Khathmul Quran Dua-கத்முல் குர்ஆன் துஆ:

Khathmul Quran Dua-கத்முல் குர்ஆன் துஆ:

By Sufi Manzil 0 Comment May 22, 2010

Print Friendly, PDF & Email

بسم اللهالرَّحْمٰن الرّحِيم ۞

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ  ۞ وَالصَّلَاةُ وَالسَّلاَمُ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْن اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ  ۞ صَدَقَ اللهُ الْعَلِيُّ الْعَظِيْمُ  ۞ وَصَدَقَ رَسُوْلُهُ النَّبِيُّ الْكَرِيْمُ ۞ وَنَحْنُ عَلٰى ذَالِكَ مِنَ الشَّاهِدِيْنَ ۞ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ۞ اَللّٰهُمَّ ارْزُقْنَا بِكُلِّ حَرْفٍ مِّنَ الْقُرْاٰنِ حَلاَوَةً وَبِكُلِّ جُزْءٍ مِّنَ الْقُرْاٰنِ جَزَآءً  اَللّٰهُمَّ ارْزُقْنَا بِالْاَلْفِ اُلْفَةً وَّبِالْبَآءِ بَرَكَةً وَّبِالتَّآءِ  تَوْبَةً وَبِالثَّآءِ ثَوَابًا وَّبِالْجِيْمِ جَمَالًا وَّبِالْحَآءِ حِكْمَةً وَبِالْخَآءِ خَيْرًا وَّبِالدَّالِ دَلِيْلًا وَّبِالذَّالِ ذَكَآءً وَبِاالرَّآءِ رَحْمَةً وَّبِالزَّآءِ زَكٰوةً وَبِالسِّيْنِ سَعَادَةً وَبِا لشِّيْنِ شِفَآءً وَّبِالصَّادِ صِدْقًا وَّبِالضِّادِ ضِيَآءً وَّبِالطَّآءِ طَرَاوَةً وَّبِالظَّآءِ ظَفْرًا وَّبِالْعَيْنِ عِلْمًا وَبِلْغَيْنِ غِنًى وَّبِالْفَآءِ فَلَاحًا وَّبِاللَّامِ لُطْفًا وَّبِالْمِيْمِ مَوْعِظَةً وَّبِالنُّوْنِ نُوْرًا وَّبَالْوَاوِ وُصْلَةً وَّبِالْهَآءِ هِدَايَةً وَبِالْيَآءِ يَقِيْنًا۞  اَللّٰهُمَّ انْفَعْنَا بِالْقُرْاٰنِ الْعَظِيْمِ۞ وَارْفَعْنَا بِالْاٰيَاتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ ۞ وَبَقَبَّلْ مِنَّا قِرآءَتَنَا وَتَجَاوَزْ عَنَّا مَاكَانَ فِىْ تِلَاوَةِ الْقُرْاٰنِ مِنْ خَطَأٍ اَوْنِسْيَانٍ اَوْتَحْرِيْفِ كَلِمَةٍ عَنْ مّوَاضِعِهَا  ، اَوْتَقْدِيْمِ اَوْتَأْخِيْرٍ اَوْزِيَادَةٍ اَوْنُقْصَانٍ اَوْ تَأْوِيْلٍ عَلٰى غَيْرِ مَا اَنْزَلْتَهُ عَلَيْهِ اَوْرَيْبٍ اَوْشَكٍّ اَوْ سَهْوٍ اَوْسُوْءٍ اِلْحَانٍ اَوْتَعْجِيْلٍ عِنْدَتِلَاوَةِ  الْقُرْاٰنِ اَوْكَسْلٍ اَوْسُرْعَةٍ اَوْ زَيْغِ لِسَانٍ اَوْوَقْفٍۢ بِغَيْرِ وُقُوْفٍ اَوْاِدْغَامٍۢ بِغَيْرِ مُدْغَمٍ  اَوْاِظْهَارٍ ۢ   بِغَيْرِ  بَيَانٍ اَوْمَدٍّ  اَوْتَشْدِيْدٍ  اَوْهَمْزَ ةٍ اَوْ جَزْمٍ اَوْاِعْرَابٍ بِغَيْرِ مَاكَتَبَهُ اَوْقِلَّةِ رَعْبَةٍ وَّرَهْبَةٍ عِنْدَ اٰيَاتِ الرَّحْمَةِ اَوْاٰيَاتِ الْعَذَابِ فَاغْفِرْ لَنَا رَبَّنَا وَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ۞اَللّٰهُمَّ نَوِّرْ قُلُوْبَنَا بِالْقُرْاٰنِ  ۞ وَزَيِّنْ اَخْلَاقَنَا بِالْقُرْاٰنِ ۞ وَنَجِّنَا مِنَ النَّارِ بِالْقُرْاٰنِ ۞ وَاَدْخِلْنَا فِى الْجَنَّةِ بِالْقُرْاٰنِ ۞ اَللّٰهُمَّ اجْعَلْ الْقُرْاٰنَ لَنَا فِى الدُّنْيَا قَرِيْنًا وَّفِى الْقُبْرِ مُوْنِسًا وَّفِى الْقِيٰمَةِ شَافِعًا وَّعَلَى الصِّرَاطِ نُوْرًا وَّفِى الْجَنَّةِ رَفِيْقًا وَّمِنَ النَّارِ سِتْرًا وَّحِجَابً وَّاِلَى الْخَيْرَاتِ كُلِّهَا دَلِيْلًا فَاكْتُبْنَا عَلَى التَّمَامِ وَارْزُقْنَا اَدَآءً بِالْقَلْبِ وَاللِّسَانِ وَحُبَّ الْخَيْرِ وَالسَّعَادَةِ وَالْبِشَارَة ِ مِنَ الْاِيْمَانِ ۞ اَللّٰهُمَّ اٰنَس وَحْشَتِىْ فِىْ قَبْرِىْ اللّٰهُمَّ ارْحَمْنِىْ بِالْقُرْاٰنِ الْعَظِيْمِ وَاجْعَلْهُ لِىْ اِمَامًا وَّنُوْرًا وَّهُدًا ى وَّرَحْمَةً ۞ اَللّٰهُمَّ ذَكِّرْنِىْ مِنْهُ مَانَسِيْتُ وَعَلِّمْنِىْ مِنْهُ مَاجَهِلْتُ وَارْزُقْنِىْ تِلَاوَتَهُ اٰنَآءَ اللَّيْلِ وَاٰنَآءَ النَّهَارِ ۞ وَاجْعَلْهُ لِىْ حُجَّةً يَارَبَّ الْعَالَمِيْنَ ۞ رَبَّنَا ظَلَمْنَآ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ ۞ رَبَّنَا اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً و َّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ۞ رَبَّنَا اغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَلِوَالِدِيْنَا وَلِجَمِيْعِ اَسَاتِيْذِنَا وَلِجَمِيْعِ اُمَّةِ سَيِّدِنَا  مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ۞رَبَّنَا اغْفِرْلِيْ  وَلِوَالِدَىَّى رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِىْ  صَغِيْرًا ۞  صَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِة سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَاَصْحَابِه اَجْمَعِيْنَ ۞   سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ ۞ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ ۞ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ۞

