வஹ்ஹாபிகள், பித்னாவாதிகளுடன் போர்!-War on Fintnas and Wahhabis
By Sufi Manzil
தமிழ்பேசும் இஸ்லாமிய உலகில் தனி ஒரு ஆளாக நின்று சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபட்டவர்களுடன் வாதம் புரிந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலை நிறுத்தப் பாடுபட்டார்கள்.
வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் நுழைந்த வஹ்ஹாபிய இயக்கமான தப்லீகு ஜமாஅத்தையும் அதன் தலைவர்களையும் முஸ்லிம்கள் மத்தியில் இனம் காட்டி அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்தவர்கள் நமது ஷெய்குனா அவர்கள். எவருடைய பணத்திற்கும் மசியாமல், யாருக்கும் பயப்படாமல் உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து மக்கள் வழிதவறி செல்வதிலிருந்து காப்பாற்றிய பெருமை நமது ஷெய்குனாவைச் சாரும்.
இதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் எண்ணிலடங்கா. அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கீர்த்தியை உயர்த்தியும், அவர்களின் மஹப்பத்தை மக்கள் மத்தியில் ஆழமாகத் தரிபடுத்தியும், பல்வேறு பெயர்களில் மறைமுகமாக வந்து வஹ்ஹாபியக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருந்த தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களை கடுமையாக சாடி அவர்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். அதற்காக பிரசுரங்கள் வெளியிட்டும், மார்க்க உரை நிகழ்த்தியும், புத்தகங்கள் வெளியிட்டும், அவர்களுடன் விவாதங்கள் நடத்தியும் இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த இந்த சேவையை தற்போது பல்வேறு நபர்கள், குழுக்கள் சேர்ந்து செய்தாலும் அதற்கு ஈடு செய்ய முடியவில்லை என்னும் போது அவர்களின் மகாத்தான சேவை, தன்னலமற்ற சேவை நமக்கு புலப்படும்.
தப்லீகு ஜமாஅத்திற்கு எதிராக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள்:
1.தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள்: தப்லீக் ஜமாஅத்தை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் அதன் கொள்கைகள் விஷக் கிருமிகளுக்கு ஒப்பானவை என்று ஆணித்தரமான ஆதாரங்களுடனும்; (அவர்களின் புத்தகங்களிலிருந்தே) அதற்கு மாற்றான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை விளக்கியும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூல் வெளிவந்ததன் பிறகு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. மக்கள் தப்லீகின் கொள்கைகளை சரிவர விளங்கினார்கள். இதைக் கண்டு பொறுக்கமுடியாத தப்லீகு காரர்கள் அந்த புத்தகத்தில் ஏற்பட்ட அச்சுப்பிழையை கண்டுபிடித்து அதைக் கொண்டு ஷெய்குனா அவர்களிடம் மோத வந்தனர். அதை அவர்கள் ‘அறிவாளர்களே ஆராய்ந்து பாருங்கள்!’ என்று பிரசுரம் வெளியிட்டு முகமூடியைக் கிழித்தெறிந்தார்கள்.
2. தப்லீகு என்றால் என்ன?: தப்லீக் ஜமாஅத்தின் நோக்கம் அதன் கொள்கைகளை விளக்கி வெளிவந்த நூல். தப்லீக் ஜமாஅத்திற்கு அதன் பெயர் சரியான பொருத்தமா? என்று விபரிக்கும் நூல். இந்நூலில் மாத்தறையில் நடைபெற்ற தப்லீகு ஜமாஅத் பற்றிய விவாத மாநாட்டின் உண்மை நிலை பிற்பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
3. இள்ஹாறுல் ஹக்(சத்தியப் பிரகடனம்): சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை மற்றும் வஹ்ஹாபிய தேவ்பந்தி, தப்லீகி கொள்கைகைiகைளை வேறுபடுத்திக் காட்டி வெளிவந்த நூல். மத்ரஸாக்களில் அகீதா பாடத்திற்கு ஏற்ற நூல்.
4. இல்யாஸி தப்லீகு ஜமாஅத் பற்றி உலமாக்களின் உண்மை தீர்ப்பு: தப்லீகு ஜமாஅத் பற்றி இந்திய மார்க்க அறிஞர்கள் வெளியிட்ட பத்வாவின் மொழிபெயர்ப்பு. மிகவும் அருமையான நூல். பார்த்து படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.
5. அல்முஹன்னதின் அண்டப்புளுகு: கலீல் அஹ்மது அம்பேட்டவி என்ற தப்லீகு தலைவர் அஃலா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கோர்வை செய்த ஹுஸாமுல் ஹரமைன் பத்வாவிற்கு மாற்றமாக வெளியிடப்பட்ட போலியான பத்வாவான அல்முஹன்னதின் வண்டவாளங்களையும், பொய்களையும் அக்குவேறு ஆணிவேராக தோலுரித்துக் காட்டியிருக்கும் நூல்.
6. புலியைக் கண்டு ஓட்டம்: தப்லீக்கின் மூல குருமார்களில் ஒருவரான அஷ்ரப் அலிதானவியின் ஈமானை போக்கும் கொள்கையை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்க முயன்றபின் மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியிட்ட குப்ரு பத்வாவின் மொழிபெயர்ப்பு.
7.ஜமாஅத்தே இஸ்லாமியைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் மார்க்கஅறிஞர்களின் தீர்ப்பு: ஜமாஅத்தே இஸ்லாமியும் அதன் கொள்கையையும் பற்றி வெளியிடப்பட்ட பத்வாவின் மொழிபெயர்ப்பு.
