Arabi Tableekwalavin Attakasam-அரபி ‘தப்லீக்வாலா’வின் அட்டகாசம்!

Arabi Tableekwalavin Attakasam-அரபி ‘தப்லீக்வாலா’வின் அட்டகாசம்!

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

அரபி 'தப்லீக்வாலா'வின் அட்டகாசம்!

ஆலா ஹஸ்ரத் அவர்களின் பிடரியைப் பிடித்தக் கொடுமை!
முஸ்லீம் பொதுமக்களுக்கு பாக்கியாத் 'முப்தி' ஹஸ்ரத்தின் அறிவிப்பு!!

வேலூர் பெரிய முப்தி ஆலிஜனாப் மௌலானா மௌலவி ஷேக் ஆதம் ஹஸ்ரத் (கிப்லா) அவர்கள் தென்னிந்தியாவில் 'பாகவி' என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பல ஆயிரக்கணக்கான உலமாக்களின் உஸ்தாத் ஆவார்கள். நூறு வயதை எட்டி பிடித்துவிட்ட பெரியாரும் இஸ்லாமிய மார்க்க ஞானத்தில் இணையற்ற வல்லவருமாகிய ஆலா ஹஸ்ரத் அவர்கள் தமக்கு நேர்ந்த ஒரு துரதிருஷ்டமான சம்பவத்தை மக்கள் தவறாகக் கருதிவிடாமலிருக்க உண்மையை பகிரங்கப்படுத்தக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் அறிக்கையை இங்கு இடம் பெறச் செய்துள்ளோம்.

 1960-ம் வருஷம் ஜனவரி மாதம் 5ம் தேதி சில தக்லீக் பிரச்சாரங்களால் மதரஸா பாக்கியத்தில் மிகவும் பயங்கரமான ஓர் சம்பவம் நடந்ததை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய காலத்தில் இங்குள்ள உஸ்தாதுமார்கள் தலையிட்டு அதை தடுத்திராவிட்டால் அதன் விளைவு மிக கோரமாயிருந்திருக்கும்.

 விஷயம் யாதெனில், மௌலவி அபுல்ஸூவூது சாஹிப் அவர்கள் மௌலவி ரயீஸுல் இஸ்லாம் சாஹீப் அவர்களுக்கு ஒரு தப்லீக் ஜமாஅத், மதரஸாவைப் பார்ப்பதற்கு வருவதாகவும் ஆகவே அவர்களுக்கு 12டீ அனுப்புகிறேன் தாங்கள் அவ்விடமே இருந்து உபசரிக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். பிறகு 11மணியளவில் ஒரு தப்லீக் ஜமாஅத்தோடு என்னிடத்தில் அவர் வந்தார். அப்போது எனதருகில் மௌலவி ஷெய்க் ஹசன் சாஹிபும்; இருந்தார். அந்த தப்லீக் கோஷடியில் அரபி நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அவர் பெரிய அல்லாமா வென்றும், தப்லீக் கமிட்டியின் முக்கயஸ்தர்களில் ஒருவர் என்றும், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானித்தபடி பல்வேறு பட்டணங்களுக்கு அனுப்பப்பட்ட ஐந்து ஜமாத்துகளில் ஒரு ஜமாஅத்தின் தலைவரென்றும் மௌலவி அபுஸ்ஸூவூத் அஹமது சாஹிப் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பேச்சினூடே அந்த அரபி தன்னிடம் தப்லீக் சம்மந்தப்பட்ட விஷயத்தையும் கிளப்பினார். அதற்கு ஆதாரமாக குர்அன் ஆயத்து ஒன்றையும் தப்பும் தவறுமாக ஓதினார். தப்லீக் செய்வது முக்கிய, அவசர அவசியமான காரியமென்ற வாதத்தை முரட்டுத்தனமாக பேசி ஸ்தாபிக்க முயன்றார். அவர் வாதங்களை எல்லாம் கேட்டபிறகு அவர் ஓதிய ஆயத்தின் குறிக்கோளென்ன? அது எதற்காக இறக்கப்பட்டது என்ற மார்க்க நுணுக்கம் பற்றி அவரிடம் வினவியபோது, பதில் கொடுக்க யாதுமறியாதவராய் மிகவும் தவறான வழியில் முறை தவறி 'நீ முட்டாள,; கழுதை, குர்ஆன் ஹதீஸைப் பற்றி அறியாதவன், முகல்லித் (இமாமைப் பின்பற்றுபவர்) என்று பிதற்றி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தார். இச்சமயத்தில் மௌலவி அபுஸ்ஸுவூத் அஹ்மது சாஹிப் அவர்கள் மௌலவி ஷெய்கு ஹசன் சாஹிப், அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது சாஹிப் மற்றும் இதர கனவான்களும் இருந்தனர். அரபியனின் எந்த அளவு கோபம் உச்சநிலையை அடைந்துவிட்டதென்றால,;  என் கழுத்திலும் கையை வைத்து விட்டார். அரபியின் கூச்சலைக் கேட்டு மாணவர்கள் கூடி விட்டார்கள். மாணவர்களின் கோப உணர்ச்சியைக் கண்ட அரபி கலவரமடைந்து விரண்டோடி, மத்ராஸின் எதிரிலுள்ள ஆர்.கே. அப்துல் ஹக் சாஹிபின் வீட்டில் புகுந்து கொண்டார். மௌலவி அபுஸ்ஸுவூத் அஹமதுசாஹிப் மத்ரஸா ஆபீஸ் ரூமில் புகுந்து ஒளிந்துக் கொண்டனர்.

