொருள்: அல்லாஹ்வே நல்வழியுடையோரின் நல்லுதவியையும், திடநம்பிக்கையுடையொரின் நற்செயலையும், பிராயச்சித்தம் பெற்றவர்களின் நீதி உபதேசத்தையும், பொறுமையுடையோரின் பொறுமையையும், பயபக்தியுடையோரின் முயற்சியையும், ஆசையுடையோரின் தேட்டரவையும் பேணுதல் உடையோரின் வணக்கத்தையும், ஞானவான்களின் ஞான அறிவையும் எனக்கு அருளுமாறு நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னை நான் பயந்து நடப்பதற்காக! அவ்வாஹ்வே! உன்னுடைய விருப்பத்திற்கு நான் தகுதியுடையவனாக விடக்கூயதும் உனக்கு வழிபடுவது கொண்டு நான் நற்செயலில் ஈடுபடுவதற்காகவும் உள்ள கிரியையையும், உனக்கு மாறு செய்வதை விட்டு என்னைத் தடுக்கக் கூடிய பயபக்தியையும், உன்னைப் பயந்து பிராயசித்தம் கொண்டு உனது உபதேசத்தைப் பெறுவதற்காகவும், உன்னை நேசித்து நல்லுபதேசத்தை உனக்கு உறுதிபடுத்துவதற்காகவும், எக்காரியங்களிலும் நான் உன்பால் பொறுப்புச் சாட்டிவிடுவதற்காகவும், உன்மீது (எனக்கு) நல்லெண்ணத்தையும் தந்தருளுமாறு நான் உன்னிடம் வேண்டுகிறேன். ஓ! ஜோதியைச் சிருஷ்டித்த பரிசுத்தமுடையானே!

ஷhபிஈ மத்ஹபின் படி இது ஒரு முக்கியமான சுன்னத்தாகும். ஒருநாளைக்கு ஒரு தடவையாகிலும் அல்லது வாரத்திற்கு ஒரு தடவையாகிலும் அல்லது மாதத்திற்கு ஒரு தடவையாகிலும் அல்லது வருடத்திற்கு ஒரு தடவையாகிலும் தொழ வேண்டும்.

அவ்வாபீன் தொழுகை: .

மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் தொழப்படும் தொழுகை. இது குறைந்த பட்சம் 2 ரக்அத்துகள்.அதிகபட்சமாக இருபது ரக்அத்துகள். தொழுகையை இரண்டிரண்டு ரக்அத்துகளாக நிறைவேற்றுவது சாலச் சிறந்தது.

இத்தொழுகை பள்ளயின் காணிக்கைத் தொழுகையைப் போன்று மஃரிபிற்கும், இஹாவிற்கும் இடையில் தொழப்படும் களாவான, பர்ழான, சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவது கொண்டு நிறைவேறி விடும்.

வித்ரு தொழுகை:

இஷாத் தொழுகைக்குப் பிறகு வித்ரு தொழுவது சுன்னத்தாகும். வித்ரு தொழுவது அனைத்து முஸ்லிம்களுக்கும் அவசியமான ஒன்றாகும் என நபிமொழி கூறுகின்றது. வித்து தொழுகை ரவாதிபான (பர்ளு தொழுகைக்க முன்பின் தொழக் கூடிய) தொழுகையை விட சிறப்பானதாகும். வித்ரு தொழுகையில் குறைந்தது ஒரு ரக்அத் ஆகும். அதிகபட்சம் 11 ரக்அத்துகளாகும்.

வித்ரு தொழுகையை ஒற்றைப்படையாகவே (1,3,7,9,11 என்று)  தொழவேண்டும். ஷாபிஈ மத்ஹப் படி வித்ரை இரண்டுரக்அத்தை தனியாகவும் ஒரு ரக்அத்தை தனியாகவும் தொழ வேண்டும். மூன்று ரக்அத்தை சேர்த்து தொழுவது மக்ரூஹ். ஹனபி மத்ஹபில் மூன்று ரக்அத்தை சேர்த்துதான் தொழ வேண்டும். வித்ரு ஹனபி மத்ஹபில் வாஜிபு.

