Poet Qasim Wali -காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு.

Poet Qasim Wali -காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment July 30, 2010

Print Friendly, PDF & Email

Kaseem Pulavar Wali: (Death 1177 A.H) 


            Sayyid Kaseem Pulavar Wali was a son of Kazi Sayyid Abdul Qadir Lebbai Alim. He was one of the descendants of our noble prophet Muahmmad (sallalahu alaihi wa sallam). He traces his lineage from Sultan Jamaluddin who ruled Pandya Kingdom. He was a great Tamil Poet. He composed poems in praise of our noble prophet Muhammad (sallalahu alaihi wa sallam) which is called as Thiru Puhal.He used to stay in seclusion at Periya Jumma Mosque often. His shrine is at Periya Jumma Palli graveyard. His sons were Sayyid Abdul Qadir and Sayyid Sultan Appa. Sayyid Sultan Appa was appreciated by Thaika Sahib Wali and his tomb is at Puraiyur.

காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு

 காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனாக ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வமிச வழியில் வந்துதித்தார்கள். தமிழில் சிறந்த புலவராக திகழ்ந்த இவர்கள் மதுரையில் திருக்கவிராயரிடம் தமிழ் கல்வி கற்றார்கள். அச் சமயத்தில் தமிழ்ப் புலவர் அருணகிரி நாதர் என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமான் மீது தமிழில் திருப் புகழ் பாடி, இந்த திருப் புகழுக்கு இணையாக பாட யார் இருக்கிறார்கள்? என்று இறுமாப்பாக சவால் விட்டார். அவரின் இச் சவாலை ஏற்ற காஸிம் புலவர் நாயகம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பேரில் திருப்புகழ் இயற்றத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் பாடல் இயற்றிக் கொண்டிருக்கும்போது 'மக்கப் பதிக்கும்'  என்ற வார்த்தைக்குப் பிறகு கவிஞர் அவர்களுக்கு வார்த்தைகள்; வரவில்லை. மிகக் கவலையுடன் அதற்குரிய சரியான சொல்லை உபயோகிக்க விரும்பியவராக நடந்து சென்று காட்டு மொகுதூம் பள்ளி குளத்தில் இறங்கி யோசித்துக் கொண்டிருக்கும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் புலவர் அவர்கள் முன் திருத் தோற்றம் நல்கி 'உயர் சொர்க்கப் பதிக்கும்'  என்ற பதத்தை சொல்லி விட்டு மறைந்தார்கள். புலவர் அவர்கள் சந்தோஷம் கொண்டு பாடலை இயற்றி முடித்தார்கள். 

      இன்று வரை இத்திரு புகழுக்கு ஒப்பாக மற்றொரு பாடல்கள் பாடப் படவேயில்லை. திருப் புகழ் தவிர பல்வேறு பாடல்களை இயற்றி உள்ளார்கள்.

     நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை நேரில் கண்ட பிறகு வேறு எதையும் காண விரும்பாதவராய் தம் இரு கண்களிலும் சுண்ணாம்பு பூசிக் கொண்டு தம் கண்களைக் குருடாக்கி கொண்டார்கள் என்றும், இறைவனிடம் இறைஞ்சி தம் கண்களைக் குருடாக்கி கொண்டார்கள் என்றும் இரு விதமாக வரலாறு கூறுகிறது. இவர்களின் 7 வது தலைமுறை வாரிசாக வந்தவர்கள்தான் கவிஞர் எஸ்.எம்.பி. மஹ்மூது ஹுஸைன் ஆவார்கள். இவர்களின் மறைவு துல்கஃதா பிறை 11. (ஈஸவி 1177) குத்பா பெரிய பள்ளி மையவாடியில் அடங்கப்பட்டுள்ளார்கள். இவர்களது மகனார் செய்யிது அப்துல் காதிர் மற்றும் சுல்தான் அப்பா  ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள். சுல்தான் அப்பா அவர்கள் புறையூரில் அடங்கப்பட்டுள்ளார்கள்