மாணவர்கள் கோபத்தால் மேற்கொண்ட இரண்டு இடங்களையும் சூழ்ந்து கொண்டு 'அரபியனே வெளியே வா' தப்லீகை பற்றி எங்கள் ஹஜ்ரத்திடம் நேரிய முறையில் வாதிடு, இல்லாவிடில் மன்னிப்புக் கோரு' என்று ஒரு மணிநேரமாக கோஷமிட்டு வாதாடினர். இதற்கிடையில் அவ்வரபியை எப்படியும் அங்கு நின்று கொண்டிருந்த கார் மூலம் வீட்டை விட்டு வேற்றிடத்திற்கு அனுப்பிவிட ஆர்.கே. அப்துல் ஹக் முயற்சி செய்தார். இந்நிலையில் அங்கிருந்த சில உஸ்தாதுமார்களும் மத்ரஸாவின் நிர்வாகஸ்தர்களில் சிலரான ஆலிஜனுப் ஆர். ஆப்துல் கப்பார் சாஹிப், முஹம்மது இஸ்ஹாப் சாஹிப், படேல் அப்துல்ஸலாம் சாஹிப் இதர சில உள்ளுர் வாசிகளும் குறுக்கிட்டு நிலையை கட்டுக்கடங்க செய்திராவிட்டால் இதன் விளைவு எவ்வளவு கோரமாக இருந்திருக்கும் என்பதை எண்ணக்கூட மனம் பதைபதைக்கிறது.

கடைசியில் அவ்வரபியையும் மௌலவி அபுஸ்ஸீவூத் அஹ்மத் சாஹிபையும்' மாணவர்கள் என்னிடம் கொண்டு வந்து மன்னிப்புக் கோர வேண்டுமென்பது எனது விருப்பமல்ல. மாணவர்களின் உணர்ச்சியைத் தடுக்க என்னால் இயலவில்லை. மேலும் தற்போதுள்ள தப்லீக் முறைக்கு  எதிர்ப்பாக நான் விடுத்த பத்வாவிற்கு பிறகிலிருந்து மௌலவி அபுஸ்ஸீவூத் அஹ்மது சாஹிப் இங்கு வரக்கூடிய தப்லீக் ஜமாஅத்தார்களையும் என்னிடம் அழைத்துக் கொண்டு வந்து பலவாறக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். இவ்விதம் அவர் செய்து வந்ததின் நோக்கம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தச் சம்பவம் என்னை மட்டும் அவமானப்படுத்த வேண்டுமென்று செய்யப்பட்டது அல்ல. மற்ற உஸ்தாதுமார்களையும், மத்ரஸா நிர்வாகிகளையும், வேலூர்வாசிகளையும் கூட  அவமானப்படுத்த வேண்டுமென திட்டமிட்டு செய்த குழ்ச்சி என நினைக்க வேண்டியதிருக்கிறது. இந்த தப்;லீக் வாதிகள் எங்கு சென்றாலும் இவ்வாறு குழப்பம் விளைவித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆண்டவன் இன்னவர்களுக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டுமென நாம் எல்லோரும் து ஆ செய்வோமாக! ஆமீன்.