மூன்ற ரக்அத்துகள் வித்ரு தொழுபவருக்கு முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா' சூராவையும், 2வது ரக்அத்தில் 'காபிருன' சூராவையும், 3வது ரக்அத்தில் 'அஹது, பலக், நாஸ்'; சூராக்களையும் ஓதுவது சுன்னத்.

Chennai Porur Sufi Manzil

currently manzil is in First Floor of our Peer Bhais house.

Soofi Manzil

C/o. Usman Ali

4/24,First Street,

RE Nagar, Porur,

Chennai- 600116.

தற்போது  நமது தரீகத் சகோதரர் இல்லத்தில் வைத்து   பிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு மஃரிபு தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸ்     மற்றும் கந்தூரி வைபவங்கள் நடந்து வருகிறது. மன்ஜில் கட்டுவதற்கு முயன்று வருகிறோம்.

Mahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)

'மஃஷர்' பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)

By:-P.T.M. Muhammed Bakker Sahib Qadiri,Nagoor Shareef.

நாகூர் ஷரீப் மௌலானா மௌலவி ஹஜ்ரத் P.T.M. முஹம்மது பாக்கர் சாஹிப் காதிரீ அவர்கள் பிடுத்த அரபி பத்வாவின் சுருக்கமான மொழி பெயர்ப்பு.

வினாக்கள்:-

1. இக் காலத்தில் நமது தேசங்களில் கத்தீப் ஜும்ஆவன்று குத்பா ஓத மிம்பரில் ஏறுகிறதற்கு முன் முஅத்தினால் ஓதப்படும் 'மஃஷர்'(தர்கிய்யா) மார்க்கப்படி கூடுமா, கூடாதா?

2. மஃஷரில், 'அல்குத்ப தானி பீஹா மகான ரக்அதைனி மினல் பர்லு'(இரண்டு குத்பாக்களும் (லுஹர் தொழுகை) பர்லில் நின்றும் இரண்டு ரக்அத்களுடைய ஸ்தானத்தில் இருக்கின்றன) என்று வரக் கூடிய வாக்கியத்திற்கு ஹதீது, பிக்ஹு கித்தாபுகளில் ஆதாரமுண்டா, இல்லையா?

இங்ஙனம்,

மு.செய்யிது முஹிய்யித்தீன்,
நாகப்பட்டினம்.

விடை 1.

ஹம்து ஸலவாத்துக்குப்பின்: இக்காலத்தில் குத்பா ஓத கத்தீப் மிம்பரில் ஏறுவதற்கு முன் முஅத்தினால் இரண்டாவது பாங்கு சொல்லப்படுவதற்கு முன்- வழக்கம் போல் மஃஷர் ஓதுவது (ஜாயிஸ்)ஆகுமானதாகவும், (முஸ்தஹப்பு)உவக்கப்பட்டதாகவும் இருக்கின்றது.

மேற்கூறிய படியே மஃஷர் ஓதுதல் ஹனபிய்யா, ஷாபிய்யாக்களில் (சலபு கலபு) முன்னோர் பின்னோர்களாகிய உலமாக்களுடைய(அமல்) அனுஷ்டானங் கொண்டும் பாரவான்களாகிய புகஹாக்களின் கிதாபுகள் கொண்டும் ஸ்திரம் பெற்றிருக்கின்றது. இக்காலத்தில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் மஃஷர் அழகான சுருக்கமாக இருக்கின்றது.

கத்தீப் மிம்பரில் ஏறி குத்பா ஓதும்போது ஒருவன் மற்றவனை நோக்கி 'நீ வாயை மூடு' என்று சொல்வானேயானால் சொன்னவன் ஜும்ஆவுடைய பலனைப் பெற்றுக் கொள்வதை வீணாக்கிவிட்டான் எனும் ஹதீது புகாரி, முஸ்ல்pம் இரு இமாம்களாலும் ஒருமித்து அங்கீகரிக்கப்பட்ட ஹதீதாகும். (றத்துல் முஹ்தார்: வால்யூம் 1, பக்கம் 657)

கத்தீப் மிம்பரில் ஏறுகிறதுக்கு முன் ஓதப்படும் மஃஷர்; நம் மார்க்கப்படி ஆகும், இவ்விதம் ஓதும் வழக்கம் அக்காலம் முதல் இக்காலம் வரை நடந்தேறி வருகின்றது. (மின்ஹத்துல் காலிக்-அலா பஹ்றிர்றாயிக், விருத்துரை வால்யூம் 2: பக்கம் 149). இவ்விதமே மிர்காத்துல் மபாதீஹ் ஷரஹு மிஷ்காத்துல் மஸாபீஹ்: வால்யூம் 2, 241 ம் பக்கத்திலும் வருகின்றது.

