நிஸ்பு ஷஃபானின் அமல்களும், துஆவும்-Amal and Dua of Nishfu Sahban

நிஸ்பு ஷஃபானின் அமல்களும், துஆவும்-Amal and Dua of Nishfu Sahban

By Sufi Manzil 0 Comment July 6, 2011

Print Friendly, PDF & Email

'ஷஃபான் மாதம் என்னுடையது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஷஃபான் மாதம் 15 ம் நாளைத்தான் நிஸ்பு ஷஃபான் என்று அழைக்கிறார்கள்.

இந்த இரவில்தான் வரும் சென்ற வருடத்தின் அமல்களின் கணக்குகள் முடிவுக்கு வந்து இந்த  வருடத்திற்குள்ள புதிய கணக்கு (அமல் நாமா)இறைவனால் நிர்ணயிக்கப்படுவதாகவும், இவ்வருடத்திற்குள்ள இறப்பு, பிறப்புகள் எழுதப்படுவதாகவும் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன.

ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், 'மனிதர்களே! ஷஃபான் மாதம் 15வது இரவு வணக்கங்களில் ஈடுபடுங்கள், நோன்பும் நோற்குங்கள். இந்த புனித இரவில் அல்லாஹ் தனது கிருபையை ரஹ்மத்தை பூமியை நோக்கி பரவச் செய்து, 'யாராவது நோயாளிகள் இருக்கிறார்களா? அவர்களின் நோயை நான் குணப்படுத்துகிறேன் என்று அழைக்கிறான். மற்றும் இந்த இரவு முழுவதும் கேட்பவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப கொடுக்கிறான்.' (இப்னு மாஜா)

மேலும் இந்த இரவில் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் மற்றும் பாமன்னிப்பின் வாயல்கள் திறந்து இருக்கின்றன. அல்லாஹ் இந்த இரவில் பாவமன்னிப்புக் கேட்பவரின் பாவங்களை மன்னிக்கிறான்.
இறுதியாக ஷஃபான் மாதத்தின் 13, 14, 15 ஆகிய தினங்களில் நோன்பு நோற்று புதிய அமல் நாமா நல்ல செயல்களோடு ஆரம்பித்தால் வரும் ஆண்டில் அனைத்தும் நல்ல செயல்களோடு நடைபெறும்.
'ஷஃபான் மாதத்தில் நோன்பிருப்பது வரும் ரமலான் மாதத்திற்கு பயிற்சியாகும். யார் ஷஃபான் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பிருக்கிறார்களோ அவர்களின் பாவங்கள் அழிக்கப் படுகின்றன' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

சில இடங்களில் அரிசி மாவிலோ அல்லது மற்ற மாவுகளிலோ ரொட்டி சுட்டு இறந்தவர்களின் பெயரால் பாத்திஹா கத்தம் ஓதி ஹதியா செய்வார்கள். பின் அதை பள்ளி வாசலுக்கோ அல்லது ஏழைகளுக்கோ கொடுப்பார்கள். ரொட்டி, வாழைப் பழம், ஊது பத்தி, சீனி, கறி போன்றவைகளையும் அத்துடன் சேர்த்து கொடுப்பது வழக்கம். அதற்குரிய ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. நோன்புப் பெருநாள், துல்ஹஜ் மாதத்தின் 10 நாட்கள், ரஜபு மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை, ஷஃபான் மாதத்தின் 15வது இரவு, வெள்ளிக்கிழமை இரவு ஆகிய தினங்களில் மய்யித்துகள் தாங்களின் கபுருகளிலிருந்து வெளியாகி தங்களுடைய வீட்டு வாசல்களில் நின்று கொண்டு இந்த இரவில் எங்கள் மீது ரொட்டியால் ஆன ஒரு கவளம் உணவை ஸதக்கா செய்வதின் மூலமாவது எங்களின் மீது கிருபை காட்டுங்கள். ஏனெனில் நிச்சயமாக நாங்கள் அதன்பால் மிகத் தேவையானவர்களாக இருக்கின்றோம் என்று கூறுகின்றன. அப்படி எதையேனும் பெற்றுக் கொள்ளாவிட்டால் மிக நஷ்டத்துடன் திரும்பிச் செல்கின்றன என்று ஸய்யிதினா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த மிகப்பெரும் இமாம்களில் ஒருவரும் உலகத்தாரிலுள்ள அத்தனை அரபி கலாபீடத்திலும் பாடமாக நடத்தப்படுகின்ற தப்ஸீர் ஜலாலைன் கிரந்தத்தையும் இன்னும் எண்ணற்ற கிரந்தங்களையும் இவ்வுலகுக்கு காணிக்கையாக்கி தந்த மிகப் பெரும் மார்க்க மேதையான ஸுயூத்தி இமாம் ரலியல்லா{ஹ அன்ஹு அவர்கள் தங்களின் அத்துரருல் ஹிஸான் என்ற நூலின் 12-ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.                               