குறிப்பு:- இச்சம்பவம் பற்றி தனிப்பட்ட நபர்களிடத்தில் மற்றும் வேலூர் சுற்றுப்புற ஊர்களிலும் தவறான வதந்தி பரவிட கூடாதென்பதை விளக்குவான் வேண்டியே இவ்வுண்மையை பத்திரிகை வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்.

   இங்கனம்,

  ஷேக் ஆதம் அபா அன்ஹு,
 காதிமேகுலபா, மதரஸா பாக்கியத்துஸ் ஸாலிஹாத், வேலூர்,

திருச்சி 'மறுமலர்ச்சி' வார இதழில் (15-1-60)ல் வெளியான அறிக்கை!

தப்லீக் ஜமாஅத் குர்-ஆன்; ஹதீஸ், பிக்ஹு அடிப்படையில் ஆரம்பமானதல்ல. அதற்கு நேர்மாறாக ஒருவருடைய தனிப்பட்ட அபிப்பிராயம் தவிர வேறில்லை. அந்த அபிப்பிராயமும் கனவின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. அந்த கனவாவது பார்த்துவிட்டு சொன்னார்களா? அதுவுமில்லை. கனவு பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. அது எவ்வாறு? அதன் ஸ்தாபகர் ஜனாப் மௌலவி இல்யாஸ், சாஹிப் அவர்களின் வார்த்தைகளிலேயே பார்த்துக் கொள்ளுங்கள:; அது சம்பந்தமாக மல்பூஜாத்தே இல்யாஸ் என்னும் தமிழ் நூலில் வெளிப்படுத்தியிருப்பதாவது: 

 'தற்காலத்தில் கனவில் என்மீது மெய்ஞானம் போடப்படுகிறது. இதனால் எனக்கு அதிகம் நித்திரை வருவதற்கு முயற்சி செய்யுங்கள்' 

