Mahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)

Mahsher Fatwa-‘மஃஷர்’ பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

'மஃஷர்' பற்றிய பத்வா(மார்க்கத் தீர்ப்பு)

By:-P.T.M. Muhammed Bakker Sahib Qadiri,Nagoor Shareef.

நாகூர் ஷரீப் மௌலானா மௌலவி ஹஜ்ரத் P.T.M. முஹம்மது பாக்கர் சாஹிப் காதிரீ அவர்கள் பிடுத்த அரபி பத்வாவின் சுருக்கமான மொழி பெயர்ப்பு.

வினாக்கள்:-

1. இக் காலத்தில் நமது தேசங்களில் கத்தீப் ஜும்ஆவன்று குத்பா ஓத மிம்பரில் ஏறுகிறதற்கு முன் முஅத்தினால் ஓதப்படும் 'மஃஷர்'(தர்கிய்யா) மார்க்கப்படி கூடுமா, கூடாதா?

2. மஃஷரில், 'அல்குத்ப தானி பீஹா மகான ரக்அதைனி மினல் பர்லு'(இரண்டு குத்பாக்களும் (லுஹர் தொழுகை) பர்லில் நின்றும் இரண்டு ரக்அத்களுடைய ஸ்தானத்தில் இருக்கின்றன) என்று வரக் கூடிய வாக்கியத்திற்கு ஹதீது, பிக்ஹு கித்தாபுகளில் ஆதாரமுண்டா, இல்லையா?

இங்ஙனம்,

மு.செய்யிது முஹிய்யித்தீன்,
நாகப்பட்டினம்.

விடை 1.

ஹம்து ஸலவாத்துக்குப்பின்: இக்காலத்தில் குத்பா ஓத கத்தீப் மிம்பரில் ஏறுவதற்கு முன் முஅத்தினால் இரண்டாவது பாங்கு சொல்லப்படுவதற்கு முன்- வழக்கம் போல் மஃஷர் ஓதுவது (ஜாயிஸ்)ஆகுமானதாகவும், (முஸ்தஹப்பு)உவக்கப்பட்டதாகவும் இருக்கின்றது.

மேற்கூறிய படியே மஃஷர் ஓதுதல் ஹனபிய்யா, ஷாபிய்யாக்களில் (சலபு கலபு) முன்னோர் பின்னோர்களாகிய உலமாக்களுடைய(அமல்) அனுஷ்டானங் கொண்டும் பாரவான்களாகிய புகஹாக்களின் கிதாபுகள் கொண்டும் ஸ்திரம் பெற்றிருக்கின்றது. இக்காலத்தில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் மஃஷர் அழகான சுருக்கமாக இருக்கின்றது.

கத்தீப் மிம்பரில் ஏறி குத்பா ஓதும்போது ஒருவன் மற்றவனை நோக்கி 'நீ வாயை மூடு' என்று சொல்வானேயானால் சொன்னவன் ஜும்ஆவுடைய பலனைப் பெற்றுக் கொள்வதை வீணாக்கிவிட்டான் எனும் ஹதீது புகாரி, முஸ்ல்pம் இரு இமாம்களாலும் ஒருமித்து அங்கீகரிக்கப்பட்ட ஹதீதாகும். (றத்துல் முஹ்தார்: வால்யூம் 1, பக்கம் 657)

கத்தீப் மிம்பரில் ஏறுகிறதுக்கு முன் ஓதப்படும் மஃஷர்; நம் மார்க்கப்படி ஆகும், இவ்விதம் ஓதும் வழக்கம் அக்காலம் முதல் இக்காலம் வரை நடந்தேறி வருகின்றது. (மின்ஹத்துல் காலிக்-அலா பஹ்றிர்றாயிக், விருத்துரை வால்யூம் 2: பக்கம் 149). இவ்விதமே மிர்காத்துல் மபாதீஹ் ஷரஹு மிஷ்காத்துல் மஸாபீஹ்: வால்யூம் 2, 241 ம் பக்கத்திலும் வருகின்றது.

கத்தீப் மிம்பரில் ஏறுவதற்கு முன் மஃஷர் ஓதுவது அழகான கருமமாகும். (ஹாஷியத்துல் மதனிய்யா வால்யூம் 2, பக்கம் 43)

கத்தீப் குத்பா ஓதும் போது ஒருவன் மற்றவனோடு பேசுவானேயானால் பேசினவன் ஜும்ஆவுடைய பலனைப் பெற்றுக் கnhள்வதை வீணாக்கி விட்டான் என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரிவாயத்துச் செய்திருப்பதாய் மஃஷரை ஓதக் கூடியவர் கூறுவது அவசியமாகும். (காயத்துல் தல்கீஸுல் முறாது-மின் பதாவா இப்னு ஜியாத், வால்யும் 1, பக்கம் 84)

கத்தீப் மிம்பரில் ஏறுகிறதற்கு முன் மஃஷர் ஓதுதல் ஆகுமான, அழகான கருமமாக இருக்கின்றது. (நிஹாயத்துல் முஹ்தாஜ்-இலா ஷரஹில் மின்ஹாஜ், வால்யூம் 2, பக்கம் 61)

விடை 2

'அல் குத்பதானி பீஹா மகான ரக்அதைனி மினல் பர்லு' என்ற வாக்கியம் ஹதீது, பிக்ஹு சம்பந்தமான கிரந்தங்களில் வருகிறது.

