வெள்ளிக் கிழமை நல்ல காரியங்கள் செய்தல்
By Sufi Manzil
வெள்ளிக் கிழமை நல்ல காரியங்கள் செய்தல்
கேள்வி: வெள்ளிக்கிழைம நல்ல காரியங்கள் செய்வதாக இருந்தால் குத்பாவிற்குப் பிறது செய்ய வேண்டுமென்கின்றனர். மைய்யித்தை மட்டும் குத்பாவுக்கு முன்னரே எடுக்கின்றனர். ஏன்?
பதில்: வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன் அன்று அதிகாலை தொடுத்து திருக்குர்ஆன் ஓதுதல், திக்ரு துஆ, ஸலவாத்து போன்ற நல்லமல்கள் செய்வது சுன்னத்.
துஹ்பா, பாகம் 2, பக்கம் 472
கிதாபுல் அன்வார், பாகம் 1 பக்கம் 98.
வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு முன்னர் மேற்கண்ட அமல்களைச் செய்வது சுன்னத் எனவே அந்நாளில் குறிப்பாகச் செய்ய வேண்டிய மேற்படி நல்லமல்கள் தவிர உள்ளவற்றை ஜும்ஆவுக்குப் பின்னர் செய்ய வேண்டும். உதாரணமாக: கல்வி கற்பித்தல், பிரசங்கம் செய்தல்.
ஜும்ஆவும், ஜனாசாவும் ஒரே சமயத்தில் ஒன்று சேருமாயின் ஜும்ஆவின் நேரம் குறுகியதாக இல்லாதிருப்பின் ஜனாசாவை முற்படுத்தவேண்டும். நேரம் குறுகியதாக இருப்பின் ஜும்ஆ தொழுது விட்டு ஜனாஸாவை அடக்க வேண்டும். ஜனாசாவை முற்படுத்த வேண்டுமென்பது அது பழுதுபட்டு விடும் என்ற அச்சமே காரணம்.!
மஹல்லி பாகம் 1, பக்கம் 307.
வெள்ளிக்கிழமை மௌத்தானவர் முமினாக இருப்பின் அவர் சுவனவாதியே! என்பது நபிமொழி கருத்து. ஒரு முஃமின் அல்லாஹ்வையும், சுவனத்தையும் காண அதிக அவாவுறுவான் என்பதுவும் நபிமொழியே! முஃமின் விரைவாக நல்லடக்கமாவதை விரும்புவான் என்பதுவும் ஹதீஸ்தான்.
முஃமின் கப்றின் கேள்வி கணக்கு முடிந்தவுடன் புதுமணாளன் போன்று உறங்குகிறார். மணமகன் புதுமணவாட்டியைத் தேடுவதும் அவளை விரைந்து அடைய துடிப்பதும் இயல்பு. எனவே ஜனாஸாவின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டுமென்பதற்காகவுமே முற்படுத்துகிறோம்.
நன்றி: வஸீலா 1-11-87