மல்பூஜாத்தே இல்யாஸ் – பக்கம் 63, ஸலாம் பதிப்பகம் சென்னை – 1

 இவர் கனவு காண மற்றவர்களின் உதவியை தேடுகிறார்கள். அதன்பின் கனவு கண்டதாக சொல்கிறார்கள். தப்லீக் ஆரம்ப நிலையின் விஷயம் இவ்வாறிருக்க ஹதீஸ், குர்ஆன் பிரகாரம் தப்லீக் செய்யப்படுகிறதென்று கூச்சமின்றி சொல்வது சரிதானா? என்று நீங்கள் நியாயம் சொல்லுங்கள். அதுவும் இந்த விஷயம் தமிழிலேயே மல்பூஜாத் என்று கிடைக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு இருந்தும் காலம், இடம் விடாமல்; அவர்களுக்கு இந்த விஷயங்கள் எடுத்து சொன்ன போதிலும் திரும்ப திரும்ப வீட்டில் மைதானத்திலும், தெருவிலும், முடுக்கிலும் முஸ்லீம் மக்களை அதை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்களே  அது சரிதானா? நியாயமா? அல்லாஹ்வுக்கு அடுக்குமா? அதன் ஆரம்ப நிலை இவ்வாறிருக்க இது தான் தீன் முறை என்கிறீர்களே! அவர்களுக்கு வெட்கமில்லையா? இதுதான் தீன் என்று கூறுவது பொய்யல்லவா? இது பொய்யல்ல என்றால் பொய் என்று வேறு எதற்குத்தான் சொல்வது? கனவு காண்பதற்கு முன், காணப்போகிறேன் என்று சொன்னதாக இஸ்லாமிய சரித்திரத்தில் இல்யாஸ் ஹஜ்ரத்தைத் தவிர யாரும் சொன்னதாக காணப்படவில்லை. மாபெரும் பித்அத், கனவு காணப் போகும்; ஏற்பாட்டையும், நிலையையும் இல்யாஸ் அவர்களையும் ஒவ்வொரு முஸ்லீமும் ஒப்புக் கொண்டே தீரவேண்டும் என்பது குர்ஆன் ஹதீஸ் அல்லது இமாம்கள் மூலம் ஆதாரமே இல்லை. மற்றவர்களும் தன் கனவிற்கு ஒப்புக் கொள்ளுங்கள் என்று கூறும் போது அவர்களின் வற்புறுத்தலின்படி மற்றவர்கள் கனவையும் தப்லீக்கர் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?. ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறார்கள?; அவ்வாறு அவர்கள் மறுக்கும்போது மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும்படி ஏன் வற்புறுத்துகிறார்கள்.? வற்புறுத்துவது நியாயமாகுமா? கனவின் அடிப்படையில் ஆரம்பமான ஒரு இயக்கத்தை ஒப்புக் கொள்ளுமாறு தப்லீக்காரரை சொல்லிப் பார்த்தோம். அவர்கள் அதற்கு தயாரில்லை. ஏன் தயாரில்லை? என்ற கேள்விக்கு பதில் தர முடியாமல் ஓட்டம் பிடித்து விடுகிறார்கள். இந்நிலையில் அந்த இயக்கத்தின் தலைவரின் கனவிற்கு தலை சாய்க்க வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் அந்த இயக்கம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தைக் கொண்டு நடத்தப்படவில்லை. ஆதாரமற்றது. ஆதலால்தான் அதற்கு தகுந்த ஆதாரம் அவர்களால் கொடுக்க முடியாமல் கனவை புகுத்திவிட்டார். இந்த கனவு ஒரு ரகசியமாகும்.

 கொள்கை இல்லாத ஒரு இயக்கம் இருக்க முடியாது. அதன்படி உங்கள் கொள்கை என்ன? என்று கேட்கும் போது சர்ப்பம் வளைவது போல் வளைந்து நகர்ந்து விடுகிறார்கள். ஏன் அப்படி! அவர்கள் தம்மையே நேர்மை உள்ளவர்களென நினைத்துக் கொண்டு முஸ்லீம்களின் கொள்கையை சீர்திருத்த முற்பட்டுள்ளார்கள். ஏன் கொள்கையை மறைக்க வேண்டும்? கவனிக்கும் போது நபிமார்களில் யாருமே கொள்கையை மறைத்ததே இல்லை. கொள்கையை தைரியமாக வெளிப்படுத்தி உள்ளார்கள். அந்த கொள்கையின் காரணமாகத்தான் துஷ்டர் மக்கள் அவர்களுக்கு விரோதிகள் ஆயினர் என்று குர்அன் முழுவதிலும் காணக் கிடைக்கிறது. நபிமார்கள் போன்றவர் என்று தம்மை சொல்லிக் கொள்பவர் தைரியத்திற்கு பதிலாக கோழையாக ஏன் காணப்படுகிறார்கள். இவ்வாறு கொள்கையை வெளிப்படுத்தாமல் இருப்பது இரண்டாம் ரகசியம்.

 அவர்களுடைய தவறான செயல்களை சிலர் எடுத்துச் சொல்லும் போது அவை அறியாத மக்களின் சொல் என்று கூறி தட்டிக் கழிப்பார்கள். ஆனால் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாஸிஹாத்திலிருந்து ஒரு பிரசுரம் வெளிவந்தது. தப்லீக் வாலாவின் அட்டகாசம், என்பது அதன் தலைப்பாகும். அதில் தப்லீகர்கள் எங்கு சென்றாலும் இவ்வாறு குழப்பம் விளைவித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்த ஒரு நோட்டீஸூம் அத்தெருவின் பள்ளிவாசல்களின் வாயிலாக வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு 'போலி தப்லீக்' என்பதாகும்.

