அப்துல் முத்தலிபின் பாடல்.
By Sufi Manzil
கேள்வி: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும் பாட்டனார் அப்துல் முத்தலிப் நாயகத்தை கஃபாவுக்கு எடுத்துச் சென்று பாடல் ஒன்று பாடினார். அக்கவியில் 'அனதல்லதீ ஸும்மீத பில் குர்ஆனி'-தங்களது பெயர் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டிருந்தது.' இவ்வாறு சுப்ஹான மௌலிதில் காணப்படுகிறது.
குர்ஆன் அண்ணலாருக்கு அருளப்பட்ட வேதம். குர்ஆனை அப்துல் முத்தலிப் பார்க்கவில்லை. அவர் காலத்தில் குர்ஆன் அருளப்படவுமில்லை. எனவே இது உண்மையல்ல.பொய் இடைச் சொருகல் செய்யப்பட்டுள்ளது என்று என் நண்பனொருவர் கூறுகிறார். விளக்கம் தருவீர்களா?
பதில்: அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பின் அப்துல் முத்தலிப் பெருமானாரை கஃபாவுக்கு எடுத்துச் சென்று 'அல்ஹம்து லில்லாஹில்ல தீ அப்தானி…..' என்ற கவிதைத் தொடரைப் பாடினார்கள் என்பது உண்மை. பிரபல சரித்திர ஆசிரியர் இப்னு ஹிஷாமின் அறிவிப்பில் இது பதிவாகியுள்ளது. அதில் அன்தல்லதீ சும்மீத பில் குர்ஆனி என்ற அடியும் வருகிறது.
எனவே மேற்கூறிய கவிதை உண்மையானது, ஆதாரப் பூர்வமானது என்பதில் ஐயமில்லை. தமக்குத் தெரியாவிட்;;டால் இடைச் சொருகல் என்று பழி சுமத்தி விடுவதா?
அர்ரௌலுல் உன்பு பாகம் 1 பக்கம் 184.
முந்தைய வேதங்களுக்கு குர்அன் என்ற பெயரும் உண்ட. நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு குர்ஆனை லேசாக்கப்பட்டிருந்தது. குதிரையில் சவாரி செய்து முடிப்பதற்குள் குர்ஆனை ஓதி முடித்து விடுவர் என்ற பொருள்பட ஒரு ஹதீஸ் பதிவாகி உள்ளது. (மிஷ்காத் பக்கம் 508)
முந்தைய வேதங்களில் அண்ணலாரின் திருநாமமும், இலட்சணங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன என்பதுவும், அவ்வேதங்களை அப்துல் முத்தலிப் தெரிந்து வைத்திருந்தனர் என்பதுவும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆமினாவின் மணிவயிற்றிலிருக்கும் போதே பிறக்க இருப்பவர் நபிதான் என அறிந்திருந்தனர் என்பதுவும் நாமறிந்த விஷயங்களாகும்.
நன்றி: வஸீலா 1-11-87