2. மேலும் பெருநாள் இரவு, ஆஷூரா நாள், ரஜபு மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை, பராஅத்துடைய இரவு, லைலத்துல் கத்ரு இரவு, வெள்ளிக்கிழமை இரவு ஆகிய தினங்களில் அம்வாத்துக்களின் ஆன்மாக்கள் தங்களின் கபுருகளிலிருந்து வெளிக் கிளம்பி தாங்களின் வீட்டு வாசல்களில் வந்து நின்று கொண்டு இது போன்ற புனிதமான இரவுகளில் ஸதக்கா செய்வது கொண்டோ அல்லது ஒரு கவளம் உணவைக் கொண்டோ எங்களின் மீது கிருபை காட்டுங்கள். ஏனெனில் நிச்சயமாக நாங்கள் அதன்பால் தேவையானவர்களாக இருக்கின்றோம். மேலும் அதில் கஞ்சத்தனம் காட்டீனீர்களானால் பாத்திஹா ஸூராவை ஓதுவதன் மூலமாவது எங்களை நினைத்துப் பாருங்கள் என்று கூறுகின்றார்கள் என்று ஸய்யிதினா இப்னு அப்பாஸ் ரலியல்லா{ஹ அன்{ஹ அவர்களைத் தொட்டும் அல் இமாம் அப்துர் ரஹீம் இப்னு அஹ்மதுல் காழி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்முடைய தக்காயிக்குல் அக்பார் என்ற கிதாபில் 17ம் பக்கத்தில்      குறிப்பிட்டுள்ளார்கள்.

பராஅத் அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விசேஷ ஸியாரத் செய்துள்ளார்கள்.                                      

ஒரு நாள் இரவு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அவர்களோ ஜன்னத்துல் பகீவு என்று மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தவையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.  நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லா{ஹதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                   

(திர்முதி ஹதீது எண் 739 பாபு மா ஜாஅ பீ லைலத்தின் நிஸ்பி மின் ஷஃபான் கிதாபுஸ் ஸவ்ம், இப்னுமாஜா ஹதீது 1389 பாபு மா ஜாஅ பீ லைலத்தின் நிஸ்பி மின் ஷஃபான் கிதாபு இக்காமத்திஸ் ஸலாத்தி, முஸ்னத் அஹ்மத் பாகம் 6 பக்கம் 238 ஹதீஸ் ஆயிஷா ரலியல்லா{ஹ அன்ஹா, மிஷ்காத் பக்கம்115 ஹதீது எண் 1299 பாபு கியாமி ஷஹ்ரி ரமலான்)

பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும்  இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது என்று நபி ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (மிஷ்காத் பக்கம் 115 ஹதீது எண் 1305 பாபு கியாமி ஷஹ்ரி ரமலான்)

நிஸ்பு ஷஃபானில் செய்ய வேண்டியது:

இறந்தவர்களின் கபுர்களுக்கு சென்று அவர்களை ஜியாரத் செய்ய வேண்டும். பாவ மன்னிப்பு தேட வேண்டும். அன்று இரவு நோன்பு நோற்க வேண்டும்.