கத்தீப் மிம்பரில் ஏறுவதற்கு முன் மஃஷர் ஓதுவது அழகான கருமமாகும். (ஹாஷியத்துல் மதனிய்யா வால்யூம் 2, பக்கம் 43)

கத்தீப் குத்பா ஓதும் போது ஒருவன் மற்றவனோடு பேசுவானேயானால் பேசினவன் ஜும்ஆவுடைய பலனைப் பெற்றுக் கnhள்வதை வீணாக்கி விட்டான் என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரிவாயத்துச் செய்திருப்பதாய் மஃஷரை ஓதக் கூடியவர் கூறுவது அவசியமாகும். (காயத்துல் தல்கீஸுல் முறாது-மின் பதாவா இப்னு ஜியாத், வால்யும் 1, பக்கம் 84)

கத்தீப் மிம்பரில் ஏறுகிறதற்கு முன் மஃஷர் ஓதுதல் ஆகுமான, அழகான கருமமாக இருக்கின்றது. (நிஹாயத்துல் முஹ்தாஜ்-இலா ஷரஹில் மின்ஹாஜ், வால்யூம் 2, பக்கம் 61)

விடை 2

'அல் குத்பதானி பீஹா மகான ரக்அதைனி மினல் பர்லு' என்ற வாக்கியம் ஹதீது, பிக்ஹு சம்பந்தமான கிரந்தங்களில் வருகிறது.

குத்பா சம்பந்தமாய் வரக்கூடிய ஹதீதுகளின் கருத்தைக் கொண்டு இரு குத்பாக்களும் (லுஹர்) தொழுகையுடைய வருசையில் பகுதியாக இருக்கும். லுஹர் நான்கு ரக்அத்துடைய ஸ்தானத்தில் ஜும்ஆ இரண்டு ரக்அத் இருப்பதே போல் இரு குத்பாக்களும் இரண்ட ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருப்பதால் தொழுகையில் ஷர்த்துக்களில் சிலதை குத்பாவுக்கு ஷர்த்தாக்கப்பட்டிருக்கிறது. (றத்துல் முஹ்தார்: வால்யூம் 1, பக்கம் 600)

ஜவாலுக்கு (சூரியன் நடுமத்தியிலிருக்கும் நேரத்துக்கு) முன் குத்பா ஓதி ஜவாலுக்குப்பின் ஜும்ஆ தொழுகையை தொழுவிப்பார்களேயானால் அத்தொழுகைக் கூடாது. ஏனெனில் இரு குத்பாக்களும் இரண்டு ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருக்கின்றது. (ஹாஷியத்துஷ் ஷல்பீ அலஜ்ஜைலயீ, வால்யூம் 1, பக்கம் 220)

இரு குத்பாக்களும் இரண்ட ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருப்பதால் நாலு ரக்அத்தை இரண்ட ரக்அத்தாக சுருக்கப்பட்டதென்று ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் மற்றும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆகிய இருவர்களும் சொன்னதாக அல்லாமா இப்னுல் ஹுமாம் கூறுகின்றார்கள். (பத்ஹுல் கதீர் வால்யூம 1, பக்கம் 415)

மேற்கூறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு தெரியவருவது யாதெனில், இக்காலத்தில் நமது தேசங்களில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் மஃஷர்-முஹக்கிகீன்களாகிய புகஹாக்கள் அனைவருடைய ஏகோபித்த சொல்படி-கத்தீப் மிம்பரில் ஏறுவதற்குமுன் ஓதுவது இரு மதுஹபுகளிலும் மக்ரூஹ் அல்ல. சில கித்தாபுகளில் மஃஷர் ஓதுவது பற்றிக் கூறவில்லையானால் மஃஷர் ஓதுவது கூடாதென்பதும் அல்ல. ஏனெனில், ஷாபிய்யா, ஹனபிய்யாக்களுள் பாரவான்களாகிய இமாம்களின் முஃதபரான (பலமான) பிக்ஹு கிரந்தங்களில் மஃஷர் ஓதுவது அழகான செயலென்றும் ஆகுமான கருமமென்றும் கூறப்பட்டிருக்கின்றது.

