Ashura Dua-ஆஷூரா துஆ பொருளுடன்.

Ashura Dua-ஆஷூரா துஆ பொருளுடன்.

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

Dua' Ashura

O Muslims remember that Allahu ta ala has given you tawfiq in that you start the New Year with Muharram ul Haraam and Allahu ta has given some special favors in this month. Several ahadith have been transmitted about the fadhaail [benefits] of this month. In one hadith Sayyidina Rasuli Akram Sall Allahu alaihi wa Aalihi wa Sallim has said that the best sawm [fast] after the month of Ramadhan is the sawm of Muharram. And the best salaat after fardh salaat is Salaatul Tahajjud. Rasulullah Sall Allahu alaihi wa Aalihi wa Sallim has said that whoever fasts the first day of Muharram and the last day of Dhul Hijjah, he has started the New Year with fasting and has spent the last year fasting. These two fasts will nullify the sins of the past fifty [50] years.

The Tenth of Muharram is called Yawmul Ashura. There a many barakah in fasting on this day. In the beginning this fast was fardh [mandatory] on the Muslims. Sayyidina Rasuli Akram Sall Allahu alaihi wa Aalihi wa Sallim ordered to fast on this particular day. When Allahu ta 'ala made fasting the month of Ramadhan fardh, the fast of Muharram became nafl [optional]. Hazrat Ibn 'Abaas Rathi Allahu ta 'ala anh says that Rasulullah Sall Allahu alaihi wa Aalihi wa Sallim said: "There is no superiority of fasting on any particular day over another except the fasting during the month of Ramadhan and on the Tenth of Muharram."

It is Mustahaab [highly meritorious] to fast on the ninth and tenth of Muharram. Some 'Ulama [True Islamic Scholars] have said that fasting only on the Tenth of Muharram is makruh [frowned uponblameworthy] because it is like the fast of the Yahudi [Jews]. If he fast on the eleventh it is better. One should engage in 'Ibaadah on the night of Ashura. He will receive much thawaab from it. One should recite Dua Ashura on the Tenth of Muharram having taken a ghusl [complete bath rinsing mouth and nose in the process] the day before. He should recite four nawaafil rakaats with one niyyat [intentions]. In every rakaat, after Al Hamd Sharif [Suratul Fatihah] , he should recite Suratul Ikhlaas fifteen times and after taslim [salaams] he should recite this Dua ten times.

The thaawaab of the salaat [esaale sawaab] should be sent on the arwaah [souls] of Sayyidayn wa Shaahidayn Imaams Hazrat Hasan and Hazrat Hussayn Ridhwaan Allahu ta 'ala alaihim ajma'een. It will bring the reciter a lot of thawaab as well. Because of the reciter having done this, Sayyidayn wa Shahidayn wa Imamayn Hassan and Husayn will do Shifaa [intercede] for him on the Day of Judgement. The adaab of this particular day is to make ghusl, fast and break fast, make salaat, make Dua', visit the sick, be kind to orphans and make peace between to disputants.

One should cry from fear of Allah, use kohl, give lots of food to the family, put on some attar, guide people who have gone astray. To recite Qur'an Sharif, to recite Kalima Tamjeed seventy [70] times. One should visit the Qabrastan [cemetery], met with friend and relatives, serve parents and abstain from family relationship with the spouse.

 

ஆஷூரா பெயர் விளக்கம்.

ஹிப்ரு மொழியைச் சார்ந்த இச்சொல்லின் பொருள் பத்தாவது நாள் என்பதாகும். யூதர்களின் 'திஷ்ரி' மாதத்தின் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது. யூதர்களின் 'திஷ்ரி' மாதம் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது. யூதர்களின் 'திஷ்ரி; மாதம் பத்தாம் நாளும், அரபிகளின் 'முஹர்ரம்' மாதம் பத்தாம் நாளும் இணையாக வருவதாகும்.