 தப்லீக் ஜமாஅத்திற்கு அட்டகாசம் என்ற பட்டம் போதாதது போல் போலி தப்லீக் என்று இரண்டாவது பட்டம் கொடுக்கப்பட்டது. இவர்களுடைய அட்டகாசங்கள் தாங்க முடியாத பொதுமக்களின் வேண்டுதலுக்கிணங்க பள்ளிவாசல்களில் தப்லீக்காரர்கள் பிரசங்கங்கள் செய்யக்கூடாதென்று கடுமையாக தடை செய்துவிட்டார்கள். அது போதாதென்று உருதுவிலும் அந்த தப்லீக்குக்கு 'மஸ்னூயீ' என்று பெயர் சூட்டி உருது பாஷையில் 'மஸ்னூயீ தப்லீக்' என்ற பிரசுரம் வெளியிடப்பட்டது.

1. குழப்பத்தை உண்டுபண்ணும் தப்லீக் ஜமாஅத்தை விட்டும் விலகிக் கொள்ளுமாறு அந்த பிரசுரங்களில்,

2. இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதால் அதைத் தடுக்க மற்றவர்களுக்கு படிக்கக் கொடுங்கள் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

மக்கள் தப்லீகர்களை விட்டு தம்மை காப்பாற்றும்படியும் பள்ளியில் அவர்களை வரவிடக் கூடாது என்று கோரியவர்கள் அறியாதவர்களா?
 பெரியோர்களும், கமிட்டியார்களும் தடைத் தீர்மானம் நிறைவேற்றினர்களே அவர்கள் அறியாதவர்களா?

 நோட்டீஸ்கள் வெளியிட்டார்களே அவர்கள் எல்லாம் அறியாதவர்களா?

 அப்படியானால் போலி நடத்தையும் ஆங்காங்கு செய்யும் அட்டகாசங்களும் தான் நேர்மையா? கனவு காண போகிறேன் அதற்கு வழிசெய்யுங்கள் என்பது மட்டும் ஞானமா?

 கம்பம் பத்வா தலைப்பில் கும்ராஹீ (வழிகெடுத்தல்) வழி கெடுப்பவர்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

'தர்ஜுமானே ஜாமியே இலாஹியாத்தை நூரியா' ஹைதராபாத் என்ற மாத சஞ்சிகையில் பிப்ரவரி, மார்ச்ச இரண்டிலும் தப்லீக் ஜமாத்தின் நாற்றம் பிடித்த கொள்கை இஸ்லாமுக்கும், முஸ்லீம்களுக்கும் சதி செய்யும் செயல்கள் அவர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது அவர்களும் அறியாதவர்களா?

 தப்லீக்கில் சேர்ந்து பல வருடங்கள் நடமாடி அதனுள் ஏற்பட்ட கெடுதல்களை கண்டு வெளியாகி தௌபா செய்து கொண்டு அதன் கேடுகளை சொல்ல முற்படுகிறார்களே அவர்கள் எல்லாம் ஒன்று தெரியதவர்களா? யாருக்கும் ஒன்றும் தெரியாது.

 தப்லீக் ஜமாத்தில் சேர்ந்தவர்களில் உத்யோகஸ்த்தர்கள் அவர்களுடன் வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்கள். சரிவர உத்யோகம் கவனிப்பது இல்லை என்பது சர்க்கார் தரப்பிலும் தனிப்பட்ட ஸ்தாபனங்கள், மதராஸாக்கள் தரப்பிலும் நாளது வரையிலும் புகார் நடந்து வருகிறது. இது மன்னியில் ஜமாஅத்தில் கூட்டு நிக்காஹ்கள் நடத்தப்பட்டன என்று பெருமையடிக்கிறார்கள். ஆனால் அத்துனை மாப்பிள்ளைகளையும் அலாக்காக அங்கிருந்தே ஊர்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். இது சுன்னத்திற்கு முரண்பட்டது. எக்காலத்திலும் யாருமே இது செய்ததே இல்லை. பித்அத்திலும் மஹாபித்அத் ஆகும். அடுத்ததாக நிக்காஹ்விற்கு அடுத்த நாள் வலிமா என்னும் விருந்து பெயர் பெற்ற அன்பு வாய்ந்த சுன்னதாகும். இதை அடியோடு கிள்ளி எறியப்பட்டது. சுன்னத்தை விடுவது ஆகாத காரியம். கட்சியில் சேர்வது அல்லது ஊர் ஊராக அலைவது யார் மீதும் எவ்வித கடமையில்லை என்பது ஒவ்வொருவரும் நன்கறிவா.; கடைமையில்லாததில் கலந்து கொண்டு சுன்னத்தை புறக்கணிக்கிறார்களே இது எவ்வளவு பெரிய பாவம்.