குத்பா சம்பந்தமாய் வரக்கூடிய ஹதீதுகளின் கருத்தைக் கொண்டு இரு குத்பாக்களும் (லுஹர்) தொழுகையுடைய வருசையில் பகுதியாக இருக்கும். லுஹர் நான்கு ரக்அத்துடைய ஸ்தானத்தில் ஜும்ஆ இரண்டு ரக்அத் இருப்பதே போல் இரு குத்பாக்களும் இரண்ட ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருப்பதால் தொழுகையில் ஷர்த்துக்களில் சிலதை குத்பாவுக்கு ஷர்த்தாக்கப்பட்டிருக்கிறது. (றத்துல் முஹ்தார்: வால்யூம் 1, பக்கம் 600)

ஜவாலுக்கு (சூரியன் நடுமத்தியிலிருக்கும் நேரத்துக்கு) முன் குத்பா ஓதி ஜவாலுக்குப்பின் ஜும்ஆ தொழுகையை தொழுவிப்பார்களேயானால் அத்தொழுகைக் கூடாது. ஏனெனில் இரு குத்பாக்களும் இரண்டு ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருக்கின்றது. (ஹாஷியத்துஷ் ஷல்பீ அலஜ்ஜைலயீ, வால்யூம் 1, பக்கம் 220)

இரு குத்பாக்களும் இரண்ட ரக்அத்துடைய ஸ்தானத்தில் இருப்பதால் நாலு ரக்அத்தை இரண்ட ரக்அத்தாக சுருக்கப்பட்டதென்று ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் மற்றும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆகிய இருவர்களும் சொன்னதாக அல்லாமா இப்னுல் ஹுமாம் கூறுகின்றார்கள். (பத்ஹுல் கதீர் வால்யூம 1, பக்கம் 415)

மேற்கூறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு தெரியவருவது யாதெனில், இக்காலத்தில் நமது தேசங்களில் வழக்கமாக ஓதப்பட்டு வரும் மஃஷர்-முஹக்கிகீன்களாகிய புகஹாக்கள் அனைவருடைய ஏகோபித்த சொல்படி-கத்தீப் மிம்பரில் ஏறுவதற்குமுன் ஓதுவது இரு மதுஹபுகளிலும் மக்ரூஹ் அல்ல. சில கித்தாபுகளில் மஃஷர் ஓதுவது பற்றிக் கூறவில்லையானால் மஃஷர் ஓதுவது கூடாதென்பதும் அல்ல. ஏனெனில், ஷாபிய்யா, ஹனபிய்யாக்களுள் பாரவான்களாகிய இமாம்களின் முஃதபரான (பலமான) பிக்ஹு கிரந்தங்களில் மஃஷர் ஓதுவது அழகான செயலென்றும் ஆகுமான கருமமென்றும் கூறப்பட்டிருக்கின்றது.

பொதுவாக விபரமின்றி 'மஃஷர் ஓதுவது மக்ரூஹ்' என்று கூறுவது மறுக்கப்பட்ட ஒப்புக் கொள்ளப்படாத சொல்லாகும். ஒரு கருமத்தை மக்ரூஹ் என்று பகர்வதாக இருந்தால் 'தலீலுன் காசுன்'(அதற்குரிய ஆதாரங்கள்)அத்தியாவசியம் என்பதாய் றத்துல் முஹ்தார் கிரந்தத்தில் அல்லாமா ஷாமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்படிக்கு,

காதிமுல் மஷாயிகு, ஹகீர்,

முஹம்மது பாக்கர் காதிரீ,
நாகூர் ஷரீப்.

இந்த பத்வாவைப் போற்றி புகழ்ந்து கையொப்பமிட்ட உலமாக்களின் நாமங்களாவன:

1. மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி
(கவர்ன்மென்ட் டவுன் காஜீ, நாகூர் ஷரீப்)
2. மௌலானா மௌலவி முஹிய்யித்தீன் அப்துல் காதிர் சாஹிப்
(முதர்ரிஸ் 'காதிரிய்யா மத்ரஸா, நாகூர் ஷரீப்)
3.மௌலானா மௌலவி முஹம்மது மூஸா சாஹிப், நாகூர் ஷரீப்.
4. மௌலானா மௌலவி மஹம்மது பஹாவுத்தீன் சாஹிப் பாகவீ
  (முதர்ரிஸ் 'காதிய்யா மத்ரஸா, நாகூர் ஷரீப்)
5. மௌலானா மௌலவி அல்லாமா ஷஹாபுத்தீன் அஹ்மது கோயா, ஷாலியம் மலபார்.
6. மௌலான மௌலவி முப்தி மஹம்மது ஹபீபுல்லாஹ் சாஹிப் (டவுண் காஜி, மதுராஸ்)
7. மௌலானா மௌலவி முஹம்மது கலீலுர் ரஹ்மான் சாஹிப் , பீஹார்.
8. மௌலானா மௌலவி ஷெய்குனா ஹாஜி அஹ்மது லெப்பை சாஹிப் ஷாதிலீ,      அதிராம்பட்டினம்.
9. மௌலானா மௌலவி அப்துல்லா இப்னு முஹிய்யித்தீன், மலபார்