அல்லாஹ் குறிப்பிட்ட நாளிலேயே அடுத்தடுத்துத் தன் பத்துக் கற்பனைகளை வெளிப்படுத்தியதால் 'ஆஷூரா' நாள் என்று பெயர் பெற்றதாக மெய்நிலை கண்ட ஞானி முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கீழ்கண்டபடி அறிவிக்கிறார்கள்.

1. ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நீண்டகால பச்சாதாப வேண்டுகோள் ஏற்கப்பட்டதும்,

2. ஹள்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியதும்,

3. ஆறு மாத காலம் பிரளயத்தில் சிக்குண்டு தவித்த ஹள்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரக்கலம் ஜூதி மலை ஓரம் ஒதுங்கியதும்,

4. ஹள்ரத் இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் பிறந்ததும், அல்லாஹ் அவர்களைத் தன் கலீபாவாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்புக் குண்டம் அவர்களுக்குச் சுவனப் பூங்காவாக மலர்ந்ததும்,

5. ஹள்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் பிழை பொறுக்கப்பட்டதும்,

6. ஹள்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் அடையப் பெற்றதும்,

7. சோதனை வயப்பட்ட ஹள்ரத் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிணிகள் அனைத்தும் நீங்கி நலம் பெற்றதும்,

8. ஹள்ரத் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களது சமூகத்தைச் சார்ந்த பனீ இஸ்ராயீல்களையும் கொடுங்கோலன் பிர் அவ்னது பிடியிலிருந்து விடுவிப்பதற்காக கடல் பிளந்து அவர்களை விடுவித்ததும், அவர்களை பின்தொடர்ந்து சென்ற பிர்அவ்னும் அவனது பெரும்படையும் அதே கடல் நீரில் மூழ்கியதும்,

9. கடலின் ஆழத்தில் கடும் இருட்டில் மீனின் வயிற்றில் நாற்பது நாட்கள் கிடந்து அழுது புலம்பிய ஹள்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் மீண்டும் மீனின் வயிற்றிலிருந்து வெளியானதும்,

10 கொலையாளிகளிடமிருந்து ஹள்ரத் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காத்ததும் இந்தப் புனிதமான பத்தாவது நாளாகிய ஆஷூராவுடைய நாளிலாகும்.

இம்மாதம் பத்தாம் நாளில்தான் கர்பலா என்ற நகரில் பெருமானாரின் பேரரான இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனநாயகத்திற்காக நடந்த போரில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

ஆஷூரா தினம் அன்று செய்ய வேண்டிய அமல்கள்

அஷூரா நாளுக்கு முன்தினம் பிறை 9> ஆஷூரா நாள் பிறை10 அல்லது பிறை 10 மற்றும் பிறை 11 ஆகிய இரு தினங்கள் நோன்பு வைப்பது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.

யாராவது ஒரு மனிதர் ஆஷூரா தினத்தில் பின்வரும் திக்ரை 70 தரமும் அதன் கீழ் தரப்படும் துஆவை ஏழுதரமும் ஓதினால் அவருக்கு அந்த வருடம் முழுவதும் மரணம் சம்பவிக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَسْبِيَ اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ 70 

ஆஷூரா துஆ பொருளுடன்.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِؕ

اَللّٰهُمَّ يَاقَابِلَ تَوْبَةِ اٰدَمَ يَوْمَ عَاشُوْرَاء ،

ஆஷூரா நாளன்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தவ்பாவை ஏற்று அங்கீகரித்த  நாயனே! 

وَياَرَافِعَ اِدْرِيْسَ  اِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தளவில் உயர்த்திய நாயனே!

وَيَامُسَكِّنَ سَفِيْنَةَ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ  يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று நபி நூஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கப்பலை பாதுகாவலுடன் ஜூதி மலைக்கு மேல் நிம்மதியுடன் தரிபடுத்தி வைத்த நாயனே!