    நாமும் நம் ஸ்தாபகரும் ஹஜ்ரத்ஜியும் தான் அறிந்தவர்கள் என்று முரசடிக்கும் கொள்கையை விட்டு அல்லாஹ் ஒவவொருவரையும் காப்பாற்றுவானாக. ஆமீன்.

இந்த விஷயங்கள் அறிந்த பின் நம் தமிழ் முஸ்லிம் சமுதாயம் உஷராகி குழப்பங்களுக்கும் போலி விஷயங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

விசுவாசிகள் யாவருமே வெளிப்பட்டு விடுவது எபபொழுதுமே தகாது. மார்க்க விஷயங்களை அறி;ந்துகொள்ள அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்;தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா? (அவர்கள் மார்க்க விஷயத்தைக் கற்று) தங்கள் மக்களிடம் திரும்பி வந்து அவர்களுக்கு(த் தாங்கள் கற்றதைக் கூறி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வார்கள். ஊரிலிருப்போர் எச்சரிக்கையாக இருந்துக் கொள்வார்கள்.       -தௌபா 122

1. எல்லோரும் போகவேண்டிய அவசியமில்லை. சிலர் போனால் போதாதா? போனவரே கற்றுணர்ந்து திரும்பி வந்து கல்வி கற்றுக்கொடுத்தால் போதாதா? கற்பதற்கு சென்றவர்களைத் தவிர ஊரிலிருப்போர் ஊரிலேயே இருக்கவேண்டும் என்ற கருத்து ரப்புல் ஆலமீன் திருவசனங்கள் மூலமாக தெளிவான முறையில் எடுத்து உணர்த்தியுள்ளான்.

2. ஊரில் தங்கியவர்களில் ஆண்-பெண் பாலர் யாருக்குமே பாகுபாடின்றி வெளிவந்தே தீர வேண்டும் என்று கூறி சொல்லப்பட்டு வருவதை அல்லாவுடைய இந்த கட்டளைக்கு நேர்மாற்றமானது மட்டுமல்ல அவனுக்கே எதிர்ப்பாகவும் அமைந்துள்ளது. ஹக்கின் கட்டளையை திரும்ப திரும்ப படித்து கவனியுங்கள். இதற்கு அடிபணிந்து தப்லீக் இயக்கத்தை எதிர்ப்பவர்கள் நாங்களா? இல்லையா? பேச்சிலும் செயலிலும் தப்லீக்கர்கள் இதற்கு நேர்மாறாக இருக்கிறார்களா? இல்லையா? தர்கா நடத்துபவர்கள் இந்த திருவசனத்தை புனித குர் ஆனில் புகுத்திவிட்டார்களா? என்பதையும் கவனிப்பீர்கள். ஆதலால் தான் எல்லோர் கையிலும் கைக்கொடுத்து விடக்கூடாது. ஹக்கிற்கு மாறாக நாஹாக்கில், அசத்தியத்தில் யார் இருந்தாலும் அவரை எக்காலும் ஒப்புக் கொள்ளக்கூடாது என்பது தான் நியாயம்.

 இப் புவியிலிருப்போரில் அநேகரை நீர் பின்பற்றுவீரானால், அவர்கள் உம்மை அல்லாவுடைய பாதையிலிருந்து திருப்பிவிடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள்- பின்பற்றுவதில்லை. அன்றி (வெறும் பொய்யான) கற்பனையில்தான் மூழ்கியிருக்கின்றனர்.  –அல் அன் ஆம் 116.

