பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்-Bidat

பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்.

அன்று முதல் இன்று வரை நாம் பின்பற்றியொழுகி வருகின்ற எத்தனையோ நல்ல செயல்களை அவை பித்அத் என்று கூறி, அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகுறு பாதையிலிருந்து விலகி வழி கெட்டும், வழிகெடுத்தும் வருகின்றனர் சில அதிபுத்திசாலிகள்(?)!

திருமறையையும், திரு நபி வழிமுறைகளையும் மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம், ஏற்றுக் கொள்கிறோம்ட என்று கூறித்  திரியும் இவர்கள் திருமறை மூலமாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் நற்செயல்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட காரியங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக பித்அத் எனவும், பித்அத்துகள் அனைத்தும் வழிகேடே எனவும் பிரச்சாரம் புரிகின்றனர்.

சுன்னத் என்றால் என்ன? பித்அத் என்றால் என்ன? என்பது குறித்து அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் இவ்வாறான தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்

'திருமறை , திருநபி வழிமுறை, சஹாபாக்களின் நடைமுறை, இமாம்களின் ஒத்தக் கருத்துரை ஆகியவற்றிற்கு எதிராக – புதிதான ஒன்றைக் கொண்டு வந்தால் அது வழி கெட்ட-தவறான பித்அத்!'

மேற்கூறப்பட்டவைகளுக்கு முரணில்லாமல் ஒரு நற்செயலை உருவாக்கினால் அது ஏற்றுக் கொள்ளாபபட்ட –புகழுக்குரிய பித்அத்! என சட்டமேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றானர்.

நூல்: பத்ஹுல் முபீன் பக்கம் 95, தஹ்புல் அஸ்மாஉ வல்லுகாத் பாகம் 2 பக்கம் 23.

பித்அத்துகளை இவ்வாறு இருவகையாகப் பரித்து எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? 'எல்லா பித்அத்துகளும் வழிகேடு, எல்லா வழிகேடுகளும் நரகில்' என்று அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனரே! ன்பது சில அளிவாளிகளின் வினா! விடையைத் தேடும் இந்த வினாவுக்கான பதில் சற்று விரிவாகத்தான் தர வேண்டும்!

'அல்லாஹ்வை நீங்கள் நேசிப்பீர்களாயின்  என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபியே ! கூறுங்கள்' (அல்-குர்ஆன்)

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவது என்றால் என்ன? அவர்களின் சுன்னத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்படுதல்! (சுன்னத் என்றால்-நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் இடம் பெறும்)

பித்அத் என்றால் 'அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இல்லாத ஒரு புதிய செயல்'  (மிர்காத் பாகம் 1, பக்கம் 178)

பெருமானாரின் காலத்தில் இல்லாதவற்றை நாம் செய்யலாமா? கூடாதா? எல்லா பித்அத்துகளுமே வழிகேடுகள்தானா? ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம். இமாம்கள் பித்அத்களை இரண்டாகப் பிரித்து நல்லவை, கெட்டவை எனப்  பெயர் சூட்டியது எந்த அடிப்படையில்? இதனையும் ஹதீஸ்கள் மூலமே தெளிவுபடுத்துவோம்.

ஸெய்து இப்னு தாபித் கூறுகின்றார்கள்: 'யமாமா போர் நடந்துக் கொண்டிருந்த போது கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு என்னை அழைத்துவர ஆளனுப்பினார்கள். நான் சென்றபோது கலீபாவுடன் உமரும் இருந்தார்கள். யமாமாப் போரில் குர்ஆனைப் பாடமிட்டிருந்த பலர் மறைந்து விட்டனர். மீதமுள்ளோரும் இப்படியே கொல்லப்பட்டு விடுவார்களாயின் குர்ஆனைப் பாடமிட்டவர்கள் இல்லாமலாகிவிடுவாரோ என அஞ்சுகின்றேன்.

எனவே திருமறையை நூலுருவில் கொண்டுவர வேண்டுமென உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். 'நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்திராத ஒரு காரியத்தை நாம் எப்படி செய்வது? என்று உமரிடம் கேட்டேன். 'இறைவன் மீது ஆணையாக! இது நல்லதோர் செயல்! என உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். அல்லாஹ் இது விஷயத்தில் உமருடைய இதயத்தை விசாலமாக்கி வைத்தது போன்று எனது இதயத்தை விசாலமாக்கி வைப்பது வரை என்னிடம் பலமுறை எடுத்துக் கூறினார்கள். தற்போது எனக்கும் உமருடைய அபிப்ராயம்தான்! எனவே அறிவாளியும், இளைஞரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் வஹியை அவ்வப்போது எழுதி வந்தவர்களுமான தாங்கள் குர்ஆனை நூலுருவில் சேர்க்கின்ற பணியினை செய்திட வேண்டும்' என கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

பெரியதொரு மலையைப் பெயர்த்தெடுக்க கூறினால் அது எனக்கு இலேசான செயலாக இருந்திருக்கும். நபி பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யத் துணியாததை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?  என நான் கேட்டேன். அபூபக்கர் அவர்கள் சொன்னார்கள். 'இஃதோர் சிறந்த செயல்' என இதயத்துக்கு சமாதானம் ஏற்படுவது வரை பன்முறை இந்தக் காரியத்தை குறித்து அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தனர். பின்னர் நான் குர்ஆனை சேகரிக்கத் தொடங்கினேன்.'

(புகாரி: பாகம் 1, பக்கம் 745)

நபிகளாரின் காலத்தில் இல்லாத செயல்கள் எல்லாமே வழிகேடு. நரகத்தில் சேர்ப்பவை என்றிருக்குமாயின் அபூபக்கர், உமர், ஜைது போன்ற கண்ணியமிகு நபிமணித் தோழர்கள் அண்ணலார் செய்யாத ஒரு செயலைச் செய்து 'அதற்கு நற்செயல்' என பெயருமிட்டனர் என்றால், அவர்கள் வழி கேட்டிற்குத் துணைபோயினரா? அனாச்சாரத்தின் மீது ஸஹாபாக்களும் ஒத்த கருத்து கொண்டிருந்தனரா?

இந்த அடிப்படையில்தான் இமாம்கள் பித்அத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தனர். நல்லது, கெட்டது என வகைப்படுத்தினர்.

எனவே, 'அண்ணலாரின் காலத்தில் இல்லாத புதிய செயல்களுக்கு ஷரீஅத்தில் பித்அத் என்று கூறப்படும். இது நல்லது, கெட்டது என இரு வகைப்படும்.' என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: தஹ்தீபுல் அஸ்மாஉ பாகம் 2, பக்கம் 22

மிர்காத், பாகம் 1, பக்கம் 178.

ரமலானின் ஓரிரவில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நான் பள்ளிக்குச் சென்றேன். சிலர் தனித்தும், வேறு சிலர் ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு இவர்களை ஒரே இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழச் செய்வது மிகச் சிறந்தது எனக் கூறி உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஜமாஅத்தாக்கினார்கள். மற்றொரு நாள் நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிக்குச் சென்றபோது மக்கள் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்தனர். இது கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'இஃ;தோர் நல்ல பித்அத்' என்றனர். அப்துற் றஹ்மான் இப்னு அப்துல் காரி அறிவிக்கின்ற இந்நிகழ்ச்சியை புகாரி (பாகம் 1 பக்கம் 269)ல் காணலாம்.

தராவீஹ் தொழுகையினை ஜமாஅத்தாக தொழச் செய்து அதற்கு நல்ல பித்அத் என்று பெயரும் சூட்டினர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். எனவே எல்லா பித்அத்துகளும் வழிகேடல்ல என்பது தெளிவாகிறது. யாராவது இஸ்லாத்தில் ஒரு நல்ல செயலை அறிமுகப்படுத்தினால் அதனுடைய கூலியும், அதனை செயல்படுத்தியரின் கூலியும், அறிமுகப்படுத்தியவருக்குக் கிடைக்கும். யாராவது ஒரு தீய செயலைக் கொண்டு வந்தால் அதனுடைய தண்டனையும் கிட்டும். (முஸ்லிம் பாகம் 1, பக்கம் 241, இப்னுமாஜா பக்கம் 18, மிஷ்காத் பாகம் 1 பக்கம் 33)

இறைவனும் இறைத்தூதரும் திருப்தியுறாத வழிதவறிய ஒரு பித்அத்தை கொண்டு வருபவனுக்கு அதனுடைய தண்டனையும், அதை செய்பவனுக்குரிய தண்டனையும் கிடைக்கும் (இப்னு மாஜா பக்கம் 19, மிஷ்காத் பாகம் 1 பக்கம் 30) இந்த நபி மொழிக்கு விளக்கமெழுதிய ஹதீஸ்கலை விற்பன்னர் முல்லா அலீ காரீ ரஹ்மத்துல்லாஹி  அலைஹி அவர்கள் நல்ல பித்அத்துகள் தவறானதல்ல என்பதைக் காட்டுவதற்கே தீய பித்அத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமது மிர்காத் பாகம் 1 பக்கம் 202ல் எழுதுகிறார்கள்.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் தான் இமாம்கள் பித்அத்துகளை வகைப்படுத்தினார்களே தவிர, ஆதாரமின்றி வகைப்படுத்தவுமில்லை. புதுக்கொள்கைகாரர்கள் கூறுவது போன்று எல்லா பித்அத்துகளும் வழிகேடுமல்ல. அப்படிக் கூறுபவன் தான் வழிகேட்டின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே ஹதீஸ்கள், ஸஹாபாக்களின் நடைமுறைகள் ஆகயிவற்றின்படி இமாம்கள் வகுத்துத் தந்துள்ள நல்ல பித்அத்களை நாம் செய்தால் அவற்றுக்கு அல்லாஹ்வுடை;யவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையவும் அங்கீகாரம்  உண்டு. நற்கூலியும் உண்டு என்பது உறுதி.

நபிமொழித் தொகுப்பு நூற்களில் 'எல்லா பித்அத்துகளும் தவறானவை' என்று கூறுகின்ற சில ஹதீஸ்களைக் காணலாம். இங்கெல்லாம் பித்அத்தெ ஸய்யிஆ-தீய பித்அத் என்றே நபி மொழிக் கலை வல்லுனர்கள் விளக்கம் தந்துள்ளனர்.
 

'எல்லா பித்அத்துகளும் வழிகேடனாவை' என்று மிஷ்காத் பாபுல் இஃதிஸாம் எனும் பாடத்தில் வருகின்ற நபிமொழிக்கு, மிஷ்காத்தின் விளக்கவுரை நூலான அஷிஃஅத்துல்லம்ஆத் இவ்வாறு விளக்கம் கூறுகின்றது:

'எந்தவொரு பித்அத்தும் அடிப்படைவிதிகளுக்கும், ஸுன்னத்திற்கும், ஷரீஅத்தின் நடைமறைகளுக்கும் ஒத்திருந்தால் அதனை பித்அத்தே ஹஸனா-நல்ல பித்அத் எனவும், முரண்பட்டிருந்தால் பித்அத்தே ஸய்யிஆ-தீய பித்அத் எனவும் கூறப்படும்.

இப்போது பித்அத்துகளெல்லாம் வழிகேடு என்று கூறப்படுவதின் அர்த்தம் புரிந்திருக்கும். வல்லான் அல்லாஹ் உண்மைகளைப் புரிந்து, அதனை ஏற்றுக் கொண்டு செயல்படும் அஹ்லுஸ்ஸுன்னத்தின் அழகிய பாதையில் என்றும் நம்மையும், நம் சந்ததிகளையும் நிலைத்து வாழச் செய்வானாக! ஆமீன்.

முற்றும்.

நன்றி: வஸீலா 1-3-1987.

Oduku Fatwa-ஒடுக்கு பத்வா.

ODUKU  FATWA.(Esale Tawab)

By:- Mahlrathul Qadiriya Arabic College, Kayalpatnam.

ஒடுக்கு பத்வா.

எழுதியவர்: மௌலானா மௌலவி எம்.எஸ். அப்துல் காதிர் (பாக்கவி)-சதர்முதர்ரிஸ், மஹ்லறா.

வெளியீடு: மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டணம்.

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆலிம் உலமாக்களும், அவுலியாக்களும், பேணுதல் மிக்க வரஇய்யீன்களும் நிறைந்த நமதூரிலும் மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதியகளிலும் மூதாதையர்களான ஆபாக்கள் காலமுதல் தொன்று தொட்டு பல நூற்றாண்டு காலமாக ஜனாஸாவை அடக்குவதற்கு முன்பாக ஏழை, எளிவர்களுக்கு தானதருமங்கள் செய்வதையும் ஒடுக்கு என்ற பெயரால் ரொட்டி, பழம், உப்பு, பணம் முதலிய தருமங்கள் ஈவதையும், மூன்றாம் கத்தம், நாற்பதாம் கத்தம் முதலியன ஓதி மையித்துகளுக்கு மேற்படி தவாபுகளை சேர்த்து வைப்பதையும், யாஸீன், பாத்திஹா முதலியன ஓதுவதையும் பற்றி நமது காயல்மாநகரிலுள்ள சில ஜனங்கள் ஆகாது, கூடாது என்று விலக்குவதாகக் கேள்விப்படுகிறோம். இவ்வளவு காலமாக நடைபெற்ற இந்தக் காரியங்கள் ஆகுமானவையா? ஆகாதவையா? மார்க்க சம்பந்தமான ஆதாரங்களுடன் இவை பற்றிய விபரத்தை அருள் கூர்ந்து விளக்கித் தர வேண்டுகிறோம்.

இதற்கு பகரமாக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

 காயல்பட்டணம்                                        (ஹாஜி) எம்கே.டி. முஹம்மது யாஸீன்
        1-7-67                                                                    ஏ.கே. முஹம்மது மீராசாகிபு

விடை

நஹ்மதுஹு நுஸல்லீ அலா றஸூலிஹில் கரீம்.

