Eisal Tawab Dua-ஈஸாலே தவாப் துஆ
By Sufi Manzil
Eisal Tawab Dua.
دُعَاء اِيْصَالْ ثَوَابِ
بِسم الله الرّحمٰن الرّ حيْمِ ۞
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ ۞ حَمْدًا يُّوَافِىْ نِعْمَهُ وَيُكَافِيْ مَزِيْدَهْ ۞ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا وَمَوْلٰناَ مُحَمَّدٍ ، اَللّٰهُمَّ اَوْصِلْ مِثْلَ ثَوَابِ مَا قَرَاْنٰهُ مِنْ كَلاَمِكَ الْعَزِيْزِ۞هٰذِه هَدِيَّةً وَّاصِلَةً وَّرَحْمَةً نَّازِلَةً وَّبَرَكَةً شَامِلَةً وَّتُحْفَةً كَامِلَةً مِّنْكَ اِلٰى رُوْحِ سَيِّدِنَا وَنَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً ثُمَّ اِلٰى اَرْوَاحِ جَمِيْعِ الْمُسْلِمِيْنَ عَامَّةً ۞ ثُمَّ اِلٰى رُوْحِ مَنْ تَلَوْ نَا الْقُراٰنَ الْعَظِيْمَ لِاَجْلِه وَاغْفِرْلَهُ وَارْحَمْهُ وَاٰنَسَ اللهُ وَحْشَتَهُ وَرَحِمَ اللهُ غَرْبَتَهُ وَنَوَّرَاللهُ ضَرِيْحَهُ وَتَقَبَّلَ اللهُ مِنْ حَسَنَاتِة وَتَجَاوَزَاللهُ عَنْ سَيِّئَاتِه وَغَفَرَاللهُ دُنُوْبَنَا وَذُنُوْبَهُ وَجَمَعَ اللهُ بَيْنَنَا وَبَيْنَهُ فِى جَنّٰتِ النَّعِيْمِ ۞ اَللهُمَّ اجْعَلْ قَبْرَهُ رَوْضَةً مِّنْ رِّيَاضِ الْجِنَانِ ۞ وَلاَ تَجْعَلْ قَبْرَهُ حُفْرَةً مِّنْ حُفْرِ النِّيْرَانِ ۞ اَلاَ اِنّ اَوْلِيَآءَ اللهِ لَاخَوْفٌ عَلَيْهِمْ وَلاَهُمْ يَحْزَنُوْنَ۞ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ۞ وَتُبْ عَلَيْنَآ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ ۞ رَبَّنَا اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ۞ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِوَالِدِيْنَا وَلِمَشَآئِخِنَا وَلِاَسَاتِيْذِنَا وَلِجَمِيْعِ الْمُسْلِميْنَ وَالْمُسْلِمَاتِ ؕ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا ؕ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِة سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَاَصْحَابِه اَجْمَعِيْنَ ۞ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ ۞ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ ۞ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ۞
ஈஸாலே தவாப் துஆவின் பொருள்:
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
அனைத்துப் புகழும் இவ்வுலகோரைப் படைத்துப் பரிபாலிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே உரியன. அவனது அருட்கொடைகளை நிரப்பமாக்கி வைக்கும்படியான அவற்றை அதிமாக்கி வைப்பதற்குப் போதுமான புகழாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! யா அல்லாஹ்! எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அர்கள் மீதும் அன்னாரின் கிளையார்கள் மீதும் ஸலவாத்தென்னும் அருள்மாரியைப் பொழிவாயாக!
யா அல்லாஹ்! உனது மகத்துவம் மிகுந்த வேதத்திலிருந்து நாங்கள் ஓதிய அளவு நன்மையை உன் புறத்திலுண்டான அன்பளிப்பாகவும், அருள்மாரியாகவும், பரக்கத்தாகவும், பரிபூரண அருட்கொடையாகவும் இருக்கும் நிலையில் எங்கள் தலைவர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மாவிற்கும் மற்றும் அனைத்து முஸ்லிம்களின் ஆன்மாக்களுக்கும் சேர்த்திடுவாயாக!
பின்னர், எவரது ஆன்மாவுக்காக நாங்கள் சங்கை மிகு குர்ஆனை ஓதினோமோ அவரது ஆன்மாவுக்கும் அளிப்பாயாக! மேலும், அவருக்கு மன்னிப்பை நல்கிடுவாயாக! அவருக்கு அருள் புரிவாயாக! அல்லாஹ் அவரது தனிமையைப் போக்கி நிம்மதியை அளிப்பானாக! அவரது வெருட்சியைப் போக்கிஅ ருள் புரிவானாக!
அல்லாஹ் அவரது மண்ணறையை பிரகாசமாக்கி வைப்பானாக! அவரது நற்காரியங்களை ஏற்றுக் கொள்வானாக! அவரது தவறுகளை மன்னித்தருள்வானாக! நம்முடைய பாவங்களையும், அவரது பாவங்களையும் மன்னித்து, நம்மையும் அவரையும் நயீம் எனும் சுவனபதியில் ஒன்று சேர்த்து வைப்பானாக!
யா அல்லாஹ்! அவரது கப்ரை சுவனத்தின் பூஞ்சோலைகளில் ஒன்றாக ஆக்கிடுவாயாக! அவரது கப்ரை நரகின் படுகுழிகளில் ஒன்றாக ஆக்காதிருப்பாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு அச்சமோ கவலையோ கிடையாது.
எங்கள் இரட்சகனே! எங்கள் புறத்திலுண்டான நல்லமல்களை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ செவியுறக் கூடியவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங்களது தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! திண்ணமாக நீ தவ்பாவை ஏற்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கிறாய்.
எங்கள் இரட்சகனே! இவ்வுலகில் எங்களுக்கு நன்மையையே வழங்கி மறுமையிலும் நன்மையையே வழங்கி எங்களை நரகின் வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக!
எங்கள் இரட்சகா! எங்களுக்கும் எங்களது தாய் தந்தையருக்கும், எங்களது ஷெய்குமார்களுக்கும், எங்களது ஆசிரியர்களுக்கும் அனைத்து முஸ்லிமான ஆண், பெண்களுக்கும் மன்னிப்பை நல்கிடுவாயாக!
எங்கள் இரட்சகனே! அவ்விருவரும் எனது சிறு பிராயத்தில் என்னை வளர்த்து அருள் புரிந்தது போன்று அவ்விருவருக்கும் நீ அருள்புரிவாயாக! அல்லாஹ் படைப்பினங்களில் சிறந்தவரான நமது தலைவர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் கிளையார்கள் மீதும் அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் அருள் மாரியைப் பொழிந்திடுவானாக!
கண்ணியத்திற்குரிய ரப்பாகிய உமது ரப்பு அவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் மகாத் தூய்மையானவன். ரஸூல்மார்களின் மீது ஸலாம் உண்டாவதாக!
புகழனைத்தும் அனைத்துலகங்களின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.