 

 

 

 

    பொருள்:

எல்லாப்புகழும் அல்லாஹு தஆலாவுக்கே. சலவாத்தெனும் சாந்தியும், சலாமென்னும் ஈடேற்றமும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள் மீதும், அவர்கள் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வலுப்பமும் உயர்வும் உடைய அல்லாஹ் உண்மை சொல்லி விட்டான்.

சங்கைக்குரிய நபியாகிய அவனின் திருத்தூதரும் உண்மை சொல்லி விட்டார்கள்.

அந்த உண்மையின் பேரில் நாங்கள் சாட்சி சொல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.

நாயனே! எங்கள் துஆவை ஒப்புக் கொள்வாயாக! நீயே அறிவாளியும் ஒப்புக் கொள்பவனுமாக இருக்கிறாய்.

ஆண்டவனே! குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பகரமாக எங்களுக்கு இன்பத்தைத் தருவாயாக!

குர்ஆனின் ஒவ்வொரு பகுதிக்குப் பகரமாக நற்கூலியைத் தருவாயாக!

ஆண்டவனே! ஒவ்வொரு اக்குப் பகரமாக நல்ல துணையைத் தருவாயாக!

ஒவ்வொரு ب க்கு பகரமாக அபிவிருத்தியையும், ஒவ்வொரு ت க்குப் பகரமாக பாவமன்னிப்பையும், ஒவ்வொரு ث  க்குப் பகரமாக நற்கூலியையும் தருவாயாக!