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் கேட்டிருந்த விஷயங்களைப் பற்றி மற்றும் சில அன்பர்களும் வினவிக் கேட்டுள்ளனர்.

நன்மையான காரியங்களையே நாம் செய்ய வேண்டியதும், நன்மையின் பேரிலேயே உதவியாக இருப்பதும், நன்மையைக் கொண்டே ஏவுதல் செய்து தீமையை விட்டும் விலக்குதல் செய்தலும் நமது கடமையாகும்.

எனவே,தாங்கள் கோரி இருக்கக்கூடிய சன்மார்க்க சம்பந்தமான விஷயங்களைப் பற்றி விரிவான விளக்கம் தருகிறோம். நன்மையின் அடிப்படையிலேயே, சித்த சுத்தியுடன் கூடிய(இக்லாஸ்) அடிப்படையிலேயே, நாமும் நீங்களும் மற்றும் நம் சகோதர முஸ்லிம்களும் ஸாலிஹான நல் அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ் நல்லுதவி செய்வானாக. ஆமீன்.

தென்னகம் முழுவதிலும் ஏனைய பாகங்களிலும் குறிப்பாக நம் காயல்மாநகரத்திலும் தொன்றுதொட்டு பலநூறு ஆண்டுகாலமாய் திறமை வாய்ந்த மிகமிக நம்பிக்கைக்குரிய உலமாப் பெருமக்களுக்கு மத்தியிலும் அவுலியாக்களான மாமேதைகள் மெஞ்ஞானிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து நடந்து வருகின்ற ஒடுக்கு என்று நம் வழக்கச் கொல்லில் செய்யப்படுகின்ற –மய்யித்தை அடக்குமுன், ஏழை எளியவர்களுக்கு ரொட்டி, பழம், காச போன்றவைகளை தரும்(ஸதகா) செய்து அவ்வான்மா சாந்தியடையச் செய்யும் ஈஸால் தவாபினை சார்ந்த நல்லதேர் அமலையும், இற்த 40 நாட்களுக்குள் ஏதோ சில குறிப்பாக 3-ம் நாள், 40-ம் நாள்களில் குர்ஆன் ஷரீபையோ அல்லது அதற்கு இருதயமாக அமைந்திருக்கும் யாஸீன் ஸூராவையோ ஓதி கத்தம் செய்து உறவினர்களுக்கும் , ஏழை எளியவர்களுக்கும் உணவளித்து அவ்வான்மா சாந்திக்காக துஆ செய்துவரும் ஈஸால் தவாபை சார்ந்த நல்லதேர் அமலையும் சமீப காலமாக நம் காயல்மாநகரவாசிகளில் ஓர் சிலரும் ஒன்றிரண்டு உலமாக்களும்கூட அவ்வமல்களை மக்ரூஹ் (மார்க்கத்தில் விரும்பத்தகாதது) என்றும், பித்அத்தேமதுதுமூமா (இஸ்லாமிய அமலில் புதிதாய் திணிக்கப்பட்ட இகழுக்குரிய தீய அமல்) என்றும், பித்அத் கபீஹா (வெறுக்கத்த தகுந்த புதிதாய் புகுத்தப்பட்ட துற் செயல்) என்றும் கூறியும் அவ்வழகிய நல்அமலை தடுக்கவும் மற்பட்டு வருகின்றார்கள் எனவும், ஒரு சில பகுதிகளில் தடுத்தும் விட்டதாகவும் கேள்விப்படுகிறோம்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆகுமென்ற உத்திரவின் கீழ் கையாளப்படுகின்ற நற்செயலை, 'மகமூஹ்', 'பித்அத்' என்று கூறுவதும், தடுக்க முற்படுவதும், ஒரு மறைந்த ஸுன்னத்தை ஹயாத்தாக்குவதற்குப் பதிலாக ஹயாத்தாக இருப்பதையும் மௌத்தாக்குவதற்கு ஒப்பாகும். மார்க்க அனுஷ்டானங்களனைத்தையும் வகுத்தளித்த உலக மாமேதை உத்தமர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு மாறு செய்வதாகும் என்ற உண்மையை குறிப்பிட்ட ஆலிம்களுக்கு எடுத்துக் கூறியும் பலனளிக்காது போகவே அவ்வுண்மையை பொதுமக்களுக்கு மத்தியில் பகிரங்கமாய் எடுத்துக் கூறி ஓர் ஸுன்னத்தை அழித்தொழிக்கும் பாவச் செயலுக்குள்ளாகுவதை விட்டும் தடுக்கவேண்டிய கடமையினை உணர்ந்து இந்த உண்மையை தக்க ஆதாரத்துடன் வெளியாக்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் மார்க்க சம்பந்தமான சகல நற்கிரியைகளிலும் உண்மைகளை உணர்ந்து செயல்பட்டு தக்க தவாபினை தனியோனிடம் பெற்று பெரும் மகிழ்வடைவீர்களாக.

அபுஸயீத் ஸுலைமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இமாம் மேதை, தங்களின் 'ஷரஹ் பர்ஸகீ' என்ற கிரந்தத்தில், உபய்யிப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அவர்கள் கீழ்காணும் ஹதீதை வெளிப்படுத்துவதியதாக கூறுகிறார்கள்.

நாயகத்திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:- 'மௌத்தாகிறது திடக்கிடச் செய்யும் சம்பவமாகும். மய்யித்தை நல்லடக்கம் செய்வதற்குமுன் அவ்வான்மா சாந்தியடைய தரும் செய்து தவாபை சேர்த்து வையுங்கள். குர்ஆன் ஷரீபிலிருந்து இயன்றமட்டில் ஓதியும் அம்மய்யித்திற்கு அதன் தவாபை சேர்த்து வையுங்கள்' என்ற இந்த ஹதீதினை எழுதியபின் அம்மேதை இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் தீர்ப்பை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்கள்.

'இந்த ஹதீது  தௌ;ளத்தெளிவாக காட்டுகிறது, நிச்சயமாக மய்யித்தை நல்லடக்கம் செய்யும்முன் அவ்வான்ம சாந்திக்காக தரும் கொடுப்பது ஸுன்னத்தாகும். குர்ஆன் ஷரீபையும் அவ்வான்மாவிற்காக ஓதி முடிக்கப்பட்டால் அதுவும் ஆகுமான நல்ல அமல் என்பதுடன் அதன் பொருட்டால் அவ்வான்மா ஈடேற்றம் பெறுவதை நல்லாதரவு வைக்கப்படுகிறது. நம் முன்னோர்களும் கூட இந்த நற்கிரிகையை தொடர்ந்து செய்து வந்தே இருக்கின்றார்கள், என்றாலும் ஜனாஸாவைப் பின் துயர்ந்து எஹுதியர்களைப்போல் உண்ணும் உணவைக் கொண்டு செல்வதில்லை என்றும் எழுதி இருக்கிறார்கள்'.

எஹூதியர்கள் செய்யக்கூடியது யாதெனில்:-

அதன் விளக்கத்தை மேற்படி கிதாப் ஷர்பர்ஸஹ் உடைய விரிவுரையாளரான காஜி, முப்தி, செய்யிது முஹம்மது அப்துல் கப்பார் காதிரி என்ற இமாம் தங்களின், 'தஸரீஹுல் அவ்தக்-பி-தாஜுமதி ஷரஹில்பர்ஜக்' என்னும் விரிவுரை கிரந்த்தில் கூறுகிறார்கள். 'ஸஹாபாப் பெருமக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்களளான இறைநேசச் செல்வர்கள் அனைவரும் மய்யித்தை நல்லடக்கம் செய்வதற்கு முன் தர்மம் கொடுத்து அம்மய்யித்தின்பால் தவாபை சேர்த்து வைக்கும் நற்பழக்கத்திலேயே இருந்து வந்திருக்கிறார்கள். எஹூதியர்களின் வழமையாதெனில், ஜனாஸாவுடன் உணவுகளை மய்யவாடிக்குக் கொண்டு சென்று மய்யித்துக்குழியின் மேல் வீணாக தாங்கள் கொண்டு செல்லும் உணவுகளை யாருக்கும் பலனில்லாது போட்டுவிட்டு வரும் துற்பழக்கத்தை கையாண்டு வருவதாகும். இவ்வாறானா வீண் விரய வழக்கத்தை இன்றளவும் எஹுதிகளும் அவர்களைப் பின்பற்றிய வட இந்தியர்களில் சிலரின் வழமையும் இருந்து வருகிறது. வீணான, இஸ்ராபான இத்தகைய துற்செயலைத் தடுக்கும் நோக்கத்தில்தான் முஸன்னிபு இமாம் (ஆசிரியப் பெரியார்) அவர்க் எஹுதியர்களைப் போன்று உணவை வீண் விரயப்படுத்தலாகாது எனக் கூறினார்களே தவிர முஸ்லிம்களாகிய நாம் ஏழை எளியவர்களுக்குப் பங்கிடும் வழக்கத்தை கண்டிக்கவில்லை.

'ஈஸால்தவாப்' என்ற நல்ல எண்ணத்தில் உணவுப் பொருட்களை மய்யவாடியின் பக்கம் கொண்டு சென்று ஹக்குதாரிகளுக்கு, ஏழை எளியவர்களுக்கு, முஸாபிர்களுக்கு கொடுக்கப்படுகிறதென்றால், தற்போது நடைபெற்று வருவது போன்றுள்ள நற்செயலைத் தடுக்க இடமே இல்லை. இதே தீர்ப்பு 'பதாவா முல்த்தகத்' என்னும் கிரந்தத்திலும் காணக்கிடக்கிறது என்றும் அவ்விரிவுரையாளர் தெரிவிக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட ஹதீதும், அதன் முழு விபரமும், ஆதாரமும் 'தஸ்ரஹுல் அவ்தக்-பி-தர்ஜுமதி ஷரஹில் பர்ஸக்' எனும் கிரந்தத்தில் ஒன்றாம் பாகத்தில் (தபனுக்கு) அடக்கத்திற்கு முன் கையாளப்படுவது சம்பந்தமான பாடத்தில் 123-ம் பக்கத்தில் தௌ;ளத்தெளிவாய் வந்திருக்கிறது.

பிக்ஹு கிரந்தங்களில், மௌத்து உடைய –நேரங்களில் நடைபெறும் செயல்களைத் தடை செய்யப்பட வேண்டுமெனக் கூறியிருப்பது, மார்க்கத்தில் அனுஷ்டான முறைகளில் அனுமதிக்க முடியாத வீணான துற்செயலை-ஈஸால் தவாபிற்காககொடுக்கப்படவிருக்கின்ற பொருள்களில், 'மார்க்கம் இன்னதென தெரியா பலதரப்பட்ட மக்களால் பல பல ஊர்களில் எஜூதியர்கள் கையாண்டது போன்று கையாளப்படுகின்ற விரும்பத்தகாத ஒருசில நடைமுறைகளை மட்டுமேயேன்றி அத்தருமத்தை தடுக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஒரு வாசகமும் ஆதாரப்பூர்வமாய்க் காணக் கிடைக்கவில்லை.'

கபுரின் மீது ஆடு போன்றதை வைத்து சிலைகளுக்குப் பலியிடுவது போன்று பலியிடும் துற்செயலை 'கல்யூபி', 'ஹாஷியத்து புஜைரமீ' போன்ற கிரந்தங்களில் மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். அதுபோன்று கபுரின் அருகாமையாக வைத்து பலியிடும் துற்செயலை 'பைளுல் இலாஹி' எனும் கிரந்தத்தில் கண்டித்திருக்கிறார்கள். சிலைகளுக்கு முன்னால் ரொட்டி, பழம், கறிகளைப் படைத்து வீணாக்கி வரும் பண்பற்ற ஏனைய மதவாதிகளுக்கு ஒப்பான வீண் பழக்கத்தைத்தான் 'நிஹாயத்துல் அமல்' எனும் கிரந்தத்தில் கண்டித்திருக்கிறார்களே தவிர, நடைமுறையில் உள்ள 'ஒடுக்கு' எனும் ஸதகாவை ஏழை, எளியார்களுக்குப் பங்கீடு செய்யும் தான தர்மத்தைக் கண்டிக்கவில்லை என்பதை நன்கு உணர வேண்டும்.

ஜனாஸாவைத் தூக்கிச் சுமந்து செல்லும்போது உணவுப் பெட்டியையும் அத்துடன் சேர்ந்தாற்போல் இடைவிடாது குப்பார்களின் ஜனாஸாவிற்குமுன் தேங்காய், பழம், வெற்றிலை வகைகளைச் சுமந்து செல்வது போன்று சுமந்து சென்று மையவாடியில் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு ஆடு போன்றவைகளை பிரேதக் குழியருகாமையாகப் பலியிட்டு தாங்கள் தூக்கிச் சுமந்து வந்த சாமான்களோடு இந்த இறைச்சியையும் கலந்து மையத்திற்குப் படைத்து வரும்முறையைத்தான் கண்டிக்கத்தக்கது என 'மக்தல்' எனும் கிரந்த்தில் கூறப்பட்டிருக்கிறது.

மேற்கூறப்பட்டவைகளைப் போன்று அன்னிய மதத்தவரின் கிரிளைகளுக்கு ஒப்பாகும் வகையில் எவ்வித செயல்முறைகளும் நம் இஸ்லாமிய சமுதாயத்தில் இல்லாததை இருப்பதாகக் கருதி, நம் குறிக்கோளுக்கே ஊறு விளைவிக்கும் முறையில் கற்பசைன் செய்ய முனைவது விவேகமான செயலாகாது.

முன் கூறப்பட்ட ஹதீதில் கண்ட உத்திரவு ஸதகா தர்மம் கொடுக்கச் செய்யும் உத்திரவாகும்-ஏவலாகும். தடுக்கப்பட வேண்டியவை என்று புகஹாக்கள் கூறியிருப்பது அதன் மீது நடைபெறும் பயனற்ற துர் செயல்களைத்தான் குறிப்பதாகும். அவர்கள் இத்தருமத்தையே தடுக்கப்பட வேண்டுமென கூறினார்கள் என்று கருத்து வைத்தால் மேற்கூறப்பட்ட ஹதீதைப் போன்று எத்தனையோ பல ஹதீதுகளுக்கு முரணாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்வதாகிவிடும்.