மௌலானா இல்யாஸ் அவர்கள் கனவு காணப் போகிறேன் என்று சொன்னது உண்மையான விஷயம். காணப் போகிறேன் என்பது தான் தப்லீக் இயக்கத்திற்கு அடிப்படை. இதை ஈமான் கண்ணோட்டமாக கவனிக்கும் போது வெறும் பொய்யான கற்பனையில்தான் வொகள் மூழ்கியிருக்கின்றனர், என்ற மெய்யான திரு ஆயத்தின் கட்டத்தில் அடங்கிவிட்டது.

திரு வசனத்தின் ஒளி பிரகாசத்தில் தன் அறிவை சரிபடுத்திக் கொண்டு உணர்வீர்! உணர்வீர்!!

தப்லீக் வாலா, தப்லீக் ஈடுபடாதவர் என்ற பாகுபாடு முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டது. ஏற்படுத்தியது யார்? இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் சிலர் பள்ளிவாசல் கட்டினார்கள். அந்த பள்ளிவாசலை கட்டிய நோக்கத்தை திரு குர் ஆனில் கூறியிருப்பதாவது: விசுவாசிகளுக்குத் தீங்கிழைக்கவும் நிராகரிப்பை பரப்பவும் விசுவாசிகளுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணவும் பகிரங்கமாக எடுத்துரைக்கப்பட்;டுள்ளது, அதன்படி தற்பொழுது முஸ்லிம்கள் பிளவு ஏற்பட்டு இருக்கிறதை உலகம் அறிந்து விட்டது. இவ்வுண்மையை உலகம் அறிந்து தான் அட்டகாசம், போலி தப்லீக், டீழரபநள வுhயடிடநநப. கும்ராஹி ஜலாலத், தோ(ஹ)கா, ஃப்ரேப், தகா என்றெல்லாம் அலிகார், டில்லி, கல்கத்தா, பாம்பே, நாக்பூர், கான்பூர், கர்நூல், ஹைதரபாத், பெங்களுர், தமிழ்நாடு, கேரளம் போன்ற ஊர்களிலிருந்தும் தினசரிகளிலும்  வார, மாத இதழ்களிலும், புத்தகங்களாகவும், நோட்டீஸ்களாகவும் மார்க்கத் தீர்ப்பு ரூபத்திலும் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. தப்லீக் ஜமாஅத்தைப்பற்றி தமிழக மாமேதையின் தீர்ப்பு சில சிறந்த மொழியின் உயர்ந்த கருத்துக்கள் தொகுப்பு டில சையத் இஸ்மத் பாஷா சாஹப், எதிர்ப்பு மஹாநாடுகளும் ஆங்காங்கு நடைப்பெற்று வருகின்றன. சமீபத்தில் 21-4-85 கோட்டைமேடு ஸ்கூல் மைதானத்தில் (மன்பவுல் உலூம்) ஆலிஜனாப் வு.ஆ. அமானுல்லாஹ் ஆலிம் நூரிய்யி ஆலிஜனாப் ஊ.ஏ. அபுபக்கர் பாகவி அவர்களுடைய ஏற்பாட்டின் கீழ் கோவையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

ஆதலின் மார்க்கத்திலிருக்கும் சங்கை மிகு ஆலிம்களும் நல் கருத்துள்ள பொறுப்புமிக்க தலைவர்களும் ஒன்றுபட்டு சமுதாயத்தில் பிளவு ஏற்படாமலிருக்க ஏற்பாடுகள் செய்வார்கள் என்றும் , உண்மைக்கு புறம்பாகவும் பிளவு உணர்ச்சிகளைத் தூண்டுபவர்களையும் ஆதரிக்காமல் இருக்க செயல்படுவார்கள் என நம்புகிறோம். தனி நபரோ அல்லது கட்சி ரூபத்தில் தோன்றிய போதிலும், அவற்றை ஆதரிக்கவும் மாட்டார்கள். அதை தடுக்கவும் முற்படுவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு செய்வது தீனுல் இஸ்லாத்திற்கு செய்யும் சிறந்த பணியாகும். அதன் கூலி கட்டாயமாக அல்லாஹ் கொடுத்தருள்வான் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

        இங்ஙனம்,

   சையத் இஸ்மத் பாஷா சக்காப்,
   பெரிய தைக்கால், கிள்ளை- 608102.
   தெ.ஆற்காடு மாவட்டம