ஷெய்குமார்களின் பாதங்களை முத்தமிடலாமா?

ஷெய்குமார்களின் பாதங்களை முத்தமிடலாமா?

By Sufi Manzil 0 Comment March 31, 2011

Print Friendly, PDF & Email

கேள்வி: முரீதீன்கள் அனேகர் தங்களது ஷெய்குமார்களின் பாதங்களை உதட்டினால் முத்தமிடுகின்றார்களே! அது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விலக்கப்பட்ட மரியாதைக் கருதி புரியப்படும் ஸுஜூது தஃழீம் இல்லையா?

பதில்:

பெரியார்களின் பாதங்களை உதட்டினால் முத்துவதை ஸுஜூதே தஃழீமாகக் கருதுவது மிகப் பெரும் பிழையாகும். காரணம் ஸஹாபாப் பெருமக்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதங்களை முத்தியதாக பதிவாகியுள்ள நபிமொழிகளுக்கு விளக்கம் தரும் சிலர் கரத்தினால் தொட்டு முத்துதல் என்பதாகக் கருத்துக் கொள்கின்றனர். இது தவறானதாகும்.

நபிமொழிக்கிரந்தங்களில் 'பாபு தக்பீலில் யதி வர்ரிஜ்லி' கரம் பாதங்களை முத்தமிடுதல் என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளதாய் கரத்தினை முத்தும் விதமே பாதத்தை முத்தும் விதமாகும். பாதத்தை உதட்டால் முத்தமிடுவது ஸுஜூதே தஃழீம் என்றால் 'தக்பீல்' என்ற சொல் உதட்டால் முத்தமிடுவதற்கே அன்றி கையால் தொட்டு முத்துவதற்கு அல்ல. அதற்கெனும் 'இஸ்திலாம்' (கையால் தொட்டு முத்துதல்) என்ற பதம் உண்டு.

பாதங்களை முத்துவதற்கும் ஸஜ்தாவிற்கும் என்ன தொடர்பு? பாதத்தை முத்தமிடல் என்பது தலையை பாதத்தில் வைப்பதும், ஸஜ்தா என்பது நெற்றியை தரையில் வைப்பதும் ஆகும். இதில் சந்தேகம் கொள்வோர் அல்லாஹ்வின் நேசர்களுக்குப் புரியும் கண்ணியத்தினை மறுப்போராகும். ஆகையால் பெரியோர்களின் பாதங்களை முத்துவோரை ஸஜ்தா செய்வதாக தவறாக எண்ணம் கொள்ளாதீர்கள் என்று அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் 'பதாவா ரிழ்விய்யா'(10:267) வில் கூறியுள்ளார்கள்.

மிஷ்காத் நபிமொழிக் கிரந்தத்திற்கு விரிவுரை வழங்கிய அல்லாமா அஹ்மது யார் கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியார்களின் கரங்களையும், பாதங்களையும் முத்துவது நபிமொழியாகும். பாதத்தினை கரத்தால் தொட்டு முத்தமிடலாம், உதட்டினாலும் முத்தமிடலாம். உதட்டால் முத்துவதே சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள். (மிர்காதுல் மனாஜீஹ் 03:364)

ஸுஜூது என்பது அல்லாஹ்வுக்கான வணக்கம் என்றால் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தகப்பனாரும், சகோதரர்களும் நபியவர்களுக்கு மரியாதை நோக்கில் புரிந்த ஸுஜூதும், அமரர்கள் ஆதமுக்கு செய்த ஸுஜூதும் தரையில் நெற்றியை வைத்ததாகும். ஆனால் பாதங்களை முத்துவது என்பது உதட்டை பாதத்தில் வைப்பதாகும். இதனை ஸுஜூதாகக் கருதுவது மேற்கூறிய பெரியார்களின் தீர்ப்பின் பிரகாரம் அறியாமையாகும்.

நன்றி: வெற்றி ஜூன் 2000.