மார்க்க சட்ட வரம்புகளான பிக்ஹ் ஞானமனைத்திற்கும் ஆதார மூலங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் ஹதீதிற்கு எதிராக ஒரு தீர்ப்பை வெளியாக்குவது பெரும் பாவத்தை, குற்றத்தைச் சார்ந்தது என (உஸூல்) மூல கிரந்தங்களில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வுலகத்தையே விட்டு மாறி மறு உலகத்திற்குள் புகுந்து தனித்துத் திணறி, திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் வேளையில், முன்கர்நகீர் அலைஹிஸ்ஸலாம் எனும் மலக்குகள் கேள்விக்கணைகளைத் தொடுத்த மாத்திரத்தில், பதறிப் பரிதவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், மனிதகோடிகளின்பால் இரக்கமுள்ள ரஹ்மானின் அன்பும், பரிவும் எங்கும் வியாபித்திருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டிஅடக்கத்திற்குமுன் தரும் செய்து அவ்வான்மாவின் அலங்கோல நிலையை, பதஷ்ட நிலையை அமைதியுறச் செய்யுங்கள் என்று உம்மத்துக்ளின்பால் மிக அக்கறையும், இரக்கமும் கொண்ட உண்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியிருப்பது எவ்வளவு பொருத்தமாகவும், அவசியமும், அவசரமுமான நற் கருமமாகும் என்பதனை நாம சிந்தனை செய்ய கடமைப் பட்டிருக்கிறோம்.

இந்த குறிப்பிட்ட தருமத்திற்கு நம் காதயல்மாநகரத்தின் வழக்கச் சொல் 'ஒடுக்கு' என்பதும் எவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது. கபுரின் அமளிகளை ஓரளவேனும் ஒடுக்கிஅ டக்கி அமைதியை ஏற்படுத்துகிறது, பதட்டமில்லாது ஒடுக்கத்தை உண்டாக்குவதாயிருக்கிறது என்பதால் அவ்வொடுக்கு என்ற வார்த்தையும் நல்லறிகுறியாய் அமைந்திருக்கிறது என்றுரைக்கலாம்.

இரக்கமுள்ள ஏகநாயன் எவ்வித இக்கட்டான வேளையில் தனது அருளால் ஒரு சின்னஞ்சிறு தருமத்தின் மூலம் மனித இனத்தவரி;ன் இப்பேரிடிக்கு அதனை ஈடு கொடுப்பதாக அமைத்திருக்கிறான் என்ற உண்மை தத்துவத்தைப் புரிந்து மிக மிக நன்றி செய்ய கடமைபட்டிருக்கிறோம் என்பதை மனதில் இருத்திக் கொள்வோமாக. அல்லாஹ்வும் ரஸூலும் நமக்கு அளித்திருக்கும் இத்தகைய நல்வாய்ப்பை நாம் உதாசீனம் செய்வதும், அதை உதறித்தள்ளிவிடுவதும் புத்திசாலித்தனமாகாது.

மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் குர்ஆன் ஷரீபு ஓதி கத்தம் செய்து உணவளித்து வரும் நல் அமலுக்கு ஆதாரம் வருமாறு:-

நிச்சயமாக, நயவஞ்சகர்கள் என நிந்திக்கப்படும் முனாபிக்குகளை 40 நாட்களுக்கு அவர்களின் கப்ரில் கடும் சோதனைகளுக்குள்ளாக்கப்படுகுpறது என்ற உறுதியான ஹதீது இருக்கின்ற காரணத்தால், நிச்சயமாக, மய்யித்தின் நன்மைக்காக, சாந்திக்காக அந்நாட்களில் உணவளிப்பதை 'முஸ்தஹப்பு, தவாபு கொடுக்கப்படும் நல் அமல் என்ற முடிவில் ஸஹாபா பெருமக்கள் நடத்திவந்தார்கள் எனற தௌ;ளத்தெளிவான ஆதாரத்தை 'பதாவாகுப்றா' எனும் கிரந்தத்தில் 2-ம் பாகத்தில், ஜனாஸாவின் பாடத்தில், 31-ம் பக்கத்தில் இமாம் இப்னுஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறிவிட்டு, இந்த ஹதீதிற்கு (மௌத்தான நேரத்திலிருந்து மய்யித்திற்காக ஸஹாபாக்கள் உணவளித்து வந்தார்கள் என்ற ஹதீதிற்கு) எவ்வித மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அதே பக்கத்தில் மேதை இமாம் இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விளக்குகிறார்கள்.

நம் ஷாபீயீ மதுஹபில் மிகப் பிரதான அங்கம் வகிக்கின்ற மேன்மையான ஷெய்கு என்று அழைக்கப்படுகின்ற, இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மய்யித்திற்காக ஸஹாபாக்கள் உணவளித்து வந்தர்கள் என்ற ஹதீதை, தங்களின் சிரந்தமான 'ஷரஹ் முஸ்லிமில்' ஊர்ஜிதம் செய்திருக்கின்றார்கள். மற்றொரு ஷெய்கு என்று அழைக்கப்படுகின்ற ராபிஃ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மய்யித்திற்காக உணவளிக்கும் ஹதீது எவ்வித எதிர்ப்புமின்றி பிரபல்யமான மஷ்ஹூர் ஆன ஹதீது ஆகும் என்று கூறியிருக்கிற செய்தி மேற்கூறப்பட்ட பக்கத்தில் பகிரங்கமாய் காணக்கிடக்கிறது.

மேலும், மேதை இப்னுஹஜர் இமாம் ரஹிமஹுல்லாஹு அவர்கள் அதே மேற்கூறப்பட்ட தொடரில் 32-ம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள்;- 'உணவளிக்கும் நற்கருமம் மய்யித்தை அடைவதாயிருக்கிறது. அதன் பலன் மய்யித்திற்கு மிகவும் உதவியளிப்பதாய் இருக்கிறது. மய்யித்திற்காக உணவளிப்பது ஸதகா எனும் தர்மத்தைச் சார்ந்த ஸுன்னத்தான கருமமாகும். இதில் உவ்வித எதிர்ப்புமின்றி இமாம்களின் (இஜ்மாஃ) ஏகோபித்த முடிவாயிருக்கிறது' என்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

நம் ஷாபி மத்ஹபில் மூலத்தூண்களாக இருக்கின்ற இமாம் நவவி, இமாம் ராபிஃ, இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹு இவர்களின் தீர்ப்பிற்கும், கருமத்திற்கும் எதிராக யாருடைய சொல்லுக்கும் மதிப்பில்லை என நம் மத்ஹபின் முடிவிருப்பதால், மய்யித்திற்கு குறித்த நாட்களில் இறந்ததிலிருந்தே உணவளிப்பது முஸ்தஹப்பு என்பது உறுதியாய்விட்டது.
மய்யித்திற்காக உணவளிப்பது ஸஹாபாப் பெருமக்களால் நடத்திக் காட்டப்பட்டிருப்பதுடன், ஷாரிஃ, ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்களே மய்யித்து வீட்டில் சாப்பிட அனுமதித்து வழி காட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கப்படுகறிது.

ஹதீது கிரந்தங்களில் உலன முஸ்லிம்களுள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் 'ஸிஹாஹு ஸித்தா' என்ற ஆறு ஹதீது மூலகிரந்தங்களில் அபூதாவூது எனும் கிரந்த்தில் ஆஸிமிப்னு குலைப் ரலியல்லாஹு அன்ஹீ என்ற ஸஹாபி ரிவாயத் செய்கிறார்கள்:-

'ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்களும், நாங்களும் ஓர் மய்யித்தை நல்லடக்கம் செய்துவிட்டுத் திரும்பும்போது அந்த மய்யித்து வீட்டார் எங்களை அழைத்து விருந்தளிக்கவே நாங்கள் எல்லோரும் சாப்பிடலானோம். எங்கள் நாயகம், சுத்த சத்திய உத்தம நபி ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் வாயில் உணவை வைத்தவாறு எங்களை நோக்கி கூறினார்கள், ' இந்த ஆடு உரியவரின் அனுமதியின்றி அறுக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன் என கூறினார்கள். உண்மையில் விசாரணை செய்யும் போது, உரியவர் சம்மதம் தருவார் என்ற நம்பிக்கையில் சம்மதம் பெறாமலேயே அறுத்துச் சமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின் அவ்விறைச்சியை கைதிகளுக்குக் கொடுக்க உத்திரவு செய்தார்கள். நியதிப்படி அனுமதிபெற்று அவ்வாடு அறுக்கப்பட்டிருக்குமானால் முறைப்படி சாப்பிட்டிருப்பார்கள். அனுமதி பெறாத காரணத்தால்hதான் அவ்வுணவை காப்பிடவில்லை; என்ப துநன்கு தெளிவாகிறது. இந்த ஹதீதிலிருந்து மார்க்க பிக்ஹுச் சட்டம் வகுக்கப்படுகிறது, மய்யித்திற்காக உணவளிப்பது ஷாரிஃரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் முன்பு நடத்தப்பட்ட 'ஸுன்னத்' நல்வழி முறையாகும். இந்த ஹதீதை அறிய கிடைக்காமல் இப்னு ஹுமாம் போன்ற இமாம்கள், மய்யித் வீட்டில் உணவு தயாரிப்பது மக்ரூஹ் என்று கூறிவிட்டார்கள். இவர்களின் தீர்ப்பை, மேற்காணும் ஹதீது உடைத்துவிட்டது என பகிரங்கமாய், முல்லா அலிகாரி இமாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் கிரந்தமான 'மிர்காத்தில்' கூறியிருக்கிறார்கள்.

ஷாரிஃ ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் மய்யித்து வீட்டில் சாப்பிட்டிருக்கும் சம்பந்தமான மேற்கூறப்பட்ட முழு விளக்கமும் 'மிஷ்காத்துல் மஸாபீஹ்' கிரந்தத்தில் 'முஃஜிஸாத்' எனும் பாடத்தில் 544ம் பக்கத்தில் காணக்கிடக்கிறது.

மய்யித்து வீட்டில் நடப்பவற்றை தடுக்கப்படவேண்டுமென ஹதீதில் கூறப்பட்டிருப்பது, இஸ்லாத்திற்கு முன் (ஜாஹிலிய்யா) அறியாமையின் காலத்தில் நடந்துவந்த மூடப்பழக்கமான, மய்யித்து வீட்டில் ஒப்பாரி வைத்து அழுது ஓலமிட்டு, அதன் மூலம் வயிறு வளர்த்து வந்த கூட்டத்தை முஸ்லீம் மய்யித்து வீட்டிலும் அக்கூட்டத்தாரை அழைத்து ஒப்பாரி போடச் செய்து, அதற்கென அவர்களுக்கு உணவுகள் தயாரித்து உண்ணச் செய்துவந்த துர்பழக்கத்தைத்தான் மிகமிக வன்மையாகக் கண்டித்து ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மேற்கூறப்பட்ட ஹதீதுகள், அந்த ஹதீதுகுளை ஆதாரமாய் அமைத்து பகீஹுகளான-நம் ஷாபி மத்ஹபில் மூலத்தூண்களாயிருக்கின்ற இமாம் நவவி, இமாம் ராபிஃ, இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் போன்றவர்களின் தீர்ப்பையும் இந்த ஹதீதிற்கும் இம்மேதைகளுக்கும் எதிராக மேற்சொன்ன இப்னுல் ஹுமாம் போன்றவர்கள் 'மக்ரூஹ்' என கூறிய தீர்ப்பையும், இவருடைய மக்ரூஹ் என்ற தீர்ப்பை ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் முன்பு சாப்பிட்ட ஹதீது ரத்து செய்துவிட்டது என முல்லா அலிகாரி இமாம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதையும் ஆராயும்போது, திறமைமிக்கவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று ஏற்றி போற்றிப் புகழப்படும் நம் மூதாதைய ஆபாக்களான உலமாக்களெல்லாம் அநேக கிரந்தங்களைப் பார்த்து உண்மைகளை உய்த்துணர்ந்து தெளிந்து அமல் செய்தும் பிறரைச் செய்யச் செய்தும் வந்திருக்கிறார்கள். இப்னு ஹுமாம் போன்றவர்களின் மகரூஹ் என்ற கருத்துக்கு சற்றும் மதிப்பளிக்காது மாமேதைகளான இப்னுஹஜர், இமாம் றாபிஃ, இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் போன்றவர்களின் (ஹதீதுகளின் ஆதார அடிப்படையில் அமைந்த) தீர்ப்புக்கு மதிப்பளித்து இதுகாறும் நடைமுறையிலிருக்கச் செய்திருக்கிறார்கள் என்ற முடிவிற்கு நாம் வந்து சேரவேண்டும்.