ஒவ்வொரு ج  க்குப் பகரமாக அழகையும், ஒவ்வொரு  ح க்கு பகரமாக ஞானத்தையும், ஒவ்வொரு خ  க்குப் பகரமாக நன்மையையும் தருவாயாக!

இன்னும் ஒவ்வொரு د க்குப் பகரமாக அத்தாட்சியையும், ஒவ்வொரு ذ  க்குப் பகரமாக புத்திக் கூர்மையையும், ஒவ்வொரு ر  க்குப் பகரமாக அருளையும் தருவாயாக!

ஒவ்வொரு ز  க்குப் பகரமாக பரிசுத்தத்தையும், ஒவ்வொரு س  க்குப் பகரமாக சீதேவித்தனத்தையும், ஒவ்வொரு ش க்குப் பகரமாக நற்சுகத்தையும் தருவாயாக!

ஒவ்வொரு  ص க்குப் பகரமாக உண்மையையும், ஒவ்வொரு ض  க்குப் பகரமாக பிரகாசத்தையும், ஒவ்வொரு ط க்குப் பகரமாக இலேசையும் செழிப்பையும் தருவாயாக!

ஒவ்வொரு ظ க்குப் பகரமாக வெற்றியையுட், ஒவ்வொரு ع க்குப் பகரமாக அறிவையும,; ஒவ்வொரு غ க்குப் பகரமாக சீமான்தனத்தையும் தருவாயாக!

ஒவ்வொரு ف க்குப் பகரமாக ஜெயத்தையும், ஒவ்வொரு ق க்குப் பகரமாக முடுகுதலையும், ஒவ்வொரு ك  க்குப் பகரமாக சங்கையையும் தருவாயாக!

ஒவ்வொரு ل க்குப் பகரமாக கிருபையையும், ஒவ்வொரு م க்குப் பகரமாக உபதேசத்தையும், ஒவ்வொரு ن க்குப் பகரமாக பிரகாசத்தையும் தருவாயாக!

ஒவ்வொரு و க்குப் பகரமாக சேர்மானத்தையும், ஒவ்வொரு ه க்குப் பகரமாக நேர்வழியையும், ஒவ்வொரு ي க்குப் பகரமாக உறுதியையும் தருவாயாக!

இறைவனே! வலுப்பமான குர்ஆனை எங்களுக்கு பிரயோஜனமாக வைத்திருள்வாயாக!

அதன் ஆயத்துக்களைக் கொண்டும் ஞானத்தைக் கொண்டும் எங்களை பதவியில் உயர்த்துவாயாக!

இன்னும் எங்களின் ஓதலை கபூல் செய்வாயாக! குர்ஆனை ஓதியதில் மறதி, தவறு, வார்த்தைகளைப் பிரட்டி ஓதல் ஏற்பட்டிருந்தாலும் அவைகளை நீ மன்னித்தருள்வாயாக!

இன்னும் ஒரு வார்த்தையை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஓதியிருந்தாலும் இன்னும் அதை ஓதியதில் சந்தேகம், விதர்ப்பம், அவசரம், சோம்பல், நாவு தடுமாற்றம், நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி ஓதுதல், ஷத்து இல்லாத இடத்தில் ஸத்து வைத்து ஓதல், சரிவர வெளியாக்காமல் ஓதல் அல்லது மத்தை ஷத்தை சரியாகச் சொல்லாமல் ஓதல் ஏற்பட்டிருந்தால் அவைகளை மன்னித்துக் கொள்வாயாக!

இன்னும் ஹம்ஸு, சுகுன், ஜபறு, ஜேறு இன்னும் குறியீடுகள் இவைகளை விட்டிருந்தாலும், கிருபையுடைய ஆயத்து அல்லது வேதனையுடைய ஆயத்து ஓதும் இடத்தில் ஆசை, பயம் இல்லாமல் ஓதியிருந்தாலும் மன்னித்துக் கொள்வாயாக! இன்னும் எங்களுக்குப் பிழை பொறுப்பாயாக! ஆண்டவனே எங்களை நற்சாட்சி கூறுபவர்கள் கூட்டத்தில் எழுதுவாயாக!

இறைவா! எங்களின் அகங்களை குர்ஆனின் பொருட்டால் பிரகாசிக்கச் செய்வாயாக! எங்கள் குணங்களை அழகாக்கி வைப்பாயாக! குர்ஆனின் பொருட்டால் நரகத்தை விட்டும் ஈடேற்றமாக்கி வைப்பாயாக! சுனபதியில் புகுதச் செய்வாயாக!

