பொது மைய்யவாடியில் பள்ளிவாசல் கட்டலாமா?

பொது மைய்யவாடியில் பள்ளிவாசல் கட்டலாமா?

By Sufi Manzil 0 Comment May 5, 2010

கேள்வி: பொது மைய்யவாடியில் பள்ளிவாசல் கட்டலாமா?

பதில்: பொது மைய்யவாடியில் வீடு, குப்பா, பள்ளிவாசல் போன்றவைகள் கட்டக் கூடாது. இடித்து விட வேண்டும்.

இஆனா பாகம் 1 பக்கம் 364

கட்டடம் என்பதில் வீடு-குப்பா-பள்ளிவாசல் என்ற வேறுபாடு கிடையாது.

முங்னி-பாகம்1 பக்கம் 364

பொது மையவாடியில் பள்ளி கட்டக் கூடாது. இடித்து விட வேண்டும்.

பதாவா நவவி பக்கம் 46.

மக்கள், மைய்யித்தை வழக்கமாக அடக்கம் செய்யும்போது மைய்யவாடியில் கட்டப்பட்ட வீடு குப்பா பள்ளிவாசல் ஆகியவற்றை இடித்து விட வேண்டும்.

புகைரமி பாகம் 2, பக்கம் 261,  மஹல்லி பாகம் 1 பக்கம் 355.

இடிப்பது வாஜிப் என்பதில் ஸாலிஹீன்கள், உலமாக்கள், போன்றவர்களின் மஸார்களைத் தவிர எனவும் சில சட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர்.

கல்யூபி பாகம் 1 பக் 355.

கப்றின் மீது பள்ளி கட்டுவது மக்றூஹ். இவ்வாறுதான் சிளுஜுல் வஹ்ஹாஜ் எனும் நூலில் வந்துள்ளது.

பதாவா ஆலம்கீரி பாகம் 1 பக்கம் 177

நன்றி: வஸீலா 15-12-87