மேற்கண்ட ஒடுக்கு என்ற தருமமும் இறந்த மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் உணவளிக்கும் தருமமும் ஸுன்னத்தான நற்கருமம் என்பதை நரூபிக்க மேறகண்ட ஐந்து கிரந்தங்களைப் போன்று இன்னும் எத்தனையோ ஹதீது பிக்ஹு கரந்தங்களின் அதாரங்களையும் கூறுவதென்றால் விரிவடையும் என்பதை அஞ்கி அவ்வாதாரங்கள் காணக்கிடைக்கின்ற ஓர் சில கிரந்தங்களின் பெயர் நாமங்களை மட்டும் ஈண்டு எடுத்து கூறப்பட்டிருக்கிறது. அவைகள்: 'ஸுஹ்து, வஹ்ஹாபீன், மஜ்மயிஸ்யவாயித், ஸுலைமானுல் ஜமல், ஷரஹ் ஸுதூர், உம்ததுல்காரி, முஸ்லீம், புகாரி போன்ற உயர் கிரந்தங்களில் இவ்வாதாரங்கள் நிறைந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, மவுத்தின் போது அடக்கத்திற்கு முன், தொன்று தொட்டும், தற்போதும் நடைபெற்று வருவது போன்ற ஒடுக்கு என்ற பெயரில் நடத்திவரும் தருமத்தை மய்யித்தின் நன்மைக்காக கொடுத்தும், அவ்வான்மா சாந்தியடைச் செய்வது ஸுன்னத்தான, ரஸூல்கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்லியும் செய்தும் காட்டிய, அப்படியே அருமை ஸஹாபாக்கள் நடத்திக் காட்டிய, அவ்வண்ணமே இமாம்களால் ஏற்றுச் சம்மதித்துத் தீர்ப்பளித்தும் விட்ட, இதுகாறும் மார்க்க வரம்பில் அணுவளவும் வழுவாது ஒழுகி வந்துள்ள நம் நாட்டு உலமாக்களான மூதாதையர்களால் நடைமுறையில் கொண்டு வரப்படுகின்ற, ஸுன்னத்தான நல்லதோர் அமலாகும். மக்ரூஹ் அல்ல-பித்அத் அல்ல என்பது ஸுன்னத்து வல் ஜமாஅத் இமாம்களின் உலமாக்களின் முடிவாகும், தீர்ப்பாகும் என்பதை பகிரங்கமாய் பொதுமக்களுக்கு மத்தியில் ஆதாரப்பூர்வமாய் அறிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்புமிக்க ரப்புல் இஸ்ஸத், அஹ்கமுல் ஹாக்கிமீன் நம்மனைவரையும் ரஸூல் கரீம் ஸல்லல்லாஹு  அலைஹி வ ஸல்லம் அவர்களின் அடிச்சுவட்டை விட்டும் அணுவளவும் நழுவாது பின்பற்றியொழுகி வர அருள்புரிவானாக. ஆமீன்.               வஸ்ஸலாம்.
 

இங்ஙனம்,

M.S. அப்துல்காதிர் (பாக்கவி)
(ஸத்ருல் முதர்ரிஸ் மஹ்லரத்துல் காதிரிய்யா)

மஹ்லறா, காயல்பட்டணம்

Indian Court Judgement Against Tableegh Jamat-தப்லீகிற்கு எதிரான இந்திய நீதி மன்ற தீர்ப்புக்கள்

தப்லீகிற்கு எதிரான இந்திய நீதி மன்ற தீர்ப்புக்கள்:

1. குஜராத் அஹமதாபாத் கபாடவாஞ்ச் நீதிமன்ற தீர்ப்பு- கிரிமினல் கேஸ் எண்: 1129 of 1969 Offence under section 500 of I.P.C.

அறிமுகம்.

குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் நகரில் 1953 ம் ஆண்டு 'தாருல் உலூம் ஷாஇ ஆலம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனமானது ஜமல்பூர் சாலையில் அமைந்திருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகமாகும். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் இது இஸ்லாமிய கொள்கை விளக்கங்களை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தனர்கடந்த பல ஆண்டுகளாக இஸ்லாமிய கலாச்சாரத்தையும், அறிவியலையும் நம் மக்களிடையே பரப்பி வருகிறார்கள்.

ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இஸ்லாமியஇலக்கியங்களை கற்று தேர்ந்து 'ஹாபிஸ்','மௌலவி','காரி' இன்னும் இது போன்று பல பட்டங்கள் பெற்று இங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

படித்தவருக்கும், பாமரர்க்கும், அறிஞருக்கும், ஏழை, பணக்காரர்களுக்கும் மற்றும் எல்லாவிதமான மக்களுக்கும் இது ஓர் ஆன்மீக ஒளி வீசும் கலைக்கூடமாக திகழ்ந்து வருகிறது.

மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க இங்கு அனுபவமிக்க கலாஞானம் நிறைந்த சங்கைமிகு மௌலவிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு ஃபத்வா அளிப்பதற்கென்றே தனிப் பிரிவு ஒன்று இயங்குகிறது. நாள்தோறும் இங்கு நேரிலும் தபால் மூலமாகவும், உள்நாட்டிலிருந்தும் கடல் கடந்த நாடுகளிலிருந்தும் கேட்கப்படும் ஃபத்வாக்களுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டேயிருக்கின்றன. ஆண்டுதோறும் நிர்வாகச் செலவு ரூ70 ஆயிரம் வரை ஆகிறது. எந்தவிதமான நிலையான வருமானமும் இல்லாமல் நன்கொடையைக் கொண்டே அல்லாஹ்வின் அருளால் இயங்கி வருகிறது.

முன்னுரை

அன்புள்ள சுன்னீ முஸ்லிம்களே!

    இந்திய வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்றத்திலே 'ஸுன்னிகள்','வஹ்ஹாபிகளி'ன் கொள்கைகள் தெளிவாகவும், விரிவாகவும் ஆணித்தரமாகவும் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதத்தின் முடிவில் இறை அருளால் வஹ்ஹாபிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது. 'ஸூன்னி முஸ்லிம்களின் கொள்கை வென்றது.

'தாருல் உலூம் ஷாஇ ஆலம்' ஸுன்னி முஸ்லிம்களின் கலைக்கூடமாகும். இது குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் நகரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு இலவசமாக நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஸுன்னி பிரிவின் கொள்கைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது ஒரு டிரஸ்ட் ஆகும்.இங்கிருந்து குஜராத் மொழியில்'தையிபா' என்ற பெயரிறல் ஓர் இஸ்லாமிய மாத இதழ் வெளிவருகிறது. அதில் இஸ்லாமிய மக்களுக்குத் தேவையான அறிவு விளக்கங்கள் அனேகம் பிரசுரிக்கப்படுகின்றன.1968ம் ஆண்டு டிசம்பர் இதழில் காயிரா மாவட்டத்தின் கபாட்வாஞ்ச் என்னும் ஊரில் அமைந்திருக்கும் ஜீம்ஆ மஸ்ஜிதில்  பணியாற்றி வந்த பேஷ் இமாம் ஜனாப் குலாம் ஹுஸைன் தார்ஸோத் அவர்களைப் பற்றி ஒரு செய்தி பிரசுரமாயிருந்தது. அந்த இதழில் அவரைப் பற்றி 'வஹ்ஹாபி தேவ்பந்தி' என்று விவரிக்கபப்ட்டிருந்தது. மேலும் தேவ்பந்தி வஹ்ஹாபிக்ள பகிரங்கமாக மேன்மைக்கும், சங்கைக்குரிய நமது நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறு செய்கிறார்களென்றும், கபாட்வாஞ்ச் முஸ்லிம்கள் அந்த மௌலவியை பள்ளியை விட்டே விரட்டி விட்டார்களென்றும் இன்னும் அந்த மௌலவியின் நடவடிக்கையை பற்றியும், வஹ்ஹாபிகள் கொள்கை சம்பந்தமாகவும செய்திகள் வெளிவந்தன. எனவே ஜனாப் மௌலி குலாம் ஹுஸேன் அவர்கள் கபாட்வாஞ்ச் முதல் வகுப்பு குற்ற இயல் நீதிமன்றத்தில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 500ன் கீழ் 22-5-69-ல் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் தன்னை அவமானப்படுத்த வேண்டுமென கெட்ட எண்ணத்துடன் தாருல் உலூமின் பொது செயலாளராகிய ஹாஜி சுலைமான் இப்றாகீம், 'தையிபா' இதழின் ஆசிரியராகிய செய்யிது ஆசாத் அலி டாக்டரும் செயல்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு அந்த நீதிமன்றத்தில் 1129/69 என்ற நம்பரில் பதிவாக்கப்பட்டது. அதாவது 1969-ம் ஆண்டில் அந்த நீதிமன்றத்தில் அது 1129-வது வழக்காகும்.

இந்த வழக்கில் வாதி குலாம் ஹுஸேன் தனது சார்பில் வாதாட அனுபவமிக்க வழக்கறிஞர் திரு.ராகின்தாஸ் வி. காந்தி என்பவரை நியமனம் செய்திருந்தார். எதிரிகள்(சுன்னீகள்) தங்களுக்காக அஹமதாபாத்தைச் சார்ந்த பிரபல வழக்கறிஞர் ஜனாப்.உஸ்மான்பாய் காதிரி எம்.ஏ.எல்.எல்.பி. அவர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜனாப்.காதிரி அவர்கள் தாருல் உலூம் நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக அதற்குமுன் ஐந்து ஆண்டுகள் சிறப்பு பணியாற்றி வந்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் வாதி குலாம் ஹுஸேன் அவர்களை நமது அட்வகேட் ஜனாப் காதிரி அவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக குறுக்கு விசாரணை செய்தது மொத்தம் 12 மணி நேரமாகும். குறுக்கு விசாரணையின்போது நமது அட்வகேட் அவர்கள் குலாம் ஹுஸேன் மௌலவியிடம் தேவ்பந்தியாக்களின் உருது,பார்ஸி,அரபி புத்தகங்களை காட்டி கேள்விகள் கேட்டார்கள். மேலும் தேவ்பந்தி உலமாக்கள் ரசூலுல்லாஹ் பற்றியும், அவ்லியாக்கள் பற்றியும் குறை கூறி எழுதியுள்ள பற்றி குறிப்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.இறுதியாக அவர் தான் தேவ்பந்தியரின் கொள்கைகளையும், தத்துவ விளக்கங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும் அதனால் தன்னை 'தேவ்பந்தி' என அழைப்பதில் தனக்கு ஆட்சேபணையில்லை என்றும் ஒப்புக் கொண்டார்.

ஒவ்வொரு வாய்தாவிற்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வழக்கு மன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். வழக்கு நடந்த இடமான கபாட்வாஞ்ச் நகர் காயிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.அதாவது அஹமதாபாத் நகரிலிருந்து 64 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.

மேன்மைக்குரிய நீதிபதி திரு.கிருஷ்ணபண்டிட் அவர்கள் தனது தீர்ப்பை 27-2-1970 அன்று கூறினார்.எதிரிகள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். அத்தோடு மௌலவி குலாம் ஹுஸேன் ஒரு வஹ்ஹாபி தேவ்பந்தி  என்றும் அவர் சுன்னத் வல் ஜமாஅத் போர்வையில் வஹ்ஹாபிக் கொள்கைகளை பிரச்சாரம் செய்தது உண்மைதான் என தமது தீர்ப்பில் கூறியுள்ளார். இது 'ஸுன்னி' முஸ்லிம்களுக்கு இறைவன கொடுத்த மாபெரும் வெற்றியாகும். ஒரு மௌலவி, தன்னை வஹ்ஹாபி என்று அவமானபடுத்திவிட்டார்கள் என நீதி மன்றத்திலே வழக்கு தொடர்ந்து இறுதியாக சாட்சிகள் மூலமாக அவர் 'வஹ்ஹாபி'தான் என நிரூபிக்கப்படடு, உயர் நீதிமன்றத்திலும் அந்த தீர்ப்பு சரிதான் என ஊர்ஜிதம் செய்யப்பட்டது,'ஸுன்னி' முஸ்லிம்களாகிய நாம் தான் இந்த வழக்கின் அகமியத்தை அறிந்து மகிழ முடியும்.

27-2-1970-ம் தேதி தீர்ப்பு நாளன்று காத்லால், மாஹுதா, புரோக், பரோடா, ஆனந்த், சௌராஷ்டிரா, அகமதாபாத் இன்னும் குஜராத் மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இந்த வழக்கு இஸலாமயிர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணியது. இங்கிலாந்து,ஆப்பிரிக்கா முதலிய வெளிநாடுகளிலிருந்தும் இந்த வழக்கின் முடிவு பற்றி இஸ்லாமியர்கள் ஆவலோடு விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
விடுதலை என தீர்ப்பு அளிக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வழக்கை வெற்றிகரமாக நடத்திய அட்வகேட் ஜனாப்.காதிரி அவர்களுக்கும் வழக்கின் எதிரி(ஸூன்னி)களுக்கும் மலர் மாலைகள் அணிவித்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துக் கொண்டார்கள். பின் நீதிமன்றத்திலிருந்து பெரும் ஊர்வலம் ஒன்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடந்து ஜும்மா மஸ்ஜிதை வந்து அடைந்தது. மஸ்ஜிதில் அனே பெரியார்கள் கலந்து பேருரை நிகழ்த்தினார்கள். மேலும் வழக்கிலே வெற்றி ஈட்டி தந்த இறைவனுக்கு நன்றியும் செலுத்தப்பட்டது.

பரோடாவிலிருந்து வெளியாகும் மற்றொரு இஸ்லாமிய ஏடான 'அல்ஹாதி'யிலும் இதே செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அதன் மீதும் பேஷ் இமாம் அவர்கள் இதே நீதிமன்றத்தில் தனி வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் வரிசை C.C.1130/69 ஆகும். இந்த வழக்கிலும் பேஷ் இமாம் அவர்கள் 8 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பும் அதே நாளில் அதாவது 27-2-197ல் தான் சொல்லப்பட்டது. இரு வழக்குகளிலும் வெற்றி ஸுன்னி முஸ்லிம்களுக்கே!