பொதுவாக விபரமின்றி 'மஃஷர் ஓதுவது மக்ரூஹ்' என்று கூறுவது மறுக்கப்பட்ட ஒப்புக் கொள்ளப்படாத சொல்லாகும். ஒரு கருமத்தை மக்ரூஹ் என்று பகர்வதாக இருந்தால் 'தலீலுன் காசுன்'(அதற்குரிய ஆதாரங்கள்)அத்தியாவசியம் என்பதாய் றத்துல் முஹ்தார் கிரந்தத்தில் அல்லாமா ஷாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்படிக்கு,

காதிமுல் மஷாயிகு, ஹகீர்,

முஹம்மது பாக்கர் காதிரீ,
நாகூர் ஷரீப்.

இந்த பத்வாவைப் போற்றி புகழ்ந்து கையொப்பமிட்ட உலமாக்களின் நாமங்களாவன:

1. மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி
(கவர்ன்மென்ட் டவுன் காஜீ, நாகூர் ஷரீப்)
2. மௌலானா மௌலவி முஹிய்யித்தீன் அப்துல் காதிர் சாஹிப்
(முதர்ரிஸ் 'காதிரிய்யா மத்ரஸா, நாகூர் ஷரீப்)
3.மௌலானா மௌலவி முஹம்மது மூஸா சாஹிப், நாகூர் ஷரீப்.
4. மௌலானா மௌலவி மஹம்மது பஹாவுத்தீன் சாஹிப் பாகவீ
  (முதர்ரிஸ் 'காதிய்யா மத்ரஸா, நாகூர் ஷரீப்)
5. மௌலானா மௌலவி அல்லாமா ஷஹாபுத்தீன் அஹ்மது கோயா, ஷாலியம் மலபார்.
6. மௌலான மௌலவி முப்தி மஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிப் (டவுண் காஜி, மதுராஸ்)
7. மௌலானா மௌலவி முஹம்மது கலீலுர் ரஹ்மான் சாஹிப் , பீஹார்.
8. மௌலானா மௌலவி ஷெய்குனா ஹாஜி அஹ்மது லெப்பை சாஹிப் ஷாதிலீ,      அதிராம்பட்டினம்.
9. மௌலானா மௌலவி அப்துல்லா இப்னு முஹிய்யித்தீன், மலபார்

Melapalayam Sufi Manzil

soofi manzil,

Thakkadi appa Darga,

Shahul hameed nayagam keela street,

Nethaji Road,

Melapalayam,

Tirunelveli. INDIA.

Tanjavoor Sufi Manzil

?????????? ???????????! ?????????????!

???????? ?????????.

???? ???????? ???????????? ???? ?????? ?????????? ????? ??????? ????? ????? ???????? ????????? ????????? ????????? ????????????, ??????? ??? ?????? ????????? ?????????????? ??????????? ???? ??????? ?????????? ??????? ????? ??????, ???????? ??????????? ????????????? ????????????? ???????? ????????? ???????? ?????????? ?????? ???????????????. ?????? ????????? ?????????? ?????? ????????????. ????? ???? ?????. ???? ???????? ????????? ???? ?????? 5 ??????? ???? ??????????????. ???? ??????????? ?????? ??????? ???????? ????? ???? ?????? ??????? ???????? ???? ???? ??????? ????????????.

???? ?????? ???? ????????????? ?????????? ?????????? ?????, ????? ????? ?????????? ???????????? ????????! ?????.

???? ?????? ??????? ??????:

Moulavi Abdul Razak Qadiri,

30 Sirajudeen Nagar,

East Gate,

Tanjavur-6130001

ACCOUNT DETAILS: I.ABDUL RAZAAK
                                        AC.NO 873547460 INDIAN BANK  
                                        EAST GATE,
                                        THANJAVUR
.
CONTECT ADDRESS;    razaaksoofi@yahoo.com