குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவின் பலன்கள்.

குல்ஹுவல்லாஹு அஹது ஸூராவின் பலன்கள்.

By Sufi Manzil 0 Comment May 26, 2010

Print Friendly, PDF & Email

'குல்ஹுவல்லாஹு அஹது'ஸூராவின் பலன்கள்.

கேள்வி: 'குல்ஹுவல்லாஹு அஹது' என்ற சூரத்தை நூறு முறை ஓதினால் அளப்பரிய நன்மைகள் உண்டுமென சிலர் சொல்லுகின்றனரே. அதற்கு ஹதீதில் ஆதாரம் உண்டா?

எஸ். கரீம், திருவிதாங்கோடு.

பதில்:- அந்த சிலரின் கூற்று மிகவும் சரியானதே! ஹதீதில் ஆதாரங்கள் உள்ளன.'குல்ஹுவல்லாஹு அஹதுவை ஒரு மனிதர் நூறுமுறை ஓதினால் அவர் செய்த ஐம்பது ஆண்டு காலத்திய சிறிய பாவங்களும் மன்னிக்கப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என அறிவிப்பவர் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு.                                           

 நூல்: இப்னு அதிய்யி பைஹகீ.

அனஸ் ரலியல்லாஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் வேறு ஒரு அறிவிப்பில், 'ஒரு மனிதன் குல்ஹுவல்லாஹுவை இருநூறு முறை ஓதுவாரேயானால் ஆயிரத்து ஐநூறு நன்மைகளை அவருக்கு வழங்கப்படும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

நூல்: பைஹகீ.

நன்றி: வஸீலா 1-11-1988