இந்த வழக்கின் விபரங்கள் அனைத்தும் குஜராத் மாநிலத்திலிருந்து வெளியாகும் அனேக நாடுகளிலும் குறிப்பாக 'சான்டேஷ்ஈ டூஜன்ஸாட்டா' போன்ற பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தது. 'தையிபா' பத்திரிகையிலும் மிக விரிவாக பிரசுரிக்கப்பட்டது. இருப்பினும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த வழக்கின் தீர்ப்பை குஜராத்திலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டுமென வேண்டினர். உள்நாட்டிலும்,வெளிநாட்டிலிருந்தும பல நேயர்கள் இந்த விண்ணப்பம் விடுத்திருந்தனர். எனவே முதன் முதலில் C.C.1130/69 என்ற வழக்கின் தீர்ப்பு குஜராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவில் வெளிவந்தது. ஸுன்னி முஸ்லிம்களால் நாடெங்கிலும் இது பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டது. மேலும் அயல்நாடுகளிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை என ஆயிரக்கணக்கான அன்பர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எனNவு எங்களின் நல் ஆதரவாளர்களுக்காகவும், எங்கள் மீது பரிவும், பாசமும் கொண்டவர்களுக்காகவும் குறிப்பாக ஸுன்னி முஸ்லிம்களின் நன்மையைக் கருதியும் C.C.1129/69 வழக்கு தீர்ப்பு நகலை இதோ ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம். இஸ்லாமிய மக்களுக்கு ஸுன்னி முஸ்லிம்களின் கொள்கைகளையும் தத்துவார்த்தங்களையும் எடுத்தியம்புவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பென கருதி இதை பிரசுரிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்வு அடைகிறோம். C.C.1130/69 என்ற வழக்கின் தீர்ப்பும் இதே மாதிரி இருப்பதால் C.C.1129/69 என்ற வழக்கின் தீர்ப்பை மட்டும் இங்கே தருகிறோம்.

மௌலவி ஜனாப். குலாம் ஹுஸேன் அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ;அப்பீல்' தாக்கல் செய்தார்கள். அது அங்கு ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு(அவர்களுக்கு)'தேவ்பந்தி'களுக்கு மற்றொரு மரண அடியாகும்.

நாங்கள் ஈடுபட்டிருந்த அறப்போரில் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பலவிதங்களிலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்த பல்லாயிரக்கணக்கான ஸுன்னி முஸ்லிம்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டவர்களாவோம். மேலும் உண்மையான இஸ்லாமயி கொள்கை கொடிகட்டி பட்டொளி வீசி பறக்க உதவிய அவர்களுக்கு எங்கள் ஆழிய நன்றி!

இங்கனம்,

1-9-1971                                                           ஹாஜி சுலைமான் இப்றாஹிம்

அஹமதாபாத்                                                    ஸுன்னி,ஹனபி,காதிரி,ராசவி,

  தாருல் உலூம் ஷாஇ   ஆலம்,
ஜமல்பூர் ரோடு, அஹமதாபாத்,

                                                                                                      

முதல் வகுப்பு குற்ற இயல் நீதிமன்றம், கபாட்வாஞ்ச், குஜராத் மாநிலம்.

நீதிபதி: மேன்மைக்குரிய திரு. கிருஷ்ண பண்டிட் எம்.ஏ.,எல்.எல்.பி.
C.C.1129/69

மௌலானா குலாம் ஹுஸேன் முஹமத்பாய் தர்ஸோத்- வாதி

1. செய்யது ஆசாத் அலி எம். டாக்டர் – எதிரி

2. ஹாஜி சுலைமான் இப்றரீம் – எதிரி

 வழ க்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500

தீர்ப்பு:

1. வாதி தரப்பு வழக்கின் சாராம்சம் இதுதான். அஹ்மதாபாத்திலிருந்து வெளியாகும் மாத இதழான 'தையிபா'விற்கு முதலாவது எதிரி ஆசிரியரும், இரண்டாவது எதிரி பிரசுரகர்த்தாவும், வெளியிடுவோரும் ஆவார்கள். காட்வான்ஞ்ச் வாழ் முஸ்லிம்கள் மத்தியில் இது அதிகமாக விற்பனையாகும் பத்திரிகையாகும். மேலும் இஸ்லாமியர்கள் அதில் வெளியாகும் செய்திகள் உண்மையானவைகள்தான் என்றும் நம்பிவந்தார்கள். இந்த வழக்கின் வாதி ஸுன்னி பிரிவில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்.

இந்த வழக்கில் வாதியாகிய நான் ராண்டர் என்ற ஊரில் அமைந்துள்ள 'ஜாமியா ஹுஸைனிய்யா' என்ற அறபி மத்ரஸாவில் பயின்று 'பாஜில', 'காரி' முதலிய பட்டம் பெற்றவன். அந்த மத்ரஸாவானது ஹனபீகளால் நடத்தப்படும் ஸ்தாபனமாகும். எனவே நான் பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும், இன்னும் மத சம்பந்தமான எல்லா விசேடங்களிலும் தலைமையேற்று நடத்தி வைக்கவும், மத்ராஸாக்களில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கவும் தகுதி பெற்றவனாவேன்.கபாட்வாஞ்ச் நகரில் ஒரு ஜும்ஆ பள்ளி இருக்கிறது. அது அந்நகரிலுள்ள மற்ற எல்லா பள்ளிகளைவிட சீரும் சிறப்புமுடையதாகும். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னால் நான் அப்பள்ளியில் பேஷ்இமாமாக நியமிக்கப்பட்டு தொடர்ந்;து அப்பணியை செய்து வருகிறேன். கபாட்வாஞ்ச் நகரில் ஸுன்னி முஸ்லிம்களுக்குள் பிளவு இருந்து வந்தது. எதிரிகள் என்னை பேஷ் இமாமாக நியமனம் செய்தவர்களுக்கு எதிராக இயங்கி வந்தார்கள்.

மேலும் என்னை அவமானப்படுத்த வெண்டுமென்றும், சமுதாயத்தில் என் கௌரவத்தை குலைக்க வேண்டுமென்றும் கெட்ட நோக்கத்தோடு 1968 டிசம்பர் 'தையிபா' இதழ் பக்கம் 16-ல் 'கபாட்வாஞ்ச்சில் வசிக்கும் ஸுன்னி முஸ்லிம்கள் ஜும் ஆமஸ்ஜிதின் வஹ்ஹாபி பேஷ் இமாமை வெளியேற்றினார்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அது என்னையே குறிக்கும். என்னை அவமானப்படுத்த வேண்டும், கேவல படுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை 'வஹ்ஹாபி' என வருணித்து;ளனர். 'வஹ்ஹாபி' என்ற சொல்லுக்கு கபாட்வாஞ்ச் முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவன் என பொருள் கொண்டார்கள். மேலும் அவர்களில் சிலர் நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை சாதாரண மனிதர்தான் என்று நம்பினார்கள். இந்த செய்தி வெளிவந்தபோது சமுதாயத்தில் என் அந்தஸ்து பறிக்கப்பட்டது. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை. மேலும் என் பின்னால் நின்று தொழுவது குற்றமெனக் கருதி விலகி நின்றார்கள். இன்னும் சில மஸ்ஜிதுகளில்'வஹ்ஹாபிகளே உள்ளே நுழையாதீர்கள்' என தட்டிகள் எழுதி வைத்திருந்தார்கள். இதனால் எனது மனநிலையும், கௌரவமும் பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே நான் எதிரிகள் மீது இந்திய தண்டனைச் ட்டம் பிரிவு 500 ன் கீழ் வழக்கு தாக்கல் செய்கிறேன் என நீதிமன்றத்தில் வாதி பேஷ் இமாம் எடுத்துக் கூறினார்.

2) மேற்கண்ட வாதியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு நீதிபதியவர்கள் முறைப்படி இ.தச. பிரிவு500 ன் கீழ் குற்றச்சாட்டு பிறப்பித்தார். ஆனால் எதிரிகள் தாங்கள் நிரபராதிகள் என பதிலுரைத்தனர். பிறகு வாதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை ஆரம்பமானது. வாதியின் மற்ற சாட்சிகளும் விசாரிக்கப்பட்டார்கள். பின் எதிரிகள் விசாரிக்கப்பட்டார்கள். தங்கள் பக்கம் எதிரிகள் சாட்சிகள் யாரையும் விசாரிக்கவில்லை. இரண்டு பக்க விவாதங்களையும் கேட்;ட பிறகு நீதிபதி தனது தீர்ப்பை எழுதலானார்.

'இப்பொழுது என்முன் நிற்பது மூன்று கேள்விகள்:

1) 1968 டிசம்பர் 'தையிபா' இதழில் எதிரிகள் வாதியைப் பற்றி வெளியிட்ட செய்தி அவதூறு நிரம்பியதுதானா?

2) எதிரிகள் தன்னை கேவலப்படுத்த வேண்டும்,சமுதாயத்தில் தன் அந்தஸ்த்தை குறைக்க வேண்டுமென்ற கெட்ட நோக்கோடு வெளியிட்டார்கள் என்பதை வாதி நிரூபித்து விட்டாரா?

3) அப்படியானால் என்ன தீர்ப்பு வழங்கலாம் என்பதே!

முதலாவது கேள்விக்கு நான் வந்த முடிவு எதிரிகள் பிரசுரித்தார்கள் என்பதை நம்புகிறேன்.

இரண்டாவது கேள்விக்கு வாதி தனது தரப்பு வழக்கை நிரூபிக்க தவறி விட்டார்.

3) இந்த வழக்கில் வாதியைத் தவிர்த்து அவர் சார்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 'தையிபா' இதழில் வெளியான செய்தி இதுதான்:-

'கபாட்வாஞ்ச் முஸ்லிம்கள் இறுதியாக ஜும்ஆ மஸ்ஜிதின் வஹ்ஹாபி பேஷ் இமாமை வெளியேற்றினார்கள்' என்ற தலைப்பில் ஆரம்பித்து கடந்த 14 ஆண்டுகளாக வஹ்ஹாபி தேவ்பந்தி உலமாக்கள் ஜும்ஆ மஸ்ஜிதை தங்கள் பாசறையாக்கிக் கொண்டு மக்கள் மத்தியில் தங்களின் ஊனக் கொள்கைகளை பரப்பி வந்தார்கள். மேலும் நமது கண்ணின் மணியான காருண்ய நாதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைப் பற்றியும் இறைNநுசச் செல்வர்கள் பற்றியும் அவதூறாக பேசி வந்தார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் தங்களின் இந்த வஹ்ஹாபி கொள்கையை அஹ்லெ ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் பரப்பி அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் சாகச முயற்சிகள் செய்து வந்தார்கள். இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடிப் போன இந்த நோயை அகற்றி மறுமலர்ச்சி ஏற்படுத்த கபாட்வாஞ்ச் நகரில் சுன்னத் வல் ஜமாஅத்தினரால் 'ஹதீது' மஜ்லிஸ் ஏற்படுத்தப்பட்டது. இந்த மஜ்லஜிஸானது முதலாவதாக அஜ. ஷேக் அப்துல் ஹக் ஜமால் பாய் வீட்டில் மௌலானா அலி தோராஜிவி ராஜ்பியாலா வாலா என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது மூன்று பிரசங்கங்கள் வஹ்ஹாபியாக்களின் முகத்திரையை கிழித்தெறிய உதவியது. மேலும் பல ஸுன்னி மௌலவிகளில் பிரபலமானவர்களாகிய ஜெ.மௌலவி அப்துர் ரஷீது, மௌலானா ஜெ. பீர் மதானிய்யா, மௌலானா நிஜாமுத்தீன், மௌலானா ஜஹாங்கீர்மிய்யா இன்னும் பலரும் பங்கேற்று உரை நிகழ்த்தியதன் பயனாய் ஸுன்னி முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. எனவே அந்த மஜ்லிஸுக்கு இஸ்லாமிய மக்கள் பெருந்திரளாக வருகை தர ஆரம்பித்தார்கள்.

கபாட்வாஞ்ச் நகரில் உள்ள ஸுன்னி முஸ்லிம்களின் முக்கிய பிரமுகர்களாகிய ஜெ. செய்யது மல்ஹர் அலி, ஜெ. செய்யது அலி அஹ்மது, ஜெ.பதான் அலியார்கான், ஜெ. ஷேக் அப்துல் ஹக், இஸ்மாயில் பாய், ஜெ.முபாரிஸ்கான், ஜெ. மாலிக் ஜாமியாத் மியா போன்றோர் இது விஷயத்தில் எடுத்துக் கொண்ட முயற்சியும், சேவையும் பாராட்டத்தக்கது. இதன் பயனாக ஜும்ஆ மஸ்ஜிதின் வஹ்ஹாபி தேவ்பந்தி மௌலவி 21.8.68-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். அதற்கு பதிலாக பாபு மியா என்பவர் பேஷ் இமாமாக நியமனம் செய்யப்பட்டார்கள். புதிய பேஷ் இமாம் பதவி ஏற்றதும் ஸலவாத்தும், ஸலாமும் அதிகமாக ஓதப்பட்டது. இத்தகைய பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உதவிய பெரியார்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் தன் கருணாமாரிளை பொழிந்தருள்வானாக!' இதுவே தையிபா இதழில் வெளிவந்த அவதூறு செய்தியாகும்.

இந்த வழக்கில் வாதி சாட்சி கூண்டில் ஏறிச் சொன்ன விபரங்கள் இதோ, நான் ரந்தீரிலுள்ள ஜாமிய்யா ஹுசைனிய்யா மதரசாவில் படித்து பட்டம் பெற்றவன். இதோ அதற்கான அத்தாட்சி என கோர்ட்டில் தான் பெற்ற 'ஸனதை'யும் கல்லூரி முதல்வர் வழங்கியிருக்கும் சர்டிபிகேட்டையும் ஆஜர் செய்தார். நான் பட்டம் பெற்ற ஆலிமாக இருப்பதால் தொழுகை நடத்தவும், திருமண வைபவங்களை முன்னின்று நடத்தி வைக்கவும், சன்மார்க்க போதனைகள் செய்வதற்கும் தகுதியுடையவன். நான் ஸுன்னி பிரிவில் ஹனபீ மத்ஹபை சார்ந்தவன். அதுவே சிறப்புக்குரிய மதஹபாகவும் கருதப்படுகிறது. நான் பணியாற்றி வந்த பள்ளி வாயிலே கபாட்வாஞ்ச் நகரில் பெரியதும், சிறப்பு வாய்ந்ததுமாகும். 'தையிபா' இதழ் ஒன்றாவது எதிரியை ஆசிரியராகவும், அரண்டாவது எதிரியை பிரசுரகர்த்தாகவும்  தாங்கி வெளிவருவதாகும்.  அது ஸுன்னி முஸ்லிம்கள் கொள்கை விளக்கமுடைய பத்திரிகையாகும். அது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையுமாகும் என சொல்லி 1-3-69 இதழை கோர்ட்டில் ஆஜர் செய்தார் வாதி. மேலும் 1-2-68 இதழையும் ஆஜர் செய்தார். அந்த இதழில் பக்கம் 46-ல் பொய்யான செய்திகள் வெளியிட்டிருப்பதாகவும் சட்டி காட்டினார். ஸுன்னி ஹனபிகளும், வஹாபிகளும் வேறுவேறு கொள்கையுடையவர்கள். ஹனபியாக்கள் நபிகள் நாயகம் அவர்களை ரசூலென்றும், திருத்தூதர் என்றும் படைப்பினங்க்ள எல்லாவற்றிலும் அவர்களே மேன்மைக்கும், சங்கைகக்கும் உரியவர்கள் என்றும் கருதுபவர்கள்.