எங்கள் இறைவா! குர்ஆனை இவ்வுலகில் எங்களுக்கு கூட்டாளியாகவும், கப்ரில் நற்துணையாகவும், சிராத் என்னும் பாலத்திற்கு ஒளியாகவும், சுவர்க்கத்திற்கு தோழனாகவும், நரகத்தை விட்டு தடையாகவும் திரையாகவும் ஆக்கி அருள்வாயாக! மேலும் அனைத்து நன்மைகளின் அறிவிப்பாகவும் ஆக்கி அருள்வாயாக! எங்களை நிறப்பமானவர்களாக எழுதுவாயாக! எங்களுக்கு வாக்கு மனமொத்த நிலையைக் கொடுத்து விடுவாயாக! நன்மையும், சீதேவித்தனத்தையும் நேசிக்கச் செய்வாயாக! இன்னும் எங்களுக்கு ஈமானுடைய நல் சோபன வார்த்தையையும் தந்தருள்வாயாக! ஆமீன்.

எங்கள் இறைவா! எங்களுடைய கப்ரில் எங்களுக்கு ஏற்படும் வெருட்சியை மருகுதலாக்கி வைப்பாயாக! இன்னும் எங்கள் இறைவா! மகத்தான இந்த குர்ஆனின் பொருட்டால் எங்கள்  மீது அன்பு கூர்ந்து அதனை நீ எங்களுக்கு வழிகாட்டியாகவும், பிரகாசமாகவும் நேரான வழியில் செலுத்தக் கூடிய ஓர் அருளாகவும் ஆக்கி வைப்பாயாக! இன்னும எங்கள் இறைவா! அதில் நாங்கள் மறந்து விட்டதை எங்களுக்கு ஞாபகமூட்டி வைப்பாயாக! இன்னும் அதில் நாங்கள் அறியாதவைகளை நீ எங்களுக்கு அறிவித்து அருள்புரிவாயாக! இன்னும்  இரவிலும் பகலிலும் நாங்கள் அதனை ஓதிவரக் கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக! இன்னும் அதனை எங்களுக்கு உதவிபுரியக் கூடிய ஆதாரமாக்கி வைப்பாயாக! இன்னும் உலகத்தார் யாவையும் படைத்து போசித்து வருபவனே எங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்து அருள்புரிவாயாக! ஆமீன்.

இறைவா! எங்கள் நப்ஸுகளுக்கு நாங்கள் அநீதம் செய்து கொண்டோம். நீயே பிழை பொறுத்து கிருபை செய்யவில்லையானால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளர்களில் நின்றும் ஆகிவிடுவோம். ஆகவே நீ எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களுக்கு கிருபை செய்தருள்வாயாக!

ஆண்டவனே! ரஹ்மானே! இந்த குர்ஆனுடைய மஜ்லிஸில் கூடியிருக்கும் எங்கள் யாவர்களுக்கும் இந்த குர்ஆனுடைய பரக்கத்தால் துன்யாவில் (இவ்வுலகில்) செல்வத்தையும், ஆகிறத்தில் (மறு உலகில்) சுவர்க்கத்தையும் தந்தருள்வாயாக! ஆண்டவனே! எங்களுக்கும் எங்கள் தாய், தந்தையர், மற்றும் உஸ்தாதுமார்கள், இன்னும் எங்கள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மத்துமார்கள் அனைவர்களுக்கும் பிழை பொறுத்து கிருபை செய்தருள்வாயாக!

ஆண்டவனே! எங்கள் யாவரையும் வளர்க்கும் ரஹ்மானே! எங்களுக்கும் எங்கள் தாய்(தகப்பர்) தந்தை இருவர்களுக்கும் நீ பிழை பொறுத்தருள்வாயாக! இறைவா! நாங்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது எங்கள் பெற்றோர்கள் எங்களுக்கு கிருபை செய்தது போல் நீ அவர்கள் இருவர்களுக்கும் பிழை பொறுத்து கிருபை செய்தருள்வாயாக! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எங்கள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரிலும் அவர்கள் கிளையார்கள் பேரிலும், தோழர்கள் பேரிலும் சலவாத்தும், சலாமும் சொல்வானாகவும் ஆமீன். யாரப்பல் ஆலமீன்.