இரவு மஃரிபிற்குப் பின் இஷாவிற்குள் மூன்று 'யாஸீன்' ஸூரா ஓத வேண்டும்.

1. முதல் யாஸீன் ஸூராவை அல்லாஹ்வை வணங்குவதற்கும், நன்மைகள் இன்னும் செய்வதற்கும் தன்னுடைய ஆயுளை நீடிப்பதற்கும்,

2. இரண்டாவது யாஸீனை பலாய், முஸீபத்துகள் மற்றும் பிறரின் கெடுதிகளை விட்டும் பாதுகாப்பு தேடுவதற்கும்,

3. மூன்றாவது யாஸீனை அல்லாஹ்வின் உதவியைத் தவிர்த்து பிறரின் உதவியை விட்டும் நீங்கியிருப்பதற்கும்,
நிய்யத் வைத்து ஓத வேண்டும். ஒவ்வொரு யாஸீன் ஓதிய பிறகும் கீழ் காணும் துஆவை ஓத வேண்டும்.

நிஸ்பு ஷஃபான் துஆ

اَللّٰهُمَّ يَا ذَا الْمَنِّ  وَ لَا يُمَنُّ عَليْهِ٭ يَا ذَا الْجَلَالِ وَالْاِ كْرَامِ٭ يَا ذَا الطَّوْلِ وَالْأِنْعَامِ٭ لاَ اِلٰهَ إِلَّا اَنْتَ ظَهْرَ اللَّاجِئيْنَ٭ وَجَارَ الْمُسْتَجْيْرِيْنَ٭ وَاَمَانَ الْخَائِفِيْنَ٭ اَلّٰلهُمَّ اِنْ كُنْتَ كَتَبْتَنِيْ عِنْدَكَ فِي اُمِّ الْكِتٰبِ فيِ شَقِيًا اَوْ مَحْرُوْمًا اَوْ مَطْرُوْدًا أَوْ مُقَتَّرًا عَلَيَّ مِنْ الرِّزْقِ فَامْحُ٭ اَللّٰهُمَّ بِفَضْلِكَ شَقَاوَتِي وَحِرْمَانِي وَطَرْدِيْ وَاقْتِتَارَ رِزْقِي٭ وَاَثْبِتْنِي عِنْدَكَ فِي اُمِّ الْكِتَابِ سَعِيْدًا مَّرْزُوْقًا مُّوَفَّقًا لِلْخَيْرَاتِ٭ فَاِنَّكَ قُلْتَ وَقَوْلُكَ الْحَقُ فِي كِتَابِكَ الْمُنَزَّلِ٭ عَلىٰ لِسَانِ نَبِيِّكَ الْمُرْسَلِ٭ يَمْحُوا اللهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ٭ وَعِنْدَهُ  اُمُّ الْكِتَابِ٭ اِلٰهِي بِالتَّجَلِّي الْأَعْظَمِ فيِ لَيْلَةِ النِّصْفِ مِنْ شَهْرِ شَعْبَانَ الْمُكَرَّمِ٭ اَلَّتِيْ يُفْرَقُ فِيْهَا كُلُّ اَمْرٍ حَكِيْمِ وَيُبْرَمُ٭ اَنْ تَكْشِفَ عَنَّا مِنَ الْبَلآءِ وَالْبَلْوآءِ مَا نَعْلَمُ وَمَا لاَ نَعْلَمُ٭ وَ أَنْتَ بِهِ اَعْلَمُ إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْاَكْرَمُ٭ وَصَلَّى اللهُ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ٭وَالْحَمْدُ للهِ رَبِّ الْعٰلَمِيْنَ٭