வஹ்ஹாபிகளோ ரசூலுல்லாஹ்வை சாதாரண மனிதர் என்றும், இறைவனின் கட்டளையை மக்களுக்கு எடுத்து சொல்லும் சாதாரண தபால் பெட்டி போன்றவரென்றும், அவர்களுக்கு எத்தகைய தனிச் சிறப்பும் கிடையாது என்றும், ஷைத்தான் கூட நபியை விட சக்தி பெற்றவன் என்ற கொள்கையுடையவர்கள். சமுதாயத்தில் வஹ்ஹாபிகளுக்கு எந்த கௌரவமும் கிடையாது. ஸுன்னி முஸ்லிம்கள் வஹ்ஹாபி கொள்கையுடைய பேஷ் இமாம் பின் நின்று தொழ மாட்டார்கள். ஏனென்றால், அந்த தொழுகை கூடாது என்பது அவர்கள் கருத்தாகும். கபாட்வாஞ்ச் ஜும்ஆ பள்ளிவரிலில் 'வஹ்ஹாபிகள் உள்ளே நுழையக் கூடாது' என  அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மீறி நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கண்டிருந்தது. நான் வஹ்ஹாபி அல்லன். வஹ்ஹாபிகள் வேறு, தேவ்பந்திகள் வேறு. தேவ்பந்தியாக்கள் என்று தனிப் பிரிவு இஸ்லாத்தில் கிடையாது. உத்தரபிரதேசத்தில் தேவ்பந்த் என்னுமிடத்தில் ஒரு அரபி மத்ரஸா இருக்கிறது.அங்கு படித்து பட்டம் பெறுபவர்கNளுள தேவ்பந்தியாக்களாவர்கள். ஆனால் நான் அங்கு படித்து பட்டம் பெறவில்லை. என்னை யாரும் வேலை நீக்கம் செய்யவில்லை. சர்ச்சைக்குரிய கட்டுரையில் வந்த விஷயங்கள் அனைத்தும் என்னை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் குழப்பம் வந்துவிட்டதால் நானாகவே பதவியை ராஜினாமா செய்தேன். பாபுமிய்யா என்பவர் எனக்கு பதிலாக பேஷ்இமாமாக நியமிக்கப்பட்டார். இந்த கட்டுரை வந்தபின் பொதுமக்கள் என்னைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். மேலும் என்னுடன் பேசக் கூடாது என்றும், நான் ஸலாம் சொன்னால் அதற்கு மறுமொழி சொல்லக் கூடாது என்றும் மக்கள் முடிவெடுத்தனர். மேலும் என்னை இழிவாகவும் கருதத் தலைப்பட்டனர்.

எதிரிகள் இருவரும் தாங்கள் 'தையிபா' இதழை நடத்துபவர்கள் என்றும், சர்ச்சைக்குரிய கட்டுரையை பிரசுரித்தது உண்மைதான் என்றும் ஒப்புக் கொண்டார்கள். வாதியின் வாக்குமூலத்திலிருந்தும் அவர் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மனுவிலிருந்தும், எதிரிகளை விசாரித்ததிலிருந்தும், மேற்படி கட்டுரையை எதிரிகள்தான் பிரசுரித்தார்கள் என தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் அது ஜும்ஆ மஸ்ஜிது பேஷ் இமாமை குறித்துதான் எழுதப்பட்டது என்பது மறுக்கப்படவில்லை. வாதியை குறுக்கு விசாரணையின் போதும் நீர் தேவ்பந்தி வஹ்ஹாபிதானா? என கேட்கப்பட்டது. எனவே தையிபா இதழில் வெளிவந்த கட்டுரை வாதியை குறித்துதான் எழுதப்பட்டது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

எதிரிகள் வாதியை குறுக்கு விசாரணை செய்யும்போது தேவ்பந்த மத்ரஸாவிலுள்ள 'தாருல் உலூம் தேவ்பந்த' என்ற ஆதாரப்பூர்வமான நூலிலிருந்து சில பகுதிகளைச் சுட்டிக்காட்டி கேள்விகள் கேட்டார்கள். அதாவது வஹ்ஹாபிகள் கண்ணியமானவர்கள்.-சமுதாயத்தில் முறுமலர்ச்சி உண்டு பண்ணுகிற பிரிவினர். ஆனால் பரேலியில் வசிக்கும் முஸ்லிம்கள் இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள். அவர்கள் கருத்துப்படி வஹ்ஹாபிக்ள கீழானவர்கள் என்பதே! மேலும் கபாட்வாஞ்ச் நகரில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் பரேலி பிரிவை சார்ந்தவர்களாதலால் அவர்கள் தன்னை வஹ்ஹாபி என வர்ணித்தால் அவர்கள் மத்தியில் இழிவாகக் கருதப்படும் சூழ்நிலை ஏற்பட்டது என வாதி கூறினார். எனவே இதில் உண்மை இருக்கிறதா? என்பதை இங்கு ஆராய்வோம்.

சட்டத்தில் இ.த.ச. 499(1) என்ன சொல்கிறது என்றால், உண்மையான சம்பவம் எதைக் குறித்தும் செய்திகள் வெளிவருமானால் அது குற்றமாகாது. அந்த செய்தி பொதுவாக மக்கள் நலன் கருதி பிரசுரிக்கப்பட்டதா? அல்லது இழிவுப:த்த வேண்டுமென்ற கெட்ட நோக்கத்தோடு பிரசுரிக்கப்பட்டதா? என்பது அந்த அந்த சந்தர்ப்பத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும். எனவே எதிரிகள் கடமை என்னவென்றால் தாங்கள் பிரசுரித்தது கொதுமக்கள் நலன் கருதிதான் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படியானால்தான் அவர்கள் குற்றமற்றவர்களாவார்கள். வாதி தனது வாக்குமூலத்தில் தான் வஹ்ஹாபி இல்லை என்றும், பேஷ்இமாம் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் கூறி இருக்கிறார். மேலும் தேவ்பந்தி என்பது இஸ்லாமிய மதுஹபுகளுக்கு உட்பட்டதல்ல என்றும், வஹ்ஹாபிகளுக்கும், ஸுன்னி முஸ்லிம்களுக்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறினார்கள்.

ஆனால் அவரை குறுக்கு விசாரணை செய்யும்போது தேவ்பந்தி என்பது தனிப்பிரிவு என்றும், தேவ்பந்த மத்ரஸாவில் அந்தக் கொள்கைகளே போதிக்கப்படுகிறது என்றும், எனவே தன்னை தேவ்பந்தி என்று யாரும் அழைக்கலாம் என்றும் கூறகிறார். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால் வாதியின் கூற்றுப்படி தேவ்பந்த் என ஒரு பிரிவு உண்டு என தெரிகிறது. தான் பயின்ற ஜாமியா ஹுஸைனியாவிலும் அதே கருத்துக்களே போதிக்கப்பட்டு வருகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார். எனவே வாதியை தேவ்பந்தி என்று எழுதினது குற்றமாகாது என தீர்ப்பு செய்கிறேன்.

இரண்டாவது குற்றச்சாட்டு வாதி வஹ்ஹாபி என்பது. வாதி தனது முதல் விசாரணையில் வஹ்ஹாபிகளின் கொள்கைகளுக்கும் சுன்னத் ஜமாஅத் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உண்டு என்று ஒப்புக் கொள்கிறார். அவரை குறுக்கு விசாரணை செய்யும்போது கலீல் அஹ்மது அம்பேட்டி என்பவர் தேவ்பந்தி மத்ரஸாவில் பெரிய உஸ்தாது என்றும் அவர் 'பாரஹீனே காத்திஆ' என்ற புஸ்தகம் ஒன்று எழுதியிருக்கிறார் என்றும் அவரையே தனது வழிகாட்டியாக தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார். ஆனால் மீலாதுஷரீபு கொண்டாடுவது கிருஷ்ண ஜெயந்தி போன்றுதான் என்ற கருத்து தனக்கு உடன்பாடற்றது என்றார். எதிரிகளின் வக்கீல் வாதியடம் ஒரு புஸ்தகத்தை காட்டி அதலி; ஒரு பகுதியை சுட்டிக் காட்டி விளக்கம் கோர வேண்டியபோது ஆண்டுதோறும் மீலாது ஷரீபு கொண்டாடுவது சிருஷ்ண ஜெயந்தி போன்றுதான். அதை கொண்டாடக் கூடாது என்றும் அந்த மஜ்லிஸில் ரசூலுல்லாஹ் ரூஹ் ஹாழிராகிறது என்றும், எனவே அதை சிறப்போடும், கண்ணியத்தோடும் கொண்டாட வேண்டுமென்றும் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் கிடையாது என்றும், அது இஸ்லாமிய ஷரீஅத்திற்கு மாற்றமான 'பிதஅத்' என்றும் சொன்னார். 'பிதஅத்' என்பதற்கு நேரடி அர்த்தம் தனக்கு தெரியாது என்றும், கலீல் அஹ்மது அம்பேட்டி எழுதின புத்தகத்திலும் அதற்கு விடை காண முடியவில்லi என்றார். ஒரு மௌலவி என்ற முறையில் ஆகுமான காரியமெது? பித்அத் என்பது எது? என்று தனக்குத் தெரியுமென்றும், முஹர்ரம் மாதத்தில் சர்க்கரை பாகுபானை வைப்பதும், மீலாது ஷரீபிலே ரசூலுல்லாஹ்வை கொளரவிக்கும் கொருட்டு எழுந்து நிற்பதும், தஃஜியாவும் வெள்ளி இரவு இனிப்பு வைத்து பாத்திஹா ஓதுவதும் பிதஅத்தாகும். எனது பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்த பித்அத்தா கொள்கைகளை பின்பற்றி வந்தார்களென்றும், சிலரே தவிர்த்து வந்தனெரென்றும் கூறினார். எனது கொள்கைப்படி பிதஅத் என்பது குர்ஆன், ஹதீஸ், கலீபாக்களின் கட்டளை ஆகியவற்றில் இல்லாத ஒன்றை செய்வது என்பதே. மேலும் தாஹாக்களுக்கு சென்று தலை சாய்ப்பதும் பித்அத்தாகும். கபாட்வான்ஞ்ச் நகரில் வாழ்ந்த பெரும்பான்மை முஸ்லிம்கள் பரேலவி பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்குள் கொள்கை மாறுபாடு இருந்தது. தனது சகாக்கள் மற்றவர்கள் பித்அத்தி என்றும் அவர்கள் தங்களை வஹ்ஹாபி தேவ்பந்தி என்றும் அழைத்தார்களென்றும் கூறினார்.

கலீல் அஹ்மது எழுதின 'அல்முஹன்னது' ரஷீது அஹ்மது எழுதின 'பத்வா ரஷீதிய்யா' ஆகிய இரு நூற்களும் தேவ்பந்தியாக்களுக்கு முக்கிய வழிகாட்டும் நூலென்றும், இதில் கண்டுள்ள கருத்துக்கள் தனக்கு உடன்பாடுள்ளது என்றும், மாற்று கருத்து தனக்கு கிடையாது என்றும் கூறினார். அரேபியாவில் 'நஜ்து' என்ற ஒரு ஊர் இருக்கிறதென்றும், அங்கு முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் என்பவர் வாழ்ந்து வந்தாரென்றும், அவர்'கிதாபுத் தவ்ஹீது' என்ற நூல் ஒன்று எழுதியுள்ளார் என்றும் அவரைப் பின்பற்றுவோரே வஹ்ஹாபிகள் எனப்படுவர் என்றும் வாதி கூறினார். வாதியிடம் ரஷீது அஹ்மது எழுதின 'பத்வா ரஷீதிய்யா' புத்தகத்தை காட்டி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

கேள்வி: யார் வஹ்ஹாபிகள்? அப்துல் வஹ்ஹாப் நஜ்துடைய கொள்கை என்ன? அவரது மார்க்கம் என்ன? அவர் எப்படிபட்டவர்? அவரது கொள்கைகளுக்கும் ஸுன்னி கொள்கைகளுக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை பின்பற்றுவோரே வஹ்ஹாபிகளாவார்கள். அவரது கொள்கைகள் சிறப்பும் மேன்மையும் வாய்ந்தது. அவரது மார்க்கம் பின்பற்ற எளிமையானது. ஆனால் அப்துல் வஹ்ஹாப் சற்று எரிச்சல் குணம் படைத்தவர். அவரின் தொண்டர்கள் மிகவும் நல்லவர்கள். வஹ்ஹாபிகளுக்கும், ஹனபிகளுக்கும் ஈமானில் வித்தியாசம் எதுவும் கிடையாது. செயல்முறையை பொறுத்த மட்டில் வித்தியாசம் உண்டு.

கேள்வி: வஹ்ஹாபிகளின் பிரிவு எது? அது மக்களால் ஏற்றுக் கெர்ளப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அவர்கள் கொள்கைக்கும் ,ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும் மாறுபாடு உண்டா? அவர்கள் இமாமை பின்பற்றி நடப்பவர்களா?

பதில்: வஹ்ஹாபிகள் எம்பெருமானார் அவர்களின் சுன்னத்தை பேணக் கூடியவர்கள்.