8. காதியாணி தேவ்பந்தி சம்பாஷணை: காதியாணியும், தேவ்பந்தியும் ரயிலில் சந்தித்து இருவர்களின் கொள்கைகளைப் பற்றிய உரையாடியதையும் அவர்களின் கொள்கைகள் ஒன்றானவை என்பதையும் விளக்கும் சிறு பிரசுர நூல்.
9.தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்தவிதமாக தலையில் தட்டு: தப்லீகு ஜமாஅத் பற்றிய குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்று மௌலவி கலீல் அஹ்மது கீரனூரியால் வெளியிடப்பட்ட நூலுக்கு (இதன்பிறகு பல்லாண்டு காலம் இந்நூல் வெளிவருவது நின்றுவிட்டது.)மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரை நூல்.
10.சுவர்க்க நகைகளா? அல்ல. நரகவிலங்குகள்!: அஷ்ரப் அலி தானவியின் பிஹஷ்திஜேவர் என்ற நூலை ‘சுவர்;க்க நகைகள்’ (இதன்பிறகு இந்த நூல் மார்க்கச் சட்டங்கள் என்று பெயர் மாற்றம் பெற்று வெளிவந்துள்ளது.)என்று குலாம் ரஸூல் என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இருந்த வஹ்ஹாபியக் கொள்கைளுக்கு மறுப்பு தெரிவித்து வெளியிடப்பட்ட நூல்.
தப்லீகு பற்றியும், ஜமாஅத்தே இஸ்லாமி பற்றியும் எண்ணற்றப் பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். மார்க்க உரைகள் ஆற்றியிருக்கிறார்கள்.
விவாதங்கள்:
1. தப்லீக் ஜமாஅத் பற்றி மாத்தறை விவாத மாநாடு 1965: மாத்தறையில் தப்லீக் ஜமாஅத் பற்றி விவாதம் செய்ய விவாத அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷெய்குனா அவர்களின் வாதங்களைக் கேட்டு அதற்கு பதில் சொல்லமுடியாமல் கூச்சலிட்டு குழப்பமேற்படுத்தி மாநாட்டை குலைத்தனர் தப்லீக் ஜமாஅத்தினர். அதன்பிறகு திருட்டுத்தனமாக கையெழுத்துப் போட்டு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிப்பும் செய்தனர். அவர்களின் அந்த திருட்டுத்தனத்தை வெளிப்படுத்தி சுன்னத்வல் ஜமாஅத்தினர் வெளியிட்ட பிரசுரத்தைக் காண:https://sufimanzil.org/wp-content/uploads/bsk-pdf-manager/157_VISAKIRUMI.PDF
2. இதேபோல் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் விவாதத்திற்கு ஷெய்குனாவை அழைத்து பின் அமீரின் உத்திரவு அனுமதி இல்லை என்று கூறி புறமுதுகிட்டு ஓடிய தப்லீக் ஜமாஅத்தினரின் முகமூடிகள் பிரசுரங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளது.
3. ஜும்ஆ தொழுவதற்கு முன் உள்பள்ளியில் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணக் கூடாது என்று ஷெய்கு அவர்கள் காயல்பட்டணத்தில் குத்பா பெரிய பள்ளியில் நடத்திய விவாதம் பற்றி விபரம் காண:https://sufimanzil.org/tamil-bayan-before-jumma-inside-the-mosque-debate/
4. ஒடுக்கு கூடாது என்று தப்லீகை ஆதரித்த உலமாக்கள் (ஜாவியா உலமாக்கள்) பத்வா வெளியிட்ட போது அதற்கு மாற்றாக மஹ்லறாவில் பத்வா வெளியிடப்பட்டது. நடுநிலைக் கொண்டவர்கள் இதுபற்றி விவாதிக்க அழைப்பு விடுவித்தபோது தப்லீகர்கள் ஓடி ஒளிந்தனர். ஆனால் அதற்கு ஒப்புதல் தெரிவித்து ஷெய்குனா அவர்கள் கையொப்பமிட்ட விபரம் காண: https://sufimanzil.org/odukufatwa-sufi-hazrat/
https://sufimanzil.org/odukku-fatwa/
5. ஸுஜூது பற்றி சா.சாகுல்ஹமீது ஆலிம் என்பவர் காயல்பட்டணத்தில் பத்வா வெளியிட்டார். அதில் அவரை ஆதரிப்பவர்கள் கையொப்பமிட்டனர். இந்த பத்வா ஸுஜூது பற்றி விளக்கம் தெரியமால் வெளியிடப்பட்ட பத்வாவாகும். இதற்கு மறுப்பாக ஷெய்குனா அவர்கள் கலீபா அப்பா தைக்காவில் நடைபெற்ற கந்தூரி பயானில் பேசிவிட்டார்கள். ஆனால் ஷெய்குனா அவர்கள் ஊர் வரும்போதெல்லாம் இப்பத்வாவை வெளியிடுவது வாடிக்கையாக தப்லீகினர் வைத்திருந்தனர். அதற்கு மறுப்பாக வெளியிடப்பட்ட கட்டுரையைக் காண:https://sufimanzil.org/sujood-explanation/
6. ஷாபிஈ மத்ஹபு படி ஒரு ஊரில் இரு ஜும்ஆ நடப்பது கூடாது. இரண்டாவதாக ஏற்படுத்தப்பட்ட ஜும்ஆ செல்லாது என்று வெளியிடப்பட்ட பத்வாவில் ஷெய்குனா அவர்களும் கையொப்பமிட்டார்கள். இதன் பிரச்சனையாகத்தான் கொழும்பில் தங்கியிருந்த இடத்தை விட்டு அவர்கள் வெளியேறினார்கள். இந்த பள்ளியை அவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி என்று சொன்னார்கள். அதுபடிதான் நடந்து வருகிறது. இவற்றைக் காண:https://sufimanzil.org/al-jamiul-ilrar/