وَيَامُنَجِّيَ اِبْرَاهِيْمَ مِنْ نَارِ نَمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று நம்ரூதுடைய நெருப்பை விட்டும் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈடேற்றமாக்கி வைத்த நாயனே!

وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்கள் கூட்டம், குடும்பத்தினருடன் ஓன்று சேர்த்த நாயனே!

وَيَاكَاشِفَ الضُّرِّ اَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிணி நோய்களை முற்றாக நீக்கிய நாயனே!

وَيَا فَارِجَ كُرْبَةِ ذِى النُّوْنِ يُوْنُسَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நூன் என்ற மீனுடைய வயிற்றிலிருந்து வெளிப்படுத்தி சங்கடங்களையெல்லாம் நீக்கி சந்தோஷ வாழ்வை கொடுத்த நாயனே!

وَيَاغَافِرَ ذَنْبِ دَأُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களது பாவங்களை பொறுத்தருளிய நாயனே!

وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسٰى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவையும் நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய துஆவையும் அங்கீகரித்து அருள் புரிந்த நாயனே!

وَيَازَائِدَ الْخِضْرِ فِي عِلْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று நபி கிலுரு  அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அகமிய மெஞ்ஞான அறிவுகளை அதிகமாக அளித்து அருள் புரிந்த நாயனே!

وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ اِلٰى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தளவில் உயர்த்திய நாயனே!

وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகச் சிறப்புடன் உதவிகள் அளித்த நாயனே!

وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த நாயனே!

وَيَامُنَزِّلَ التَّوْرٰلةِ وَالزَّبُوْرِ وَالْاِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று தவ்ராத், ஜபூர், இன்ஜீல், மகத்துவமிக்க புர்கான் வேதங்களை இறக்கியருளிய நாயனே!

وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَاِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராயீல், இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்களை படைத்த நாயனே!

وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று  அர்ஷையும், குர்ஸியையும், லவ்ஹையும், கலமையும் படைத்த நாயனே!

وَيَاخَالِقَ الشَمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று  சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்த நாயனே

وَيَاخَالِقَ السَّمٰوٰتِ السَّبْعِ وَالْاَرْضِيْنَ السَّبْعِ يَوْمَ عَاشُوْرَاءَ ،

ஆஷூரா நாளன்று ஏழு வானம், ஏழு பூமிகளை படைத்த நாயனே!

اِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ وَادْفَعْ عَنَّا السَّيِّأٰتِ وَالْبَلِيَّاتِ وَسَلِّمْنَا مِنْ اٰفَاتِ الدُّنْيَا وَفِتْنَيِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَشِدَّتِهَا وَفَقْرِهَا وَمِنْ اٰفَاتِ الْاٰخِرَةِ وَعَذَابِهَا وَاَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ التَّقَلَيْنِ وَرَسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدِنِ الْمُصْطَفٰى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَالْجَلَالِ وَالْاِكْرَامِ يَامَالِكَ يَوْمَ الدِّيْنِ اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ السَّيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ اَبِى مُحَمَّدِنِ الْحَسَنِ وَاَبِى عَبْدِاللهِ الْحُسَيْنِ اَللّٰهُمَّ زٍدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا . وَصَلَّى اللهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَى خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ .

நாட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரக்கூடிய வல்லமை மிக்க நாயனே! கிருபையுள்ள அல்லாஹ்வே! எங்களுடைய நாட்ட தேட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவாயாக! தீமைகள், பொல்லாங்குகள் அனைத்தையும் அகற்றி நிவர்த்தி செய்கின்ற நாயனே! எங்கள் தீமைகளையும், பொல்லாங்குகளையும் நிவர்த்தி செய்தருள் புரிவாயாக! மேலும் இவ்வுலகத்தின் ஆபத்து, தீங்குகளை விட்டும், பயங்கரச் சோதனைகளை விட்டும், பலாய் முஸீபத்துகளை விட்டும், பீடை, பிணி, வியாதிகளை விட்டும் எங்களை காப்பாற்றியருள்வாயாக! மேலும் மறு உலக வாழ்வின் பயங்கரங்களை, அபாயங்களை, தண்டனைகளை, அமளிகளை விட்டும் எங்களை பாதுகாத்து கொள்வாயாக! என்றென்றும் நிலைத்திருப்பவனே! மகத்துவம் மிக்கவனே! சங்கைமிக்க தயாபரனே! தீர்ப்பு நாளின் அதிபதியே! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம். எங்கள் இந்த துஆக்கள் அனைத்தையும் இரு லோகத்திற்கும் சர்தாரும், ஈருலக இரட்சகரும், அனைத்துலகுக்கும் அருட்கொடையாக வந்துதித்த ரஸூல்மார்களுக்கெல்லாம் தலைவரும், நபிமார்களுக்கெல்லாம் அதிபதியும், நபிமார்களில் முத்திராங்கமாகத் தோன்றிய எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினாலும், அவர்களுடைய அருந்திருப்பேரர்கள், ஷஹீதுக்கெல்லாம் தலைவராகிய இமாம் ஹுஸைன், இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களின் பொருட்டினாலும் நீ கிருபையுடன் கபூல் செய்து ஏற்றுக் கொள்வாயாக! அங்கீகரிப்பாயாக! இறைவா! எங்கள் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரு கண்மணிகளான அவ்விரு பேரர்களையும் மேலும் சிறப்பாக்கி , கண்ணியப்படுத்தி வைப்பாயாக! ஆமீன்.

ஆஷூரா நாள் தொழுகை

முஹர்ரம் மாதம் பத்தாம் நாளன்று குளித்து சுத்தமான பின்னர் காலை பத்து மணி முதல் பதினோறு மணிக்குள்ளாக நான்கு ரக்அத் நபில் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து ஸூரா ஓதிய பின்னர் குல்ஹுவல்லாஹு அஹது சூராவை பதினைந்து தடவை ஓதித் தொழ வேண்டும். தொழுத பின்னர் பாத்திஹா கூறி> சூராக்கள் ஓதி இந்த துஆ ஆஷூராவை ஓத வேண்டும். இதன் தவாபு அனைத்தையும் செய்யிதினா இமாம் ஹஸன்> செய்யிதினா இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் ஹதியாச் செய்ய வேண்டும். (அன்று தஸ்பீஹ் நபில் தொழுகையையும் தொழுது பெரும் நன்மை ஈட்டலாம்)

பிறகு பின்னவரும் துஆவை 7 தடவை ஓதிக் கொள்ள வேண்டும்.

سُبْحَانَ اللهِ مِلْأَ الْمِيْزَانِ وَمُنْتَهَى الْعِلْمِ وَمَبْلَغَ الرِّضٰى وَزِنَةَ الْعَرْشِ        ۝ لَامَلْجَأَ وَلَا مَنْجَأَ مِنَ اللهِ اِلَّا اِلَيْهِ   ۝سُبْحَانَ اللهِ عَدَدَ الشَّفْعِ وَالْوَتْرِ وَعَدَدَ كَلِمَاتِ اللهِ التَّامَّآتِ كُلِّهَا، اَسْئَلُكَ السَّلَامَةَ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ        ۝ وَلَاحَوْلَ وَلَاقُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ        ۝ وَهُوَ حَسْبِيْ وَنِعْمَ الْوَكِيْلُ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ        ۝ اَللّٰهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ بِحَقِّ الْحَسَنِ وَجَدِّهِ وَاُمِّهِ وَاَبِيْهِ وَاَخِيْهِ وَبَنِيْهِ ،فَرِّجْ عَنِّيْ مَا اَنَا فِيْهِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ         ۝ وَصَلَّى اللهُ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ        ۝ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ            ۝ 7