இந்தியாவில் பொதுவாக 'மத்ஹபை' நிராகரிப்போரைத் தான் வஹ்ஹாபிகள் என்று அழைப்பது வழக்கம். ஆனால் பின்பு என்ன காரணத்தாலோ எம் பெருமானாரின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி வழைய பழக்கவழக்கங்களையும், பிதஅத்களையும் ஒழித்தவர்களுக்கு இப் பெயர் சூட்டப்பட்டது. பம்பாயிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அவ்லியாக்கள், இறைநேசர்களின் கப்றுக்கு சென்று சிர வணக்கம் செய்வது ஆகாது என கூறுவோரை வஹ்ஹாபிகள் என அழைக்க ஆரம்பித்தர்கள். வட்டி வாங்குவது கூடாது என சொல்பவர்கள் வஹ்ஹாபிகள். அது ஆகுமானது என சொல்Nவுhர் வஹ்ஹாபிகள் அல்லர் என்றும், வஹ்ஹாபி என்ற சொல்லே அதன் அர்த்தம் தெரியாமல் துர்பிரயோகம் செய்யப்பட்டது. ஒரு இந்திய் மற்றொரு இந்தியனைப் பார்த்து வஹ்ஹாபி என்றாலும் அவர்களுக்குள் இறை நம்பிக்கையில் வித்தியாசம் கிடையாது.

வாதி பேஷ் இமாமை முதலில் விசாரணை செய்யும்போது, வஹ்ஹாபிகள் ஷைத்தானுக்கு ரசூலுல்லாஹ்வை லிட அதிக ஞானம் இருப்பதாக கூறினார். ஆனால் அவரை குறுக்கு விசாரணை செய்யும்போதுதான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார். மேலும் தேவ்பந்திகளுக்கும் இக் கொள்கை ஏற்புடையது அல்ல என்று மறுத்தார். ஆனால் அவரிடம் 'பராஹினே காத்திஆ' என்ற புத்தகத்தை காட்டி அந்த மாதிரி எழுதப்பட்டுள்ள பகுதியை காட்டும்போது அவர் அதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை. மேலும் அப்பபுத்தகத்தில் கண்டுள்ள விஷயம் தனக்கும் சரி என்று தெரிவதாகக் கூறினார். தேவ்பந்தியாக்கள் கொள்கைப் படி ரசூலுல்லாஹ் சாதாரண மனிதர்தான் என்பதையும் மறுத்தார். 'தக்வியத்துல் ஈமான்' என்ற நூல் தேவ்பந்தியாக்களின் அதிகாரப் பூர்வ நூலாகும். அதில் 10வது பக்கத்தில், 'அல்லாஹ்வின் முன்னிலையில் படைப்பினங்கள் அனைத்தும் எவ்வளவு சிறப்புக்குரியதாகயிருந்தாலும் அது கீழானவையே! 'எவ்வளவு சிறப்புக்குரியதாகயிருந்தாலும்' என்ற சொல்லானது இவ்விடத்தில் ரசூல்மார்களையும், நபிமார்களையும் குறிக்கும் என்பதை வாதி ஒப்புக் கொண்டார். மேலும் அந்தப் புத்தகத்தில் 'எல்லா மனிதர்களும் சகோதரர்களே! மேன்மைக்குரிய மனிதர்கள் குடும்பத்தில் மூத்த சகோதரனுக்குள்ள அந்தஸ்தையுடையவர்களே! இந்த உலகமே அல்லாஹ்வுக்குரியதாகும். எனவே அவனையே வணங்க வேண்டும். இந்த ஹதீதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், நபிமார்கள், அவ்லியாக்கள், இமாம்கள், அவர்களின் வாரிசுகள் அனைவர்களும் அல்லாஹ்வின் அன்புக்குரியவர்களே! ஆனாலும் அவர்கள் சாதாரண மனிதர்களே! அவர்களுக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது. அவர்களும் நமது சகோதரர்கள்தான். அல்லாஹ் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நமக்கெல்லாம் அவர்கள் மூத்த சகோதரர் போல் ஆகிறார்கள். ஆதலால் அவர்களது கட்டளைகளை நிறைவேற்றுவது நமது கடமை ஆகும். நாம் அவர்களின் இளை சகோதரர்கள் ஆவதால் அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு கௌரவம் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கௌரவம் அளிக்கத் தேவையில்லை.

இந்த பகுதியைப் பற்றி வாதியிடம் கேட்டபோது அவைகள் முற்றிலும் சரியான வாசகம்தான் என்று ஒத்துக் கொண்டார். மேலும் ரசூலுல்லாஹ்வின் திருநாமத்தைக் கேட்கும்போது அவர்களுக்கு சங்கை செய்யும்பொருட்டு நடந்து கொள்வது 'பிதஅத்' என்றார். தேவ்பந்திகளின் கொள்கையும் அதுதானென்றார். ஆனால் 'பதாவா ரஷீதிய்யா' என்ற நூலைக் காட்டி கேள்விகள் கேட்கும்போது கீழ்கண்டவாறு கூறினார்:-

'ரஹ்மத்துன் லில் ஆலமீன்' என்பது ரஸூலுல்லாஹ்வுக்கு மட்டுமுரிய தனிச் சிறப்பு என்பது சரி அல்ல! அவ்லியாக்களும். மற்ற மகான்களும் உலகுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக வந்தார்கள். ரஸூலுல்லாஹ் இவர்களை விட சிறப்பானவர்கள் அவ்வளவுதான்'.

தான் ஒரு தேவ்பந்தி என்றும், 'பதாவா ரஷீதியா' தங்களின் அதிகாரப் பூர்வ ஏடு என்றும் அதில் அடங்கி இருக்கும் கருத்துக்களுக்கு மாற்றமாக தான் எதுவும் சொல்ல முடியாது என்றார். வாதியை குறுக்கு விசாரணை செய்யும் போது பெரும்பாலான வஹ்ஹாபிக் கொள்கையை தான் அங்கீகரிப்பதாகவும், தேவ்பந்திகளும் அவ்வாறே கருதுவதாகவும் சொன்னார். இருந்தும் மற்றவர்கள் தன்னை 'வஹ்ஹாபி' என்று சொல்வதை விரும்பவில்லை என்றும் சொன்னார். அதே நேரத்தில் தேவ்பந்தி-வஹ்ஹாபிக் கொள்கைகள் இரண்டும் ஒன்றுதான் என்று உறுதியாக தன்னால் சொல்ல முடியாது என்றார். ஆனால் அவரது சாட்சியத்தைக் கூர்ந்து படிக்கும்போது இரண்டும் ஒன்றே என்ற கருத்துதான் தொனிக்கிறது. அவர் தன்னை தேவ்பந்தி என்று ஒப்புக் கொள்கிறார். எனவே எதிரிகள் இவரைப் பற்றி 'தேவ்பந்தி-வஹ்ஹாபி' என்று எழுதியது சரிதான் என்பதை வாதியின் சாட்சியம் மூலமே நிரூபித்து விட்டார்கள். எனவே எதிரிகள் குற்றவாளி ஆக முடியாது.

அவர் வஹ்ஹாபி என்பதற்கு நேரடி சாட்சியங்கள் இல்லை. ஆனால் அவரது சாட்சியத்தை முழுமையாக பரீசிலிக்கும் போது அவர் வஹ்ஹாபிதானென்று தெரிகிறது.

இதே சமயத்தில் சட்டச சமபந்தமாக 1966 ம் வருடம் சுப்ரீம் கோர்ட்டில் முடிவான் ஒரு கேஸ் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால் குற்றவாளி தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து சாட்சியங்களுடன் தான் குற்றவரி அல்ல என்று நிரூபிக்கத் தேவையில்லை. ஆனால் நீதிமன்றத்தின கவனத்தை ஈர்க்கும்வகையில் வாதித் தரப்பு வழக்கு சந்தேகத்திற்குரியதுதான் என்பதுவரைக்கும் எடுத்துக்காட்டினால் போதுமானது. எதிரிகள் குற்றவாளிகள்தான் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கும் பொறுப்பு எப்போதும் வாதித் தரப்புடையதுதான்.எதிரிக்கு அந்த பொறுப்பு கிடையாது. இது குற்றயியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

அதாவது ஒருவரை குற்றவாளி என்று சொல்லி நீதிமன்றத்தில் நாம் வழக்கு தொடர்வோமானால் அதை நிரூபணம் செய்ய வேண்டியது வழக்கு தொடர்ந்தவரையே சாரும்.

அவதூறு வழக்கு சம்பந்தப்பட்டவரை சட்டத்தில் சில விதிவிலக்குகள் வரையறுத்திருக்கிறார்கள். அதன் பலன் தனக்கு உண்டென்று எதிரிகள் வாதாட உரிமை உண்டு. இதை வாதி தரப்பில் கட்டுப்படுத்த முடியாது.

இந்த வழக்கு சம்பந்தப்பட்டவரை எதிரிகள் 9வது பிரிவு விதிவிலக்கின் கீழ் குற்றவாளி அல்ல என்று வாதாட முடியுமா? என்பதுதான் பிரச்சனை. இந்த வழக்கின் சாட்சியங்களைப் பார்க்கும்போது வாதி ஒரு வஹ்ஹாபிதான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.மேலும் வாதி தனது பிரசங்கத்தில் வஹ்ஹாபிக் கொள்கைகளான 'ரஸூலுல்லாஹ் சாதாரண மனிதர்தான், அவர்கள் பெயரை கேட்கும்போது சங்கை செய்வதும், மீலாது விழா கொண்டாடுவதும் 'பித்அத்' என்றும் தான் பேசியதாக ஒப்புக் கொள்கிறார். இது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு விரோதமானதாகும் இந்தக் கருத்துப்படி  பார்த்தால் ரஸூலுல்லாஹ்வையும், அல்லாஹ்வின் அருள் பெற்ற நல்லடியார்களையும் அவமதிக்கும் நோக்கம் தெளிவாகிறது.

கபாட்வான்ஞச் நகரில் இஸ்லாமியர்களுக்கிடையில் இரு பிரிவு இருந்தது. மொத்த ஜனத் தொகை 6000 பேரில் 5800 பேர் சுன்னத் ஜமாஅத் கொள்கையை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள் என வாதி ஒத்துக் கொண்டார். பெரும்பான்மையானவர்கள் பேஷ் இமாமுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். வெளியூர்களிலிருந்து உலமாக்கள் வரவழைக்கப்பட்டனர். ஹதீஸ் மஜ்லிஸ்கள் தீவிரமடைந்தன. பிரச்சாரம் சூடு பிடித்ததும் வஹ்ஹாபியினர் போலீசுகக்குப் புகார் செய்தனர். ஆனால், சூழ்நிலையோ பேஷ்இமாம் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலையாகிவிட்டது. இதனால் அப்பள்ளியின் முத்தவல்லியாக இருந்த ஹாஜி சுலைமான் அவர்களும் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. 16-8-68 ல் ஹாஜி சுலைமான் அவர்கள் தான் பள்ளிவாசல் முத்தவல்லி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்தினார். இரு தரப்பிலுமுள்ள சில முக்கியஸ்தர்களை போலீஸ் அதிகாரிகள் கூப்பிட்டு விசாரித்து பேஷ்இமாம் ராஜினாமா செய்ய வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

பேஷ் இமாம் பதவியிலிருந்து விலக்கப்பட்டதற்கான ஆதாரம்:-

வாதித் தரப்பு வக்கீலின் வாதம் என்னவென்றால், 'வாதி பேஷ்இமாம் பதவியை ராஜினாமா செய்தார். வேலை நீக்கம் செய்யப்படவில்லை. அப்படியிருக்க  அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்னும் கருத்தில் எதிரிகளே பத்திரிகையில் பிரசுரித்திருப்பது பொய்யும், அவதூறுமாகும்' என்பதாகும்.

இதை மறுத்து எதிரி வக்கீல் சொன்னதாவது 'வாதி தொடர்ந்து பேஷ்இமாம் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. அவருக்கு எதிராக பிரச்சாரங்கள்  வெளியில் பகிரங்கமாக நடைபெற்றது. பெரும்பான்மையான மக்கள் அவர் பின்னால் நின்று தொழுவதை புறக்கணித்தனர். மேலும் அவரும், அவரைச் சார்ந்தோரும் பின்பற்றும் கொள்கை தவறானது என்பத எடுத்துக்காட்ட வெளியூர்களிலிருந்து உலமாக்கள் வரவழைக்கப்பட்டனர். வன்முறை தலைதூக்க கூடிய நிலையில் காவல் நிலையத்தினர் தலையிட்டு இருதரப்பு தலைவர்களையும் அழைத்து விசாரித்து பேஷ்இமாம் கட்டாயமாக ராஜினாமா செய்யவேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. எனவே அவரது ராஜினாமா தன்னிச்சையானது அல்ல. கட்டாயத்தின்பேரில்தான் அவர் ராஜினாமா செய்தார். எனவே எதிரிகள் வேஷ் இமாம் பதிவ நீக்கம் செய்யப்பட்டார் என எழுதியது சரியே! என வாதாடினார். மேலும் அவர்கள் பிரசுரித்த செய்தி உண்மையானதுமதான் என்றும் எடுத்துக் கூறினார்.

வாதியின் சாட்சியத்தைக் கூர்ந்து பரீசிலிக்கும்போது வாதியானவர் தனது பதவியை கட்டாயமான் சூழ்நிலையில்தான் துறந்தார் என்று தெரிய வருகிறது. சுமூகமாக மனமுவந்து தானாக ராஜினாமா செய்ததாக  இல்லை. எனவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று யாரும் எழுதுவதோ, சnhல்வதோ குற்றமாகாது. இந்த நேரத்தில் 1959ம் ஆ;டு கல்கத்தா ஹை கோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில் ஆராயப்பட்ட சட்ட நுணுக்கத்தை இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது ஒரு விஷயம் பொதுஜன நன்மையைக் கருதி பிரசுரிக்கப்படுமாயின் அது இப்படித்தனர் எழுதப்பட வேண்டுமென ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. எழுதப்படும் விஷயம் மட்டும் உண்மையா? இல்லiயா? என்பதுதான் முக்கியம்.எழுதுகின்ற முறை எப்படியும் இருக்கலாம்.

நம் முன் நடந்த இந்த வழக்கு சம்பந்தப்பட்டவரை பேஷ்இமாம் பெரும்பான்மையான மக்களின் கட்டாயமான எதிர்ப்புகளுக்கிடையில் ராஜினாமா செய்தார் என்பதும், அவர் ஒரு தேவ்பந்தி வஹ்ஹாபி என்பதும், அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர்களையும் அவனது அடியார்களைப் பற்றியும் அவதூறு பிரச்சாரம் செய்தார் என்பதும் மிகவும் தெளிவாக எதிரிகளால் நிரூபிக்கப்பட்டு விட்டது.

'தையிபா' பத்திரிகை கட்டுரை பற்றிய தீர்ப்பு:-

அடுத்து நீதிபதியாகிய நான் தீர்மானிக்க வேண்டியது இந்த கட்டுரை நல்லெண்ணத்தோடு இஸ்லாமிய மக்களின் நன்மையைக் கருதி பிரசுரிக்கப்பட்டதா? என்பதுதான். இரண்டாவது எதிரி தான் அஹமதாபாத்தில் 1952ம் வருடம் தாருல் உலூம் சாஹி ஆலம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்த நோக்கமே வஹ்ஹாபிகளின் விஷமப் பிரச்சாரத்தை முறியடித்து குஜராத்தில் பரேல்வி சமூகத்தினருக்க சுன்னத்வல் ஜமாஅத் கொள்கையை எடுத்துச் சொல்வதற்காகத்தான் என்று கூறியுள்ளார். அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்படி இந்திய பிரஜை யாரம் தனது மதக் கொள்கையை பிரச்சாரம் செய்யலாம். அதே நேரத்தில் தத்தமது மதக் கொள்கைக்கு பங்கம் வரும்விதத்தில் யாரும் தாக்கி பேசினால் அவர்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டலாம். தற்போது இந்த நிறுவனம் ஒரு பொது ஸ்தாபனமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து 'தையிபா' இதழ் வெளியாகிறது. இதன் பிரதிகள் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் அதிகமாக விரும்பி படிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய கட்டுரையானது அந்த நிறுவனத்தின் முதல்வர் ஜஹாங்கீர் மியா என்பவரால் செ;யதிகள் நேரடியாக சென்று சேகரிக்கப்பட்டு அது உண்மையானதுதான் என் அறிந்த பிறகு தங்களை சார்ந்தேரின் நலனைக் கருதி பிரசுரிக்கப்பட்டது என வாதம் எழுப்பப்பட்டது.

வாதி பேஷ் இமாமும் தான் முதல்வர் ஜஹாங்கீர் மியா இருந்த வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து உரையாடியதாக ஒத்துக் கொள்கிறார். ஆனால் அது ஒரு கோஷ்டியினரின் நிர்பந்தத்தால் எற்பட்ட சந்திப்பு என்கிறார். ஆனால் ஜஹாங்கீர் மியா தன்னிடம் ஒரே ஒரு கேள்வி கேள்வி கேட்டதாகவும் அதற்கு தான் தெளிவாகவும், விரிவாகவும் பதில் சொன்னதாகவும் சொல்கிறார். இதிலிருந்து சர்ச்சைக்குரிய கட்டுரையானது கவனக் குறைவினாலும் உண்மைக்குப் புறம்பாகவும் பிரசுரிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. இந்த வழக்கில் எதிரிகள் தரப்பில் கல்லூரி முதல்வர் ஜஹாங்கீர் மியா சாட்சியாக விசாரிக்கப்படவில்லைதான். ஆனால் முதல்வரை சந்தித்தது உண்மை என வாதி ஒத்துக் கொண்டதால் அவரை கோர்ட்டில் விசாரிக்கத் தேவையில்லை. வாதியின் ஒப்புதலிலிருந்து முதல்வர் வாதியிடம்இது சம்பந்தமாக உரையாட வந்தது உண்மைதான் என்று தெளிவாகிறது. எனவே எதிரிகள் பிரசுரித்த கட்டுரையானது உண்மையான சம்பவத்தை பற்றியதுதான் என்பதை அவர்கள் நிரூபித்து விட்டார்கள்.

கபாட்வாஞ்ச் ஊரில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பரேலி பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் எதிரிகள் பின்பற்றும் கொள்கையை ஆதரிப்பவர்கள் என்பதையும் வாதி ஒத்துக் கொண்டுள்ளார். இந்த பிரிவினர் பழங்கால வழி முறைகளைப் பின்பற்றக் கூடியவர்கள். தேவ்பந்திகளோ சன்மார்க்கத்தில் நவீன கொள்கைகளை புகுத்துபவர்கள். அவர்கள் வஹ்ஹாபிக் கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள். பரேலி பிரிவினரும் தேவ்பந்த வஹ்ஹாபிகளும் கருத்து வேறுபாட்டால் ஒருவரையொருவர் எதிர்த்து கொண்டிருந்தார்கள். கபாட்வாஞ்ச் ஊரில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பரேலி பிரிவை சேர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் நலனைக் கருதி'தையிபா'வில் கட்டுரை வெளியிடப்பட்டது. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது பேஷ் இமாம் பள்ளியில் இவர்களுக்கு விரோதமான கொள்கையை பிரச்சாரம் செய்வதை இவர்கள் எப்படி தடுக்காமல் இருக்க முடியும்?  மேலும் வாதியின் வாக்குமூலத்தை ஆராயும்போது முதலில் தான் 'தேவ்பந்தி வஹ்ஹாபி' இல்லை என்கிறார். பின்னால் தான் தேவ்பந்தி என்றும, அந்தக் கொள்கையும் வஹ்ஹாபிக் கொள்கையும் ஒன்றுதான் என்கிறார். ஆகையால் சுன்னத் ஜமாஅத் போர்வையில் வாதி பேஷ் இமாம் தனது வஹ்ஹாபிக் கொள்கையை பிரச்சராம் செய்து வந்திருக்கிறார். எனவே அவரை மக்களுக்கு அடையாளம் காட்டி அவரை பள்ளியிலிருந்து விரட்ட வேண்டிய கட்டாய சூழ்நிலை பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டது. பெரும்பான்மை மக்களின் பத்திரிகையான 'தையிபா'வானது உண்மை சம்பவத்தை மக்கள் நலன் கருதி வெளியிட்டது. மேலும் நல்லெண்ணத்துடன் முதல்வர் ஜஹாங்கீர் மியா என்பவரை அனுப்பி விசாரித்த பின்னர்தான் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இ.த.ச.499 பிரிவு(1)9 வுடைய பலன் எதிரிகளுக்கு உண்டு. எனவே இதற்கு முன் சுட்டிக்காட்டப்பட்ட 1966ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படியும் எதிரிகள் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபித்த விட்டார்கள்.

எனவே எதிரிகள் குற்றவாளிகள் அல்ல என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. வாதி தரப்பிலும் அட்வகேட் அவர்கள் பல தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதம் செய்தார். ஆனால் அந்த தீர்ப்புகளின் முழு விபரங்களையும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என கருதுகிறேன். குறிப்பாக சொல்லப்போனால் அந்த வழக்குகளின் சாராம்சங்களும், இந்த வழக்கின் விபரமும் வேறுவேறதானதாக இருக்கிறது. ஆகவே வாதிக்கு அவைகள் எந்தவிதத்திலும் உபயோகமில்லாமல் போய்விட்டது. ஏனென்றால்  எதிரிகள் தாங்கள் நல்லெண்ணத்துடன் பொதுஜன நன்மை கருதி தீர விசாரிகத்து உண்மை சம்பவத்தை வெளியிட்டதாக நிரூபித்துவிட்டார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில்(பேஷ் இமாம்) வாதி மேல் விரோதமோ, குரோதமோ கிடையாது. அவரது வஹ்ஹாபிக் கொள்கையைதான் கண்டனம் செய்து எழுதியுள்ளார்கள். இன்னும் வாதித் தரப்பில் அட்வகேட் அவர்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நான்கு தீர்ப்புகளை சுட்டிக் காட்டி வாதம் செய்தார். அதில் ஒரு தீர்ப்பை பார்வையிட்டதில் உண்மையல்லாத செய்தியை கெட்ட எண்ணத்தோடு பிரசுரம் செய்திருக்கிறார்கள். எனவே அ;த தீர்ப்பை இந்த வழக்குக்காக மேற்கோள் காட்டுவது சரியல்ல. ஏனென்றால் இந்த வழக்கில் பிரசுரமான செய்தி உண்மையானது. மற்ற மூன்று தீர்ப்புகளும் சில் கேஸ் சம்பற்தப்பட்டவைகளாக தெரிகிறது. அந்த தீர்ப்புகளின் சட்ட நுணுக்கம் இந்த வழக்கோடு ஒப்பிட தகுந்தவையல்ல என்பதால் அவைகளையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.

ஆகையால் எதிரிகள் தங்கள் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரை உண்மையானது-நல்லெண்ணத்தோடு பொதுஜன நலன் கருதி பிரசுரிக்கப்பட்டது என்பதையும் நிரூபித்து விட்டார்கள். எனவே இந்திய தண்டனைச் சட்டம் 49 பிரிவு(1)9-வது ஷரத்துக்களின்படி அவர்கள் வெளியிட்ட செய்தி அவதூறானது அகாத என தீர்ப்பளித்து எதிரிகள் இருவரையும் விடுதலை செய்கிறேன்'.

முற்றும்.

2. HIGH COURT OF INDIA: DEALERS TABTJGHI KITAAB READING IN THE MOSQUE AS UNISLAMIC BY SOUTH INDIA CORRESPONDENT BELGUAM SOUTH INDIA

A very interesting and memorable legal battle ensued in the Belguam High Court in the Karnatak state of South India in which one Mr. Qusim, N.C.O of Belguam and his associates filed a suit against Mr. Ebrahim Tajuddin and members of sholapur mosque congregation. The plaintiff claimed that the defendant and his followers were harassing him and his associates in respect of their Kittab reading in the sholapur mosque of Belguam, declaring it as an unwanted disturbance to their prayers. In a prolonged hearing of many months the Honourable Judge Mr. Justice R. B. BALGANGADAR of Belguam High Court, South India observed,

1. That the defendant and his followers stopped the plaintiff and his asscciates known as the Tabligi, from reading the contents of their books namely “Tagwiathul Imam” “Hifzul  Imaan”, Tablighi Nisab” etc. on the grounds that they contain highly inflamable passages which are contrary to the basic Islamic beliefs as well as damaging the dignity and respect of the venerable and impeccable character of the Prophet of Islam (Sallallahu alaihi wa sallam)

2. The said defendant and his followers have stopped the plaintiff and his associates from holding an Ijitima (gathering) at the Shahiul Mosque because such gatherings ultimately and unwillingly drew the simple minded muslims into the Web of  Tablighi beliefs.

3. That the said defendant lucidly impressed upon the High Court that any sane muslim will not tolerate any improvient remarks passed by any person against the faultless character of the prophet of Islam ((Sallallahu alaihi wa sallam.). The Honourable Judge Mr. Justice R. B. BALGANGADHAR thus declared after making a careful study of several translations of the Quran as well as the Ahadith of the Prophet of Islam (Sallallahu alaihi wa sallam) and after due consideration of the noble and subline position of the prophet of Islam (Sallallahu alaihi wa sallam) ,I have come to the following conclusion.

CONCLUSIONS ARRIVED AT BY THE JUST1CE:

a. That since the urdu language constitutes all the Arabic, Persian and other Indian languages it does Iargly assist the ulema to translate the Quran and the Ahadith as well as to propound accurate commentaries on these. But unfortunately a glaring flaw is now evident in the translation.

b. Further it has become crystal clear from the evidence of the plaintiff and other witnesses that as the Tablighi Jamaat is the creation of our present century, it is not wholly worthy of trust and confidence of the general consensus of the muslims.

c. That the plaintiff and his associates (Tablighis) do not posses a full command over either Arabic or Urdu and are therefore incapable of making correct translaticns of the Quran and Ahadith in the books of the Tablighi Jamaat. Since the books have become a bone of contention casting doubts and causing rifts in the basic beliefs of muslims, and since they are causing dissention, hatred anddiscontent between muslims. I have no other alternative but to uphold the plea of defendant and therefore restrain the plaintiff and his associates from reading these Tablighi books as well as holding any Ijitima in the Sholapur mosque. They were deliberately misrepresenting true Islamic beliefs and waylaying simple minded non Tablighi muslims.

d. That the contentious book “Tablighi Nisab” is certainly not a heavenly revealed book. It does contain many flaws and erroneous translations. Therefore since the consequent misrepresentation of ZABUR, PESH, ORZER can damage the complete meaning of the Quranic verse and this being the case with the above mentioned dubious, Tablighi books, I have no alternative but to restrain all such Tablighi Jamats from reading any un-authentic books in the Sholapur Mosque or holding any ljtimas therein.

e. That the mosque is the house of God wherein eating, drinking and holding wordly discussions are totally undesirable and prohibited acts. Since these Tablighi Jamaats tend to abuse the sanctity of the Mosque such gatherings are not to be held therein.

f , Thus the plaintiff is not trustworthy person and therefore has no right to interfere in any manner whatsoever in the affairs of the said Sholapur Mosque.

THIS JUDGEMENT WAS DELIVERED ON THE 13th OF JANUARY, 1986, IN THE BELGUAM HIGH COURT IN THE KARNATAK STATE  OF SOUTH INDIA. MR. JUSTICE R. B. BALGANGADHAR WAS ON THE BENCH. MR. A. K. SUDHAGAR REPRESENTED THE PLAINTIFF AND COUNSEL FOR THE DEFENCE WAS MR. M.O.SHAIKH.

PAGE 48 MUSLIM DIGEST. NOV. 1986 TO FEB. 1987.